அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 18, 2012

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3

 
 

-------------------------------------------------------------------------------

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3

(இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)

பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு நாம் இதுவரை கொடுத்துள்ள இரண்டு பதில்களை இங்கு படிக்கலாம்:

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 2 (அப்போஸ்தலர்கள் இயேசுவிற்கு பிறகு வந்தவர்களா?)

இரண்டாம் பாகத்தில் நாம் "பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பின் கீழ் பீஜே அவர்கள் எழுதிய சில வரிகளுக்கு பதிலைக் கண்டோம். இப்போது, இந்த மூன்றாம் பாகத்தில் அதே தலைப்பின் கீழ் அவர் எழுதிய மீதமுள்ள வரிகளுக்கு பதிலைக் காண்போம் (பக்கம் 5).

பீஜே அவர்கள் எழுதியது:

பைபிள் ஓர் அறிமுகம்

[...]

சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும் புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம். இயேசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், இயேசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் இயேசு எழுதியதையும் இயேசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். (பக்கம் 5)

கிறிஸ்தவன் எழுதியது:

அருமை இஸ்லாமிய அறிஞர் மற்றும் அனுபவம் வாய்ந்தவராகிய பீஜே அவர்கள் தமக்கு வாய்க்கு வந்தபடி பேசுவதும், தம் மனதுக்கு வந்தபடி எழுதுவதும் வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு அறிஞர் இவ்வளவு அலட்சியமாக எழுதுவார் என்பதற்கு இவரை விட்டால் எனக்கு தெரிந்தவரை யாரும் இருக்கமாட்டார்கள் நம் தமிழ் நாட்டிலே.

இஸ்லாமியர்களின் தனி உலகம்: இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு, இந்த உலகத்தில் அவர்கள் தங்களை பெரிய சக்கரவர்த்திகளாக எண்ணிக்கொள்வார்கள், அவர்களே சுயமாக சட்டங்களை இயற்றுவார்கள், கோட்பாடுகளை உருவாக்குவார்கள். கடைசியாக, அவர்கள் உருவாக்கிய அந்த கோட்பாடுகளுக்கு தகுந்த படி "உலகம் வாழவில்லை" என்று மற்றவர்கள் மீது குற்றம்சுமத்தி மற்றவர்களை தண்டிப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு உலக அறிவியல் தேவையில்லை, உலக சரித்திரம் தேவையில்லை, உலக சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை அவர்கள் காதுகொடுத்து கூட கேட்கமாட்டார்கள். தங்கள் இஸ்லாமிய அறிவியல் மற்றும் இஸ்லாமிய சரித்திரத்தை வைத்துக்கொண்டு, உலகத்தை ஜெயித்துவிடலாம் என்று கனவு காண்பார்கள். அவர்களாகவே சுயமாக சிலவற்றை உருவாக்கிக்கொண்டு, கற்பனை செய்துக்கொண்டு, மற்றவர்களிடம் வந்து, "நீங்கள் ஏன் இப்படி இஸ்லாமிய சட்டத்திற்கு/கோட்பாடுகளுக்கு எதிராக நடந்துக்கொள்கிறீர்கள்? உண்மையை விட்டு ஏன் விலகிவிடுகின்றீர்கள்?" என்று ஒன்றுமே தெரியாதவர்கள் போல கேட்பார்கள்.

இவர்களின் பேச்சை கேட்பவர்கள், ஏதோ ஏற்கனவே இவர்களின் அல்லாஹ்வை நம்புவதாகவும், இவர்களின் குர்‍ஆனை எல்லாரும் ஏற்றுக்கொண்டதாகவும் இவர்களாகவே கற்பனை செய்துக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் பேச்சை கேட்கும் மற்றும் இவர்களின் புத்தகங்களை படிக்கும் வாசகர்களில் பாதிக்கு மேல் குழப்பமடைந்து "அப்படியா!" என்று ஆச்சரியத்தோடு கேட்பார்கள்.

ஆனால், ஒரு சில வாசகர்கள் இவர்களின் பேச்சைக் கேட்டு, இவர்களின் புத்தகங்களை படித்து விட்டு, தனிமையில் சிந்தித்துப் பார்த்தால், உண்மை தெரியவரும், மற்றும் கீழ்கண்ட கேள்விகளை இவர்களிடம் கேட்கத்தோன்றும்:

1) முதலாவது இவர்களுக்கு நம்மேல் அதிகாரம் கொடுத்தவர் யார்?

2) இவர்களாகவே ஏதோ ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு, நம்மிடம் வந்து இப்படி கேட்கிறார்களே, நம்மையே குற்றப்படுத்தி கேட்கிறார்களே என்ற கேள்விகள் நமக்கு எழ ஆரம்பிக்கும்.

இதுவரை நான் மேலே சொல்லிய விவரங்களின் சாராம்சம் உங்களுக்கு புரிந்ததா? …..புரியவில்லையா?... இதோ உங்களுக்கு புரியவைக்கிறேன்.

பீஜே அவர்கள் எழுதிய வரிகளை இன்னொரு முறை படிப்போம்:

பீஜே அவர்கள் எழுதியது:

பைபிள் ஓர் அறிமுகம்

[...]

சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும் புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம். இயேசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், இயேசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் இயேசு எழுதியதையும் இயேசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். (பக்கம் 5)

மேற்கண்ட பீஜே அவர்களின் வரிகளில், முதலாவதாக, "2000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த இயேசு, ஏதோ எழுதியிருக்கிறார்" என்று திரு பீஜே அவர்கள் சுயமாக ஒரு கோட்பாட்டை (Theory) உருவாக்குகிறார்.

இரண்டாவதாக, ஏன் கிறிஸ்தவர்கள் இயேசு எழுதியதையும், கர்த்தரிடமிருந்து வந்ததையும் "பாதுகாக்காமல் விட்டுவிட்டீர்கள்" என்று கேள்வி கேட்கிறார்.

இவரின் வரிகளை படிக்கின்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் கேட்கவேண்டிய கேள்விகள் என்னவென்றால்:

1) "பீஜே அவர்களே, இயேசு எழுதியது என்ன என்று முதலாவது உங்களுக்குத் தெரியுமா?" இயேசு எழுதினாரா அல்லது இல்லையா என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?

2) இயேசு சுயமாக எழுதிய புத்தகம் எது? அல்லது தாம் சொல்லச் சொல்ல சீடர்கள் எழுதிய புத்தகம் எது? இப்படி எழுதப்பட்ட புத்தகம் உண்டா?

3) இயேசு எழுதிய புத்தகம் முதல் நூற்றாண்டில் காணப்படாமல் போய், எந்த ஒரு சீடரின் கண்களிலும் காணப்படாமல், ஏழாம் நூற்றாண்டில் உங்கள் முஹம்மதுவினாலோ அல்லது அல்லாஹ்வினாலோ கண்டுபிடிக்கப்பட்டு, அந்த புத்தகத்தை 20ம் நூற்றாண்டில் அதுவும் தமிழ் நாட்டில் வாழும் பீஜே அவர்களுக்கு வெளிப்படுத்தியது போல எழுதுகிறீர்கள் நீங்கள். இப்படி ஏதாவது வெளிப்பாடு உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது இயேசு எழுதியது உங்கள் குர்‍ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

4) திரு பீஜே அவர்கள் தம்மை "இறைவன் மாதிரி" கற்பனை செய்துக்கொண்டு, எல்லாமே தெரிந்தவர் போல (சர்வ ஞானம் படைத்தவர் போல) கற்பனை செய்துக்கொண்டு, கிறிஸ்தவர்களிடம் வந்து "ஏன் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கவில்லை?" என்று கேட்கிறார்.

5) "இயேசு எழுதினார்" என்று உங்களுக்கு எப்படி தெரியும்? எந்த சரித்திரத்தில் படித்தீர்கள்? நீங்கள் முதல் நூற்றாண்டில் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தீர்களா? இயேசுவின் சீடர்களோடு வாழ்ந்தீர்களா? அல்லது இயேசுவின் சீடர்களின் சீடராக இருந்தீர்களா? குறைந்தபட்சம் யூதாஸ் என்ற சீடனின் நண்பனாகவாவது இருந்தீர்களா?

நீங்களாகவே "இயேசு ஒரு புத்தகத்தை எழுதினார்" என்று கற்பனை செய்துக்கொள்வது, அது எங்கே என்று கிறிஸ்தவர்களிடம் கேட்பது, உங்க கற்பனை மிகவும் அருமையாக உள்ளது!

நான் மேலே குறிப்பிட்டது போல, இஸ்லாமியராகிய பீஜே அவர்கள் ஒரு கற்பனையை சுயமாக செய்துக்கொள்கிறார் அதாவது "இயேசு ஏதோ ஒரு புத்தகத்தை எழுதினார்" என்று கற்பனை செய்துக்கொள்கிறார். அதன் பிறகு அந்த புத்தகத்தை ஏன் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கவில்லை என்று கேட்கிறார். அவரின் முதல் கற்பனையே தவறானது, இதில் இரண்டாவது கேள்வியை வேறு கேட்கிறார் அவர். இதைத் தான் நான் இஸ்லாமியர்களின் தனி உலகம் என்ற தலைப்பில் எழுதினேன்.

நானே இராஜா, நானே மந்திரி, நானே சிப்பாய், எனக்கே எல்லாம் தெரியும், நான் யார் எழுதியதையும் படிக்கமாட்டேன், ஆனால், நான் சொல்வதை உலகம் கேட்கவேண்டும், கேள்வி மட்டும் கேட்கக்கூடாது இது தான் இஸ்லாமிய அறிஞர்களின் தாரக மந்திரம்.

இப்படி சுய கற்பனையை எழுதிவிட்டு, "கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்" என்று வேறு கூறுகிறார்.

சரி போகட்டும், பீஜே அவர்கள் வேதம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் குர்‍ஆனில் "இயேசு எழுதியது" பதிவு செய்யப்பட்டுள்ளதா? குறைந்த பட்சம் "இயேசு பேசிய" வார்த்தைகளாகவது உண்டா என்று பார்ப்போமா?

கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு பேசியதாக குர்‍ஆன் கூறும் இயேசுவின் வார்த்தைகள்

இயேசுவின் வார்த்தைகள் என்று குர்‍ஆன் கூறும் வசனங்கள், இயேசு முதலாம் நூற்றாண்டில் பேசிய வசனங்கள் அல்ல, அவைகள் "இயேசு பேசியதாக ஏழாம் நூற்றாண்டில் அல்லாஹ்வின் பெயரில் கூறப்பட்ட முஹம்மதுவின் கற்பனைகளாகும்".

ஏதோ இயேசு பேசியது தங்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், தங்களுக்கு மட்டுமே அவைகள் தெரியும் என்பது போலவும், எழுதிய பீஜே அவர்களின் குர்‍ஆனில் "இயேசு என்ன பேசியுள்ளார்?" என்பதை இப்போது கவனிப்போம், இயேசு பேசியவைகள் யாரிடம் உள்ளது என்பது இப்போது புரிந்துவிடும்?

இயேசு பேசியதாக குர்‍ஆன் கூறும் வசனங்களை நான் தொகுத்து கீழே கொடுத்துள்ளேன், இன்னும் ஒரு சில வசனங்கள் என்னால் கண்டுபிடிக்க முடியாமல் விடப்பட்டு இருந்தால், இஸ்லாமியர்கள் அவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

3:49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காககளிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது'' (என்றார்)

3:50. "எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!'' (என்றும் கூறினார்.)

3:51. "அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்'' (எனவும் கூறினார்)

3:52. அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்த போது "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்?'' என்று கேட்டார். [...]

5:72. [...] "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.

5:112. [...], "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!'' என்று அவர் கூறினார்.

5:114. "அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார்.

19:30. உடனே அவர் (அக்குழந்தை), "நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.

19:31, 32. நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.

19:33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது
'' (என்றார்)

43:63. ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "ஞானத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறினார்.

43:64. "அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி'' (என்றும் கூறினார்.)

61:6. "இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! [...]

61:14. நம்பிக்கை கொண்டோரே! "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார்'' என்று மர்யமின் மகன் ஈஸா சீடர்களிடம் கேட்ட போது " [...]
குறிப்பு: குர்‍ஆன் 5:116,117 மற்றும் 118 வசனங்களில் கூட‌ இயேசு பேசியதாக குர்‍ஆன் கூறுகிறது. ஆனால், இந்த வசனங்களை நாம் இப்போது மேலேயுள்ள பட்டியலில் சேர்க்கமுடியாது, ஏனென்றால், இந்த மூன்று வசனங்களையும் "இயேசு மறுமை நாளில் பேசுவார்" என்று குர்‍ஆன் கூறுகிறது. மறுமை நாளில் குர்‍ஆன் சொல்வது போல நடக்காது என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள், எனவே இவைகளை இயேசுவின் கடந்த கால பேச்சாக நாம் ஒரு எடுத்துக்காட்டுக்காக கூட எடுத்துக் கொள்ளமுடியாது.

இயேசு பேசியவைகளையும், எழுதியவைகளையும் நேரில் கண்டு கேட்டதாகவும், பார்த்ததாகவும் கற்பனை செய்துக்கொண்டு பீஜே அவர்கள் கிறிஸ்தவர்களிடம் கேள்விகளை கேட்கிறார். நாம் மேலே கண்ட வசனங்கள் தான் இயேசு பேசியதாக அவரது வார்த்தைகளாக குர்‍ஆன் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 15 வசனங்களில் இயேசு பேசியதாக குர்‍ஆனில் வருகிறது. அதுவும் இந்த வார்த்தைகள் இயேசு கூறியது அல்ல, இயேசுவின் பெயரில் குர்‍ஆன் ஆக்கியோன் புனைந்த‌ கற்பனை வார்த்தைகளாகும்.

ஆக, நான் பீஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், நேர்மையாக எழுதமுடியுமென்றால் எழுதுங்கள், இப்படி கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு, "இயேசு எழுதியவைகள் எங்கே" என்று அறியாமையில் கேள்விகளை கேட்கவேண்டாமென்று கூறிக்கொள்கிறேன். ஒரு வேளை உங்களிடம் இயேசு எழுதியவைகள் இருக்குமானால், அவைகளை மக்கள் முன்னிலையில் கொண்டு வாருங்கள். அவைகளை நீங்கள் எங்கே கண்டீர்கள், அவைகளின் ஆதாரங்களை போன்றவைகளையும் கொண்டு வாருங்கள்.

நீங்கள் முஹம்மதுவைப் பற்றிய விவரங்களை அறியவேண்டுமென்றால், நீங்கள் குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், இஸ்லாமிய சரித்திரங்களையும் படிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, அம்புலிமாமா, கோகுலம், ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களில் தேடினால் கிடைக்குமா?

அதே போலத் தான், இயேசுவின் வார்த்தைகளை நாம் அறிந்துக்கொள்ள, அவரை நேரடியாக கண்டு, அவரோடு வாழ்ந்தவர்களாகிய முதல் நூற்றாண்டு சீடர்கள் எழுதியதில் காணமுடியுமே தவிர, இயேசுவிற்கு பிறகு ஏழாம் நூற்றாண்டில் மக்காவில் வாழ்ந்த ஒரு மனிதனிடம் இயேசுவின் வார்த்தைகளை காணமுடியாது.

இயேசுவின் வார்த்தைகளை நாம் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களில் காணலாம். இஸ்லாமியர்களுக்கு புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கையை படிக்க விருப்பமிருப்பதில்லை, இதனை ஒருவகையான பயம் என்றும் கூறலாம். இயேசுவின் போதனைகள் எங்கே தங்கள் இஸ்லாமியர்களை கவர்ந்துவிடுமோ என்ற பயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் நற்செய்தி நூல்களை படிக்கவேண்டாம் என்று தடைபோட்டு வைத்துள்ளார்கள்.

இந்த சமயத்தில், "இயேசுவின் வார்த்தைகள்" என்று குர்‍ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் வசனங்களை மேற்கோள்களாக காட்டினேன். இப்போது, பீஜே அவர்களுக்கு மறுப்பாக கீழ்கண்ட கட்டுரைகளை அவர் முன்வைக்கிறேன். அதாவது இயேசுவின் வார்த்தைகளை பல தலைப்புகள் இட்டு மேற்கோள்களாக காட்டியுள்ளேன்.

1) தூது - The Message

2) இயேசு நமக்கு எவைகளை போதித்தார்?

3) இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்?

4) ஒரு சவால்

முடிவுரை : திரு பீஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், உங்கள் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் வஞ்சகம் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்துள்ளது. எனவே, ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தித்து எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உங்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்புக்கள் தொடரும் என்பதை தாழ்மையுடன் தெரித்துக்கொள்கிறேன்

இப்படிக்கு

தமிழ் கிறிஸ்தவன்.

http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-3.html

0 comments: