கிறிஸ்தவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பாரா?
பெரியார்தாசன் அவர்கள் இஸ்லாமியராக மாறியது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன என்றுச் சொல்லி, அவருக்கு ஆதரவு அளிப்பதாக, பாதுகாப்பு அளிப்பதாக இஸ்லாமிய குழுக்கள் அவரைச் சந்தித்து, அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர். பீஜே அவர்களும் அவரை பாதுகாப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். இன்னும் ஒரு படி மேலே சென்று உயிரைக் கொடுத்தாவது காப்பதாக கூறியுள்ளார். இது மிகவும் நல்ல விஷயம் தான்.
பீஜே அவர்கள் பேசிய வீடியோவை இங்கு காணலாம்.
LInk: http://www.tntj.net/?p=13085
விளக்கம்: பி.ஜே
தலைப்பு: பெரியார்தாசன் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத் நிலை பாடு என்ன?
நேரம்: 6:00 min
அளவு: 5:0 MB
இந்த வீடியோவைக் கண்டவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதாவது, ஒருவர் இஸ்லாமியராக மாறினால் அவருக்கு சகல வித பாதுகாப்பும் அளிப்பதாக ஒட்டு மொத்த இஸ்லாமிய குழுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்கு கொடுக்கின்றனர். இது நல்ல விஷயம் தான், இதற்காக நாம் இஸ்லாமியர்களை மெச்சிக் கொள்ளவேண்டும்.
ஒருவர் இஸ்லாமியராக மாறினால் தவறென்ன?
ஒரு நாத்தீகர் ஆராய்ச்சி செய்து, இஸ்லாம் தான் சரியானது என்று முடிவு செய்து, இஸ்லாமியராக மாறினால் தவறா?
இஸ்லாமியர்களின் பதில்: இல்லை..இல்லைவே இல்லை.
ஒரு இந்து சகோதரர், இஸ்லாம் தான் நேர்வழி என்று நினைத்து, இஸ்லாமியராக மாறினால் தவறா?
இஸ்லாமியர்களின் பதில்: கண்டிப்பாக இல்லை.
ஒரு கிறிஸ்தவர், முஹம்மது தான் கடைசி நபி என்றும், இஸ்லாம் தான் சரியான வழி என்றும் நம்பி, இஸ்லாமியறாக மாறினால் தவறா?
இஸ்லாமியர்களின் பதில்: தவறு இல்லை.
எனவே, ஒருவர் இஸ்லாமியராக மாறினால் அவருக்கு தீங்கு செய்ய நினைப்பவர்களிடமிருந்து பாதுகாப்பது அளிப்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாகும். உயிரைக் கொடுத்தாவது அவரை நாம் காப்பாற்றுவோம், இது தான் இஸ்லாமியர்களின் ஒருமித்த கோஷம்.
இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், சகமனிதர்களை மனிதாபமானத்தோடு பார்த்துக்கொள்ளும் மார்க்கம். இது இஸ்லாமியர்களின் இதயத்தில் பதிந்துவிட்ட வரிகள். இதை கேட்பதற்கும், படிப்பதற்கும் நன்றாக இருக்கிறது.
ஆனால்,
ஒரு இஸ்லாமியர், இறைவன் இல்லை, நாத்தீகம் தான் சரியானது, எனவே நான் நாத்தீகனாக மாறிவிடுகிறேன் என்றுச் சொல்லி, நாத்தீகராக மாறினால் தவறா?
இஸ்லாமியர்களின் பதில்: அது எப்படி சரியாகும், இது தவறாகும்.
ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சூழ்நிலையில் வளர்ந்த ஒரு இஸ்லாமியர், இந்துத்துவம் தான் மனிதாபமான மார்க்கம், அதில் அடாவடி இல்லை என்று நம்பி, ஒரு இந்துவாக மாறினால் தவறா?
இஸ்லாமியர்களின் பதில்: இது தவறாகும், இது மிகப்பெரிய குற்றமாகும்.
ஒரு இஸ்லாமியர், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமன்று, இது ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான நபி என்றுச் சொல்லி, கிறிஸ்தவம் தான் சரியான மார்க்கம் என்று நம்பி, கிறிஸ்தவராக மாறினால் தவறா?
இஸ்லாமியர்களின் பதில்: இது தவறு தவறு தவறு... இது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஏன் இந்த முரண்பாடு & இஸ்லாமியர்கள் இருவேஷம் போடுவது ஏன்?
இஸ்லாமிய சட்டம் அமுலில் இருக்கும் நாடுகளில் ஒரு இஸ்லாமியர் நாத்தீகராகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது இந்துவாகவோ மாறினால், அவனுக்கு மரண தண்டனை தருகிறார்கள். ஆனால், வேறு மதத்தவர் மட்டும் இஸ்லாமியராக மாறினால், "இது தவறு, உன் பழைய மதத்திற்குச் சென்றுவிடு" என்றுச் சொல்வதில்லை.
இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரும் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல, இதை நான் சொல்லித் தான் தெரியவேண்டுவதில்லை. அப்படிப்பட்ட நபருக்கு தனிப்பட்ட முறையில் சக இஸ்லாமியர்களும், குடும்ப நபர்களும் தரும் தொல்லைகள், பயமுறுத்தல்கள் எண்ணிக்கையில் அடங்கா.
இந்தியா போன்ற நாடுகளில், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமென்றுச் சொல்லி, மேடைகள் போட்டு காதுகிழிய பேசும் இஸ்லாமியர்கள், ஒரு மாற்று மதத்தவர் இஸ்லாமியராக மாறினால் அவருக்கு சகலவித பாதுகாப்பு அளிக்க முன்வரும் மனித நேய பிரியர்கள், வெளி நாடுகளில், முக்கியமாக இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் இஸ்லாமிலிருந்து வெளியேறுகிறவர்களுக்கு விரோதமாக நடக்கும் கொடுமைகள், நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்து ஒரு சிறிய சத்தத்தையும் இவர்கள் அந்நாடுகளுக்கு விரோதமாக எழுப்புவதில்லை.
முக்கியமாக நம் அருமை இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்கள், "இஸ்லாமிய நாடுகளில் செய்வது சரியல்ல, இஸ்லாம் தன்னை விட்டு வெளியேறுபவர்களை கொலைச் செய்ய சொல்லவில்லை, இது அமைதி மார்க்கம், அவர்களுக்கு மார்க்க அறிவு இல்லை, இது மிகப்பெரிய பாவம்" என்றுச் சொல்வாரா?
[இந்தியாவில் இஸ்லாம் அமைதி மார்க்கமென்று அறைகூவல் விடும் இஸ்லாமிய அறிஞர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் இருப்பார்களானால், இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லும் நிகழ்ச்சியில் முதல் கல் வீசுபவர்களாக இவர்களாகத் தான் இருப்பார்கள்]
வேறு மதத்த்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுபவர்கள் கண்டிப்பாக பயமில்லாமல் வாழவேண்டும் என்று விரும்பும் நீங்கள், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவனும் பயமில்லாமல் வாழவேண்டும் என்று நினைப்பதில்லையே, அது ஏன்?
ஒருவனுக்கு மனிதாபமான ஆதாரவும், இன்னொருவனுக்கு மரண தண்டனையா?
பீஜே அவர்கள் நேர்மையானவராக இதற்கு பதில் தருவாரா?
ஒரு இந்து இஸ்லாமியராக மாறுவது தவறில்லையானால், ஒரு இஸ்லாமியர் இந்துவாக மாறுவதும் தவறில்லையே?
இஸ்லாமியரல்லாதவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பாரா?
இஸ்லாமியராக இருந்து கிறிஸ்தவத்திற்கு மாறும் போது, இஸ்லாமிய ஆட்சியின் கையிலிருந்து, இஸ்லாமிய சட்டத்திலிருந்து காப்பாற்ற, உயிரைக் கொடுத்து காப்பாற்ற எங்களுக்கு ஒரு பீஜே கிடைப்பாரா?
இஸ்லாமியராக இருந்து, பிறகு வேறு மதத்திற்கு மாறி, தான் எடுத்த முடிவு சரியானது தான், இதற்காக நான் பெருமைக் கொள்கிறேன் என்றுச் சொல்லி, வெளிப்படையாக தன் முடிவை மக்கள் முன் வைத்து வாழ ஒருவனுக்கு இஸ்லாமிய நாடுகளில் உரிமை அளிக்கப்படுமா? இஸ்லாம் இதற்கு அனுமதி அளிக்குமா? மனிதாபமானம் அதிமுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் அனுமதி கொடுப்பார்களா?
பெரியார்தாசனுக்கு ஒரு பீஜே கிடைத்தது போல, இஸ்லாமிய நாடுகளில் வாழும் பெயர் சொல்லமுடியாதவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பார்களா?
நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ....
Umar: http://isakoran.blogspot.com & http://www.answering-islam.org/Tamil