அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 29, 2012

ரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா?



ரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா?


[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 ]

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ ஒரு அருமையான கடிதத்தை எழுதியிருந்தாய்பைபிளின் வசனங்களைமேற்கோள் காட்டி கடிதம் எழுதினாய்அதற்காக மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என்னுடைய முதல் கடித்தத்தில் நான் முன்வைத்த விவரத்திற்கு நீ பதிலைஎழுதினாய்அதாவது இஸ்லாமியர்களின் நோன்பு என்பது ஏதோ பழங்குடிமக்களின் சடங்காச்சரமல்லஅது இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த மக்களின்வழக்கமல்லஅது இயேசு பின்பற்றிய நோன்புயூதர்கள் பின்பற்றிய நோன்புஎன்றுச் சொல்லி பதில் எழுதியிருந்தாய்அதற்காககீழ்கண்ட மூன்று பைபிளின்வசனங்களை மேற்கோள் காட்டியிருந்தாய்.

இயேசு 40 நாட்கள் நோன்பு (உபசாவம்இருந்தார்: மத்தேயு 4:2  அவர் இரவும்பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்புஅவருக்குப் பசியுண்டாயிற்று.

இவ்விதமான பிசாசு உபவாசத்திலும்,ஜெபத்தினாலுமே தவிர போகாது –மத்தேயு 17:21 இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றிமற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

நோன்பு இருக்கும் போது மாயக்காரரைப்போல இருக்கவேண்டாம் என்றுஇயேசு கூறிய அறிவுரை: – மத்தேயு  6:16 நீங்கள் உபவாசிக்கும்போது,மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்அவர்கள் உபவாசிக்கிறதைமனுஷர் காணும் பொருட்டாகதங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்அவர்கள்தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17 நீயோ உபவாசிக்கும்போதுஅந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல்,அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாகஉன் தலைக்குஎண்ணெய் பூசிஉன் முகத்தைக் கழுவு.
18 அப்பொழுதுஅந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப்பலனளிப்பார்.

உன்னுடைய பதிலுக்காக மிக்க நன்றிஆனால் மேற்கண்ட வசனங்களை காட்டி நீஎடுத்த முடிவு தவறானதாகும்அதாவது இஸ்லாமிய நோன்பும்பைபிளின்நோன்பும் ஒன்று தான் என்று நீ நினைத்துக்கொண்டாய்மேலோட்டமாகவசனங்களை நாம் பார்த்தால்இரண்டும் ஒன்று போல காட்சி அளிக்கும்ஆனால்,சிறிது ஆய்வு செய்தோமானால் அனேக வித்தியாசங்கள் காணப்படும்நீமேற்கோள் காட்டிய வசனங்களிலிருந்தே உனக்கு நான் சில விவரங்களைவிளக்குகிறேன்.

இஸ்லாமிய நோன்பிற்கும்கிறிஸ்தவ நோன்பிற்கும் இடையே இருக்கும்வித்தியாசங்கள்:

1)       இஸ்லாமிய நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒரு கடமையாகும்.அதை தகுந்த காரணங்கள் இல்லாமல் மீறுவது இஸ்லாமிய சட்டத்தின் படிகுற்றமாகும்ஆனால்கிறிஸ்தவத்தில் நோன்பு (உபவாசம்என்பதுநிச்சயமாக கடைபிடிக்கவேண்டிய கடமையல்லநம்முடைய தேவையைபொருத்து நாம் கடைபிடிக்கலாம். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு ஆபத்து வந்தாலோ, யாராவது மரித்துவிட்டாலோ யூதர்கள் உபவாசம் இருப்பார்கள். யூதர்களுக்கு மோசேயின் மூலமாக ஒரு குறிப்பிட்ட நாளில் உபவாசம் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. 
2)       இஸ்லாமிய நோன்பு என்பது அதிகாலை ஆரம்பித்துசூரியன் அஸ்தமிக்கும்வரை தொடருகிறதுஆனால்கிறிஸ்தவ உபவாசம் என்பது நாள்முழுவதும் தொடரும்இத்தனை மணிக்கு ஆரம்பித்துஇத்தனை மணிக்குமுடிக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லைபழைய மற்றும் புதியஏற்பாட்டில் நாள் முழுவதும் உபவாசம் இருந்ததாக அனேகஎடுத்துக்காட்டுகளை காணலாம். இதுமட்டுமல்லாமல், யூதர்கள் தனிப்பட்ட ஒரு நாள் உபவாசம் இருக்கும் போது, ஒரு நாளின் மாலையில் ஆரம்பித்து மறுநாள் மாலைவரை இருப்பார்கள் (முழூ நாள்).
3)       இஸ்லாமில் வருடத்திற்கு ஒரு முறை ரமளான் மாதத்தில் 30 நாட்கள்நோன்பு இருக்கவேண்டும் என்பது கட்டளைஆனால்கிறிஸ்தவத்திலேவருடத்தின் இந்த குறிப்பிட்ட மாதம் இத்தனை நாட்கள் நோன்புஇருக்கவேண்டும் என்ற கட்டளையில்லைஅவரவருக்கு விருப்பமானநாட்களில்விருப்பமான எண்ணிக்கையில் உபவாசம் இருப்பார்கள்.
4)       இஸ்லாமிய நோன்பில்அதிகாலையில் எழுந்திருந்துசாப்பிடுவார்கள்,கிறிஸ்தவத்திலே இப்படி அதிகாலையில் எழுந்து சாப்பிடும்கட்டளையில்லை.
5)       முக்கியமாகஇஸ்லாமிலே ஒரு குறிப்பிட்ட மாதம் ஒதுக்கி ரமளான்நோன்பு இருப்பதினால்எல்லாருக்கும் இவர் நோன்பு இருக்கிறார் என்பதுதெரியவரும்ஆனால்கிறிஸ்தவத்தில் ஒருவன் உபவாசம் இருக்கிறேன்என்று சொன்னால் தவிர வெளியே தெரிய வழியில்லை.இஸ்லாமியர்களின் ரமளான் நோன்பு மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசுசொன்ன அறிவுரைக்கு எதிராக இருக்கிறதுஅதாவது வெளிப்படையானஒன்றாக இருக்கிறது.
6)       இஸ்லாமிய ரமளான் நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகஇருப்பதினால்ஒருவேளை நோன்பு வைக்கமுடியாதவர்கள் அதற்கானபரிகாரங்கள் செய்யவேண்டும்ஆனால்கிறிஸ்தவ உபவாசத்தில்இப்படிப்பட்ட பரிகாரங்கள் ஒன்றுமில்லை.
7)       ரமளான் மாதம் நோன்பு என்றுச் சொல்கிறீர்களே தவிரமீதமுள்ளமாதங்களில் உணவுக்கு செலவாகும் பணத்தை விட ரமளான் மாதத்தில்அதிகமாக செலவாகும்அதாவது உணவு பணடங்களின் விற்பனையும்இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆகிறதுஏதோஅதிகாலையிலிருந்து மாலைவரை நோன்பு இருக்கிறார்கள்மீதமுள்ள பாதிநாள் நன்றாக சாப்பிடுகிறார்கள்இப்படி பாதி நாள் நன்றாக சாப்பிடுவதைநான் தவறு என்றுச் சொல்லவில்லைஆனால்இப்படிப்பட்ட வழக்கங்கள்கிறிஸ்தவத்தில் இல்லை என்றுச் சொல்கிறேன்அவ்வளவு தான்.
8)      புகாரி ஹதீஸில் "ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தும்  நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவத்தில் உபவாசம் இருப்பதினால் நம்முடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கோட்பாடு இல்லை. (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30,எண் 1901).  இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தர் என்பதை நம்பி, மேற்கொண்டு பாவமில்லாத வாழ்க்கையை வாழ நம்மை ஒப்புக்கொடுப்பதினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இஸ்லாமிய நோன்பிற்குகிறிஸ்தவ உபவாசத்திற்கும் இடையே இருக்கும்வித்தியாசத்தை கண்டாய்ஆனால்இஸ்லாமிய நோன்பிற்கும்சேபியன்கள்என்ற ஜனங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை காண்போமானால்,உனக்கு ஆச்சரியமாக இருக்கும்இந்த சேபியன்கள் ரமளான் மாதத்தில் நோன்புஇருப்பார்கள்காபாவை மதிப்போடு தெய்வீகமாக கருதுவார்கள் மற்றும் தாங்கள்தொழுதுக்கொள்ளும் போது காபாவை நோக்கிய தொழுவார்கள்இவர்களைப்பற்றி குர்-ஆனில் குறிப்பு உண்டுஇவர்களை நம்பிக்கையாளர்களின் பட்டியலில்குர்-ஆன் சேர்த்து பேசுகிறது (குர்-ஆன் 2:62, 5:69 & 22:17  பார்க்க http://answering-islam.org/Silas/pagansources.htm)

தம்பிஇஸ்லாமிய நோன்பும்பைபிளின் நோன்பும் ஒன்றல்லசேபியன்கள்பின்பற்றிய பழக்கங்களைமத சடங்காச்சாரங்களை ஓர் இறைக்கொள்கை என்றுச்சொல்லிக்கொள்கின்ற இஸ்லாமில் முஹம்மது புகுத்தியுள்ளார்.  கிறிஸ்தவமற்றும் யூதர்களை குறிப்பிடும் போது குர்-ஆன் மூன்று இடங்களில்சேபியன்களையும் குறிப்பிடுகிறது.  இஸ்லாம் ஓர் இறைக்கொள்கை என்றுசொல்லிக்கொண்டாலும்அதில் அனேக பல தெய்வ வழிபாட்டு மக்களின்பழங்கங்கள் உள்ளன என்பது திண்ணம். இதுமட்டுமல்ல, அஷூரா நாள் நோன்பு கூட யூதர்கள் கடைபிடிக்கிறார்கள் என்பதால் முஹம்மது  கடைபிடிக்க ஆரம்பித்தார். ரமளான் மாத நோம்பு கடமையாக்கப்பட்டதும் இந்த அஷூரா நோன்பு தளர்த்தப்பட்டது.

தம்பிநீ எழுதிய விவரங்கள் தவறானதாகும்அதாவது இயேசுவின் நோன்பும்,இஸ்லாமிய நோன்பும் ஒன்றல்லபைபிளில் காணப்படும் அனேக விவரங்களை,நிகழ்ச்சிகளை நாம் குர்-ஆனில் காண்பது உண்மை தான்ஆனால் குர்-ஆனில்காணப்படும் தொழுகைமற்றும் நோன்பு போன்ற விவரங்கள் மட்டும்பைபிளிலிருந்து எடுக்கப்பட்டதல்லஅவைகள் இஸ்லாமுக்கு முன்பு இருந்த பலதெய்வ வழிப்பாட்டு மக்கள் பின்பற்றிய பழக்கங்களாகும்.
                
உன்னை அடுத்த கடித்ததில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு
தமிழ் கிறிஸ்தவன்.

Source : http://isakoran.blogspot.in/2012/07/9.html

0 comments: