போப் பிரான்ஸிஸ் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கவேண்டுமாம்
முன்னுரை:
அல்-அஜர் பல்கலைக்கழகத்தின் (எகிப்து) பிரதிநிதி, போப் பிரான்ஸிஸ் அவர்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இந்த வேண்டுகோள் ஒரு வேடிக்கையான ஒன்றாகும்.
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று போப் அறிவிக்கவேண்டும்:
அல்-அஜர் பல்கலைக்கழக பிரதிநிதி(முஹம்மத் அப்துல் கவப்), தற்போதைய போப் பற்றி கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.
வாடிகனோடு நல்லுறவை வைத்துக்கொள்ள மற்றும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். தற்போது போப்பாக இருக்கும் பிரான்ஸிஸ் அவர்கள், இதற்காக முயற்சி எடுக்கவேண்டும், இதற்கு அடையாளமாக அவர் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்று தன் சொற்பொழிவுகளில் அறிவிக்கவேண்டும்.வாடிகனோடு எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, இதற்கு முன்பாக போப்பாக இருந்தவரோடு தான் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. அல் அஜர் பல்கலைக் கழகத்தின் கதவுகள் இப்போது திறக்கப்பட்டு இருக்கின்றது.பிரான்ஸிஸ் அவர்கள் தற்போது புதிய போப்பாக இருக்கிறார். எங்களோடு நல்லுறவிற்காக அவர் முன்னுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கிறோம். அதாவது அவர் ஏதாவது ஒரு சொற்பொழிவில், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றும், இஸ்லாமியர்கள் போர் புரியவும், வன்முறைகளில் ஈடுபடவும் விரும்புகிறவர்கள் அல்ல" என்றும் அவர் அறிவிக்கவேண்டும். இப்படி அவர் கூறிவிட்டால், அவர் எங்களோடு நல்லுறவு வைத்துக்கொள்ள முன்வருகிறார் என்று நாங்கள் கருதமுடியும்."An envoy from Al-Azhar in Cairo, raised the prospect of restoring ties with the Vatican yesterday but called on Pope Francis to take "a step forward" by declaring that Islam is a peaceful religion."The problems that we had were not with the Vatican but with the former pope. Now the doors of Al-Azhar are open," Mahmoud Abdel Gawad, diplomatic envoy to the grand imam of Al-Azhar, Ahmed Al-Tayyeb, told Italian daily Il Messaggero in Cairo."Francis is a new pope. We are expecting a step forward from him. If in one of his addresses he were to declare that Islam is a peaceful religion, that Muslims are not looking for war or violence, that would be progress in itself," he said."
இது அறியாமையா? அல்லது வஞ்சகமா?
மேற்கண்ட அறிவிப்பை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்திருக்கும். இது முஸ்லிம்களின் அறியாமையா அல்லது வஞ்சகமா? இதைப் பற்றி சிறிது அலசுவோம்.
1. இஸ்லாமும் முன்னாள் போப்பின் அறிக்கையும்:
முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கீழ்கண்டவாறு ஒரு சொற்பொழிவில் கூறினார்:
Show me just what Muhammad brought that was new and there you will find things only evil and inhuman, such as his command to spread by the sword the faith he preached.[118]புதிதாக முஹம்மது என்ன கொண்டு வந்தார்? என்று எனக்கு காண்பியுங்கள். அவர் கொண்டு வந்தவைகளில் தீய செயல்களும் மனிதாபமற்ற செயல்களும் தான் காணப்படும், அதாவது முஹம்மது நம்பிக்கையை வாளின் முனையில் பரப்புவதற்கு கட்டளை கொடுத்து போதனை செய்துள்ளார்.
போப்பின் இந்த அறிவிப்பிற்கு பிறகு அனேக வன்முறைகள் இஸ்லாமியர்களால் ஆங்காங்கே அரங்கேற்றப்பட்டது, திருச்சபைகள் தாக்கப்பட்டன, சொமாலியாவில் ஒரு பெண் துறவி கொல்லப்பட்டார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் இவரை கண்ட இடத்தில் கொல்லுங்கள், தாக்குங்கள் என்று அறிக்கைகள் வெளியிட்டார்கள். (மூலம்:
போப் எதை அறிக்கை செய்தாரோ, அதை இஸ்லாமியர்கள் செய்து காட்டி அவரது கூற்றை உண்மையாக்கினார்கள். இப்படியெல்லாம் நடந்துக்கொண்டுவிட்டு, ஒன்றுமே தெரியாதவர்கள் போல, போப்பின் கூற்றினால் நாங்கள் மனவேதனை அடைகிறோம் என்று கூறுகிறார்கள்.
இதை நாம் என்னவென்று அழைக்கமுடியும்? அறியாமையா? அல்லது வஞ்சகமா?
2. இஸ்லாமும் தற்போதய போப்பிடம் வைத்த வேண்டுகோளும்:
முன்னாள் போப் இஸ்லாமை விமர்சித்தார். அவரது விமர்சனத்தில் உண்மையில்லை என்று வார்த்தைகளால் சொல்லும் இஸ்லாமியர்கள், தங்கள் செயல்களால், அவர் சொன்னது உண்மைத் தான் என்பதை நிருபித்தார்கள். இப்போது போப்பாக இருப்பவர், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கவேண்டுமாம். அப்போது தான் வாடிகனோடு இவர்களது உறவு மேம்படுமாம். இஸ்லாமியர்களின் இந்த வேண்டுகோளை நாம் சிறிது ஆழமாக கவனித்தால், கீழ்கண்ட கேள்விகள் நமக்கு எழும்:
அ) வாடிகனோடு எங்களுக்கு பிரச்சனை இல்லை, முன்னாள் போப்போடு தான் எங்களுக்கு பிரச்சனை உள்ளது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அதாவது உலகில் யார் யாரெல்லாம் இஸ்லாமை உண்மையாக விமர்சிக்கிறார்களோ, அவர்களோடு முஸ்லிம்களுக்கு பிரச்சனை உண்டு. அவர்களை கொலை செய்யவும், கொலை மிரட்டல்கள் விடவும், விமர்சனங்களை அடிப்படையாக வைத்துகொண்டு வன்முறைகளில் ஈடுபடவும் இவர்கள் ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி செய்யும் இவர்களுக்கு புதிய போப்பிடம் வேண்டுகோள் வைக்க என்ன தகுதியிருக்கிறது?
ஆ) மாற்று மத தலைவர்களிடம் சென்று "எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று அறிவிப்பு செய்யுங்கள்" என்று கேட்க இவர்களுக்கு வெட்கமாக தோன்றவில்லையா?
இ) ஒரு வேளை வேண்டுகோள் வைத்தாலும், அதனை எப்படி வைக்கவேண்டும்? அதாவது புதிய போப் அவர்களே, எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம், இதனை சரியாக புரிந்துக்கொள்ளாமல் உங்கள் முன்னாள் போப் விமர்சித்துவிட்டார், எனவே, நீங்கள் இஸ்லாமை படித்து தெரிந்துக்கொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டு இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, "எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று அறிவிப்பு செய்யுங்கள்" என்றுச் சொன்னால், எப்படி ஒருவர் இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ளாமல் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கமுடியும்? இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் அனைத்திற்கும் சிந்திக்காமல் தலையாட்டும் பொம்மைகளாக கிறிஸ்தவர்கள் எப்போது மாறினார்கள்?
ஈ) குர்-ஆனை படியுங்கள், ஹதீஸ்களை படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படியுங்கள், இஸ்லாமிய ஆரம்பகால நடவடிக்கைகளை படியுங்கள், அதன் பிறகு நீங்கள் இஸ்லாமைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லலாம் என்று சொல்வதை விட்டுவிட்டு, நேரடியாக "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்றுச் சொல்லவேண்டுமாம். உலக அரசியல் தலைவர்களைப்போலவும், ஒன்றுமறியாத பாமர முஸ்லிம்களைப்போலவும், கிறிஸ்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்று இவர்கள் நினைத்துவிட்டார்களா?
உ) உங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று மற்றவர்கள் ஏன் சொல்லவேண்டும்? அதுவும் நீங்கள் சொல்லிக் கொடுத்தது போல ஏன் சொல்லவேண்டும்? உலக மக்களுக்கு சுயமாக படித்து தெரிந்துக்கொண்டு பேசத் தெரியாதா?
ஊ) உண்மையாகவே, உங்கள் மார்க்கம் அமைதி மார்க்கமாக இருந்திருந்தால் மற்றவர்களின் கால்களில் விழுந்து, "எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்றுச் சொல்லுங்கள்" என்று கெஞ்ச வேண்டியதில்லை?
எ) இஸ்லாமியர்களால் முடிந்தால், அனேக குர்-ஆன் பிரதிகளை போப்பிற்கு அனுப்பிவையுங்கள், ஹதீஸ் (புகாரி, முஸ்லிம் போன்ற) தொகுப்புக்களையும், குர்-ஆன் விரிவுரைகளையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும், இஸ்லாமிய ஆரம்பகால சரித்திரத்தையும் அனுப்பிவையுங்கள் (நீங்கள் எழுதுகின்ற புத்தகங்களை அனுப்பவேண்டாம், அவைகளால் ஒரு நன்மையும் இல்லை). அவைகளை படித்து, இஸ்லாம் அமைதி மார்க்கம் தான் என்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள் என்று சவால் விடுங்கள். அதே நேரத்தில் எந்த விமர்சனம் வந்தாலும் அதனை வன்முறையில்லாமல் சந்திக்க தயார் என்று சவால் விடுங்கள். இப்படி செய்தால், ஓரளவிற்கு உங்கள் மார்க்கம் பற்றி போப்பிற்கு நல்ல அபிப்பிராயம் வரும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று சொல்லச்சொன்னால், என்ன அர்த்தம்? கிறிஸ்தவர்களின் காதில் பூ வைக்க ஏன் முயற்சி செய்கிறீர்கள்?
ஏ) ஒரு வேளை இந்த போப் கூட இஸ்லாமை அறிந்துக்கொண்டு, விமர்சித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இவருக்கும் கொலை மிரட்டல் விடுவீர்கள் அல்லவா? வன்முறையில் இறங்குவீர்கள் அல்லவா? முதலாவது இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை "முஸ்லிம்களே" நீங்கள் உங்கள் செயல்களால் நிருபியுங்கள், அதன் பிறகு மற்றவர்கள் இஸ்லாம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்போம்.
இஸ்லாமுக்கு மாற மறுத்து, இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட 800 இத்தாலிய கிறிஸ்தவர்களை கவுரவித்த தற்போதய போப்:
தற்போதை போப், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கவேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள், ஆனால், தற்போதைய போப் பிரான்ஸிஸ் அவர்களோ, இஸ்லாமுக்கு சரியான பதிலடியை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அதாவது கடந்த மே மாதம்12ம் தேதி, போப் அவர்கள், 15ம் நூற்றாண்டில், இஸ்லாமுக்கு மாற மறுத்ததால், இஸ்லாமியர்களால் கொடுமையாக கொல்லப்பட்ட 800 கிறிஸ்தவர்களை கவுரவித்தார். தான் பதவிக்கு வந்த பிறகு அவர் செய்த இந்த செயல், இஸ்லாம் பற்றி அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டார்.
பதினாறாம் போப் பெனடிக்ட், வார்த்தைகளால் இஸ்லாமை விமர்சித்தார், தற்போதைய போப் பிரான்ஸிஸ் அவர்களோ, செயல்களால் இஸ்லாமை முழுவதுமாக விமர்சித்துவிட்டார்.
மூலம்:
முஸ்லிம்களே, உங்கள் வார்த்தைகளால் மட்டும் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்றுச் சொல்லிக்கொள்வதை நிறுத்துங்கள். முதலாவது, உங்கள் செயல்களால் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிருபித்துக் காட்டுங்கள், அப்போது உலகம் தானாக உண்மையை சொல்ல ஆரம்பிக்கும்.
போப் அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லிவிட்டால் !?!
ஒரு வேளை உங்கள் வார்த்தைகளின் படியே, போப் அவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" அறிவித்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.
• இந்த அறிக்கையைக்கு பிறகு முஸ்லிம்கள் தங்கள் வன்முறையை கைவிடுவார்களா?
• இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு எதிராக நடத்தபப்டும் வன்முறை செயல்கள் நிறுத்தப்படுமா?
• இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லும் செயல்களுக்கு ஒரு முடிவு கட்டப்படுமா?
• எதிர்காலத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை தாக்கும் செயல்கள் நிறுத்தப்படுமா?
இப்படியெல்லாம் செய்வோம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் உறுதி அளித்தால், நாங்கள் போப்பிடம் சென்று, நீங்கள் முஸ்லிம்கள் சொல்வது போலவே சொல்லுங்கள் என்று அவரை வேண்டிக்கொள்ளத் தயார்.
ஒரு முஸ்லிம் பெண்ணின் கால்களை கழுவிய போப்:
போப் பிரான்ஸிஸ் அவர்கள், இயேசு காட்டிச் சென்ற வழியில் சென்று, அனேகரின் கால்களை கழுவினார். ஒரு முஸ்லிம் பெண்ணின் கால்களையும் கழுவினார். இது அவரது தாழ்மையையும், இயேசுவின் வழியையும் காட்டுகிறது. இப்படி இவர் செய்தார் என்றுச் சொல்லி, "ஆஹா. முஸ்லிம்களின் கால்களை போப் கழுவும் அளவிற்கு தாழ்ந்துவிட்டார்" என்று நினைக்கவேண்டாம். ஒருவேளை நீங்கள் இப்படி எண்ணம் கொண்டு இருந்தால், அதனை மாற்றிக்கொள்ளுங்கள். உலகை ஜெபிப்பவர்கள் எப்போதும் உலகத்தில் சாந்தி சமாதானத்தை நிலை நாட்டுபவர்களே தவிர, கைகளில் வாளை ஏந்தியவர்கள் அல்ல. உங்களுக்கு நேரமிருந்தால், உலக தலைவர்களின் சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள், உங்கள் முஹம்மதுவையும் சேர்த்து.
முடிவுரை:
இஸ்லாமிய ஆரம்ப கால முதல் இன்று வரை மற்றவர்களை கட்டாயப்படுத்தியே வாழ்ந்துவருகிறீர்கள், இனியாவது சிறிது மாறுங்களேன்.
1) உலக அளவில் கிறிஸ்தவ சபைகளையும், இதர மார்க்க வணக்க ஸ்தலங்களையும், மக்களையும் தாக்குவதை நிறுத்துங்கள்.2) இஸ்லாமை விட்டு வெளியேறி நாத்தீகர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, இந்துக்களாகவோ மாறுபவர்களை கொல்வதை, தாக்குவதை நிறுத்துங்கள்.3) உலக அளவில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள்.4) உங்களைப் போலவே, மற்ற மக்களையும் நேசியுங்கள்.5) இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று நீங்கள் நம்பினால், அதனை மற்றவர்களுக்கு எப்படி காட்டப்போகிறீர்கள், நிருபிக்கப்போகிறீர்கள்? அமைதியாகவா அல்லது அராஜகத்தாலா? சிந்தியுங்கள்.
Source : http://isakoran.blogspot.in/2013/06/blog-post.html
1 comments:
Hello. And Bye.
Post a Comment