அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 18, 2012

”முஹம்மதுவின் அந்த வீடியோவைப் பற்றி” ஒரு முன்னாள் இஸ்லாமியரின் கருத்துக்கள்


சமீபத்தில் நடந்தது என்ன?
"முஹம்மதுவின் அந்த வீடியோவைப் பற்றி" ஒரு முன்னாள் இஸ்லாமியரின் கருத்துக்கள்

ஆசிரியர்: கேல்ட்

உலகமனைத்திலும் உள்ள இஸ்லாமியர்கள் அதிக கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கோபம் எந்த அளவிற்கு எட்டியுள்ளதென்றால், எகிப்து, லிபியா மற்றும் யெமன் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி மேலும், ஒரு  அமெரிக்க தூதரை கொன்றுள்ளார்கள், இதர தூதரக ஊழியர்களை காயப்படுத்தியுள்ளார்கள். யூடியூபில் வெளியான ஒரு வீடியோவினால் இஸ்லாமியர்களின் மனது புண்பட்டுள்ளது, இஸ்லாமின் நபியாகிய முஹம்மதுவை கேலி செய்வதாக அந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு முன்னாள் அரபி முஸ்லிமாவேன். இப்போது நான் இயேசுவை பின்பற்றுபவனாக இருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன். நீங்கள் என்னுடைய சாட்சியை  படிப்பீர்களானால், இஸ்லாமை, முஹம்மதுவை, குர்-ஆனை விமர்சிப்பதில் என்னுடைய பாணியை உங்களால் காணமுடியும்.  என்னுடைய விமர்சனங்கள் முக்கியமாக என்னுடைய இஸ்லாமிய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும், மேலும் என் முன்னாள் மதமாகிய இஸ்லாமிலிருந்து நான் வந்தவன் ஆகையால், அதன் அடிப்படையில் என் விமர்சனங்கள் காணப்படும். என் விமர்சனங்கள் நான் "உண்மை" என்று கருதும் விஷயங்கள் மீது ஆதாரப்பட்டு இருக்கும். ஆகையால், நான் ஏன் இஸ்லாமை, முஹம்மதுவை குர்-ஆனை  புறக்கணித்தேன் என்ற கேள்விக்கே இடமில்லை.

நான் என் வாழ்வின் அனேக ஆண்டுகள் அரேபிய நாடுகளில் மற்றும் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தபடியினால், இஸ்லாமை புறக்கணித்த அனேகரை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவர்களில் இரண்டு வகையினரை நான் சந்தித்துள்ளேன். இந்த இரண்டு பிரிவினரின் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. 

இந்த பிரிவினரில் முதல் வகையினர், முன்னாள் முஸ்லிம்களாவார்கள். இவர்கள் தங்கள் இஸ்லாமிய புறக்கணிப்பை அதிக தீவிரமாக விமர்சிக்கின்றனர். இவர்கள் தெரிந்தே உண்மையை திருத்தி, உண்மையோடு கற்பனையையும் சேர்த்து விமர்சிப்பார்கள். இதன் மூலம் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இஸ்லாம்  ஒரு தீய மார்க்கம் என்பதை காட்ட முயற்சி எடுக்கிறார்கள்.

இரண்டாவது வகையினர், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறிய முன்னாள் முஸ்லிம்களாவார்கள். இவர்கள் தங்கள் இஸ்லாமிய தாய் நாடுகளில் அனேக பாடுகளுக்கும், தீவிர கொடுமைகளுக்கும், நேரடியாகவோ மறைமுகமாகவோ உள்ளானவர்கள். 

இந்த வகையான மத்திய கிழக்கு முன்னாள் முஸ்லிம்கள் (தற்போது கிறிஸ்தவர்கள்), இதர முன்னாள் முஸ்லிம்களை அழைத்து, 
"இஸ்லாம் எப்படிப்பட்ட தீய மார்க்கமாக இருக்கிறது" என்பதை வெளிக்காட்ட அனேக கூட்டங்களை போட்டு பேசுவார்கள். மேலும், தாங்கள் இஸ்லாமை ஏன் வெறுக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் "இவைகள் தான்" என்பதை மற்றவர்களுக்கு விளக்க இவர்கள் முயற்சி எடுக்கிறார்கள்.

இஸ்லாமுக்கு எதிராக போராட்டம் செய்யும் இந்த வகையான முன்னாள் முஸ்லிம்களை நான் கவனித்து பார்த்துள்ளேன். தாங்கள் சொல்லும் விவரங்களில் உண்மை உள்ளதா என்பதை பார்த்து செயல்பட இவர்கள் தவறிவிடுகின்றனர். இவர்களை பொறுத்தமட்டில், இஸ்லாமுக்கு, முஹம்மதுவிற்கு குர்-ஆனுக்கு எதிராக விமர்சனம் செய்தால் அதுவே போதும் என்று நினைத்து விடுகின்றனர்[1].

ஆன்சரிங் இஸ்லாம்  என்ற தளத்தில் ஆழ்ந்த இஸ்லாமிய விமர்சனம் செய்யப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த தளத்தில் கட்டுரைகளை எழுதும் நாங்கள் அனைவரும், எங்கள் கண்களை உண்மையின் பக்கம் சாய்த்து, நாங்கள் முன் வைக்கும் விமர்சனங்களை நிருபிக்கமுடியுமா என்பதை கவனத்தில் கொண்டு விமர்சிக்கிறோம். உண்மை என்று நிருபிக்க முடிந்த விவரங்களை மட்டுமே நாங்கள் எழுதுகின்றோம். நாங்கள் உண்மைக்கு வெளியே சென்று விமர்சிப்பதில்லை, மேலும் எங்கள் விவரங்களில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவைகளை சரி செய்துக்கொள்கிறோம்.  இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, அனேக தவறான விவரங்களை எங்கள் தளத்திலிருந்து நீக்கியுள்ளோம், மேலும் தவறுகளை சரிபடுத்தியுள்ளோம். உண்மையில் அனேக நேரங்களில், நான் இந்த தளத்தின் உள்வட்ட தள நிர்வாகிகள் குழுவில் இருந்துக்கொண்டு, எங்களிடம் பதிக்க வரும் புதிய கட்டுரைகளை சரி பார்த்துள்ளேன், மேலும் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளையும் படித்துப்பார்த்து, சொல்லப்பட்ட விவரங்கள் உண்மையானவையா என்று சோதித்துள்ளேன். முக்கியமாக முஹம்மது, இஸ்லாம் போன்ற விவரங்கள் பற்றி எழுதும் போது, ஒரு சிறிய தவறான குற்றச்சாட்டு கூட நாங்கள் தெரியாமல் இவர்கள் மீது சுமத்திவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். உண்மையையே சொல்லவேண்டும் என்று எங்களை ஒப்புக்கொடுத்துள்ளோம், தவறான சொந்த விமர்சனங்களை அல்ல.

கடந்த 17 ஆண்டுகளாக இணைய தளத்தில் நான் செய்த உரையாடல்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நாம் உண்மையை நேசித்து அதனை அன்போடு இஸ்லாமியர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதாகும். நாம் உண்மையாக இஸ்லாமியர்களை நேசிக்கவேண்டும், மேலும் அவர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று மனதார விரும்பவேண்டும். உண்மையோடும், அன்போடும் அவர்களின் மற்றும் நம்முடைய நம்பிக்கைப் பற்றிய உரையாடல்கள் தான் இப்போதைய தேவையாக உள்ளது.  நாம் முகஸ்துதி செய்யவேண்டிய அவசியமில்லை, இஸ்லாமுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, வீண் விளம்பரங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கடந்த காலங்களில் அறியாமையினால் நானும் இப்படிப்பட்ட உபயோகமற்ற உரையாடல்களில் ஈடுபட்டு இருந்தால், அதற்காக இப்போது நான் மனம் வருந்துகிறேன். ஏனென்றால், ஆரம்ப காலங்களில் நான் முதிர்ச்சி அடையாதவனாக இருந்துள்ளேன், அல்லது இஸ்லாமியர்களை நேசிப்பதை விட்டுவிட்டு அதிக கோபம் அடைந்தவனாக இருந்துள்ளேன்.

"முஸ்லிம்களின் அறியாமை" என்ற பெயரில் முஹம்மதுவை பரியாசம் செய்யும் வீடியோவில் அனேக நிருபிக்கப்படாத விஷயங்களும், சரித்திர தவறுகளும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பற்றி காணப்படுகிறது. தனிப்பட்ட முறையில் நான் கூறவேண்டுமென்றால், இந்த வீடியோவை தயாரித்தவர்கள் சத்தியத்தை அவர்கள் நேசிக்கிறார்கள் என்பதற்காகவோ, அல்லது முஸ்லிம்களை நேசிக்கிறார்கள் என்பதற்காகவோ தயாரிக்கவில்லை.  அதற்கு பதிலாக இஸ்லாமிய நபிக்கு எதிரான தங்களின் தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணமே இதற்கு முக்கிய காரணமாக காணப்படுகிறது. 

ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஒருவரையும் வெறுக்கக்கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளான். நாம் முஸ்லிம்களை நேசிக்கவேண்டும். அவர்களை நேசிக்கவில்லையானால், அவர்களை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுங்கள். வெறுப்பின் உணர்வோடு உண்மையை சத்தமாக சொல்லவேண்டாம்.  உண்மையை அமைதியாகவும் அன்பாகவும் சொல்ல உங்களால் சொல்லமுடியாவிட்டால், நீங்கள் சும்மா இருந்துவிடுங்கள், இஸ்லாமியர்களுக்கு அன்போடும் சாந்தத்தோடும் சத்தியத்தை சொல்பவர்கள் சொல்ல வழிவிடுங்கள்.  எபேசியர் 4:15 நமக்கு ஞாபகப்படுத்தும் விவரம் இது தான்: "அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்".

கடைசியாக, எனக்கு இறைவன் ஒரு ஆவிக்குரிய குடும்பத்தையும், வாழ்வையும் கொடுத்து இருந்தாலும், இன்னும் என்னுடைய இதர சொந்தக்காரர்கள் இந்நாள் வரைக்கும் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள். ஆகையால், இந்த வீடியோவின் மூலம் அவர்கள் அடைந்த மன வேதனையை, அவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் நான் உணரமுடிகிறது, அதற்காக இஸ்லாமியர்களுக்காக நான் மனம் வருந்துகிறேன்.  ஆகையால், இந்த வீடியோவை நான் புறக்கணிக்கிறேன், ஏனென்றால், இஸ்லாமிய நபியாகிய முஹம்மது பற்றிய உண்மைகளை இந்த வீடியோ பிரதிபலிக்கவில்லை. அதே சமயத்தில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல்களை நான் கண்டனம் செய்கிறேன்.  தாக்குதல்கள் தவிர இதர வகையான பதில்களையும் இஸ்லாமியர்கள் கொடுத்து இருக்கலாம், அதைவிட்டுவிட்டு வன்முறையில் ஈடுபடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.  நம்முடைய தவறான செய்லகள் பற்றிய உண்மையான மனஸ்தாபத்தை இறைவன் நமக்கு கொடுப்பாராக.

எல்லா இஸ்லாமியர்களும் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் ஆசையாக இருக்கிறது, "தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.  எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.   விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." (ரோமர் 10:2-4)


பின்குறிப்புகள்:
1) இதே கருத்தை இஸ்லாமியர்களிடமும் கேட்கப்படுகிறது, அதாவது பைபிள் மற்றும் கிறிஸ்தவத்திற்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பும் இஸ்லாமியர்களும் இதனை கருத்தில் கொள்ளவேண்டும். ஆனால், இந்த கட்டுரையில் உட்கருத்து இதைப் பற்றியது அல்ல.



http://isakoran.blogspot.in/2012/10/blog-post.html

குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும் - சாலொமோனின் பறக்கும் பாய்!

குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும்

சாலொமோனின் பறக்கும் பாய்!

குர்-ஆன் சிறிது கூட சிந்திக்காமல், அல்லாஹ் சாலொமோனுக்கு காற்றின் மீது அதிகாரம் கொடுத்து இருந்தார், ஆகையால் அவர் இரண்டு மாத பிரயாண தூரத்தை ஒரு நாளுக்குள் கடந்துவிடுகிறார் என்று கூறுகிறது.

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். (குர்-ஆன் 21:81) (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)

வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் . அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.(குர்-ஆன் 21:81) (பீஜே தமிழாக்கம்)

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (குர்-ஆன் 34:12)  (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.(குர்-ஆன் 34:12)(பீஜே தமிழாக்கம்)

சாலொமோனுக்கு ஒரு பறக்கும் பாய் இருந்ததாகவும், அதன் மூலம் அவர் பிரயாணம் செய்ததாகவும் இஸ்லாமிய பாரம்பரியம் கூறுகிறது. இஸ்லாமிய விரிவுரையாளர்களில் சுன்னி பிரிவைச் சேர்ந்த இப்னு கதீர் ஸூரா 21:81 பற்றி கீழ்கண்ட விதமாக விளக்குகிறார்:

கட்டைகளால் செய்யப்பட்ட ஒரு பாய் போன்ற ஒன்று சாலொமோனுக்கு இருந்தது. அதன் மீது அவர் தன் எல்லா வஸ்துக்கள், குதிரைகள், ஒட்டகங்கள், கூடார பொருட்கள், படைவீரர்கள் அனைத்தையும் வைத்துவிட்டு, இந்த பாயை அப்படியே கொண்டுச் செல்லும் படி காற்றுக்கு கட்டளையிடுவார். இந்த பறக்கும் பாய் மேலே எழும்பும் போது, அதன் கீழே இவரையும் அக்காற்று அப்படியே கொண்டுச் செல்லும். வெயிலிலிருந்து இவர் பாதுகாப்பாக அப்படியே நிழலில் பிரயாணம் செய்வார். அவர் எங்கு செல்லவேண்டும் என்று கட்டளையிடுவாரோ அந்த இடத்திற்கு காற்று இவைகள் அனைத்தையும் கொண்டுச் செல்லும். தாம் செல்லவேண்டிய இடம் வந்த உடன், அந்த மரத்தால் செய்யப்பட்ட பாய் கீழே இறங்கும், அதன் பிறகு எல்லாவற்றையும் அதிலிருந்து கீழே இறக்கிக்கொள்வார்கள். . . (Tafsir Ibn Kathir (Abridged) (Surat Al-Isra', Verse 39 To the end of Surat Al-Mu'minun), by a group of scholars under the supervision of Shaykh Safiur Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, London, Lahore; First Edition: July 2000], Volume 6, pp. 476-477)

மேலும் ஸூரா 34:21ம் வசனம் பற்றி இப்னு கதீர் கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்:

தாவூத் மீது அல்லாஹ் குவித்த ஆசீர்வாதங்களை குறிப்பிட்டுவிட்டு, அல்லாஹ் தாவூத்தின் மகனாகிய சுலைமானுக்கு (சாலொமோனுக்கு) கொடுத்த ஆசீர்கள் பற்றி பேசுகிறார் (இவ்விருவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்). அல்லாஹ் சுலைமானுக்கு காற்றின் மீது அதிகாரத்தை கொடுத்தார். இந்த காற்றானது சுலைமானை ஒரு பறக்கும் பாய் மீது கொண்டுச் செல்லும், செல்வதற்கு ஒரு மாதமும், திரும்பி வருவதற்கு ஒரு மாதமும் ஆகும் . அல் ஹசன் அல் பஸ்ரி இவ்விதமாக கூறுகிறார்: "காலையிலே தமாஸ்கஸ்ஸிலிருந்து சுலைமான் புறப்படுவார், இஸ்தகாரில் சேர்ந்துவிடுவார், அங்கே தன் மதிய உணவை உண்பார். திரும்பவும் இஸ்தகாரிலிருந்து புறப்படுவார் ஒரு மாதம் காற்றிலே வேகமாக பயணம் செய்வார், அதன் பிறகு காபுலை வந்து அடைவார். இஸ்தகாருக்கும் காபுலுக்கும் இடையே ஒரு மாத பிரயாணம் ஆகும். (Tafsir Ibn Kathir (Abridged) (Surat Al-Ahzab, Verse 51 to the end of Surat Ad-Dukhan), Shaykh Safiur Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, London, Lahore; First Edition: September 2000], Volume 8, p. 70; capital emphasis ours)

காலஞ்சென்ற இஸ்லாமிய அறிஞர் முஹம்மது அஸத் என்பவர் ஸூரா 34:21ம் வசனம் பற்றி கீழ்கண்டவாறு பின்குறிப்பினை எழுதுகிறார்.

"மேலும் ஸூரா 21:81ஐயும் மற்றும் அதன் பின்குறிப்பையும் படிக்கவும். சுலைமானுக்கு சம்மந்தப்பட்ட புராண கட்டுக் கதைகள் பற்றி மேலும் அறிய ஸூரா 21:82ம் வசனத்தை பார்க்கவும். (மூலம்)

இஸ்லாமிய அறிஞர் முஹம்மது அஸத் அவர்கள் சாலொமோன் பற்றிய குர்-ஆனின் கதைகளை கட்டுக்கதைகளாகவும், புராணக்கதைகளாகவும் கருதுகிறார் என்பதை படிக்கும் வாசகர்களாகிய உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?

ஆங்கில மூலம்: Fables and Legends of the Quran - Solomon's Flying Carpet

குர்-ஆனின் புராணங்கள் மற்றும் கட்டுக்கதைகள் பற்றிய இதர கட்டுரைகள் 


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.



http://isakoran.blogspot.in/2012/09/blog-post.html


குர்-ஆனும் விஞ்ஞானமும் - சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)

குர்-ஆனும் விஞ்ஞானமும்


சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)

எப்படி ஒரு சிறிய புழு சாலொமோனுடைய முழு தடியையும் தின்றுவிட்டது? அந்த புழு தடியை முழுவதும் திண்ணும் வரை பல மாதங்கள் சாலமோன் அப்படியே விழாமல் நின்றுக்கொண்டு இருந்தாரா?

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழுவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்கமாட்டோமே" என்பதை ஜின்கள் விளங்கிக்கொண்டன. (குர்-ஆன் 34:14) (பீஜே தமிழாக்கம்)

சாலொமோன் எறும்புகள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் (குர்-ஆன் 27:19). தன்னைச் சுற்றியுள்ள புழூ பூச்சிகளின் பேச்சுக்களை தொடர்ந்து எப்போதும் கேட்டுக்கொண்டு எப்படி அவரால் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்கமுடிந்தது? தன் காதுகளால் தொடர்ந்து இந்த சத்தங்களை கேட்டு அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்திருப்பார்.

27:17. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

27:18. அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது" என்று ஓர் எறும்பு கூறியது .

27:19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!" என்றார். (குர்-ஆன் 27:17-19)
 

ஆனால், எறும்புகள் மனிதர்கள் பற்றி இப்படி நினைக்கின்றன என்றுச் சொல்வதை யார் நம்புவார்கள்? நான் எறும்புகள் மீது காலை வைக்கும் போது அவைகள் ஓடி ஒளிந்துக் கொள்வதை நான் காணவில்லை. நாம் அவர்கள் மீது கால்களை வைத்து மிதித்தால், அவைகள் மரித்துவிடுவார்கள் என்று எறும்புகள் அறிந்திருந்தால், ஏன் அவைகள் சீக்கிரமாக ஓடி மறைந்து ஒளிவதில்லை?

சாலொமோனுக்கு பறவைகளிலும், ஜின்களிலும் படைகள் இருந்தன என்று குர்-ஆன் கூறுகிறது (27:17). இதிலும் மேலும் ஆச்சரியப்படும் விவரம் என்னவென்றால், ஒரு புழுக்கொத்தி பறவை சாலொமோனுடன் செய்த நீண்ட உரையாடலாகும். இதனை நாம் குர்-ஆன் 27:20-28 வரையுள்ள வசனங்களில் காணலாம். இது விஞ்ஞானத்திற்கு ஏற்காத ஒன்றாக காணப்படுகின்றது.

27:20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். "ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா ? என்றார்.

27:21. "அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்" (என்றும் கூறினார்).

27:22. (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன் " என்று கூறியது.

27:23. "நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது"

27:24. "அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள்" (என்றும் கூறியது.)

27:25. வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான்.

27:26. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி.

27:27. "நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்'' என்று அவர் கூறினார்.

27:28. "எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!" (என்றும் கூறினார்).

குர்-ஆனின் படி, சாலொமோன் இந்த பறவையை ஷேபா அரசியிடம் அனுப்புகிறார். அந்த அரசி வந்து அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறார், மற்றும் இதர கேள்விகளையும் கேட்கிறார்.

இந்த ஷேபா அரசியைப் பற்றி பைபிள் வேறு வகையான விவரங்களைத் தருகிறது. அதாவது இந்த இராணி, சாலொமோனின் ஞானம் மற்றும் இதர சாதனைகளை பற்றி கேள்விப்பட்டு, அவரை சோதிக்கும் படி வருகிறார். பல கடினமான கேள்விகளை சாலொமோனிடம் கேட்டு அவர் கொடுத்த பதில்களால் ஆச்சரியப்பட்டு இஸ்ரவேலின் தேவனை புகழ்ந்து பேசுகிறாள். குர்-ஆன் சொல்வது போல, சாலொமோன் ஷேபா இராணியை "மிரட்டவில்லை", அதற்கு பதிலாக அந்த இராணி சாலொமோனின் ஞானத்தைப் பற்றி ஆச்சரியப்பட்டு, தேவன் அவருக்கு கொடுத்திருந்த ஆசீர்வாதங்களை கண்டதினால், ஆச்சரியப்பட்டு தேவனை புகழுகிறாள் (1 இராஜாக்கள் 10:9).

ஆங்கில மூலம்: Solomon and Animals

இதர குர்-ஆன் முரண்பாடுகள்

 


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.



சாலொமோன் மீது குர்-ஆனின் அவதூறு: பிசாசுக்களோடு ஐக்கியம்




சாலொமோன் மீது குர்-ஆனின் அவதூறு: பிசாசுக்களோடு ஐக்கியம்

பைபிள் தீர்க்கதரிசிகளை, இறைத்தூதர்களை பாவிகளாக சித்தரிக்கிறது என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள் என்று பைபிள் சித்தரிப்பதினால், இதுவே பைபிள் திருத்தப்பட்டுள்ளது என்பதற்கு சான்று என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இந்த தலைப்புப் பற்றி நம் தளத்தில் வேறு கட்டுரைகளில் பதில்களை எழுதியுள்ளோம். எனவே, ஏன் பைபிள் தீர்க்கதரிசிகளின் எதிர்மறைவான நடத்தைகளையும் சொல்கிறது என்பதற்கு விளக்கம் அல்லது மறுப்பு இந்த கட்டுரையில் சொல்லப்போவதில்லை.

அதற்கு பதிலாக, இதே நிபந்தனையை நாம் குர்-ஆனோடு உரசப்போகிறோம், அதாவது எப்படி முஸ்லிம்களின் வேதம் அல்லாஹ்வின் தூதர்கள் மீது அவதூறுகளை கூறுகிறது என்பதை காணப்போகிறோம். இந்த தலைப்பு பற்றிய நம்முடைய இதர கட்டுரைகளின் தொடர்ச்சி தான் இந்த தற்போதைய கட்டுரையாகும், முந்தைய அக்கட்டுரைகளை கீழே தரப்பட்ட தொடுப்புக்களில் படிக்கவும்:

1) தீர்க்கதரிசிகளும், பாவங்களும்

2) ஆதாம், ஏவாள் மற்றும் ஷிர்க் என்ற பாவமும்.`

இந்த கட்டுரையில், சலொமோனுக்கு எப்படி ஜின்கள்(பிசாசுக்கள்) வேலை செய்தன என்பதைப் பற்றிய குர்-ஆனின் வசனங்களில் காணப்படும் அவதூறை காணப்போகிறோம். "தேவன் ஒருவரே" என்று பிசாசுக்கள் அறிந்திருந்தன என்று பரிசுத்த பைபிள் கூறுகிறது:

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன . (யாக்கோபு 2:19)

மேலும் இயேசு உன்னத தேவனின் பரிசுத்த குமாரன் என்றும், அவர் தங்களை அழித்துவிடுவார் என்றும் அவைகள் அறிந்திருந்தன:

ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. (மாற்கு 3:10,11)

அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (லூக்கா 8:28-31)

ஆகையால், கிறிஸ்தவ விசுவாசிகள் சாத்தானோடும், அவனோடுள்ள இதர பிசாசுக்களோடும் ஐக்கியம் கொள்ளக்கூடாது:

இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே . நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? (1 கொரிந்தியர் 10:19-22)

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (2 கொரிந்தியர் 6:14-16)

பரிசுத்த பைபிளின் எச்சரிப்பின் படி, ஒரு உண்மையான விசுவாசி சாத்தானோடும், அவனோடுள்ள இதர சகாக்களோடும் ஐக்கியம் கொள்ளக்கூடாது. ஏதாவது ஒரு தீர்க்கதரிசி சாத்தானோடு ஐக்கியம் கொள்ளவோ, அல்லது அவனை கூட்டாளியாக கொண்டு இருக்கவோ செய்தால், அந்த நபி தேவனுக்கு விரோதமான பாவம் செய்கிறார் என்று பொருள்.

மேலும் உண்மையான விசுவாசிகள், சாத்தான்களோடு ஐக்கியம் கொள்ளமாட்டார்கள் என்று அந்த சாத்தான்களுக்கே தெரியும்.

அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். (மத்தேயு 8:28,29)

பிசாசுக்கள் இயேசுவிடம் "உங்களுக்கு எங்களிடம் என்னவேலை இருக்கிறது" என்று கேட்டனர், அதாவது மனிதர்களுக்கும், பிசாசுக்களுக்கும் இடையே எந்த ஒரு ஒற்றுமையும், வேலையும் இல்லை என்று அவைகள் மறைமுகமாக கூறின. விசுவாசிகளுக்கும் பிசாசுக்களுக்கும் இடையே எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் ஒற்றுமையான வேலை இருக்காது, அவர்கள் ஒன்றாக சேர்ந்து எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை.

ஆனால், சாலொமோன் சாத்தான்கள் அல்லது ஜின்களை வைத்து இருந்தார், அவைகள் அவருக்காக வேலை செய்தார்கள் மற்றும் அவர் அவர்களோடு ஐக்கியம் கொண்டு இருந்தார் என்று குர்-ஆன் கூறுகிறது:

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.

இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்றி வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம். (குர்-ஆன் 21:81,82)

"பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்." (27:39)

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: "உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; "இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" என்று (ஸுலைமான்) கூறினார். (குர்-ஆன் 27:39,40)

மேற்கண்ட வசனங்கள் பற்றி இபின் கதீர் விரிவுரை கீழ்கண்ட விதமாக தருகிறார்:

["பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார் . . . ]

[ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று:. . .] - முஜாஹித் இது ஒரு "பலம் பொருந்திய ஜின்" என்று விளக்கம் அளிக்கிறார், அபூ ஸாலிஹ் "இந்த ஜின் ஒரு மிகப்பெரிய மலையைப்போன்ற பெரிய ஜின்" என்று விளக்கம் அளிக்கிறார்...

[நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்] - இதைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) "நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன்பாக" என்று விளக்கம் அளிக்கிறார். அஸ்ஸுத்தி மற்றும் இதர அறிஞர்கள் இவ்விதமாக கூறுகிறார்கள்: "அவர் நீதி செலுத்துவதற்கும் மக்களை ஆளுவதற்கும் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருப்பார், மற்றும் அங்கே இருந்துக்கொண்டு மக்களை ஆளுவார், உணவு அருந்துவார், அந்த இருக்கையில் அவர் காலை முதற்கொண்டு மதியம் வரைக்கும் உட்கார்ந்து இருப்பார்". . .

[நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்] - இப்னு அப்பாஸ் இவ்வரிகளுக்கு கீழ்கண்ட விளக்கம் அளிக்கிறார்: "நிச்சயமான நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்" என்று ஜின் கூறும்போது, அதற்கு சுலைமான் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) : "இதைவிட மிகவும் வேகமாக எனக்கு வேண்டும்" என்று மறுமொழியாக அளித்தார். சுலைமானின் வார்த்தைகளினால் அறியப்படுவது என்னவென்றால், அந்த அரசியின் சிம்மாசனத்தை சீக்கிரமாக கொண்டு வந்து, தனக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கின்ற அதிகாரத்தையும், வல்லமையையும், வேலைக்காரர்களின் (ஜின்கள், ஷைத்தான்கள்) திறமையையும் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினார். தனக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கும் அதற்கு முன்பும், பின்பும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை, இதன் மூலமாக "பில்கிஸ்" என்ற அரசிக்கு முன்பாகவும், அவ்வரசியின் மக்களுக்கு முன்பாகவும் தன் நபித்துவத்திற்கு சரியான சான்றாக அமையும். அதாவது அந்த அரசி தன் நாட்டிலே இருக்கும் போதே, இங்கு வருவதற்கு முன்பாகவே, பூட்டப்பட்ட பல அறைகளுக்கு அப்பால் இருக்கும் அவளின் சிம்மாசனத்தை கொண்டு வந்துவிட்டால், இந்த வல்லமை வெளிப்படும் என்று சுலைமான் கருதினார். சுலைமான் "இதைவிட மிகவும் வேகமாக எனக்கு வேண்டும்"… என்று கூறுகிறார்….

[இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்] - இந்த வரிகளுக்கு இப்னு அப்பாஸ் இவ்விதமாக விளக்கமளிக்கிறார்: "இதில் கூறப்படுபவர், சுலைமானின் 'ஆஸிப்' என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் ஆவார். இதே விவரம் முஹம்மத் பின் இஷாக் என்பவரும் அறிவித்துள்ளார், அவர் யாஜித் பின் ருமன் என்பவரிடம் கேட்டறிந்துள்ளார், அதாவது இவ்வசனத்தில் கூறப்படுபவர் ஆஸிப் பின் பர்கியா ஆவார், மேலும் இவர் அல்லாஹ்வின் சிறப்புமிக்க பெயர்களை அறிந்தவர், உண்மையான நம்பிக்கையாளர் ஆவார். கதாதா கூறும் போது: "இவர் மனிதர்களிலேயே நல்ல நம்பிக்கையாளர், இவர் பெயர் ஆஸிப் என்பதாகும்".

["உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்;] இதன் பொருள் என்னவென்றால், உங்கள் கண்களை உயர்த்தி எதுவரை பார்க்கமுடியுமோ அதுவரை நீங்கள் பாருங்கள், பிறகு எப்போது நீங்கள் கண்களை சிமிட்டுவீர்களோ அந்த நேரத்திற்குள் அந்த சிம்மாசனம் உங்கள் முன் இருக்கும்" என்பதாகும். அதன் பிறகு அவர் எழுந்து உளு செய்துவிட்டு அல்லாஹை (அவனே உயர்த்தப்படுவானாக) தொழுதுக்கொண்டார். முஜாஹித் கூறும் போது: "அவர் கூறினார், ஓ உயர்ந்த கணம்பொருந்தியவரே" (இந்த விரிவுரையின் மூல இணைய தொடுப்பு - Source)

மேலும், கடைசியாக இந்த விவரம் பற்றிய குர்-ஆனின் வசனம் :

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (34:12)

அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்). (34:13)

அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை அவர் கீழே விழவே "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிந்திருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (34:14)

இறைவனின் உண்மையான வார்த்தையாகிய பைபிள் தேவனுடைய ஆலயத்தை கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தது, ஷைத்தான்களோ, இதர பிசாசுக்களோ அல்ல அவர்கள் மனிதர்கள் என்றும், அவர்களை மேற்பார்வையிட்டது சாலொமோன் என்றும் கூறுகிறது (பார்க்க 1 இராஜாக்கள் 3-8, 1 நாளாகமம் 22, 28-29, 2 நாளாகமம் 2-7ம் அதிகாரங்கள்)

மேலும், மேற்கண்ட குர்-ஆன் வசனம் சாலொமோன் ஷைத்தான்களோடு ஐக்கியம் கொண்டு அவர்களிடம் வேலை செய்வித்தார் என்றுச் சொல்லி அவதூறு உண்டாக்கியது மட்டுமல்லாமல், இறைவனுடைய பரிசுத்த இலக்கணத்திற்கும் அவதூறு விளைவித்துள்ளது. அதாவது இறைவனது பரிசுத்த ஆலயத்தை ஷைத்தான்களும், பிசாசுக்களும் கட்டினார்கள் என்றுச் சொல்லி கேவலப்படுத்தியுள்ளது.

சில மனிதர்கள் சாலொமோன் பற்றி ஷாத்தான்கள் சொன்ன அவதூறுகளை நம்பி அவைகளை பின்பற்றியதாக குர்-ஆன் கூறுகிறது.

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (குர்-ஆன் 2:106)

தாவீதின் குமாரனாகிய சாலொமோனுக்கு குர்-ஆன் அவதூறை உண்டாக்கியுள்ளது. அதாவது ஆலய கட்டுமானப் பணியில் அவர் சாத்தான்களோடு இணைந்து செயல்பட்டார். நிச்சயமாக இந்த கதைகள் எல்லாம் அதே ஷைத்தான்கள் மூலமாகத் தான் வந்திருக்கும். முஹம்மது கொண்டு வந்த செய்தியில் இப்படிப்பட்ட பொய்யான கதைகளை ஷைத்தான் தான் சேர்த்து இருக்கவேண்டும்.

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.(குர்-ஆன் 22:52)

ஆங்கில மூலம்: Quran Contradiction - The Quran's Slander of Solomon: The Communion of Demons  

இதர குர்-ஆன் முரண்பாடுகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.




September 10, 2012

மக்கள் சேவையாளரை மதியுங்கள்

கடந்த வியாழன் ஒடிசா தலை நகர் புவனேஸ்வரில் காங்கிரஸார் நடந்திய ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது.. ஆனால் இறுதியில் அடிப்பட்டது யாரென்றால் காவல் துறையை சார்ந்த ஒரு பெண் காவலர். அவர் என்ன தவறு செய்தார்..தன் கடமையை செய்தது தவறா... கட்சிகாரர்கள் அரசின் கொள்கைகளை தான் எதிர்க்கவேண்டுமெ ஒழிய அரசு ஊழியர்களை அல்ல.. அவர்கள் தங்களுக்கு என்ன கட்டளை இடுகிறார்களோ அதை கடமை உணர்வோடு செய்வபர்கள்... அவர்களை தாக்குவது என்பது நம்மை நாமே தாக்குவதுபோலாகும்.. இதனால் சொல்ல வந்த விஷயமும் எடுபடாமல் போய்விடும்.. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தில் யாராவது இது போன்ற அரசாங்க பணியில் இருப்பார்களானால் அவர்களை தாக்க மனது வருமா?? சிந்தியுங்கள்... அதிலும் காவல் துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் மற்றும் பாதுகாப்பு தரும் ஒரு அமைப்பு.. அவர்களூடைய தொழிலுக்கு நாம் மரியாதை செய்யவேண்டும்.. 24 மணி நேரமும் அவர்களுக்கு பணியுண்டு. .. அவர்கள் தங்களை கடமைகளை சரியாக செய்ய அனுமதித்தால் தான் அரசாங்கத்தின் அனைத்து சக்கரமும் சரியாக சூழலும்.. ...இனியாவது அவர்களின் சேவைக்கு மதிப்பளிப்போம்.. இப்படிப்பட்ட சம்பவங்கள் இனி நடக்காவண்ணம் உறுதி ஏற்போம்..

September 4, 2012

அப்பாவி சிறுமிக்கு எதிராக செயல்பட்ட இமாம் கைது

பாகிஸ்தானில் கடந்த மாதம் குரானில் சில பிரதிகளை கிழித்து எறிந்ததாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாள்  சிறுமி ரிம்ஷா மாசிஹ். இவளுக்காக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்துவந்தனர். அதற்கு பலன் கிடைத்துள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.. இவர்தான் இந்த சிறுமியின் பள்ளீகூட பையில் இந்த குரானின் சில கிழிந்த பிரதிகளை வைத்துள்ளார்.. எப்படியாவது சிக்கிகொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான். மேலும் இப்படியாக சதிசெய்து ஓவ்வொரு கிறிஸ்தவர்களையும் வெளியேற்றவேண்டும் என்பதே இவரின் விருப்பம். இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று இந்த இமாம் எவ்வளவுக்கதிமகாக குரானை உயிரினுலும் மேலாக மதிக்கிறாரோ அவரே தான் குரான் பிரதிகளை கிழித்துள்ளார். அப்படியானால் வெளிப்படையாக எல்லோர் முன்னும் குர்ரானை மதித்தவர் யாரும் பார்க்கதாத போது அது கிழித்தார் என்றால் அதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.. இப்போது அந்த இமாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மதம் என்ற பெயரில் மனித உரிமைக்கு எதிராக செயல் பட்டு இப்படிப்பட்ட அப்பாவி மக்களை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கொடுரர்கள் மனந்திரும்பவேண்டும்.. பிரார்த்திப்போம்


விடியோவில் பார்ப்பதற்கு

August 24, 2012

ரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது?

 

அன்புள்ள தம்பிக்கு,

உனக்க சமாதானம் உண்டாவதாக,

தம்பி இன்று ஒரு முக்கியமான விஷயம் பற்றி உனக்கு எழுதப்போகிறேன். இதை முழுவதுமாக படித்துப் பார். இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாங்களில் இது மிகவும் அடிப்படையான வித்தியாசமாகும்.

பொதுவாக சொல்லவேண்டுமென்றால், உலக மார்க்கங்களை இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம், 1) கிருபை மார்க்கம் 2) கிரியை மார்க்கம்.

கிறிஸ்தவம் கிருபை மார்க்கமாகும், இஸ்லாம் கிரியை மார்க்கமாகும். 

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் என்று பைபிள் கூறுகிறது. அதாவது நாம் தேவனுடைய இரட்சிப்பை பெறுவதற்கு நம்முடைய கிரியைகள் உதவாது, அவர் தம்முடைய கிருபையினாலே நம்மை இரட்சித்து இருக்கிறார்.

ஆனால், இஸ்லாமை நாம் எடுத்துக்கொண்டால், அது கிரியை மார்க்கமாக உள்ளது.  இஸ்லாமிலே மன்னிப்பு என்பது அல்லாஹ்வின் கிருபை மீதும், அதோடு கூட ஒரு மனிதன் செய்யக்கூடிய கிரியைகள் மீதும் ஆதாரப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், மனிதன் செய்யும் கிரியைகள் பாதி, அல்லாஹ்வின் கிருபை பாதி.   நியாயத்தீர்ப்பு நாளிலே ஒரு முஸ்லிமுடைய நற்கிரியைகள் அவனது தீய கிரியைகளை விட அதிகமாக இருந்தால், மேலும் அல்லாஹ் விரும்பினால் தான் அந்த மனிதனின் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு அவர் சொர்க்கம் அடையமுடியும்.

ஆக இஸ்லாமிய இரட்சிப்பை கீழ்கண்ட விதமாக கூறலாம்:
இஸ்லாமிய இரட்சிப்பு = மனிதனின் கிரியைகள் + அல்லாஹ்வின் கிருபை (அ) விருப்பம்

1) இஸ்லாமிய இரட்சிப்பு (கிரியைகள் மீது அதிகமாக சார்ந்து இருத்தல்)

தம்பி, இந்த இரண்டு வசனங்களை படி:

ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.  (குர்-ஆன் 5:9)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.  (குர்-ஆன் 8:29)

"இல்லை இல்லை… அல்லாஹ் கிருபையுள்ளவன், எனவே அவனது மன்னிப்பை பெற நாங்கள் அதிகமாக ஒன்றும் செய்யவேண்டுவதில்லை" என்று நீ கூறலாம். 

அல்லாஹ் கிருபையுள்ளவன் என்று குர்-ஆன் சொல்கிறது, அது சரி தான், ஆனால், அதே குர்-ஆன் இப்படியும் கூறுகிறதே:

. . . . ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்;. அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன். (குர்-ஆன் 2:105)

அதாவது ஒரு  முஸ்லிம் எவ்வளவு தான் செய்தாலும், அல்லாஹ் தான் விரும்பியவரை தெர்ந்தெடுத்துக் கொள்கிறான். நான் செய்யும் நற்செயல்களைக் கொண்டு பார்த்தால், அல்லாஹ் என்னை நிச்சயம் அங்கீகரிப்பான், இரட்சிப்பான் சொர்க்கத்தில் சேர்ப்பான் என்று எந்த ஒரு முஸ்லிமும் கூறமுடியாது. மேற்கண்ட வசனங்களில் (5:9, 8:29), ஒரு முஸ்லிமுடைய இரட்சிப்பு அவனது கிரியைகள் மீது ஆதாரப்பட்டுள்ளது என்பதை சொல்கிறது.

முஸ்லிம்கள் தங்களை அல்லாஹ் மன்னிக்கவேண்டும் என்று விரும்பினால், இன்னொரு காரியமும் அவர்கள் செய்யவேண்டும், அது என்ன? அது தான் "கலப்பற்ற முறையில், தூயமனதுடன்" மன்னிப்பு கேட்பதாகும்.

குர்-ஆன் 66:8ஐ படிப்போம்:

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற  முறையில் பாவ மன்னிப்புத் தெடுங்கள், உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்துவிடக்கூடும் .... (பீஜே தமிழாக்கம்).

இதன்படி ஒரு முஸ்லிம் தூயமனதுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறான் என்று வைத்துக்கொள்வோம், அப்படியானால், அதன் பிறகு அந்த மனிதன், "ஆம் நான் தூயமனதுடன் பாவ மன்னிப்பு கோரிவிட்டேன்" என்றுச் சொல்லி, "நிச்சயமாக, நான் அல்லாஹ்வின் மன்னிப்பை பெற்றுவிட்டேன், இனி எனக்கு பயமில்லை, நான் நிச்சயமாக சொர்க்கம் அடைந்துவிடுவேன்" என்று கூறமுடியுமல்லவா? இப்படி கூறுபவனை மற்ற இஸ்லாமியர்கள் எப்படி பார்ப்பார்கள்? இது பெருமை என்ற பாவமாக கருதப்படுமல்லவா?

இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், அந்த மனிதன் தூயமனதுடன், கலப்பில்லாமல் பாவ மன்னிப்பு கோரினார் என்பதை எதன் மூலம் அவன் அறியக்கூடும்? தான் 100% கலப்பில்லாமல் மன்னிப்பு கோரினான் என்று எப்படி அவனால் இந்த உலகில் இருக்கும் போது கூறமுடியும்?  ஒருவேளை தான் முழுமனதோடு பாவமன்னிப்பு கோரியதாக நினைத்துக்கொள்ளலாமே தவிர அவனால் நிச்சயமாக திட்டவட்டமாக கூறமுடியாது.

இதன் மூலம் அறிவது என்னவென்றால், இஸ்லாமிய இரட்சிப்பு என்பது அதிகமாக கிரியைகள் மீது சார்ந்துள்ளது. எனவே:

1) அல்லாஹ்வின் முன்பு நிற்கும் அந்த நியாயத்தீர்ப்பு நாளில், நான் பூமியில் இருக்கும் போது செய்த நற்கிரியைகளுக்காக எனக்கு அல்லாஹ் நிச்சயமாக சொர்க்கம் அளிப்பான் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் சொல்லமுடியுமா?
 
2) அனேக முஸ்லிம்களின் கூற்றின் படி, அந்த நாளில் தங்களின் நற்செயல்கள், தீய செயல்களை விட அதிகமாக இருக்குமா இல்லையா? என்று அவர்களுக்கு தெரியாது. அல்லாஹ் அன்று அவர்களுக்கு சொர்க்கத்தை நிச்சயமாக தருவார் என்ற நம்பிக்கை இன்று எங்களுக்கு இல்லை, அது அல்லாஹ்வின் விருப்பம் என்று கூறுகிறார்கள். இப்படி தங்களின் நித்தியம் பற்றிய நிச்சயம் இல்லாமல் முஸ்லிம்கள் வாழுகிறார்கள், தம்பி உன் நிலை என்ன? உனக்கு இந்த நிச்சயம் உண்டா?
 
3) முஸ்லிம்களால் ஒன்று செய்யமுடியும், தங்களின் நற்கிரியைகள், தீயகிரியகளை விட அதிகமாக இருக்கும்! என்று எதிர்ப்பார்த்து, மற்றும் அல்லாஹ் எப்படியாவது தங்களை அங்கீகரித்துக்கொள்வான் என்று நம்பி, அறைகுறை நிச்சயத்தோடு இவ்வுலகில் வாழவேண்டியது தான்.

தம்பி, உன் நிலைக்கு  வருவோம், இதுவரை நீ செய்த கிரியைகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு, "என்னை அல்லாஹ் கண்டிப்பாக அந்த நாளில் ஏற்றுக்கொள்வான் என்று உன்னால் கூறமுடியுமா?" உன் கிரியைகள் அல்லாஹ்வை நிச்சயமாக மெச்சிக்கொள்ளச் செய்யும் என்ற விசுவாசம் உனக்கு உண்டா?

2) கிறிஸ்தவ இரட்சிப்பு (விசுவாசத்தின் மூலம் கிருபையினால் வருவது)

தம்பி இதுவரை இஸ்லாமிய இரட்சிப்பு பற்றி கூறினேன். இப்போது கிறிஸ்தவ இரட்சிப்பு பற்றி சுருக்கமாக எழுதுகிறேன்.

கிறிஸ்தவத்தில் இரட்சிப்பின் நிச்சயம் உண்டு (யோவான் 6:47, 1 யோவான் 5:13).  கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு என்பது மனிதன் சம்பாதிப்பது அல்ல, அது இறைவனிடமிருந்து இலவசமாக கொடுக்கப்படுகின்ற பரிசு ஆகும் (ரோமர் 4:3, எபேசியர் 2:8-9).  கிறிஸ்தவத்தில் மன்னிப்புக்காக நாங்கள் இயேசு நிறைவேற்றிய கிரியை மீது முழுவதுமாக சார்ந்து இருக்கிறோம். எங்களின் நற்கிரியைகள் மீதல்ல, நம்முடைய நீதியெல்லாம் ,கந்தை துணியைப்போல இருப்பதினால் அவரது கிரியை மீது சார்ந்து அவர் மீது விசுவாசம் வைக்கிறோம். தேவனுடைய கிருபை நம்மை இரட்சிக்கிறது. அவர் நமக்கு கொடுத்த கிருபையின் மகிழ்ச்சியில் நாங்கள் நீதியோடும் உண்மையோடும், நற்கிரியைகள் செய்து வாழ்ந்து காட்டுகிறோம். எங்கள் இரட்சிப்பிற்கு ஆதாரம் கிருபையே தவிர எங்கள் கிரியை அல்ல.

கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு என்பது இறைவனை மையமாகக் கொண்டு இருக்கிறது. இஸ்லாமில் இரட்சிப்பு என்பது மனிதனை மையமாகக்கொண்டு இருக்கிறது.  

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் "இறைவன் மீது நம்பிக்கை/விசுவாசம்" வைக்கவேண்டும் என்று போதிக்கிறது. ஆனால், கிறிஸ்தவத்தில் தேவன் மீது நாம் வைக்கும் விசுவாசமே நம்மை இரட்சிக்க பொதுமானதாக உள்ளது (ரோமர் 5:1, எபேசியர் 2:8-9). ஆனால், இஸ்லாமில் நம்பிக்கை மட்டும் போதாது, அதோடு  கூட அவன் முதலாவதாக ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும், அவன் செய்யும் நற்செயல்கள், அவனது தீய செயல்களை விட அதிகமாக இருக்கவேண்டும், அவன் கலப்பில்லாமல் அல்லாஹ்வை தொழுதுக்கொண்டு இருக்கவேண்டும், இவைகளோடு கூட அந்த நாளில் அல்லாஹ் இவனை மன்னிக்க விரும்பவேண்டும். இத்தனையும் ஒரு மனிதனுக்கு கிடைத்தால், அப்போது தான் அவனது இரட்சிப்புக்கு ஒரு நிச்சயம் கிடைக்கும். இவைகள் எல்லாம் இந்த உலகில் இருக்கும் வரை நடக்காது, மரித்த பிறகு தான் நிர்ணயிக்கப்படும், ஆகையால் தான் இஸ்லாமியர்கள் "எனக்கு என்ன ஆகும் என்று எனக்கே தெரியாது, ஏதோ சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பூமியில் வாழலாம்" என்று பதில் அளிக்கிறார்கள்.

தம்பி, ஒரு இணைய தளத்தில் சில வரிகளை படித்தேன், அவைகள் உனக்கு உபயோகமாக இருக்குமென்று இங்கு பதிக்கிறேன்:

[Acceptance - ஏற்றுக்கொள்ளுதல்]
இஸ்லாம் - "I obey-therefore I'm accepted" நான் கீழ்படிகிறேன், ஆகையால் ஏற்றுக்கொள்ளப்படுவேன்.
 
கிறிஸ்தவம் - "I'm accepted–therefore I obey" நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன், ஆகையால் நான் கீழ்படிகிறேன்.
 
 
[Motivation - உற்சாகமூட்டுதல்]
இஸ்லாம் - Motivation is based on fear and insecurity – அல்லாஹ்வை பின்பற்றுதல் பயத்தோடும், பாதுகாப்பு இல்லாமலும் செய்யப்படும்.
கிறிஸ்தவம் - Motivation based on grateful joy. தேவனை பின்பற்றுதல் ஒரு மகிழ்ச்சிகரமாக அனுபவம்.
 
 
[Obedience - கீழ்படிதல்]
 
இஸ்லாம் - I obey God in order to get things from God. – நான் இறைவனிடமிருந்து ஏதோ பெற்றுக்கொள்வதற்காக நான் கீழ்படிகிறேன்.
கிறிஸ்தவம் - I obey God to get God–to delight and resemble him – நான் இறைவனையே பெறுவதற்காக, மகிழ்ச்சியோடு அவரை பிரதிபலிக்கிறேன், கீழ்படிகிறேன்.
 
[Criticism - விமர்சனம்]
இஸ்லாம் - When I am criticized I am furious or devastated because it is critical that I think of myself as a 'good person.'  Threats to my self-image must be destroyed at all costs.
 
நான் விமர்சிக்கப்படும் போது, அதிகமாக கோபம் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஒரு நல்ல மனிதன் என்று எனக்குள் நானே முடிவு செய்துவிட்டு இருக்கிறேன். என்னுடைய சுய பிம்பத்தை விமர்சிக்கிற எல்லாவற்றையும் எப்படியானாலும் அழித்துவிட முயற்சி எடுப்பேன்.
 
கிறிஸ்தவம் - When I am criticized I struggle, but it is not critical for me to because it is critical that I think of myself as a  'good person.' My identity is not built on my record or my performance but on God's love for me in Christ.  I can take criticism. That's how I became a Christian.
 
நாம் விமர்சிக்கப்படும் போது, நான் போராடுகிறேன், ஆனால், இது ஒரு பெரிய பிரச்சனையாகவே எனக்கு இருப்பதில்லை. என்னுடைய அடையாளம் என் நற்கிரியைகள் மீது சார்ந்து இருக்கவில்லை, அது கிறிஸ்துவிற்குள் என்னை நேசிக்கிற தேவன் மிது சார்ந்துள்ளது.  நான் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் தான் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன்.
 
[Prayer – ஜெபம் / தொழுகை]
 
இஸ்லாம் - My prayer consists largely of petition and it only heats up when I am in a time of need. My main purpose in prayer is control of environment.
என் ஜெபங்கள் எல்லாம் வேண்டுதல்களாக இருக்கும், எனக்கு தேவைகள் அதிகமாகும் போது, ஜெபம் சூடுபிடிக்கும். என் ஜெபத்தின் முக்கிய நோக்கம் என்னை சுற்றியுள்ள சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிப்பதாகும்.
 
கிறிஸ்தவம் - My prayer life consists of generous stretches of praise and adoration.  My main purpose is fellowship with him.
என்னுடைய ஜெபம், முழுக்க முழுக்க இறைவனை துதிப்பதிலும், ஆராதிப்பதிலும் இருக்கும். என் ஜெபத்தின் முக்கிய நோக்கம் தேவனோடு ஐக்கியம் கொள்வதாகும்.
 
 
தம்பி, சுருக்கமாக கூறவேண்டுமென்றால், கிருபையால் இறைவனின் மன்னிப்பைப் பெற்று இவ்வுலகில் வாழும் நாட்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு பரிசுத்தமாக வாழ்வது தான் கிறிஸ்தவம் சொல்லும் இரட்சிப்பு ஆகும்.
 
வாழும் நாட்கள் எல்லாம் நம்முடைய நற்செயல்களை எண்ணிக்கொண்டு, தீய செயல்களை கழித்துக்கொண்டு ஒரு கணக்கு போட்டு வாழும் வாழ்க்கை தான் இஸ்லாமிய வாழ்க்கை, இவ்வளவு செய்தும் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமல், அல்லாஹ்விற்கு பயந்துக் கொண்டு நடுக்கத்தோடு வாழும் வாழ்க்கை தான் இஸ்லாமிய இரட்சிப்பு.  இதில் எதுவேண்டும் என்று நீயே முடிவு செய்துக்கொள்?
 
இஸ்லாமுக்கு வரும் படி கிறிஸ்தவர்களை அழைக்கும் ஒரு நபரைப்  பார்த்து கிறிஸ்தவர்கள் கேட்கும் கேள்வி:
 
"Why should we Christians give up our guarantee of salvation in Jesus for the requirements of your Qur'anic law when you yourselves don't even know if you have done enough good deeds to be saved on the Day of Judgment?"
 
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எங்கள் இயேசு கொடுத்த இரட்சிப்பின் நிச்சயத்தை ஏன் உங்கள் குர்-ஆனுக்காக விட்டுவிடவேண்டும்? குர்-ஆனை நம்பும் உங்களுக்கே நீங்கள் செய்யும் நற்கிரியைகள் உங்களை நியாயத்தீர்ப்பு நாளிலே இரட்சிக்குமா என்று தெரியாத போது, எங்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை நாங்கள் ஏன் விட்டுவிடவேண்டும்?
 
 
தம்பி, சிந்தித்துப் பார்.
 
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
 
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்
 
பின் இணைப்புக்கள்
 



ரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது


[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15கடிதம் 16, கடிதம் 17கடிதம் 18, கடிதம் 19கடிதம் 20, கடிதம் 21 ]

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ நாள் தோறும் மனமாற்றமடைந்து வருவதை நீ எனக்கு அனுப்பிவருகிற மெயில்களிலிருந்து கண்டுவருகிறேன். உன் உள்ளத்திலிருந்து வரும் உண்மையான வார்த்தைகளை காணும்போது நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். நீ தற்பொழுது இருக்கும் நாட்டில் நியாயப்பிரமாண சட்டங்கள் ஷரியா எனும் பேரில் கடைப்பிடிக்க படுவதாக கூறியிருந்தாய். ஆம் நானும் அந்த செய்தியை கேள்விபட்டிருக்கிறேன். நீ பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணம் பற்றி கேட்டபடியினால், பத்து கட்டளைகளில் ஒரு கட்டளையைப் பற்றி உன்னோடு நான் பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.

பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாகபிறனுடைய வீட்டையும்அவனுடைய நிலத்தையும்அவனுடைய வேலைக்காரனையும்அவனுடைய வேலைக்காரியையும்அவனுடைய எருதையும்அவனுடைய கழுதையையும்பின்னும் பிறனுக்குள்ளயாதொன்றையும்  இச்சியாதிருப்பாயாக என்றார். (உபாகமம் 5:21) 

பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக, தம்பி இந்த கட்டளையோடு முஹம்மதுவின் வாழ்க்கையை ஒப்பிட்டுபார். தனது வளர்ப்பு மகன் ஜையத்தின் மனைவியை இச்சித்த சம்பவத்தை நீ அறிந்திருக்கிறாய். இச்சித்தது மாத்திரமா மனைவியாக கொண்டதும் உனக்குத்  தெரியும். இதனை உனது இஸ்லாமிய நண்பர்கள் "விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த நபிகளார்" என்று மிகவும் பெருமையாக பேசுவார்கள். இது நியாயப்பிரமானத்தை மீறிய செயலாகும் என்று சொன்னால்,  அவர்கள் திருப்பி கேற்பார்கள் "உங்கள் பைபிளில் சில சம்பவங்கள் இதே போல இருக்கின்றதே காணவில்லையா" என்று. உனது நண்பர்களுக்கு ஒரு விசயம் புரிவதேயில்லை.

 

பைபிளில் நோவா, யாக்கோபு, தாவீது போன்றோர் செய்த பாவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் அவற்றை நியாயப்படுத்தவில்லை. நியாயப்பிரமானம் கொடுக்கப்பட முன் செய்தவர்களின் தவறுகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பின் செய்தவர்களின் தவறுகளுக்காக பெற்ற தண்டனைகளும் பைபிளில் காணலாம்.

ஆனால் முஹம்மது செய்த பாவங்களை நியாயப்படுத்தி வஹி இறங்குவது தான் வேடிக்கையாகவுள்ளது.

. . . .நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணந்து கொள்ள விரும்பினால் (அனுமதித்துள்ளோம்). உமக்கு சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும் . . . . (குர்ஆன் 33:50) 

இந்த வசனத்தை நீ அரபியில் பல முறை ஓதியிருப்பாய். ஒரு முறையாகிலும் சிந்தித்திருப்பாயா? குர்ஆனில் ஒரு சொல்லுக்கு 10 நன்மையெனும் அடிப்படையில் பொருள் புரியாமல் மந்திரம் ஓதுவது போன்று ஓதுவதையே பாமர மக்களுக்கு இஸ்லாமிய அறிஞர்களால் போதிக்கப்பட்டு வருவதை நான் காண்கிறேன். உனக்கும் அப்படித் தான் போதித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் குர்ஆனில் அடிக்கடி சிந்திக்குமாறு சொல்கிறது. அதனாலோ என்னவோ இஸ்லாமியர் சிந்திப்பதேயில்லை. இஸ்லாமியர்கள் குர்-ஆன் வசனங்களை சிந்திக்கவேண்டுமென்றால், முதலாவது அவர்களுக்கு வசனம் புரியவேண்டுமே, அவர்கள் அரபியில் படித்தால் எப்படி புரியும்?

இந்த வசனத்தை சிந்தித்துபார். இது முஹம்மதுவுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு சிறப்புச் சலுகை! அதாவது எந்த ஒரு முஸ்லிம் பெண்ணையும் முஹமது விரும்பினால் அவளை திருமம் செய்ய முஹம்மதுவுக்கு அல்லாஹ் சிறப்புச் சலுகை கொடுக்கிறான்.

நியாயப்பிரமானம் போதிக்கிறது பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக என்று. ஆனால் குர்ஆன் முஹம்மதுவுக்கு தனது மகனுடைய மனைவியையும் இச்சித்ததால் சொந்தமாக்கிகொள்ள வரம் கொடுக்கிறது. எது இறைவேதமாக இருக்க தகுதியுள்ளது என்று  சிந்தித்தால் உண்மை புரியும்.

 

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.  ( குர்-ஆன் 33:37)

 

தம்பி, எமது ஊரில் அநேக இஸ்லாமியர் பிள்ளைகளை தத்தெடுக்திருக்கின்றனர். அவர்களில் யாராவது இது எனது பிள்ளையில்லையென்று சொல்வதை நீ செவிமடுத்திருக்கிறாயா? கடும் கோபத்தில் சொந்த பிள்ளைகளை கூட "நீ என் பிள்ளையில்லையென்று" சொல்வார்கள். ஆனால் பொதுவாக முழு உலகிலும் வளர்ப்பு மகனையும் மகன் என்று தான் சொல்வார்கள். அந்த காட்டுமிறாண்டி அரபியரும் அப்படிதான் அழைத்தார்கள். ஆனால் முஹம்மது ஜைது மனைவியின் அழகை கண்ட நேரத்திலிருந்துதான் வளர்ப்பு மகன் "மகன் அல்ல" என்ற கட்டளையை அல்லாஹ் இறக்குகிறான். சிந்திப்பவர்களுக்கு இதில் படிப்பினையுண்டு.

 

ஜைதின் மனைவியை முஹம்மது திருமம் செய்ததை "விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு வாழ்வுகொடுத்த மாநபி" என்று வர்ணிப்பார்கள். ஆனால் முஹம்மதுவின் மரணத்தின் பிற்பாடு அவருடைய அனைத்து மனைவிகளும் விதவைகள் ஆகிவிட்டார்கள். தனது மரணத்தின் பின்னும் அவர்களை யாரும் திருமம் செய்ய கூடாது என்பதற்காக அவர்களை முஃமீன்களின் தாய்மார்களாக ஆக்கிவிட்டார் முஹம்மது. அப்படியானால் முஃமீன்களின் தகப்பன் யாராக இருக்கவேண்டும்? முஹம்மது தான் தகப்பனாக இருக்கவேண்டும் என்று நீ நினைப்பாய். ஆனால் குர்ஆன் சொல்கிறது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  (33:40)

 

பார்த்தாயா இஸ்லாமிய நியாயத்தை? தான் மனைவிகளை தனக்கு பின்பு யாரும் திருமணம் செய்து விட கூடாது என்பதற்காக தனது மனைவிமாரை எல்லா முஸ்லீம்களுக்கும் தாய் ஆக்குகிறார். தனது மகனின் மனைவியை திருமணம் செய்துக் கொள்ளவேண்டுமென்பதற்காக தான் யாருக்கும் தகப்பன் இல்லையென்று வஹி வருகிறது. இங்குள்ள முரண்களும் தில்லுமுல்லுகளும் உனக்கு நன்றாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

 

வெளியில் இருக்கிற கவர்ச்சியை கண்டு நீ இஸ்லாத்துக்குள் நுழைந்துவிட்டாய். இப்பொழுதுதான் நரக வாயிலிலிருந்துகொண்டு, மிகவும் ங்காரங்கள் நிறைந்த கதவுகளை வைத்து வருகிறவர்களை கவரும் வகையில் காரியங்களை காண்பித்து, அந்த கதவுகளுக்குள் நுழைந்த பிறகுதான் தெரியும் எரி நரகத்துக்குள் வந்துள்ளோம் என்று. இப்பொழுது இதுதான் உனது நிலையாகவுள்ளது எனதருமை தம்பியே!

உன்னை இந்த நரகத்திலிருந்து மீட்டுகொள்ளதான் எனது இந்த பிரயாசம். பரலோகக் கதவு உனக்காக இன்னும் திறந்துதான் இருக்கிறது. எனது கர்த்தராகிய இயேசு சொன்ன இந்த வார்த்தைகளோடு இந்த கடிதத்தை முடிவு செய்கிறேன். நாளை சந்திப்போம்.

 

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்குஉரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்நான் உங்களுக்குச்சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன்இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28) 

 

இப்படிக்கு,

உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்

 

http://isakoran.blogspot.in/2012/08/22.html