Subject :Re:திருமறையை விளக்கும் முறை
5. பெயர் வழக்கங்கள்
(அ) பல அரசர்களுக்கு ஒரே பெயர் இருந்தது.
I. பார்வோன் : ஆபிரகாம் காலம் முதல் தானியேலின் காலம் வரை எகிப்து நாட்டின் அரசர்களுக்
கெல்லாம் பார்வோன் என்ற பெயர் வழங்கியது.
கெல்லாம் பார்வோன் என்ற பெயர் வழங்கியது.
II. பித்தொலொமி : பேரரசன் அலெக்சாந்தரின் காலத்திற்குப் பின் மூன்று நூற்றாண்டுகளாக எகிப்து நாட்டின
அரசர்களுக்கு பித்தொலொமி என்ற பெயர் வழங்கப்பட்டது.
அரசர்களுக்கு பித்தொலொமி என்ற பெயர் வழங்கப்பட்டது.
III. அபிமெலேக்கு : பெலிஸ்திய அரசர்களுடைய பொதுப் பெயர் (ஆதி. 20:2 ; 26:1; சங். 34 தலைப்பு)
IV. பெனாதாத் : சீரியா நாட்டின் அரசர்களுடைய பொதுப் பெயர் (1 இராஜா 20:1, 2 இராஜா 8:7; 13:24)
V. ஏரோது : புதிய ஏற்பாட்டில் நான்கு அரசர்களுக்கு ஏரோது என்ற பெயர் வழங்கப்பட்டது.
(ஆ) சிலருக்கு இரண்டு பெயர்கள் இருந்தன.
I. மேசேயின் மாமனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாகத் தெரிகின்றது. எத்திரோ(யாத். 3:1) ஓபாப். (நியா 4:11)
II. லேவி. (மாற். 2:14) (மத்தேயு 9:9; 10:3)
III. திதிமு எனப்பட்ட தோமா(யோவான் 11:16; 20:24;21:2) திதிமு என்பது இரட்டைப் பிள்ளைகளைக்
குறிக்கும். நான்காம் சுவிஷேசத்தில் மட்டும் திதிமு என்ற பெயர் வழங்கப்படுகின்றது.
குறிக்கும். நான்காம் சுவிஷேசத்தில் மட்டும் திதிமு என்ற பெயர் வழங்கப்படுகின்றது.
IV. சவுல் (அப். 7:58 முதல் அப். 13:9 முடிய)
பவுல் (அப். 13:9 முதல் இறுதி வரை)
V. சீலா (அப். 18:5 சில்வானு (2 கொரி. 1:19)
(இ) ஒரே பெயர் கொண்ட இருவர்
I. யாக்கோபு யோவானுடைய சகோதரன் பன்னிருவரில் ஒருவன் (மத். 10:2) சிரச்சேதம் பண்ணப்பட்டவன்.
(அப். 12:2)
யாக்கோபு இயேசுவின் சகோதரன் (மத். 13:55; கலா. 1:19) எருசலேம் சபை மூப்பர் (அப். 15:13) நிருபத்தை
எழுதியவர் (யாக். 1:1)
எழுதியவர் (யாக். 1:1)
II. பிலிப்பு பன்னிருவரில் ஒருவன் (மத். 10:3)
பிலிப்பு எழுவரில் ஒருவன் (அப். 6:5; 21:8) நற்செய்திப் பணி செய்தவன் (அப். 8:5; 21:8)
(ஈ) வெவ்வேறு இடங்களுக்கு ஒரே பெயர்
I. செசரியா – பிலிப்பு செசரியா மத். 16:13
கலிலேயா கடலுக்கு வடக்கே, யோர்த்தான் நதிக்கு கிழக்கே, எர்மோன் மலைக்குத் தெற்கே, செசரியா துறைமுகம் அப். 10:1; 12:19;23:23 முதலியன கடலோரமாயுள்ளது. சமாரியா நாட்டிலுள்ளது.
தமிழ் வேதாகமப் புத்தகத்தில் மூன்றாவது தேசப்படத்தில் (பலஸ்தீனா தேசம் புதிய ஏற்பாட்டின் காலத்தில்) இவ்விரண்டு செசரியா பட்டணங்களும் தெளிவாக்க் காட்டப்பட்டிருக்கின்றன.)
II. அந்தியோக்கியா- சீரியா நாட்டு அந்தியோக்கியா (அப். 11:20,26: 13:1) தமஸ்குவுக்கும் தீரு சீதோனுக்கும் வடக்கே சீப்புரு தீவுக்கும் கிழக்கே உள்ளது.
இது நான்காவது பாடத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். கலாத்தியா என்ற நாட்டின் பெயருக்குப் பக்கமாகவும் "க" என்ற எழுத்துக்கும் "ல" என்ற எழுத்துக்கும் நடுவாகவும் போட்டிருக்கிற புள்ளிதான் பிசீதியா நாட்டு அந்தியோகியா
(உ) ஒரே இடத்திற்கு மூன்று பெயர்கள்
I. எகிப்து நாடு
காம் (சங். 78:51; 105:23) என்றும் ராகப் (சங். 87:4; 89:10; ஏசாயா 51:9) என்றும் அழைக்கப்பட்டது. ஏசாயா 30:7 இல்
சும்மாயிருப்பது இறை மக்களுக்கப் பெலன் என்று பொருள்படுமா? அல்லது உதவி செய்ய விரைவாய்
வரவேண்டிய எகிப்தியர் வராமல் சும்மாயிருப்பார்கள் (சும்மாயிருக்கும ராகாப்) என்று பொருள்படுமா?(புதிய
திருப்புதலைப் பார்க்கவும்)
சும்மாயிருப்பது இறை மக்களுக்கப் பெலன் என்று பொருள்படுமா? அல்லது உதவி செய்ய விரைவாய்
வரவேண்டிய எகிப்தியர் வராமல் சும்மாயிருப்பார்கள் (சும்மாயிருக்கும ராகாப்) என்று பொருள்படுமா?(புதிய
திருப்புதலைப் பார்க்கவும்)
II. எருசலேம்
சீயோன் (சங். 137:1 என்றும் தாவீது வாசம் பண்ணின அரியேல் (ஏசாயா 29:1) என்றும் அழைக்கப்பட்டது.
III. சீனாய்மலை
ஓரேப் (சங். 106:19) என்றும் அழைக்கப்பட்டது.
IV. கலிலேயா கடல்
திபேரியா கடல்(யோவான் 21:1) என்றும் கின்னரேத் கடல் (எண். 34:11) என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
V. சாக்கடல் (Dead Sea)
இந்தப் பெயர் வேதத்தில் இல்லை. மாறாகச் சமபூமயின் கடல் (2 இரா. 14:25) என்றும் கீழ்க் கடல் (எசேக். 34:3,12)
என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது.
என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது.
VI. மத்திய தரைக்கடல்
மத்திய தரைக்கடல் என்ற பெயர் வேதத்தில் இல்லை. வேத்த்தில் பெலிஸ்தரின் சமுத்திரம் (யாத். 23:31)
என்றும் கடைசி சமுத்திரம் (உபா. 11:24;34:2; யோவேல் 2:20) என்றும் பெருங்கடல் (எண். 34:6,7) என்றும் வழங்கப்பட்டுள்ளது.
என்றும் கடைசி சமுத்திரம் (உபா. 11:24;34:2; யோவேல் 2:20) என்றும் பெருங்கடல் (எண். 34:6,7) என்றும் வழங்கப்பட்டுள்ளது.
முதல் விதி நமக்கு கற்றுத் தருவது
இலக்கண விதிகளின்படி வசனத்திலுள்ள சொற்களின் சாதாரணப் பொருளை நாம் முதலாவது கண்டறிய வேண்டும்.
(அத்தியாயம் 2 முற்றிற்று)
(வளரும்)
Thanks to Br Colvin
0 comments:
Post a Comment