ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3366 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:
அபூ தர்(ரலி) அறிவித்தார்
நான் (நபி(ஸல்) அவர்களிடம்),'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள்,'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்" என்று பதிலளித்தார்கள். நான்,'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள்,'ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான்,'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது" என்று கேட்டேன். அவர்கள்,'நாற்பதாண்டுகள்' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது" என்று கூறினார்கள்.
மேலும் அதே ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425 என்ற ஹதீஸையும் படிக்கவும், இந்த ஹதீஸின் முடிவுரையில் சில மாற்றம் உண்டு, ஆனால், சரித்திர விவரம் ஒன்று போலவே உள்ளது:
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425
அபூ தர்(ரலி) அறிவித்தார்
நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' (ஜெரூசலம் நகரிலுள்ள 'அல் அக்ஸா' பள்ளி வாசல்)" என்று பதிலளித்தார்கள். நான், 'அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது" என்று கூறினார்கள். பிறகு, 'உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்" என்று கூறினார்கள்.
நாம் தோராயமாக கணக்கிட்டால், ஆபிரகாம் வாழ்ந்த காலகட்டம் கி.மு. 2000 ஆகும், சாலொமோன் வாழ்ந்த காலம் கி.பி. 950 ஆகும். முஹம்மதுவின் கூற்றுப்படி படி, ஆபிரகாம் காபாவை கட்டினார் (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3365), அதன் அடித்தளத்தை "ஆபிரகாம் அமைத்தார்" (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3368). ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்பது பைபிளுக்கு முரண்பட்ட கருத்தாகும். உண்மையாகவே ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள் என்று கேட்டால், இதுவரை யாரும் இதற்கு சரியான பதிலை தரவில்லை. இந்த கட்டுரையை பொருத்தமட்டில், ஆபிரகாம் மக்காவிற்கு சென்றாரா இல்லையா என்பது முக்கியமல்ல, "ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று முஹம்மது நம்பினார்" அதனால் அவர் அப்படி கூறியுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. எருசலேமில் முதல் ஆலயத்தை கட்டியது சாலொமோன் ஆவார்.
ஆபிரகாமுக்கும், சாலொமோனுக்கும் இடையே இருப்பது 40 ஆண்டு கால இடைவெளி இல்லை, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளியாகும். இந்த முரண்பாடு குர்ஆனின் முரண்பாடு இல்லை, இதை ஏன் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், இது ஹதீஸில் காணப்படுகிறது. அதாவது முஹம்மதுவின் மூளை எதனை சரி என்று நம்பியதோ அதுதான் குர்ஆனிலும் உண்டு, ஹதீஸ்களிலும் உண்டு. குர்ஆனில் அனேக சரித்திர பிழைகள் உண்டு, அது போலவே, முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய ஹதீஸிலும் அனேக சரித்திர தவறுகளை காணலாம்.
மேலதிக விவரங்களுக்காக இந்த ஆங்கில கட்டுரையையும் படிக்கவும்: The Farthest Mosque?
ஆங்கில மூலம்: Abraham and Solomon
இதர குர்ஆன் முரண்பாடுகளை இங்கு படிக்கவும்
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
0 comments:
Post a Comment