அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
August 5, 2009
இஸ்லாமிய சகோதரரின் கேள்விக்கு பதில்
===============
//Kaja Magdoom said:
யோவான்: 14:16, யோவான்: 10:30., மேற்கண்ட வசனங்களில் நீங்களே ஒத்து கொண்டுல்லேர்கள் அந்த மற்றொரு தேற்றரிவலன் யார் நீங்கள் இதற்கு பதில் சொல்ல முடியாது ஏன் என்றால் ப்ய்பில் ஒரு முற்றுபெறாத கிரந்தம்//
Umar said:
அன்பான சகோதரர் காஜா மக்தூம் அவர்களுக்கு,
யோவன் 14:16ம் வசனத்தில் சொல்லப்பட்ட தேற்றரவாளன் "முஹம்மது" அல்ல, அவர் பரிசுத்த ஆவியானவர். உங்களுக்கு நேரமிருந்தால் புதிய ஏற்பாட்டை படித்துப்பார்க்கவும்.
முஹம்மது ஒரு நபி என்றும், அவரைப் பற்றி பைபிளில் உள்ளது என்றும் இஸ்லாமியர்களாகிய நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், அதற்காக முஹம்மதுவை எப்படியாவது பைபிளில் கண்டிபிடிக்கவேண்டும் என்று சம்மந்தமில்லாத வசனத்தை எடுத்துக்கொண்டு அதைப் பற்றி விரிவுரைச் சொல்கிறீர்கள். ஆனால், உண்மை அது அல்ல. முஹம்மது பற்றி பைபிளில் குறிப்பிடப்படவில்லை. பைபிள் முஹம்மதுவை ஒரு நபி என்று அங்கீகரிப்பதில்லை.
இந்த விவரம் பற்றிய தமிழ் கட்டுரைகளை கீழ் கண்ட தொடுப்புகளில் படிக்கவும்:
* யோவான் 14:16 வேறொரு தேற்றரவாளன் என்று இயேசு குறிப்பிடுவது முகமதுவையா?
http://isakoran.blogspot.com/2007/07/1416.html
* உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deductions.html
* உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "முகமதுவை" அல்ல
http://isakoran.blogspot.com/2007/08/332.html
* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது முகமதுவை அல்ல
http://isakoran.blogspot.com/2007/09/33.html
பைபிள் முற்றுப்பெறாத வேதமல்ல, குர்ஆன் தான் இங்கு ஒரு வசனம் அங்கு ஒரு வசனம் என்று சம்மந்தமில்லாமல் பேசுகிறது. பைபிளின் முதல் புத்தகம் ஆதியாகமத்தில் ஆரம்பித்து வெளிப்படுத்தல் விசேஷம் என்ற புத்தகத்தோடு முடிகிறது.
அந்த இன்னொரு தேற்றரவாளன் யார் என்பதை "புதிய ஏற்பாட்டின் ஐந்தாம் புத்தகத்தின் முதல் சில அதிகாரங்களை படித்தாலே புரிந்திருக்கும்". ஆனால், நீங்கள் பைபிளை படிக்காமலேயே அதைப் பற்றி விரிவுரை கொடுக்கிறீர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
முற்றுப்பெறாத புத்தகம் குர்ஆன் தான், அதனால் தனித்து நிற்கமுடியாது, ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆன் வெறும் உயிர் இல்லாத உடல் தான்.
//Kaja Magdoom முதலில் பிபிலை நான் இறை கிரந்தம் என்றே ஏற்றுகொல்வதற்கில்லை, இன்ஜீல் என்பது தான் இறை கிரந்தம் என்பதாக திரு குரான் கூறுகிறது அந்த இன்ஜீலும் மற்றத்துக்குள்ளகி விட்டதாக அல் குரான் பறைசாற்றுகிறது.
Umar said:
நானும் தான் குர்ஆன் ஒரு வேதம் என்று ஏற்றுக்கொள்வதில்லை, என்னைப்போல கோடிக்கணக்கானவர்களும் குர்ஆனை ஒரு வேதம் என்று அங்கீகரிப்பதில்லை.
முக்கியமாக உங்களிடம் நான் கேட்க விரும்புவது என்ன தெரியுமா?
ஒரு முறையாவது நீங்கள் பைபிளை படித்ததுண்டா?
அல்லது
இயேசுவைப் பற்றி எழுதுகிறீர்கள், அவரது வாழ்க்கையை புதிய ஏற்பாட்டிலிருந்தாவது படித்து தெரிந்துக்கொண்டதுண்டா?
ஒரு புத்தகத்தை படிக்காமலேயே "அதை நான் வேதம் என்று அங்கீகரிப்பதில்லை" என்றுச் சொல்வது படித்தவர்களுக்கு அழகா? அறிவுடமையா? என்று சிந்தித்துப்பாருங்கள்.
என்னை கேட்டால், நான் குர்ஆனை படித்தேன், படிக்கிறேன், இன்னமும் படிப்பேன். அதனால், நான் குர்ஆனையும், ஹதீஸ்களையும் படிப்பதினால், நான் சொல்கிறேன் "குர்ஆன் ஒரு வேதம் என்று நான் அங்கீகரிக்கமாட்டேன்". இப்படி சொன்னால் நான் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது, என் கருத்தை நான் சொல்லவும் எனக்கு தகுதி வேண்டும் (அது என்ன தகுதி? - குர்ஆனை நான் ஒரு முறையாவது படித்து தெரிந்துக்கொண்ட பிறகு கருத்துச் சொல்லவேண்டும்).
அதனால், உங்கள் சொந்த கருத்தோ என் சொந்த கருத்தோ முக்கியமில்லை, அதற்கு பதிலாக "நாம் அங்கீகரிப்பதில்லை" என்றுச் சொன்ன கருத்திற்கு என்ன ஆதாரத்தை வைக்கிறோம் என்பது தான் முக்கியமானது.
இன்ஜில் மாற்றத்திற்குள்ளாகி விட்டது என்று என்று இஸ்லாமியர்கள் சொன்னால், அது உங்களுக்கே அவமானம், உங்கள் அல்லாஹ்விற்கே அவமானம். அதாவது, "இன்ஜில் அல்லாஹ்வின் வார்த்தை, அதை அவர் இறக்கினார், ஆனால், மக்கள் அதனை மாற்றிவிட்டார்கள்" என்றுச் சொன்னால், அதை பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியவில்லை, தன் வேதத்தை தானே பாதுகாக்க தவறிவிட்டார் என்று அர்த்தமாகிறது. அல்லது தன் வேதத்தை மனிதர்கள் மாற்றும் போது, அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அதனை தடுக்க சக்தியில்லாமல் கையாலாகாத ஒரு இறைவனாக அல்லாஹ் தென்படுகிறார்.
ஆக, மேலே உள்ள இரண்டில் ஏதாவது ஒரு தெரிவை நீங்கள் எடுக்கவேண்டும், அதாவது,
1) அல்லாஹ் தன் வேதத்தை இன்ஜிலை தானே பாதுகாக்கவில்லை.
அல்லது
2) மனிதர்கள் தன் வேதத்தை மாற்றும் போது, அதை பார்த்துக்கொண்டு வேண்டுமென்றே சும்மா இருந்துவிட்டார் அல்லது மனிதர்களை தடுக்க சக்தியில்லாத இறைவனாக ஒரு பலவீனமான அல்லாஹ்வாக இருந்துவிட்டார்.
இந்த இரண்டு தெரிவு தவிர வேறு தெரிவு "உலக இஸ்லாமியர்களுக்கு இல்லை".
தன் முந்தைய வேதத்தை பாதுகாக்க முடியாத அல்லாஹ்வினால் எப்படி தன் பிந்திய வேதமாகிய குர்ஆனை பாதுகாக்க முடியும்? இந்த கேள்வியை கேட்டுப்பார்த்து இருப்பீர்களா?
அல்லாஹ்வின் கையாலாகாத இந்த செயல் பற்றிய தமிழ் கட்டுரையை கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பில் படிக்கவும்
குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?)
http://www.answering-islam.org/tamil/authors/khaled/is-the-quran-preserved.html
// Kaja Magdoom said
ஏசு இறந்தார் என்பது ஒரு கட்டுக்கதை அவர் இறந்து போகவில்லை சிலுவையில் அறியப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவரை நம்மளவில் நாம் உயர்திகொண்டோம் என்பதாக அல்லாஹ் தான் திருமறையில் கூறுகிறான். //
Umar said:
இங்கு தான் பிரச்சனையே இஸ்லாமுக்கு வருகிறது... அதாவது சிலுவையில் இயேசு மரிக்கவில்லை, நான் தன்னளவில் எடுத்துக்கொண்டேன் என்று அல்லாஹ் கூறுவதால், தனக்கே தெரியாமல் கிறிஸ்தவத்தை உருவாக்கியுள்ளார், உங்கள் அல்லாஹ்.
அல்லாஹ் அறியாமையில் செய்த இந்த தவறு என்ன? அல்லாஹ் எப்படி அறியாமையில் கிறிஸ்தவத்தை உருவக்கியிருக்க முடியும் என்பதை அறிய கீழ் கண்ட தமிழ் கட்டுரையை படிக்கவும்.
ஏமாற்றும் இறைவன் (அல்லாஹ்), திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident)
http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deceptive_god.html
//Kaja Magdoom said
அல்லேலுயா என்று கூறுகிறீர்கள் அதற்கு அர்த்தம் தெர்யுமா உங்களுக்கு? //
Umar said:
சரி, அல்லேலூயா வார்த்தைக்கு அர்த்தத்தை சொல்லிவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த கேள்வியை திரும்ப வாங்கிக்கொள்வீர்களா?
வாழ்க்கை முழுவதும் புரியாத மொழியில் குர்ஆனை படிக்கிறீர்கள்,
புரியாத மொழியில் டேப்ரிகார்டர் போல தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறீர்கள்,
உலக இஸ்லாமியர்களில் எத்தனை சதவிகிதத்தினர், குர்ஆனை தங்கள் தாய் மொழியில் படிக்கிறார்கள்?
அர்த்தமே புரியாமல் குர்ஆனை படிக்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் உலகம் முழுவதும் இருக்கும் போது, "அல்லேயா" என்ற வார்த்தைக்கு பொருள் தெரியுமா என்று கேட்கிறீர்கள்?
எனக்கு அர்த்தம் மட்டுமல்ல, இந்த வார்த்தைக்கு சொந்தமாக தவறான அர்த்தத்தைக் கொடுத்த ஒரு இஸ்லாமிய தளத்தின் உண்மை முகத்தை உலகத்திற்கு வெளிக்காட்டியுள்ளேன்.
கீழ் கண்ட தமிழ் கட்டுரையை படிக்கவும், இந்த வார்த்தைக்கு உங்கள் இஸ்லாமியர் என்ன அர்த்தம் கொடுத்தார் அதற்கு சரியான பதில் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிய அறிஞர்கள் சாதாரண இஸ்லாமியர்களை (உங்களைப் போன்றவர்களை) எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு சரியான எடுத்துக்காட்டு.
தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்
http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html
ஆக, அருமை இஸ்லாமிய நண்பரே,
நான் தொடுப்புக்கள் கொத்த தமிழ் கட்டுரைகளை ஒரு முறை நிதானமாக படித்துப்பாருங்கள், பிறகு பின்னூட்டமிடுங்கள்.
இஸ்லாம் பற்றிய இதர தமிழ் கட்டுரைகளை கீழ் கண்ட தளங்களில் படிக்கலாம்:
http://www.answering-islam.org/tamil
http://isakoran.blogspot.com
http://sites.google.com/site/isakoran/
Umar
================
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment