அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 23, 2009

வேடிக்கையான தமிழக அரசியலும் இலங்கை பிரச்சனையும்

எல்லோரும் இலங்கை தமிழனை அரசியல் ஆதாயத்துக்காக பார்க்கிறார்களே என ஒரே வேதனை என் உள்ளத்தில். இப்படியும் சுயநல அரசியல்வாதிகள் நம் நாட்டில் மட்டும் தான் இருப்பார்கள்.

இதுவரை மத்திய அரசாங்கத்தில் முழு பலத்தையும் வெளிப்படுத்த சக்தி கொண்ட கலைஞர் இனி இப்படியும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா எனதெரியவில்லை. ஆனா சும்மா பேசியே காலத்தை ஓட்டி விட்டுட்டார். நம்ம மருத்துவர் ஐய்யாவோ யாருடன் கூட்டணி சேர்த்துள்ளார் என பார்த்தீர்களா. இராஜபக்சேவுடன் கூட்டணி சேர்ந்ததிற்கு சமம். டாஸ்மாக்கை ஒழிக்கவேண்டும் எனகூக்குரலிட்டவர் டாஸ்மாக்கை கொண்டுவந்தவருடனே கூட்டு சேர்ந்துள்ளார்.

இப்ப தமிழக அரசியலில் தந்திகொடுப்பது, பிறகு ஊர்வலம் நடத்துவது, பொதுகூட்டம் நடத்துவது பிறகு ஒரு வேலைநிறுத்த போரட்டாம் அறிவிப்பது இது தான் இன்றை ஸ்டைலாக போய் விட்டது. எல்லோரும் சுயநலவாதிகள்... பக்கா சுயநலவாதிகள்

இப்படி எல்லோருமே சுயநலமா இருந்துட்டு தேவை படும்போதுமட்டும் இலங்கை பிரச்சனையை கையிலெடுக்கிறீர்களே இது உங்களுக்கே நல்லாயிருக்கா. எது எப்படியோ அங்கு கொத்து கொத்தாக மடிந்துகொண்டிருக்கும் தமிழர்களை இறைவன் மட்டுமே காக்கமுடியும்..

3 comments:

Kumar said...

I am now ashamed of saying as "INDIAN".. We given lot for gujrat earthquake and bihar flood, kargil war, etc.. but no one is care about this "Tamil people"

Kumar said...

I am now ashamed of saying as "INDIAN".. We given lot for gujrat earthquake and bihar flood, kargil war, etc.. but no one is care about this "Tamil people", OUR BLOOD

christhunesan said...

//We given lot for gujrat earthquake and bihar flood, kargil war, etc.. but no one is care about this "Tamil people" //

இங்குள்ள அரசியல் வாதிகளும் மொத்த இந்தியாவும் தமிழர்களை கைகழுவி விட்டதோ என்று சந்தேகம் வருகிறது