கேரளா எதனுடைய சொந்த நாடு?
எப்பவேணும்னாலும் இது நடக்கும் அது என்ன?
இப்படி எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். இவை அனைத்திற்கும் சேர்ந்தார்போல் ஒரே பதில் தான் அது சின்ன குழந்தையை கேட்டாலும் சொல்லும் அது என்ன ஆம் அது தான் ஹர்த்தால் (Harthal)
இந்த ஹர்த்தால் என்றால் அது என்ன என்று கேட்கிறீர்களா ஆம் அது தான் பந்த் என்று சொல்வோமே அதேதான். இப்போது தான் நமது மதிப்பு மிகு உச்சநீதி மன்றம் பந்த நடந்தக்கூடாது என்று உத்தரவு இட்டிருப்பதால் அதை பெயர் மாற்றி ஹர்த்தால் என்று அழைக்கின்றனர்.
ஆனால் இரண்டும் ஒரே மரத்தில் உண்டான காய்கள் தான். இந்த ஹர்த்தால் நடத்த ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற வித்தியாசமில்லாமல் வரிந்துகட்டி கொண்டு நிற்கின்றனர்.
கேரளாவுக்கு செல்ல நினைப்பவர்கள் தயவு செய்து அன்று காலை
செய்திகளை கேட்டு விட்டு செல்லவும். அல்லது அன்றைய செய்தி தாளை பார்த்துவிட்டு செல்லவும். அதைவிட சிறந்தது யாராவது தெரிந்தவர்கள் அங்கு இருப்பார்களானால் அவர்களுக்கு போன் செய்து உறுதி செய்தபின் சென்றால் சுகபத்திரமாக திரும்பிவரலாம்.
கேரளாவில் ஹர்த்தால் மிகவும் உறுதியாக கடைப்பிடிப்பார்கள்.
யாருங்க பொதுமக்களான்னு கேட்காதீங்க. சாட்சாத் நம்ம அரசியல் வாதிகளும் வேலை வெட்டி இல்லாத அவர்களின் கைத்தடிகளும் தான். கடை திறந்திருந்தால் அடித்துநொருக்குவது, பொதுமக்கள் வாகனங்களை இயக்கினால் அவர்களையும் அந்த வாகனத்தையும் தாக்குவது. இவையெல்லாவற்றிற்கும்மேல் காவல்துறையையே தாக்குவது. ரொம்ப கொடுமையாக இருக்கும்.
இந்த ஹர்த்தாலை நடந்துவதில் எந்த கட்சியும் சலைத்தது அல்ல என்பது போல கட்சி வேறுபாடின்றி அனைவரும் தங்களுக்கு சாதகமான நாட்களின் இந்த பந்தை நடத்துகின்றனர்.
போகிறபோக்கைப் பார்த்தால் இனி இந்த கேரளா கடவுளுடைய சொந்த நாடு என்பதிற்கு பதில் ஹர்த்தாலினுடைய சொந்த நாடு என அழைக்கப்பட்டாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை.
0 comments:
Post a Comment