காதுகளில் எங்கும் ஒலிப்பது குண்டு வெடிப்பு, ஆங்காங்கே சிதறிகிடக்கும் மனித உடல் உறுப்புகள், இரத்தம் தோய்ந்த தரைகள், சைரன் ஒலி எழுப்பி செல்லும் ஆம்புலன்சின் ஓசைகள் இப்படிப்பட்ட தான ஒரு சம்பவம்தான் இங்கு நடந்தது மேலே வாசியுங்கள்
இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14, 2001). செப்டம்பர் 11 ஆம் தேதி நிகழ்வின் தடயங்கள் சில இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலை நோக்கிக் காட்டுகின்றன…
நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல்
Open Letter to Our Muslim Friends:
செப்டம்பர் 11 ஆம் தேதிய அக்கிரம நிகழ்வுகள் குறித்து உங்களில் பெரும்பான்மையானவர்கள் இல்லாவிடினும் பலர் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றீர்கள் என நான் அறிவேன். சரித்திரத்தில், 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இயேசுவின் பெயரால் நடந்த மத வெறி நிகழ்வுகளுக்காகவும் அதுபோன்ற ஏனைய பைத்தியக்காரத் தனங்களுக்காகவும் நான் கிறிஸ்தவன் என்ற முறையில் சங்கடப்படுவதைப் போன்று, நீங்கள் - முஸ்லீம்கள் என்ற முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இத்தகைய நடவடிக்கைக்காக மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என நான் எண்ணுகிறேன்.
உங்களில் பலர் அமைதி விரும்பும் மக்களாக இருக்கிறீர்கள். அமைதிக்காகவும் நம்பிக்கைக்காகவும் இதற்கிடையே உங்கள் மத நம்பிக்கையின் வெற்றிக்காகவுமான மனப்போராட்டத்தினால் அழுத்தத்திற்குள்ளாகி எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களும் மற்றவர்களும் ஒரு உடன்பாடுக்கு வர இயலாத நிலையில் இருக்கின்றீர்கள். ஒரு வசதியான நிலையில் உள்ள ஒரு கிறிஸ்தவன் அல்லது ஒரு பெயர் கிறிஸ்தவன் இயேசுவின்பால் மேலோட்டமான பற்றுதலுடன் பலவீனமாக இருக்கின்றானோ அதில் உங்களில் பலர் உங்களின் நபிக்காகவும் புனித நூலுக்காகவும் மிகுந்த வைராக்கியமாகவும் பலசாலியாகவும் உள்ளீர்கள்.
இந்த வாரம் நடந்த இஸ்லாமிய வன்முறைச் சம்பவம் போன்ற நிகழ்வுகளுக்காக நீங்கள் அடிக்கடி சங்கடப்படுவது போன்றே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள், எங்கள் தரப்பில் வன்முறை நடந்தபோது நாங்களும் சங்கடப்பட்டோம்.
ஆயினும் இவைகளில் அடிப்படையான ஒரு வித்தியாசத்தை நீங்கள் காணலாம். இந்த வித்தியாசம் நமது நம்பிக்கையிலும் அதனை ஸ்தாபித்தவர்களின் இருதயங்களிளும் உள்ள வித்தியாசத்தையே வெளிப்படுத்துகிறது.
இன்றைய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தின் வன்முறை நிகழ்வுகளுக்கும், அக்கிரமங்களுக்கும், கிறிஸ்தவ சபைகளின் அல்லது கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடன் பெற்ற முறையற்ற வெற்றிகளுக்காகவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் இவை இயேசுவின் முன்னுதாரணமான வாழ்க்கைக்கும் அவரது போதனைகளுக்கும் எதிரானவை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். எங்கள் சங்கடம் என்னவென்றால் நாங்கள் "வெறும் மனிதர்க"ளாகவே நடந்து, இதயமற்றவர்கள் போல் தரம் தாழ்ந்து, ஜீவனுள்ள தேவனுக்குக் கீழ்ப்படியத் தவறினோம் என்பதே.
பைபிள் காட்டும் நமது இயேசு வன்முறைக்கு எச்சந்தர்ப்பத்திலும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒரு கோபமுற்ற முதல் நூற்றாண்டு அதிகார வர்க்கத்தின் சிறு மதவெறிக்கும்பலிடம் எதிர்பட்டபோது கூட அவரது அணுகுமுறை பணிவாகவே இருந்தது. பொய்யான குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டபோதும், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல", அவர் வாயைத் திறக்கவில்லை. கொடும் மரணத்தைச் சந்தித்தபோதும் கூட அவரது முடிவைத் தம் பரலோகத் தந்தையிடமே ஒப்புக்கொடுத்தார்.
மரணத்தை அவர் கொல்லுதலினால் அல்ல, மாறாக மரணத்தை ஏற்றுக்கொண்டு ஜெயித்தார்(He conquered death—not by killing it—but by dying Himself.) தீமையை நன்மையினால் மேற்கொண்டார். வெறுப்புக்கு எதிரான அவரது புனிதப் போரை(Jihad) அன்பினைக் கொண்டு நடத்தினார். அதிகார வெறி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான அவரது ஜிஹாத் , அவர் நம்மிடையே ஒரு பாடுபடும் ஊழியக்காரனாக வாழ்ந்தே நடத்தப்பட்டது. பரலோகத்தினின்று கொண்டு வந்த அழகினால் நமது அவலட்சனங்களைப் போக்கினார். அவரது உடல் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு சதை கிழிக்கப்படும் போதும் கூட, "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே", எனத் தம்மை துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார்.
அவர் காட்டிக் கொடுக்கப்பட்டு அநீதியான விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட அந்த இரவில் கெத்சமனே தோட்டத்தில் அவரது பகைவர்கள் அவரச் சூழ்ந்துகொண்டார்கள். அச்சந்தர்ப்பத்தில் அவரது பரலோகத் தந்தையிடம் அவர் இராணுவ உதவியைக் கூடக் கேட்டிருக்கலாம் (72,000 தூதர்கள்). ஆனாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை.( இஞ்ஜில் மத்தேயு 26:47 முதல் 26:54 வரை)
"அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்."
முன்பு வாழ்ந்த அனேகம் மதத் தலைவர்கள் மற்றும் ஸ்தாபகர்களைப் போலல்லாது அவரைக் காட்டிக் கொடுத்தவனைக் கூட அவர் "சினேகிதனே" என அழைக்கிறார். மற்றும் தன்னை பின்பற்றினவர்களை நோக்கி தம் வாள்களைக் கீழே போட்டு தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்படிக் கட்டளையிடுகிறார்.
தமது காயங்களை அவர் மறைத்துக் கொள்ளாமல் அவற்றைத் தழுவிக் கொள்கிறார். மரித்தோரினின்று தேவன் அவரை எழுப்பிய போதும் உயிர்த்தெழுந்த அழியாத அவரது புதிய உடம்பில் அவர் தெரிந்து ஏற்றுக்கொண்ட பலவீனத்திற்கும் வேதனைக்கும் அடையாளமான காயங்களையும் கைகளில் ஆணியின் சுவடுகளையும் சுமந்தார்.
அவரின் ஒப்பற்ற அன்பு வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினவர்களிடம், அவரவர் தங்களை வெறுத்து தங்கள் சிலுவையைச் சுமந்துச் செல்லப் பணித்தார், மற்றவர்களின் சிலுவையை அல்ல. கவனிக்கவும்; அடுத்தவர்களை அல்ல, அவரவர் தம்மை வெறுத்து தமது சிலுவையை சுமக்கவேண்டுமென்றார். அடுத்தவர்களின் நலனுக்காக தான் எப்படி உயிரைக் கொடுத்தாரோ அது போல வாழவேண்டுமென்றார்.
கிறிஸ்தவர்களுக்கு, பகைமை மற்றும் அத்துமீறிய வன்முறை என்பன மிகக் கொடுமையான பாவங்களாகும். ஏனெனில் அவை கிறிஸ்துவின் "எளிய, அமைதலுள்ள பண்புடன்" வாழாத இதயங்களினின்று மட்டுமே புறப்படுகின்றன. இத்தகைய இதயங்கள் சுயநலம், வெறி, சுரண்டுதல் மற்றும் மற்றவர் மீது கடினம் காட்டுதல் போன்ற குணங்கள் உடையவை. இயேசு அவருடைய முழு வாழ்க்கையையுமே அடுத்தவர்களுக்காகவே கொடுத்தார்; ஆனால் வன்முறை அடுத்தவரிடமிருந்து எடுத்துக் கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது.
"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்." (இஞ்ஜில், யாக்கோபு அதிகாரம் 4)
உங்களில் சிலராவது இந்நேரம் இயேசுவின் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கைக்கும் மற்றும் அவரை பின் பற்றுகிற சிலரின் வாழ்க்கைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இருப்பீர்கள். நாங்கள் எங்களது தவறுகளால் அவர் போன்று வாழாமல் சரித்திரத்தில் அவரைப்போன்று அன்பு காட்டாமல் அவரினின்று மாறுபட்டு இருக்கிறோம். நாம் நம் வாழ்க்கையினால் அவரை தவறாக காட்டுகிறோம். ஆனால் அவரது இதயத்தின் உண்மையான காட்சி புதிய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளில் காணலாம். அதாவது அவரின் அன்பான வார்த்தைகளில், இரக்கமுள்ள செய்கைகளில், மற்றும் உலகின் பாவங்களுக்காக மரித்தலில் காணப்படுகிறது. பிதாவின் முன்பாக அவரது சிலுவை மரணமாகிய ஜீவாதார பலி, அதாவது நமது பாவங்களைத் தம்மீது சுமரப்பண்ணி நமக்காய் மரித்தது எல்லா மனிதருக்காகவும் தான். அவர் மரித்தது எனக்காகவும், உங்களுக்காகவும், பேதுரு, பவுல், முகமது, ஆபிரகாம், சாராள், ஆகார் மற்றும் இன்னும் பிறக்கப் போகிறவர்ககாகவும் தான்.
இப்பொழுது நீங்கள் இயேசுவின் செய்திக்கும் உங்கள் நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை புரிந்துகொண்டிருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையில் அனேகம் சீரிய உண்மைகள் இருப்பினும், அதில் வருந்தத்தக்க ஒரு உணர்வோட்டம் இத்தகைய அன்பின், பணிவின் மற்றும் அமைதியின் வழிக்கெதிராக உள்ளது. இத்தகைய உணர்வோட்டம் தான் கொடிய மனிதர் கையில் அகப்பட்டு உங்களைப் போன்ற மக்களின் இதயத்தை உறுத்தும் ஒரு சோக சம்பவமாக, இவ்வாரத்தில் நடந்ததைப் போன்று உருமாறுகிறது.
நபிகளின் சில போதனைகளினின்று வேறுபட்டு எங்களின் சினம் கொண்ட மனங்களுக்கு எதிராக கீழ்கண்ட வசனம் போதிக்கிறது:
"எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்." லூக்கா 6:27,28
இயேசுவிடம் அவரது சொல்லிலும் செயலிலும் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு மட்டுமே இருந்தது. அவர் அன்பையே போதித்தார், ஒருபோதும் பகைவர்களை வன்முறை உணர்வோடு சாடியதில்லை. அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள மனிதர்களாகிய நாம் அவர் வாழ்ந்துகாட்டியது போல் வாழத் தவறிவிட்டோம்.
உங்கள் மனதில் உள்ள இத்தகைய சஞ்சலத்தை எதிர்கொண்டு சரித்திரத்தில் இயேசுவைப் பின்பற்றுபவர்களை அல்லாமல் இயேசுவையே நோக்கி ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள் என உங்களை நான் ஊக்குவிக்கிறேன். வாழ்வுக்கும் விடுதலைக்குமான அவரது அறைகூவல் ஏன் வன்முறையும் வெற்றியும் பொதியப்பெற்ற வார்த்தைகளால் அல்லாமல் பின் வருவன போன்ற வார்த்தைகளால் அமையப்பெற்றது என நீங்களே அறிந்துகொள்ளுங்கள்
"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது" ( மத்தேயு 11:28 – 30 )
[The author of this article, Glenn M. Miller, hereby grants permission to copy this article freely, provided that the material is not modified in any form (other than translation into another language); that the material is distributed without cost, and that the ThinkTank web site identification remains with the material. We further ask that the source is acknowledged as: Source: www.answering-islam.org/glenn.html]
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/glenn.html
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/glenn.html
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
Tamil Source: http://www.answering-islam.org/tamil/terrorism/glenn.html
Tamil Source: http://www.answering-islam.org/tamil/terrorism/glenn.html
Isa Koran Home Page | Back - Islam & Terrorism Index Page |
0 comments:
Post a Comment