அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 23, 2010

Answering PJ - 3: இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நட...



 

Answering PJ - 3: இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1

பீஜே அவர்களின் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற கட்டுரைக்கு ஈஸா குர்ஆன் அளித்த முந்தையை பதில்களை படிக்கவும்:

பீஜே அவர்களுக்கு பதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை: நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

இதன் தொடர்ச்சியாக, அவரது அடுத்த குற்றச்சாட்டிற்கு (பொய்யிற்கு) இந்த கட்டுரையில் பதில் தரப்படுகிறது. இந்த முறை அவர் சுவிசேஷ நூல்களை விட்டுவிட்டு, புதிய ஏற்பாட்டின் "அப்போஸ்தலருடைய நடபடிகள்" என்ற புத்தகத்திற்கு தாவுகிறார்.

அவரது வரிகளை இப்போது காண்போம்:

கிறித்தவர்களுக்கு எதிரியாக இருந்து கிறித்தவர்களுக்குக் கொடுமைகள் பல இழைத்த சவுல் என்ற யூதர் பவுல் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு கிறித்தவ மதத்தில் சேர்ந்து இயேசு போதித்த கொள்கைக்கு மாற்றமான கொள்கையை உருவாக்கினார். அதைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இயேசுவுக்கு எதிரான கொள்கையை கிறித்தவ மார்க்கமாக்கி விட்டார்.

இதை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகள் முதல் கடைசி வரை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.

மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/

ஈஸா குர்ஆனின் பதில்:

பீஜே அவர்கள் கூறுவது:

1) இயேசு போதித்ததற்கு எதிராக பவுல் போதித்தார், இதனையே கிறிஸ்தவ மார்க்கமாக்கி விட்டார்.

2) இதற்கு ஆதாரம் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகமாகும்.

3) அப். நடபடிகள் முதல், கடைசி வரை படித்தால் இதனை புரிந்துக்கொள்ளலாம்

இது தான் பீஜே அவர்கள் வரிகளின் சுருக்கம்.

பீஜே அவர்களின் இந்த விமர்சனத்திற்கு நான் இரண்டே வரிகளில் பதில் தரமுடியும், அதாவது இதற்கான பதில்
"பீஜே அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை படிக்கவில்லை, அல்லது படித்து புரிந்துக்கொண்டாலும், தங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை நிலை நாட்டுவதற்கு இப்படிப்பட்ட பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்" என்பதாகும்.

பீஜே அவர்கள் கூறுகிறார், பவுல் தான் இயேசுவின் போதனைகளை மாற்றிவிட்டாராம், இதனை அப்போஸ்தலர் நடபடிகள் ஆரம்பமுதல் கடைசி வரை படித்தால் தெரிந்துக் கொள்ளலாமாம். பீஜே அவர்கள் கூறியதைக் கேட்டு, எந்த இஸ்லாமியராவது அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால், முதல் சில அதிகாரங்களை படிக்கும் போதே தெரிந்துக்கொள்ளலாம், பீஜே அவர்கள் சொன்னது "மிகப்பெரிய பொய்" என்பதை.

ஏன் இப்படி இஸ்லாமிய அறிஞர்கள் பொய்களை பயமில்லாமல் கூறுகிறார்கள்?

ஏன் இவர்கள் அறைகுறையாக மற்றவர்களின் வேதங்களை படித்து பொருள் கூறுகிறார்கள்?

முதலாவதாக இதற்கு காரணம், சராசரி இஸ்லாமியர்கள் இவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள், என்ற பயமின்மையாகும். இதில் சராசரி இஸ்லாமியரின் சுயநலமும் உள்ளது, இஸ்லாமின் பெயர் உயருவதற்கு, யார் எந்த பொய்யைச் சொன்னால் என்ன, இஸ்லாமுக்கு உபயோகமாக இருக்குமா? அது போதும் என்ற இஸ்லாமிய மனநிலை.

இரண்டாவதாக, நமக்கு எதற்கு வம்பு, பொய் சொல்வருக்கு தேவன் தண்டனையைக் கொடுப்பார் என்றுச் சொல்லி நழுவி விடும் சராசரி கிறிஸ்தவர்களே ஆவார்கள்.

இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் மீது பொய்களை சொல்லும் போது, இயேசு சாட்டையை உண்டாக்கி, எருசலேம் ஆலயத்தை வியாபார இடமாக மாற்றியவர்களை துரத்தினாரே, அதுபோல செய்ய கிறிஸ்தவர்கள் (பதிலைக் கொடுக்க) தவறியதே இதற்கு இன்னொரு காரணம்.

ஆனால், இனி இஸ்லாமியர்களின் இந்த பொய் அதிக நாட்கள் நிலைத்து இருக்க வாய்ப்பு குறைவு.

இப்போது, அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தின் முதல் சில அதிகாரங்கள், அதாவது பவுலை இயேசு சந்திப்பதற்கு முன்பாக நடந்த நிகழ்ச்சிகள் எப்படி இஸ்லாமுடைய முகத்தில் அல்லது இஸ்லாமியர்களின் பொய்யான கோட்பாட்டின் முகத்தில் கரியை பூசுகின்றது என்பதைக் காண்போம்.

அப்போஸ்தலருடைய நடபடிகளின் முதல் எட்டு அதிகாரங்களின் சுருக்கம்:

1. உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுக்கு காணப்படல், மற்றும் பரமேறுதல் (1:4-11)

2. தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவருக்காக சீடர்கள் எருசலேமில் காத்திருத்தல் (1:12-14)

எருசலேம் சபையின் ஆரம்பகால விசுவாசிகளின் நடபடிகள் (1:15 - 8:3)

1) யூதாசுக்கு பதிலாக மத்தியாஸை நியமித்தல் (1:15-26)

2) பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் வருகை (2: 1-13)

3) எருசலேமில் பேதுருவின் முதல் பிரசங்கம், அனேகர் மனந்திரும்பினர் (2:14-41)

4) பேதுரு மற்றும் யோவான், ஒரு முடவனை சுகமாக்குதல் (3:1-10)

5) அற்புதத்திற்கு பிறகு பேதுரு செய்த இரண்டாம் பிரசங்கம் (3:11-26)

6) பேதுரு மற்றும் யோவானின் கைது, நீதிமன்றத்திற்கு முன்பு சாட்சி கொடுத்தல் (4:1-22)

7) பேதுரு யோவானின் விடுதலை, விசுவாசிகளின் கூட்டு ஜெபம் (4:23-31)

8) அப்போஸ்தலர்களின் அற்புதங்கள், சுகமாக்குதல் (5:12-16)

9) மறுபடியும் அப்போஸ்தலர்கள் கைது செய்யப்படல், நீதிமன்றத்திற்குமுன்பு சாட்சியிடல் ( 5:17-42)

10) ஸ்தேவான் கைது செய்யப்படல், பயமில்லாமல் அவர் செய்த பிரசங்கம் ( 6:8 - 7:53)

11) ஸ்தேவான் கல்லெறியப்பட்டு கொல்லப்படல், தன்னை கொன்றவர்களுக்காக வேண்டிக்கொள்ளுதல் (7:54 - 60)

12) சவுல் சபையை துன்புறுத்த ஆரம்பித்தல் (8:1-3)

பீஜே அவர்கள் அப். நடபடிகளின் முதல் ஏழு அதிகாரங்களை படித்தாரா?

பீஜே அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் ஏழு அதிகாரங்களை படித்தாரா இல்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது. இந்த ஏழு அதிகாரங்களில் இயேசுவின் இறைத்தன்மை சீடர்களால் (பவுலினால் அல்ல) வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவின் உள்வட்ட சீடர்களாகிய பேதுருவும், யோவானும் யாக்கோபும், எருசலேமின் சபையின் முக்கிய தலைவர்களாக செயல்படுகிறார்கள். பேதுரு தனது முதல் பிரசங்கத்திலும், இரண்டாம் பிரசங்கத்திலும், இன்னும் அவர் யூதர்களின் நீதி மன்றத்தில் பகிர்ந்துக்கொண்ட சாட்சியிலும், இயேசுவின் இறைத்தன்மையைக் குறித்து பேசி இருக்கிறார். ஸ்தேவான் தான் மரணிப்பதற்கு முன்பு இயேசுவின் இறைத்தன்மையை குறித்து சொன்னார். இவைகள் எல்லாம், பவுல் கிறிஸ்துவை சந்திப்பதற்கு முன்பாகவே நடந்துள்ளது. இது பீஜே அவர்களுக்கும், அவரது வார்த்தைகளை புடமிடாமல் அப்படியே தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டும், இதர இஸ்லாமியர்களுக்கும் புரியவில்லையா?

மேலேகண்ட ஒவ்வொரு விவரத்தின் வசனங்களைக் காட்டி நான் அதிகமாக விளக்கமுடியும், பீஜே அவர்கள் இந்த கட்டுரையைக் குறித்து ஏதாவது எழுதினால், அவைகளை நான் விளக்கி தனி கட்டுரையாக எழுதுவேன். மேலோட்டமாக இந்த ஏழு அதிகாரங்களை படித்தாலே பீஜே அவர்கள் சொன்னது "பொய்" என்பது தெள்ளத்தெளிவாக புரியும்.

எனவே, இதைக் குறித்து நான் சில கேள்விகளை பீஜே அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்:

1) ஏன் இயேசுவின் சீடர்களை யூதர்கள் கொல்லவும், தண்டிக்கவும் முற்பட்டார்கள்?

2) இயேசு வெறும் "தீர்க்கதரிசி தான்" என்று சீடர்கள் சொல்லியிருந்தால், இந்த தண்டனை, கொடுமைகள் சீடர்களுக்கு நடந்திருக்காதே?

3) இயேசு வெறும் நபியாக இருந்திருந்தால், அவரது பெயரைச் சொன்னால்,ஏன் அற்புதங்கள் சீடர்களின் கைகளின் மூலமாக நடக்கவேண்டும்?

4) ஸ்தேவானை ஏன் யூதர்கள் கல்லெரிந்துக் கொல்லவேண்டும், இந்த ஸ்தேவானை கொல்பவர்களின் உடைமைகளை பாதுகாக்கும் பணியை சவுல் செய்துக்கொண்டு இருந்தார் என்பதை கவனிக்கவும்

5) இயேசு பரமேறியதிலிருந்து பவுலை இயேசுவை தமஸ்கு வழியில் சந்திக்கும் வரைக்கும் கிடத்தட்ட 3 அல்லது 3.5 ஆண்டுகள் கால அவகாசம் இருக்கின்றது என்று கணக்கெடுத்து இருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் அனேக ஆயிரமான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். பவுல் இல்லாமலேயே எருசலேம் சபை வளர்ந்தது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், ஒட்டு மொத்த யூத எதிர்ப்பின் கொடுமைகளின் மத்தியிலும் சபை வளர்ந்தது.

இன்னும் அனேக விவரங்களை சொல்லமுடியும், இருந்தாலும் இதோடு முடிக்கிறேன்.

திரு பீஜே அவர்களே, எந்த பவுலைக் குறித்து நீங்கள் பொய்களை சொல்கிறீர்களோ, அவருக்கு இயேசு சொன்ன எச்சரிக்கை வார்த்தைகளை உங்களுக்கு இன்று நான் தாழ்மையுடன் சொல்கிறேன், "முள்ளில் உதைப்பது உங்களுக்குக் கடினமாம்". [அனேக இஸ்லாமியர்கள் எனக்கு அடிக்கடி மெயில் அனுப்புவார்கள், அல்லாஹ் உனக்கு நல்ல கூலி கொடுப்பான், நரகத்தில் தள்ளுவான் என்று திட்டுவார்கள், சபிப்பார்கள், ஆனால், நாங்கள் அப்படி செய்யமுடியாது, எனவே, உங்களை தாழ்மையுடன் எச்சரிக்கிறோம், உண்மையை நீங்கள் அறிய வேண்டுமென்று உங்களுக்காக வேண்டிக்கொள்வோம்]

நீங்கள் நேர்மையானவராக எழுத ஆரம்பியுங்கள், அது இஸ்லாமுக்கும், உங்களுக்கும் நல்லது. "மாட்டேன் என்று அடம்பிடித்து மறுபடியும் பொய்களை சொல்வீர்களானால்", சீக்கிரத்திலேயே சாயம் வெளுக்க ஆரம்பித்துவிடும், இனி காலம் செல்லாது.

இந்த கட்டுரையை படித்த பிறகாவது ஒருமுறை அப்போஸ்தலர் நடபடிகள் முதல் ஏழு அதிகாரங்களை தயவு செய்து படியுங்கள், இந்த வேண்டுதல், பீஜே அவர்களுக்கு மட்டுமல்ல, அவர் சொல்வதை அப்படியே நம்பும் சராசரி இஸ்லாமியர்களுக்கும் தான்.

அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் ஏழு அதிகாரங்களைக் குறித்து சொன்னீர்கள், மீதமுள்ள அதிகாரங்கள் பற்றி சொல்லவில்லையே என்று என்னிடம் கேட்க யாராவது விரும்பினால், அதற்கு நான் வாய்ப்பை தருகிறேன். முதலில் பீஜே அவர்கள் சொன்னது வடிகட்டிய பொய் என்பதை அங்கீகரித்து அல்லது இந்த ஏழு அதிகாரங்களுக்கு பதிலைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள அதிகாரங்களைப் படித்து நீங்கள் கண்டுபிடித்த விவரங்களை எனக்கு தெரிவியுங்கள். நான் மீதமுள்ள அதிகாரங்கள் பற்றி ஒரு சுருக்கத்தை இக்கட்டுரையைப் போல எழுதி பதில் தருகிறேன்.

இப்போது பல்டி அடிப்பார்கள் சில இஸ்லாமியர்கள்:

அப்போஸ்தவர் நடபடிகள் பற்றி பீஜே அவர்களின் விமர்சனம் வெறும் சுத்தப் பொய் என்று தெளிவாக புரிந்த பிறகு, சில இஸ்லாமியர்கள் "அப். நடபடிகள் கிறிஸ்தவர்கள் எழுதியது தானே... அவர்கள் மாற்றிவிட்டார்கள்" என்று கூறலாம். இப்படி சொல்வீர்களானால், இஸ்லாமை நிலை நாட்ட ஏன் இஸ்லாமியர்கள் அப்போஸ்தலர் நடபடிகளை மேற்கோள் காட்டுகிறார்கள்? என்று நான் கேட்பேன்.

அப்போஸ்தலர் நடபடிகளை படித்து இஸ்லாமியர்கள் மட்டும் தான் முழுவதுமாக புரிந்துக்கொண்டது மாதிரியும், அதில் சொல்லப்பட்டதை தமிழில் படித்தும் தங்கள் தங்கள் தாய் மொழியில் படித்தும் கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ளவே இல்லை என்பது மாதிரியும், ஏன் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதுகிறார்கள்?

மறுபடியும் நான் எச்சரிக்கிறேன், இஸ்லாமை நிலை நாட்ட உங்களுக்கு பைபிள் உதவாது, எனவே குர்ஆனை முன்வைத்து நிலை நாட்ட முதலில் முயற்சி எடுங்கள், முடிந்தால்.

முடிவுரை: பீஜே அவர்களே, பவுல் பற்றிய உங்கள் அடுத்த குற்றச்சாட்டிற்கு அளிக்கும் பதிலில் சந்திக்கிறேன். இனியாவது முழுவதுமாக படித்து விவரமாக எழுதுங்கள்.
 

0 comments: