அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 16, 2012

பீஜே குழுவிற்கு கேள்வி: நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா?




உமரின் முன்னுரை: சில மாதங்களுக்கு முன்பு சான் குழுவினருக்கும், பீஜே குழுவினருக்கும் இடையே நடைப்பெற்ற "குர்-ஆன் இறைவேதமா?" என்ற விவாதத்தில், பீஜே குழுவினர் "குர்-ஆன் இறைவேதம் தான் என நிருபிக்க, குர்-ஆனில் நவீன விஞ்ஞானம் உண்டு" என்ற வாதத்தை முன்வைத்தனர். சான் குழுவினர் "குர்-ஆனில் விஞ்ஞானம் என்று ஒன்று இல்லை, ஒருவேளை ஒருபேச்சுக்காக குர்-ஆனில் இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டாலும், குர்-ஆன் இறைவேதம் ஆகமுடியாது, ஏனென்றால், உலகில் அனேக பழமைவாய்ந்த புத்தகங்களிலும் இதர மார்க்க புத்தகங்களிலும் விஞ்ஞானம் உண்டு, அப்படியானால், அந்த புத்தகங்களை இறைவன் தான் அருளினான் என்பதை முஸ்லிம்கள் ஏற்கமுடியுமா? என்று கேள்வி கேட்டு, இஸ்லாமியர்களின் விஞ்ஞான கட்டுக்கதைகளுக்கு அன்றைக்கே முற்றுப்புள்ளி வைத்தனர்".  இதனை நாம் விவாத வீடியோக்களில் காணலாம். அந்த வீடியோக்களை பார்த்த நாளிலிருந்து ஏன் நாம் பீஜே குழுவினர் முன்வைத்த விஞ்ஞான விவரங்களுக்கு பதில்களை பதிக்கக்கூடாது? என்ற எண்ணம் வந்தது. அதன் அடிப்படையில், இந்த ரமளான் மாதத்தில் "குர்-ஆனும் விஞ்ஞானமும்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பதிக்கலாம் என்று விரும்பி, இந்த முதல் கட்டுரையை பதிக்கிறேன். இதைப் பற்றி மறுப்பு எழுத விரும்பும் இஸ்லாமியர்களுக்கு என் ரமளான் வாழ்த்துதல்களைச் சொல்லிக் கொள்கிறேன்.
 
------------------------------

நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா?

'குர்-ஆனில் விஞ்ஞானம்' காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு

இணைய தளமாகிய soc.religion.islam தளத்திலும் மற்றும் இதர இணைய தளங்களில் ஒரு குறிப்பிட்ட வாதம் அடிக்கடி பதியப்படுகின்றது. நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுகின்றது என்பது தான் அந்த வாதமாகும். கிரகங்கள் முதற்கொண்டு வானவியல் வரைக்கும், கரு உருவாகுதல் முதற்கொண்டு, புவியமைப்பியல் வரைக்கும் உள்ள விஞ்ஞான தகவல்கள், இன்னும் அனேக விஞ்ஞான குறிப்புகள் குர்-ஆனின் அனேக அத்தியாயங்களில் (ஸூராக்களில்) காணப்படுகிறது என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். மேலும் இப்படிப்பட்ட நவீன விஞ்ஞானம் பற்றிய தகவல்கள் அக்காலத்தில் முஹம்மதுவிற்கு தெரிய வாய்ப்பில்லை, அப்படி இருந்தும் குர்-ஆனில் இவைகள் இருப்பதினால், நிச்சயமாக குர்-ஆனை இறைவன் தான் இறக்கினான் என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்கிறார்கள்.

இஸ்லாமியர்களின் இந்த விஞ்ஞான வாதத்திற்கு மறுப்பாக, ஒவ்வொரு தலைப்பாக எடுத்துக்கொண்டு, அதற்கான பதிலைத் தரலாம். ஒவ்வொரு தலைப்பாக எடுத்துக்கொண்டு அதற்கு மறுப்பை சகோதரர் "ஆண்ட்ரு வர்கோ" அவர்கள் கொடுத்துள்ளார்கள், அந்த பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். ஏற்கனவே தனித்தனியாக பதில் கொடுக்கப்பட்டு இருப்பதினால், மறுபடியும் அதே வகையில் பதில் தரவேண்டிய அவசியமில்லை. எனவே இந்த சிறிய கட்டுரையில், "குர்-ஆனில் நவீன விஞ்ஞானம்" என்ற இஸ்லாமியர்களின் புதிய "கோட்பாட்டிற்கு" மறுப்பை காண்போம். இஸ்லாமியர்களின் இந்த வாதம் தர்க்கரீதியாக பிழையாக உள்ளது. இந்த கட்டுரையில் செய்யப்படும் ஆய்வானது, குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்றுச் சொல்லப்படுகின்ற புவியியல், கருவியல் மற்றும் எல்லா விதமான விஞ்ஞான வாதத்திற்கும் மறுப்பு அளிக்கும்.

இந்த கட்டுரை, "soc.religion.islam" என்ற தளத்தில் "ஆறுகள் மற்றும் சமுத்திரங்கள்" என்ற தலைப்பில் நான் புரிந்த விவாதத்தின் அடிப்படையில் உருவானதாகும், எனவே, ஆறுகள்/சமுத்திரங்கள் பற்றிய சில விவரங்கள் இக்கட்டுரையிலும் தொடப்படுகின்றது.

நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் உண்டு, ஆகையால், குர்-ஆன் இறைவேதம் என்ற வாதத்தில் இருக்கும் ஆறு வகையான பிழைகளை கீழே பார்க்கலாம்:

1 இவ்வகையான வாதத்தை ஆதரிப்பவர்கள், அவ்வசனங்களுக்கு வேறு வகையான பொருள் வருவதை தடுக்கிறார்கள்.
(Those who pursue the argument leave no room for alternative interpretations)
2 இந்த வாதம் அல்லாஹ்வை பலவீனமானவராக சித்தரிக்கிறது.
(The argument as it stands makes Allah out to be weak)
3 இந்த 'புதிய விஞ்ஞானம்' தற்கால இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்களாகும்.
(The argument is a modern polemic)
4 முடிவாக, "குர்-ஆனை நிருபிக்கும் நவீன விஞ்ஞானம்" என்ற வாதம், குர்-ஆனில் விஞ்ஞானத்தை காணாமல் தடுமாறுகிறது. மேலும் விஞ்ஞானமே குர்-ஆனை குற்றப்படுத்துகிறது.
(At the end of the day, the "modern science proves the Qur'an" argument does not find science in the Qur'an, rather it uses science to judge the Qur'an)
5 தெரிவு செய்து விளக்கம் அளித்தால், எதை வேண்டுமானாலும் நிருபித்து விடலாம்.
(Selective interpretation can be used to prove anything)
6 இந்த வாதம் குர்-ஆன் அதிகாரபூர்வமானது அல்ல என்பதை நிருபிக்கிறது
(Applying the argument means that the Qur'an is no longer authoritative)
முடிவுரை (Conclusion)

வாசகர்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு மகிழ்ச்சியும், உற்சாகவும் உண்டாக்கும் விவரம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் இந்த கட்டுரைக்கு அளித்த வரவேற்பாகும். எனக்கு அனேக இஸ்லாமியர்கள் பின்னூட்டமிட்டு, நீங்கள் சொல்வது தான் சரியானது, மற்றும் எங்கள் அறிஞர்கள் இப்படிப்பட்ட வாதங்களைச் சொல்லி குர்-ஆனுக்கு நற்பெயரை கொண்டு வர முயற்சி எடுப்பது தவறானதாகும் என்று எனக்கு எழுதியுள்ளார்கள். உதாரணத்திற்கு, அப்துல் ரஹ்மான் லோமக்ஷ் என்ற இஸ்லாமியர், என்னுடைய மேற்கண்ட நான்காவது பாயிண்டை குறிப்பிட்டு, கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

"இந்த காரணங்களால் தான் எங்கள் அறிஞர்கள் பொதுவாக 'குர்-ஆனில் விஞ்ஞானம்' என்ற வாதத்தை மறுக்கிறார்கள்" என்று பின்னுட்டமிட்டு, கடைசியாக, 'மொத்தத்திலே , *Andy is right.*' என்று முடித்தார்.

கடைசியாக, "soc.religion.islam" என்ற தளத்தில் நடந்த விவாதத்தை படிக்க விரும்புகிறவர்கள், கீழ்கண்ட தொடுப்புக்களில் அவைகளை படிக்கலாம்.

The posting from Suleiman that started it all.

My reply to Suleiman and his friend Abujamal (basically the text of this paper).

AbdulraHman Lomax's reply to me.


இந்த கட்டுரையை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.


1) இவ்வகையான வாதத்தை ஆதரிப்பவர்கள், அவ்வசனங்களுக்கு வேறு வகையான பொருள் வருவதை தடுக்கிறார்கள்.
(Those who pursue the argument leave no room for alternative interpretations)

இஸ்லாமியர்களால் பலவகையான அர்த்தங்கள் கொடுக்கும்படியாகவே குர்-ஆனின் வசனங்கள் உள்ளன. இதில் தவறேதும் இல்லை. வேத வசனங்களுக்கு பொருள் கூறுவது சுலபமானதல்ல, மற்றும் வேத வசனங்கள் இறக்கப்பட்ட காலகட்டத்தில் நிலவிய சரித்திர பின்னணியை கருத்தில் கொண்டு இன்று விளக்கம் அளிப்பது என்பது கடினமான ஒன்றாகும். உதாரணத்திற்கு, குர்-ஆனில் வரும் துல் கர்னைன் என்ற ஒரு நபரை எடுத்துக்கொள்வோம். ஸூரா 18ல் வரும் இந்த விசித்திர பயணி யார் என்று இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. யூசுப் அலி போன்றவர்கள் இந்த நபர் "மகா சக்கரவர்த்தி அலேக்சாண்டர்" என்று நம்புகிறார். இதர இஸ்லாமியர்கள் இதனை மறுக்கிறார்கள், மற்றும் இவர் சைரஸ் என்ற அரசராக இருக்கிறார் என்று நம்புகிறார்கள். இந்த விஷயம் பற்றி நல்ல முறையில் விவாதிக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

ஆனால், "குர்-ஆனில் நவீன விஞ்ஞானம்" உண்டு என்று போதிக்கின்ற இஸ்லாமியர்கள் அந்த வசனங்கள் என்ன சொல்கின்றன என்று கவனிப்பதில்லை, அதற்கு பதிலாக தங்கள் சொந்த விரிவுரைகளை கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்கள், வேண்டுமானால் தங்களின் நம்பிக்கையை இவ்விதமாக அழைத்துக்கொள்ளட்டும் அதாவது, "குர்-ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை நிருபிக்க, குர்-ஆனில் நவீன விஞ்ஞானம் உண்டு என்று விளக்கமளிக்கும் நம்பிக்கை" ("Belief that an interpretation of the Qur'an contains modern science demonstrates that it is from Allah."). உண்மையில், குர்-ஆனில் எந்த ஒரு வசனத்திலும் உண்மையான விஞ்ஞானம் இல்லை (மேலும் அறிய இக்கட்டுரையின் இரண்டாவது பாயிண்டை படிக்கவும்).

இணைய தளத்தில் "soc.religion.islam" என்ற குழுவில், இந்த விஞ்ஞானம் பற்றிய விவாதம் ஸூரா 25:53 வசனத்திலிருந்து ஆரம்பித்தது. இந்த வசனத்தை ஒருமுறை படிக்கவும்:

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.

"It is He Who has let free the two bodies of flowing water: One palatable and sweet, and the other salt and bitter; yet has He made a barrier between them, a partition that is forbidden to be passed." (Sura 25:53; Yusuf Ali)

நான் விவாதம் புரிந்த இஸ்லாமியரின் வாதம் கீழ்கண்ட விதமாக இருந்தது(மேலும் அனேகர் அவரோடு சேர்ந்து விவாதித்தனர்):

மேற்கண்ட குர்-ஆன் வசனமானது, பெரிய ஆறுகள், சமுந்திரங்களோடு அல்லது கடல்களோடு கலப்பதைப் பற்றி தெளிவாக பேசுகிறது. அதாவது சில நேரங்களில் சில ஆறுகள் கடலோடு கலந்து பல மைல்கள் செல்லும், அப்படி செல்லும் போது, அது கடலின் உப்பு நீரோடு கலந்துவிடாமல் சுத்த நீராகவே கடந்துச் செல்லும். தற்கால விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். ஏன் இப்படி சுத்தமான நீர் உப்பு நீரோடு கலக்கவில்லை என்ற காரணத்தையும், மறுப்பிற்கு இடமில்லாத வகையில் குர்-ஆன் தெளிவாக விவரிக்கிறது. தற்கால விஞ்ஞான முறையில் கூறவேண்டுமானால், இவ்விரு தண்ணீர்களுக்கும் இடையில் இருக்கும் ஈர்ப்பு சக்தியினால் இப்படி நடக்கிறது என்று நவீன விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். (Suleiman, in thread "Scientific facts and Qur'an", soc.religion.islam, 4-Nov-99; online source)

எனினும், இந்த வசனத்தை பல ஆங்கில மொழியாக்கங்களில் படித்தால், இந்த வசனம் நதிகள் பற்றி பேசவில்லை, அதற்கு பதிலாக தண்ணீர்கள் இருக்கும் இடங்களைப் பற்றி பேசுகிறது என்பதை காணலாம், இதனை அரபி மொழியில் படித்து சரி பார்த்துக்கொள்ளலாம் (இந்த விஷயத்தில் எனக்கு ஒரு இஸ்லாமியர் உதவி செய்தார்).

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (முஹம்மது ஜான் தமிழாக்க வசனம்)

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.(பீஜே தமிழாக்கம்)

YUSUFALI: It is He Who has let free the two bodies of flowing water: One palatable and sweet, and the other salt and bitter; yet has He made a barrier between them, a partition that is forbidden to be passed.

PICKTHAL: And He it is Who hath given independence to the two seas (though they meet); one palatable, sweet, and the other saltish, bitter; and hath set a bar and a forbidding ban between them.

SHAKIR: And He it is Who has made two seas to flow freely, the one sweet that subdues thirst by its sweetness, and the other salt that burns by its saltness; and between the two He has made a barrier and inviolable obstruction.

இப்போது, குர்-ஆனில் நவீன விஞ்ஞானத்தை நுழைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், இந்த வசனத்தில் காணப்படும் தண்ணீர் நிலைகள் இரண்டும், கடல்கள் அல்ல அவற்றில் ஒன்று "நதி (அ) ஆறு" என்று கூறுகிறார்கள். ஆனால், மூல மொழியாகிய அரபி மொழி இவர்களைப்போல வேறுபடுத்தி கூறவில்லை. இந்த விவரம் இந்த விவாதத்திற்கு முக்கியமான ஒன்றா? குர்-ஆனில் நவீன விஞ்ஞானத்தை நுழைக்க விரும்பும் சுலைமான் போன்றவர்கள் இந்த இரண்டு நீர் நிலைகள் என்பதில், ஒன்று நதியாக உள்ளது (நல்லத் தண்ணீர்), மற்றோன்று கடலாக இருக்கிறது (உப்புத் தண்ணீர்) என வாதிக்கிறார்கள் . அதன் பிறகு இந்த நல்லத் தண்ணீர் ஓடும் நதி அப்படியே கடலில் கலக்கும், அப்படி கலந்த பின்னரும் அது அதன் சுவையை இழக்காது என்ற ஒரு கோட்பாட்டை நுழைக்கிறார்கள். இப்போது நான் சொல்வது சரியா, அல்லது சுலைமான் சொல்வது சரியா என்பதை பக்கத்தில் வைத்து, இதை விட முக்கியமான ஒரு அடிப்படை பிரச்சனையை காண்போம். அரபி மொழியானது இந்த வசனத்தில் குறிப்பிட்டு இருப்பது 'நதியை' அல்ல என்று நிருபனமாகிவிட்டால், அதன் பிறகு இந்த வசனத்தின் விளக்கம் மிகவும் சுலபமானதாகிவிடும்.

1 • இந்த வசனத்தின் படி, முதலாவது நீர் நிலை 'கடல்' (அ) 'பஹர்' (அரபியில்) என்பது செங்கடலைக் குறிக்கும். முஹம்மதுவிற்கு தெரிந்து இருந்த மற்றும் மக்கா மதினாவிற்கு அருகில் இருக்கும் உப்பு நீர் கடலாகும்.

The first "sea" or "body of water" or "bahr" (in Arabic) in question is the Red Sea (close to Mecca and Medina) and known to Muhammad, which is salt water.
2 • இவ்வசனத்தில் வரும் இரண்டாவது 'கடல்' (அ) 'பஹ்ர்' (அரபியில்) என்பது பாலைவனத்தில் ஆங்காங்கே காணப்படும் சுத்தமான நீர் கிடைக்கும் பாலைவன நீரோடை போன்ற நீர் நிலையாக இருக்கலாம்.

The second "sea" or "body of water" or "bahr" in question could be any local sheet of fresh water (plenty of oases to choose from).
3 • இந்த இரண்டு நீர் நிலைகளுக்கும் இடையே இருக்கும் மீறமுடியாத ஒரு தடை 'இவ்விரண்டுக்கும் இடையே இருக்கும் நிலமாகும்'.

These two "seas" or "bodies of water" or "bahr" are separated by land; this is the impassable barrier.
4 • ஆக, ஸூரா 25:53 காணப்படும் விவரம் என்னவென்றால், நல்ல தண்ணீர் மற்றும் உப்புத்தண்ணீருக்கும் இடையே அல்லாஹ் மீறமுடியாத தடையாக நிலப்பரப்பை வைத்தார், இது ஒரு அற்புதம் என்று முஹம்மது நினைத்ததால், அதைப் பற்றி இவ்வசனத்தில் தன் கருத்தைக் கூறுகிறார்.

Hence Sura 25:53 was actually a comment by Muhammad on the wondrous miracle (as he saw it), that Allah has seen fit to separate fresh and salt water.

சுலைமான் அவர்கள் மற்றும் இவரைப்போல கூறுபவர்களாகிய மற்றவர்கள் கூறும் நவீன விஞ்ஞான விளக்கத்தை விட, இந்த மேற்கண்ட விளக்கம் அனேக நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. இப்போது அந்த நனமைகள் என்னவென்று காண்போம்:

i சுலைமானின் கூற்றுப்படி 'முஹம்மது நதிகளையோ/ஆறுகளையோ கண்டுயிருக்க வாய்ப்பு இல்லை, ஏனென்றால், அவர் நதிகள் மற்றும் கடல்களுக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பாலைவன பகுதியில் வாழ்ந்தார். இது தான் சுலைமான் அவர்கள் நவம்பர் 4ம் 1999ல் கூறிய கூற்று. சுலைமான் அவர்களின் இந்த கூற்று உண்மையாக இருந்திருக்குமானால், நான் மேலே சொன்ன விவரம் தான் சரியான விளக்கமாக அமையும், ஏனென்றால், நல்லத் தண்ணீர் மற்றும் உப்புத் தண்ணீர் ஒன்றாக கலக்க வாய்ப்பு இல்லை, இதைப் பற்றிய சிந்தை முஹம்மதுவின் மனதிலே வந்திருக்காது.
ii இதன் பொருள் என்னவென்றால், ஸூரா 25:53ம் வசனம் இரண்டு காலங்களுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும், அதாவது அவ்வசனம் எழுதப்பட்ட காலமாகிய கி.பி. 7ம் நூற்றாண்டு, மற்றும் 21ம் நூற்றாண்டாகிய இன்று, இந்த இரண்டு காலக்கட்டத்திற்கு ஏற்ற பொருளை இவ்வசனம் கொண்டுள்ளது என்று அர்த்தம். இவ்வசனத்தை 7ம் நூற்றாண்டில் படித்த இஸ்லாமியர்கள், இவ்வசனத்தில் முதலாவது பொருளுக்காக, இறைவனை துதித்து இன்று இஸ்லாமியர்கள் மகிழ்வது போல அன்று மகிழ்ந்திருப்பார்கள். இந்த வசனத்தின் இரண்டாவது பொருளை இன்று இஸ்லாமியர்கள் நம்மிடம் விஞ்ஞானம் என்று கூறுகிறார்கள், இதன்படி பார்த்தால், இந்த வசனம் கடந்த 1300 ஆண்டுகளாக பொருளற்ற ஒன்றாக இருந்தது என்று அர்த்தமாகிறது. தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் இஸ்லாமியர்கள் இவ்வசனத்திற்கு பொருளை இன்று கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது, அல்லாஹ் இறக்கிய வசனத்தின் இரண்டாவது பொருள் கிடைக்க 1300 அதிகமான ஆண்டுகள் ஆனது, அதுவரை பொருளற்ற வசனமாக இது இருந்துள்ளது. ஆக, குர்-ஆன் எல்லா காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற ஒன்றல்ல என்று நிருபனமாகிறது.
iii முஹம்மது ஏன் ஸூரா 25:53ஐ அறிவித்தார் என்பதை நான் கொடுத்த விளக்கம் தெளிவாக விளக்குகிறது. நதிகள், கடல்கள் மற்றும் இவ்விரண்டும் ஒன்று சேறுதல், அல்லது தனித்து இருத்தல் போன்றவற்றை அறியாத முஹம்மதுவிற்கு நல்ல தண்ணீரின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. கடல்களில் இருக்கும் உப்புத் தண்ணீரையும், மனிதர்கள் குடிப்பதற்கு நல்லத் தண்ணீரையும் அல்லாஹ் வெவ்வேறு இடங்களில் வைத்து, ஒரு சரியான காரியம் செய்து இருப்பதினால், இந்த முக்கியமான விவரத்தை குர்-ஆனில் முஹம்மது அறிவித்து இருக்கிறார்.

"நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற வாதத்தை ஆதரிப்பதற்காக ஸூரா 25:53 ஐ பயன்படுத்திக்கொண்டால், மேலே கண்ட பிந்தைய விளக்கத்தை உதறித்தள்ளவேண்டி வரும். இந்த வசனத்தில் அற்புதம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்லும் "வாதத்தைத் தவிர" வேறு எந்த உண்மையும் இவ்வசனத்தில் காணப்படுவதில்லை. (இங்கு கவனிக்கவும், சுலைமான் அவர்களின் விளக்கம் "குர்-ஆனில் விஞ்ஞானம் உள்ளது" என்பதை நிருபிக்கவில்லை, அதற்கு பதிலாக, குர்-ஆனின் அந்த வசனத்தில் விஞ்ஞானம் உண்டு என்று "இவரது விளக்கம் தனிப்பட்ட முறையில் கூறுகிறது" அவ்வளவு தான்.)

2) இந்த வாதம் அல்லாஹ்வை பலவீனமானவராக சித்தரிக்கிறது.
(The argument as it stands makes Allah out to be weak)

உண்மையாகவே விஞ்ஞானத்தைக் கொண்டு குர்-ஆனை நிருபிக்க அல்லாஹ் விரும்பி இருந்தால், ஏன் இவர் அதனை சுலபமான முறையில் தெளிவாக விளக்கியிருக்கக்கூடாது. இப்படி செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் ஏன் இப்படிப்பட்ட வாதங்களை சொல்கிற இஸ்லாமியர்களின் "தீவிர ஆழ்ந்த விளக்கங்கள்" மேல் ஆதாரப்பட்டு வசனங்களை இறக்கவேண்டும், நேரடியாகவே தெளிவாக வசனத்தை இறக்கியிருக்கலாமே, எந்த ஒரு பிரச்சனையும், குழப்பமும் இல்லாமல் எல்லாரும் அங்கீகரித்து இருப்பார்களே. ஒரு எடுத்துக்காட்டுக்காக சொல்லவேண்டுமென்றால், தொலைக்காட்சியை பற்றி ஏன் அல்லாஹ் கீழ்கண்ட வசனத்தை போன்றதொரு வசனத்தை இறக்கக்கூடாது:

"முஹம்மதுவே கூறுவீராக, 'ஒரு சிறிய பெட்டியில் அசையும் படங்களை மக்கள் தங்கள் அறையில் உட்கார்ந்துக்கொண்டே பார்ப்பார்கள்' "

நிலவில் மனிதன் கால் வைப்பான் என்பதைப் பற்றிய ஒரு உதாரணம்:

"முஹம்மதுவே கூறுவீராக, இதோ, மனிதர்கள் நிலவின் மேற்பரப்பில் நடப்பார்கள், மற்றும் அங்கே ஒரு கொடியையும் நாட்டிவைப்பார்கள் ".

மேற்கண்ட வசனங்களை கவனித்தீர்களா? அல்லாஹ் இப்படி வசனங்களை இறக்கியிருந்தால், எந்த ஒரு பிரச்சனையும் யாருக்குமே இருக்காது, தெளிவாக விஷயங்கள் புரிந்துயிருக்கும். ஆனால் இப்போது குர்-ஆனின் நிலை இருப்பது போல இருந்திருக்காது. தற்போது குர்-ஆனின் நிலை எப்படி உள்ளது தெரியுமா?

அ) குர்-ஆனின் அற்புத வசனங்கள் பற்றிய விரிவுரைகள் மிகவும் குழப்பமாகவும், தெளிவற்றவையாகவும் காணப்படுகிறது.

ஆ) விஞ்ஞானத்தை குர்-ஆனில் புகுத்தவேண்டும் என்று வாதிப்பவர்கள், தங்களுடைய விளக்கம் தான் சரியான விளக்கம் மற்றவர்களின் விளக்கம் சரியானதல்ல என்று சொல்லும் நிலையில் இருக்கிறார்கள். (இப்படி சொல்லும் இஸ்லாமியர்கள், கடந்த 1000 ஆண்டுகளுக்கு மேல் இருந்துவந்த இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வசனங்களுக்கு என்ன விளக்கம் கொடுத்தார்கள், அவர்கள் அதனை எப்படி புரிந்துக்கொண்டார்கள், போன்றவற்றை புறக்கணித்துவிடுகிறார்கள்).

குர்-ஆன் வேறு இடங்களில் சில விவரங்கள் பற்றி பேசும் போது, மிகவும் தெள்ளத் தெளிவாக கூறுகிறது, உதாரணத்திற்கு ஸூரா 2:255ஐ பார்க்கவும்:

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;

மேற்கண்ட வசனம் "அல்லாஹ் ஒருவரே, அவர் ஜீவித்து இருப்பவர், நிலைத்திருப்பவர்" என்று தெளிவாகச் சொல்கிறது, இதைப் பற்றி யாரும் குறுக்கு கேள்வி கேட்கமாட்டார்கள். குர்-ஆனில் விஞ்ஞான அற்புதம் இருக்குமானால், குர்-ஆனின் தெய்வீகத்தை நிருபிக்க இஸ்லாமியர்களுக்கு இது மிகவும் உபயோகமான ஒரு சான்றாகும். அப்படி இருக்கும் போது அந்த வசனங்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டுமல்லவா? இவ்வசனங்கள் அப்படி இல்லாமல், புதைக்கப்பட்ட வசனங்களாக இருக்கின்றன, அவைகளிலுள்ள விஞ்ஞானத்தை காட்ட மிகபெரிய அறிவு படைத்தவர்களின் விரிவுரை தேவைப்படுகிறது, இது சரியானதா? உண்மையாகவே அல்லாஹ் குர்-ஆனில் விஞ்ஞானத்தை காட்டவேண்டும் என்று விரும்பியிருந்தால், அவர் அதனை எல்லாருக்கும் புரியும் வண்ணம் மிகவும் தெளிவான வசனங்களைக் கொண்டு விளக்கியிருக்கவேண்டும், ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. ஆகையால், குர்-ஆனில் விஞ்ஞானம் இல்லை, ஆனால், சில இஸ்லாமியர்கள் விஞ்ஞானம் இருப்பதாக விரிவுரை கொடுக்கிறார்கள் அவ்வளவு தான்.

3) இந்த 'புதிய விஞ்ஞானம்' தற்கால இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்களாகும்.
(The argument is a modern polemic)

'நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுகிறது எனவே குர்-ஆன் இறைவேதம் என நிருபிக்கப்படுகிறது' என்ற இஸ்லாமியர்களின் வாதமானது, தற்காலத்தில் வாழும் இஸ்லாமிய அறிஞர்களின் கண்டுபிடிப்பாகும், இது தான் எனக்கு சுவாரசியமான விஷயமாக உள்ளது. இப்படிப்பட்ட வாதங்களை 500 ஆண்டுகளுக்கு முன்பு எந்த இஸ்லாமிய அறிஞராவது முன்வைத்ததாக உங்களில் யாராவது கண்டுபிடிக்கமுடியுமா? அல்லது குறைந்த பட்சம் 200 ஆண்டுகளுக்கு முன்பாவது இப்படி யாராவது வாதங்களை முன்வைத்துள்ளார்களா? கடைசியாக 100 ஆண்டுகளுக்கு முன்பாவது யாராவது கூறியுள்ளார்களா? இதற்கு பதில் "இல்லை" என்பதாகும், ஏனென்றால், தற்கால இஸ்லாமியர்களின் கைவரிசை தான் இந்த புதிய விஞ்ஞான வாதங்கள். உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி, விஞ்ஞானம் என்பது தற்காலத்தில் தோன்றியதில்லை, ஆனால், இஸ்லாமியர்களின் இந்த வாதங்கள் மட்டும் தற்காலத்தில் தோண்றியது தான். ஏன் இப்படி? என்று கேள்வி நமக்கு எழலாம். இதற்கு காரணம் என்னவென்றால், சமீப காலமாக மக்கள் குர்-ஆன் சொல்வதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, மக்கள் குர்-ஆனை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள். ஆகையால், குர்-ஆன் என்பது "தெய்வீகமானது, அதனை இறைவன் எழுதினான்" என்று நிருபிக்க முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, விஞ்ஞானத்திலிருந்து ஆதாரங்களையும், மேற்கத்திய அறிஞர்களின் விளக்கங்களையும் உள்ளுக்குள் சேர்த்து மக்களை நம்பவைக்கலாம் என்று இஸ்லாமியர்கள் முயற்சி எடுக்கிறார்கள், அதாவது வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், மேற்கத்திய மக்களை நோக்கி, இஸ்லாமை இஸ்லாமியர்கள் நகர்த்த முயற்சி எடுக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட நவீன விஞ்ஞானம் பற்றிய வாதங்களை புதிதாக இஸ்லாமியர்கள் உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் இது தான்: "நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற வாதம் தற்கால இஸ்லாமிய அறிஞர்களுடையதாகும், மேலும் இப்படிப்பட்ட வாதம் இன்னொரு பிரச்சனையை குர்-ஆனுக்கு உருவாக்கிவிடும். அது என்னவென்றால், இந்த அறிஞர்கள் சிறிது எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அது "குர்-ஆனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சம்மந்தப்பட்டது" என்ற கருத்தை நிலைநாட்டுவதாக ஆகிவிடும். இங்கு கவனிக்கவும், குர்-ஆனில் விஞ்ஞானத்தை வைக்கவேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால், இன்றிலிருந்து இன்னும் 100 ஆண்டுகள் வரை இஸ்லாமியர்கள் மேலும் அனேக விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அதிகமாக குர்-ஆனில் கண்டுபிடிப்பார்கள். பொதுவாக விஞ்ஞானம் இன்னும் வளர்ந்துக்கொண்டே செல்லும். அப்படியானால், இவைகளை கருத்தில் கொண்டு கீழ்கண்ட விவரங்களை படியுங்கள்:

• ஏறக்குறைய குர்-ஆனில் 6400 வசனங்கள் இருக்கின்றன.

• The Qur'an consists of approximately 6,400 verses.
• ஒரு வாதத்திற்காக குர்-ஆனில் உள்ள மொத்த வசனங்களில் 10% வசனங்களில் விஞ்ஞானம் இருப்பதாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

• Let us assume, for the sake of argument, that 10% of these can be cleverly interpreted so that they appear to contain "science".
• அப்படியானால், 640 வசனங்கள் விஞ்ஞான வசனங்களாக இப்போது நம்முடைய ஆய்விற்குள் அடங்கும்.

• Therefore we have 640 verses for our source material.

"நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற வாதம் கடந்த 30 ஆண்டுகளாக மிகவும் புகழ்பெற்ற விஷயமாக இஸ்லாமியர்கள் மத்தியிலே காணப்படுகிறது. இஸ்லாமியர்களால் அனேக வசனங்கள் இதற்காக மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 20 புதிய வசனங்களில் விஞ்ஞானம் காணப்படுகிறது என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவென்றால், கடந்த முப்பது ஆண்டுகளாக இஸ்லாமியர்களால் கிட்டத்தட்ட 90% சதவிகித வசனங்களில் விஞ்ஞானம் உண்டு என்று காட்டப்பட்டாகிவிட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் மீதமுள்ள வசனங்களில் விஞ்ஞானத்தை இஸ்லாமியர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதன் பிறகு குர்-ஆனில் விஞ்ஞான வசனங்கள் ஒன்றும் மீதமிருக்காது. இதன் பொருள் என்னவென்று உங்களுக்கு புரிகின்றதா? அதாவது, கி,பி. 700 லிருந்து கி.பி. 2010 ஆண்டுகள் வரையுள்ள இடைவெளியில், கடந்த 30 அல்லது 40 ஆண்டுகளாகத் தான் இஸ்லாமியர்கள் நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் உண்டு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்(1970 லிருந்து 2010 வரை). ஆனால், இதன் பிறகு விஞ்ஞான வசனங்கள் தீர்ந்துவிடுமே, அதைப் பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்வதில்லையே. இது நமக்கு எதைக் காட்டுகிறது? "நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற தற்கால இஸ்லாமிய அறிஞர்களின் வாதம் வெறும் சில ஆண்டுகள் மட்டுமே நிலைநிற்கக்கூடிய விஷயமாகும், ஏனென்றால், இன்னும் சில ஆண்டுகளில் விஞ்ஞான வசனங்களை அனைத்தும் தீர்ந்துவிடும், அதன் பிறகு வரும் விஞ்ஞானத்தை வெளிக்காட்ட குர்-ஆன் வசனங்கள் இருக்காது.

4) முடிவாக, "குர்-ஆனை நிருபிக்கும் நவீன விஞ்ஞானம்" என்ற வாதம், குர்-ஆனில் விஞ்ஞானத்தை காணாமல் தடுமாறுகிறது. மேலும் விஞ்ஞானமே குர்-ஆனை குற்றப்படுத்துகிறது.
(At the end of the day, the "modern science proves the Qur'an" polemic does not find science in the Qur'an, rather it uses science to judge the Qur'an)

இந்த விவரத்தை மிகவும் அழகாக ஸூரா 18:86 விளக்குகிறது, இதனை "soc.religion.islam" என்ற தளத்தில் நடந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த வசனத்தை ஒரு முறை பார்ப்போமா?

"Until, when he reached the setting of the sun, he found it set in a spring of murky water: Near it he found a People: We said: "O Zul-qarnain! (thou hast authority,) either to punish them, or to treat them with kindness."" (Yusuf Ali)

சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார் ; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; "துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்" என்று நாம் கூறினோம் (முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு).

சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் கண்டார். அங்கே ஒரு சமுதாயத்தைக் கண்டார். "துல்கர்னைனே! அவர்களை நீர் தண்டிக்கலாம்; அல்லது அவர்களிடமிருந்து அழகிய முறையில் (வரியை) பெற்றுக்கொள்ளலாம்" என்று கூறினோம் (பீஜே தமிழாக்கம்)

இப்போது இஸ்லாமியர்களிடம் 'இந்த வசனத்தில் விஞ்ஞானம் இருக்கிறதா?' என்று கேட்டுப்பாருங்கள், நிச்சயமாக இல்லை என்று அடம்பிடிப்பார்கள். ஏன்? ஏனென்றுச் சொன்னால், இந்த 21ம் நூற்றாண்டில், நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்னவென்றால், சூரியன் சேறு கலந்த நீரில் அஸ்தமிப்பது இல்லை மற்றும் சூரியன் அஸ்தமிக்கும் இடத்திற்கு எந்த ஒரு மனிதனும் செல்லமுடியாது. காரணமென்ன? உண்மையாக சூரியன் சேறு கலந்த தண்ணீரிலோ, ஏரியிலோ அல்லது இதர தண்ணீர் அமைந்துள்ள இடங்களிலோ அஸ்தமிப்பதில்லை, இதை அனைவரும் அறிந்துள்ளோம். இது தான் விஷயம் அதனால், எந்த முஸ்லிமும் இந்த வசனத்தில் நவீன விஞ்ஞானம் உண்டு என்று சொல்லமாட்டார். சரி, இதனை சரி செய்ய இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளுங்கள். அதாவது குர்-ஆனின் எந்தெந்த வசனங்களை நவீன விஞ்ஞானம் குற்றப்படுத்துமோ, அப்போது முஸ்லிம்கள் இந்த வசனம் ஒரு உவமையாக அல்லது உவமேயமாக சொல்லப்பட்டது என்று கூறி விடுவார்கள். உதாரணத்திற்கு:

• ஸூரா 18:86 = சூரியன் அஸ்தமிப்பது பற்றி பேசுகிறது = விஞ்ஞானத்தின்படி இது அடிமட்ட குர்-ஆனின் தவறாகும் = ஆகையால், இஸ்லாமியர்கள் இவ்வசனத்தில் வரும் விவரம் உவமை அல்லது உவமேயம் என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.

• Sura 18:86 = talks about someone finding the sunset = scientific nonsense = therefore it is claimed to be speaking metaphorically!
• ஸூரா 25:53 (உதாரணத்திற்கு) = இரண்டு தண்ணீர் நிலைகள் பற்றி பேசுகிறது, ஒரு நல்லத்தண்ணீர், மற்றொன்று உப்புத் தண்ணீர் = இது விஞ்ஞானத்திற்கு முரண்படவில்லை = ஆகையால், இஸ்லாமியர்கள் இந்த வசனம் விஞ்ஞானம் பற்றி கூறுகிறது என்று வாதிப்பார்கள்.

• Sura 25:53 (for example) = talks about two separate bodies of water, one salt one fresh = does not contradict science = therefore is claimed to be scientific

முஸ்லிம்களின் மேற்கண்ட வாதங்களில் உள்ள பிரச்சனை உங்களுக்கு தெரிகிறதா? குர்-ஆன் என்பது இறைவனின் வார்த்தை என்றும், அதில் மனிதர்களுக்கு வழிகாட்டுதல் உண்டு என்றும் இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். ஆனால், யார் குர்-ஆனில் நவீன விஞ்ஞானம் உண்டு என்று வாதிக்கிறார்களோ, அவர்கள் இஸ்லாமின் இந்த அடிப்படை சட்டத்திற்கு முரண்பட்டு செயல்படுகிறார்கள். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்கள் விஞ்ஞானத்தில் இருக்கும் உண்மையை அங்கீகரிக்கவேண்டுமே ஒழிய, குர்-ஆனையல்ல. மேலும் விஞ்ஞானத்தின் அடிப்படையில் குர்-ஆனை பரிசோதிக்கவேண்டும், சரிபார்க்கவேண்டும்.

5) தெரிவு செய்து விளக்கம் அளித்தால், எதை வேண்டுமானாலும் நிருபித்து விடலாம்.
(Selective interpretation can be used to prove anything)

நான் மேற்கண்ட நான்காவது குறிப்பில் சொன்னது போல, இஸ்லாமியர்கள் "நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற வாதத்திற்காக, தங்களுடைய வாதத்திற்கு ஏற்றாற்போல வசனங்களை தெரிவு செய்துக்கொண்டு, அவைகளுக்கு தங்கள் விருப்பப்படி விளக்கம் தருகிறார்கள், ஆனால், தங்கள் குர்-ஆனுக்கு பிரச்சனை உண்டாக்கும் வசனங்களை அப்படியே மறைத்துவிடுகிறார்கள். அதாவது நாம் தெரிவு செய்து விளக்கம் அளிப்பதாக இருந்தால், எல்லாவற்றையும் நிருபிக்கலாம். உதாரணத்திற்கு, நான் ஒரு நபி(தீர்க்கதரிசி)  என்று சொல்லிக்கொண்டு மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் விவரங்கள் எனக்குத் தெரியும் என்று நான் மக்களை நம்பவைக்க நினைக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். நான் இந்த கட்டுரையை எழுதுகிற இந்த சமயத்தில், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளுக்கிடையில் கால்பந்து போட்டிகள் நடக்கவிருக்கின்றன, அதாவது நவம்பர் 14, 1999 அன்று இப்போட்டிகள் நடக்கவுள்ளன. போட்டிகள் நடப்பதற்கு முன்பாக நான் கீழ்கண்ட மூன்று விவரங்களை கூறுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்:

1) இங்கிலாந்து இப்போட்டிகளில் வெற்றிப்பெறும்

2) ஸ்காட்லாந்து இப்போட்டிகளில் வெற்றிப்பெறும்

3) இந்த போட்டிகள், வெற்றி தோல்வியின்றி 'ட்ராவில்' முடியும்


ஒரு வேளை போட்டிகள் முடிந்த பிறகு, அதில் இங்கிலாந்து 2-0 என்ற விகிதத்தில் வெற்றிப்பெற்றதாக நினைத்துக்கொள்வோம். இப்போது நான் கீழ்கண்டவாறு கூறுகிறேன்: "நான் போட்டிகளுக்கு முன்பாக சொன்ன விவரங்களில் 2 மற்றும் 3ம் விவரங்களை ஒரு உவமையாகச் சொன்னேன். ஆனால், விவரம் 1ல் நான் உவமையில்லாமல் நேரடியாகச் சொன்னேன், பாருங்கள், நான் சொன்னபடி, இங்கிலாந்து வெற்றிப்பெற்றது, ஆகையால் நான் ஒரு நபி".

என்னுடைய மேற்கண்ட வாதத்தில் உள்ள பிழையை கண்டுபிடிப்பதற்கு ஒருவன் மிகப்பெரிய ஞானியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. யாரெல்லாம் 'நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கும்' என்று வாதம் புரிகிறார்களோ, அவர்கள் நான் மேலே சொன்ன தீர்க்கதரிசியின் விளக்கம் போலவே நடந்துக்கொள்கிறார்கள், இவர்களும் அதே போல காரணங்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். குர்-ஆனின் அனேக வசனங்கள் விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது என்று நாம் அவர்களிடம் கூறும்போது (பொதுவாக நான் ஸூரா 18:86ஐ குறிப்பிடுவேன்), இஸ்லாமியர்கள் "இல்லை இல்லை, இது ஒரு உவமை, அல்லது கதை, அல்லது உவமேயம்" என்று அனேக காரணங்களைச் சொல்லி நழுவிவிடுகிறார்கள். குர்-ஆனின் வசனங்களை சரியான நேர்மையான முறையில் விளக்கம் அளிப்போமானால், அதன் முடிவு, இஸ்லாமியர்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்காது.

6) இந்த வாதம் 'குர்-ஆன் அதிகாரபூர்வமானது அல்ல' என்பதை நிருபிக்கிறது.
(Applying the argument means that the Qur'an is no longer authoritative)

இவ்வளவு விவரங்களை கண்ட பிறகும், இஸ்லாமியர்கள் 'நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது' என்றும், இது மிகப்பெரிய அற்புதமென்றும் கூறுவார்களானால், அவர்களுக்கு இது மேலும் அதிக பாரமாக பிரச்சனையாக மாறுகிறது, எப்படி என்பதை இப்போது காண்போம். அவர்களின் வாதமே குர்-ஆன் அதிகாரபூர்வமற்றது என்பதை நிருபிக்கும். ஒரு பேச்சுக்காக ஸூரா 25:53 சமுத்திரங்களைப் பற்றியே பேசுகிறது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இதைப் பற்றி குர்-ஆன் ஒரே இடத்தில் தான் கூறுகிறது. இந்த விவரம் குறித்து (சமுத்திரத்தில் ஆறுகள் கலப்பது குறித்து) முழுவதுமாக நாம் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் குர்-ஆனுக்கு வெளியே செல்லவேண்டும், ஏனென்றால், குர்-ஆன் இதைப் பற்றி அதிகமாக வேறு எதையும் சொல்வதில்லை. இந்த சமுத்திரம் விஷயத்தில் குர்-ஆன் சொல்லும் விவரத்தைக் காட்டிலும், குர்-ஆனுக்கு வெளியே அனேக புத்தகங்கள், பத்திரிக்கைகள், ஆய்வுக் காட்டுரைகள் என்று அனேக விவரங்கள் இருக்கின்றன. இதனால் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: ஒரு விவரம் பற்றி முழுவதுமாக நாம் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் குர்-ஆனுக்கு வெளியே தான் அவைகளை தேடி படித்து தெரிந்துக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தால், ஏன் நாம் இதர விவரங்களையும் குர்-ஆனுக்கு வெளியே படித்து தெரிந்துக்கொள்ளக்கூடாது? விஷயம் இப்படி இருக்கும்போது, மனித வாழ்விற்கு தேவையான அனைத்தும் குர்-ஆனில் இருக்கிறது என்று எப்படி இஸ்லாமியர்கள் கூறமுடியும்? குர்-ஆனில் முழு வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை, நாம் அதற்கு வெளியே அவைகளை படித்து தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. இறைவன் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளவேண்டிய அனைத்தும் (அ) நாம் எப்படி வாழவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார் போன்ற விஷயங்களை குர்-ஆன் முழுவதுமாக போதிக்கிறது என்று எப்படி இஸ்லாமியர்கள் அவ்வளவு உறுதியாக கூறமுடியும்? குர்-ஆனில் சொல்லப்படும் ஒரு சில வரிகளை படித்து முழுவதும் தெரிந்துக்கொள்ள முடியாது, குர்-ஆனுக்கு வெளியே சென்று படித்தால் தான் முழு விவரமும் தெரியவரும்.

ஆக, 'நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கும்' என்ற வாதம் குர்-ஆனின் நம்பகத்தன்மையை, அதிகாரத்தை முழுவதுமாக அழித்துவிடுகிறது.

முடிவுரை:

ஒரு வாதத்தை நாம் முன் வைக்கும்போது அதற்கு எதிர் தரப்பு கேள்விகள் வரக்கூடாது என்று நாம் நினைக்க முடியாது. நாம் எந்த நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அவ்வாதத்தை வைக்கிறோமோ அந்த நிலைப்பாட்டிற்கு ஏற்ற எதிர்விணைகள் அல்லது கேள்விகள் நிச்சயம் கிடைக்கும். இந்த நிலை இஸ்லாமியர்களின் 'நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கும்' என்ற வாதத்திற்கும் பொருந்தும். குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்று சொல்லும் விவரங்களை கேட்டு சராசரி முஸ்லிம்கள் அதிகமாக மகிழுவார்கள். தாங்கள் நம்பும் குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்றுச் சொல்லி பெருமிதம் கொள்வார்கள். ஆனால், இந்த வாதத்தை ஒரு இஸ்லாமிய அறிஞர் விவாதத்திற்கு முன் வைப்பாரானால், அதனால், அனேக தத்துவ ரீதியான பிரச்சனைகளை அவர் எதிர்கொள்வார், இந்த வாதத்தினால் அல்லாஹ்வின் நிலை கேவலப்படுத்தப்படும், குர்-ஆனின் தரத்தை விட விஞ்ஞானத்தின் தரம் உயர்ந்து காணப்படும் படி ஆகிவிடும், கடைசியாக நாம் இந்த கட்டுரையில் கண்டது போல, குர்-ஆனின் நம்பகத்தன்மையை, அதிகாரத்தை முழுவதுமாக இப்படிப்பட்ட வாதங்கள் அழித்துவிடும். இஸ்லாமிய விவாதம் புரிபவர்களுக்கு இந்த விஞ்ஞான அற்புதம் பற்றிய வாதம் மிகவும் பலவீனமானதும், ஆபத்தானதுமாகும். ஆகையால், இந்த வாதத்தை இஸ்லாமியர்கள் தவிர்த்தால் அவர்களுக்கு நன்மை விளையும்.

ஆங்கில மூலம்: Can "Modern Science" be found in the Qur'an? - A general rebuttal of this Muslim polemic by Andy Bannister

ஆண்டி பானிஸ்டர் அவர்களின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
 
 
 

0 comments: