அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 15, 2013

திருமறையை விளக்கும் முறை -அத்தியாயம் - 1 -அடிப்படை உண்மைகள்

Subject :திருமறையை விளக்கும் முறை -அத்தியாயம் - 1 -அடிப்படை உண்மைகள் 

அத்தியாயம் - 1


அடிப்படை உண்மைகள் 
 
 
ஓர் உத்தம கிறிஸ்தவன் ஊழியன் மறைநூல் அறிஞானக இருத்தல் அவசியம். அவன் தன் கருவுலத்தினின்று புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கின்ற வீட்டுத் தலைவனுக்கு ஒப்பாவான். (மத். 13:52) பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய இண்டிலுமுள்ள கருத்து நுணுக்கங்களை அவன் ஆராய்ந்தறிந்து அவற்றை தனக்கு உரிமையாக்கிக் கொள்வது மட்டுமின்றி பிறருக்கும் எடுத்துச் சொல்வான். எனவே, வேதத்தை விளக்கம் செய்யும் முறையானது என்பது பற்றிய ஆராய்ச்சி கிறிஸ்துவின் அடியார்க்கு இன்றியமையாததாகும். ஆயினும் இவ்வாராய்ச்சியினைத் தொடங்கும் முன்னர் நாம் கவனிக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் உண்டு.


1. இவ்வாராச்சியின் முக்கியத்துவம்

(அ) வேதாகமம் முழுவதும் தேவனுடைய வார்த்தை ஆகவே அதைப் புரிந்து கொள்ள நாம் சிரத்தை எடுப்பதோடு தகுந்த முயற்சியும் செய்ய வேண்டும். "கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்டபோது, அதை மனித வார்த்தையாக ஏற்றுக் கொள்ளாமல் தேவ வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள்" (1 தெச. 2:13)

(ஆ) வேதாகமம் நமக்கு அருளப்பட்டிருக்கும் ஒரு தேவ தூதாகும். நமக்கென்று இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு கடிதமாகும். எனவே, இக்கடிதத்தில் தேவாதி தேவன் நமக்குக் கூறும் செய்தி என்னவென்று நாம் கூர்ந்து கவனித்தல் அவசியம். தேவன் எழுதுவித்த கடிதத்தின் ஒவ்வொரு எழுத்தையும் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமன்றோ!

(இ) தேவ வார்த்தையாகிய வேதாகமத்தில் அடங்கியுள்ள உண்மைகளைப் பிறருக்கு விளக்கிக் கூறவேண்டியது தூதுவராகிய நமது கடமை. எழுத்தறிவற்ற மக்களுக்கு ஒரு கடிதத்தை படித்துக் காட்டும்போது அதன் உண்மையான கருத்தை அவர்கள் விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் மிகக்வனமான வாசித்து விளக்குவது போலவே வேதாகமத்தை நாம் நுட்பமாக ஆராய்ந்து மக்களுக்கு விளக்கம் செய்தல் வேண்டும். தேவ தூதுடன் நாம் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது. நமது சொந்த கற்பனையின் படி தெய்வீக உண்மையை மிகைப்படுத்தவும் அழகுற வர்ணிக்கவும் கூடாது.

2. இவ்வாராய்ச்சியின் இடர்பாடுகள்

(அ) தேவனுடைய வார்த்தையை அற்ப மக்களாகிய நாம் உடனுக்குடன் விளங்கிக் கொள்வது இயலாததாகும். "உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகள் உயர்ந்திருக்கிறது. (ஏசாயா 55:9) என்று ஆண்டவர் கூறுகின்றார். வேதாகமத்தில் பல்வேறு கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை போல் தோன்றலாம்.

(ஆ) திருமறை தெய்வீக அதிகாரமுள்ள நூல் என்றும்" கொள்கை சம்பந்தமான வாக்குவாதத்தில் அதுவே உரைக்கல் என்றும் நாம் ஒப்புக் கொண்டாலும் இன்னும் நாம் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டுக்குள் வந்து சேரவில்லை. கள்ள உபதேசத்தைப் பரப்பும் பிரிவினர் கூட வேதாகமத்தை ஆதாரமாக வைத்தே தங்கள் கொள்கைகளைப் பரப்புகின்றனர்எனவே வேதத்தை விளக்குவதற்கேதுவான சரியான விதிமுறைகளையும் விதிகளையும் நாம் கடைபிடித்தால் இந்தத் தவறுகளிலிருந்து நாமும் தப்பலாம். நம்முடன் பிற கிறிஸ்தவர்களையும் தப்புவிக்கலாம்.

(இ) அறுப்பத்தாறு நூற்களடங்கிய வேதாகமம் பல்வேறு இடங்களில் (யூதேயா, பாபிலோன், அரபுநாடு, ரோமாபுரி) வெவ்வேறு காலங்களில் (கி.மு. 1500 கி.பி. 100 வரை) எழுதப்பட்டமையால், இந்நூற்களின் ஆக்கியோன், இடம், காலம் போன்ற விபரங்களைக் குறித்த சர்ச்சைகள் எழலாம். (பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி எபிரேயு மொழியிலும், சிலபகுதிகள் அரேமிய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டமையினால் இம்மொழிகளின் இலக்கணமுறை, மற்றும் ஒப்பனை உருவகச் சொற்கள் ஆகியவற்றை குறித்த சிக்கல்களும் எழும்பக் கூடும்)


3. இவ்வாராய்ச்சிக்குத் தேவையான பண்புகள்

வேதத்தை சரியான முறையில் விளங்கி, பிறருக்கு விளக்கம் செய்யத் தேவையான பண்புகள் மூன்றாகும்.

(அ) ஜெப சிந்தையோடு கூடிய சுறுசுறுப்பு

(ஆ) சிரமத்தை பாராமல் உழைக்கும் தன்மை.

(இ) இடைவிடாமல் ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் 

ஆகியவைகளே

ஜெப வாழ்க்கை இல்லாத வேத ஆராய்ச்சி பயனற்றது. நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவித்திராத கருத்துக்களைச் சுய அறிவினால் போதிப்பதும் பயனற்றதே. வாழ்க்கை முழுவதும் வேதத்தைப் படித்து ஆராய்ச்சி செய்யும் கிறிஸ்தவனே நற்போதனாயிருக்க முடியும். "நன்றாய் ஜெபிக்கிறவன் நல்ல வேத அறிவாளியாவான். ஏனெனில் ஜெபிக்கிறவன் வேதத்தைக் கருத்துடன் படிக்கவும் செய்வான்" என்கிறார் ஒருவர். 


வேதத்தை ஆராயும் முயற்சியில் சிறந்த பலனை அடையக்கூடியவன் யார்?

I. ஆவிக்குரிய மனிதன் மறுபடியும் பிறந்த மனிதன் (யோவான் 3:3, 1 கொரி. 2:14) 

II. சாந்தமுள்ள மனிதன் (சங். 25:9)

III. கீழ்படிதல் உள்ள மனிதன் (யோவான். 7:17)

IV. ஜெபம் செய்கிற மனிதன் (சங். 119:18 ; யாக். 1:5)


4. இவ்வாராய்ச்சிக்குத் தேவையான நூல்களும் துணைநூல்களும்

(அ) வெகுகாலம் நிலைத்திருக்கக்கூடிய ஒத்த வாக்கிய வேதாகமம்

(ஆ) புதிய திருப்புதலையும் வாங்கி வாசிப்பது நன்று. புதிய மொழிபெயர்ப்பு ஆராய்ச்சிக்கு இன்றியமையாத துணை நூலாகும்.

(இ) திருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்டது. (95/96 இல்)

(ஈ) உரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்த தமிழ் இலக்கியக் கழகம் 1970 இல் வெளியிட்ட புதிய ஏற்பாடு ஓரளவுக்கு பயனுள்ளதாகும். கத்தோலிக்க அறிஞர்கள் முதல் முறையாக்க் கிரேக்க மூலநூலிலிருந்து உயர்ந்த தமிழ்நடையில் மொழிபெயர்ப்புச் செய்துள்ள இப்புதிய ஏற்பாட்டைச் சற்று கவனத்துடன்தான் பயன்படுத்த வேண்டும்.மொழிபெயர்ப்பு பெரும்பாலும் சிறப்பாக அமைந்திருப்பினும் சில பிழைகளும் உண்டு.அடிக்குறிப்புகள் பயனுள்ளவையாயிருப்பினும் ரோமன் கத்தோலிக்க கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் இந்த அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

(உ) ஆங்கில வேதாகமத்தைப் படிப்பவர்கள் 1611 இல் வெளியான பழைய திருப்புதலுடன் (King James Authorised) ஒரு புதிய திருப்புதலையும் பயன்படுத்தலாம். புதிய மொழிபெயர்ப்புகளில் New International Version மிகவும் சிறந்தாகும்.

(ஊ) வேத அகராதி (Bible Dictionary) ஒன்றும் ஒத்த வாக்கிய அகராதி (Bible Concordance) ஒன்றும் இருப்பின் மிக உதவியாக இருக்கும்

(எ) வேத விளக்க நூல்கள் (Bible Commentaries)

மேற்கூறிய நூல்கள் அனைத்தும் கிடைக்காவிடினும் சோர்ந்து போகத் தேவையில்லை. உங்களிடம் உள்ளவற்றையே ஜெப சிந்தையுடன் பயன்படுத்தலாம்.

5. வேதத்தை விளக்கும் முயற்சியில் கட்டாயமாக்க் கடைப்பிடிக்க வேணடிய நான்கு அடிப்படை விதிகள்

(அ) இலக்கண விதிகளுடன் வேதத்தை விளக்கம் செய்தல் வேண்டும். சொற்பொருளைச் சரியாய் விளக்குதல் அவசியம். (Interpret with a proper regard for grammatical usage and the plain meaning of words)

(ஆ) முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்து அவற்றின் பொருளுக்கு ஏற்ற முறையில் வசனத்தை விளக்க வேண்டும். (Interpret with due regard to the immediate context)

(இ) நாம் விளக்கும் வசனம் வேதாகமத்தின் எந்தப் புத்தகத்தில் உள்ளதோ அந்தப் புத்தகம் எழுதப்பட்ட சூழ்நிலை, நோக்கம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அவ்வசனத்தை விளக்க வேண்டும். (Interpret with due regard to the character and purpose of the book in which your text is found)

(ஈ) வேதாகமத்தின் முழு கருத்துக்கும் இசைந்தவாறு வசனத்தை விளக்க வேண்டும். எனவே வசனங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். Interpret with due regard to teaching of the Bible. Scripture is its own commentary compare scripture with scripture.)

(அத்தியாயம் 1 முற்றிற்று)
(வளரும்
Thanks to Br Colvin

August 14, 2013

திருமறையை விளக்கும் முறை – அறிமுகம்

திருமறையை விளக்கும் முறை – அறிமுகம்
வில்பிரட் கர்ட் ,  பக்கங்கள், 76
தமிழ்நாடு நற்செய்தி பட்டதாரிகள் ஐக்கியம்
குரு மெடிக்கல் ஹால், திருச்சி 600 010

இந்நூலாசிரியரான வில்பிரட் கர்ட் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தமிழ்நாட்டில் பாப்திஸ்து திருச்சபை ஊழியத்தில் செலவிட்டார். தெளிவான. அடிப்படை விதிகளைப் பயன்படுத்தி, வேதத்தைத் தமிழ் கிறிஸ்தவர்கள் முறையாக அறிந்துகொள்ள வேண்டும், என்ற இவரது அடங்காத் தாகத்தின் விளைவே இந்நூல் 1977 இல் வெளிவந்த திருமறை விளக்கம் வேதத்தை விளங்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசியமான விதிகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்குகின்றது. 
 
 
திருமறையை சரிவரப் படித்து, வாழ்வில் கைக்கொள்ளாது, எவருமே கிறிஸ்துவில் அன்பு செலுத்தவோ, தம்வாழ்வில் நன்மையடையவோ முடியாது. அவ்வாறு திருமறையை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதை விளங்கிக் கொள்ள அவசியமான வேதத்தில் காணப்படும், பல விதிமுறைகளை நாம் கவனத்தோடு அவதானித்து, அவற்றைப் பயன்படுத்தி, வேதப்பகுதிகளை விளங்கிக்கொள்ள வேண்டும். வேதத்தைப் படிக்கும்போது மற்ற சாதாரண புத்தகங்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் விதிகளைப் பயன்படுத்தல் அவசியம். இலக்கணம், எழுதப்பட்ட சந்தர்ப்பம், சொற்பிரயோகங்கள், படிக்கும்பகுதி சரித்திர சம்பவமா? உவமானமா? அல்லது போதனையா? என்பன போன்ற அம்சங்களைக் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். பலர், இன்று இவ்விதிமுறைகளைக் கருத்தில் எடுக்காது தாம் நினைத்த விதத்தில் வேதவிளக்கமளிக்க முற்படுகின்றனர். இது திருமறையையும் அதை நமக்குத் தந்த தேவனையும் அவமதிக்கும் செயலாகும். 
 
 
வில்பரட் கர்ட் தமிழ்மக்கள் மத்தியில் பல வருடங்கள் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு இப்புத்தகத்தை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. வேதத்தை தவறான முறையில் விளக்குவதற்கு உதாரணமாகத், தமிழ்நாட்டில் தான் ஒரு கூட்டத்தில் கேட்டப் பிரசங்கத்தை அவர் ஓரிடத்தில் இவ்வாறு விளக்குகிறார். "ஆன்மீகக் கூடாரம்" என்ற தலைப்பில் அக்கூட்டத்தில் பேசிய அருளுரையாளர் வேதத்தில் எங்கெங்கு "கூடாரம்" என்ற வார்த்தை காணப்படுகின்றதோ அப்பகுதியெல்லாம் பயன்படுத்தி, அவற்றுக்கு ஆன்மீக விளக்கமளித்ததாகக் கூறுகிறார். இது சொல்லாகரதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவு.  இவ்வருளுரையாளர் இச்சொற்கள் காணப்படும் சந்தர்ப்பத்திற்கேற்ற விதத்தில் அவற்றைப் பயன்படுத்தத் தவறிவிட்டார். அதுமட்டுல்லாது வெறும் தலைப்பை மட்டும் முதலில் தேடிப் பின்னால் அத்தலைப்புக்கேற்ற பேச்சுப்பொருளைத் தேடமுயன்றதால் அவர் வேதத்தைத் தவறான விதத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. 
திருமறையை விளக்கும்போது நான்கு அடிப்படை விதிகளை நாம் அவதானித்தல் அவசியம் என்கிறார். 
 
1. வேதப்பகுதிகளை விளக்கும்போது, அப்பகுதிகளை, அவற்றில் காணப்படும் வார்த்தைகளின் சாதாரண அர்த்த்தின்படியும்,
        இலக்ணத்தின்படியும் விளக்க வேண்டும். 
2. எந்தவொரு வேதப் பகுதியும், அது காணப்படும் உடனடிச் சந்தர்ப்பத்திற்கேற்ப (Immediate Context) விளக்கப்பட வேண்டும்
3. அத்தோடு அவ்வேதப்பகுதி அமைந்துள்ள முழுப்பகுதியின் (Large Context) அமைப்பிற்கேற்ற முறையிலும் அது விளக்கப்பட வேண்டும்
4. அவ்வேதப்பகுதி திருமறையின் பொதுவான போதனைகளுக்கேற்பவும் அவற்றிற்கு முரண்படாத வகையிலும் விளக்கப்பட வேண்டும்.
       ஏனெனில் வேதமே வேதத்தை விளக்குகின்றது. வேதம் வேதத்த்தோடு ஒப்பிட்டுப் விளக்கப்பட வேண்டும். 
 
தீர்க்கதரிசனங்கள், முன்னடையாளங்கள், உவமானங்கள், உவமானங்கள், உருவகங்கள், எபிரேய பாடல்கள், அக்காலத்து கலாச்சாரம், நாகரிகம் போன்றவை எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்றும் ஆசிரியர் இந்நூலில் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றார். முக்கியமாக தீரக்கதரிசனங்கள் எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்ற பகுதி இன்றைய சூழ்நிலையில் அக்கறையோடு படிக்க வேண்டிய ஒரு பகுதி. தமிழில் இத்தகைய நூல்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்துள்ள ஆசிரியருக்கு தமிழ்கிறிஸ்தவர்கள் நிச்சியம் கடமைப்பட்டுள்ளார்கள். 
1983ல் இந்நூல் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. இலகுவான ஆங்கிலத்தில் எல்லோரும் புரிந்துகொள்ளும் படியாக அதனையும் ஆசிரியரே எழுதியுள்ளார். 
 
கேட்பவர்கள் உணர்ச்சிவசப்படும்படி கதை சொல்லுதல், சொந்த அனுபவங்களின் அடிப்படையில் வேத விளக்கமளித்தல் என்ற பாணியில், பொதுவாக பிரசங்கங்களும் போதனைகளும் அமைந்திருக்கும் இந்நாட்களில் அருளுரையாளர்களும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களும், கிறிஸ்தவர்கள் அனைவருமே தவறாது வாங்கி பயனடைய வேண்டிய புத்தகமிது. வேத்த்தின் மூலமாக மட்டுமே கர்த்தர் இன்று நம்மோடு பேசுவதால் அவருடைய வார்த்தையைத் தெளிவாக சந்தேகமில்லாமல் புரிந்கொள்ள வேண்டியது அவசியமல்லவா?
 
(நன்றி : திருமறைத் தீபம்)
Thanks : Br.Colvin : 

August 13, 2013

2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்






[முந்தைய ஒன்பது தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் நாள் 1நாள் 2நாள் 3நாள் 4நாள் 5 , நாள் 6, நாள்7 ,  நாள் 8 & நாள் 9]

அன்பான தம்பிக்கு,

நீ எழுதிய கடிதத்தை படித்தேன். 

நீ பொறுமையை இழந்தவனாக மிகவும் சோர்வாக எழுதியிருந்தாய். இனி இஸ்லாமிய போர்கள் பற்றி இம்மாதம் என்னிடம் உரையாடமாட்டாய் என்றும் கூறியிருந்தாய்.  சில மழைத்துளிகளை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கும் நீ, மகா சமுத்திரமாக இருக்கும் இதர இஸ்லாமிய சரித்திரத்தை எப்படி ஜீரணித்துக்கொள்வாய்.

இதோ இந்த கடிதத்தில், கடைசியாக ஒரு நிகழ்ச்சிப் பற்றி எழுதி, உன் விருப்பத்தின் படி, இவ்வாண்டு ரமளான் தொடரை முடித்துக்கொள்கிறேன்.

உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்:

குரு எப்படியோ அப்படியே சீடர்களும் இருப்பார்கள். ஒரு மனிதன் எவைகளை அதிகமாக கேட்கிறானோ, சிந்திக்கிறானோ  அவைகளைப்போலவே அவன் மாறிவிடுகின்றான்.  அன்பு பற்றியும், மற்றவர்களை நேசிப்பது பற்றியும் ஒரு மனிதன் பல ஆண்டுகள் போதிக்கப்பட்டால், அதன் பாதிப்பு நிச்சயமாக அவனது வாழ்வில் காணப்படும். அதே போல, போர்கள், சண்டைகள், வழிப்பறி கொள்ளைகள், கொலைகள் என்று இவ்விதமான விவரங்களையே ஒரு மனிதன் அதிகமாக கேட்டு, அவைகளில் அதிகமாக போதிக்கப்பட்டால், 'வாய்ப்பு' கிடைக்கும் போது, அவனுக்குள் வாழும் இந்த குணங்கள் அப்படியே வெளிப்பட்டுவிடும்.

இதைத் தான் இந்த நிகழ்ச்சியில் நாம் காணப்போகிறோம். 

முஹம்மது மக்காவை தாக்க முடிவு செய்தார். ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, தன் சகாக்களில் 8 நபர்களை தெரிவு செய்து, "இழம்" என்ற இடத்திற்கு அனுப்பினார். இதன் மூலமாக, முஹம்மது மக்காவை தாக்காமல், தன் கவனத்தை வேறு இடத்தை நோக்கி வைத்திருக்கிறார் என்று எல்லாரும் எண்ணவேண்டும் என்று நினைத்தார். 

முஹம்மதுவின் கட்டளையினால் இவர்களும் சென்றார்கள். சென்ற இடத்தில் ஒரு மேய்ப்பன் இவர்களை கடந்துச் சென்றான், அப்படி செல்லும் போது அவன் "இவர்களுக்கு சலாம் கூறினான்".  இருந்தபோதிலும், இவனைக் கொன்று இவனது ஆடுகளை எடுத்துக்கொண்டார்கள். இதனை மதினாவிற்கு வந்து முஹம்மதுவிடம் சொன்ன போது, அல்லாஹ் ஒரு வசனத்தை (குர்-ஆன் 4:94) இறக்கினான்.

பீஜே தமிழாக்கம் குர்-ஆன் 4:94

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். 

முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம் - 4:94

முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு "ஸலாம்" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு "நீ முஃமினல்ல" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். 
இந்த வசனத்தின் மூலமாக, ஒரு முஸ்லிம் இன்னொருவருக்கு சலாம் சொன்னபோதும், உலக பொருட்களுக்காக, அவனை கொன்றது தவறு என்று அல்லாஹ் கூறுகின்றான்.  இப்னு கதீர் போன்ற குர்-ஆன் விரிவுரையாளர்களின் படி, "முஸ்லிம்கள் தவறுதலாகக் கூட இன்னொரு முஸ்லிமை கொல்லக்கூடாது" என்று கூறுகிறார்கள்.

தம்பி, மேற்கண்ட நிகழ்ச்சி, அந்த காலத்தில் முஹம்மதுவின் சஹாபாக்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. முஹம்மது எப்படியோ அப்படியே சஹாபாக்கள் நடந்துக்கொண்டார்கள் அல்லது அவர்களை உருவாக்கிய இஸ்லாமிய போதனை அவர்களை இப்படி பணத்திற்காக கொலை செய்ய தூண்டியுள்ளது. 

 தம்பி,பொறுமையோடு கீழ்கண்ட கேள்விகளை படிப்பாயா? அவைகள் பற்றி சிந்திப்பாயா?

1) முஹம்மதுவின் தோழர்கள் வளர்க்கப்பட்ட விதத்தைப் பார்த்தாயா?  செல்வத்திற்கு ஆசைப்பட்டு, "நான் ஒரு முஸ்லிம்" என்றுச் சொன்னாலும், அதை நம்பாமல் அவனை கொன்று, அவனது ஆடுகளை/ஒட்டகங்களை கொள்ளையடித்து மதினா வந்துள்ளார்கள்.

2) முஸ்லிம்களாக பல ஆண்டுகள் முஹம்மதுவோடு வாழ்ந்தாலும், இப்படி கொல்வது தவறு என்று அவர்களின் மனசாட்சி அவர்களை எச்சரிக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

3) ஒரு காட்டுமிராண்டி நடந்துக்கொள்வது போலவே இவர்கள் நடந்துக்கொண்டார்கள்.  பணம் கிடைத்தால் எதையும் செய்வார்களா இவர்கள்?

4) இதனை அறிந்த பிறகு, அல்லாஹ் வசனத்தை இறக்குகிறார் – முஸ்லிம்களா இல்லையா என்பதைப் பார்த்து கொலை செய்யுங்கள் என்று அறிவுரைக் கூறுகிறார். புனிதப்போர் என்ற வேஷம் போட்டு செல்லும் போது, , முஸ்லிம்கள் அல்லாதவர்களை எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்யலாம் என்பது தானே, இதன் கருத்து.
5) இந்த கொலையை செய்தவர்களுக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுத்தார் என்று, உன்னால் கண்டுபிடித்து எனக்கு அறிவிக்கமுடியுமா தம்பி?

6) இந்த சஹாபாக்கள் அழிந்துப்போகும் செல்வத்தின் மீது ஆசை வைத்து இப்படி கொலை செய்துள்ளார்கள் என்று அல்லாஹ் வெளிப்படையாக இவர்களை குற்றப்படுத்துகிறார். இவர்களுக்கு என்ன தண்டனை உங்கள் இறைத்தூதர் கொடுத்தார்? 

7) தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்றுச் சொல்வார்கள், அதுபோல முஹம்மதுவின் சீடர்கள் அவரைப் போலவே  வாழ்ந்து இருக்கிறார்கள்.

தம்பி, கடந்த 10 நாட்களாக, 11 இஸ்லாமிய வழிப்பறி கொள்ளைகளை நாம் ஆய்வு செய்துள்ளோம். இன்னும் அனேக போர்கள், கொலைகள், தனிமனித வெறுப்புக்கள், என்று அனேக இஸ்லாமிய வன்முறைப் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. 

தம்பி, ஒரு மனிதனாக உன்னை நினைத்துப் பார்த்து சிந்தித்துப்பார். இப்படியெல்லாம் கொலை வெறியோடு பரவிய மார்க்கத்தைத் தான் நீ இப்போது பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய். இஸ்லாமிய நூல்களை அதிகமாக படி, ஆய்வு செய், சத்தியத்தை அறிய முயற்சி செய். யார் உன்னை கைவிட்டாலும், சத்தியம் ஒரு நாள் உன்னை விடுதலையாக்கும். இந்த நம்பிக்கையில் தான் நான் உன்னோடு உரையாடிக்கொண்டு இருக்கிறேன்.

இதோ இன்று ரமளான் மாதத்தின் கடைசி நாள், நாளைக்கு நீ ரமளான் கொண்டாடப்போகிறாய். இந்த புனித மாதத்தில் உலக அளவில் நடந்த இஸ்லாமிய தாக்குதல்கள், தீவிரவாத செய்ல்கள், எத்தனை என்று உனக்குத் தெரியுமா? இதனால் எத்தனைப் பேர்கள் மரித்தார்கள், ஊனமுற்றவர்களாக மாறினார்கள் என்று உனக்குத் தெரியுமா? இதோ அந்த பட்டியல்:

Ramadan Bombathon
 2013 Scorecard  
Because, if you think all religions are the same, 
then you haven't been paying attention

2013

In the name of
The Religion
 
of Peace

In the name of
ANY Other 
Religion

By 
'Islamo-
 
Phobes'

Terror Attacks

310

0

1*

Suicide Bombings

28

0

0

Dead Bodies

1651

0

0

Wounded

3048

0

0