பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்கள் அல்லவா? இப்படியிருக்க ஏன் இஸ்லாமை நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?
(இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?)
- இஸ்லாமை ஏன் எல்லாரும் விமர்சிக்கிறார்கள்?
- எங்கு தாக்குதல் நடந்தாலும், சிந்திக்காமல் உடனே விரல்கள் முஸ்லிம்களுக்கு நேராக நீட்டப்படுகின்றது?
- காவல்துறை ஆய்வு செய்து "தீவிரவாதிகள் இவர்கள் தான்" என்று அடையாளம் காட்டப்படுவதற்கு முன்பாக, இஸ்லாமியர்கள் தான் குற்றவாளிகள் என்று சொல்லப்படுகின்றது?
- உலகில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாகவும், மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும் வாழுகிறார்கள் அல்லவா? இப்படி இருக்கும் போது ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறீர்கள்?
இஸ்லாமியர்கள் மனவேதனை அடைந்து மேற்கண்ட விதமாக கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. ஏதோ ஒரு சில முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள், இதர வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக இஸ்லாமை விமர்சிப்பது சரியா?
இதே போல, இதர மார்க்கத்தை எடுத்துக்கொண்டாலும், பெரும்பான்மையான மக்கள் நல்லவர்களாக வாழுகிறார்கள், சமுதாயத்திற்கு தீமை விளைவிக்காமல் வாழுகிறார்கள். சில சதவிகித மக்கள் மட்டுமே சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கிறார்கள்.
ஆனால், உலகம் இதர மார்க்கத்தை அதிகமாக விமர்சிப்பதில்லை, இஸ்லாமை மட்டும் அதிகமாக விமர்சிக்கிறது? இது ஏன்?
இந்த கேள்விகளுக்கு நாம் பதிலை கீழ்கண்ட தலைப்புக்களில் காணலாம்:
1) இதர மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதமா (மார்க்கமா)?
2) இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறது.
3) பெரும்பான்மை ஆதரிக்கிறது என்பதால், விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?
4) முதலாவது, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க முஸ்லிம்களுக்கே அதிக உரிமை உள்ளது
5) இரண்டாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்)அடுத்தபடியாக உரிமை உள்ளது
6) மூன்றாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க மற்றவர்களுக்கு (முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு) அடுத்தபடியாக உரிமை உள்ளது
முடிவுரை
--------------------------------------
1) இதர மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதமா (மார்க்கமா)?
இதில் என்ன சந்தேகம்? இஸ்லாம் கூட மற்ற மதங்களைப் போலவே ஒரு மதம் தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், பிரச்சனை இங்கே தான் இருக்கிறது.
இஸ்லாம் என்பது கிறிஸ்தவத்தைப் போல, இந்து மதம் போல ஒரு மதம் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு அரசியல் கட்சியாகும். இஸ்லாமுடைய முக்கிய நோக்கம், உலக மக்களுக்கு இஸ்லாம் பற்றி போதனை செய்து, எல்லோரையும் இஸ்லாமியர்களாக மாற்றுவது மட்டுமல்ல, அதே நேரத்தில், உலகத்தை ஒரு அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதாகும். அதாவது அலேக்சாண்டர் ஆசைப்பட்டது போல, உலகம் அனைத்தையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவது தான் இஸ்லாமின் முக்கிய நோக்கம்.
இஸ்லாமில் மத சடங்குகள், வணக்க வழிபாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், அதையும் தாண்டி, உலகம் அனைத்திலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு கொண்டுவருவது தான் முஸ்லிம்களின் பிரதானமான நோக்கம்.
இதனை அறிய, நீங்கள் உலக செய்திகளை பார்க்கவேண்டும். முஸ்லிம்கள் ஒன்று திரண்டி கோஷமிட்டால் என்ன சொல்வார்கள் என்று கவனித்துப்பாருங்கள். முக்கியமாக ஐரோப்பாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் கோஷங்கள் போட்டுக்கொண்டு, செல்லும் முஸ்லிம்களின் கைகளில் இருக்கும் பெயர் பலகைகளை பார்த்தால்:
• "இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆட்சி செய்யும்"
• "அமெரிக்காவிற்கு மரணம்"
• "முஸ்லிம்கள் உலகை ஒரு நாள் ஆளுவார்கள்"
• "எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, வெறும் இஸ்லாம் தான் வேண்டும்."
• "இஸ்லாமை கேவலப்படுத்தியவனைக் கொல்லுங்கள்"
போன்றவைகளை நாம் காணமுடியும். இஸ்லாமியர்களின் மேற்கண்ட விதமான செய்திகள் அடங்கிய படங்களை காண இந்த கூகுள் தொடுப்பை சொடுக்குங்கள்: - http://www.google.co.in/search?q=islamic+violence+banners&bav=on.2,or.r_qf.&biw=1366&bih=667&um=1&ie=UTF-8&hl=en&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=S5-8UcTRNIHtrAftm4G4CQ
ஒரு மதத்தை பின் பற்றுபவனுக்கு, அதாவது முஸ்லிமுக்கு, தன் மார்க்கத்தை விமர்சிப்பவனை கொல்லவேண்டும் என்ற வெறி எங்கேயிருந்து வருகிறது? இஸ்லாமை விமர்சிப்பவன் கொல்லப்படவேண்டும் என்று அவன் துடிக்கிறான்? இஸ்லாம் ஒரு மதமாக மட்டும் இருக்குமானால், இப்படியெல்லாம் அவன் சிந்திப்பானா?
இதர மார்க்கங்களின் மக்களுக்கு இப்படியெல்லாம் வெறி பிடிப்பதில்லையே அது ஏன்? கிறிஸ்தவத்தை விமர்சித்தால், இயேசுவை விமர்சித்தால், அப்படி விமர்சிப்பவன், கேவலமாக பேசுபவன் கொல்லவேண்டும் என்ற உணர்வு அல்லது எண்ணம் ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு வருவதில்லை?
இப்படி நடந்துக்கொள்ளும் படி ஒரு முஸ்லிமை தூண்டுவது எது?
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு மதம் பிடித்த அரசியல் யானை? தனக்கு முன்பு எது வந்தாலும், அந்த யானை மிதித்துப்போட்டு, நாசமாக்கிவிடும். அந்த மதம் பிடித்த யானையின் குட்டிகள் தான் "உலகை ஒரு நாள் இஸ்லாம் ஆளும்" என்றுச் சொல்லி கோஷமிடும் அந்த சில முஸ்லிம்கள்.
ஆக, இஸ்லாம் ஒரு மதம் மட்டும் தான் என்று எண்ணுவது தவறு.
2) இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறது.
நாம் உலக மதங்களின் சரித்திரத்தை கவனித்தால், ஏதோ ஒரு கால கட்டத்தில் அவைகளின் பெயரை வைத்துக்கொண்டு சில சமூக சீர்கேடுகள் அல்லது வன்முறைகள் நடந்து இருப்பதை காணமுடியும்.
உதாரணத்திற்கு, கிறிஸ்தவத்தை எடுத்துக்கொள்வோம், ஒரு கால கட்டத்தில், கத்தோலிக்க போப்புக்கள் அனேக தீய செயல்களுக்கு காரணமாக இருந்தார்கள், தங்கள் சபை சொல்வதற்கு எதிராக விமர்சிப்பவர்களை இரக்கமின்றி தண்டித்தார்கள், மேலும் சிலுவைப்போர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அதே கத்தோலிக்க சபையில் இருந்த பாஸ்டர்கள், சீர்திருத்தம் தேவை என்பதை உணர்ந்தார்கள், பைபிளுக்கு எதிராக சில தீய மனிதர்கள் செய்த கொடுமைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள். இது பைபிளுக்கு எதிரான போதனை என்பதை உலகம் அறியும் படி செய்தார்கள். சீர்திருத்தம் வந்தது, மக்கள் மறுபடியும் பைபிளுக்கு நேராக திரும்பினார்கள்.
இன்னொரு உதாரணம், நம் இந்தியாவில் நடந்த மத சம்மந்தமான சமூக கேடுகளைச் சொல்லலாம். அதாவது சிறுவயதில் திருமணம் செய்தல், கணவன் மரித்துவிட்டால், அவனோடு கூட அவன் மனைவியையும் சேர்த்து எரித்துவிடுதல் போன்ற தீய செயல்கள் ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால், அனேகரின் முயற்சியால், இந்த தீய பழக்கம் இப்போது விடப்பட்டுள்ளது, ஒருவகையாக எல்லா இந்துக்களும் அந்த தீய செயல்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து மத மறுமலர்ச்சியை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால், இஸ்லாம் இப்படி சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இஸ்லாமில் உள்ள தீய காரியங்களை வெளியே சொல்லும் போது, இவர்கள் அதனை எதிர்க்கிறார்கள், உண்மை சொல்பவர்களை தாக்குகிறார்கள். இவர்களுக்கு துணையாக குர்-ஆன் உள்ளது. மூல நூல்கள் சரியாக இருந்து, அதனை பின்பற்றுபவர்கள் தவறாக நடந்துக்கொள்ளும் போது சீர்திருத்தம் சாத்தியமாகும். ஒரு கால கட்டத்தில், அந்த மூல நூல்களை மக்கள் படித்து, உண்மையை அறிந்துக்கொள்ளும் போது, அந்த மார்க்கம் சீர்திருத்தம் அடைந்துவிடும். சிலுவைப்போர்கள், இதர சமூக கேடுகள் அனைத்தும், பைபிளை மக்கள் கைகளிலிருந்து மறைத்த போது காணப்பட்டன. ஆனால், மக்கள் பைபிளை படித்து உண்மை எது என்று அறிந்துக்கொண்டபோது, மதத்தின் பெயரால் செய்யப்பட்ட தீய செயல்கள் மறைந்துவிட்டன.
இஸ்லாமை பொறுத்தமட்டில், சமூக தீய செயல்களுக்கு காரணம் முஸ்லிம்கள் குர்-ஆனை தவறாக புரிந்துக்கொண்டதால் உண்டாகவில்லை. குர்-ஆனே அவைகளை செய்யச் சொல்வதினாலும், முஹம்மதுவின் வாழ்க்கையிலிருந்த சில விஷயங்களை முஸ்லிம்கள் பின்பற்றுவதினாலுமே இந்த சீர் கேடுகள் நடக்கிறது. எனவே, மக்கள் தங்கள் மதத்தை தவறாக புரிந்துக்கொண்டு இருந்தால், அவர்களின் மதத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவரலாம், ஆனால், இஸ்லாமின் மூல நூலே சமூகத்திற்கு கேடு விளைக்கிறது என்பதினால், இஸ்லாமை சரி செய்ய அல்லது அதில் சீர்த்திருத்தத்தை கொண்டு வரமுடியாது.
இதனை புரிந்துக்கொண்ட உலகம், இஸ்லாமை விமர்சிப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இஸ்லாம் இல்லை, இதற்காகவே அது அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. இஸ்லாமில் சீர்திருத்தம் கொண்டுவர முயற்சித்த இஸ்லாமியர்கள் கொடுமையாக நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். இனி இஸ்லாமுக்குள் சீர்திருத்தம் கொண்டுவரமுடியாது என்பதை உலகம் அறிந்துக்கொண்டு விமர்சிக்கிறது.
3) பெரும்பான்மை ஆதரிக்கிறது என்பதால், விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?
பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் எந்த ஒரு தீய செயல்களில் வன்முறைகளில் ஈடுபடாமல் அமைதியான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும் தீவிரவாத செயல்களில், வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். உண்மை இப்படி இருக்க ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறீர்கள்? அதனை பின்பற்றுபவர்களில் 99% (+) சதவிகித மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லவா? இப்படி இருக்க ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறார்கள்? என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள்.
மேலோட்டமாக பார்த்தால், இவர்களின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும். ஆனால், இந்த வாதம் சரியானதா என்பதை நாம் பரிசோதிக்கவேண்டும், இதனை அறிந்துக்கொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள்.
அனேக ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு புற்று நோய் வருவதில்லை. சிலருக்கு மட்டுமே புகைபிடிப்பதினால் புற்று நோய் வருகிறது. உண்மை இப்படி இருக்க,
• மக்கள் புகை பிடிக்கக்கூடாது என்றுச் சொல்லி. சிகரெட் பெட்டிகளில் ஏன் புற்று நோய் பற்றிய எச்சரிக்கை செய்தியை அரசாங்கம் வெளியிடுகிறது?
• ஆங்காங்கே புகை பிடிப்பதினால் உண்டாகும் ஆபத்தை ஏன் அரசாங்கம் விளம்பரப்படுத்துகிறது?
• புகைபிடிப்பதற்கு எதிராக ஏன் அனேக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது?
• புகைபிடிப்பது ஏன் விமர்சிக்கப்படுகிறது?
இப்படி புகைபிடிப்பவர்கள் கேள்வி கேட்டால், இவர்களை நாம் என்னவென்றுச் சொல்வோம்?
இதைப்போலத் தான் இஸ்லாமியர்களின் லாஜிக்கும் இருக்கிறது. புகை பிடிப்பதினால் பெரும்பான்மையானவர்களுக்கு புற்றுநோய் வருவதில்லை என்பதற்காக, நாம் புகை பிடிப்பதை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா? புகை பிடிப்பதினால் வரும் ஆபத்துக்களை அலசி ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை கொடுக்காமல் இருக்கமுடியுமா? இதைப்போலவே, அனேகர் அமைதியாக இருக்கிறார்கள் என்பதால், இஸ்லாமை விமர்சிக்காமல் கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது. உலகம் அல்லல்படுவது அந்த ஒரு சிலர் முலமாகத் தான். அந்த ஒரு சிலரை உருவாக்குவது யார்? அவர்களை உற்சாகப்படுத்துவது எது? அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட அவர்களுக்கு ஆசை காட்டுவது யார்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் "இஸ்லாமும், குர்-ஆனும், அல்லாஹ்வும், அவனது இறைத்தூதரும் தான்". எனவே, இஸ்லாமை படித்து கேள்வி கேட்பது சரியானதே.
4) முதலாவது, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க முஸ்லிம்களுக்கே அதிக உரிமை உள்ளது
அருமையான இஸ்லாமியர்களே, இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த உங்களுக்கே இஸ்லாமை கேள்விகேட்கவும், அதனை விமர்சிக்கவும் உரிமை உள்ளது. ஏனென்றால், அது உங்கள் மார்க்கம், அதனை முழுவதுமாக அறிந்துக்கொள்வது உங்கள் உரிமை, இதனை யாரும் தடுக்க முடியாது. குர்-ஆனை அரபியில் ஓதுங்கள் என்று சொல்லும் உங்கள் அறிஞர்களுக்கு, நீங்கள் குர்-ஆனை தமிழில் படிப்பதை தடை செய்யமுடியாது. உங்கள் மூல நூல்களை நீங்கள் படிக்க முன்வரும் போது, அவைகளை படிக்கவேண்டாம், நாங்கள் சுருக்கமாக உங்களுக்கு அறிவிக்கிறோம், நாங்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே படியுங்கள் என்றுச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை.
நீங்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கும் போது, அதிகமாக கேள்விகளை கேட்கவேண்டாம் என்றுச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை. முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை அனேக மூல நூல்களில் நீங்கள் படிக்க முன்வரவேண்டும். உங்களை விட உங்கள் முஹம்மதுவின் நடத்தைகள் மேன்மையுள்ளதாக இருக்கின்றனவா என்று நீங்கள் ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.
நீங்கள் உங்கள் இஸ்லாமை கேள்வி கேட்க மறுத்தால், இஸ்லாமியரல்லாதவர்கள் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். முதலாவது இஸ்லாமை முழுவதுமாக அறியும் உரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறக்கவேண்டாம்.
5) இரண்டாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்)அடுத்தபடியாக உரிமை உள்ளது
அது எப்படி? கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்) இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க அடுத்தபடியான உரிமை உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்பலாம். இதற்கு பதில் மிகவும் சுலபமானது, அதாவது கிறிஸ்தவ யூத மார்க்க வேத நூல்களில் உள்ள விவரங்களை குர்-ஆன் எடுத்துக்கொண்டு, அவைகளை மாற்றி எழுதியுள்ளது. மேலும் முஹம்மது தன்னை பைபிளின் வழியாக வந்த தீர்க்கதரிசி என்றும், பைபிளின் தேவன் தான் அல்லாஹ் என்றும் இஸ்லாம் கூறுவதினால், கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் இஸ்லாமை ஆய்வு செய்ய, விமர்சிக்க கேள்வி கேட்க அதிக உரிமை பெறுகிறார்கள்.
மேலும், அனேக பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை குர்-ஆன் மறுப்பதினால், பைபிளை அது எதிர்ப்பதினால், குர்-ஆனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி குறுக்குவிசாரனை செய்ய கிறிஸ்தவர்களுக்கு அதிக உரிமை உள்ளது, இதனை யாரும் கிறிஸ்தவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளமுடியாது.
கிறிஸ்தவர்களே, நம்முடைய பைபிளை விமர்சிக்கும் குர்-ஆனின் உண்மை நிலையை பரிசோதிக்க நமக்கு அதிக உரிமை உள்ளது என்பதை மறக்கவேண்டாம். நீங்கள் கண்டுபிடித்த இஸ்லாம் பற்றிய உண்மைகளை இதர மக்களுக்கு அறிவிப்பது உங்கள் மேல் விழுந்த கடமையாகும். அநீதியைப் பார்த்து "நீ அநீதியாக செயல்படுகிறாய்" என்றுச் சொல்ல நாம் தயங்கக்கூடாது. "பொய்யைப் பார்த்து நீ பொய்" என்றுச் சொல்ல நமக்கு உரிமை உள்ளது. கிறிஸ்தவர்களே, இஸ்லாம் பற்றி விழிப்புணர்வு அடையுங்கள், மற்றவர்களுக்கும் விழிப்புணர்ச்சியை உண்டாக்குங்கள்.
6) மூன்றாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க மற்றவர்களுக்கு (முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு) அடுத்தபடியாக உரிமை உள்ளது
முஸ்லிம்களுக்கு முதலாவது உரிமை உண்டு என்று சொன்னீர்கள், சரி, இதனை ஏற்றுக்கொள்ளலாம், அடுத்தபடியாக கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு என்றுச் சொன்னீர்கள், அதனையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இங்கு இந்துக்கள் எங்கே வந்தார்கள்? அவர்களுக்கு எங்கேயிருந்து உரிமை வந்தது? என்று சிலர் சந்தேகத்தோடு கேள்வி கேட்கலாம். இதற்கும் பதில் மிகவும் சுலமபமானது. அதாவது, உங்கள் வீட்டில் ஒரு நாள் திருடன் வந்து திருடும் போது அவனை தடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா? நீங்கள் சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, ஒரு திருடன் வந்து உங்கள் பணப்பையை திருடிவிட்டு ஓடினால், அவனை துரத்திக்கொண்டுச் சென்று அவனை பிடித்து உதைத்து, உங்கள் பணத்தை திரும்ப பெரும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா? உங்கள் பதில் "ஆம், எனக்கு உரிமை உண்டு" என்றுச் சொல்வீர்கள்.
இதே போலத்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் நம்மீது வெடிகுண்டு வீசுகிறார்கள். வெடிகுண்டுகளை தங்கள் உடல்களில் கட்டிக்கொண்டு, பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும், வெடிக்கச்செய்து நம் குடும்பங்களை அழிக்கிறார்கள். ஓட்டல்களை பிடித்து, மக்களைத் தாக்கி குண்டு மழை பொழிந்து நாட்டில் இரத்த வெள்ளம் ஓடச்செய்கிறார்கள். இப்படி செய்பவர்கள், ஒரு சிலராக இருந்தாலும், அந்த ஒரு சிலர் பின்பற்றும் மதத்தை அறிந்துக்கொள்ள நமக்கு உரிமை உண்டு, கேள்வி கேட்க உரிமை உண்டு. இந்துக்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு. தீவிரவாதிகளின் செயல்களால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே எல்லாருக்கும் இஸ்லாமை கேள்வி கேட்க உரிமை உண்டு.
முடிவுரை:
பெரும்பான்மையான முஸ்லிம்கள் நல்லவர்களாக இருப்பதினால், இஸ்லாமை விமர்சிக்காமல் இருக்கமுடியாது? அந்த இஸ்லாமை தீவிரமாக பின்பற்றுவதினால் தான் அந்த சிலர் தீவிரவாதிகளாக இருப்பதினால், இஸ்லாம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படவேண்டும். குர்-ஆன் படிக்கப்படவேண்டும், ஹதீஸ்கள் மக்களுக்கு சென்றடையவேண்டும், மக்களுக்கு வரும் உண்மையான கேள்விகளுக்கு பதில்கள் சொல்லப்படவேண்டும். முஹம்மதுவின் உண்மையான வாழ்க்கை சரிதை முழுவதுமாக மக்களை சென்றடையவேண்டும். மக்களுக்கு வரும் சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும். விமர்சிப்பவர்கள் தாக்கப்படக்கூடாது. மதங்கள் விமர்சிக்கப்படவில்லையென்றால், அவைகளால் சமுதாயத்திற்கு ஆபத்து வரும்.
எல்லா மதங்களும், மனித கோட்பாடுகளும் ஆராயப்படவேண்டும், விமர்சிக்கப்படவேண்டும். அவைகளினால் சமுதாயத்திற்கு கேடு விளயுமானால், அதைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களுக்குத் தரவேண்டும். இதைத் தான் இஸ்லாமைப் பற்றி உலகம் செய்துக்கொண்டு இருக்கிறது. ஏன் இஸ்லாம் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது என்று வேதனை அடையும் ஒவ்வொரு முஸ்லிமும் குர்-ஆனை படிக்கவேண்டும், ஹதீஸ்களையும் அறியவேண்டும், முஹம்மதுவின் வாழ்க்கையை படித்து வரும் சந்தேகங்களுக்கு பதிலைக் காண முயலவேண்டும்.
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதை பிடித்துக்கொள்ளவேண்டும், தீயதை விட்டுவிடவேண்டும், மற்றவர்களும் அவைகளை விட்டுவிட நம்மால் முடிந்ததை செய்யவேண்டும்.
தமிழ் படிக்கத் தெரிந்த முஸ்லிமே, இந்த சிறிய கட்டுரையை படித்த பிறகும், உன் வீட்டில் ஒரு தமிழ் குர்-ஆன் வரவில்லையானால், நீ குர்-ஆனை தமிழில் படிக்க ஆரம்பிக்கவில்லையானால் உன் இஸ்லாமை, மற்றவர்கள் கேள்வி கேட்பதை உன்னால் தடை செய்யமுடியாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள். நீ முதலாவது இஸ்லாமை அறிந்துக்கொள், கேள்விகளை கேட்டு தெளிவு பெற்றுவிடு, அப்போது தான் உன்னால் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில்களை தரமுடியும்.
Source : http://isakoran.blogspot.in/2013/06/blog-post_17.html
0 comments:
Post a Comment