அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 13, 2012

ரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்


[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15கடிதம் 16, கடிதம் 17கடிதம் 18, கடிதம் 19கடிதம் 20, கடிதம் 21கடிதம் 22கடிதம் 23 ]

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவ‌தாக.

நேற்று நான் எழுதிய கடிதத்தில், பழைய ஏற்பாட்டில் அடிமைப் பெண்களை திருமணம் செய்யும் விதம் பற்றி தேவன் விதித்த கட்டளைகளை விளக்கினேன். இந்த கடிதத்தில், எப்படி அல்லாஹ் அடிமைப் பெண்களின் திருமணம் பற்றி கூறுகிறார் என்பதை சுருக்கமாக காண்போம்.

1) அடிமைப்பெண்கள் பற்றி குர்‍ஆனின் நிலைப்பாடு: "வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள்"

குர்‍ஆன் அடிமைகளைப் பற்றி குறிப்பிடும் போது "அவர்கள் முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களாக" கூறுகிறது.

குர்‍ஆன் 23:5,6
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.  (23:5,6)

குர்‍ஆன் 33:50

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; …(33:50)

குர்‍ஆன் 4:24

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். …   (4:24)

போரில்  பிடிக்கப்படும் பெண்களிடம் ஒரு முஸ்லிம் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே உடலுறவு கொள்ளலாம் என்று குர்‍ஆன் கூறுகிறது.

2) மருமகனும் மாமனாரும்:

தம்பி இதுவரை நீ காணாத விவரங்களை, கேளாத விவரங்களை கேட்டுக்கொண்டு இருக்கிறாய். இதோ உன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இன்னொரு விஷயம்:

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350 புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின்) குளித்துவிட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து, காலிதிடம், 'இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.

எனதருமை தம்பியே, குர்‍ஆனுக்கு அடித்தபடியாக இஸ்லாமியர்கள் மதிக்கும் புகாரி ஹதீஸைத் தான் நீ மேலே படித்தது.

போரில் கிடைக்கும் பொருட்களில், அடிமைகளில் ஐந்தில் ஒரு பங்கு முஹம்மதுவிற்கும், அல்லாஹ்விற்கும் சொந்தமானதாகும். ஒரு குறிப்பிட்ட போர் முடிந்தவுடன், தனக்கு வரவேண்டிய இப்படிப்பட்ட ஐந்தில் ஒரு பாகத்தை (குமுஸ்) கொண்டு வரும் படி முஹம்மது தம் மருமகனாகிய அலியை அனுப்புகிறார். அலியும் செல்கிறார், ஆனால், அந்த போர்ச்செல்வத்தில் ஒரு பெண்ணை கண்டு, அவளோடு உடலுறவு கொண்டு (அப்பெண்ணை கற்பழித்துவிட்டு), அதன் பிறகு குளித்துவிட்டு, அலி வருகிறார். இதனைக் கண்ட மற்றவர், அலி மீது கோபம் கொண்டு முஹம்மதுவிடம் செல்கிறார். முஹம்மது அந்த மனிதரிடம், "நீ கோபம் கொள்ளாதே, குமுஸ் நிதி மீது அலிக்கு இன்னும் அதிக உரிமை உள்ளது" என்று கூறி சமாதானப் படுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சி ஏதோ அந்த அடிமைப்பெண்ணை கற்பழித்துவிட்டதாக நினைத்து பேசப்பட்டது அல்ல, குமுஸ் நிதியிலிருந்து ஏன் அலி இப்படி செய்தார்? இது முஹம்மதுவிற்கு சொந்தமானது அல்லவா? என்று நினைத்து அந்த நபர் கோபம் கொள்கிறார். இதற்கு முஹம்மது தம் மருமகன் பற்றி கூறும் விவரம் என்ன தெரியுமா? இதை விட அதிக உரிமை அலிக்கு உண்டு என்பதாகும் (ஒரு பெண்ணை எடுத்துக்கொண்டு கற்பழித்தது மட்டுல்ல அதற்கு மேலாக அலி செய்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு என்பதாகும்).

3) கற்பழித்துவிட்டு, மறுபடியும் அவர்களை விற்று காசு சம்பாதிக்க அனுமதி அளித்த அண்ணல்

தம்பி, திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைப்பெண்களை கற்பழிக்க குர்-ஆன் அனுமதி அளிக்கிறது. தனக்கு கிடைத்த ஐந்தில் ஒரு பாகத்தில் வரும் பெண் அடிமையை தன் மருமகனே கற்பழித்தாலும் அதனை அங்கீகரித்த மாமனாராக உன் வழிகாட்டி இருக்கிறார். இதுமட்டுமல்ல, அடிமைப்பெண்களை கற்பழித்துவிட்டு, அதன் பிறகு அவர்களை விற்றுவிட்டு, காசு சம்பாதிக்கவும் உன் வழிகாட்டி வழிகாட்டுகிறார்.  இவைகளை நீயே தமிழ் மொழியில் உள்ள புகாரி ஹதீஸ்களில் படிக்கலாம். இதோ உனக்காக அந்த புகாரி ஹதீஸ்கள்:

பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2229
 
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு)
 
மேலும் இதே விஷயத்தைக் கூறும்  புகாரி ஹதீஸ் எண்கள்:
பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2542
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4138
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5210
பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6603
 
உன் வழிகாட்டி எப்படிப்பட்ட பதிலை கொடுத்தார் பார்த்தாயா? நீங்கள் பெண் அடிகைகளை கற்பழிக்கும் போது, உங்கள் விந்தை வெளியே விடவேண்டிய அவசியமில்லை, பிறக்கும் குழந்தை பிறக்காமல் இருக்காது, பிறக்காத குழந்தை  பிறக்காது, என்று தத்துவங்கள் பேசுகிறார். ஆனால், அந்த பெண் அடிமைகளின் நிலையை நினைத்துப் பார்க்கவில்லை. தன் கணவனையும், பெற்றோர்களையும் போரில் பலி கொடுத்துவிட்டு, அனாதையாக நின்றுக்கொண்டு இருக்கும் பெண்களிடம் சென்று அவர்களிடம் உடலுறவு கொண்டால், அவர்கள் மகிழுவார்களா? அவர்களின் மனது சந்தோஷப்படுமா? சிந்தித்துப்பார் தம்பி. முஹம்மது அனுமதித்த இந்த செயலுக்கு நீ என்ன பெயர் கொடுப்பாய், இதை "கற்பழிப்பு" என்று தான் சொல்லமுடியும்.
 
4) பெண் அடிமைகளை கேவலப்படுத்தும் இஸ்லாம்:
 
இதுவரை ஒரு சில விவரங்களை உனக்கு நான் மேற்கோள் காட்டினேன், நீ உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மதுவிற்கு அடிமைப்பெண்கள் இருந்ததாக, இஸ்லாமிய சரித்திரம் கூறுகிறது. தேவைப்பட்டால் முஹம்மதுவின் வைப்பாட்டிகள் (அடிமைப்பெண்கள்) பற்றி இஸ்லாமிய சரித்திரம் என்ன சொல்கிறது என்று பிறகு பார்ப்போம்.

கடந்த கடிதத்தில், பைபிளின் தேவன் எப்படி அடிமைப்பெண்கள் கற்பழிக்கப்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினார் என்பதையும், ஒரு யூதன் எப்படி இப்படிப்பட்ட நிலையில் நடந்துக்கொள்ளவேண்டும் என்பது பற்றியும் விளக்கினேன். இப்போது நீ பின்பற்றும் மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் சுருக்கமாக காண்போம்.

1) ஒரு முஸ்லிம் திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு கொள்ளலாம்.

 
2) அடிமைப்பெண்களை அவன் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு வைப்பாட்டியாக வைத்திருக்கலாம். இதற்கு எண்ணிக்கை இல்லை, நீ எவ்வளவு பணக்காரனாக இருக்கிறாயோ, அதைப் பொருத்து எண்ணிக்கை மாறும், விலை கொடுத்து எத்தனை பேரையாவது வைத்துக்கொள்ளலாம்.
 
3) அடிமைப்பெண் தன் குடும்ப நபர்களை நினைத்து துக்கம் கொண்டாட 30 நாட்கள் ஒரு யூதன் ஒதுக்குவது போல, ஒரு முஸ்லிம் ஒதுக்கத் தேவையில்லை. அந்தப் பெண்ணின் மாதவிடாய் நின்று போனால், ஒரு முஸ்லிம் அவளை கற்பழிக்கலாம்.
 
4) ஒரு முஸ்லிம் அடிமைப்பெண்களை அனேக நாட்கள் கற்பழித்துவிட்டு, பிறகு அவளை மறுபடியும் விற்கலாம், இன்னொரு முஸ்லிம் அவளை வாங்கி அவனும் மறுபடியும் கற்பழிக்கலாம். அவளின் வாழ்க்கை ஒரு விபச்சாரியின் வாழ்க்கையைவிட கேவலமானதாக மாறிவிடுகிறது, இதற்கு காரணம் அல்லாஹ்வும், முஹம்மதுவும் தான். ஆனால், பைபிளின் தேவன் அப்பெண்ணுக்கு திருமணத்தை முதலில் தருகிறார், பிறகு அவளை அந்த யூதன் விரும்பவில்லையானால்  விடுதலையாக அவளை அனுப்பிவிட கூறுகிறார், மறுபடியும் அவளை விற்க அவனுக்கு உரிமை இல்லை.
 
5) முஹம்மதுவின் அடிமைப்பெண்களை வைத்திருந்தார், அவரது மருமகனும், தோழர்களும் இந்த கொடுமையான செயலை பெண் இனத்திற்கு எதிராக செய்துவந்தனர்.
 
6) அடிமைப் பெண்களை ஒரு போகப்பொருளாக பார்த்து,  அவர்களின் வாழ்வை சீரழிக்கும் படி இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறது. ஆனால், இஸ்லாமுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வந்த பைபிளின் கட்டளைகளோ அப்பெண்களுக்கு ஒரு புதிய வாழ்வையும், மகிழ்ச்சியையும் தருகிறது, மனைவி என்ற ஸ்தானத்தைத் தருகிறது, கடைசியாக அவளை விடுதலைச் செய்கிறது. யெகோவா தேவன் எங்கே, அல்லாஹ் எங்கே, ஓ இவ்விருவரும் ஒருவரல்ல, இவர்கள் நேர் எதிர் துருவங்கள், எக்காலத்திலும் அல்லாஹ் யெகோவா தேவன் ஆகமுடியாது.

தம்பி இதுவரை இஸ்லாமிய நூல்களிலிருந்து ஒரு சில விவரங்களை உனக்கு கூறினேன். நான் குர்-ஆனைலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மேற்கோள்களை காட்டினேன்.

தம்பி, நீ நினைப்பது போல, இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கமன்று, ஒரு மார்க்கத்தை அதன் கனிகள் மூலம் அடையாளம் காணலாம். இந்த கடிதத்தில் நான் விளக்கியது, இஸ்லாமிய மரத்தின் ஒரு கனியாகும். இஸ்லாமை அதன் கனி மூலம் அறியலாம், நீ படித்தவன், அறிவுள்ளவன், எனவே சிந்தித்துப் பார். நான் சொல்லியவைகளில் தவறு இருந்தால் எனக்கு தெரிவி, நான் உனக்கு அதற்கான பதிலை எழுதுவேன். ஆனால், சத்தியத்தை முதலாவது நீ அறிந்துக்கொள், அது உன்னை நிச்சயமாக விடுதலையாக்கும்.

அதிகமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன், அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.

இப்படிக்கு, உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.
 



0 comments: