நன்றி மறவாத சாதனைப் பெண் - மேரி கோம்
இதுவரை வரலாற்றில் இல்லாதவாறு இந்த முறை இந்தியா ஆறு பதக்கங்களை ஒலிம்பிக் போட்டிகளில் வாங்கி சாதனை படைத்துள்ளது. சாதனை வீரர்கள் அனைவருக்கும் நம் நல்வாழ்த்துகள். இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கையை முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையான மூன்றிலிருந்து நான்காக கூட்டி ஒரு புதிய மைல் கல்லை உருவாக்கியது பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் போட்டியிட்ட மேரி கோம் (Mary Kom) அவர்கள். மணிப்பூரை சேர்ந்த இந்த சாதனையாளரின் மிகப்பெரிய மீள்வரவு அனைவருக்கும் ஆச்சரியமானது. ஐந்து வயதான இரட்டையர்களின் தாய் இவர், பன்னிரண்டு வருட போராட்டத்துக்குப் பின் இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஒரு சாதனைப்பெண் மட்டுமல்லாது இறை தெய்வ பக்தியும் கொண்ட ஒரு பெண் என்பது பலருக்கும் தெரியாத விசயம். தான் அளிக்கும் எல்லா பேட்டிகளிலும் தைரியமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தை குறிப்பிட தயங்கமாட்டார். இந்தியா டுடே பத்திரிகை அவரைப் பற்றி குறிப்பிடும் போது "She believes firmly in Jesus Christ and has no hesitation in invoking Him before any bout" என்றது.
வெண்கலப் பதக்கத்தை வென்றுவிட்ட தன்னால் தங்கமோ,வெள்ளியோ வாங்க முடியாததற்காக இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்திய மக்களின் ஆதரவு தமக்கு ஆமோகமாக இருந்தது என பெருமையாக பேசிக்கொண்ட அவர் "என்னால் முடிந்த அளவுக்கும் கடினமாக உழைத்தேன். இந்த பதக்கமாவது கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே" என்றார். "இது ஒரு விளையாட்டு, சில சமயங்களில் எல்லாமே நாம் எதிர்பார்ப்பது போல அமையாது. ஆனாலும் இது மட்டாகிலும் வந்ததற்கு இயேசுவுக்கு நன்றி. ஒலிம்பிக்கில் நுழையவேண்டும் என்பது என் 12 வருட போராட்டம்.அந்த கனவு இப்போது நனவானதற்காக ரொம்ப சந்தோசம்" என மகிழ்ச்சி பொங்க கூறினார் அவர். ரேடியோ ஆஸ்திரேலியாவுக்கு அவர் ஒருமுறை அளித்த பேட்டியில் "நான் குத்துச்சண்டை வளையத்தில் நுழைந்ததும், ஆட ஆரம்பிக்கும் முன் முதல் ஐந்து அல்லது பத்து வினாடிகள் நான் நம்பும் என் இறைவன் இயேசுவிடம் பிரார்த்தனை செய்து விட்ட பின் தான் என் விளையாட்டை தொடங்குவேன்" என குறிப்பிட்டிருந்தார். இப்போது புரிகின்றதா அவர் வாழ்வின் வெற்றியின் இரகசியம்.
வாழ்த்துக்கள் ஒலிம்பிக் இந்தியா!
மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
நீதிமொழிகள் 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

0 comments:
Post a Comment