மக்காவின் பிரச்சனை 4
ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
முன்னுரை: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல என்பதைப் பற்றி தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். முந்தைய கட்டுரைகளை படிக்க சொடுக்கவும்:
இப்போது மக்காவின் நான்காவது புவியியல் பிரச்சனையைக் காண்போம்.
மக்காவின் பிரச்சனை 4
மக்கா பள்ளத்தாக்கில் உள்ளது என்று குர்-ஆனும் ஹதீஸ்களும் தெளிவாக கூறுகின்றன. மேலும், காபாவிற்கு பக்கத்தில் ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே நீரோடை உள்ளது என்றும் சொல்கின்றன. இவைகளை கீழ்கண்ட குர்-ஆன் வசனத்திலும், ஹதீஸ்களிலும் காணலாம்.
1) மக்கா பள்ளத்தாக்கில் உள்ளது
குர்-ஆன் 48:24
அவனே, மக்காவின் பள்ளத்தாக்கில், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்களின் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான். அந்நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்திருந்தான். மேலும், நீங்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)
குர்-ஆன் 14:37
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக் கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!"
புகாரி ஹதீஸ்கள்:
4972. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள 'ஸஃபா' எனும்) அந்த மலை மீதேறி, 'யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். . . . .. Volume :5 Book :65
2731. & 2732. . . .
மேலும், 'குறைஷிகளில், முஸ்லிமாக நபி(ஸல்) அவர்களிடம் வருகிறவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்பி வேண்டாம்)" என்று கூறிவிட்டனர். அப்போதுதான் அல்லாஹ், 'அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்; . . . . Volume :3 Book :54
3364. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
. . . பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அஙகேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப்பள்ளத்தாக்கில் எஙகளை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். . . . . . எஙகள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். . . .Volume :4 Book :60 (மேலும் பார்க்க புகாரி எண் 3365)
2) ஸஃபா, மர்வாவுக்கிடையே நீரோடை உள்ளது:
காபாவிற்கு அருகில் இருக்கும் ஸஃபா மற்றும் மர்வா என்ற இரண்டு மலை(குன்று)களுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது என்று கீழ்கண்ட புகாரி ஹதீஸ்கள் கூறுகின்றன.
நீரோடை பகுதியில் விரைந்து ஓடும் முஹம்மது:
1617. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் முதல் வலம்வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள். Volume :2 Book :25
1644. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், கஅபாவை முதல் வலம்வரும்போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள்; நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும், ஸஃபா - மர்வாவுக்கிடையே வலம்வரும்போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள். . . . . . Volume :2 Book :25
3) குன்றுகளுக்கு மத்தியில் நீரோடை இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
மேலே பார்த்த இரண்டு ஹதீஸ்களை கவனிக்கும் போது, அவைகள் ஒரு வித்தியாசமான வர்ணனையை தருவதை காணமுடியும்.
ஹதீஸ்களை நன்றாக கவனியுங்கள், முஹம்மது அவர்கள்:
- ஸஃபா மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள்
- ஸஃபா மர்வாவுக்கிடையே வலம்வரும்போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள்
அதாவது, ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே ஒரு நீரோடை இருந்திருக்கிறது, இந்த ஓடையின் வழியே மட்டுமே முஹம்மது ஓடுவார் என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ்களில் சொல்லப்பட்ட நீரோடைகள் பற்றிய புவியியல் விவரங்களை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கீழ்கண்ட படங்களை பதித்துள்ளேன்:
4) ஹதீஸ்கள் சொல்லும் வர்ணனை இதுவா? (படம் 1)
ஹதீஸ்களை கவனிக்கும் போது, இரண்டு மலைகளுக்கு மத்தியிலே நீரோடை கீழ்கண்டவாறு ஓடவில்லை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
படம் 1: ஹதீஸ்கள் மேற்கண்ட நீரோடையை கூறவில்லை
பொதுவாக எல்லா இடங்களிலும் இரண்டு மலைகளுக்கு இடையே நீரோடை அல்லது ஆறுகள் ஓடும். ஆனால், இந்த ஹதீஸ்கள் வேறு வகையில் சொல்கின்றன.
5) ஹதீஸ்கள் சொல்லும் வர்ணனை இது தான் (படம் 2)
இரண்டு மலைகளுக்கு மத்தியிலே நீரோடை கீழ்கண்டவாறு செல்கிறது, இது அபூர்வம் தான், உலகில் சில இடங்களில் மட்டுமே இப்படி நீரோடை செல்லும், அதாவது ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு நீரோடை செல்கிறது.
படம் 2:
மக்காவில் ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே சயீ செல்லும் போது, முஸ்லிம்கள் ஸஃபாவிலிருந்து மர்வாவிற்கும், அதன் பிறகு மர்வாவிலிருந்து ஸஃபா மலைக்கும் ஓடுவார்கள், இப்படி ஏழு முறை செய்வார்கள். இவ்விரு மலைகளுக்கு இடையே 450 மீட்டர் இடைவெளி உள்ளது. ஏழு முறை முஸ்லிம்கள் சயீ செய்தால், அவர்கள் 3.15 கிலோ மீட்டர் தூரம் நடப்பார்கள்/ஓடுவார்கள். இந்த எண்ணிக்கை நமக்கு அடுத்த கட்டுரைகளின் கருப்பொருளுக்கு உதவியாக இருக்கும்.
படம் 3: ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே சயீ செய்தல்
6) சௌதியின் மக்காவிற்கு பொருந்தாத, ஸஃபா மர்வா நீரோடை புவியியல் விவரங்கள்
மேற்கண்ட ஹதீஸ்கள் மிகவும் முக்கியமான ஹதீஸ்கள் ஆகும். இவைகளில் காணப்படும் வர்ணனைகளை கவனிக்கும் போது, அவைகள் சௌதியின் மக்காவை குறிப்பதாக தெரியவில்லை. ஸஃபாவிலிருந்து ஒரு நீரோடை புறப்பட்டு, மர்வாவை நோக்கி ஓடியுள்ளது அல்லது மர்வாவிலிருந்து ஒரு நீரோடை புறப்பட்டு ஸஃபாவை நோக்கி ஓடியுள்ளது. இது தான் புகாரி ஹதீஸ்கள் சொல்லும் விவரம்.
7) தற்கால மக்காவில் இம்மலைகளை எங்கே காணலாம்?
கீழ்கண்ட படம் கூகுள் எர்த்லிருந்து எடுக்கப்பட்டது (அக்டோபர் 2015). நன்றாக கவனிக்கவும், ஸஃபா மற்றும் மர்வா மலைகள் (குன்றுகள்) எவ்வளவு சிறியவைகளாக இருக்கின்றன? இந்த படத்தில் அவைகள் எங்கே காணப்படுகின்றன?
படம் 4: கூகுள் எர்த் படம்
மேற்கண்ட படத்தில் ஸஃபா மர்வா மலைகள் நம் கண்களுக்கு தெரியவில்லை, காரணம் அவைகள் காபாவின் வெளிப்புற கட்டிடத்திற்குள் அடங்கிவிட்டது. இஸ்லாமியரல்லாதவர்கள் மக்காவிற்கு போக முடியாது என்பதால், இம்மலைகளின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை இங்கு தருகிறேன். இப்படங்கள் நம்முடைய கட்டுரைகளை புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
படம் 5: ஸஃபாவிலிருந்து சயீ ஆரம்பிக்கும் இடம்
படம் 6: மர்வாவின் மீது உட்கார்ந்திருக்கும் மக்கள்
ஸஃபா மர்வாவின் சிறிய வீடியோக்கள்:
இச்சிறிய வீடியோக்களை பாருங்கள். இந்த இரண்டு மலைகள் எவ்வளவு சிறியவைகளாக இருக்கின்றன என்பதை கவனியுங்கள். நம்முடைய அடுத்த கட்டுரையை சரியாக புரிந்துக் கொள்ள இந்த வீடியோக்கள் உதவியாக இருக்கும்.
- Safa Marwa (Sahie) Area, Makkah (Saudi Arab)
- Safa Marva (full HD)
- Safa Marwa Security Glass Broken by one Pilgrim (இந்த விடியோ இங்கு பதிப்பதின் நோக்கம், ஒரு மனிதன் எவ்வளவு சுலபமாக இந்த மலையில் ஏறலாம் என்பதை காட்டுவதற்காகும்)
இம்மலைகள் காபாவைச் சுற்றியுள்ள வெளிப்புற கட்டிடங்களின் உள்ளே அடங்கிவிட்டதை பாருங்கள். இவைகளிலிருந்து நீரோடைகள் புறப்படுமா? இதற்கான அறிகுறி மற்றும் சாத்தியம் ஏதாவது தெரிகின்றதா?
சிந்திக்கவேண்டிய விஷயங்கள்:
1) ஒரு பெரிய பள்ளத்தாக்கில் புனித நகரம் (மக்கா? / பெட்ரா?) இருந்திருக்கிறது.
2) காபாவின் அருகில் ஒரு பக்கம் ஸஃபா மலையும், இன்னொரு பக்கம் மர்வா மலையும் இருந்திருக்கிறது. முஸ்லிம்கள் புனித பூமி என்று நம்பும் சௌதியின் மக்காவில் உள்ள இவ்விரண்டு மலைகளுக்கு இடையே உள்ள தூரம் 450 மீட்டர்கள் ஆகும். ஒரு முஸ்லிம் ஏழு முறை இவ்விரண்டு மலைகளுக்கு மத்தியில் ஓடும்போது, அவர் 3.15 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறார். இந்த விவரம் நமக்கு அடுத்தடுத்த கட்டுரையை படிக்கும் போது உபயோகமாக இருக்கும்.
3) ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு நேராக, நீரோடை ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது.
4) இந்த ஓடையில் தான் முஹம்மது சயீ செய்யும் போது ஓடியிருந்திருக்கிறார்.
5) பொதுவாக, நீரோடை ஒரு மலையிலிருந்து செல்லவேண்டுமென்றால், அது மிகப்பெரிய மலையாக இருக்கவேண்டும். மழை பெய்யும் போது, பல இடங்களிலிருந்து வரும் மழை நீர் ஒன்றாக சேர்ந்து அருவியாக மாறி மலையிலிருந்து இறங்கிவரும். இப்படிப்பட்ட நிலை, ஸஃபா மர்வா போன்ற சிறிய குன்றுகளுக்கு இருக்கின்றதா என்பதை பாருங்கள்?
6) ஸஃபா மர்வாவிற்கு இடையில் எப்படி நீரோடை வந்தது? இந்த கேள்விக்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
முடிவுரை: புகாரி ஹதீஸ்கள் 1617 & 1644 சொல்லும் விவரங்கள், தற்போது நாம் காணும் மக்காவின் ஸஃபா மர்வா மலைகளுக்கு பொருந்துவதில்லை என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம். இதே விவரங்கள் பெட்ரா என்ற நகரத்துக்கு சரியாக பொருந்துவதை நாம் "பெட்ரா" பற்றி எழுதும் போது பார்ப்போம்.
அடுத்த மக்கா பிரச்சனையில் சந்திப்போம்.
அடிக்குறிப்புகள்
0 comments:
Post a Comment