அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 4, 2013

வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்


 

வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்

வேதாகம மத பழக்க வழக்கங்கள் (BIBLICAL RELIGIOUS CUSTOMS)

  1. சமாதான வாழ்த்துதல் கூறுதல் (லூக்கா 10:5)
  2. தொழுகைக்கு முன்பு கைகளையும் கால்களையும் கழுவுதல் (யாத்திராகமம் 40:31-32)
  3. தேவ சமூகத்தில் காலணிகளைக் கழற்றுதல் (யாத்திராகமம் 3:5)
  4. ஜெபம் பண்ணுகையில் முழங்கால்படியிடுதல் (சங்கீதம் 95:6)
  5. விலங்கு பலியிடுதல் (பஸ்கா) (உபாகமம் 16:1-6)
  6. எருசலேமிற்கு புனிதப் பயணம் செல்லுதல் (அப்போஸ்தலர் 8:26-28)
  7. பெண்கள் தொழுகையில் தங்கள் தலைக்கு முக்காடிட்டு மறைத்துக் கொள்ளுதல் (1 கொரிந்தியர் 11:5-6)
  8. விருத்தசேதனம் (லூக்கா 2:21)
  9. முதற்பேறான பிள்ளைக்காக பலி செலுத்துதல் (லூக்கா 2:24)
  10. நீண்ட உபவாசம் (யாத்திராகமம் 34:28, 1 இராஜாக்கள் 19:8, மத்தேயு. 4:2)
  11. பெண்கள் அமைதலுடனும் அடக்கத்துடனும் இருத்தல் (1கொரிந்தியர் 14:34)
  12. பன்றி இறைச்சி புசிக்காமல் இருத்தல் (லேவியராகமம் 11:7)

இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் (MUSLIM PRACTICES)

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்)
  2. சமய சுத்திகரிப்பு, "உளு (wudu)"
  3. பள்ளிவாசலுக்குள் காலணிகளுக்கு அனுமதி இல்லை
  4. சஜ்தா செய்கையில் முழங்கால்படியிடுதல் "sajda"
  5. ஈத் உல்-அதா/ஈத் உல்-குர்பான் (Eid-ul Adha / Eid-ul Qurban) - குர்பானி, விலங்கு பலியிடுதலின் பண்டிகை
  6. மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்தல், ஹஜ் "hajj"
  7. பெண்கள் தலையை மூடிக் கொள்ளுதல்
  8. விருத்த சேதனம் (அ) சுன்னத், "khilan"
  9. குழந்தை பிறக்கும்போது அதற்காக பலியிடுதல், அகீகா "akika"
  10. ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருத்தல், சௌம் "saum"
  11. இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை

ஆங்கில மூலம்: Similarities between Biblical and Muslim Cultures

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.




6 comments:

abu abdhullah said...

இந்த கட்டுரை எந் நோக்கத்திற்காக என தெரியவில்லை.
நமக்கு விளங்கியவரை இஸ்லாம் என்பது
கிருத்துவத்தை காப்பியடித்து உண்டாக்க பட்டது என நிறுவுவதற்க்கா ...?
பைபிளில் இருந்து சுட்டி காட்ட பட்டுள்ள வசனங்களுக்கும் கிருத்தவத்திற்க்கும் எந்தவகையிலும் தொடர்பு இல்லை. இயேசுவின் வருகைக்கு பின் பழைய உடண்படிக்கை சட்டங்கள் பின்பற்ற அவாசியம் இல்லை என்கிறது இன்றைய கிருத்துவம் பிறகு எப்படி உங்களுக்கு உரியது என்கிறிர்கள்.

சர்ச்சிகுள் செல்லும்போது எந்த கிருத்தவன் கால்களை கலுவிக்கொண்டு செல்கிறான்.

கிருத்தவர்கள் சுன்னத் எனும் விருத்தசேதனம் செய்வது கிடையாது.அப்படியே செய்பவர்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவே செய்கிறார்கள்.

பலியிடுதல் கிடையாது(கிருஸ்த்து பலியாக மறியதால்..????)

பெரும்பாலும் சர்ச்சுகே போவதில்லை...?

சர்ச்சுகு போகும்போது நாகரிகமான அடையை அணிய செய்யுங்கள்...

எங்கே முதல் குழந்தைக்கு பலி கொடுகுறிர்கள்...????

ஜெபகூட்டத்தில் போய்பாருங்கள்...ஆட்டம்..பாட்டும்...
பன்னிதானே ...உங்களுக்கு ..உணவே..உங்க வெள்ளகார முதலாளிள் அதபத்தி பேசாம இருக்கத்தானே..அள்ளி கொடுகுராங்க
ள்.

Isa Koran said...

அருமையான சகோதரர் அபூ அப்துல்லாஹ் அவர்களுக்கு ஈஸா குர்-ஆன் உமரின் வாழ்த்துதல்கள்.

//திரு அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது:
இந்த கட்டுரை எந் நோக்கத்திற்காக என தெரியவில்லை.
நமக்கு விளங்கியவரை இஸ்லாம் என்பது கிருத்துவத்தை காப்பியடித்து உண்டாக்க பட்டது என நிறுவுவதற்க்கா ...? //

ஈஸா குர்-ஆன்:
இந்த கட்டுரை ஒரு தொடர் கட்டுரையாகும், அதாவது இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு உதவியாக இருக்கும் வண்ணமாக எழுதப்பட்டது. இந்த கட்டுரையின் முந்தைய கட்டுரைகளையும் படித்து பாருங்கள், இந்த தொடுப்பில் முழு தொடர் கட்டுரைகளை படிக்கலாம்: http://www.answering-islam.org/tamil/authors/morin.html

அதாவது, கிறிஸ்தவர்கள் இஸ்லாம் மற்றும் பைபிளின் பழைய ஏற்பாட்டு கலாச்சாரங்களை சரியாக புரிந்துக்கொள்ள சில விவரங்கள் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

//திரு அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது:
பைபிளில் இருந்து சுட்டி காட்ட பட்டுள்ள வசனங்களுக்கும் கிருத்தவத்திற்க்கும் எந்தவகையிலும் தொடர்பு இல்லை. இயேசுவின் வருகைக்கு பின் பழைய உடண்படிக்கை சட்டங்கள் பின்பற்ற அவாசியம் இல்லை என்கிறது இன்றைய கிருத்துவம் பிறகு எப்படி உங்களுக்கு உரியது என்கிறிர்கள்.//

ஈஸா குர்-ஆன்
பைபிளின் பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த யூத கலாச்சாரத்தில் உள்ள சில விவரங்களை இந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. பழைய ஏற்பாட்டின் அனேக உடன்படிக்கைச் சட்டங்கள் கிறிஸ்துவிற்குள் நிறைவேறுகிறது. ஆகையால், கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் வரலாறை படித்து தெரிந்துக்கொள்ள மேலும் பழைய ஏற்பாட்டில் தேவனின் பங்களிப்பு எவ்விதமாக இருந்தது என்பதை அறிந்துக்கொள்ள பழைய ஏற்பாட்டை படிக்கிறார்கள். பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் புதிய ஏற்பாட்டை கிறிஸ்தவர்கள் படிக்கும்போது, தேவனின் திட்டம் தெளிவாக புரிகிறது. எனவே, கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டையும் படிக்கவேண்டும், புதிய ஏற்பாட்டையும் படிக்கவேண்டும்.


//திரு அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது:
சர்ச்சிகுள் செல்லும்போது எந்த கிருத்தவன் கால்களை கலுவிக்கொண்டு செல்கிறான்.//

ஈஸா குர்-ஆன்:

சர்சிக்குள் செல்லும் போது, கிறிஸ்தவன் கால்களை கழுவவேண்டியதில்லை, ஏனென்றால்:
1) அவன் வீட்டிலிருந்தே குளித்துவிட்டு வருகிறான்.
2) குளிக்காமல் வந்தாலும், நீ குளித்துவிட்டு வரவில்லை என்று எங்கள் சபை போதகர்கள் அவர்கள் மீது பத்வா கொடுக்கமாட்டார்கள், தண்டனை கொடுக்கமாட்டார்கள்.
3) குளிக்காமல் வந்து தேவனை ஆராதிக்கும் போது, நீ உடல் சுத்தத்தோடு வரவில்லை என்று தேவன் கோபித்துக்கொள்ளமாட்டார்.
4) ஏனென்றால், வெளிப்புற சுத்தம் தேவை தான், ஆனால், அது மட்டும் போதும் என்று நினைப்பது தவறானதாகும். உடலை விட, உள்ளம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
5) கிறிஸ்து என்னும் மேசியா வரும் வரை யூத மக்களை நல்வழிப்படுத்த, யூத மக்கள் இதர மக்களின் மார்க்கங்களை பின்பற்றி, சோரம் போகாமல் இருக்க சில சட்டங்களை தேவன் பழைய ஏற்பாட்டில் கொடுத்தார். அதனை யூதர்கள் கடைபிடித்தனர். இதனை நாங்கள் அதாவது கிறிஸ்தவர்கள் அறிந்துக்கொள்ள பழைய ஏற்பாடு எங்களுக்கு உதவியாக இருக்கிறது.


.....தொடரும்......

Isa Koran said...

//திரு அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது:
கிருத்தவர்கள் சுன்னத் எனும் விருத்தசேதனம் செய்வது கிடையாது.அப்படியே செய்பவர்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவே செய்கிறார்கள்.

பலியிடுதல் கிடையாது(கிருஸ்த்து பலியாக மறியதால்..????)

பெரும்பாலும் சர்ச்சுகே போவதில்லை...?//

ஈஸா குர்-ஆன்:
கிறிஸ்து பலியானதால் கிறிஸ்தவர்கள் பலியிடத் தேவையில்லை. அட..உங்களுக்கும் சில விஷயங்கள் தெரிந்து இருக்கிறதே!

கிறிஸ்தவர்கள் சரீர பிரகாரமான சுன்னத் செய்வதில்லை… எங்கள் இருதங்களை சுன்னத் செய்யும் படி தேவன் விரும்புகிறார்.

ஆமாம், சிலர் சர்சுக்கே போவதில்லை.. இது வேதனைக்குரிய விஷயம் தான். ஓ கிறிஸ்தவர்களே,.. ஒரு முஸ்லிம் உங்களை குற்றப்படுத்தும்படி செய்துவிட்டீர்களே.. இனியாவது ரோஷம் உங்களுக்கு வந்து வாராவாரம் சபைக்குச் செல்வீர்களா? நன்றி அபூ அப்துல்லாஹ் அவர்களே.

//திரு அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது:
சர்ச்சுகு போகும்போது நாகரிகமான அடையை அணிய செய்யுங்கள்...
//

ஈஸா குர்-ஆன்:
ரொம்ப சரியாகச் சொன்னீங்க. சிலர் அநாகரீகமாக உடை அணிந்து சபைக்கு போகிறார்கள், இது வேதனையான விஷயம். கிறிஸ்தவ சபை போதகர்களே, கொஞ்சம் உங்க விசுவாசிகளுக்கு அறிவுரை இதுபற்றி சொல்லமுடியுமா? பாருங்க, நம்முடைய உடைஅலங்காரம் எந்த அளவிற்கு சபைக்கு கெட்டப்பெயர் கொண்டுவருகிறது?

இனியாவது கொஞ்சம் மாறுவீங்களா?

இன்னொரு முறை நன்றி சொல்கிறேன், அபூ அப்துல்லாஹ் அவர்களே!

ஆனால் ஒன்று, நாங்கள் எங்கள் பெண்களுக்கு புர்கா அணியச் சொல்லி, அடிமைகளப்போல வாழச் செய்யமுடியாது. இருக்கும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுவோம், பிரசங்கம் செய்வோம், அனேகர் மாறுவார்கள். அன்பினால் எவைகளையும் செய்யமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம், அராஜகத்தினால் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் மாற்றத்தை கொண்டுவரமுடியாது என்பதை நாங்கள் நம்புகிறோம்.

//திரு அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது:
எங்கே முதல் குழந்தைக்கு பலி கொடுகுறிர்கள்...????//

ஈஸா குர்-ஆன்
உங்களுக்கு தெரியாதா! நாங்களும் எங்கள் முதல் குழந்தை(க்காக)யை பலி கொடுத்துள்ளோம்.

இன்னும் புரியவில்லையா? எங்கள் ”கிறிஸ்தவம்” என்ற குடும்பத்தின் முதல் குழந்தையாகிய இயேசுக் கிறிஸ்துவிற்காகவும் பலி கொடுத்துள்ளோம். இன்னும் ஒரு படி மேலே சென்று, அவர் தன்னையே எங்களுக்காக பலியாக ஒப்புக்கொடுத்தார். எனவே, பலி இனி எங்களுக்கு தேவையில்லை.

Isa Koran said...

//திரு அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது:
ஜெபகூட்டத்தில் போய்பாருங்கள்...ஆட்டம்..பாட்டும்...
பன்னிதானே ...உங்களுக்கு ..உணவே..உங்க வெள்ளகார முதலாளிள் அதபத்தி பேசாம இருக்கத்தானே..அள்ளி கொடுகுராங்கள். //

ஈஸா குர்-ஆன்:
உங்களுக்கு விருப்பமாக இருந்தால், நீங்களும் உங்கள் அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் போது, நல்ல சில பாடல்களை பாடலாமே. அவரின் புகழை பாடலாமே! தாவுத் என்ற நபி… இறைவனுக்காக நன்றாக பாடல்களை பாடி, நாடனம் ஆடுவாராம். அனேக பாடல்களை அவர் இயற்றியுள்ளார், அவைகளை நாங்கள் “சங்கீதம்” என்ற நூலில் படிக்கிறோம், மோசேயும் இறைவனை புகழ்ந்து பாடியுள்ளார்? இன்னும் சாலொமோன் என்ற தாவீதின் குமாரன், இறைவனுக்கு தேவாலயம் கட்டி, இறைவனை துதிக்க பாடல் குழுவினரையும் அமைத்தாராம். இப்படி அனேகர் செய்து இருக்கும் போது, நீங்களும் ஏன் அல்லாஹ்விற்காக இப்படி பாடக்கூடாது?

”இல்லை, நாங்கள் இப்படி செய்ய எங்களுக்கு அனுமதி இல்லை” என்று நீங்கள் கூறினால், இந்த பழைய ஏற்பாட்டு நபிகள் தொழுதுக்கொண்ட இறைவனும், உங்கள் அல்லாஹ்வும் வெவ்வேறானவர்களா?!?

அடுத்தபடியாக, பன்னி பற்றி எழுதினீர்கள். நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு பன்னியை சாப்பிட்டதில்லை… கொஞ்சம் வெள்ளைப் பன்னியின் பிரியாணியை செய்துத் தரமுடியுமா உங்களால்?

என்னவோ, ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களுக்கு பன்னியை சப்ளை செய்தவர்கள் போலவும், பன்னி பிரியாணியை செய்து, ஜெபக்கூட்டங்களுக்கு அனுப்பி, அவர்கள் அதனை சாப்பிடும் போது கண்கொட்டாமல் பார்த்தது போலவும் எழுதுகிறீர்கள்? அண்ணே! கொஞ்சம் பார்த்து எழுதுங்கண்ணே!

நாங்க வெளிப்படையாக பேசுகிறோம்… அதனால், பன்னிப் பற்றியும் பேசுவோம், அதற்கு மேலும் பேசுவோம். பாவம் நீங்க, வெள்ளைக்காரன் என்றாலோ, அமெரிக்கா என்றாலோ உங்களுக்கு சிம்ம சொப்பனம் போல இருக்கிறது.

வாய்க்குள் போகிறது மனுஷனை தீட்டுப்படுத்தாது, இருதயத்திலிருந்து வெளிப்படுபவைகளே மனிஷனை தீட்டுப்படுத்தும் என்று ஒரு யூத தட்சன் 2000 ஆண்டுகளுக்குமுன்பு சொல்லிவிட்டு சென்றார் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அந்த தட்சனை பின்பற்ற நீங்கள் தயாரா? அவரை பின்பற்றினால், நீங்கள் சத்தியத்தை அறியமுடியும், விடுதலை அடைவீர்கள், அதன் பிறகு குடிக்காதே, தொடாதே போன்ற சின்ன சின்ன விஷயங்கள் பெரிய இமயங்களாக உங்களுக்கு தென்படாது….


....முடிந்தது.....

abu abdhullah said...

சகோதரர் அவர்களே...
குளிக்கிற விசயத்தை போருத்தவரையில்..
எந்த பள்ளிவாசலிலும் பத்வா கொடுக்கவில்லை..அப்படியே ..கொடுத்தாக காட்டினீர்கனால்...அது எப்படி ஈஸா அவர்களின் மார்கத்தை தவராக புரிந்து வைத்துள்ளதை போலவே.இஸ்லாத்தை தவராக புரிந்தவர்களுடைய சொந்த கருத்தாகும்.

// நாங்கள் எங்கள் பெண்களுக்கு புர்கா அணியச் சொல்லி, அடிமைகளப்போல வாழச் செய்யமுடியாது. இருக்கும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுவோம், பிரசங்கம் செய்வோம், அனேகர் மாறுவார்கள். அன்பினால் எவைகளையும் செய்யமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம், அராஜகத்தினால் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் மாற்றத்தை கொண்டுவரமுடியாது என்பதை நாங்கள் நம்புகிறோம்.//

உங்களுடைய சுதந்திர வேட்கையின் அளவு...13வயதிலேயே கர்ப்பம் அடைவதற்கும்....தகப்பனை கண்டுபிடிக்க தனியார் நிறுவனங்கள் செயல்படும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது பெருமைகுறியதே.

கடவுளின் கட்டளைக்கு மாறுசெய்பவன் உண்மையான இறைவிசுவாசியாக இருக்கமுடியாது.எதை அடிமைத்தனம் என்கிரிர்களோ ...அதை நோக்கிதான்..இன்று மேற்கத்திய பெண்கள் ஓடிவருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்



Isa Koran said...

அன்பான அபூ அப்துல்லாஹ் அவர்களுக்கு,

// அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது:

குளிக்கிற விசயத்தை போருத்தவரையில்..
எந்த பள்ளிவாசலிலும் பத்வா கொடுக்கவில்லை..அப்படியே ..கொடுத்தாக காட்டினீர்கனால்...அது எப்படி ஈஸா அவர்களின் மார்கத்தை தவராக புரிந்து வைத்துள்ளதை போலவே.இஸ்லாத்தை தவராக புரிந்தவர்களுடைய சொந்த கருத்தாகும்.//

ஈஸா குர்-ஆன்:
முதலாவது நீங்கள் குளிக்காமல் பள்ளிவாசலுக்கு சென்று பாருங்கள். நீங்கள் குளிக்காமல் வந்து இருக்கிறீர்கள் என்று அனைவருக்கும் தெரியும் படி செய்யுங்கள். யாராவது உங்களிடம் வந்து, இப்படி குளிக்காமல் வந்தால் அது ”சுன்னா” ஆகாது, என்று அறிவுரை கூறினால், அவர்களிம் “உடல் சுத்தம் அல்ல, உள்ளம் தான் சுத்தமாக இருக்கவேண்டும்” என்று நீங்கள் பதில் சொல்லிப்பாருங்கள். இதனை தொடர்ந்து செய்துப்பாருங்கள். மேலும் இந்த காரியங்களை இஸ்லாமிய நாடுகளில் செய்துப்பாருங்கள், அப்போது தான் உண்மை இஸ்லாம் என்ன என்பது தெரியவரும்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், முக்கியமில்லாத விஷயங்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் காட்டப்படும் முக்கியத்துவம், மற்றும் அதை மீறுபவர்களுக்கு தரப்படும் தண்டனைகளைக் கண்டால், மிகவும் வேதனையாக இருக்கும். உதாரணத்திற்கு: ரமளான் மாதத்தில் ஒருவன் மாலை நோம்பு திறப்பதற்கு முன்பாக சாப்பிட்டுவிட்டான் என்பதால் கொடுக்கப்படும் தண்டனையை கண்டால், நமக்கு கோபம் வரும். இன்னும் அனேக அல்ப விஷயங்களுக்காக இஸ்லாமியர்கள் போடும் சண்டைகள் இருக்கிறதே.. அடங்கப்பா.. அவைகளை சொல்லமுடியாது. ஒன்றுமில்லாத விஷயங்களுக்காக ரூம் போட்டு, விவாதம் புரியும் தமிழ் நாட்டி இஸ்லாமிய அறிஞர்களின் கூத்து இருக்கிறதே!?!...


//அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது:

உங்களுடைய சுதந்திர வேட்கையின் அளவு...13வயதிலேயே கர்ப்பம் அடைவதற்கும்....தகப்பனை கண்டுபிடிக்க தனியார் நிறுவனங்கள் செயல்படும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது பெருமைகுறியதே. //

ஈஸா குர்-ஆன்:
ஆமாம், உங்கள் அடிமைத்தனம், 6 வயது சிறுமியை 50 வயது கிழவன் நிச்சயம் செய்துக்கொள்ளலாம், 9 வயதாகும் போது, வெட்கமே இல்லாமல் அந்த பேத்தி வயது சிறுமியிடம் உடலுறவு கொள்ளலாம். இப்படிப்பட்ட இஸ்லாமிய கோட்பாடுகளினால், இஸ்லாமிய நாடுகளில் சிறுமிகள் படும் பாடுகளை கண்டு அவர்கள் மீது பரிதாபம் கொள்வீர்களா நீங்கள்.

13 வயதில் கர்ப்பம் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் நபி தனக்கு 50க்கும் அதிகமான வயதாகும் போது, ஒரு ஒன்பது வயது சிறுமியை கர்ப்பம் அடையச் செய்யும் செயலைச் செய்தாரே! இது கேவலமான செயல் என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றியதா?

சுதந்திரத்தை துர்பிரயோகம் செய்யும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அதற்காக சுதந்திரமே வேண்டாமென்றுச் சொன்னால், மனித வர்க்கம் அதிக கஷ்டப்படும், இப்போது இஸ்லாமிய நாடுகளில் ஜனங்கள் படும் கஷ்டங்களைப் போல.


// அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதியது

கடவுளின் கட்டளைக்கு மாறுசெய்பவன் உண்மையான இறைவிசுவாசியாக இருக்கமுடியாது.எதை அடிமைத்தனம் என்கிரிர்களோ ...அதை நோக்கிதான்..இன்று மேற்கத்திய பெண்கள் ஓடிவருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்//

ஈஸா குர்-ஆன்:

ஓ என் இஸ்லாமிய நண்பரே!... கொஞ்சம் உலகத்தை கவனித்துப் பாருங்கள்.

இஸ்லாமை விட்டு வெளியே செல்பவர்களுக்கு தண்டனை இல்லை என்று ஒரு அறிக்கை செய்து, அதை நல்லவிதத்தில் செயல்படுத்தில் பாருங்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய வருடங்களில், இஸ்லாமை நாம் அருங்காட்சியகத்தில் பார்க்கும் அறிய பொருட்களைப்போல பார்க்கவேண்டி வரும். இஸ்லாமை விட்டு வெளியே எப்போது செல்வோம் என்று கோடிக்கணக்கான பெண்கள், ஆண்கள் உலகத்தில் காத்திருக்கிறார்கள். கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற பயத்தில் வெறும் வெத்து முஸ்லிம்களாக கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஓ….இஸ்லாமியர்களே, கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

உயிருக்கு பயந்து இஸ்லாமியனாக இருப்பவன் ஒரு போலியான வேஷம் போட்டு, வாழ்ந்து வருகிறான். உயிருக்கு பயந்தாவது இஸ்லாமை விட்டு வெளியேறாமல் இருந்தால், அதுவே போதும் என்று இருப்பவர்கள் இஸ்லாமிய அறிஞர்கள். இந்த இரண்டையும் பார்த்துக்கொண்டு, ”ஆஹா என் அடியார்கள் என்னை தொழுதுக்கொள்கிறார்கள்” என்று ஒரு உண்மையான இறைவன் மகிழுவானா? நிச்சயமாக இல்லை.