அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 27, 2008

குரான் முரண்பாடுகள்-8



நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால்
''நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன்.
எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக ! (அல் குர்ஆன் 19:
22-26)

"பேச மாட்டேன்" என்று "பேசச் சொன்ன" அல்லா:

இந்த வசனத்தில் அறியாமை எப்படி வெளிப்படுகிறது என்றுப் பாருங்கள். இங்கு
குர்-ஆன் எப்படி முரண்படுகிறது என்றுப் பாருங்கள்:

1. இவ்வசனத்தின் படி பார்த்தால், மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடத்தில்
மரியாள் இருப்பதாக அறிகிறோம்.

2. நான் இறைவனுக்கு நோம்பு "மௌன விரதம்" இருக்கிறேன் என்று, மரியாள்
சொன்ன மாத்திரத்தில், அந்த விரதம் கலைந்துவிடாதா?


1. மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மரியாள் இருப்பதாக அறிகிறோம்.

நான் மேலே சொன்னது போலவே, "மனிதர்களில் யாரையாவது நீ கண்டால்" என்று
அல்லா சொல்வதிலிருந்து புரிந்துவிடுகிறது, மரியாள் மனித நடமாட்டம் உள்ள
இடத்திலே தான் இருக்கிறார் அல்லது மனிதர்களின் நடமாட்டம் உள்ள இடத்தின்
அருகாமையில் இருக்கிறார். அப்படி மனிதர்கள் கண்டுயிருந்தால், யூதர்கள்
கல்லெரிந்தல்லவா கொன்று இருப்பார்கள்? அந்த இடத்திற்கு 9 மாதங்களாக ஒரு
மனிதனும் அவ்வழியாக வரவில்லையா?

2. நான் இறைவனுக்கு நோம்பு "மௌன விரதம்" இருக்கிறேன் என்று, மரியாள்
சொன்ன மாத்திரத்தில், அந்த விரதம் கலைந்துவிடாதா?

முன்னுக்கு பின் முரணாக ஒரு வார்த்தையை அல்லா சொல்கிறார். பேச மாட்டேன்
என்று நோம்பு(விரதம்) இருந்தால், யாராவது கேட்கும் போது "பேச
மாட்டேன்,விரதம் இருக்கிறேன்" என்றுச் சொன்னால், விரதம் கலைந்து விடும்
அல்லவா, மற்றும் கேட்கிறவன் என்ன நினைப்பான்? பேச மாட்டேன் என்று விரதம்
இருந்து பேசிவிட்டாளே என்று நினைக்கமாட்டான்? ஒரு வேளை, மரியாள் அல்லா
சொல்வது போல் சொல்லியிருந்தாலும், அல்லது சைகை காட்டி பேசியிருந்தாலும்,
"குழந்தை யாருடையது" என்று அடுத்த கேள்வி கேட்டுயிருக்க மாட்டான் அவன்?
இதற்கெல்லாம், குர்-ஆனில் பதில் இல்லை.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part5.html

 

குரான் முரண்பாடுகள்-7



//இயேசுவின் குழந்தை அற்புதம் பற்றி குர்ஆன் .//

பிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது "முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றிய
விவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்து
கிடைத்துயிருக்கும்".

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him
chiefly through apocryphal and heretical sources."

குர்-ஆன் சொல்லுகின்ற, "இயேசு குழந்தையாக இருக்கும் போது செய்த
அற்புதம்", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான "The first
Gospel of the Infancy of Christ" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.

Infancy Gospel of Jesus



இந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம்
அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின்
சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது.

Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ
The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of
a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries —

The text describes the life of the child Jesus, with fanciful, and
sometimes malevolent, supernatural events, comparable to the trickster
nature of the god-child in many a Greek myth. One of the episodes
involves Jesus making clay birds, which he then proceeds to bring to
life, an act also attributed to Jesus in the Qur'an, thus indicating
the text may have had substantial influence on Arabic tradition by the
7th century.

Source :  http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas



Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ
...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths
found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia
Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the
Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus
and his playmates were playing on a rooftop and one fell down and...

Source:    http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus
இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது
தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.




1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3 இயேசு குழந்தையாக
இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது
வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய
குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை
அனுப்பியுள்ளார்.

2. He relates that Jesus spoke even when he was in the cradle and said
to his mother :

3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth
according to the declaration of the angel Gabriel to you, and my
Father has sent me for the salvation of the world.


இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:

http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm
http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm
http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm

இப்படி 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் உருவாக புத்தகங்களில் வரும்
நிகழ்ச்சிகளை மாற்றி குர்-ஆனில் முகமது சேர்த்துவிட்டார். இயேசு
குழந்தையாக இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-
ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்கு
ஆதாரமே இல்லை. அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே,
எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார்
என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்ற
புத்தகங்களிலிருந்து "காபி" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லை
என்று பெருமையடித்தால் எப்படி?

இப்படி ஒரு புத்தகம் உலகத்தில் இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா?
சரித்திரம் சொல்கிறது, அது இன்னும் நம்மிடம் உள்ளது.

அப்படி அப்புத்தகம் இருந்திருந்தாலும், முகமதுவிற்கு அது தெரியாது என்று
சொல்கிறீர்களா? இந்த புத்தகமே முதலில் எழுதப்பட்டது, அரபி மொழியில் தான்
என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கி.பி 2-3 நுற்றாண்டில் அரபியில் எழுதிய புத்தகம், 7ம்
நுற்றாண்டில் முகமதுவிற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில்
உள்ள முஸ்லீம்கள் எல்லாருக்கும், இராமாயணத்தின் கதை என்ன?, மகாபாரதத்தின்
கதை என்ன என்பது ஓர் அளவுக்காவது தெரிந்திருப்பது போல, முகமதுவிற்கும்
இக்கதை தெரிந்திருக்கும்.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part4.html



 

குரான் முரண்பாடுகள்-6


மரியாளுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை தூதன் சொன்னதாக குர்-
ஆனில் இரண்டு இடங்களில் வருகிறது குர்-ஆன் 3:42 , 45 மற்றும் குர்-ஆன்
19:17-19. மரியாளிடம் பேசியது ஒரு தூதனா? அல்லது பல தூதர்களா?

குர்-ஆன் இயேசுவைப் பற்றிப் பேச பேச பல தவறுகளையும், முரண்பாடுகளையும்
செய்துள்ளது. குர்-ஆன் 3:42, 45 வசங்கள் சொல்கின்றன "மரியாளிடம் பல
தூதர்கள் பேசினார்கள்". குர்-ஆன் 19:17-19 வசங்கள் சொல்கின்றன
"மரியாளிடம் ஒரு தூதன் பேசினான்".

1. பல தூதர்கள் பேசினார்கள் (குர்-ஆன் 3:42, 45):

அல்லா கீழ்கண்ட வசனங்களில் "மலக்குகள்" (தூதர்கள்) என்று பன்மையில்
சொல்வதைக் காணலாம்.

3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ்
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும்
ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட
(மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்),

3:45 மலக்குகள் கூறினார்கள்; 'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து
வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி)
நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்.
அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும்
(இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

2. ஒரு தூதன் பேசினான் குர்-ஆன் 19:17-19:

கீழ்கண்ட வசனங்களில் அல்லா ஒரு தூதனை அனுப்பியதாகவும், மரியாள் ஒரு
தூதனிடம் பேசியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

19:17 அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு
திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை
(ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில்
தோன்றினார்

19:18 (அப்படி அவரைக் கண்டதும்,) 'நிச்சயமாக நாம் உம்மை விட்டும்
ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால்
(நெருங்காதீர்)" என்றார்.

19:19 'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை
உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.

மேலே சொன்ன வசங்களை நாம் பார்த்தால், இந்த முரண்பாடு மிக சுலபமாக
புரியும். சில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அல்லா இரண்டுமுறை தூதர்களை
அனுப்பினார். முதல் முறை பல தூதர்களை அனுப்பியதாகவும், மரியாளின்
சந்தேகம் முழுவதுமாக தீர்ப்பதற்கு மறுபடியும் ஒரு தூதனை அனுப்பியதாகச்
சொல்கிறார்கள். ஆனால் இதுவும் சரியான பதிலில்லை. காரணம் இரண்டு முறையும்
மரியாள் ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்.

19:20 அதற்கு அவர் (மர்யம்), 'எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான்
நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன்
உண்டாக முடியும்?" என்று கூறினார்

3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும்
தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக
முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான்
நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன்
அதனிடம் 'ஆகுக" எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."

எனவே, இது ஒரு குர்-ஆனின் முரண்பாடு தான். சில இஸ்லாமியர்கள்
சொல்கிறார்கள், தூதர்கள் இரண்டு முறை மரியாளை சந்திக்கவில்லை, ஒரு
முறைதான். பின் ஏன் அல்லா "தூதர்க்ள்" என்றுச் சொல்கிறார் என்று
கேட்டால் ? சொல்லப்பட்ட செய்தியின் நிமித்தமாகவும், காபிரியேல் தூதனின்
தனித்தன்மையின் நிமித்தமாகவும் மரியாதைக்காக "தூதர்கள்" என்றுச் சொன்னார்
என்றுச் சொல்கிறார்கள். இதுவும் ஒரு சரியான பதிலாக இல்லை.

உதாரணம்: "முதலமைச்சர் வந்தார்" என்பதைவிட "முதலமைச்சர் வந்தார்கள்"
என்று பன்மையில் மரியாதைக்காக சொல்வார்கள் என்று உதாரணம் காட்டுவார்கள்
சில இஸ்லாமியர்கள்.

இந்த உதாரணத்திலும் உள்ள ஒரு தவறு என்னவென்றால், "பன்மை" சேர்க்கப்படுவது
பெயர்ச்சொல்லுக்கு (NOUN க்கு) இல்லை வினைச்சொல்லுக்கு (VERB க்கு)
ஆகும்.

ஒரு முதலமைச்சரை குறிப்பிடும் போது :

"முதலமைச்சர்கள் வந்தார்கள்" என்றுச் சொல்லமாட்டார்கள், ---> NOUN க்கு
பன்மை சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறு, இது ஒருவரைக் குறிக்காது.

"முதலமைச்சர் வந்தார்கள்" என்று தான் ஒரு முதலமைச்சருக்கு மதிப்பு
தரும்போது சொல்வார்கள். VERB க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், அல்லா "தூதர்கள்" என்று NOUN க்கு பன்மை சேர்த்துயிருப்பதினால்,
கண்டிப்பாக பல தூதர்களை குறிக்கிறதே தவிர மதிப்பின் காரணமாக அல்ல.

இதைப்பற்றி இஸ்லாமியர்களின் பதில் என்ன? அதற்கு மறுப்பு என்ன என்பதை
இங்கு விவரமாக காணலாம். Question and Answers on this issue

நடந்து முடிந்த நிகழ்ச்சியை சொல்லும் போது குர்-ஆன் பல தவறுகளையும்
முரண்பாடுகளையும் செய்துள்ளது. எனவே, குர்-ஆன் சொல்லும் இயேசுவின்
பிறப்பின் நிகழ்ச்சி ஒரு திரித்து சொல்லப்பட்டது என்பது
தெளிவாகப்புரியும்..


http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part3.html



 

குரான் முரண்பாடுகள்-5

குர்-ஆன் 3:44
3:44 (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்;
இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார்
பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள்
எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை;
(இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.


ஊரிம் தும்மீம் போட்டுப்பார்த்து முடிவு எடுப்பது யூதர்கள் முறை:
வில் எறிந்து முடிவு எடுப்பது அரேபியர்களின் வழக்கம், யூதர்களின்
அல்ல.யூதர்கள் ஒரு முடிவு எடுக்கவேண்டுமானால், தீர்க்கதரிசிகளிடம்
கேட்பார்கள், அல்லது ஆசாரியர்களிடம் உள்ள ஊரீம் தும்மீம் என்ற கற்கலை
(like Dise) போட்டு பார்ப்பார்கள். இதன் மூலமாக ஒரு காரியத்தை செய்யலாமா,
இல்லையா என்பதை அறிந்துக்கொள்வார்கள். இது தான் கர்த்தர் போதித்த விதம்.
(பார்க்க யாத் 28:30, லேவி 8:8, எண் 27:21, உபா 33:8, 1 சாமு 14:41,
23:9-12, 28:6, எஸ்றா 2:63)

லேவி 8:8 அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம்
தும்மீம் என்பவைகளையும் வைத்து,
எஸ்றா 2:63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும்,
இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச்
சொன்னான்.
More on Urim and Thummim : Images 1 | Images 2 | Wikipedia - Urim and
Thummim

வில் எறிந்து முடிவு எடுப்பது அரேபியர்களின் வழக்கம், யூதர்களின்
வழக்கமல்ல:

வில் எறிந்து முடிவு எடுப்பது அரபியர்களின் முறையாகும். மரியாளின்
வளர்ப்பை யார் பார்க்கவேண்டுமென்று, வில் எறிந்து பார்த்தார்கள் என்றுச்
சொல்வதிலிருந்து, குர்-ஆன் இன்னொரு சரித்திர பிழையை செய்துள்ளது. எனவே
தான் சில புத்திசாலி அறிஞர்கள், குர்-ஆனை மொழிபெயர்க்கும் போது,
"எழுதுகொல் எறிந்து" பார்த்தார்கள் என்று மாற்றி எழுதுகிறார்கள்.

குர்-ஆன் 3:44
3:44 (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்;
இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார்
பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள்
எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை;
(இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.

யூசுப் அலி சரியாக மொழிபெயர்த்துள்ளார்.
003.044 YUSUFALI: This is part of the tidings of the things unseen,
which We reveal unto thee (O Messenger!) by inspiration: Thou wast not
with them when they cast lots with arrows, as to which of them should
be charged with the care of Mary: Nor wast thou with them when they
disputed (the point).

இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து ஆதாரம்:

முகமதுவின் தாத்தா முத்தாலிப் ஒரு முறை "ஜம்ஜம்" கிணரை சுத்தம்
செய்துக்கொண்டு இருந்தார், அவர் நிறைய கஷ்டத்தை சந்தித்தார், இதனால் ஒரு
வேண்டுதல் செய்தார். இந்த வேலை நல்லபடியாக முடிந்தால், தன் 10 மகன்களில்
ஒரு மகனை "ஹுபாலுக்கு(காபாவின் ஒரு விக்கிரகம்)" பலியிடுவேன் என்று.
அப்படியே வேலை நல்லபடியாக முடிந்தது. ஆனால் தன் மகன்களை இழக்க
விருப்பமில்லாமல், மகனுக்கு பதிலாக ஒட்டகங்களை தருவதாக சொல்லி, வில்
எறிந்தால் அது முகமதுவின் தந்தையின் பெயரில் விழுந்தது, அவருக்கு பதிலாக
ஒட்டகங்களை கொடுத்தார் என்று இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது.

Ishaq:66/Tabari VI:2 ?It is alleged, and Allah only knows the truth,
that Abdul Muttalib encountered opposition when he was digging Zamzam.
He vowed that if given ten sons, to make his labor less arduous and to
protect him, he would sacrifice one of them to Allah at the Ka?aba.?

Ishaq:67 ?They used to conduct their affairs according to the
decisions of the arrows.?

Ishaq:67 ?When Abdul Muttalib had ten sons grown to maturity and he
knew that they would protect him, he told them of his vow, and called
on them to keep faith with Allah in this matter. They expressed their
obedience, and asked what they should do. He replied, ?Let every one
of you take an arrow, write his name on it, and bring it to me.? They
did this, and he went into the presence of Hubal in the interior of
the Ka?aba. Hubal was the greatest of the idols of Quraysh in Mecca.?

Tabari VI:5 ?They returned to Mecca when they had all agreed on the
matter, Abdul Muttalib stood and prayed to Allah inside the Ka?aba
beside Hubal. The arrows fell against Abdallah, so they added ten
camels, making twenty. With Muttalib standing and praying to Allah
they went on this way ten times. Each time the arrows fell against
Abdallah.?

Wikipedia about throwing Arrows and Hubal God of Arabiya:

"The Quraysh had several idols in and around the Kaaba. The greatest
of these was Hubal. It was made, as I was told, of red agate, in the
form of a man with the right hand broken off. It came into the
possession of the Quraysh in this condition, and they therefore made
for it a hand of gold. The first to set it up was Khuzaymah ibn-
Mudrikah ibn-al-Ya's' ibn-Mudar. Consequently it used to be called
'Khuzaymah's Hubal'.

"It stood inside the Kaaba. In front of it were seven divination
arrows. On one of these arrows was written "pure" (sarih), and on
another "consociated alien" (mulsag). Whenever the lineage of a new-
born was doubted, they would offer a sacrifice to it [Hubal] and then
shuffle the arrows and throw them ... It was before [Hubal] that 'Abd-
al-Muttalib shuffled the divination arrows [in order to find out which
of his ten children he should sacrifice in fulfilment of a vow he had
sworn], and the arrows pointed to his son Abdu l-Lah, father of the
Prophet. - Wikepedia

வில் எறிவது பற்றிய இந்நிகழ்ச்சியை இஸ்லாமிய தளங்களிலும் காணலாம்.
பார்க்க : Islamic-Awareness.org

ஆக, முகமது, மக்காவிலுள்ள காபாவின் பழக்கவழக்கங்களை, ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் உள்ள யூதர்களின் வழக்கமாகச் சொல்லி, மறுமடியும் ஒரு தவறை குர்-
ஆனில் சேர்த்துவிட்டார்.


http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part2.html

 

குரான் முரண்பாடுகள்-4


மரியாள் தங்கிக் கொள்ளும் அறைக்கு ஜகரிய்யா அவர்கள் செல்லும் போதெல்லாம்
மரியாளிடம் இருக்கும் உணவு வகைகளை கண்டு 'மர்யமே! இது உனக்கு எங்கிருந்து
கிடைத்தது? என்று கேட்கிறார்கள். அதற்கு மரியாள் இது இறைவன்
கொடுக்கிறான். அவன் தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்
என்கிறார்கள். (அல் குர்ஆன் 3:38)

இந்த அற்புதம் குர்-ஆனில் உள்ளதே தவிர, பைபிளில் இல்லை. இறைவன் உணவை
அற்புதமாக கொடுத்தார் என்று குர்-ஆன் சொல்கிறதே தவிர, ஏன் இந்த அற்புதம்
அவசியம் என்றுச் அல்லா சொல்லவில்லை.



1. ஏன் மரியாளுக்கு உணவு இறைவன் அற்புதமாக கொடுக்கவேண்டும்?
2. காரணமில்லாமல் தேவன் எப்போதும் ஒரு அற்புதத்தையும் செய்யமாட்டார் !
3. ஜகரியா அவர்களுக்கு உணவுப்பஞ்சம் இருந்ததா ?
4. இப்படி அற்புதம் நடந்து இருந்தால், இச்செய்தி ஊரெல்லாம்
பரவியிருக்கும், மரியாள் மிகவும் புகழ்பெற்ற பெண்மணியாக
மாறியிருப்பார்கள்.
5. இதனால், இயேசுவின் அற்புதப்பிறப்பில் எந்தவித சிக்கலும்
இருந்திருக்காது.
6. மக்கள் மரியாளை குர்-ஆன் சொல்கிறபடி சந்தேகப்பட்டு
இருக்கமாட்டார்கள்.
7. குர்-ஆன் சொல்வது போல இயேசுவை பெற்றெடுக்க மரியாள் அதிகமாக
கஷ்டப்பட்டு இருக்கமாட்டார்கள்.




எனவே, குர்-ஆனில் சொல்வது முகமதுவின் கற்பனை என்பது தெளிவாகப்புரியும்.

இப்படி மரியாளுக்கு அற்புதவிதமாக உணவு அளிக்கப்பட்டிருந்தால், இயேசுவின்
சீடர்கள் அவைகளை எழுதாமல் இருந்திருக்கமாட்டார்கள். இயேசுவின் சீடர்கள்
செய்த அற்புதங்களை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாட்டின் 5வது
புத்தகம்) காணலாம். எனவே மரியாளுக்கு ஜகரியாவின் வீட்டில் நடந்த
அற்புதங்கள் என்பது, வெறும் கற்பனையே தவிர வேறுயில்லை.

(குறிப்பு: குர்-ஆன் கற்பனையே என்றுச் சொன்னதினால், இஸ்லாமிய நண்பர்கள்
கோபப்படவேண்டாம். எப்படி இஸ்லாமியர்கள் பைபிளில் சொல்லப்பட்டது கற்பனை
என்றுச் சொல்லி அவர்கள் நம்பிக்கையை முன்வைக்கின்றனரோ, அதே போல்
கிறிஸ்தவர்களுக்கும், தங்கள் நம்பிக்கையை (குர்-ஆன் கற்பனை என்றும்,
முரண்பாடுகள் உள்ளதென்றும் என்றுச் சொல்லி) முன்வைப்பதற்கும் உரிமையுண்டு
என்பதை பகுத்தறிவு உள்ளவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள்.)

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part2.html


 

குரான் முரண்பாடுகள்-3



குர்-ஆன் சொல்கிறபடி இயல்பிற்கு மாறாக ஒரு அற்புதமான முறையில் ஒரு
குழந்தை பிறந்து, அவர் நல்வழிப்படுத்தினால் யூதர்கள் நல்வழிப்படுவார்கள்
என்று அல்லா திட்டமிட்டார் அல்லது நினைத்தார். ஆனால் அல்லாவின்
திட்டத்திற்கு எதிராக யூதர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டமிட்டார்கள்.
அப்படியானால் அல்லாவின் திட்டம் நடைபெறவில்லை, அப்படித்தானே. யூதர்கள்
இயேசுவிற்கு என்ன செய்வார்கள் என்று அல்லாவிற்கு தெரியவில்லை. பிறப்பு
அற்புதமாக இருந்தால், யூதர்கள் நிச்சயமாக இயேசுவை நம்புவார்கள் என்று
அல்லா "தவறாக" முடிவு செய்துவிட்டார்.
இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற
இறைவனின் "ஏற்பாடு" அல்லது "திட்டம்" யூதர்களால் பொய்யாக்கப்பட்டது
இல்லையா?

ஆனால், இயேசுவின் வருகையின் நோக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது
என்று பாருங்கள்.

1. ஏதோன் தோட்டத்தில் ஆதாம் பாவம் செய்ததால், தேவனோடுள்ள தன் உறவு
முறிந்துவிட்டது.

2. மனிதன் வம்சத்தில் பிறக்கும் ஒரு வித்தினால்( மனிதனால்) உன் தலை
நசுக்கப்படும் என்று தேவன் சாத்தனுக்குச் சொல்கிறார்.

3. கன்னியின் வயிற்றில் ஒருவர் பிறந்து, சிலுவையில் உலகத்தின் எல்லாருடைய
பாவங்களுக்காக மரிப்பார், பிறகு உயிரோடு எழுந்திருப்பார் என்று தேவன்
இயேசுவின் பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள்
மூலமாகச் சொன்னார்.

4. தேவதிட்டத்தின் படியே இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார்,
சிலுவையில் மரித்தார், உயிரோடு எழுந்தார்.

யேகோவா தேவனின் திட்டம் அப்படியே நிறைவேறியது, ஆனால் அல்லாவின் திட்டம்
நிறைவேறவில்லை.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part2.html

 

குரான் முரண்பாடுகள்-2

ஆபிரகாம் மக்காவிற்கு இஸ்மவேலோடு வந்தார், அங்கு காபாவை புதுப்பித்தார்
என்ற குர்-ஆனின், ஹதீஸ்களின் வாதத்திற்கு இதுவரையில் எந்த சரித்திர
ஆதாரமும், அகழ்வாராச்சி ஆதாரமும் இல்லை.




1. ஊர் என்ற தேசத்திலிருந்து, பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு
போகும்படி சொன்ன அல்லா, ஏன் பிறகு இங்கிருந்து மக்காவிற்கு
போகச்சொல்கிறார்?

2. 100 வயதுள்ள ஆபிரகாம், ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஆகாரோடு ஆயிரம்
மைல்களுக்கு அப்பால் உள்ள மக்காவிற்கு பாலைவனத்தில் எப்படி சென்றார்
என்பது தான் ஆச்சரியம். ஒரு பாம்பு வழிகாட்டியதோ?

3. மக்காவில் தீர்க்கதரிசனம் உரைத்து, மக்கா மக்களை நேர்வழியில்
நடத்துவதற்காகவா?

4. இவர்கள் காபாவை புதுப்பிக்கும்போது மக்காவில் யாரும் வாழவில்லை. ஒரு
மனிதனும் இல்லை. ஊரிலே யாரும் இல்லாத போது, அங்கு காபாவை பாதுகாக்க
அல்லது ஒரு பொருப்பாளியாக இஸ்மாயில் எதற்கு? கி.மு. 2000 லிருந்து கி.பி
வரை மக்காவில் மனித நடமாட்டம் இல்லை என்று சரித்திரம் சொல்கிறது.



Tabari VI:52 "The Ka'aba had not had any custodians since its
destruction in the time of
Noah. Then Allah commanded Abraham to settle his son by the Ka'aba,
wishing thereby to
show a mark of esteem to one whom he later ennobled by means of his
Prophet Muhammad."
"Abraham and his son Ishmael were custodians of the Ka'aba after the
time of Noah. At the time, Mecca was uninhabited…."



இஷாக், மற்றும் டபரி போன்றவர்களின் தொகுப்பில் இதைப்பற்றிச்
சொல்லியுள்ளது. ஆனால் நீர் சொன்னது போல எந்த ஹதீஸிலும் இல்லை. புகாரி
ஹதீஸிலும் இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி இல்லை. (ஷகீனா வழிகாட்டியதாக வரும்
செய்தி)

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part1.html



 

குரான் முரண்பாடுகள்-1


குர்-ஆன் கற்பனையா? அல்லது பைபிள் கற்பனையா என்பது இரண்டையும் ஆராயும்
அன்பர்களுக்கு விளங்கும். குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளுக்கு குர்-ஆனும்,
ஹதீஸ்களும் இஸ்லாமிய சரித்திர நூல்களுமே சாட்சி. சரித்திர நூல்களும்,
தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும் பைபிளில் சொல்லப்பட்டவைகளே
உண்மையானவை என்று நிருபிக்கின்றன.

ஆரோனின் சகோதரியான மிரியாம் பற்றி சிறிது தெரிந்துக்கொண்டு, இயேசுவின்
தாயை "ஆரோனின் சகோதரியே" என்று கூறுவதிலும், பெர்சிய அரசன் அகாஸ்வோறு
அரசனின் மந்திரியாக இருந்த "ஆமான்" என்ற நபரை, எகிப்தின் பார்வோனோடு
சம்மந்தப்படுத்தி பேசும் போதும் குர்-ஆன் முரண்படுகின்றது.

சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று
எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-
ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா? மிகத் தெளிவாக
உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும்,
ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை
பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி
சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம்.

குர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள்
பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது.
இந்த முரண்பாட்டைப்பற்றி இங்கு படிக்கலாம். | Inheritance in Koran |
Koran Contradictions |

இயேசுவின் பிறப்பு பற்றியும், அவரின் மரணம், மற்றும்
உயிர்த்தெழுதலைப்பற்றியும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை.
இந்நிகழ்ச்சிகளில் உள்ள ஒற்றுமையை இங்கு காணலாம். ( ai url )

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part1.html



 

November 25, 2008

அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்


சாம் ஷமான்

Muhammad as Al-Amin (the Trustworthy)

How His Enemies Really Viewed Him

Sam Shamoun

இஸ்லாமுக்காக‌ வாதம் புரிப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் தீர்க்க‌த‌ரிசியின்
நேர்மையைப் ப‌ற்றி விவ‌ரிக்கும் போது அடிக்க‌டி மேற்கோள் காட்டுவ‌து,
முக‌ம‌துவிற்கு அல்-அமின்(Al-Amin or Al-Ameen) என்ற‌ பெய‌ர்
கொடுக்கப்பட்டு இருந்தது என்பதைப் பற்றியதாகும். அல்-அமின் என்றால்,
"நம்பத்தகுந்தவர்" என்று பொருளாகும், மற்றும் இந்த பட்டப்பெயர்
முகமதுவிற்கு அவரின் உறவினர்கள் அவர் இறைவனின் ஊழியத்திற்கு வருவதற்கு
முன்பாக கொடுத்து இருந்தார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.
முகமதுவின் கால மக்களில் இவர் மிகவும் நம்பத்தகுந்த நபராக இருந்தார்
என்றும், மற்றும் இவர் ஒரு பொய்யையும் சொல்லாதவராக இருந்தார் என்பதால்
இவருக்கு அல்-அமின் என்ற பட்டப்பெயரை அம்மக்கள் இவருக்கு கொடுத்தார்கள்
என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இந்த வாதத்திற்கு கீழ் கண்ட
ஹதீஸ் ஆதாரமாக தரப்பட்டுள்ளது:

'...அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று
எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார் [ஹெர்குலிஸ்]. நான்
இல்லை என்றேன். 'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை
என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை
செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது
எங்களுக்குத் தெரியாது என்றேன். ………. இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர்
பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம்
கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய்
சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே
உறுதியாக நம்புகிறேன். …. அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? என
உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள்
அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். ( பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7 )

ஆங்கிலத்தில்:

"… He [Heraclius] said, 'Had you ever blamed him for telling lies
before he claimed what he claimed?' I replied, 'No.' … He said, 'Does
he break his promises?' I replied, 'No, but we are now at truce with
him and we are afraid that he may betray us.' … . 'When I asked you
whether he was ever blamed for telling lies, your reply was in the
negative, so I took it for granted that a person who did not tell a
lie about (others) the people could never tell a lie about Allah. I
asked you whether he had ever broken his promise. You replied in the
negative. And such are the apostles; they never break their
promises…'" (Sahih al-Bukhari, Volume 4, Book 52, Number 191)

இங்கே, முகமதுவின் எதிரியாக இருந்த அபு சுஃப்யான் என்பவர், பைஜான்டியம்
ஆளுநரான ஹெர்குலிஸ் என்பவரை சந்தித்து பேசும் போது, முகமது ஒரு முறையும்
பொய் சொல்லவில்லை மற்றும் அவர் தன் வாக்குறுதியை எப்போதும் காப்பவராக
இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டதாக, மேலே உள்ள ஹதீஸ் கூறுகிறது.

முஸ்லீம்கள் மேற்கோள் காட்டும் இன்னொரு விவ‌ரமும் உண்டு, அதாவது,
இஸ்லாமில் நம்பிக்கையில்லாதவர்களும்(unbelievers) முகமது ஒரு முறையும்
யாரிடமும் பொய் சொல்லவில்லை என்பதை ஒத்துக்கொண்டதாக உள்ள ஹதீஸாகும்.

இபின் அப்பாஸின் அதிகார பூர்வமான ஹதீஸாக அறிவிக்கப் பட்டது என்னவென்றால்,
"உன் உறவினர்களை எச்சரிப்பாயாக(மற்றும் அவர்களிடம் உள்ள ஒருசில
குழுவினருக்கு எச்சரிப்பாயாக)" என்ற வசனம் இறங்கியப் போது, அல்லாவின்
நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள், சபா(Safa)வின் மிது ஏறி,
உரத்த சத்தமாக கூப்பிட்டார்கள்: உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்
என்றார். இப்படி சத்தமாக கூப்பிடுவது யார் என்று அவர்கள் கேட்டார்கள்.
முகமது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் அவரிடம் வந்தார்கள், மற்றும்
அவர்: ஓ இன்னாருடைய மகன்களே, இன்னார் இன்னாருடையை மகன்களே, ஓ அப்த் மனஃபு
உடைய மகன்களே, ஓ அப்த் அல் முத்தாலிஃப் உடைய மகன்களே, என்று அழைத்தார்,
அவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி வந்தார்கள். அவர்(நபி):ஒருவேளை இந்த
மலையின் அடிவாரத்தில் குதிரை வீரர்கள் நம்மை நோக்கி வந்துக்கொண்டு
இருக்கிறார்கள் என்று நான் சொன்னால், என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று
கேட்டார். அதற்கு அவர்கள் மறுமொழியாக: உங்களிடம் நாங்கள் எப்போதும் ஒரு
பொய்யையும் காணவில்லை என்றுச் சொன்னார்கள். அவர் சொன்னார்: நல்லது,
வரப்போகும் மிகக்கொடுமையான ஆபத்தைக் குறித்து நான் உங்களை
எச்சரிக்கிறேன். இந்த ஹதீஸை சொன்னவர் கூறினார், இதற்கு அபு லஹாப்
கூறினார்: உனக்கு அழிவு உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை இங்கு கூட்டிச்
சேர்த்தாய்? அவர்(பரிசுத்த நபி) எழுந்து நின்றார், அப்போது இந்த வசனம்
இறங்கியது, "அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்
(111:1)". அமாஸ் இந்த வசனத்தை சூராவின் கடைசியில் வாசித்தார். (Sahih
Muslim, Book 001, Number 0406 In English)

மேலே கண்ட உரையாடல் அல்லது நிகழ்ச்சி முகமது ஒரு நேர்மையானவர் என்பதற்கு
ஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்(*). இறைவன் தன் நபியாக அல்லது
தூதுவராக அனுப்பினார் என்று ஒரு பொய்யான வாதத்தை முகமது முன்வைக்க
மாட்டார் என்று நம்புவதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரம் என்று முஸ்லீம்கள்
நம்புகிறார்கள்.

முஸ்லீம்களின் இந்த வாதத்தில் அனேக பிரச்சனைகள் உள்ளன. குறைந்த பட்சமாக
முகமதுவின் காலத்தவர்கள் தங்கள் கைப்பட எழுதி வைத்த(No Written Records)
ஒரு ஆதாரமும் இப்போது நம்மிடம் இல்லை. இந்த ஹதீஸ்கள் அனைத்தும்
முஸ்லீம்களால் எழுதப்பட்டது, இன்னும் சொல்லப் போனால், முகமதுவின்
மரணத்திற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது.

மேலும், இந்த இஸ்லாமிய விவரங்கள் சந்தேகத்திற்கு உரியவைகள் ஏனென்றால்,
முஸ்லீம்கள் க‌தைகளை இட்டுக் கட்டி தங்கள் நபி மிகவும் நல்லவராக
காட்டுவதற்கு இப்படி செய்கிறார்கள். குர்‍ஆன் முகமதுவை எப்படி
காட்டுகிறதோ அதை விட நல்லவராக காட்டுவதற்கு முஸ்லீம்கள் முயற்சி
செய்கிறார்கள்! ஆகையால், முகமதுவின் எதிரிகள் அவருடைய நடத்தையைப் பற்றி
மிகவும் புகழ்ந்தும், அவருடைய நேர்மையைப் ப‌ற்றி புகழ்ந்தும் பேசுவதாக
இருக்கும் இந்த விவரங்கள் பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதற்கும் மேலாக, ஓயாமல் முஸ்லீம்கள் சொல்லிக்கொண்டு இருக்கும்
இப்படிப்பட்ட கதைகளுக்கு எதிர்மறையாக குர்‍ஆன் சாட்சி சொல்கிறது. அதாவது,
குர்‍ஆன் முஸ்லீம் அல்லாதவர்களின் வார்த்தைகளை பதிவு செய்து தன்னிடம்
வைத்துள்ளது.

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக்
கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப்
பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின்
வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்‍ஆன் 6:33

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல்
உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள்
செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. குர்‍ஆன் 10:41

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர்
பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். குர்‍ஆன் 15:6

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால்,
(உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று
அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை
அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை)
அறிய மாட்டார்கள். குர்‍ஆன் 16:101

"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே
இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில்
அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்
ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும்,
பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்;
"இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக்
கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக்
காண்பிக்கப்படுகின்றன." (நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள
இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன்
மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று
கூறுவீராக! குர்‍ஆன் 25:4-6

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால்
(வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக
பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
குர்‍ஆன் 35:4

ஆனால், இவைகள் அனைத்தும் முஸ்லீமல்லாதவர்களால சொல்லப்பட்ட பொய்யான
கூற்றுக்கள் என்று முஸ்லீம்கள் இந்த வசனங்களை ஒதுக்கிவிடுவார்கள். இப்படி
முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்கள் வாதங்களில் உள்ள
முரண்பாட்டை(inconsistency) இது காட்டுகிறது. ஆனால், உண்மையில் இதே
முஸ்லீம்கள் தான் "முகமதுவின் நேர்மையை நிருபிப்பதற்கு
முஸ்லீம்களல்லாதவர்களின் கூற்றுகளை ஆதாரங்களாக காட்டி முயற்சி
எடுத்துக்கொண்டு இருப்பது" (After all, they are the ones appealing to
the statements of the disbelievers to prove that Muhammad was a
trustworthy person).

ஒரு வேளை, முஸ்லீம் அல்லாதவர்களின்(Unbelievers) சாட்சி/கூற்று முகமது
ஒரு நேர்மையானவர் என்பதை நிருபிக்க போதுமானதாக‌ இருக்கிறது என்று
முஸ்லீம்கள் சொல்லும் போது, அதே முஸ்லீம் அல்லாதவர்களின் சாட்சி/கூற்று
முகமதுவின் நடத்தையை கேள்விக்குரியதாக்க போதுமானதாக இருக்கிறது என்று
நம்பலாம் அல்லவா? இது எப்படி உள்ளதென்றால், கூழும் குடிக்கனும்,
மீசையிலும் ஒட்டக்கூடாது என்றுச் சொல்வது போல முஸ்லீம்களின் கூற்று
இருப்பது மிகவும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது (But if their testimony is
reliable enough to support Muhammad's integrity then the unbelievers
are also a good enough source to call his character into question. It
is apparent that the Muslims want to have their cake and eat it too).

சில நேரங்களின் முஸ்லீம்கள் கீழ் கண்டவாறுச் சொல்லி திருப்தி அடைவார்கள்,
அதாவது, "முகமதுவைப் பற்றி நம்பிக்கை இல்லாதவர்கள் என்ன சொன்னார்களோ அதே
போலத் தான் மற்ற நபிகள் மற்றும் தூதர்கள் பற்றியும் நம்பிக்கை
இல்லாதவர்கள் சொன்னார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது என்பார்கள்
முஸ்லீம்கள். ஆனால், இதனை மட்டும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் நம்ப
மாட்டார்கள் என்று முஸ்லீம்கள் சொல்வார்கள். முஸ்லீம்களின் இந்த கருத்து
மிகவும் தவறானது, இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

முதலாவதாக, பைபிளின் நபிகளுக்கும், தூதர்களுக்கும் தேவன் இயற்கைக்கு
அப்பாற்பட்ட அற்புதங்களைச் செய்யும்படிச் செய்து, அவர்கள் தனக்கு பதிலாக
பேச அனுப்பப்பட்ட நபிகள் என்று வலுவான ஆதாரங்களோடு நிருபித்தார். இதன்
காரணத்தினால், நம்பிக்கயில்லாதவர்களின் கூற்றுக்கள் பொய் என்று
நிருபனமாகிறது. இதற்கு எதிர்மறையாக, முகமது, தான் இறைவனால்
அனுப்பப்பட்டவர் தான் என்பதை நிருபிக்கும் படி ஒரு அற்புதமும்
செய்துக்காட்ட முடியாமல், தன் நபித்துவத்தை நிருபித்துக்கொள்வதில் தோல்வி
அடைந்துவிட்டார் (Muhammad, on the other hand, failed to provide any
supernatural confirmation that he was speaking on behalf of God).

இரண்டாவதாக, இப்போது பிரச்சனை என்னவென்றால், "நம்பிக்கை இல்லாதவர்கள்
சொன்னது சரியானதா என்பதல்ல, அதற்கு மாறாக, நம்பிக்கை இல்லாதவர்கள்
முகமதுவின் நேர்மையைப் புகழ்ந்தார்கள் என்று சொல்லும் முஸ்லீம்களின்
வாதம் உண்மையானதா என்பதாகும்". குர்‍ஆன் சாட்சி சொல்வது போல, நம்பிக்கை
இல்லாதவர்களின் கூற்று உண்மையாகவே, முகமதுவை மட்டுப்படுத்தவதாகவே
இருந்தது. (Secondly, the issue here is not whether what the
unbelievers said was correct, but whether the Muslim assertion that
even the disbelievers praised Muhammad's honesty is true. As the Quran
testifies, their comments were anything but flattering to Muhammad.)



மிகவும் முக்கியமாக, முகமது ஒரு நம்பத்தகுந்தவர் அல்ல என்றும் மற்றும்
நேர்மையற்றவர் என்றும் தெரிந்துக்கொள்வதற்கு இஸ்லாமிய விவரங்கள்/ஹதீஸ்கள்
போதுமான நம்பத்தகுந்த‌ ஆதாரங்களாக உள்ளன. முஸ்லீம்கள் நினைப்பது போல‌
முகமது ஒன்றும் நேர்மையின் நன்னடத்தையின் கலங்கரை விளக்கு அல்ல (He
wasn't the beacon of virtue and honesty that Muslims make him out to
be).

ஒரு எடுத்துக் காட்டுக்காகச் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் கூட
சொல்வார், மற்றும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக தன்னை பின்
பற்றுபவர்கள் பொய் சொல்லவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4037

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு
(தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின்
தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள். உடனே
முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று
தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்)
அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு
மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக்
குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள்.(Muhammad bin Maslama said,
"Then allow me to say a (false) thing (i.e. to deceive Kab)." The
Prophet said, "You may say it.") …… ….
….

அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு
அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன்.
அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள்
கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்)
வெட்டி விடுங்கள்" என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு
நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி),
'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து)
பார்த்ததில்லை" என்று கூறினார்கள்"

மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை
நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி
(நுகர்ந்து பார்)" என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா
அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக்
கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று
கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)" என்று கூறினான். முஹம்மத்
இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்"
என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர்.
பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத்
தெரிவித்தனர். (Sahih al-Bukhari, Volume 5, Book 59, Number 369 in
English)

மற்றும்

கெய்பர் கைப்பற்றப்பட்டபிறகு, 'அல் ஹஜ்ஜஜ் பி. இலத் அல் சலாமி' என்ற அல்
பஹ்ஜ் என்ற இனத்தைச் சார்ந்தவர், நபியவர்களிடம் வந்து, 'என்
மனைவியிடம்(உம் ஷய்பா டி அபூ தல்ஹா) என் பணம் உள்ளது, (இவர்கள்
இருவருக்கு முரத் என்ற மகனுண்டு). மக்காவிலுள்ள வியாபாரிகளிடம் எங்கள்
பணம் உள்ளது, எனவே மக்காவிற்குச் சென்று அப்பணத்தை பெற்றுக்கொண்டு
திரும்ப அனுமதி கொடுங்கள் என்று கேட்டார். அனுமதி பெற்றுக்கொண்டு,
மறுபடியும் இவர் நபியவர்களிடம் "நான் பொய் சொல்லியாக வேண்டும்" என்று
கேட்டார். அதற்கு நபியவர்கள் 'அவர்களிடம் சொல்" என்றுச் சொன்னார். அல்
ஹஜ்ஜஜ் கூறினார், 'நான் மக்காவிற்குச் சென்றேன், அல்பைதா என்ற இடத்தில்
சில குவாரிஸ் மக்கள் கெய்பருக்கு நபி சென்றாரே, அவர் எப்படி உள்ளார்
என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். ஹிரஜ் என்ற பட்டணம் மிகவும்
முக்கியமான பட்டணம் என்றும், அதிக ஜனத்தொகையுள்ள மற்றும் அதிக
பாதுகாப்புள்ள பட்டணம் என்றும் அவர்களுக்குத் தெரியும், எனவே, அவ்வழியே
செல்லும் வழிப்போக்கர்களிடம் ஏதாவது செய்தி கிடைக்குமா என்று
கேட்டுக்கொண்டு இருந்தார்கள். நான் ஒரு முஸ்லீம் என்று அவர்களுக்குத்
தெரியாது, எனவே என்னை அவர்கள் கண்ட போது, என்னிடம், "இவர் அல் ஹஜ்ஜஜ்
பி.இலத் தானே, கண்டிப்பாக இவரிடம் ஏதாவது ஒரு செய்தி இருக்கும்.
எங்களிடம் சொல்லவும், ஓ அபூ முஹம்மதே, அந்த வழிப்பறி
கொள்ளைக்காரன்(highwayman) யூதர்களின் மற்றும் தோட்டங்களுள்ள ஹிரஜ் என்ற
பட்டணத்திற்கு சென்றான் என்று கேள்விப்பட்டோம்". நான் "நீங்கள்
சந்தோஷப்படும் ஒரு செய்தியை நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்றேன். என்
ஒட்டகத்தின் இருபுறங்களிலும் அவர்கள் ஆர்வத்துடன் வந்து, "சொல் ஹஜ்ஜஜ்"
என்றார்கள். நான் கூறினேன், "இதுவரை நீங்கள் கேள்விப்படாத அளவிற்கு அவர்
தோல்வியை சந்தித்தார் மற்றும் அவருடைய சக தோழர்கள் வெட்டப்பட்டு
மரித்தார்கள்; அவர் எப்படி பிடிக்கப்பட்டாரோ அதை நீங்கள் இதுவரை
கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்". கெய்பரின் மக்கள், "நாம் இவரை
கொல்லகூடாது, இவரை மக்கா மக்களிடம் அனுப்புவோம், இவர் கொன்ற மக்கா
மக்களுக்கு பழிக்கு பழியாக அவர்களே இவரை கொல்ல‌ட்டும்" என்று
கூறினார்கள். அவர்கள் எழுந்து மக்கா மக்களுக்கு சத்தமாக சொன்னதாவது, "இதோ
ஒரு செய்தி உங்களுக்கு, முகமது இங்கு அனுப்பும் வரைக்கும் நீங்கள்
காத்திருங்கள், பிறகு உங்கள் மத்தியில் அவரை கொல்லலாம்". நான் "என்
பணத்தையும், எனக்கு வரவேண்டிய தொகையையும் நான் வசூல் செய்துக்கொள்ள
எனக்கு உதவி செய்யுங்கள், வியாபாரிகள் அங்கு செல்வதற்கு முன்பு நான்
மறுபடியும் கெய்பருக்குச் சென்று, முகமது மற்றும் அவரது
தொழர்களிடமிருந்து தப்பித்தவர்களை பற்றிக்கொண்டு இருக்க எனக்கு உதவி
செய்யுங்கள் என்றேன்". அவ‌ர்க‌ள் எழுந்திருந்து என்னுடைய‌ ப‌ண‌ம்
அனைத்தையும் வ‌சூல் செய்தார்க‌ள், நான் வ‌சூல் செய்து இருந்தாலும்
இவ்வ‌ள‌வு சீக்கிர‌த்தில் என் வேலை முடிந்திருக்காது. நான் என்
ம‌னைவியிட‌ன் சென்று அவ‌ளிட‌ம் உள்ள‌ ப‌ண‌த்தையும் பெற்றுக்கொண்டு, நான்
கெய்ப‌ருக்குச் சென்று வியாரிக‌ளுக்கு முன்பாக‌ நான் வாங்க‌ வேண்டும்
என்றேன். அப்பாஸ் இந்த‌ செய்தியையும், என்னைப் ப‌ற்றியும்
கேள்விப்ப‌ட்டு, நான் த‌ங்கியிருந்த‌ வியாபாரிக‌ளின் கூடார‌த்தின்
ப‌க்க‌த்தில் வ‌ந்து நின்று என்னிட‌ம் செய்தி என்ன‌ என்று கேட்டார். நான்
அவ‌ரிட‌ம் "நீ இர‌க‌சிய‌மாக‌ வைத்திருப்பேன் என்று சொன்னால், ஒரு
விஷ‌ய‌த்தை உன்னை ந‌ம்பிச் சொல்கிறேன்" என்றேன். நான் அப்படியே இரகசியமாக
வைப்பேன் என்று சொன்னார். நான் இப்போது நீ பார்க்கின்ற படி பணத்தை நான்
வசூல் செய்துக்கொண்டு இருக்கிறேன், நான் உன்னை தனிமையில் சந்திக்கும் வரை
காத்திரு என்றேன், அவரும் சென்றுவிட்டார். எனக்கு மக்காவில் வரவேண்டிய
பணம் அனைத்தையும் நான் வசூல் செய்துவிட்டபிறகு, நான் கெய்பருக்குச் செல்ல
முடிவு செய்தபோது, அப்பாஸை சந்தித்து சொன்னதாவது, "நான் சொல்லும்
செய்தியை மூன்று நாட்கள் இரகசியமாக வைத்திருந்து, பிறகு நீங்கள்
சொல்லலாம், ஏனென்றால் அவர்கள் என்னை பிடித்துவிடுவார்கள் என்று
அஞ்சுகிறேன்". அப்பாஸ் அப்படியே நான் செய்கிறேன் என்றுச் சொன்னபோது, நான்
சொன்னதாவது, நான் "உன் சகோதரனின் மகன் அந்த அரசனின் மகள் ஷபியாவை
திருமணம் செய்துக்கொண்டார், கெய்பர் கைப்பற்றப்பட்டது, அதனுள்
இருப்பதெல்லாம் நீக்கப்பட்டது, இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது
தோழர்களின் சொத்தாக மாறிவிட்டது" என்றுச் சொன்னேன். அவர் கேட்டார்
"ஹஜ்ஜஜ் நீ என்ன சொல்கிறாய்?". நான் "ஆமாம், அல்லாவின் உதவியால் நடந்தது.
என் இரகசியத்தை காத்துக்கொள்". நானும் ஒரு முஸ்லீம் தான், என்னுடைய
பணத்தை வசூல் செய்யவே நான் வந்தேன், என் பணத்தை இவர்கள்
எடுத்துக்கொள்வார்கள் என்று பயந்துவந்தேன். மூன்று இரவுகள் கடந்த பின்பு,
இந்த செய்தியை மற்றவர்களுக்கு உங்கள் விருப்பப்படி சொல்லலாம் என்றேன்.
மூன்றாம் நாள் வந்தபோது, அப்பாஸ் தன் மேல் ஷால்வையை போட்டுக்கொண்டு,
நறுமனம் பூசிக்கொண்டு மற்றும் தன் தடியை எடுத்துக்கொண்டு, காபாவிடம்
சென்று அதை சுற்றினார். மக்கள் அவரைக் கண்டு, அவரிடம், "ஓ அபூ அல்-பதல்,
இது மிகவும் துரதிஷ்டமானது என்றனர்". அதற்கு அவர், "இல்லை இல்லை, நீங்கள்
சத்தியமிடும் அல்லாவின் உதவியோடு, முகமது கெய்பரை கைப்பற்றியுள்ளார்,
மற்றும் அந்த நாட்டு மன்னரின் மகளையே திருமணம் செய்துள்ளார்" என்றுச்
சொன்னார். முகமது அவர்களின் எல்லா சொத்துக்களையும் முடக்கிவிட்டார்,
இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாகி விட்டது
என்றார். அவர்கள் கேட்டனர், "யார் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னது?".
அதற்கு அவர் "யார் உங்களுக்கு உங்கள் செய்தியை கொண்டுவந்தார்களோ, அவரே
தான் சொன்னார், அவர் ஒரு முஸ்லீமாக இங்கு வந்தார், தன் பணத்தை வசூல்
செய்துக்கொண்டார், மற்றும் முகமதுவிடம் அவரது தோழர்களிடம்
சேர்ந்துக்கொள்ள மறுபடியும் சென்றுவிட்டார், இனி அவரோடு இருப்பார்"
என்றார். அதற்கு அவர்கள், "ஓ அல்லாவின் மக்களே, அல்லாவின் எதிரி
தப்பித்துக்கொண்டான். அவன் அப்படிப்பட்டவன் என்று தெரிந்து இருந்தால்,
வேறு விதமாய் அவரை கவனித்து இருந்திருப்போமே" என்றனர். கடைசியாக ஒரு
உண்மைச் செய்தி அவர்களை அடைந்துவிட்டது. (The Life of Muhammad: A
Translation of Ibn Ishaq's Sirat Rasul Allah, with introduction and
notes by Alfred Guillaume [Oxford University Press, Karachi, Tenth
impression 1995], pp. 519-520; capital and underline emphasis ours).

முகமதுவிற்கு தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொள்ளவும் பிரச்சனை
இருந்தது இல்லை:

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5518

ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) கூறினார்

நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம்.
'ஜாம்' கூட்டத்தைச் சேர்ந்த எங்களக்கும் இந்த (அல்அரீ)
கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உறவு (நட்பு) இருந்தது. அப்போது
கோழி இறைச்சியுடன் உணவு கொண்டு வரப்பட்டது. மக்களிடையே சிவப்பான மனிதர்
ஒருவர் அமர்ந்திருந்தார். (அவரை உணவு உண்ண அபூ மூஸா(ரலி) அழைத்தார்கள்.)
ஆனால், அவர் உணவை நெருங்கவில்லை. அப்போது அபூ மூஸா(ரலி), 'அருகில்
வாருங்கள் (வந்து சாப்பிடுங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதைச் சாப்பிட
நான் கண்டுள்ளேன்' என்று கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர், 'இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதை
பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே 'இதை இனிமேல்
உண்ணமாட்டேன்' என்று சத்தியம் செய்து விட்டேன்' என்று கூறினார்.

அதற்கு அபூ மூஸா(ரலி) 'அருகில் வாருங்கள்; உங்களுக்கு (விவரமாக)த்
தெரிவிக்கிறேன்' என்று கூறி(விட்டுப் பின் வருமாறு சொன்)னார்கள்: நான்
நபி(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது
அவர்கள் சினத்துடன் இருந்தார்கள். தர்ம ஒட்டகங்களை அவர்கள்
பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது எங்களை(யும் எங்கள் பயணச்
சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி அவர்களிடம்
நாங்கள் வேண்டினோம். அப்போது அவர்கள் 'உங்களைச் சுமந்து செல்ல
ஒட்டகங்கள் தர மாட்டேன்' என்று சத்தியம் செய்தார்கள். மேலும், 'உங்களை
ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்)
இல்லை' என்று கூறினார்கள்.

(சிறிது நேரத்திற்குப்) பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில்
கிடைத்த சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே (எங்களைக் குறித்து)
'அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள்
எங்கே?' என்று (இரண்டு முறை) கேட்டுவிட்டு, (நாங்கள் வந்தபோது)
எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை
வழங்கினார்கள்.

நாங்கள் சிறிது நேரமே (அங்கு) இருந்திப்போம். அப்போது நான் என்
தோழர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நாம் ஏறிச் செல்ல ஒட்டகம் தர
மாட்டேன் என்று செய்த) தம் சத்தியத்தை மறந்து விட்டார்கள். அல்லாஹ்வின்
மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களை, அவர்கள் செய்த
சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பியிருந்தால் நாம் ஒருபோதும்
வெற்றியடைய மாட்டோம்' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள்
திரும்பி வந்தோம். அப்போது நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது
நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏறிச் செல்வதற்காகத் தங்களிடம்
ஒட்டகம் கேட்டோம். அப்போது தாங்கள், எங்களை ஏற்றிச் செல்லும் ஒட்டகம்
தரமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள். (ஆனால், பிறகு போரில் கிடைத்த
ஒட்டகங்களை எங்களுக்குத் தந்தீர்கள்.) எனவே, நீங்கள் உங்களின் சத்தியத்தை
மறந்துவிட்டீர்கள் என்று நாங்கள் எண்ணினோம்' என்று சொன்னோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே உங்களை ஒட்டகத்தில் ஏற்றி
அனுப்பிடச் செய்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி
எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச்
சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து
அதற்காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்' என்று கூறினார்கள்.37 (Sahih al-
Bukhari, Volume 7, Book 67, Number 427 in English)

முகமது, தன்னை பின் பற்றுகிறவர்கள் தாங்கள் செய்த சத்தியத்தையும்
முறித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார்:

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6722

அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆட்சிப் பொறுப்பை நீயாக
(விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு
வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும்.
(நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்)
விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து,
அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை
முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு' என்று கூறினார்கள்.22

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது...
(Sahih al-Bukhari, Volume 9, Book 89, Number 260 in English)

ஒரு நபர்(ஆணோ/பெண்ணோ) மற்றவர்களை ஏமாற்றுவதை அனுமதித்து, மற்றும் முன்பு
இருந்ததை விட மிகவும் மேலானது தனக்கு கிடைத்தவுடன் முன்பு செய்த
சத்தியத்தை முறித்து விடும் நபர் ஒரு நேர்மையானவரா அல்லது நம்பத்
தகுந்தவரா சொல்லுங்கள்? இப்படிப்பட்ட நபர்(ஆணோ/பெண்ணோ) மீது நம்பிக்கை
கொள்ளமுடியாது. ஏனென்றால், இவர் உண்மையைத் தான் சொல்கிறாரா அல்லது
நேரத்திற்கு ஏற்றது போல தன் சத்தியத்தை மாற்றிக் கொள்வாரா என்று தெரியாத
போது எப்படி அவர் மீது நம்பிக்கை கொள்ள முடியும்?

முடிவாக, அடுத்து நாம் பார்க்கப்போவது, முகமது ஒரு நம்பத் தகுந்தவர் அல்ல
என்பதை நிருபிக்கும் விவரங்களாகும்.

முஸ்லீம்கள் முகமதுவை மிகவும் நல்லவராக காட்டுவதற்கு பல கவர்ச்சிகரமான
மற்றும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை தயாரிக்கிறார்கள். முகமதுவை மிகவும்
எதிர்மறையாக காட்டும் கதைகளை அவர்கள் தயாரிப்பதில்லை. ஆனால், உண்மையில்,
முகமதுவின் நடத்தைப் பற்றி மிகவும் தரம்குறைவாக உள்ள விவரங்கள், அவரது
நடத்தையை சரியாகக் காட்டும் விவரங்களாக அவர்களுக்கு காணப்படுகிறது,
எப்போது? அவ்விவரங்களில் உள்ள சில எதிர்மறையான வாக்கியங்களை
ஒதுக்கிவிடும் போது(In fact, the reports which reflect poorly on
Muhammad's character have a greater chance of being true precisely
because the Muslim tendency was/is to portray him in a more favorable
manner while omitting any negative statements).

இதில் மிகவும் தர்மசங்கடமான விவரம் என்னவென்றால், "முகமது நபியாக
மாறுவதற்கு முன்பாக நேர்மையானவர் என்று பெயர் பெற்று இருந்தார் என்று
முஸ்லீம்கள் சொல்வது உண்மையானால், அவர் நபியாக மாறிய பிறகு அவரிடம்
இருந்த நேர்மையை விட, அதற்கு முன்பாக அவரிடம் அதிகமாக நேர்மை இருந்ததாக
அர்த்தமாகிறது".

What makes this rather ironic is that if this Muslim assertion is
true, that Muhammad was known for being trustworthy prior to his
prophethood, this means that he was more honest before he became a
"prophet" than afterwards!

நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய ஹதீஸை நம் நினைவிற்கு
கொண்டு வருவோம். இந்த ஹதீஸில் ஹெர்குலிஸ் அரசர் அபூ சுஃப்யானிடம் முகமது
பொய் சொல்லியுள்ளாரா? அல்லது தன் உறுதிமொழியை முறித்துக் கொண்டுள்ளாரா?
என்று கேள்விகள் கேட்டுள்ளார். இந்த ஹதீஸின் இன்னொரு தொகுப்பைக்(another
version) காண்போம்:

பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7

….. 'அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று
எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார். நான் இல்லை என்றேன்.

'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்று
சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை
செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது
எங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறை
கற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய
பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! ..... இவ்வாதத்தைச் செய்வதற்கு
முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று
உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம்
பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் முது பொய்யுரைக்கத் துணிய
மாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.

"… Heraclius said, 'Have you ever accused him of telling lies before
his claim (to be a Prophet)?' I replied, 'No.'
Heraclius said, 'Does he break his promises?'
I replied, 'No. We are at truce with him but we do not know what he
will do in it.' I could not find opportunity to say anything against
him except that… 'I further asked whether he was ever accused of
telling lies before he said what he said, and your reply was in the
negative. So I wondered how a person who does not tell a lie about
others could ever tell a lie about Allah.'" (Sahih al-Bukhari, Volume
1, Book 1, Number 6)

நாம் மேலே பதித்த இந்த ஹதீஸ் முகமது பொய்யும் சொல்ல வில்லை மற்றும் தன்
உறுதி மொழியையும் மீறவில்லை என்று பார்க்கிறோம். மட்டுமல்ல, அபூ
சுஃப்யான் என்பவர் கூட, முகமது பொய் சொல்லவில்லை, வாக்கு மாறவில்லை
என்றுச் சொல்கிறார்! ஆக, முகமதுவை இன்னும் நேர்மையாவராகவும் நம்பத்
தகுந்தவராகவும் மாற்றுவதற்கு பதிலாக, அல்லா அவரை தீயவராகவும் மற்றும்
நம்பத் தகாதவராகவும் மாற்றியுள்ளார். குர்‍ஆன் அல்லாவின் வார்த்தை என்று
முஸ்லீம்கள் நம்புகிறார்கள், ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமானால்,
முகமது பொய் சொல்லவும் தன் வாக்குறுதியை மீறவும் செய்தவர் அல்லா தான்.

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை
ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க
கிருபையுடையவன். அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க
பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்,
மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம்
மிக்கவன். குர்‍ஆன் 66:1-2

மற்றும்:

முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற
துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப்
பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால்,
(அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும்,
அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே
(நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. குர்‍ஆன் 3:28

இவ்வசனத்திற்கு புகழ்பெற்ற சுன்னி உரையாளர் இபின் கதிர் கீழ் கண்டவாறு
பொருள் கூறுகிறார்:

நம்பிக்கையில்லாதவர்களோடு நட்புறவு கொள்ளக்கூடாது என்ற தடை:

இஸ்லாமின் மீது நம்பிக்கைக் கொள்ளாதவர்களோடு, முஸ்லீம்கள்
நண்பர்களாக்கிக் கொள்ளக் கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார், அல்லது
முஸ்லீம்களோடு அல்லாமல் நம்பிக்கையில்லாதவர்களோடு நெருங்கிய நட்பை
கொள்ளக்கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார். இப்படிப்பட்ட செயல்களுக்கு
எதிராக அல்லா தன் எச்சரிப்பை கீழ்கண்ட வசனம் மூலமாக தெரிவிக்கிறார்.

<And whoever does that, will never be helped by Allah in any way> இதன்
பொருள், அல்லா தடை செய்ததை யார் மீறுகிறார்களோ அவர்களை அல்லாவும்
தள்ளிவிடுவார். இதே போல அல்லா சொல்கிறார்...

<ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும்
இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்
காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்;> மற்றும்…

<உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர் வழியை திட்டமாக தவற
விட்டு விட்டார>[60:1]. அல்லா சொல்கிறார் ….

<முஃமின்களே ! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற)
நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு
தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தரவிரும்புகிறீர்களா?>[4:144],

மற்றும் …

<முஃமின்களே ! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக
ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள்
தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில்
எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச்
சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்ட
மாட்டான்.>[5:51].

நம்பிக்கையாளர்கள் மற்ற நம்பிக்கையாளர்களாகிய முஹாஜிரின், அன்சார்
மற்றும் பெடோயின் போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததை குறிப்பிட்டு,
அல்லா சொல்கிறார்...

<நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்.
நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக
இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு
இருக்கும்.>[8:73]

மறுபடியும் அல்லா சொல்கிறார்...

<அவர்கள் மூலமாக ஆபத்து வரும் என்று கருதினால் தவிர> ஒருவேளை
நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்களினால்(Unbelievers) தீமை
ஏற்படும் என்று பயப்பட்டால், இந்த சமயங்களில் இப்படி செய்ய வேண்டிய
தில்லை. அதாவது, இந்த நேரங்களில் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கை
இல்லாதவர்களோடு நட்பு கொள்ளலாம், அதுவும் வெளிப் புறத்திற்கு நட்பு மாதரி
காண்பித்துக் கொள்ள வேண்டும், ஆனால், மனதளவில் அவர்களோடு நட்பு கொள்ளக்
கூடாது. அல்புகாரியில் அபூ அத்தர்தா சொன்னதாக பதிவு செய்யப்ப‌ட்டுள்ளது,
"நாம் சில மக்களிடம் பேசும் போது, முகத்தைப் பார்த்து சிரிக்கிறோம்,
ஆனால், நம்முடைய இதயம் அவர்களை சபித்துக் கொண்டு இருக்கும்". அல்புகாரி
சொல்கிறார், ஒரு எடுத்துக்காட்டிற்கு சொல்லவேண்டுமானால், அல்புகாரியில்
பதிவு செய்யப்பட்டுள்ளது என்னவென்றால், அல் ஹஸன் கூறினார்,
"உயிர்த்தெழுதலின் நாள் வரை தக்கியா அனுமதிக்கப் பட்டுள்ளது"... (Source;
underline emphasis ours)

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்,
முகமது ஒரு நேர்மையற்ற மனிதராக மாறுவதற்கு பொறுப்பு அல்லா தான்.
இப்படிப்பட்டவர் மீது யார் நம்பிக்கை கொள்ளமுடியும்!

இது மட்டுமல்ல, யேகோவா தேவனின் கோபம் மற்றும் சாபம் முகமதுவின் மீது
விழும்படியாக செய்ததும் அல்லா தான். அதாவது "செய்த உறுதிமொழியை" எவ‌ன்
முறிக்கின்றானோ அவன் யேகோவாவிற்கு அருவருப்பானவன் ஆவான்:

மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: "கர்த்தர்
கட்டளையிடுவது என்னவென்றால்: ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை
பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்
ஆத்துமாவை நிபந்தனைக் குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன்
வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின் படியெல்லாம் செய்யக் கடவன்." எண்
30:1-2

"தேவ சமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு
வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ
பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின்
திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை
பண்ணிக் கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில்
பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்து கொண்டதைச் செய். நீ நேர்ந்து கொண்டதைச்
செய்யாமற் போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம். உன்
மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது
புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்கு முன் சொல்லாதே; தேவன் உன்
வார்த்தைகளினாலே கோபங் கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?"
பிரசங்கி 5:2-6

ஆக, இதுவரை மேலே நாம் கண்ட இஸ்லாமிய விவரங்களின் படி, குர்‍ஆனில்
வசனங்களாக உள்ள, நம்பிக்கயில்லாதவர்கள் முகமது பற்றி சொன்ன விவரங்கள்
அனைத்தும் உண்மை என்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது, அதாவது அவர் பொய்
சொல்லியுள்ளார் மற்றும் தான் செய்த சத்தியத்தை / வாக்கை முறித்துள்ளார்.
இதனால், முகமதுவை தன் காலத்தவர்கள்/உறவினர்கள் "அல் அமின்" என்று
கண்டார்கள் என்பது நிருபிக்கப்படாத விவரமாகும். முஸ்லீம்கள் இப்படிப்பட்ட
கதைகளை இட்டுக்கட்டியுள்ளார்கள்; அல்லது ஒரு வேளை இந்த புகழாரம்
உண்மையாகவே அவருக்கு கொடுத்து இருந்திருந்தாலும், தனக்கு சூட்டிய அந்த
புகழாரத்திற்கு ஏற்ப அவர் தன் வாழ்நாளின் மீதியான காலத்தில் வாழவில்லை,
முக்கியமாக தன் கடைசி காலங்களில் வாழவில்லை.

ஆனால், இந்த புகழாரத்திற்கு தகுதியுடையவர் ஒருவர் இருக்கிறார்,
ஏனென்றால், உண்மையின் விலாசமாக வாழ்ந்திருக்கிறார் அவர். அவர் தான்
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து, பிதாவின் பிழையற்ற ஆட்டுக்குட்டி.

"அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக்
கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய
பரிசுத்தர் என்று சத்தமிட்டான்!" மாற்கு 1:24

"சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்,
நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய
குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்
என்றான்." யோவான் 6:68-69

"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை
அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ள வனாயிருக்கிறான்,
அவனிடத்தில் அநீதியில்லை." யோவான் 7:18

"என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப்
பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத்
தனியேயிருக்க விடவில்லை என்றார்." யோவான் 8:29

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;
என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

"ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின்
தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப் படுத்தினார்; அவரை நீங்கள்
ஒப்புக் கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்க தீர்மானித்தபோது,
அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை
நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ண வேண்டுமென்று
கேட்டு, ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்
தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." அப் 3:13-15

"இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில்
கேட்டறிந்து, அவரால் போதிக் கப்பட்டீர்களே." எபேசியர் 4:21

"நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர்
நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,
பாவமில்லாத வராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." எபிரேயர்
4:15

"பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு
விலகினவரும், வானங்களிலும் உயர்ந்த வருமாயிருக்கிற இவ்விதமான பிரதான
ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்." எபிரேயர் 7:26

"நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்
கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு
உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு
நிச்சயம்!" எபிரேயர் 9:14

"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப்
பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாத
படியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய
பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போ மென்று இன்னும்
வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே
நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று
அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை
வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும்
சுத்திகரித்துக் கொள்ளுகிறான்….அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க
வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை….. பிள்ளைகளே,
நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர்
நீதியுள்ளவராயிருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்." 1
யோவான் 3:1-3, 5, 7

மேலும் அறிய படிக்கவும்:

http://answering-islam.org/Books/Gairdner/camouflage.htm


இக்கட்டுரையின் பாகம் இரண்டை படிக்கவும்: முகமது கால மக்கள் முகமதுவை
எப்படிப்பட்டவராக கண்டனர்



--------------------------------------------------------------------------------


சாம் ஷமான் அவர்களின் இதர‌ கட்டுரைகள்
முகமது பற்றிய இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்


http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/mhd_amin.html
 
 
 

நான் ஏன் கிறிஸ்தவனாய் இருக்கிறேன்


நான் ஏன் கிறிஸ்தவனாய் இருக்கிறேன் - 23 ஆண்டுகள் பாகிஸ்தானில்
ஊழியம் செய்தவரின் சாட்சி




நான் ஏன் கிறிஸ்தவனாய் இருக்கிறேன்

WHY I AM A CHRISTIAN
டாக்டர் வாரன் எஃப் லார்சன்

(Dr. Warren F. Larson)

இக்கட்டுரையின் ஆசிரியர் தான் ஏன் ஒரு கிறிஸ்த‌வ‌ராய் இருக்கிறார்
என்ப‌த‌ற்கும், மற்றும் அவ‌ர் ஒரு ச‌ரியான‌ வ‌ழியைத்தான்
தேர்ந்தெடுத்தாரென அவர் ஏன் உண‌ர்கிறார் என்ப‌த‌ற்கும் மூன்று
கார‌ண‌ங்க‌ள் உள்ள‌ன என விளக்குகிறார். இக்காரணங்கள் பைபிளின் முத‌ல்
புத்தகத்தில் ஆர‌ம்பித்து, பைபிள் முழுவதும் காணும்ப‌டியாக‌ வியாபித்து
உள்ள‌து. இன்றிய‌மையாத‌ இத்த‌லைப்பில், கையாளப்படும் முக்கிய‌மான விஷயம்
என்ன‌வெனில், இது நம் தேவ‌னைப் ப‌ற்றிய , கிறிஸ்துவைப் ப‌ற்றிய‌ ம‌ற்றும்
ம‌னித‌குல‌த்தைப் ப‌ற்றிய‌ ந‌ம‌து க‌ருத்துக்க‌ளைச் சுற்றியே வ‌ல‌ம்
வ‌ருகிற‌து. இவை மூன்றும் இஸ்லாமிலும் கூட‌ இழையோடியிருப்பினும்,
அடிப்ப‌டையில் பைபிளில் தேவ‌ன் வெளிப்ப‌டுத்தியிருப்ப‌தினின்று
முற்றிலும் வேறுப‌ட்டுள்ள‌து.


மேற்கு க‌ன‌டா ப‌குதியில் வ‌ள‌ரும் ஒரு இளைஞ‌னாக, நான் முதலில் இந்த
தலைப்பைப் பற்றிய‌ சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒரு
கிறிஸ்த‌வ‌ வீட்டில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ நான் ஏழு வ‌ய‌தில் சொந்த‌
விசுவாச‌த்திற்குள் வ‌ந்தேன். பின்பு க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது என‌து
விசுவாசத்தைத் திருப்பி ஆராய்ந்து பார்த்தேன். உண்மையாக‌வே நான் ஏன் ஒரு
கிறிஸ்த‌வ‌னாக‌ இருக்கிறேன்? பின்னும் என்னுடைய‌ 24 ஆவ‌து வ‌ய‌தில் நான்
பாகிஸ்தான் சென்று 97 சதவீதம் முஸ்லீம்கள் (பெரும்பாலாக சுன்னி பிரிவைச்
சேர்ந்தவர்கள்) உள்ள அந்நாட்டில் ஒரு மிஷின‌ரியாக‌ 23 ஆண்டுகள் ஊழிய‌ம்
செய்தேன். ப‌ற்ப‌ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் கிறிஸ்த‌வ‌ம் ப‌ற்றிய‌ என்
உண்மை எண்ண‌ம் சோத‌னைக்குள்ளாயிற்று. நான் ஒரு இஸ்லாமிய‌னாக மாறிவிடுவேன்
என உறுதியாகவே பலர் எண்ணினர். இதற்கும் மேலாக, நான் இஸ்லாம் பற்றிய
மேற்படிப்பைப் படித்து டாக்டர் பட்டத்திற்கான (Ph.D) ஆராய்ச்சிக்
கட்டுரையையும் பாகிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து எழுதினேன்.
என‌வே என‌து விசுவாச‌த்தைக் குறித்து, அதிலும் குறிப்பாக‌ இஸ்லாமிட‌மான‌
தொட‌ர்பு குறித்து, ஆராய்ந்து பார்க்க‌ என‌க்குப் போதுமான‌
ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்த‌து என‌ உண‌ர்கிறேன்.


இருப்பினும்‌, நான் இரு நம்பிக்கைகளைப் பற்றி படித்திருந்தாலும்,
தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாலும், எல்லாவற்றிற்கான பதிலும் என்னிடம்
இல்லை என நான் ஒப்புக் கொள்கிறேன். எனினும் வெளிப்படையாகவும்,
அமைதியாகவும் கிறிஸ்துவத்தையும் இஸ்லாமையும் ஒப்பிட்டு,
குறிப்பிடத்தக்கவைகளை நான் எழுத வேண்டும் என உணர்கிறேன். இஸ்லாமைப்
பற்றியோ அல்லது கிறிஸ்துவத்தைப் பற்றியோ நான் தவறாக எதுவும் அபிப்பிராயம்
கொண்டிருந்தால் நான் என்னைத் திருத்திக் கொள்கிறேன்.


இப்பொருள் குறித்து நான் சிந்திக்கும் போது, வட ஆப்பிரிக்காவின் பெர்பர்
இனத்தைச் சேர்ந்த புனிதர் அகஸ்டின், நபி இயேசுவிற்கு சில நூறு
ஆண்டுகளுக்குப் பின் மொழிந்த,"எங்களை உமக்காக உண்டாக்கினீர்; உம்மை
வந்தடைந்து ஓய்வு பெறுமட்டும் எங்கள் இதயங்கள் அமைதியின்றி இருக்கும்
(Thou hast formed us for Thyself and our hearts are restless till they
find their rest in Thee)" என்ற வார்த்தைகளை நினைவு கூறுகிறேன். மேலும்
கீழ்கண்டவாறு சொல்லப்படும் கிறிஸ்துவப் பிரமாணமும் எனது நினைவுக்கு
வருகிறது ."தேவனை மகிமைப்படுத்துதலும் எக்காலத்திலும் அவரில்
களிகூறுதலுமே மனிதனின் தலையாய இறுதி நிலையாகும்(The chief end of man is
to glorify God and enjoy him forever)" .



எனவே கிறிஸ்தவர்கள், உண்மையான மன நிறைவு, தேவனை அறிந்துகொள்வதிலிருந்து
மட்டுமே வருகிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஏனெனில் நம் மனத்தில்
இத்தகைய ஒரு வெற்றிடத்துடனேயே தேவன் நம்மை உருவாக்கி இருக்கிறார்
என்பதாகவே காணப்படுகிறது. ஆயினும், இவ்வுலகில் அனேகம் மக்கள் கடவுளைப்
பற்றி மற்றவர்கள் மூலமாக கேள்விப்படுபனவற்றை மட்டுமே அறிவார்களேயொழிய
அவரைப் பற்றி உண்மையில் சிந்தனை ஏதும் செய்வதில்லை என்றே எனக்கு
தோன்றுகிறது. அவர் சில கருத்துக்களின் அடிப்படையினாலான ஒரு தீர்மானமாகவே
கருதப்படுகிறார். இன்னும் பலருக்கு அவர் "அங்கிருக்கிறார்" ஆனால் "இங்கு
இப்போது செயல்பாட்டில்" இல்லை என்று நம்புகிறார்கள். அமெரிக்காவிலும்
உலகில் இன்னும் பல பகுதிகளிலும் உள்ள பலர் இந்த வகையானவர்கள் என நான்
நினைக்கிறேன். அதாவது "கடவுள் நிச்சயம் இருக்க வேண்டும். எனவே அவரை நான்
நம்புகிறேன்" என அவர்கள் சொல்லுகிறார்கள்.



இறுதியாகச் சில கிறிஸ்தவர்களும் தேவன் மீது உண்மையில் தாக‌த்துட‌னும்
ப‌சியுட‌னும் இருக்கிறார்களே என‌ நான் வியப்ப‌டைவ‌தைத் த‌விற‌ வேறு எந்த
வகையிலும் என்னால் அவர்களுக்கு உதவமுடியாது. தேவ‌னைப்ப‌ற்றிய‌
அறியாமையிலேயும் புற‌க்க‌ணிப்பிலும் மூழ்கியுள்ள இக்கால‌ ம‌க்க‌ளுக்கு
மாறாக‌ தேவ‌னைப்ப‌ற்றி அறிய‌வும் அவ‌ரோடு பேச‌வும் வழிபடவும் ஆவ‌லாய்
இருந்த சிலரைப் பற்றி நான் பைபிளில் வாசிக்கிறேன்.




உதார‌ண‌மாக, மோசே சொன்னார், "உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக்
கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில்
எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்
(யாத்திராகமம் 33:13)".

தாவீதும் கூடச் சொல்கிறார், "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்
பாருங்கள் (சங்கீதம் 34:8)".


இயேசு நபியும் சொன்னார், "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8)". புதிய ஏற்பாட்டின்
(இஞ்ஜில்) இறுதியில் "இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின் மேல்
வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும்
உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டு, தங்கள் கிரீடங்களைச்
சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர், மகிமையையும்
கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப்
பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய
சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப் பட்டவைகளுமா
யிருக்கிறது என்றார்கள். (வெளி 4:10-11)" எனச் சொல்லப்பட்டுள்ளது.




ப‌ல ஆண்டுகளுக்கு முன்பு பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (Bertrand Russel) எழுதிய
"நான் ஏன் ஒரு கிறிஸ்தவனாக இல்லை" என்ற ஒரு புத்தகத்தைப் பார்த்தேன்.
ஆனால் அதை நான் மிகவும் கவனமாக வாசிக்கவில்லை என ஒப்புக்கொள்கிறேன்.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அதன் பின்னால் இருந்த அவரது படம்
ஒரு மிகவும் மகிழ்ச்சியற்ற மனிதனாகக் காணப்பட்டதே. ஒரு கிறிஸ்தவனாய்
இருப்பதில், நான் திரு.பெர்ட்ராண்டு ரஸ்ஸல் அவர்கள் ஒரு கிறிஸ்தவனாக
இல்லாததைவிட அதிக மகிழ்ச்சியாக‌ இருக்கிறேன் என‌ ந‌ம்புகிறேன்! எனவே
இத‌ன்‌ தொட‌ர்ச்சியாக‌, நான் ஏன் ஒரு கிறிஸ்த‌வ‌னாக‌ மாறி ஒரு
கிறிஸ்த‌வ‌னாக‌வே இருக்கிறேன் என்றும் நான் ச‌ரியான‌தைத்தான்
தேர்ந்தெடுத்தேன் என்ப‌திலும் ம‌ன‌ நிறைவுட‌ன் தான் இருக்கிறேன் என்பதை
மூன்று காரணங்களக் கொண்டு விளக்குகிறேன். இவை பைபிளின் முத‌ல்
புத்தகத்தில் ஆரம்பித்து , வேர் கொண்டு பைபிள் முழுவ‌திலும்
காணும்ப‌டியாக‌ வியாபித்து உள்ள‌து. கீழ்க‌ண்ட‌ விவ‌ர‌ங்க‌ள் மொத்தத்தில்
இன்றிய‌மையாத இந்த‌த் த‌லைப்பில் என்னுடைய‌ எண்ணத்தைப்
பிர‌திப‌லிக்கின்ற‌ன‌.


தேவ‌னின் இய‌ல்பு (The Character of God)


தேவ‌னுட‌னான‌ ந‌ம‌து உற‌வு அவ‌ரைப் ப‌ற்றி நாம் கொண்டுள்ள‌ எண்ண‌த்தின்
மீதே (அதாவ‌து ந‌ம‌து "க‌ட‌வுள் கொள்கை" மீதே) சார்ந்துள்ள‌து, இந்த‌க்
க‌ருத்துட‌ன் நான் ஆர‌ம்பிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம், தேவ‌ன் பெரும்பாலும்
நம்முடனே ஒரு தொட‌ர்பை ஏற்ப‌டுத்திக்கொள்ளவே விரும்புகிறார் என‌ நான்
ந‌ம்புவ‌தாலேயே. "அவ‌ர் ந‌ம்மிட‌ம் முத‌லில் அன்பு செலுத்துவ‌தினாலேயே
நாம் அவ‌ர் மீது அன்பாய் இருக்கிறோம்" என‌ பைபிள் சொல்லுகிற‌து.
அத‌ற்கான‌ முத‌ல் முயற்சியை அவ‌ர் எடுக்கிறார். தேவ‌ன் தான்
இப்பிர‌ப‌ஞ்ச‌த்தில் மிக‌வும் பெரிய‌வ‌ர் என்ப‌தில் நாம் அனைவ‌ரும் ஒத்த
கருத்துடைய‌வ‌ர்க‌ளாய் இருக்கிறோம். அவரே ம‌க‌த்துவ‌மான‌வ‌ர்,
க‌ம்பீர‌மிக்க‌வ‌ர், ஆளும் அர‌ச‌ர். என‌வே, அவ‌ர‌து பிர‌ஜைக‌ள் யாரும்
அவ‌ர‌து அழைப்பின்றி அவ‌ர‌து ச‌மூக‌த்திற்கு வ‌ர‌ முடியாது( He is
glorious, majestic, ruler and king; therefore, none of his subjects
dare come into his presence without an invitation).



மேலும், வார்த்தையியலின்படி (etymology /வார்த்தைகளின் அமைப்பு குறித்த
ஆய்வு) இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் "கடவுள்" என்பது ஒன்றே. சில
குறிப்பிட்ட‌ குர்‍ஆன் வசனங்கள் இதைத் தெரிவிக்கின்றன (குர்‍ஆன் 22:40).
வார்த்தைகளின் மூலத்தை ஆராய்ந்தால் கடவுளைக் குறிக்கும் சொற்கள் ஒரே
பொருளுடையவை. "Allah" என்பது எபிரேய மொழியில், " El-Bethel" மற்றும் "El-
Elohim" என்பவையுடனும், அராமிக்கில் "Elah" என்பதுடனும் தொடர்புடையது.
அல்லா என்பது இஸ்லாமின் தொடக்கத்திற்கு முற்பட்டது. ஒரு
எடுத்துக்காட்டுக்காக இதை கவனியுங்கள்‌, முகமது நபியின் தகப்பனார் பெயர்
"Abd-Allah" (Servant of Allah ) என்பதாகும் (Allah is pre-Islamic as,
for example, when the Prophet Muhammad's father was named Abd-
Allah" (servant of Allah)).



எனினும், இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் கடவுள் என்ற சொல்லுக்கு
வார்த்தையியலின்படி (etymologically) ஒரே மூலம் இருப்பினும் அவை அவற்றின்
தன்மையினால் முற்றிலும் மாறுபட்டவை. கிறிஸ்துவத்தில் பைபிளின் ஆரம்பமுதல்
தேவனின் வல்லமை மற்றும் ஆளுகை குறித்தேயல்லாமல் அவருக்கு ஒரு தெய்வீகத்
தனித்தன்மை இருப்பதை உணர்கிறோம். இறைவனின் வல்லமை மற்றும் ஆளுமைப் பற்றி
குர்‍ஆனில் வ‌லியுறுத்த‌ப்ப‌ட்டிருப்பினும், பைபிளில் தேவனின்
நிபந்தனையற்ற அன்பே அவரது தனித்தன்மையாக இருக்கிறது.



பைபிளின் படி மனிதகுலம் பாவம் செய்து தேவனின் கட்டளையை மீறினது. ஆனாலும்,
தேவன், " நீ எங்கே இருக்கிறாய்?" என‌ அவர்களைத் தேடினார். தானே முன்வந்து
முயன்று அவரே அவர்களை விரட்டியிருந்தாலும் அவர்களைத் தொடர்ந்து அன்பு
செலுத்தி முறிந்துபோன உறவைப் புதுப்பிக்க ஒரு திட்டம் வகுக்கிறார். இந்த
அருமையான வசனங்களைப் படியுங்கள்:"


நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்
வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார் (ரோமர் 5:8)", "அன்றியும் நாம்
பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து
அக்கிரமக்காரருக்காக மரித்தார் (ரோமர் 5:6)", "நாம் தேவனுக்குச்
சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே
ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே
இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. (ரோமர் 5:10)". ஒரு சிறிய வசனம்
இவைகள் எல்லாவற்றையும் இரத்தினச் சுருக்கமாய் சொல்கிறது:" தேவன் அன்பாகவே
இருக்கிறார் (I யோவான் 4:8.)".


அன்புக்குப் பாத்திரமற்றவர்கள் மீதான தேவனின் இந்த நிபந்தனையற்ற அன்பு
பைபிள் முழுவதும் காணப்படுகிறது. சான்றாக :



"அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்" (எரேமியா 31:3).




இயேசுவால் சொல்லப்பட்ட லூக்கா 15 ல் உள்ள கெட்ட குமாரன் கதையில் கூட‌,
தேவ‌ன் ஒரு தந்தை போல் இருக்கிறார் என்பதை விளக்குகிறார். அந்த கதையில்
அந்த குமாரனின் தந்தை அவனை ஒதுக்கவோ, அவனை திரும்பிவரும்படிச் செய்ய ஒரு
இராணுவத்தை அனுப்பவோ இல்லை. மாறாக அவனோடு ஒரு நல்லுறவிற்காக ஏங்கி,
அவனோடு ஒப்புரவாகி அவன் வீடு திரும்பும் மட்டும் பாடுகள் பட்டு
வருந்தினார். இறுதியில் அந்த மகன் விரக்தியில் மனம் திரும்பி அவனது பழைய
வாழ்க்கையை விட்டுவிட்டு வீடு திரும்புகிறான். அவன் அவ்வாறு செய்தது அவன்
தந்தையின் பண்பினையும் செயலையும் நன்றாக அறிந்திருந்த‌ காரணத்தினால்
தான்.



அந்த தகப்பன் அவனது குமாரனை விரித்த கரத்துடன் வரவேற்கிறான்; ஏனெனில்
அவனோடுள்ள உறவினைப் புதுப்பிக்கவே. கிறிஸ்தவத்தில் தேவன் இப்படிப்பட்ட
குணத்தை உடையவராக‌ இருக்கிறார். தௌராத் சொல்கிறது:




"நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிறபோதெல்லாம், அவர்
நமக்குச் சமீபமாயிருக்கிறது போல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற
வேறே பெரிய ஜாதி எது? "(உபாகமம் 4:7 ).



இப்படி தேவன் அன்பாக இருப்பதினால், அவ‌ர் பாவத்தை எளிதில்
ஏற்றுக்கொள்கிறார் என எடுத்துக் கொள்ளலாகாது. தேவன் நீதிபரர். அவர்
துன்மார்க்கருக்காக நரகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இயேசு
அவ்விடத்தை"அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி
அவியாமலுமிருக்கும்" (மாற்கு 9:48) எனக் குறிப்பிடுகிறார். உண்மையில்
பைபிள் நரகத்தின் பயங்கரங்க‌ளின் விரிவான விளக்கத்துடன் அதாவது
"சத்தானுக்கும் அவன் தூதருக்கும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கும்
அக்கினிக்கடல்" என்றும், "கந்தகமும் எரி தழலும் இருக்கும் இடம்" என்றும்
படம் பிடித்து விவரித்து முடிக்கிறது.



ஆனால், தேவ‌ன், நாம் ந‌ர‌க‌த்திற்குப் போக‌ வேண்டிய அவசியம்
இல்லையென்றும், நரகத்திலிருந்து த‌ப்பிக்க அவ‌ர் ஒரு நிச்ச‌ய‌மான‌ வ‌ழி
வைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார். இதுவே ந‌ற்செய்தி. இது த‌ம்மீது
ந‌ம் த‌ண்ட‌னையை ஏற்றுக்கொண்ட‌ ஒருவ‌ர் மூல‌மாக‌வே ஆகும். பைபிளில் நாம்
தேடுவோமானால் ப‌லியிடும் முறை, ஆக‌ம‌ங்க‌ளிலும் ச‌ங்கீதங்க‌ளிலும்(தௌராத்
மற்றும் ஜபூர்) மற்றும் பைபிளின் பல பாகங்களிலும் காண‌ப்பட்டு தேவ‌ன்
பலியிட‌ ஒரு மாற்றுப்பொருள் கொடுத்திருப்ப‌தைக் காண‌லாம். இதில் இறுதி
ப‌லியாக‌ ஒரு பாவ‌மும‌ற்ற‌ அப்ப‌ழுக்க‌ற்ற‌ மாற்றுப் பொருளினைத் தாமே
கொடுத்திருப்ப‌தை உண‌ர‌லாம். அவ‌ரே ந‌ம‌க்காக‌ ம‌ரித்து பின்பு
உயித்தெழுந்தார். இயேசு தாமே இந்த‌ வாக்குறுதியை நிறைவேற்றினார்.



சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் அறிஞர் தாவுத் ரஹபர்
(Daud Rahbar) என்பவர் டாக்டர் பட்டத்திற்காக "நீதியுள்ள க‌ட‌வுள் -
குர்‍ஆனில் அறவழிக்கொள்கை பற்றிய ஒரு ஆய்வு(God of Justice: A Study in
the Ethical Doctrine of the Qur'an) " என்ற‌ த‌லைப்பில் ஒரு
ஆய்வுக்க‌ட்டுரை எழுதினார். அதில் அவ‌ர் முடிவுரையாகக் க‌ட‌வுள் க‌ருணை
மிக்க‌வ‌ராக‌வும் நீதியுள்ள‌வ‌ராக‌வும் ஒன்றுசேர இருக்க‌வேண்டுமெனின் அது
சிலுவையின் மூல‌மே ஆகும் என‌ எழுதியிருந்தார். இந்தப் பிர‌ச்சினைக்கு
இதுவே தீர்வு. தாவுத் ரஹபர் பின்பு ஒரு கிறிஸ்தவராக மாறி அமெரிக்காவில்
ஆசிரிய‌ரானார்.



இத‌ற்கு ம‌றுப‌க்க‌மாக‌, நான் கூறுவ‌து த‌வறென்றால் திருத்த‌வும்,
இஸ்லாமில் க‌ட‌வுள் அன்பான‌வராகவே இருப்பினும் (al-wadud என்ற‌ பெய‌ரின்
ப‌டி), பாவிக‌ளை அவ‌ர் நேசிப்ப‌தில்லை.


குர்‍ஆன் 3:31-32ன் ப‌டி, "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப்
பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை
உங்களுக்காக மன்னிப்பான்;…… நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை
நேசிப்பதில்லை". மேலும் குர்‍ஆன் 9:4 சொல்கிற‌து: "நிச்சயமாக அல்லாஹ்
பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்". குர்‍ஆன் 4:107 கூட "கொடிய பாவியான சதி
செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை." என்றுச்
சொல்கிற‌து.


அவ‌ர் க‌ருணை மிக்கோனாய் இருப்பினும் கூட‌, அது ஒரு அர‌ச‌ன் காட்டும்
க‌ருணையே த‌விர‌, பைபிளின் லூக்கா 15ம் அதிகாரத்தில் காணப்படுவது போன்று
ஒரு த‌க‌ப்ப‌னின் பாச‌ம் அல்ல‌.



குர்‍ஆனில் ஒவ்வொரு அத்தியாயமும் (ஒன்பதாவது தவிர) கருணை மிக்கோனும்
அன்புடையோனுமான இறைவனின் நாமத்தில் (Bis milla ur-Rahman ur Rahim) என்றே
துவங்குகின்றது. கடவுளின் கருணை இங்கு அவரின் உன்னதமான ஆற்றலில் அடங்கி
விடுகிறது. எனவே இஸ்லாமில் அன்பு என்பது எதிர்பார்ப்புடன் கூடியது என்றே
நான் கருதுகிறேன். எனவே ஒரு இஸ்லாமியன் "கடவுள் அன்பாகவே இருக்கிறார்" என
அதின் உண்மையான அர்த்தத்தில் கூற முடியாது(I therefore conclude that
love in Islam is reciprocal and that in a true sense a Muslim cannot
say "God is love."). இஸ்லாமில் கடவுள் அனைத்து வல்லமையும் உள்ளவர் என்று
கருதப்படுகிறார், ஆனால் மக்களுடன் பின்னிப் பிணையாமல் தூரமாயிருப்பவர்.
"சிலருக்கு சொர்க்கம், சிலருக்கு நரகம், நான் அதைப்பற்றிக்
கவலைப்படுவதில்லை" என்றுச் சொல்வது போல அல்லா காணப்படுகிறார். சொர்க்கம்
என்பது அல்லாவின் சொந்த விருப்பமே(சித்தமே).



மனம் திரும்புதலை இஸ்லாம் ஊக்குவிக்கிறது என நாம் ஒப்புக்கொண்டாலும்,
இஸ்லாமின்படி ஒரு மனிதனின் மனம் திரும்புதலை விட‌ மிகவும் மேன்மையானது
இறைவனின் சித்தம். கடவுளின் சித்தத்தின்படியே அவர் மன்னிக்கிறார், ஆனால்
அவர் பெரிய பாவங்கள் சிறிய பாவங்கள் என எப்பொழுதும் வேறுபடுத்திப்
பார்ப்பதில்லை. (குர்‍ஆன் 18:47). எவரையும் மன்னிப்பதோ அல்லது தண்டனைக்கு
உள்ளாக்குவதோ அது முற்றிலும் அல்லாவின் சித்தமே. இதற்குத் தப்புபவன்
யார்?



இதன் காரணமாகவே ஒரு இஸ்லாமியர், தான் பின் வரும் குர்‍ஆன் வசனத்தைப்
பார்த்து மிகவும் பயத்துடன் இருப்பதாக எழுதுகிறார்.


"மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய
இறைவனின் முடிவான தீர்மானமாகும்" (குர்‍ஆன் 19:71). இதன் பின் வரும்
குர்‍ஆன் வசனம் பலத்த அடியாய் இறங்குகிறது: "உம் இறைவன் நாடியிருந்தால்
மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி
ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர் இதற்காகவே
அவர்களைப் படைத்திருக்கிறான்; "நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய
யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்" என்ற உம் இறைவனுடைய வாக்கும்
பூர்த்தியாகிவிடும்" (குர்‍ஆன் 11: 118-119).



இந்த இஸ்லாமிய நம்பிக்கையாளர் இரட்சிப்பின் நம்பிக்கை இல்லாமல் இருப்பதை
உணர்கிறார். அவரின் துக்கம் இபின் மசூத்(Ibn Masud) அவர்களின் கீழ்கண்ட
இஸ்லாமிய ஹதீஸைக் கண்டதும் இன்னும் அதிகமாகியது, அந்த ஹதீஸ் இவ்விதமாகச்
சொல்கிறது:


முகமது சொல்கிறார், "ஒவ்வொருவரும் முதலில் நரகத்திலேயே நுழைகிறார்கள்.
பின்பு அவர்கள் செய்தனவற்றின்படி முன்னதாகவோ அல்லது பின்போ அதினின்று
வெளிவருகிறார்கள். முதலில் வெளி வருகின்றவர்கள் முழு வேகத்தில் விரைந்து
செல்லும் ஒரு குதிரையைப் போன்றும், அதன் பின்பு வேகமான சவாரி செய்பவரைப்
போன்றும், பின்பு விரைந்து செல்லும் மனிதனைப் போன்றும் இறுதியில் நடந்து
செல்லும் மனிதனைப் போன்றும் இருப்பார்கள். இந்த ஹதீஸ் திர்மிதி மற்றும்
தரிமி மூலமாக கிடைத்தது. (The Moslem World, 18, no. 2, April 1928)


எனவே இதனை நோக்கும்போது இஸ்லாமின் கடவுள், கீழ்படிதலால் மகிழ்ச்சி
அடையாதவராகவும், பாவத்தினால் வெறுப்படையாதவராகவும் தம்மை நம்புபவர்களின்
மீது கருணைமிக்கவராய் இராமல் தம்மை மறப்பவர்களை வெறுத்து சாந்த
குணமற்றவர்களுக்கு எதிர்ப்பாளராக இல்லாமலும் இருக்கிறார். அவர் இத்தகைய
உறவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராகவே காணப்படுகிறார். இதற்கு நேர்மாறாக
கிறிஸ்துவத்தின் தேவன் நம்மீது அக்கரை உள்ளவராயிருக்கிறார். அவரது
தீர்ப்புகள் நீதியாயும் பரிசுத்தமிக்கவையாயும் ஆதாரமற்ற‌வையாய் இராமல்
நன்மையாயும், தம் விருப்பத்திற்கு என்று இராமல் விருப்புவெறுப் பற்று
இருக்கிறது.



மார்க்ஸிஸத்திலிருந்து கிறிஸ்துவராய் மாறின தாமஸ் மெர்டன்(Thomas Merton)
என்பவர் கடவுளின் தத்துவம் பற்றிய ஒர் புத்தகத்தைப் படித்த போது மன
அழுத்தத்தினால் நம்பிக்கையற்ற நிலையிலேயே மார்க்ஸிஸத்திலிருந்து
மாறினார். தேவனை அவர் அருகாமையில் இருப்பராயும் உடனே சென்றடையத்தக்கவராய்
கைக்கு மிக‌ நெருக்கத்தில் இருப்பவராய் கண்டார். இதற்கு மாறாக
இஸ்லாமியர்கள் என்னதான் அல்லாவைத் தேடினாலும் அவர் அவர்களின் கைக்கு
எட்டாத துரமாக இருக்கிறார்.



பாகிஸ்தானிலிருந்த எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம் பெண், ஒரு
கிறிஸ்தவரால், "தேவனிடம் ஒரு தகப்பன் போன்றும் ஒரு நண்பராயும் வேண்டுதல்
செய்ய வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டார். இதற்கு அந்த முஸ்லீம சகோதரி:


"நான் முழங்காலில் நின்று முயன்றபோது அது என‌க்கு
கேலிக்குரியதாகப்பட்டது. அதனைச் செய்ய எனக்கு உடன்பாடில்லை. தேவன் போன்ற
மகத்துவமுள்ளவரை நம்மளவிற்குத் தாழ்த்துதல் பாவமில்லையா எனத்
தோன்றுகிறது?" எனச் சொன்னார். பின்பு அவர் குழப்பத்துடன் தூங்கச்சென்று
காலையில் எழும்பியபோது அன்று அவர் பிறந்த நாள் என்பது நினைவிற்கு வந்தது.
அப்போது அவர் மிகவும் பரபரப்புடன் தேவனை அப்பா என்றழைத்தால் என்ன என்று
நினைத்தார். உடனே அவர் முழங்காற்படியிட்டு "அப்பா பிதாவே" என்றழைத்தார்.
அவர் சொன்னார்," பின்பு நடந்தவைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அவரது
நாமத்தை நான் உரக்கக் கூப்பிட்டேன். ஏதோவொன்று என்னை ஆட்கொண்டது. அவர்
எனக்குச் செவிகொடுத்தார் என நான் அறிந்தேன். அந்த அறை வெறுமையாய் இல்லை.
அவர் அங்கிருப்பதை உணர்ந்தேன்."


நான் யார் (Who I am)


ந‌ம்மைப்ப‌ற்றி நாம் என்ன‌ நினைக்கிறோம் என்பதையே தேவ‌னுட‌னான‌
ந‌ம்முடைய‌ உற‌வு சார்ந்திருக்கிற‌து. அதாவ‌து ந‌ம‌து "ம‌னித‌த்
த‌த்துவ‌த்தைப்" பொறுத்தே அது அமைகிற‌து. இதை முத‌ல் க‌ட்ட‌த்திலேயே நான்
கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவ‌த்தில், ம‌னித‌குல‌ம்
பாவ‌ப் ப‌ழ‌க்க‌ங்க‌ளினால் ம‌ட்டுமின்றி உள்ளான‌ பாவ‌த்திலும் அதாவது
ஆரம்ப அடிப்படையான பாவத்திலும் மூழ்கியிருக்கிற‌து என‌ நாம்
அறிந்திருக்கிறோம். ம‌னித‌குல‌ம் முழுவ‌தும், அதாவ‌து முஸ்லிம்கள்
மட்டுமின்றி நாம் அனைவரும் உட்ப‌ட‌, பாவ‌த்தினால் ஆன‌ தீமையில்
திளைத்திருக்கிறோம். ரோம‌ர் 3:23ல் பைபிள் சொல்கிற‌து "எல்லாரும்
பாவஞ்செய்து, தேவ மகிமை அற்றவர்களானார்கள்" மறுபடியும் பைபிள் ரோம‌ர்
3:10ல் "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்றுச் சொல்கிறது.



அது ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்தது. அவர்களுடைய கீழ்படியாமைக்குப் பிறகு
தேவன் ஆதாம், ஏவாளை நோக்கி, "நீங்கள் பாவம் செய்தீர்கள்" என்று
சொல்கிறார். அதிலிருந்து மீள்வதற்கு வழியில்லை. இஞ்ஜில் சொல்கிறது, "ஒரே
மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும்,
எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும்
இதுவுமாயிற்று" (ரோமர் 5:12.) இது ஒரு அச்சுறுத்தும்,
தண்டனைக்குள்ளாக்கும் வார்த்தை தான். ஆனால் இது பாவத்தின் ஆரம்பத்தை
கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்ளும்படி இங்கு படம் பிடித்துக்காட்டுகிறது.



எனினும் தேவ‌ன் ந‌ம்மை அவ்வாறே விடுவ‌தில்லை. அவ‌ர் பாவ‌ம்
செய்த‌வ‌ர்க‌ளை நோக்கி, "உங்க‌ளுடைய‌ பாவ‌ சுபாவ‌ம் உங்க‌ளின்
அட‌ங்காமையினால் பாவ‌த்தில் த‌ரித்திருக்க‌ப் ப‌ண்ணுகிற‌து. அத‌ற்கெதிராக
அதனை நீக்கவோ அல்லது என் கண்களுக்கு முன்பாக நீங்கள் வெட்கமடையாதிருக்கவோ
உங்க‌ளால் ஒன்றும் செய்ய‌ முடியாது. நீங்க‌ள் நித்திய‌
ஆக்கினைக்குள்ளாக‌த் தீர்க்க‌ப்ப‌ட்டிருக்கிறீர்க‌ள். என‌வே என்னை
நோக்கித் திரும்பி, என்னை விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவின் மூல‌மாக‌
இர‌ட்சிப்ப‌டையுங்க‌ள். நான் உங்களை ஒரு புதிய வாழ்வுக்கு
ஆயத்தப்படுத்துவேன்" என்றுச் சொல்கிறார்.


எனது கணிப்பின்படி பாவம் பற்றிய பிரச்சினையை இஸ்லாம் போதுமான அளவுக்குக்
கையாளவில்லை என்பது ஒரு குறை தான். "இரட்சிப்பு" என்பது இஸ்லாமில் மிக
அபூர்வமான வார்த்தை (குர்‍ஆன் 40:41ல் மட்டுமே காணப்படுகிற‌து). ஏனெனில்
மனிதகுலம் இஸ்லாமின் படி விழுந்து போக‌வில்லை, அவர்கள் மனதளவில்
வீழ்ச்சியடையவில்லை, மேலும், அடிப்படையான பாவம் என்ற தத்துவம்
அங்கில்லை.



சூரா 33:72ல் குர்‍ஆன் சொல்கிறது: "நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே)
அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் ". மேலும் சூரா
96:6ல், "நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்" என்பதாகவும், சூரா
20:115ல் "ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர்
மறந்துவிட்டார்" என்பதாகவும், சூரா 2:36ல் "ஷைத்தான் அவர்கள் இருவரையும்
அதிலிருந்து வழி தவறச் செய்தான் " என்பதாகவும் காண்கின்றோம்.



மனிதன் பலவீனமானவன்; எனவே அவனுக்கு வழிகாட்டுதல் தேவையாய் இருக்கிறது
என்று இஸ்லாம் சொல்கிறது. சூரா 30:54 சொல்கிறது: "அல்லாஹ் தான் உங்களை
(ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர்,
அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப்
பின், பல‌ஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன்
படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்".



அதாவது இஸ்லாம் ஏன் அதனுடைய சாரம் எனக்கருதப்படும் இஸ்லாமியச்
சட்டங்களுக்கு (Shariah Law) இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
என்பதற்கு முக்கிய‌ காரணம் இதுவாகத் தான் இருக்கவேண்டும் என நான்
எண்ணுகிறேன். எனினும், சரியான சட்டங்கள் மட்டும் இருந்தாலே பூமியில்
சொர்க்கத்தை ஏற்படுத்திவிடலாம் என எண்ணும் சமுதாயத்தில் ஒரு பிரச்சினை
உள்ளது. அதில் உள்ள கஷ்டம் என்னவெனில் நல்ல சட்டங்கள் பெரும்பாலும்
அநீதியின் கருவிகளாய் மாறிப் போகின்றன. மனித சமுதாயங்கள் ஒருபோதும்
அப்பழுக்கற்றவை அல்ல. பைபிளில் ரோமர் 8:3 ஐ நாம் வாசிப்போமானால் "சட்டம்
பாவத்தினால் பலவீனப்படுகிறது" என நாம் அறியலாம். தேவன் எதிர்பார்க்கும்
கீழ்ப்படிதலை சட்டம் மட்டுமே உருவாக்க முடியாது.



பல கால கட்டங்களில் கிறிஸ்துவர்கள் பைபிள் அடிப்படையில் சமயச் சார்புள்ள
நாடுகளை ஏற்படுத்தினர்; ஆயினும் அவை யாவும் இப்போது மறைந்து போய்விட்டன.
பல வழிகளில் ஷரியா சட்டம் நல்லது தான் - மோசேயின் ஆகமங்கள் போன்று. ஆனால்
பைபிள் கூறுவது என்னவெனில், ஆகமங்கள் கொடுக்கப்பட்டது மனிதர்களை நல்
வழிப்படுத்த அல்ல, மாறாக, அவர்களது பாவங்களை உணரச்செய்து அவர்களுக்
கென்று அவர்களை வழிந‌டத்த இயேசு என்ற ஒரு இரட்சகர் தேவை என்பதை
உறுதிப்படுத்தவே. இது அவர்கள் இரட்சிப்புக்காக இயேசுவை நோக்கித்
திருப்பும்வண்ணமாக அவர்களின் இயலாமையைத் தோலுரித்துக் காட்டிடவே ஆகும்.
(In many ways the shariah is good - as was the Torah of Moses - but
the Bible says the Torah was given - not to make men good - but to
prove their sinfulness and need of a Savior, to lead them to Christ -
the Savior. It was to expose their helpless condition so they would
turn to Christ for salvation).



இரட்சண்ய யாத்ரீகம்(Pilgrim's Progress ) எழுதிய ஜான் பனியன்(John
Bunyan) , "ஓடுங்கள், ஓடுங்கள்-சட்டம் கட்டளையிடுகிறது. ஆனால் அது
கால்களையோ அல்லது கைகளையோ தருவதில்லை; அதைவிட அருமையான தகவலை நற்செய்தி
கொண்டுவருகிறது. அது எனக்கு இறக்கைகளைக் கொடுத்து என்னைப் பறக்க
ஊக்குவிக்கிறது. எனவே, இயேசுவை முன்னிலைப்படுத்தாமல் எவ்வகையிலும் ஒரு
சமுதாய அல்லது அரசியல் சார்ந்த ஒழுங்கினை நிறுவ நாம் முயன்றால் அது
கலகத்தையே உருவாக்கும். அது தேவசித்தத்திற்கு எதிரான ஒரு வெளிப்படையான
போராட்டமே ஆகும். நான் மேலை நாட்டினரின் கொடுங்கோல் ஆட்சியின் சார்பாக
வக்காலத்து வாங்கவில்லை. நான் இயேசுவின் நற்செய்தியை ஆதரித்தே
பேசுகிறேன். மேலை நாடுகளில் அனேகம் இயேசு கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தை
நிராகரித்துவிட்டன என்று எனக்குத் தெரியும்; ஆயினும் அவர் சத்தியம், நீதி
மற்றும் நேர்மையின் அடிப்படையிலான‌ இராஜ்ஜியத்தினை நிறுவ மறுபடியும்
வருவார்.



மேலும் இவ்வுலகினை அழிவுக்குள்ளாக்கும் மனச்சிதைவு, வன்முறை, கொடூரம்,
மனிதச் சீர்கேடுகள், போர் மற்றும் கொடிய குற்றங்கள் ஆகியவைகளைக்
கட்டுக்குள் கொண்டுவர இஸ்லாம் தவறுகிறது. இருக்கும் பிரச்சினை இதனினும்
கொடியது. பைபிளில் மிகவும் அதிகமாக மதபற்றுள்ள பக்திமானிடம் இயேசு "நீ
மறுபடியும் பிறக்கவேண்டும்" என்றுச் சொல்வாரானால் (யோவான் 3), நாம்
அனைவரும் என்ன செய்யப்போகிறோம், நம்முடைய நிலை என்ன?



1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ம் தேதியில் நான் கனடா நாட்டின் வான்கூவர்
(Vancouver) நகரத்தில் இருந்தேன். அங்கிருக்கையில் நான் சரியாக அதற்கு
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1945 ல் போலந்து நாட்டின் அஸ்சுவிட்ஸ்
(Auschwitz ) ல் சோவியத் படைகளினால் கொண்டுவரப்பட்ட மரணப் பாசறையினின்று
மீண்டவர்களை நினைவுகூர்ந்தேன். அங்குச் சென்ற சுமார் பதினைந்து இலட்சம்
கைதிகளில் அறுபத்தைந்தாயிரம் பேர் மட்டுமே 1945ல் உயிரோடிருந்தனர். பல‌ர்
தங்க‌ளின் எரிந்த சடலங்களின் நாற்றத்தையும் சில மயிர்களையும் மட்டுமே
விட்டுச் சென்றிருந்தனர். அதில் அனேகம் குழந்தைகள் குறிப்பாக சில
சிசுக்கள் இருந்தனர் என்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என‌ ஒரு
சோவியத் போர்வீரர் சொன்னார்.



அவ‌ர்க‌ள் அப்பாச‌றையின் ம‌ருத்துவ‌ராகிய‌ ஜொசெப் மிங்க்லே(Josef
Mengele) என்ப‌வ‌ரின் மருத்துவ ப‌ரிசோத‌னைக்குப் பிறகு
த‌ப்பிப்பிழைத்த‌வ‌ர்க‌ள். அந்த‌ சோவிய‌த் போர் வீரரால் அதனைப்
புரிந்துகொள்ள முடியவில்லை. மனிதனின் சீர்கேட்டினை நீங்கள் நம்பவில்லை
எனில் அதனை நீங்கள் எவ்விதம் மறுக்கக் கூடும். 1947ல் இந்திய
துணைக்கண்டத்தில் நடந்த‌ கொடூர‌ப் ப‌டுகொலைக‌ள் போன்ற‌ சோக‌
ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அதைவிட‌ ச‌ற்றுக்குறைவான‌ தோற்ற‌ம‌ளிக்க‌லாம்; ஆனால் அவை
பாவ‌ம் ஓர் கொடிய‌ நோய் என்ற‌ என் க‌ருத்தினையே வ‌லியுறுத்துகின்ற‌ன‌.
என‌வே இஸ்லாமில் நான் காண்ப‌து என்ன‌வெனில், ம‌னித‌னின் பாவ‌ங்க‌ள்
ப‌ற்றிய‌ ஒரு சரியான‌ அல‌ச‌ல் அதில் இல்லாதிருப்ப‌தே. "ப‌ல‌ர் வ‌ழி
வில‌கிப்போனார்க‌ள்" எனக் குர்‍ஆன் சொல்வ‌திலிருந்தே இக்க‌ருத்தில்
அதனால் ஒரு முடிவுக்கு வ‌ர இயல‌வில்லை எனத் தெரிகிற‌து.



அடிப்படையிலேயே உண்மை நிலை ப‌ற்றிய‌ ஒரு தீர்க்கமான சுய‌ ந‌ம்பிக்கையை
இஸ்லாம் கொண்டுள்ளதாகத் தெரிகின்ற‌து. என‌வே தான் அதினால், இதுபோன்ற‌ ஒரு
குழ‌ப்ப‌ நிலைக்கு ஒரு ஒப்புக்கொள்ள‌க்கூடிய‌ தீர்வைக் கொடுக்க‌
முடிய‌வில்லை. உதார‌ண‌மாக‌, ஒரு 20 வ‌ய‌து முஸ்லிம் பெண் ஒரு இஸ்லாமிய‌
செய்தித்தாளின் ஆசிரியருக்கு, தான் பாவ‌த்தினால் பிடிக்க‌ப்ப‌ட்டு
உள்ள‌தாக‌வும், அதிலிருந்து மீட்படைய‌ அத‌ற்கு அவ‌ள் என்ன‌ செய்யக்கூடும்
என‌வும் கேட்டு எழுதியிருந்தாள். அத‌ற்கு அவ‌ர் அவ‌ள் த‌ன்னை
சீர்ப‌டுத்திக் கொள்ள‌வேண்டும் என‌வும் ஒரு புதிய‌ வாழ்க்கையை
ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்றும் அறிவுறுத்தி இத‌ற்கு வெளியிலிருந்து எந்த‌
உத‌வியும் செய்‌வ‌து சாத்திய‌மில்லை என‌வும் ப‌தில‌ளித்து இருந்தார்.
இத‌ற்கு அர்த்த‌ம் என்ன‌வெனில் இஸ்லாமால் ச‌ட்ட‌த்தை ம‌ட்டுமே
வ‌ழ‌ங்க‌முடியும்- பாவ‌த்தினின்று மீட்கும் க‌ருணையை அல்ல‌ என்ப‌தே (In
other words, Islam can only offer law - not redeeming grace).


இயேசு யார்(Who Jesus Is)

தேவனோடு நமக்கு உள்ள உறவு இயேசு கிறிஸ்து யார் என நாம் நினைக்கிறோம்
என்பதைப் பொறுத்தே அமைகிறது. அதாவது நமது "இயேசு தத்துவத்தை"யே
சார்ந்துள்ளது. ஆதியாகமத்தில் மனிதன் தவறிழைத்ததற்கான சாட்சியங்களுடன்
பிடிபட்டு அவனுக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கியபின் தேவன் தமது பணியைத்
தொடர்கிறார். அவர், "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள்
வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர்
குதிங்காலை நசுக்குவாய்" என்று சொல்கிறார் (ஆதியாகமம் 3:15).



இதுதான் கிறிஸ்துவைப் பற்றிய முதல் வாக்குறுதி என கிறிஸ்தவர்கள்
நம்புகிறார்கள், ஆனால், இது கடைசி வாக்குறுதி அல்ல. பல நூற்றாண்டுகளில்
பலரால் எழுதப்பட்டதான பல‌ பைபிள் நூல்களில் இந்த வாக்குறுதி "அவர்
வருகிறார், அவர் வருகிறார், அவர் வருகிறார்" என மீண்டும் மீண்டும்
வலியுறுத்தப்படுகிறது. இறுதியில் இயேசு வரும்போது அவர் வித்தியாசமானவராக,
இயற்கை இயல்பிற்கு அப்பாற்பட்டவராக‌ காணப்படுகிறார். ஒரு கன்னியின்
வயிற்றில் பிறந்து (இரண்டு புனித நூல்களிலும் இது காணப்படுகிறது)
பாவமற்றவராக வாழ்ந்து அற்புதங்கள் பல செய்கிறார்.



ஆனால் இணையில்லாத கிறிஸ்துவினுடைய பண்பின் அழகு பிரம்மிக்கத்தக்கது.
(மீண்டும் இதை பைபிள், குர்‍ஆன் இரண்டும் சொல்கின்றன‌). யோவான் 8:46 ல்
இயேசு சவால் விடுக்கிறார், " என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார்
என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? ". இயேசுவைப்பற்றி குர்‍ஆன் சூரா 19:19
ல் கீழ்கண்டவாறு சொல்கிறது. "பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க
(வந்துள்ளேன்)" இது ஏனைய தீர்க்கதரிசிகளைப் பற்றி குறிப்பிட்டவைகளிலும்
வித்தியாசமானது. சூரா 3:141 ல் " எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும்
எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்
தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின்
கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர
(இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை என்பதாக‌
வாசிக்கிறோம்.



தன் பெயரில் உள்ள சூராவில்(அத்யாயத்தில்) அரேபிய நபி இவ்வண்ணமாய்
உரைக்கிறார்: "உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும்,
பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக (சுரா 47:19)", சூரா 48:2
லும் கூட‌, "உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும்
அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை
நேரான வழியில் நடத்துவதற்காகவும்." எனக் காண்கிறோம். மேலும் இயேசு
தேவனாகவும் மனுஷனாகவும் இருக்கிறார் (பிலிப்பியர் 2 ல்). கிறிஸ்துவத்தின்
படி தேவன் தம்முடைய சித்தத்தை மட்டுமல்ல, தம்மையே வெளிப்படுத்துகிறார்.
( So, in Christianity God does not just reveal his will - He reveals
himself).



தேவன் ஏன் இந்த வழியைத் தெரிந்துகொண்டார் என நாம் வியப்படையலாம்.
சமீபத்தில் தகவல் தொடர்பு பற்றி ராபர்ட் கேல் (Robert Gales ) என்பவர்
எழுதிய ஒரு புத்தகம் இதை விளக்க உதவும். அதில் அவர் எந்த நபருமே
ஆணாயினும் பெண்ணாயினும் தாங்களே ஒரு செய்தியாகவே இருக்கின்றனர் என
முடிக்கிறார். இவ்வண்ணமாகவே இயேசுகிறிஸ்துவும், தேவன் தாமே தம்மையே ஒரு
செய்தியாக முற்றிலும் வெளிப்படுத்தத்தக்க வகையில் வந்தார். பாவம்
என்கின்ற பிரச்சினையினைக் கையாள இது ஒன்றே வழி எனக் கிறிஸ்துவர்கள்
கருதுகிறார்கள். இயேசு ஒருவ‌ரே பாவ‌ம‌ற்ற‌வ‌ர், என‌வே, பல காலத்திற்கு
முன்பே முன்னறிவிக்கப்பட்டபடி தேவனின் ஒப்பற்ற‌ பிரதிநிதியாகத் த‌ம‌து
சிலுவை ம‌ர‌ண‌த்தினால் பாவ‌த்தின் த‌ண்ட‌னையை ஏற்றுக்கொண்டார்.



இஸ்லாமை நாம் ஒப்பிடுவோமானால், அதிலும் க‌ட‌வுள் ம‌ன்னிக்கிறார். ஆனால்
"எப்ப‌டி ம‌ன்னிக்கிறார்" என்ப‌தே என்னைச்
ச‌ஞ்ச‌ல‌த்திற்குள்ளாக்குகிற‌து. அவ‌ர் அனாதியாய்த் த‌ம்மிஷ்ட‌ப்ப‌டி‍ -
சொல்ல‌ப் போனால் பொறுப்ப‌ற்ற‌ முறையில் ம‌ன்னிக்கிறார். வெறும்
வார்த்தையின் மூல‌மாக‌வே அவ‌ர் ம‌ன்னிக்கிறார் . தேவ‌ ம‌ன்னிப்பு என்ப‌து
ஒரு பொது ம‌ன்னிப்பு என்கின்ற‌ வ‌கையில் ஒரு தேவைய‌ற்ற‌ செய‌லாக‌
இருத்த‌லாகாது(He forgives arbitrarily, whimsically - almost
irresponsibly. He does it by a mere word. Divine forgiveness can never
be just an amnesty as if it does not really matter).



கிறிஸ்துவ‌த்தில் ம‌ன்னிப்பு என்ப‌து தியாக‌ங்க‌ளும் பாடுக‌ளும்
உள்ள‌ட‌ங்கிய‌து(In Christianity, forgiveness involves sacrifice and
suffering). இயேசு கிறிஸ்துவான‌வ‌ர் இந்த‌ உல‌க‌த்தின் பாவ‌ங்க‌ளுக்காக‌
ம‌ரித்த‌ தேவ‌ ஆட்டுக்குட்டியாக‌ ம‌ர‌ண‌த்தை வென்றார். இத‌ன் ப‌ல‌னாக‌
பாவிக‌ளின் குற்ற‌ங்க‌ளையும் அதினால் ஏற்பட்ட‌ வெட்க‌த்தையும் போக்கினார்
என‌ ரோம‌ர் 8 ல் வாசிக்கிறோம். என‌வே, சிலுவையை ஏற்றுக்
கொள்ளாம‌லிருத்த‌ல் தேவ‌னின் பெருந்த‌ன்மைக்கும் க‌ருணைக்கும்
ஏற்ப‌டுத்தும் அவ‌ம‌ரியாதையாகும். இது ராஜாவின் சித்த‌த்திற்கு மாறான‌
க‌ல‌க‌த்திற்கு ஒப்பாகும்.



ஒரு தூரமான‌ பாகிஸ்தானிய‌ கிராம‌த்திலிருந்த‌ முஸ்லிம் ஒருவர் சில‌
ஆண்டுக‌ளுக்கு முன்பு கூறின‌வ‌ற்றை நான் நினைவு கூறுகிறேன். "உங்க‌ளின்
ந‌பி, எங்க‌ளின் ந‌பியை விட‌ உயர்ந்த‌வ‌ர் என்ப‌த‌ற்கு மூன்று
கார‌ண‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ர் ஒரு க‌ன்னியின் வ‌யிற்றில் உண்டான‌வ‌ர்,
எங்க‌ள் ந‌பி அவ்வாறில்லை. அவ‌ர் பிற‌ப்பிலிருந்தே அற்புதங்க‌‌ளைச்
செய்த‌தால் பிறப்பிலேயே ந‌பியான‌வ‌ர். எங்க‌ள‌வ‌ர் நாற்ப‌து வ‌ய‌தில்
தான் ந‌பியானார். உங்க‌ள் ந‌பி இப்போதும் உயிரோடிருக்கிறார், எங்க‌ள‌வ‌ரோ
ம‌ரித்துவிட்டார்". (சூரா 4:15, கொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌பிக‌ளைப் ப‌ற்றிச்
சொல்கிற‌து; ஆனால் அவர்கள் ம‌ரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினவர்கள்
என்று எதுவும் கூறவில்லை).



எனவே பைபிள் இயேசுவை மீட்பர் என்றுச் சொல்லும் போது அதன் முழுமையான
அர்த்தத்திலேயே அவ்வாறு கூறுகின்றது. மனிதர்களாகிய நாம் நாமாகவே தேவன்
மகிழும்படியான காரியங்களைச் செய்யத் திறனற்றவர்களாய் இருக்கிறோம் என‌
நன்கு அறிவோம், என்பதினாலேயே அவ்விதமாக வாழ அவர் நமக்கு நம்பிக்கை
ஊட்டுகிறார். பழங்காலத்தில் வாழ்ந்த செனகா(Senaca) என்ற ஒரு தத்துவ ஞானி
இவ்வாறு கூறுகிறார்:


"நாம் கொடியவர்காளாகவே இருந்து, கொடியவர்களாகவே மாறியதினால் எப்போதும்
கொடியவர்களாகவே இருப்போமென்பதை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கிறேன்"(Wicked we are, wicked we have become, and, I regret to
add, wicked we will always be).



அவருக்கு எவ்விதத்திலும் நம்பிக்கை இல்லை. புனிதர்கள், நபிகள் நமக்கு
வழிகாட்டினாலும் நம்மை அவர்களால் இரட்சிக்க முடியாது. அவர்கள் நமக்குக்
கற்றுக்கொடுக்கலாம் ஆனால், எந்த நபியும் நம் இடத்தில் வந்து நமக்கு
பதிலாக‌ மரிக்கமுடியாது.



சிலுவையில் உடன் தொங்கின கள்ளனைப் பார்த்து இயேசு, "இன்றைக்கு நீ
என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் " என்று சொன்னார் (லூக்கா 23:43).
பைபிள் நமக்கு ரோமர் 6: 11-14 ல் இயேசு நம்மைப் பாவக்கட்டுகளினின்றும்
அதனால் ஏற்படும் தண்டனையினின்றும் விடுவிப்பார் என‌ போதிக்கிற‌து.



கிறிஸ்துவுக்குள்ளாக‌ நம‌து அடையாள‌ம் ம‌க‌த்தான‌து. நாம் அவரோடு கூட
"பாவ‌த்திற்கு மரித்தோம்" என்ற நம்முடைய அடையாளம் நம்மை பாவ
கட்டுகளிலிருந்து விடுதலையாக்குகிறது. ம‌ரித்தோரினின்று அவ‌ர்
எழும்பிய‌து போல‌ நாமும் புதிய‌ வாழ்வுக்குள் உய‌ர்த்த‌ப்ப‌டுவோம்.
இப்போது தேவ‌ ஆவி ந‌ம்முள் இருப்ப‌தால் தேவ‌னை ம‌கிழ்வுற‌ச் செய்ய‌ அது
ந‌ம‌க்கு உத‌வுகிற‌து.



இஸ்லாமுக்குள் புதிதாய் வந்த ஒரு பெண் தன் மனச் சோர்வை சக
முஸ்லிம்களுக்கு வெளிப்படுத்தும்
வண்ணமாக ஒரு கணிணிச் செய்தித் தளத்தில் இவ்வண்ணமாய்ச் சொல்கிறார்:




"கடந்த நான்கு ஆண்டுகளாய் நான் ஒரு முஸ்லீமாக இருந்து வருகிறேன்.
இஸ்லாம், நான் நடப்பதற்கு ஒரு கடினமான பாதையாய் இருப்பதாக நான்
கருதுகிறேன். ஆனால் நிச்சயமாகவே நான் நல்லது தான் செய்கிறேன் என உளமாற
நம்புகிறேன்........ எப்பொழுதும் நான் ஒரு முஸ்லீமாகவே இருக்கவேண்டும்
என‌ விரும்புகிறேன், ஆனாலும், இஸ்லாமில் நான் அனேக காரியங்கள் செய்ய
வேண்டியுள்ளது..... சில நேரங்களில் இவை யாவற்றையும் செய்ய ஞாபகம்
வைத்திருப்பதில் நான் பைத்தியமாக அலைகிறேனோ என நான் எண்ணுகிறேன்.
அல்லாவின் ஒரு நல்ல ஊழியக்காரியாக இருக்கவேண்டும் என நான்
ஆசைப்படுகிறேன், ஆனாலும் இவை யாவற்றையும் நான் அறிந்துகொள்வது மிகவும்
அதிகமாகவே எனக்குத் தோன்றுகிறது. என‌து க‌ண‌வ‌ரிட‌ம் இது ப‌ற்றிப்
பேசினேன். அவ‌ர் நான் ஒரு ஜின்னினால் (அசுத்த ஆவி)
பிடிக்க‌ப்பட்டிருப்பேனோ என‌ நினைக்கிறார்..... என‌து முய‌ற்சியில்
வெற்றியடைய உத‌வியாய் இருக்கும்ப‌டியான‌ ப‌தில் கிடைப்பதற்கான தேடுதலில்
நான் மிக‌த் தீவிர‌மாய் இருக்கிறேன்".


She said, "I've been a Muslim for about 4 years. Islam is a difficult
road for me to walk, but I believe with all my heart that I'm doing
the right thing. ... I want be a Muslim forever, but I feel there is
so much to do in Islam ... sometimes I think I'm going crazy trying to
remember all this... I want to be a good servant to Allah but learning
all this is too much for me. I've talked to my husband and he thinks I
have a jinn [evil spirit] .... I am desperately looking for answers
that will help me to be successful in my effort."


இறுதியாக, சில முஸ்லிம் நண்பர்கள் ஹதீஸ்களில் முகமதுவே கூடத் தனது சொந்த
மகளுக்கே இரட்சிப்பை உத்திரவாதம் செய்யக்கூடாத நிலையில் இருந்ததாகப்
படித்ததை நினைவுகூறுகிறேன். அவர்கள் ஒரு இக்கட்டான கேள்வியைக்
கேட்டார்கள்: "தனது சொந்த மகளாகிய பாத்திமாவையே இரட்சிக்க முடியாத நபி,
நம்மை இரட்சிப்பாரென நாம் நம்புவது எவ்வாறு?" (al-Bukhari, vol. 6, p.
277). பலர் மசூதியிலிருந்து ஒரு நாளைக்கு ஐந்துமுறை ஒலிபெருக்கி மூலம்
வரும் "வெற்றியடைய வாருங்கள், இரட்சிப்படைய வாருங்கள்" என்ற
அழைப்புகளால் .. இவர்களுக்கே இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதபோது இவர்கள்
எவ்வாறு மற்றவர்களை இவ்விதம் அழைக்க முடியும் எனச் சங்கடப்பட்டார்கள்.



இவ்விதமான கேள்விகளின் பலனாக சிலர் விரக்தியில் இயேசுவை நோக்கித்
திரும்பி அவரின் வார்த்தைகளினாலும் வேதத்தினாலும் (இஞ்ஜில்) நம்பிக்கை
அடைந்தார்கள். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" (யோவான்
14:6). பல முஸ்லிம்கள் இயேசுவின் இந்த வார்த்தைகளினால் பலத்த ஆறுதல்
அடைந்தார்கள்."வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும்
என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல்
தருவேன்." (மத்தேயு 11:28)


Source: http://www.answering-islam.org/Testimonies/larson.html
 

--------------------------------------------------------------------------------
Dr. Warren Larson lived in Pakistan for 23 years. He has written a
book called, Islamic Ideology and Fundamentalism in Pakistan: Climate
for Conversion to Christianity?; University Press of America; ISBN:
0761810943.
--------------------------------------------------------------------------------

ஏன் இவர்கள் கிறிஸ்தவர்களானார்கள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்



--------------------------------------------------------------------------------
© Answering Islam, 1999 - 2008. All rights reserved.

Source: http://www.answering-islam.org/tamil/testimonies/larson.html