அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

December 13, 2008

ஓமன் நாட்டு மக்களுக்கு நபி அனுப்பிய செய்தி

ஓமன் நாட்டின் ஜுலந்தா சகோதரர்களுக்கு(Julanda Brothers) முகமது நபி தன்
சகாக்கள் 'அமர் பின் அல்-'அஸ் அல்-சஹமி மற்றும் அபு ஜையத் அல்-அன்சாரி'
மூலமாக அனுப்பிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


"நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான்
உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல்
இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின்
தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை
காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என்
வலிமையை(POWER) உங்களுக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை
ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் வலிமை(POWER) அழிக்கப்படும். என்
குதிரைகள் உங்கள் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம்
உங்கள் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்."

In English:

"Peace be upon the one who follows the right path! I call you to
Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger
to mankind, and the word shall be carried out upon the miscreants. If,
therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if
you refuse to accept Islam, your power shall vanish, my horses shall
camp on the expanse of your territory and my prophecy shall prevail in
your kingdom."


[அரபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதத்தின் உண்மை புகைப்படத்தை இங்கு
(sizes 27K or 772K) காணலாம், மற்றும் இச்செய்தியின் ஆங்கில
மொழிபெயர்ப்பையும் இங்கு (31K) காணலாம். இந்த இரண்டும் "ஓமன் நாட்டின்
சோஹார் கோட்டையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது]

சோஹருக்கு முகமதுவின் செய்தியாளர்கள் வந்துச் சென்ற இரண்டரை
நூற்றாண்டுகளுக்கு பின்பு, சரித்திர ஆசிரியர் அல்-பலதூரி(al-Baladhuri)
கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

"ஓமன் நாட்டு மக்கள் சத்தியத்தின் ஆதாரத்திற்கும், மற்றும் இறைவனுக்கும்
அவரது நபிக்கும் கீழ் படிவதற்கு உறுதியளித்தபோது, அமர், அவர்களது அமீர்
மற்றும் அபு ஜையத் இவர்கள் தொழுகையை நடத்துவதற்கும், இஸ்லாம் பற்றி
விவரிப்பதற்கும், குர்‍ஆனை கற்றுக்கொடுப்பதற்கும் மற்றும் இஸ்லாம்
மதத்தின் பிரமாணங்களை கற்றுக் கொடுப்பதற்கும்
பொறுப்பாளிகளாக்கப்பட்டார்கள்."

--------------------------------------------------------------------------------

மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லீம்கள் "எங்கள் மார்க்கத்தில் கட்டாயம்
இல்லை" என்று வாதம் புரிவார்கள். இப்படிப்பட்டவர்களின் சொந்த நபியினுடைய
சுன்னா இவர்களின் இந்த வாதத்திற்கு முரண்பட்டதாக இவர்களுக்குத்
தெரியவில்லை?

--------------------------------------------------------------------------------

மூலம்: http://www.answering-islam.org/Muhammad/oman.htm

--------------------------------------------------------------------------------

முகமது பற்றிய இதர கட்டுரைகள்:
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

--------------------------------------------------------------------------------
http://www.answering-islam.org/tamil/muhammad/oman.html
 

0 comments: