அன்புள்ள தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக
நீ எழுதிய கடிதத்தில் "இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அல்லாஹ் இயேசுவை அப்படியே எடுத்துக்கொண்டார், இயேசுவின் இடத்தில் இன்னொரு நபரை வைத்துவிட்டார், அங்கு இருந்தவர்கள் அனைவரும், இயேசு தான் சிலுவையில் மரித்ததாக நினைக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டார்" என்று எழுதியிருந்தாய். இதற்கு என்னுடைய பதில் என்ன என்று கேட்டு இருந்தாய். இந்த கேள்விகளுக்கு முதல் பதிலை நான் நேற்று அனுப்பினேன், இப்போது இரண்டாவது பதிலை பார்க்கலாம்.
அல்லாஹ் செய்த மிகப்பெரிய தவறு இது தான் என்று நான் சொல்லுவேன்.
நீ உன் கடிதத்தில் ஏன் நீங்கள் இஸ்லாமை தழுவக்கூடாது என்று அடிக்கடி கேட்கிறாய், ஆனால், இப்போது நீ கடிதத்தில் எழுதிய படி, அல்லாஹ் அனேக தவறுகள் செய்து இருப்பதினால் அவரை இறைவன் என்று நம்ப முடிவதில்லை. அப்படி என்ன அல்லாஹ் தவறு செய்துவிட்டார்? என்று நீ கேட்கலாம், அதற்கு இப்போது நான் பதிலை கீழ்கண்ட தலைப்புகளில் தருகிறேன்.
• இயேசுவின் சீடர்கள் நல்லடியார்கள் - அல்லாஹ்வின் சாட்சி
• யூதர்களின் சூழ்ச்சி மற்றும் அல்லாஹ்வின் சூழ்ச்சி
• அல்லாஹ்வின் சூழ்ச்சியின் விளைவு?
1) இயேசுவின் தாய், உலக பெண்களில் சிறந்தவர் - அல்லாஹ்வின் சாட்சி
இயேசுவின் தாயாகிய மரியாள் பற்றி குர்ஆன்கூறும் போது, அவர் "அல்லாஹ்வினால் தெரிந்தெடுக்கப்பட்டவர்", "அல்லாஹ் தூய்மையாக்கியுள்ளான்", மற்றும் "உலக பெண்கள் யாவரையும்விட மேன்மையாக தெரிந்தெடுத்துள்ளான்" என்று சாட்சி பகருகிறது. இதனை குர்ஆன் 3:42ல் காணலாம்:
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்;. உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்). (குர்ஆன் 3:42)
குர்ஆன் 5:75ல், மரியாள் உண்மையுள்ளவர் என்றும் குர்ஆன் கூறுகிறது.
2) இயேசுவின் சீடர்கள் நல்லடியார்கள் - அல்லாஹ்வின் சாட்சி
இயேசுவின் சீடர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு இருந்தார்கள் என்றும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு பகைவர்கள் மீது அல்லாஹ் உதவி அளித்தான் என்றும் குர்ஆன் சாட்சி பகருகிறது.
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர். (குர்ஆன் 3:52)
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (குர்ஆன் 61:14)
3) யூதர்களின் சூழ்ச்சி மற்றும் அல்லாஹ்வின் சூழ்ச்சி
இயேசுவை கொலை செய்ய யூதர்கள் சதி செய்ததாகவும்,அதனை முறியடிக்க அல்லாஹ்வும் சதி செய்ததாக குர்ஆன் கூறுகிறது.
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (குர்ஆன் 3:54)
மேலும், இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட பிறகோ, அல்லது அதற்கு முன்பாகவோ அல்லாஹ் இயேசுவை எடுத்துக்கொண்டாராம். ஆனால், யாருக்கும் தெரியா வண்ணம், இயேசுவின் இடத்தில் இன்னொருவன் ஒப்பாக்கப்பட்டானாம். அல்லாஹ் செய்த இந்த சூழ்ச்சி யாருக்கும் தெரியவில்லை, எல்லாரும் "இயேசு தான் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்" என்று எண்ணிக்கொண்டனர்.
இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (குர்ஆன் 4:175)
4) அல்லாஹ்வின் சூழ்ச்சியின் விளைவு?
தம்பி இதுவரை உனக்கு வசனங்களை மேற்கோள் காட்டினேன். இப்போது அல்லாஹ் செய்த சூழ்ச்சி எவ்வளவு பெரிய தவறாக மாறியுள்ளது என்பதை உனக்கு விளக்குகிறேன்.
இயேசுவை சிலுவைக்கு அழைத்துக்கொண்டு செல்லும் போது, அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்து, எல்லாருடைய கண்களில் மண்ணை வாரிப்போட்டு (அதாவது ஏமாற்றி) வேறு ஒரு நபரை சிலுவையில் அறையும் படி செய்துவிட்டார். இதனை பார்த்துக்கொண்டு இருந்த மக்கள் அனைவரும் இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்துவிட்டார் என்று நினைத்துக்கொண்டனர். ஆனால், 600 ஆண்டுகளுக்கு பின்பு அரேபிய பாலைவனத்தில் எழும்பிய முஹம்மது மூலமாக "இல்லை... இல்லை... மரித்தது இயேசு அல்ல, அவர் வேறு ஒரு நபர், அல்லாஹ் சதி செய்து, யூதர்களின் சதியை முறியடித்துவிட்டார்" என்று குர்ஆனில் எழுதிவிட்டார். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சிலுவை மரணம் பற்றிச் சொல்லும் சுருக்கம் இது தான்.
இப்படி சதி செய்த அல்லாஹ், ஐந்து வகையான மக்களை ஏமாற்றியுள்ளார்:
1) இயேசுவின் சீடர்கள்
2) இயேசுவின் தாய்
3) யூத மத தலைவர்கள்
4) ரோம அரசின் சேவகர்கள்
5) எருசலேமில் வாழ்ந்த பொதுமக்கள்.
யூத மத தலைவர்களையும், ரோம அரசின் சேவர்களையும் அல்லாஹ் ஏமாற்றினார், அதாவது தாங்கள் கொன்றது இயேசுவை என்று அவர்கள் நினைத்துக்கொள்ளும் அளவிற்கு ஏதோ மாயம் செய்து சதி செய்தார். எதிரிகளின் சதியை முறியடிப்பது சரியே.
ஆனால், இயேசுவின் சீடர்களையும், இயேசுவும் தாயையும் ஏமாற்றியது எந்த விதத்தில் நியாயமானது?
நாங்கள் உன் வேதத்தையும், தூதரையும் நம்புகிறோம், எங்களை சத்தியத்திற்கு சாட்சி சொல்பவர்களாக செய்வாயாக என்று சீடர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள்:
"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (குர்ஆன் 3:53)
ஆனால் அல்லாஹ் செய்தது என்ன? சீடர்களை அல்லாஹ் ஏமாற்றினார், இயேசு தான் சிலுவையில் மரித்தார் என்று சீடர்கள் நினைத்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்படும் போது பார்த்துக்கொண்டு இருந்த பொதுமக்களையும் அல்லாஹ் ஏமாற்றியுள்ளார்.
சரி, இப்படி அனைத்து மக்களையும் ஏமாற்றிய அல்லாஹ் வெற்றி பெற்றாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை, இன்று உலகின் பெரிய மார்க்கமாக கிறிஸ்தவம் திகழ்கிறது. அல்லாஹ் செய்த தவறினால் கிறிஸ்தவம் உருவானது என்றுச் சொல்லலாம் அல்லவா?
யெகோவா தேவனின் வெற்றி, அல்லாஹ்வின் தோல்வி:
குறைந்தபட்சம், இயேசுவின் தாய் மற்றும் சீடர்களுக்கு அல்லாஹ் தன் திட்டத்தை அறிவித்து இருந்திருந்தால், சீடர்கள் தங்கள் வேலையை பார்த்து சென்று இருப்பார்கள். சீடர்களிடம் மறைத்தபடியால், அவர்கள் இயேசு மரித்ததாக நினைக்க, மறுபடியும் இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்ததாகவும், சீடர்களிடம் பேசியதாகவும் பைபிள் கூறுகிறது, இதோ இன்று மிகப்பெரிய மார்க்கமாக கிறிஸ்தவம் திகழ்கிறது. கிறிஸ்தவத்திற்கு அடித்தளம் அமைத்து எது? அல்லாஹ்வின் அறியாமையாகும்.
எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று அல்லாஹ்விற்கு தெரிந்து இருந்தால், சீடர்களுக்கு அன்றே உண்மையை கூறியிருப்பார், ஆனால், அல்லாஹ்விற்கு எதிர்காலம் தெரியவில்லை, ஆகையால் சும்மா இருந்தார், 600 ஆண்டுகள் சும்மா இருந்தார். இயேசு சிலுவையில் அறையப்பட்டு 50வது நாளிலிருந்து சீடர்கள் இயேசுவின் சுவிசேஷத்தை பரப்ப ஆரம்பித்துவிட்டார், அல்லாஹ்வின் சதி, மிகப்பெரிய கெடுதியாக இஸ்லாமுக்கு மாறிவிட்டது.
தம்பி, இப்படிப்பட்ட அல்லாஹ்வை எப்படி நம்புவது?
• நாங்கள் முஸ்லிம்கள் என்றும், நல்வழிகாட்டு என்றும் வேண்டிக்கொண்ட சீடர்களையே அல்லாஹ் ஏமாற்றினால், உன்னை இன்று அல்லாஹ் ஏமாற்றமாட்டார் என்று என்ன நிச்சயம்?
• உலக பெண்களில் சிறந்த பெண்மணி என்று இயேசுவின் தாயைப்பற்றி கூறிவிட்டு, அவரையும் ஏமாற்றிவிட்டார், தன் மகனை அல்லாஹ் தன்னிடம் எடுத்துக்கொண்டார் என்று ஏன் அவரிடம் கூறவில்லை? கூறியிருந்தால், அவர் சீடர்களை தடுத்து இருந்திருப்பார்களே?
இதுவரை நான் மேலே கூறிய விவரங்கள், பிரச்சனைகள் அனைத்தும் குர்ஆன் சொல்வது உண்மை என்று நினைத்துக்கொண்டால் வரும் பிரச்சனையாகும். ஆனால் பைபிளின் படி பார்த்தால் யெகோவா தேவன் தன் திட்டத்தில் முழுவதுமாக வெற்றிப் பெற்றார், அல்லாஹ் தோற்றுப்போனார்.
கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன், அடுத்த கடிதத்தில் உன்னை சந்திக்கிறேன், உன் கேள்விகள் எதுவாக இருந்தாலும் எனக்கு எழுத மறக்காதே
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.
0 comments:
Post a Comment