அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 19, 2008

கண்ணதாசன் கண்ட கிறிஸ்து

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவது
இதுதான் தத்துவமே!

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!

-கவிஞர் கண்ணதாசனின் (1927-1981) "இயேசு காவியம்" நூலிலிருந்து.(Kannadasan - "Yesu Kaviyam")

திருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16-ல் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர்.எம்.ஜி.இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

அப்போஸ்தலர் 1:11
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

வெளி 5:10
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

Acts:1:11
"Men of Galilee," they said, "why do you stand here looking into the sky? This same Jesus, who has been taken from you into heaven, will come back in the same way you have seen him go into heaven."

Revelation:5:10
You have made them to be a kingdom and priests to serve our God,
and they will reign on the earth."

0 comments: