முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் - பாகம் 1
அப்துல்லாவின் அதிர்ஷ்டம் முஹம்மதுவின் துரதிஷ்டம்
Muhammad And The Ten Meccans
கட்டுரைச் சுருக்கம்:
முஹம்மது மெக்காவை ஜெயித்துப் பிடித்த போது மெக்காவைச் சேர்ந்த பத்து பேரை கொன்று விடும்படி கட்டளையிட்டார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொல்லப்பட்டார்கள். சிலர் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்படாமல் தப்பினார்கள். இந்த கட்டுரையில் மரண தண்டனை அளிக்கப்பட்டவர்கள் யார் என்பதைப் பற்றியும், ஏன் அவர்கள் கொலை செய்யப்பட கட்டளையிடப்பட்டது என்பதைப் பற்றியும், முஹம்மதுவினால் மரண தண்டனை அளிக்கபப்ட்ட ஒவ்வொருவரின் முடிவு கடைசியில் எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்போகிறோம்.
முன்னுரை:
முஹம்மதுவுக்கு பலம் பெருகின போது வன்முறையை பயன்படுத்தி தன்னுடைய விருப்பங்களை அடையத் தொடங்கினார். அநேகர் கொலை செய்யப்பட கட்டளையிட்டார். அவராக சென்று சுயமாக அந்த கொலைகளை செய்யவில்லை, அவருக்காக அந்த கொலைகளை செய்வதற்கு விருப்பமுடையவர்கள் (அடியார்கள்) அனேகர் அவருக்கு இருந்தார்கள்.
மெக்கா அமைதியான முறையில் சரணடைந்த பிறகு, முஹம்மது யார் யாரை கொலை செய்யப்படவேண்டும் என்று கட்டளையிட்டாரோ அவர்களைப் பற்றி நாம் ஆராய்வோம். முஹம்மது தம் வாழ்நாளில் அனேகரை கொன்றார். ஆனால், இந்த கட்டுரையில் அவர் மெக்காவை கைப்பற்றிய நாளில் கொல்ல கட்டளையிடப்பட்ட 10 நபர்களைப் பற்றி காண்போம்.
முஹம்மது ஏறக்குறைய 10,000 போர்வீரர்களுடன் கூடிய படையோடு மெக்காவின் மீது அணிவகுத்துச் சென்றார். இந்த மனிதர்கள் உறுதியுள்ள அர்ப்பணிப்புள்ள முஸ்லீம்களாக இருந்தார்கள். மெக்காவின் தலைவர்கள் முஹம்மதுவின் படைகளைத் தோற்கடிக்க அவர்களால் முடியும் என்று எண்ணவில்லை, இதற்கு பதிலாக அவர்கள் சரணடைந்துவிட்டார்கள். முஹம்மது மெக்காவை முழுவதுமாக அழித்துவிடவில்லை அல்லது அதன் குடிமக்கள் அனைவரையும் படுகொலை செய்யவில்லை மாறாக தன்னுடைய தனிப்பட்ட எதிரிகளை மாத்திரம் ஞாபகத்திற்கு கொண்டு வந்து, கண்டுபிடித்து அவர்களை கொல்லச் சொன்னார். முஹம்மது அந்த மனிதர்களை வெறுத்தார், இதற்கு காரணம் முந்தைய நாட்களில் இவர்கள் எல்லாரும் அவரை அவமானப்படுத்தி (கேலி செய்து) இருந்தார்கள்.
பின்னணி:
இந்த கட்டுரைக்காக நான் பயன்படுத்திய முக்கியமான மூன்று பின்னணி ஆதாரங்களை நான் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.
1) "ஹதீஸ்கள்" (பாரம்பரியங்கள்) புகாரி, முஸ்லீம் மற்றும் அபு தாவுத்
2) "சீரத் ரஸூலல்லாஹ்" இப்னு இஷாக்கினால் எழுதப்பட்டது பின்னர் இப்னு ஹிஷாமினால் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டது.
3) மற்றும் "கிதாப் அல்-தபாகத் அல்-கபிர்" இப்னு சாத் என்பவரால் எழுதப்பட்டது.
4) "23 வருடங்கள்-முஹம்மதுவின் நபித்துவ வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆய்வு" இப்புத்தகம் அலி தஸ்தியினால் எழுதப்பட்டது.
தஸ்தி ஒரு ஷியா முஸ்லீம் அறிஞர் ஆவார். அவர் 85 வயதாக இருக்கும் போது ஈரானை ஆண்ட ஒரு முஸ்லீமால் கொல்லப்பட்டார். தஸ்தி ஒரு சுன்னி (Sunni) பிரிவைச் சேர்ந்தவராக இல்லாவிட்டாலும், நான் இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்துகிற விஷயத்தை வெகு சிறப்பாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது பாண்டித்யம் மிகவும் சிறப்பாக இருப்பதை நான் காண்கிறேன்.
நான் பயன்படுத்தவும் அல்லது சரிபார்க்கவும், என்னிடம் இருக்கும் இஸ்லாமிய மூல ஆதாரங்களைக் காட்டிலும் அவரிடம் அதிகமாக ஆதாரங்கள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் ஒரு ஷியா இஸ்லாமிய அறிஞரின் மேற்கோள்கள் பயன்படுத்துவதை, சில சுன்னி இஸ்லாமியர்கள் எதிர்த்தாலும், மெக்காவில் நடந்த கொலைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களை ஹதீஸ்கள், சீரத் மற்றும் தபாகத் போன்ற மூல நூல்களில் இருக்கும் விவரங்களோடு ஒத்திருக்கிறது என்பதை நாம் காணலாம். என்னுடைய குறிப்புகள் எந்த விதத்திலும் தஸ்தியினுடைய செயல்பாட்டின் மீது ஆதாரமில்லாததாக இருந்தாலும், அவருடைய கருத்துக்கள் என்னுடைய ஆராய்ச்சி மற்றும் முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.
இங்கே உள்ள எல்லா ஆதாரங்களின் எழுத்தாளர்கள் அனைவரும் முஸ்லீம்கள் ஆவார்கள். முதல் மூன்று படைப்புகளும் சுன்னி இஸ்லாமியப் பிரிவால் (Sunni branch of Islam) அங்கீகரிக்கப்படுகிறது. எனினும், இவைகளில் எதுவும் குர்ஆனுக்கு இணையாக அங்கீகரிக்கப்படுவது இல்லை. ஆதாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்டும் வரிசை 1) ஹதீஸ்கள் 2) சீரத் 3) தபாகத் என்று நான் கூறுவேன்.
முஹம்மதுவின் சொல் மற்றும் செயல் பற்றிய பாரம்பரிய தொகுப்பை ஹதீஸ்கள் என்கிறோம். சீரத் மற்றும் தபாகத் என்பது முஹம்மதுவின் சரிதைகளாகும் (வாழ்க்கை வரலாறு). இந்த இரு சரிதைகளும் ஹதீஸ்கள் தொகுப்பதற்கு முன்பாக எழுதப்பட்டது. இவ்விரு சரிதைகள், ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் சொல்லும் பெரும்பான்மையான விவரங்களை உறுதிப்படுத்துகின்றன.
நான் இந்த விவரங்களை மூலத்திலிருந்து மேற்கோள் காட்டும் போது, சம்பவங்கள் உங்களுக்கு தெளிவாக விளங்கச் செய்வதற்காக என்னுடைய அதிகபடியான விளக்கங்களை சிறு குறிப்புகளாக [அடைப்பு குறிக்குள் – Square brackets] கொடுப்பேன்.
இன்னொரு குறிப்பை கவனிக்கவும், மேற்கூறிய ஆதாரங்களின் ஆசிரியர்கள் தங்கள் குறிப்புக்களையும் (அடைப்பு குறிக்குள் – Paranthesis brackets ( ) ) கொடுத்துள்ளார்கள், அவைகளை அப்படியே தருகிறேன்.
சீரத் ரஸூலல்லாஹ்வைப் பற்றிய குறிப்பு (The Sirat Rasulallah):
சீரத் ஆங்கிலத்தில் குல்லேம் (A. Guillaume) என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. அவர் ஒரு இஸ்லாமிய அறிஞராக இருந்தார். அவர் இஸ்லாமைப் பற்றி அநேக புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் லண்டன் பல்கலைக் கழகத்தின் (University of London) அரபி பேராசியராகவும், டமாஸ்கஸ் அரபு அகாடமி மற்றும் பாக்தாத் ராயல் அகாடமியின் உறுப்பினராகவும் இருந்தார் (Arab Academy of Damascus, and Royal Academy of Baghdad). அவருடைய சீரத் மொழியாக்கத்தில் பல அரபு அறிஞர்கள் அவரோடு இணைந்து பணியாற்றியுள்ளனர். குல்லேம் முஹம்மதுவை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முயற்சி எடுக்காமல் அவரை நல்ல வெளிச்சத்திலே காட்டவே முயற்சி செய்துள்ளார். ஒரு சிறப்பான மொழியாக்கத்தை படைக்க வேண்டும் என்பதே அவருடைய பேராவலாக இருந்தது. இன்னும், முஸ்லீம் மார்க்க அறிஞர்கள் (Muslim apologists) எழுதிய ஒரு புத்தகம் என்னிடம் இருக்கிறது, அதில் அவர்கள் அவருடைய இந்த சீரத் மொழியாக்கத்திலிருந்து பல குறிப்புகளை எடுத்தாண்டிருக்கிறார்கள்.
தபாகத் பற்றிய குறிப்பு (Kitab al-Tabaqat al-Kabir)
தபாகத் ஆங்கிலத்தில் மொய்னுள் ஹக் (Moinul Haq) என்ற பாகிஸ்தானியரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவருடைய படைப்புக்கள் பாகிஸ்தானிய வரலாற்றுச் சங்கத்தால் (Pakistan Historical Society) பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவைகள் இரண்டு தொகுப்புக்களாக பிரசுரிக்கப்பட்டது. அதன் தலைப்பு "பெரும் வகுப்புகளின் புத்தகம்" (Book of the Major Classes) இதுவும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகமாகும்.
முஹம்மதுவும் மெக்காவில் படுகொலைகளும் - விளக்கம்
முஹம்மது மெக்காவைப் பிடித்த போது 10 பேரை கொலை செய்யும் படி கட்டளையிட்டார். இங்கே இபின் சாத் அவர்களின் தபாகத்தில் (Tabaqat) காணப்படுகிற அந்த பத்து பெயர்கள் கொடுக்கப்படுகிறது.
தபாகத் தொகுப்பு 2, பக்கம் 168 லிருந்து மேற்கோள்
"அல்லாஹ்வின் தூதர் அதாக்கிர் வழியாக உள்ளே பிரேவேசித்தார், (மெக்காவுக்குள்) யுத்தத்தைத் தடைசெய்தார். அவர் கொலை செய்வதற்கு கட்டளைகொடுத்த ஆறு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் யாரென்றால்
1) இக்ரிமா இபின் அபி ஜஹல் - Ikrimah Ibn Abi Jahl
2) ஹப்பர் இபின் அல் அஸ்வத் - Habbar Ibn al-Aswad
3) அப்துல்லாஹ் இபின் சாத் இபின் அபி சார்ஹ் - Abd Allah Ibn Sa'd Ibn Abi Sarh
4) மிக்யாஸ் இபின் சபாபஹ் அல் டாயத்தி - Miqyas Ibn Sababah al-Laythi
5) அல் ஹுவாயிரித் இபின் நுக்காயித் - al-Huwayrith Ibn Nuqaydh
6) அப்து அபாஹ் இபின் ஹிலால் இபின் கடல் அல் அட்ராமி - Abd Abbah Ibn Hilal Ibn Khatal al-Adrami
7) ஹிந்த் பின்ட் பின்ட் உத்பாஃ - Hind Bint Utbah
8) சாரா, அமர் இப்னு ஹசிமின் மவ்லத்(உரிமை பெண்)என்ற பெண் - Sarah, the mawlat (enfranchised girl) of Amr Ibn Hashim
9) பார்தானா மற்றும் - Fartana and
10) கரிபாஹ் - Qaribah.
அவ்வப்போது, சீரத்தும் தபாகத்தும் ஒரே நபருக்கு வேறு பெயர்களை உபயோகப்படுத்துகிறது. மேலே உள்ள பட்டியலில் வரிசை எண் 3ல் உள்ள பெயர் இந்த வகையைச் சார்ந்ததாகும். பெயர்களில் உள்ள வித்தியாசத்திற்கு காரணம் ஆண்களின் பெயர்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வம்சாவழியின் பட்டியலாகும் மற்றும் ஆங்கில மொழியாக்கமாகும்.
நாம் வரிசைப்பட்டியலின் வரிசை எண் 3 லிருந்து தொடங்குவோம். அநேக நேரங்களில் சீரத் தபாகத்தின் வரிசைப் பட்டியலை ஊர்ஜிதப்படுத்துகிறது. மேலும் வரிசை எண் 3 ஐப்பற்றிய அதிக விளக்கத்தையும் சீரத் கொடுக்கிறது, நீங்கள் அதை இறுதியில் காணலாம். இந்த மனிதனுக்கு தண்டனை ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டது எனலாம், ஆனால், இவர் அதிர்ஷ்டக்காரராயிருந்தார் ஏனென்றால் முஹம்மதுவின் அடியார்களுக்கு முஹம்மதுவின் மனதை முழுமையாக படிக்க தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி, முஹம்மதுவின் சிந்தனை எப்படி வேலை செய்தது என்பதைப் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
சீரத் ரஹூலல்லாஹ்விலிருந்து மேற்கோள்: பக்கம் 550:
'மெக்காவில் நுழையும் நேரத்தில் அவர்களை எதிர்ப்பவர்களிடம் மட்டுமே போரிடவேண்டும் என்று இறைத்தூதர் தம்முடைய படைத்தலைவர்களுக்கு கட்டளையிட்டார். ஆனால், சிலரைக் குறிப்பிட்டு இவர்கள் கட்டாயமாக கொல்லப்படவேண்டும் என்றார். இவர்களை ஒரு வேளை காபாவின் திரைகளுக்கு கீழே கண்டுபிடிக்கப்பட்டாலும் இவர்கள் கொல்லப்படவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இவர்களில் ஒருவர் தான் பி. அமிர் லாய் என்பவரின் சகோதரர் அப்துல்லாஹ் சாத் (Abdullah Sa'd, brother of the B. Amir Luayy). இவர் கொலை செய்யப்படுவதற்கு முஹம்மது கட்டளைக் கொடுக்க காரணம் என்னவென்றால், இவர் ஒரு முஸ்லீமாக இருந்தவர், முஹம்மதுவிற்கு வரும் குர்ஆன் வெளிப்பாடு வசனங்களை எழுதுகின்றவராக இருந்தார். பிறகு, இவர் இஸ்லாமை விட்டு வெளியேறி குரைஷிகளிடம் [மெக்காவிற்கு] வந்தார், அதன் பின்பு உத்மான் அஃபானிடம் (Uthman Affan) தஞ்சம் புகுந்தார். இந்த உத்மான் இவருக்கு சொந்தக்காரராக இருந்தார். மெக்காவில் நிலமை சீராகும் வரையில் உதுமான் அவரை ஒளித்து வைத்துப் பின் இறைத்தூதரிடம் கொண்டு வந்தார், அவரிடம் அப்துல்லாவிற்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கும் படி கோரினார். இப்படி அனுமதி உத்மான் கேட்டபோது இறைத்தூதர் நீண்ட நேரம் அமைதியாக எதையும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு இறுதியாக அவர் [நபி] சரி என்று கூறினார் [அப்துல்லாவிற்கு மரணதண்டனை நிறைவேற்றுவதிலிருந்து பாதுகாப்பு வழங்க ஒப்புக்கொண்டார்].
உத்மான் சென்றபிறகு அவர் [முஹம்மது] தன்னை சுற்றி அமர்ந்திருந்த தன்னுடைய தோழர்களைப் பார்த்து, "நான் நீண்ட நேரம் அமைதியாக இருந்தேன், இதற்கு காரணம் என்னவென்றால், உங்களில் யாராவது எழுந்து அவனுடைய தலையை வெட்டிப்போடுவீர்கள என்று எண்ணினேன்" என்றார். அப்போது அன்சாரிகளில் ஒருவன், "அப்படியானால் ஏன் எங்களுக்கு எந்த சைகையையும் காட்டவில்லை? இறைத்தூதரே" என்று கேட்டான். அதற்கு அவர் ஒரு நபி யாரையும் சைகை காட்டி கொலை செய்வதில்லை என்று பதிலளித்தார்.
இபின் சாத் இபின் இஷாக்கின் மேற்கண்ட நிகழ்ச்சியை ஊர்ஜீதப்படுத்தும் வகையில், பக்கம் 174ல் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
அல் அன்சாரைச் சேர்ந்த ஒரு மனிதன் இபின் அபி சார்ஹ் ஐ [ஏற்கனவே அப்துல்லாஹ் எனக் குறிப்பிடப்பட்டவர்] பார்த்தால் கொன்று விடுவதற்கான ஒரு பொருத்தனையை செய்திருந்தான். உத்மான் தன்னுடைய வளர்ப்பு சகோதரனுக்காக (இபின் அபி சார்ஹ்) முஹம்மதுவினிடத்தில் வந்து பரிந்து பேசினார். அன்சாரி அவரைக் கொல்லுவதற்கான முஹம்மதுவின் சைகைக்காக காத்துக் கொண்டிருந்தான். உத்மான் பரிந்து பேசினார் எனவே அவர் [முஹம்மது] அவனை போக விட்டு விட்டார்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் அன்சாரியிடம், 'நீ ஏன் உன் பொருத்தனையை நிறைவேற்றவில்லை" என்று கேட்டார். அதற்கு அவன், "ஓ அல்லாஹ்வின் தூதரே, என்னுடைய கை வாளுடைய பிடியின் மீது இருந்தது, அவனைக் கொல்வதற்கு நான் உங்களின் சைகைக்காக காத்துக் கொண்டிருந்தேன்" என்றான். "சைகை காட்டுவது என்பது நம்பிக்கையை உடைப்பது போல இருக்கும். ஒரு நபி சைகை காட்டுவதாக அமையக் கூடாது" என்றார்.
விவாதம்:
சரி வாருங்கள், நாம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி சிறிது அலசுவோம். அப்துல்லாஹ் சாத் முஹம்மதுவின் வெளிப்பாடுகளை எழுதக் கூடியவர், அதாவது குர்ஆனை எழுதக்கூடியவர். பிறகு அவர் இஸ்லாமை விட்டு வெளியேறி, மெக்காவிற்கு திரும்பிப் போனார். பின்னர் முஹம்மது மெக்காவை பிடித்த போது தான் கொலை செய்ய வேண்டும் என்று விரும்பிய ஒரு சில குறிப்பிட்ட மக்களைத் தவிர மற்றவர்களுக்கு அவர் பொது மன்னிப்பு வழங்கினார். குறிக்கப்பட்டவர்களில் அப்துல்லாஹ் சாத் தான் முதன்மையானவர். அப்துல்லாஹ் கொல்லப்படவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டார்.
அலி தஸ்தி இதைப் பற்றி மேலதிக விவரங்களை தருகிறார். அலி தஸ்தியிடமிருந்த ஆதார விளக்கங்களைப் போல என்னிடம் அதிகமான ஆதார நூல்கள் இல்லை, இருந்தபோதிலும், இது உங்களுக்கு ஏன் முஹம்மது அப்துல்லாஹ்வைக் கொல்ல கட்டளையிட்டார் என்பதற்கான அவரின் உள்நோக்கத்தை படம் பிடித்துக்காட்டும்.
அலி தஸ்தியின் "23 வருடங்கள் - முஹம்மதுவின் நபித்துவத்துவத்தைப் பற்றிய ஒரு ஆய்வு" புத்தகத்திலிருந்து, பக்கம் 98:
'பெயர் குறிக்கப்பட்ட கடைசி மனிதன் [கொலை செய்யப்படுவதற்கான பட்டியலில்] மதினாவில் குர்ஆன் வெளிப்பாடுகளை எழுதும்படி நியமிக்கப்பட்டவராக இருந்தார். குர்ஆனில் பல இடங்களில் முஹம்மதுவின் சம்மதத்தோடு கூட இந்த மனிதர் வசனங்களின் முடிவு வார்த்தைகளை மாற்றியுள்ளார்.
உதாரணத்திற்கு, 'மேலும் இறைவன் வல்லமையும் ஞானமும் உள்ளவன்" என்று முஹம்மது சொன்னபோது, அப்துல்லாஹ் சார்ஹ், 'அறிபவனும் ஞானம் உள்ளவனும்" என்று மாற்றிச் சொல்லி அனுமதி கேட்டபோது, அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நபி சொன்னார். இப்படிப்பட்ட அனேக மாற்றங்களை முஹம்மது அங்கீகரித்ததை அப்துல்லாஹ் கண்டபோது, வெளிப்பாடு ஒரு வேளை இறைவனிடமிருந்து வந்திருந்தால் தன்னைப் போன்ற எழுதுபவர்களின் தூண்டுதலால் அது மாற்றப்படக் கூடாததாக இருக்க வேண்டும். ஆனால், குர்ஆனின் நிலை இப்படி இல்லாமல் இருப்பதைக் கண்ட அப்துல்லாஹ் இஸ்லாமை விட்டு வெளியெறினார். இஸ்லாமை விட்டு வெளியேறிய பிறகு மெக்காவிற்கு சென்று அங்கிருந்த குறைஷிகளோடு சேர்ந்து கொண்டார்."
எனவே, அப்துல்லாஹ் கொலை செய்யப்படுவதற்கு கட்டளையிடப்படுவதற்கான பின்னனியை நீங்கள் பார்த்தீர்கள். அவர் குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்தார். அவர் ஒரு முஸ்லீமாக இருந்து, முஹம்மதுவுடன் குர்ஆனை எழுதுவதில் பணியாற்றி அவ்வப்போது சில சிறிய மாற்றத்தை செய்ய யோசனை கூறினவராக இருந்தார். இறுதியாக, குர்ஆன் ஒரு வேளை இறைவனிடமிருந்து உண்டாயிருக்குமென்றால் சாதாரண எழுத்தாளர் போன்ற எந்த மனிதனும் அதில் மாற்றங்களை கொண்டு வர முடியாது என அப்துல்லாஹ் உணர்ந்தார். எனவே இஸ்லாம் பொய்யானது என்று கண்டு அவர் திரும்ப மெக்காவுக்கு சென்றார். பிறகு முஹம்மது மெக்காவை பிடித்து, அவரை கொலை செய்ய கட்டளையிட்டபோது, அவர் உத்மான் என்ற முஹம்மதுவின் நெருங்கிய தோழரிடத்தில் ஒளிந்துக் கொண்டார். இறுதியாக அப்துல்லாஹ் பொதுமன்னிப்புக்காக முஹம்மதுவிடம் கெஞ்சினார். தன்னுடைய ஆட்களில் யாராவது ஒருவர் உடனடியாக அவரை கொல்ல வேண்டுமென்று முஹம்மது விரும்பினார், ஆனால் அவர்களுக்கு அது தெரியவில்லை ஏனென்றால் அவர்களால் முஹம்மதுவின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இறுதியாக முஹம்மது அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.
இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய முக்கியமான விவரம் என்னவென்றால், அப்துல்லாஹ் மீண்டும் முஸ்லீமாக மாறி அரசியல் பதவி வகித்தார் என்று இப்னு ஹிசாம் குறிப்பிடுகிறார் [இபின் இஷாம் குறிப்பு எண் 803] . இது "எதிரியை தோற்கடிக்க முடியவில்லை என்றால் அவனோடு சேர்ந்து கொள்" என்ற பழமொழிக்கு ஏற்ற ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
முஸ்லீம்கள், "முஹம்மது அவரை கொலை செய்யக் கட்டளையிட்டார் உண்மை தான், ஆனால், மீண்டும் அந்த மனிதன் மனம் மாறினதை ஏற்றுக்கொண்டு அவரை கொல்லாமல் உயிரோடு விட்டுவிட்டார்" என்று சொல்லலாம். ஆனால், உண்மை அது அல்ல. முஹம்மது அவரை கொலை செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் முஹம்மது விரும்பிய படி அது நடக்கவில்லை அவ்வளவு தான்.
நானும் இங்கே என் கருத்துக்களை தெரிவிக்கிறேன். முஹம்மது சொன்ன காரணம் முட்டாள் தனமாமது. ஒரு மனிதனை கொலை செய்ய கட்டளையிடுகிறார் ஆனால் அதை நடத்துவதற்கு முஹம்மது தவறிவிடுகிறார். ஏனென்றால் அவர் கொலை செய்யப்படுவதற்கு தன்னுடைய கையால் சைகை செய்ய விரும்பவில்லை???? ஏன் முஹம்மது தானாகவே அவரைக் கொல்லவில்லை. அந்த மனிதன் மரணத்திற்கு ஏற்ற குற்றத்தை செய்திருந்தால், ஏன் மரண தண்டனை நிறைவேற்றப்படாததை முஹம்மது கண்டு கொள்ளவில்லை?
இது முஹம்மதுவின் கட்டளைகள் விருப்பத்திற்கு ஏற்றபடி அடிக்கடி மாற்றமடைகின்றன என்பதைக் காட்டுகின்றது. இந்த மனிதன் மரண தண்டனை பெறுவதற்கான எந்த குற்றத்தையும் செய்யவில்லை. தன்னுடைய தனிப்பட்ட விரோதத்திற்காக முஹம்மது அவரைக் கொல்ல விரும்பினார். முஹம்மதுவின் மனநிலையை பொருத்துத் தான் மக்கள் வாழ்ந்தும், மரித்தும் இருந்திருக்கிறார்கள்.
இதுவரை நாம் ஒரு மரண தண்டனைக்கான உத்தரவை ஆராய்ந்தோம். அப்துல்லாஹ் கொலை செய்யப்படவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டிருந்தார், ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்துல்லாஹ் தப்பிக்கொண்டார், ஏனென்றால், முஹம்மதுவின் தோழர்கள் அவரின் மனதின் ஓட்டத்தை புரிந்துக்கொள்ள தெரியாதவர்களாக இருந்தார்கள்.
முடிவுரை: இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதைக் காட்டவும், முஹம்மது ஒரு சாதுவான மனிதர் என்று காட்டவும் இஸ்லாமியர்கள் "மெக்காவை முஹம்மது கைப்பற்றிய நிகழ்ச்சி" பற்றி பெருமையாக கூறுவார்கள். மெக்காவை பிடித்த பிறகு அவர் யாரையும் கொல்லவில்லை என்றுச் சொல்வார்கள். அப்துல்லாஹ் என்பவரைக் கொல்ல முஹம்மது எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது என்பதை நாம் இக்கட்டுரையில் கண்டோம். முஹம்மது கொல்ல விரும்பிய மீதமுள்ள ஒன்பது பேரின் நிலை என்ன? அவர்களின் பெண்களும் உள்ளனரே, இவர்களால் முஹம்மதுவிற்கு ஏதாவது ஆபத்து இருந்ததா? இந்த கேள்விகளுக்கு அடுத்த பாகத்தில் பதிலைக் காண்போம்.
இயேசுக் கிறிஸ்து
கேள்வி கேட்கப்படவேண்டிய முஹம்மதுவின் நடத்தைகள்
- முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும் (MUHAMMAD AND THE MURDER OF ABU AFAK)
- முஹம்மது ஒரு தீவிரவாதியா?
- பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி (WAS MUHAMMAD A SINNER? Part - 1)
0 comments:
Post a Comment