இஸ்லாம் கல்வி தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது, அதில் "இயேசு இறைவன் என்றால் அவர் எப்படி மரிக்கமுடியும்?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அக்கட்டுரைக்கான தொடர் பதில்கள் வரிசையில் இதனை முதலாவது பதிலாக நான் முன்வைக்கிறேன்.
இஸ்லாம் கல்வி எழுதியது:கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில் ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின் மூன்று ஆள்த்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.
Source: Islam Kalvi
பைபிள் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு தொடர் பதில்கள்
கேள்வி:
இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்? இயேசு மரித்திருந்த அந்த மூன்று நாட்கள் யார் இந்த உலகை நடத்திக் கொண்டு இருந்தார்கள்?
( If Jesus is God, how can God die? Who was running the universe those three days that Jesus was dead?)
( If Jesus is God, how can God die? Who was running the universe those three days that Jesus was dead?)
பதில்:
ஒருவர் மரித்தால் அவர் "முழுவதுமாக இல்லாமல் போய்விடுவார்(non-existence)" என்பதே இக்கேள்வியில் மறைந்துள்ள ஒரு செய்தி அல்லது ஊகமாகும். இந்த கேள்வியின் படி, இயேசு மரித்தார் என்றுச் சொன்னால், அவர் முழுவதுமாக இல்லாமல் போய்விடுவார்(ceased to exist), இது போல நடக்க வாய்ப்பே இல்லையே, அதாவது இறைவன் இல்லாமல் இந்த உலகம் எப்படி நிலைக்கும்? மரணம் என்பதின் பொருளை தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள், இது தான் பிரச்சனை. ஆனால், பரிசுத்த வேதாகமத்தின் படி, மரணம் என்பது, ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான ஒரு பிரிவு மட்டுமே ஆகும். முதல் மனிதனின் பாவத்தினால் இரண்டு வகையான பிரிவுகள் உண்டாயின என்று வேதம் சொல்கிறது. முதலாவது "ஆன்மீக மரணம் அல்லது ஆவிக்குரிய மரணம்" ஆகும், அதாவது, இறைவனோடுள்ள ஐக்கியம் அல்லது உறவுமுறை துண்டிக்கப்பட்டு, இறைவனின் அன்பான மற்றும் நெருக்கமான பிரசன்னத்தை இழப்பதாகும். மனிதன் மீது இறைவனின் அன்பு சூழ்ந்து இருப்பதற்கு பதிலாக, இறைவனின் கோபம் வியாப்பித்து இருப்பதாகும். இதைத் தான் ஆவிக்குரிய மரணம் என்றுச் சொல்கிறோம்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (ஆதியாகமம் 2:15-17)
தேவனுக்கு கீழ்படியாமல், தடுக்கப்பட்ட மரத்தின் கனியை புசித்த காரணத்தினால், ஆதாமும் அவன் மனைவியும் தேவனின் பிரசன்னத்திலிருந்தும், ஏதேன் தோட்டத்திலிருந்தும் துரத்தப்பட்டார்கள்.
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். (ஆதியாகமம் 3:22-24)
பாவத்தின் காரணமாக உருவான இந்த ஆவிக்குரிய பிரிவினையை வேதம் தொடர்ந்து விவரிக்கின்றது.
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். (சங்கீதம் 5:4-6)
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவி கொடார். (சங்கீதம் 66:18)உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (ஏசாயா 59:2)
அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். (மீகா 3:4)
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? (ஆபகூக் 1:13).
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. …சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். (ரோமர் 2:5,8)
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசியர் 2:1-5).
இயேசுவோடு ஐக்கியப்பட்ட விசுவாசிகள் கூட அவர்கள் மறுபிறப்பு அடைவதற்கு முன்பாக "பாவத்தில் மரித்தவர்களாக" இருந்தார்கள் என்று மேலே படித்த கடைசிப் பத்தியில் பவுல் சொல்கிறார். அதாவது பாவத்தில் மரித்தவர்கள் என்றுச் சொன்னாலும், விசுவாசிகள் இன்னும் உயிரோடு இருப்பவர்களாகவே இருந்தார்கள். மனிதன் பாவத்தினால் மரித்தான் என்றுச் சொன்னால், அவன் இல்லாமல்(அழிந்தே) போய்விடுகிறான் என்று பொருள் அல்ல, அதற்கு பதிலாக, அவன் அன்பான தேவனோடுள்ள நட்புறவிலிருந்து பிரிக்கப்பட்டான் என்பது தான் இந்த வசனத்தின் பொருளாகும்.
பரிசுத்த பைபிள் குறிப்பிடும் இரண்டாவது வகையான மரணம் "சரீர மரணமாகும்". இந்த சரீர மரணம் என்பது, சரீரத்திலிருந்து ஆவி/ஆன்மா பிரிக்கப்பட்டு, மற்றும் இந்த சரீரமானது தான் வந்த மண்ணுக்கே திரும்பிவிடும். மற்றும் நம்முடைய பாவத்தை சுமந்த இயேசு கிறிஸ்துவும் இந்த இரண்டு வகையான மரணத்தையும் சந்தித்தார், அதாவது தேவனுடன் தன் நட்புறவை நமக்காக இழந்தார், மற்றும் சரீரத்திலிருந்து ஆன்மா பிரிவதையும் அனுபவித்தார். நம்முடைய தொடர் கேள்விகளுக்கான பதிலில் இந்த விவரத்தைப் பற்றி இன்னும் அதிகமாக நாம் சிந்திக்கப்போகிறோம்.
ஆக, இந்த இரண்டு வகையான மரணங்களும், ஒருவரை "இல்லாமல் செய்துவிடாது"( Yet, neither types of death results in non-existence or cessation of life). உதாரணத்திற்கு கிழ் கண்ட வசனத்தை பார்க்கவும்:
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். (எபிரேயர் 12:22-24)
அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும்செத்ததாயிருக்கிறது ("As the body without the spirit is dead, so faith without deeds is dead." யாக்கோபு 2:26)
அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (வெளி 6:9-11)
"மரணம்" என்றால் என்ன என்பது பற்றி, கேள்வி கேட்டவரின் புரிந்துக்கொள்ளுதல் பைபிளுக்கு எதிரானது மட்டுமல்ல, அது குர்ஆனுக்கும் எதிரானது என்பது தான் மிகவும் முக்கியமான விவரமாகும்(Interestingly, not only is the questioner's definition of death unbiblical, it is also contrary to the Quran:).
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்(And say not of those slain in God's way, 'They are dead'; rather they are living, but you are not aware. குர்ஆன் 2:154)
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்;. மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி; "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று கூறி மகிழ்வடைகிறார்கள். (குர்ஆன் 3:169-170)
Count not those who were slain in God's way as dead, but rather living with their Lord, by Him provided, rejoicing in the bounty that God has given them, and joyful in those who remain behind and have not joined them, because no fear shall be on them, neither shall they sorrow, S. 3:169-170
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் வார்த்தைகளும் இதனையே எதிரொலிக்கின்றன.
அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார். (லூக்கா 20:37-38)
இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து அறிந்துக்கொள்வது என்னவென்றால், இயேசு சிலுவையில் மரிக்கும் போது அவர் "முழுவதுமாக இல்லாமல் போகவில்லை". பரிசுத்த வேதம் நமக்கு இவ்விதமாக போதிக்கிறது, அதாவது கர்த்தரின் சரீரம் மூன்று நாட்கள் கல்லரையில் இருக்கும் போது கூட, அவரது ஆவி/ஆன்மா தொடர்ந்து உயிரோடு இருந்தது(still consciously alive) மற்றும் வாழ்ந்துக்கொண்டு இருந்தது என்று வேதம் சொல்கிறது.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள்,மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2:19-22)
நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். (யோவான் 10:17-18)
இயேசு தன்னைத் தானே மரணத்திலிருந்து உயிர்த்தெழ வேண்டுமென்றால் அதற்கு உள்ள ஒரே வழி, அவர் உயிரோடு இருந்தால் தான் முடியும். இது நமக்கு இயேசு கல்லரையில் இருந்த மூன்று நாட்களில் அவர் இல்லாமல் போகவில்லை என்பதை நிருபிக்கிறது. இயேசுவின் தெய்வீகத் தன்மை மற்றும் அவரது மனித ஆன்மா அந்த மூன்று நாட்களும் உயிரோடு முழு உணர்வோடு இருந்தது.( The only way that Christ could be able to raise himself from the dead is if Christ were still consciously alive. This establishes that Christ did not cease to exist for those three days that his body remained in the grave. Both Christ's divine nature and his human soul were still conscious during that period of time.)
ஆக, கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இதுவே. உண்மைத் தேவனாகிய இறைவன், மூன்று நிகரற்ற ஆள்தத்துவத்துடன் எப்போது வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். இயேசுவின் சரீரம் கல்லரையில் வைக்கப்படும் போதும் சரி, அந்த சரீரம் கல்லரையில் இருந்த அந்த நாட்களிலும் சரி அவர் உயிரோடு இருக்கிறார். அந்த மூன்று நாட்களிலும் கிறிஸ்து உயிரோடு இருந்து, தன் பிதா பரிசுத்த ஆவியானவருடன் மகிமை வல்லமையுடன் உலகத்தை ஆண்டுக்கொண்டு இருந்தார்.
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Shamoun/q_god_dying.htm
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Shamoun/q_god_dying.htm
இஸ்லாம் கல்வி தள கட்டுரைகளும், ஈஸா குர்ஆன் பதில்களும்
Isa Koran Home Page | Back - Islam Kalvi & Mr. M.M. Akbar's Rebuttals Index Page |
0 comments:
Post a Comment