இப்படி இன்னல்களுக்கு ஆளான சகோதர இனங்களுக்கு ஆதரவாக அவ்வப்போது தமிழகத்தின் சகோதர இரத்தங்கள் குரல் கொடுத்துவந்தன. ஆனாலும் இதில் ஒரு ஒற்றுமை குரல் ஓலிக்காததினால் இங்கு மத்தியில் உள்ளவர்களுக்கு கேட்காமல் போனது. ஆனால் இலங்கை இராணுவத்தின் அப்பாவி தமிழக மக்களின் இரத்தம் குடிக்கும் நடவடிக்கை குறைந்த பாடில்லை. தற்போது இதன் உச்சகட்டதை எட்டிய இந்நிலையில் தான் தமிழ்நாட்டின் சகோதர குரல் ஒருமித்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு இதில் இரண்டு வாரத்தில் தலையிடாத பட்சத்தில் அனைத்து எம்.பிக்களும் இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். திரைப்பட துறையினரோ இராமேஸ்வரத்தில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.
எப்படியாயினும் இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் மனித உரிமைகள் பாதுக்காகப்படவேண்டும். ஒவ்வொருவரும் வாழும் உரிமை பெற்றுதரவேண்டும். தனி மனித சுதந்திரம் போற்றப்படவேண்டும். இதுவே எம் ஆசை. அமைதி திரும்ப இறைவன் உதவி செய்வராக.
கிறிஸ்துநேசன்
4 comments:
//எப்படியாயினும் இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் மனித உரிமைகள் பாதுக்காகப்படவேண்டும். ஒவ்வொருவரும் வாழும் உரிமை பெற்றுதரவேண்டும். தனி மனித சுதந்திரம் போற்றப்படவேண்டும். இதுவே எம் ஆசை. அமைதி திரும்ப இறைவன் உதவி செய்வராக.
//
எனது வேண்டுதலும் இதுதான் நண்பரே.
பதிவுக்கு நன்றிகள்
//***
இப்படி இன்னல்களுக்கு ஆளான சகோதர இனங்களுக்கு ஆதரவாக அவ்வப்போது தமிழகத்தின் சகோதர இரத்தங்கள் குரல் கொடுத்துவந்தன. ஆனாலும் இதில் ஒரு ஒற்றுமை குரல் ஓலிக்காததினால் இங்கு மத்தியில் உள்ளவர்களுக்கு கேட்காமல் போனது.
***//
நடுவன அரசுக்கு தமிழர்கள் படுகொலை செய்ய படுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும், இருந்தும் சாவது தமிழர்கள்தானே என்று மெத்தனம் இதே இது அங்க ஹிந்திகாரனுங்க செத்தால் இந்த தீவெட்டி நடுவன அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்
இன்னும் எத்தனை காலம்தான் இந்த நடுவன அரசு தமிழர்களை ஏமாற்றுவார்களோ
//எனது வேண்டுதலும் இதுதான் நண்பரே.
பதிவுக்கு நன்றிகள்//
நன்றி சகோதரர் இறக்குவானை நிர்ஷன் அவர்களே
தங்களின் வருகைக்கும் கருத்துபதிவுக்கும். ஒரு நாளும் நம் வேண்டுதல் வீண்போகாது. விரைவில் அமைதி திரும்பட்டும்
நன்றி சகோதரர் அனானி அவர்களே விரைவில் இலங்கையில் அமைதி திரும்ப பிரார்த்திப்போம்
Post a Comment