அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

December 10, 2008

ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH



ஏகத்துவத்திற்கு பதில் அல்லது கேள்வி
 

ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1


An Examination of The Parallel Passages of the Quranic Text:

CONCILIATION OR CONFLICT?

முன்னுரை: ஏகத்துவத்திற்கு கீழ் கண்ட பதில்கள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் ஒரே நிகழ்ச்சியை அல்லது ஒரு நிகழ்ச்சியின் உரையாடலை அல்லா எப்படி மாற்றி மாற்றிச் சொல்கிறார் என்பதை பார்ப்போம், மட்டுமல்ல, சொல்லப்பட்ட நிகழ்ச்சியில் சில விவரங்களை விட்டுவிட்டு அவர் கூறியுள்ளார். குர்‍ஆனில் "அல்லா எல்லாம் அறிந்தவர்" என்று சொல்லும் போது, ஏன் ஒரு நிகழ்ச்சியை சொல்வதில் இவ்வளவு முரண்படுகிறார் அல்லா.
 
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும்

பாகம் - 1 | பாகம் - 2 | பாகம் - 3 | பாகம் - 4

ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும் (முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்)

 
ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்

An Examination of The Parallel Passages of the Quranic Text:

CONCILIATION OR CONFLICT?

புதிய ஏற்பாட்டுக்கு எதிராக அதை கறைப்படுத்தவேண்டும் என்பதற்காக முஸ்லீம்கள் பொதுவாக சொல்லும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், சுவிசேஷ நூல்களில் இயேசுவைப் பற்றிய நிகழ்ச்சிகள் சிறிது மாற்றமாக சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது தான். புதிய ஏற்பாட்டை நாம் படிக்கும் போது, அதன் எழுத்தாளர்கள் இயேசுவின் வார்த்தைகளின் சுருக்கத்தை, தாங்கள் யாருக்காக (வாசகர்களுக்காக) எழுதுகிறோம் என்பதை கருத்தில் கொண்டு எழுதியிருக்கிறார்கள். இதைப் பார்த்துத் தான் இஸ்லாமியர்கள் பைபிள் நம்பகத்தன்மையற்றது எனவே அதனை நாம் அங்கீகரிக்கமுடியாது என்றுச் சொல்கிறார்கள்.

இவர்களின் இந்த கற்பனை எதை எதிர்பார்க்கிறது என்றால், ஒரு நிகழ்ச்சியை விவரமாக மற்றும் எல்லா விவரங்களோடும் சொன்னால் தான் அது சரியான எழுத்தாகும் அல்லது புத்தகமாகும் என்று இவர்கள் நம்புகிறார்கள். வேறு வகையில் சொல்லவேண்டுமானால், ஒரு எழுத்தாளர் முக்கியமில்லாத மற்றும் தேவையில்லாத விவரத்தையும் விட்டுவிடாமல் அதையும் சொல்லவேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 
 
ஒரு நிகழ்ச்சியை மேற் சொன்னதுப்போல சொல்லவேண்டும் என்று நினைக்கும் இஸ்லாமியர்களின் இந்த கோட்பாட்டில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன.
முதலாவதாக, எந்த ஒரு சரித்திர ஆசிரியரும், தான் சொல்லவந்த நிகழ்ச்சியைப் பற்றி எல்லா விவரங்களையும் அதாவது ஒவ்வொரு நிமிடம் நடந்த நிகழ்ச்சி நிரலையும் எழுத மாட்டார், அதற்கு பதிலாக தான் யாருக்காக எழுதுகிறோம் என்று கருத்தில் கொண்டு, சில நேரங்களில் நிகழ்ச்சியின் சுருக்கத்தைச் சொல்வார், சில நேரங்களில் சிறிது மாற்றிச் தன் வாசகர்களுக்கு தேவையான விவரத்தை மட்டுமே சொல்வார். ஆக, சுவிசேஷ எழுத்தாளார்கள் இயேசுவின் வார்த்தைகளை மிகவும் சரியாக சுருக்க வடிவத்தில்(Summarised Format) பதித்துள்ளார்கள் என்பதை நாம் அறியவேண்டும். (Firstly, no historian comprehensively records every minute detail but will often summarize and modify his account in order to bring out that material which is relevant to his intended audience. Hence, the gospel writers accurately record Jesus' words in summarized format).

 
இரண்டாவதாக, இஸ்லாமியர்களின் இந்த நிபந்தனை உண்மையானதாக இருக்கும் என்று கருதினால், இது குர்‍ஆனை அவதூறுக்கு நேராக நடத்தும், அதாவது குர்‍ஆனுக்கு அவதூறை கொண்டுவரும். குர்‍ஆன் ஒரே நிகழ்ச்சியை பல நேரங்களில் வித்தியாசமாக வெவ்வேறான வார்த்தைகளைக் கொண்டு சொல்லியுள்ளது. ஆக, முஸ்லீம்களின் இந்த நிபந்தனையை நாம் கருத்தில் கொண்டால், குர்‍ஆன் இறைவனின் வேதம் அல்ல என்பதை நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும், மற்றும் குர்‍ஆனை நாம் புறக்கணிக்கவேண்டும்.

 
கீழே கொடுக்கப்பட்ட வசனங்களில் வித்தியாசத்தை புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக, சில வரிகளை தடிமனமாகவும், பல வண்ணங்களிலும் கொடுத்துள்ளோம். இந்த கீழ் கண்ட எடுத்துக்காட்டுக்களின் உதவியுடன், குர்‍ஆனில் ஒரே நிகழ்ச்சியை பல இடங்களில் வித்தியாசமான எதிர்மறையான விவரங்களாக பதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.
 
மோசேயும், எரியும் புதரும்

MOSES AND THE BURNING BUSH
 
 
இறைவன் மோசேயுடன் எரியும் புதரிலிருந்து பேசிய‌ உரையாடலைப் பற்றி குர்‍ஆனில் கீழ் கண்ட இடங்களில் வெவ்வேறு விதமாக கூறியுள்ளார். இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது போல, ஏன் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக சொல்லவில்லை. ஏன் சில விவரங்களை ஒரு இடத்தில் மட்டும் சொல்லியுள்ளார், இன்னொரு இடத்தில் சொல்லாமல் விட்டுவிட்டார்.
தலைப்புக்கள் குர்‍ஆன் 20:9-24 குர்‍ஆன் 27:7-14 குர்‍ஆன் 28:29-33
1. மோசேயின் முதல் உரையாடல் இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா? (20:9) அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்" என்று (கூறினார்). (20:10) மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி; "நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்" என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக! (27:7) ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார். (28:29)
2. மோசே அழைக்கபப்ட்ட விதம் அவர் (நெருப்பின்) அருகே வந்த போது "மூஸாவே!" என்று அழைக்கப் பட்டார். (20:11) அவர் அதனிடம் வந்த போது "நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கயம் அளிக்கப் பெற்றுள்ளது மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்" என்று அழைக்கப்பட்டார். (27:8) அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து "மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!" என்று கூப்பிடப்பட்டார். (28:30)
3. மோசே அழைக்கப்பட்ட பிறகு, இறைவன் சொன்ன அதிகபடியான விவரங்கள் "நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன், நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் 'துவா' என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். (20:12)

இன்னும் "நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன், ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக. (20:13)

"நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை, ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. (20:14)

"ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது, ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன். (20:15)

"ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர். (20:16)
"மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன். (27:9)
4. கைத்தடி பாம்பாக மாறிய அற்புதம் பற்றிய விவரங்கள் "மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?" (என்றும் அல்லாஹ் கேட்டான்.) (20:17)

(அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி, இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன், இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன், இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார். (20:18)

அதற்கு (இறைவன்) "மூஸாவே! அதை நீர் கீழே எறியும்" என்றான். (20:19)

அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார், அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று. (20:20)

(இறைவன்) கூறினான்: "அதைப் பிடியும், பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்." (20:21)
"உம் கைத்தடியைக் கீழே எறியும்;" (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார் "மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்." (27:10)

ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன். (27:11)
"உம் கைத்தடியைக் கீழே எறியும்" என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது); "மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்." (28:31)
5. கை வெண்மையாக மாறும் அற்புதம் பற்றிய விவரங்கள் "இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும், அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும். (20:22)

"(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம். (20:23)

"ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்" (என்றும் அல்லாஹ் கூறினான்). (20:24)
"இன்னும் உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக!' அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர். (27:12)

இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் "இது பகிரங்கமான சூனியமேயாகும்" என்று கூறினார்கள். (27:13)

அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக. (27:14)
"உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்" (என்றும் அவருக்கு கூறப்பட்டது). (28:32)
6. ஒருவனை கொன்ற விவரம் பற்றி மோசேயின் பயம்     (அதற்கு அவர்); "என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்" என்று கூறினார். (28:33)
 
 
மோசே தான் கண்ட "எரியும் புதர்" பற்றி தன் குடும்பத்தாரிடம் சில விவரங்களைச் சொல்கிறார். பிறகு அவருக்கும் அல்லாவிற்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல் பற்றி குர்‍ஆன் விவரிக்கும் வசனங்கள் தான் மேலே படித்த வசனங்கள்.

 
குர்‍ஆனின் ஆசிரியர் அல்லா, அவருக்கு எல்லா ஞானமும் உண்டு, அப்படியானால், ஒரே நிகழ்ச்சியை அவர் எப்படி விவரித்துள்ளார் என்று பாருங்கள்.

முதல் முறை அல்லா விவரிப்பதற்கும் இரண்டாம் முறை விவரிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்று நீங்கள் கவனிக்கலாம். அதே போல, மூன்றாம் முறை விவரிக்கும் போது எவ்வளவு அல்லா அந்த ஒரே நிகழ்ச்சியைப் பற்றி முரண்படுகிறார் என்பதை கவனிக்கவும், முக்கியமாக ஏகத்துவம் தள இஸ்லாமிய அறிஞர்கள் கவனிக்கலாம்.

 
இப்போது மேலே கண்ட வசனங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள வேறுபாட்டை தலைப்பு வாரியாக காண்போம்.

 
1. மோசேயின் முதல் உரையாடல்:


மோசே எரியும் புதரை கண்டு அதைப்பற்றி தன் குடும்பத்தாரிடம் சொல்கிறார். இந்த விவரத்தை குர்‍ஆன் சொன்ன மூன்று இடங்களையும் கண்டால் நமக்கு ஒரு விவரம் தெளிவாக புரியும், அதாவது "நடந்த ஒரே நிகழ்ச்சியை அல்லாவிற்கு ஒரே மாதிரியாக சொல்லத் தெரியவில்லை".

குர்‍ஆன் 20:10ல் மோசே சொன்னதாக‌ அல்லா சொல்வதை கவனித்தால், "ஒரு வேளை" என்ற வார்த்தை மற்ற இரண்டு இடங்களில் காணப்படவில்லை, மற்றும் "குளிர் காயும்" என்ற விவரமும் முதல் முறை சொன்ன விவரங்களில் இல்லை.


 
இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்: மோசே "ஒரு வேளை" என்ற வார்த்தையும், "குளிர்" என்ற வார்த்தையும் சொன்னாரா இல்லையா? குர்‍ஆன் 20:10ம் வசனம், குர்‍ஆன் 27:7ம் வசனத்தோடும் மற்றும் குர்‍ஆன் 28:29ம் வசனத்தோடும் முரண்படுகிறது. இது முரண்பாடு இல்லையா? இந்த மூன்று வசனங்களில் எந்த வசனம் சொல்வது உண்மை? இஸ்லாமியர்களே விளக்கட்டும், அவர்களுக்கே விட்டுவிடுகிறேன்.

 

 

2. மோசே அழைக்கபப்ட்ட விதம்

 

இரண்டாவதாக, மோசேயை அல்லா கூப்பிடுகிறார். குர்‍ஆன் 20:11ம் வசனத்தின் படி "மூஸாவே" என்று அதிகபடியான விவரம் எதுவும் இல்லாமல் அழைக்கப்படுகிறார். குர்‍ஆன் 27:8ன் படி, நெருப்பில் இருப்பவர் மீதும், என்று ஆரம்பித்து அனேக விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது. கடைசியாக, குர்‍ஆன் 28:30ன் படி, பள்ளத்தாக்கின் ஓடையின் வலப்பக்கத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து கூப்பிட்டத்தாக சொல்லப்பட்டுள்ளது.

 

இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்: இதில் எந்த வசனம் சொல்வது உண்மை, மரத்திலிருந்து சத்தம் வந்ததா அல்லது எரியும் நெருப்பிலிருந்து சத்தம் வந்ததா? அந்த சத்தம் "வெறும் மூஸாவே" என்று மட்டும் அழைத்ததா? அல்லது குர்‍ஆன் 27:8ன் படி அனேக விவரங்கள் சொல்லப்பட்டு சத்தம் வந்ததா அல்லது குர்‍ஆன் 28:30ன் படி "அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்" என்று சொன்னதா? இதில் எது உண்மை? ஏன் ஒரே நிகழ்ச்சி வித்தியாசமாக சொல்கிறார் அல்லாஹ்?

 

 

3. மோசே அழைக்கப்பட்ட பிறகு, இறைவன் சொன்ன அதிகபடியான விவரங்கள்

 

மோசேயிடம் அல்லா இன்னும் அதிகமான விவரங்களை பேசியதாக, குர்‍ஆன் 20:12 லிருந்து 16ம் வசனம் வரை சொல்கிறது. அதாவது, உம் காலணிகளை கழற்றும், நான் உம்மை என் தூதராக தேர்ந்தெடுத்தேன், ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்யும் செயலுக்குத் தக்கதாக பலன் அளிக்கப்படும், நீரும் உம் மன இச்சையின்படி செய்யாதிரும், என்று அல்லா மோசேயுடன் பேசுகிறார். ஆனால், இவைகள் மற்ற இரண்டு இடங்களில் இல்லை.

 

 

இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்: ஒரே நிகழ்ச்சியை சொல்லும் போது ஏன் அல்லா இவ்வளவு விவரங்களை குர்‍ஆன் 27 மற்றும் 28ம் அதிகாரத்தில் சொல்லவில்லை. அல்லாவின் வேதத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி வெவ்வேறு விதமாக சொல்லப்படுவது அல்லது சில விவரங்களை சொல்லாமல் விட்டுவிடுவது சரியானதா? இது முரண்பாடில்லையா? இரண்டு இடங்களில்(குர்‍ஆன் அதிகாரம் 27, 28) "காலணிகளை கழற்றும்" என்ற விவரம் பற்றி அல்லா சொல்லவில்லை, இந்த விவரம் மற்ற இரண்டு விவரங்களோடு ஏன் முரண்படுகிறது?

 

 

4. கைத்தடி பாம்பாக மாறிய அற்புதம் பற்றிய விவரங்கள்

a) முதலில் அல்லா மோசேயுடன் பேசிய பிறகு, குர்‍ஆன் 20:17ம் வசனத்தின் படி, "உம்முடைய வலது கையில் இருப்பது என்ன? என்று கேட்கிறார்?" இந்த கேள்வி குர்‍ஆனில் மற்ற இரண்டு இடத்தில் இல்லை. இந்த கேள்வியை அல்லா கேட்டாரா இல்லையா? இது என் கைத்தடி, இதனால் எனக்கு அதிக நன்மைகள் நடக்கிறது என்று மோசே சொல்கிறார், இந்த விவரம் மற்ற இடங்களில் இல்லை. ஏன் இந்த முரண்பாடு? தான் பேசிய வசனங்களே அல்லாவிற்கு மறந்துவிட்டதா?

b) மோசே தன் கைத்தடியை கீழே எறியும் படி அல்லா சொல்கிறார், அதை எறிந்தவுடன் அது பாம்பாக மாறுகிறது. அந்த பாம்பை கண்டவுடன், மோசே பயந்துப்போய் திரும்பி பார்க்காமல் ஓடினார் என்று குர்‍ஆன் 27:10 மற்றும் 28:31 சொல்கிறது, ஆனால், மோசே பயப்பட்ட விவரம் குர்‍ஆன் 20ம் அதிகார விவரங்களில் இல்லை. ஏன் இந்த முரண்பாடு?

மோசே பயந்தாரா(27:10, 28:31) இல்லையா?(20ம் அதிகாரம்)?

c) மோசே பயப்பட்டு ஓடும் போது, அல்லா குர்‍ஆன் 27:10ல், "என் தூதர்கள் என்னிடத்தில் பயப்படமாட்டார்கள்" என்றும், அதே அல்லா மோசே பயப்படும் போது, குர்‍ஆன் 28:31ல், "இன்னும் அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்" என்றுச் சொல்கிறார்.

இதில் எது உண்மை எது பொய்? ஏன் இந்த முரண்பாடு? குர்‍ஆனின் ஆசிரியர் அல்லா என்றால், அவருக்கு சர்வ ஞானமும் உள்ளது என்றுச் சொல்வீர்களானால் ஏன் இப்படி ஒரே நிகழ்ச்சியைப் பற்றி அவர் முரண்படுகிறார்?

d) அந்த பாம்பை நாம் மீண்டும் அதன் பழைய நிலைக்கே மாற்றுவோம் என்று அல்லா குர்‍ஆன் 20:21ல் சொல்கிறார். ஆனால், இதைப் பற்றி மற்ற இரண்டு இடங்களில் அவர் சொல்லவில்லை? ஏன் இந்த முரண்பாடு? உண்மையில், மோசே அந்த பாம்பை பிடித்தாரா இல்லையா? அது உடனே கைத்தடியாக மாறியதா? இல்லையா? அல்லது இப்படி பிடிக்காமல் மோசே விட்டுவிட்டாரா?

இப்படி முரண்பட்ட விவரங்களை ஒரு இறைவன் சொல்வாரா? அப்படி சொல்லப்பட்ட புத்தகம் எப்படி ஒரு வேதமாகும்? குர்‍ஆன் முஹம்மதுவின் கற்பனை என்பது சரியாகத் தான் உள்ளது.

e) இன்னும், குர்‍ஆன் 27:11ல் சம்மந்தமே இல்லாமல் அல்லா சில விவரங்களைச் சொல்கிறார். தீமை செய்பவர்கள் தங்கள் தீமையை உணர்ந்து நன்மையைச் செய்தால், நாம் மன்னிப்பவராக இருக்கிறோம் என்கிறார். படிக்கவும்: 27:11.

ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.(27:11)

இந்த விவரம் இந்த நேரத்தில் சரியானதா என்பதே ஒரு கேள்வியாக இருந்தாலும், இதே விவரத்தை அல்லா மற்ற இரண்டு இடங்களில் சொல்லவில்லை? ஏன் இப்படி அல்லா ஒரே நிகழ்ச்சியைப் பற்றி இப்படி முரண்படுகிறார்? இனியாவது இஸ்லாமியர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்களா? முக்கியமாக ஏகத்துவ தள சகோதரர்கள்.

 

5. கை வெண்மையாக மாறும் அற்புதம் பற்றிய விவரங்கள்

இரண்டாவது அத்தாட்சி மோசேக்கு அல்லா காட்டுகிறார். குர்‍ஆன் 20:22ல் "உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி" என்றுச் சொல்கிறார். இதையே சிறிது மாற்றி குர்‍ஆன் 27:12ல் "உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக!" என்றுச் சொல்கிறார். மற்றும் குர்‍ஆன் 28:32ல், "உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்" என்கிறார். இந்த மூன்று இடங்களில் சொல்லப்பட்டதின் அர்த்தம் அல்லது பொருள் ஒன்றாக இருந்தாலும், ஏன் எழுத்துக்களில் வித்தியாசத்தை அல்லா காட்டுகிறார்.

 

இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்: ஒரு வேதம் என்றால், ஒரு நிகழ்ச்சி எழுத்துக்கு எழுத்து மாறாமல் அப்படியே சொல்லவேண்டும் என்று நிபந்தனையை விதிக்கும் இஸ்லாமியர்கள், அதே நிபந்தனையை குர்‍ஆனுக்கும் இட்டு பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைத் தான் இக்கட்டுரை எடுத்து கூறுகிறது. ஏன் ஒரு நிகழ்ச்சியை அதுவும் இறைவனாக இருந்து ஒரே மாதிரியாக அல்லாவிற்கு சொல்லத்தெரியாதா? அல்லது அடிக்கடி அவர் என்ன சொன்னார் என்பதை மறந்துவிடுவாரா?

ஏன் மூன்று இடங்களிலும் ஒரே மாதிரியாக அல்லா சொல்லவில்லை, இஸ்லாமியர்கள் விளக்குவார்களா? அல்லது அல்லா ஒரே மாதிரியாகத் தான் சொல்லியிருப்பார், அதை முஹம்மது தான் மாற்றி சொல்லியிருப்பார் என்று சொல்வீர்களா? அல்லது அனேக பிரதிகள் எடுக்கும் போது இப்படி வார்த்தைகள் கொஞ்சம் மாறிவிட்டது என்று சொல்வீர்களா? எந்த பதிலைக் கொடுத்தாலும், ஒரு நிகழ்ச்சியை ஒரே மாதிரியாக சொல்ல அல்லாவிற்கே தெரியவில்லை என்பது மட்டும் உறுதி.

இன்னும் குர்‍ஆன் 27:12ம் வசனத்தில் "ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவைகள்" என்று வருகிறது, இந்த ஒன்பது அத்தாட்சிகள் என்பது மற்ற இரண்டு இடங்களில் இல்லையே! அது ஏன்?

 

6. ஒருவனை கொன்ற விவரம் பற்றி மோசேயின் பயம்:

 

இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்: கடைசியாக, தனக்கு இரண்டு அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிவிட்ட பிறகு குர்‍ஆன் 28:33ல், மோசே "தான் ஒரு எகிப்து நபரை கொன்றுவிட்டதாகவும், அதற்காக என்னை கொலை செய்துவிடுவார்கள் எனவும் நான் பயப்படுகிறேன்" என்று கூறுகிறார். ஆனால், இந்த விவரம் குர்‍ஆனில் மற்ற இரண்டு இடங்களில் இல்லை. இது ஏன்? "மோசே தான் பயப்படுகிறேன்" என்றுச் சொன்னது உண்மையா இல்லையா? மற்றும் அப்படி சொல்லியிருந்தால் மற்ற இரண்டு இடங்களில் ஏன் அல்லா அதனைச் சொல்லவில்லை?

 

முடிவுரை: "மோசேயும் மற்றும் எரியும் புதரும்" என்ற நிகழ்ச்சி பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகளை, அல்லா விட்டுவிட்ட செய்திகளை நாம் இக்கட்டுரையில் கண்டோம். குர்‍ஆனில் இப்படி இன்னும் அனேக நிகழ்ச்சிகள் உண்டு. ஒரு முறை சொன்ன நிகழ்ச்சி போலவே அல்லா இரண்டாம் முறை சொல்லமாட்டார். இதை இஸ்லாமியர்கள் அறிந்துக்கொண்டே பைபிளின் மீது குற்றம் சுமத்த மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

சவுல் தமஸ்கு வழியில் இயேசுவை கண்ட விவரம் பற்றி அப்போஸ்தலர் நடபடிகளில் மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி சொல்லப்பட்ட விவரங்களில் ஒரு இடத்தில் சொல்லப்பட்ட விவரங்களில் சிலவற்றை விட்டுவிட்டு, இடம் பொருள் ஏவலை அறிந்து தேவையான விவரத்தை மற்ற இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதனை இஸ்லாமியர்கள் (முக்கியமாக ஏகத்துவம் தள சகோதரர்கள்) பைபிளில் முரண்பாடு உள்ளது, ஒரு நிகழ்ச்சியை மூன்று விதமாக ஏன் சொல்லவேண்டும், பார்த்தீர்களா பைபிளின் நிலை என்று எழுதினார்கள், அதற்கு நான் பதிலை எழுதியுள்ளேன்(படிக்கவும்: ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும் (முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்).

அதே ஏகத்துவம் தள சகோதரர்கள் தங்கள் குர்‍ஆனில், அதுவும் ஒரே ஆசிரியர், சர்வ ஞானம் உள்ளவர், அறிவாளி என்று போற்றப்படும் அல்லாவின் குர்‍ஆனில் ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாக, சில விவரங்களை சொல்லியும், சில விவரங்களை விட்டுவிட்டும் சொல்லியுள்ளார். இதற்கு இவர்கள் என்ன பதிலைச் சொல்லப்போகிறார்கள். பைபிளுக்கு நியமிக்கும் அதே நிபந்தனைகளை உங்கள் குர்‍ஆனுக்கு இட்டால், குர்‍ஆனால் தாங்க முடியாது என்பதை இஸ்லாமியர்கள் இன்னும் அறியவில்லை.

நான் இஸ்லாமியர்களுக்கு சொல்லிக்கொள்வது, முதலாவது குர்‍ஆனை படியுங்கள்(உங்களுக்கு புரியும் மொழியில்), புரிந்துக்கொள்ளுங்கள்(உங்களால் முடிந்தால்) பிறகு மற்ற வேதங்களில் கையை வையுங்கள். நான் கொடுத்த பதிலைப் போல, "இடம் பொருள் ஏவலை கருத்தில் கொண்டு சுருக்கியோ விரிவாக்கியோ சரித்திர ஆசிரியர்கள் அல்லது புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் எழுதினார்கள்" என்ற காரணத்தை இக்கட்டுரைக்கு பதில் சொல்லும் (சொல்ல முயற்சி எடுக்கும்) இஸ்லாமியர்கள் சொல்லமாட்டர்கள் என்று நம்புகிறேன்.

இந்த கேள்விகளுக்கு நான் சொன்ன பதிலையே கொஞ்சம் மாற்றிச் சொல்வீர்களானால், இதிலிருந்து விளங்கும் உண்மை என்னவென்றால், "இஸ்லாமியர்கள் தங்களுக்கு என்று ஒரு வண்ணம் மற்றவர்களுக்கு ஒரு வண்ணம் (பச்சோந்தித் தனமாக) நடந்துக்கொள்கிறார்கள்" எனபது தான். அதாவது அவர்கள் குர்‍ஆனுக்கு ஒரு நிபந்தனையைப் போடுவார்கள், மற்றவர்களுக்கு வேறு ஒரு நிபந்தனை போடுவார்கள், அவர்கள் உடைத்தால், அது மண்பாண்டம், மற்றவர்கள் உடைத்தால் ஒது பொற்பாண்டம். இயேசு சொன்ன சில வசனங்கள் எனக்கு நியாபகத்திற்கு வருகிறது:

 

குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்(மத்தேயு 23:24)

இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? (மத்தேயு 7:4)

 

அடுத்த முறை இதே தொடர் கட்டுரையின் அடுத்த பாகத்தில் சந்திக்கலாம் - சத்தியத்தை அறிய முயற்சி எடுங்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும்.




 

 

3 comments:

Anonymous said...

...please where can I buy a unicorn?

Anonymous said...

It is remarkable, very amusing idea

Anonymous said...

What phrase... super, remarkable idea