அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 3, 2013

என்னைக் கவர்ந்த இஸ்லாம் மெகா சீரியல் விமர்சனம்

என்னைக் கவர்ந்த இஸ்லாம் மெகா சீரியல் விமர்சனம்







(மெகா டிவி ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி)

திருமறைக்குர்ஆனை ஆய்வு செய்து இது இறைவேதம்தான் என்று உறுதி செய்த சகோதரி சரண்யா அவர்கள் குடும்பத்தாரின் எதிர்ப்புகளை மீறி வீட்டை விட்டு ஹிஜ்ரத் செய்து வந்த உருக்கமான அனுபவங்கள்
https://www.facebook.com/photo.php?v=362737837187035

இஸ்லாமிய அழகிய முன்மாதிரிகள், இதுதான் இஸ்லாம், இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்று கூச்சல்போட்டு போட்டு, எவ்வளவோ நாடகங்கள் ஆடியும் சத்தியத்தை ஏற்றுகொள்ளும் இஸ்லாமியரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் இஸ்லாமியரும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்து தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத் இந்த நோன்பு நாட்களில் அதிகாலை நேரத்தில் மெகா டிவியில் 2 சீரியல்களை அரங்கேற்றிவருகின்றது.
அந்த அதிகாலையில் மெகாடீவியை பார்வையிடுகிறவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கின்றபடியால், முகபுத்தகத்தின் மூலம் அப்பாவி இஸ்லாமியரை சென்றடைய படு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நாடகங்களில் ஒரு நாடகத்தை பற்றிய ஒரு சிறு விளிப்புணர்வே இந்த கட்டுரை.

நாடக தலைப்பு – என்னைக் கவர்ந்த இஸ்லாம்.
தயாரிப்பு        - தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத்.
டைரக்டர்       - செய்யிது இப்ராஹிம். (கதாநாயகனும் அவரே)
சரண்யா, காஞ்சனா ஜெய்சங்கர், மற்றும் பலர் இணைந்தும் பிரிந்தும் நடித்த சீரியல் இது!

சாராவாக மாரிய சரண்யாவை பற்றி முதலில் பார்ப்போம். டைரக்டர் செய்யிது இப்ராஹிம் இந்த நடிகையை பற்றி கொடுக்கும் பில்டப்தான்.
1.   தன் வீட்டைவிட்டு ஹிஜ்ரத் (உண்மையில் வீட்டைவிட்டு ஓடியவள்) செய்தவள்.
2.   குர்ஆனை ஆராய்ந்து இஸ்லாத்தை தழுவியவள்.
முதலாவது இவள் அநேக பாடுகளை பட்டாள், குடும்பத்தினர் கொலைசெய்யப் பார்த்தார்கள் என்று செய்யிது நேரில் கண்டதுபோல் அப்பாவி இஸ்லாமியரின் உள்ளங்கள் உருகவேண்டும் என்று அடுக்கு வசனங்களில் அள்ளிவிடும் பொய்கள் இருக்கின்றதே அவை இந்த சீரியலில் நல்ல நகைச்சுவை. யாரும் நம்புகிற மாதிரி ஒன்றும் இல்லை.
இரண்டாவது குர்ஆனை ஆராய்ந்து… என்பது மாபெரும் பொய் என்பதை சாரா என்கிற சரண்யா நிரூபிக்கிறாள். பீஜே சீடிக்களும் புக்ஸும்தான் இஸ்லாத்திற்கு மதமாற காரணம் என்று தெளிவாக சொல்கிறாள். அப்படியானால் இதில் பொய் சொன்னது டைரக்டர் செய்யிது இப்ராஹிமா? அல்லது சாரா என்கிற நடிகை சரண்யாவா? ஒரு வேளை செய்யிது இப்ராஹிமின் டைரக்ஷனில் செய்யிது அண்ணன் மூலம் இஸ்லாத்தை கவர்ந்தேன் என்று சொல்லாமல் பீஜே மூலம் இஸ்லாத்தை கவர்ந்தேன் என்று சொன்னதாலா? இப்படி முரண்பட்ட கருத்துக்கள் வந்தது.

உண்மையில் பீஜே சீடி புத்தகம் படித்து இவள் இஸ்லாத்தை தழுவினால் என்றால் தமிழ் நாட்டிலுள்ள 40 இலட்சம் இஸ்லாமியரில் பீஜே இஸ்லாமியரை தவிர்ந்த யாரும் சரண்யாவை சாராவாக ஏற்க மாட்டார்கள் என்ற உண்மையை டைரக்டர் நன்றாக தெரிந்திருந்த படியால்தான் இப்படி குர்ஆனை ஆராய்ந்து இஸ்லாத்தை தழுவினார் என்று அதிகாலையிலேயே பொய்பிரச்சாரம் செய்திருக்கவேண்டும்.

மேலும் சாரா என்கிற சரண்யா "நான் இஸ்லாத்தை தழுவ முன் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தேன். ஆனால் இஸ்லாத்தை ஏற்றபிறகு மற்றவர்களுக்கு கொடுக்கும் வகையில் என்னிடம் சொத்து இருக்கிறது" என்று கூறியது. " இஸ்லாத்துக்கு மதம்மாறுங்கள். சொத்து, சுகம் எல்லாம் தருவார்கள்" என்று வறிய மக்களை சுகபோக ஆசைகாட்டி இஸ்லாத்துக்கு அழைக்கும் ஈனச்செயல் வெளிப்படுகிறது.

இந்த சாரா என்கிற சரண்யா இஸ்லாத்தை தழுவியவுடன் முதலாவதாக செய்த காரியம் ஒரு இஸ்லாமியனுக்கு திருமணம் செய்துவைத்ததேயாகும். இதில் இரண்டு விடயங்களை கவனிக்க வேண்டும்.
1.   இஸ்லாமிய திருமணத்தில் சீதன கொடுமை இல்லை என்று ஏழை இந்து பெண்களை கவருவதற்காக இப்படி பெண்பிள்ளைகளை இஸ்லாமிய வாலிபருக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள்.
2.   இந்த சாரா மீண்டும் சரண்யாவாக மாறமுடியாதவாறு அடைத்துவைப்பதற்கு. ஏனெனில் இஸ்லாம் ஒரு சிறைச்சாலை என்பதை உணர்ந்து அவள் வெளியேறினால் அங்குள்ள அசிங்கங்கள் எல்லாம் வெளியுலகுக்கு ஆதாரத்துடன் காண்பிப்பாள் அல்லவா? இஸ்லாத்தை பாதுகாப்பதற்காகவே இந்த ஏற்பாடு!
சிந்திக்க தெரிந்த யாவருக்கும் இந்த கொடுமை நன்றாக புரியும். ஏன் இந்த சரண்யாவுக்கு கூட புரியும். ஆனால் அப்பொழுது புலியின் வாலை பிடித்துகொண்டிருக்கும் கதையாக இருக்கும் இந்த சாராவுக்கு.
ஏழைப் பிள்ளைகளே இந்த கயவர் இஸ்லாமிய கூட்டத்திலிருந்து உங்களை காத்துகொள்ளுங்கள்.
விமர்சனம் தொடரும்…

Thanks to Ahamed 
http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=28&topic=2666&Itemid=287

0 comments: