அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 24, 2009

திரைப்படத்துறையினரின் உருப்படியான தீர்மானம்

நேற்று நடந்த திரைப்படத்துறையின் உண்ணாவிரதம் சற்று உணர்வு பூர்வமாக இருந்தது. அதில் பேசியஅணைவரும் சற்று உணர்ச்சி வசப்பட்டவர்களாகவே காணப்பட்டனர்.

இறுதியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா மூன்று முக்கிய தீர்மானங்களை அறிவித்தார்

போர்நிறுத்தத்திற்கு போதுமான நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ் தலைமை தமிழகம் வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பது என்றும் இங்கு வாய் மூடி அமைச்சர்களாக இருக்கும் சிதம்பரம், இளங்கோவன் ம்ற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் போட்டியிடும் இடங்களின் எதிராக வாக்களிக்க தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது என்றும்
அடுத்து தனக்கு மத்திய அரசால் கெளரவிக்கப்பட்ட பத்மஸீரி விருதினை திரும்ப தருவது என்றும் அறிவித்தார்.

இது சரியான தீர்மானாமாக தான் தெரிகிறது. இதற்கு அனைத்து தமிழக மக்களும் ஆதரவளிக்க வேண்டுமென்பதே நடுநிலையாளர்களின் ஆவல்

2 comments:

சரவணன் said...

தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று ஒரே ஒரு தீர்மானம் போட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

இருமேனிமுபாரக் said...

பாரதிராஜா என்ன ஏசு கிருஸ்துவா? இவரு சொல்லிட்டா ஒருத்தரும் ஓட்டு போடமாட்டாங்களாக்கும்? அட போங்கப்பா.... ஙொய்யா.....