இலங்கை தமிழர்களை இந்தியா கைவிட்டுவிட்ட நிலைமையில் உலக நாடுகளின் நிர்பந்த குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியது. அமெரிக்க வெளி விவகார துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சமீபத்தில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். ஐ நா சபையும் தனது கணடனத்தை தெரிவித்திருந்தது.
வரும் 29ந்தேதி இங்கிலாந்து வெளியுறவுதுறை அமைச்சர் டேவிட் அவர்களும் பிரான்ஸ் வெளியுறவுதுறை அமைச்சர் பெர்னார்ட் அவர்களும் சுவீடன் வெளியுறவுதுறை அமைச்சர் கார்ல் பில்ட் அவர்களும் வர இருக்கும் நிலையில் சண்டை நிறுத்தம் அறிவிக்க இங்கிலாந்து பிரதமர் கார்டன் இலங்கை அதிபருடன் தொலைபேசியில் பேசி நிர்பந்திதிருந்தார்.
http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aGk_OuTLuXNo&refer=home
உலக நாடுகள் எல்லாம் கடுமையான கண்டனம் தெரிவிக்க காரணம் ஏறக்குறைய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு சமீபத்திய படையெடுப்பில் கொன்று குவித்தது. விடுதலை புலிகளை கொல்கிறோம் என்ற போர்வையில் தமிழனத்தையே அழிக்க முற்பட்டு அதற்கான முயற்சியும் செய்துவந்தது. இந்தியாவும் இங்கு இலங்கைக்கு ஆதரவான நிலையையே கொண்டிருந்தது. இதனால் பார்த்து பொருமையிழந்த உலக நாடுகள் அனைத்தும் இப்பிரச்சனையில் தலையிட ஆரம்பித்தன.
இந்நிலையில் விடுதலைபுலிகளும் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இனியும் உலக நாடுகளை ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு இலங்கை வந்துள்ளது. தனக்கு நெருக்கடி அதிகரிப்பதை அறிந்த இலங்கை இனியும் உலக நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் போர்நிறுத்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாகதான் இன்று போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஒன்றுமறியா அப்பாவி மக்களின் இரத்ததை குடித்த இலங்கை அரசு இனியாவது இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடாது அமைதி வழியில் தமிழர்களை வாழ வழிவகை செய்துதரவேண்டும் என்பதே இறைவனிடம் நாங்கள் வைக்கும் மன்றாட்டு.
இலங்கையில் அமைதி திரும்ப உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கு உள்ளமெல்லாம் நிறைந்த நன்றி கலந்த வணக்கங்கள்.
2 comments:
இன்னும் கனவுலகத்திலிருந்து மீண்டு வரவில்லையா? இன்று மட்டும் 1000 க்கு மேற்பட்ட மக்கள் இறந்திருக்கிளார்கள்.
No ceasefire in Sri Lanka - Military
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=47236
என்றுதான் ஈழத்தமிழருக்கு விடிவுகாலமோ????????
சாரதி சகோதரரே என்ன இது கொடுமை. இன்று மதியம் தானே அனைது ஊடகங்களும் இலங்கையில் போர் நிறுத்தம் என்று அறிவித்தது. அத்ற்குள்ளாக இப்படி ஒரு செய்தி இடி விழுந்த மாதிரி வருகுதே. கொஞ்சம் நிம்மதி பெருமுச்சு விட்டேன். அதற்குள்ளாக.....
Post a Comment