Subject :Re:திருமறையை விளக்கும் முறை -அத்தியாயம் 2- இலக்கணம் இன்றியமையாததே.(2)
4. மொழிமரபுகள்
ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் பொருளை விளங்கிக் கொள்ளச் சிலவேளைகளில் அம்மொழி மரபுகளையும் கவனிக்க வேண்டும். எபிரேய மொழியின் சில மரபு வழக்குகளை ஆங்கில வேதாகமத்திலும் தமிழ் வேதாகமத்திலும் காணலாம். குறிப்பாகப் புதிய திருப்புதலைப் பார்க்கவும்.
(i) ஏதோ ஒரு முக்கிய பண்புடையவனை அந்தப் பண்பின் மகன் என்ற ழைப்பது ஒரு மொழி வழக்கு.
1 சாமுவேல் 2:12 "பேலியாளின் மகள்" – ப.தி "ஏலியின் குமாரர் போக்கிரிகளாயிலுந்தார்கள் – பு.தி பேலியாள் ஒரு பிசாசின் பெயர் – பேலியாள் – Worthless லூக்கா 10:6 சமாதான பாத்திரன் - ப.தி சமாதான சீலன் - பு.தி சமாதானத்தின் மகன் - பு.தி அடிக்குறிப்பு எபேசியர் 2:3 கோபாக்கினையின் பிள்ளைகள் – ப.பு. திருப்புதல்கள் சினத்திற்கு ஆளாயிருந்தோம் - R.C.V எபேசியர் 5:6 கீழ்படியாமையின் பிள்ளைகள் - ப.தி கீழ்படியாதவர்கள் - பு.தி கீழ்படியாத மக்கள் - R.C.V எபேசியர் 5:8 வெளிச்சத்தின் பிள்ளைகள் – ப.தி, பு.தி ஒளியின் மக்கள் - R.C.V
(ii) நேசிக்கின்றது" "வெறுக்கின்றது" என்ற சொற்கள் ஒன்றை அல்லது ஒருவனை இன்னொன்றை விட அல்லது இன்னொருவனை விட அதிகமாய் தெரிந்து கொள்ளுதலைக் குறிக்கும்.
லூக்கா 14:26 என்னிடத்தில் வருகிறவன், தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." என்பது செமிட்டிக் மரபுபடி தாய், தந்தையைவிட இயேசுவை அதிகம் தெரிந்துகொள்ளாவிட்டால் (R.C.V அடிக்குறிப்பு) என்பது அர்த்தம்.
ரோமர் 9:13 யாக்கோபின்மேல் அன்புகூர்ந்தேன். ஏசாவை வெறுத்தேன். இந்த வாக்கியத்திற்கு எபிரேய மொழியின் தனித் தன்மைக்கேற்ற பொருள். ஏசாவிடம் அன்பைவிட யாக்கோபிடம் அதிக அன்பு காட்டுகிறேன் என்பதாகும். (R.C.V. அடிக்குறிப்பு)
அதாவது, ஏசாவுக்கு உலக நன்மைகளை அளித்தேன். யாக்கோபுக்குப் பரம நன்மைகளை அளித்தேன் என்று பொருள்படும். (மத். 10:37, யோவான் 12:25, மல்கியா 1:2,3, ஆதி. 29:31, உபா. 21:15)
III. சில இடங்களில் அல்ல என்ற பதத்திற்கு மாத்திரமல்ல என்று பொருள்படும்.
உதாரணமாக நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார்(ஆதி 45:8)யோசேப்பின் அண்ணன்மார் தங்களுடைய தப்பியை விற்று எகிப்துக்கு அனுப்பிய குற்றவாளிகளாயிருந்தார்கள். என்பதில் ஐயமில்லை. இந்த வாக்கியத்தின் உண்மையான கருத்து என்னவெனில் "நீங்கள் (விரோதங்கொண்டு தீய நோக்கத்துடன்) மாத்திரமல்ல, தேவனே(நல்ல நோக்கங்கொண்டு) உங்களைத் தடுத்தாட் கொண்டு என்னை அனுப்பினார்.
நாங்கள் எம்மாத்திரம் உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது (யாத். 16:8) சபையின் தலைவர்களாகிய எங்களுக்கு விரோதமாக மாத்திரமல்ல. சிறப்பாக எங்களை அபிஷேகித்த ஆண்டவருக்கு விரோதமாகத்தான் கலகஞ் செய்தீர்கள் என்பது கருத்தாகும்.
என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல(என்னை மாத்திரமல்ல), என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் (மாற்கு 9:37) இயேசுவை ஏற்றுக் கொள்வது அவரை அனுப்பின பிதாவையும் ஏற்றுக் கொள்வதாகும். சிறு பிள்ளைகளையும் (மாற்கு 9:36,37) பலவீனமுள்ளவர்களையும் (ரோமர் 14:1) ஏற்றுக் கொண்டு சேர்த்துக் கொள்வது இயேசுவை ஏற்றுக் கொள்வதாகும்.
அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல(மனுஷரை மாத்திரம் அல்ல), .... தேவனையே அசட்டைபண்ணுகிறான்.(1 தெச. 4:8)
IV. சில இடங்களில் பெற்றோரின் பெயர்கள் சந்ததியாருக்கு வழங்கப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக யாக்கோபு என்றும் இஸ்ரவேல் என்றும் ஈசாக்கின் இளைய மகனுக்கு மட்டுமன்று, அந்தக் குடும்பத் தலைவனின் பரம்பரையினர் அனைவருக்குமே பெயர்களாயின.(சங். 14:7; 46:7; 2 இரா 18:17,18) தேவனால் யாக்கோபுக்கு வழங்கப்பட்ட கௌரவப் பெயர் இன்றைக்கு யூதக்குலம் வாழ்ந்து வருகின்ற இஸ்ரவேல் நாட்டுக்குப் பெயராயிற்று.
V. பேரப் பிள்ளைகளை மகன் என்றும் குமாரன் என்றும் சொல்வதுண்டு.
ஆதியாகமம் 46:2 ராகேல் யாக்கோபுக்கு பெற்ற குமாரர் இரண்டுபேர் மட்டுமே (யோசேப்பு, பென்யமீன்) இவ்விருவருக்கும் பிறந்த மக்கள் பன்னிரெண்டுபேர். ஆகவே ராகேல் வழியாய் யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் பதினாலு பேர் (ஆதி. 46:19-20) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுலின் மகனாகிய மேவிபோசேத்து மேவிபோசேத்மு சவுலுக்கல்ல. சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்தவன். (2 சாமு. 4:4; 9 ஆம் அதிகாரத்தைப் பார்க்க)
VI. சில இடங்களில் பாட்டன் தந்தை என்றழைக்கப்பட்டுள்ளதையும் பார்க்கிறோம்.
தானியேல் 5:18 உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சர் பெல்ஷாத்சாரின் தந்தையல்ல. பாட்டனாராகும். நபோனிதாஸ் (Nabonidas) நேபுகாத்நேச்சரின் மகளை மணந்து அரசானான். தன்னுடன் அரசில் பங்கு கொள்ளும்படி தன் மகன் பெல்ஷாத்சாருக்கு அரச பட்டமளித்தான். இருவருக்கும் கூட்டு பொறுப்பு இருந்தால் பெல்ஷாத்சார் தானியேலுக்கு மூன்றாம் பதவியைப் பரிசாக அளிப்பதாக வாக்களித்தார். தன் தந்தை முதல் பதவியையும் தான் இரண்டாம் பதவியையும் வகித்தமையால் தானியேலுக்கு இரண்டாம் பதவியை அளிக்க முடியவில்லை
VII. சில எண்களுக்கு சொல்லுக்கு செல் (சரியான) கருத்து கூறுவது தவறாயிருக்கலாம். உதாரணமாக "பத்து" என்றால் சில இடங்களில் "பல என்று பொருள்படும். ஆதி. 24:55; 31:7; தானி. 1:20. "ஏழு" என்றும் "எழுபது" என்றும் கூறுவது சில இடங்களில் முழுமையைக் குறிக்கலாம். சங். 119:164; நீதி. 26:16,25. 'ஆயிரம்' என்ற எண் நீண்ட காலத்தைக் குறிக்கும். (வெளி. 20:4,5)
(வளரும்)
|
0 comments:
Post a Comment