அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

February 22, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம்

சென்னையில் நேற்று தீகுளித்த தொண்டர் தன் தலைவருக்குஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் ஒரு சாதாரண உடன்பிறப்பு ஒருவரின் கடிதமல்ல. உலகெல்லாம் உள்ள தமிழ் நெஞ்சங்களீன் உள்ள குமுரல். இந்த கடிதம் தான் இறுதி கடிதமாக இருக்கட்டும். ஈழத்தில் அமைதி மலரட்டும்


இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் மனிதசங்கிலிப் போராட்டம் நடைபெற்றபோது. தி.மு.கவின் தீவிர தொண்டரான மூதாளர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ஹால்டா சந்தியில் மனித சங்கிலி ஊர்வலத்தின்போது தீக்குளித்தவர் தி.மு.க சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி சிவப்பிரகாசம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
60 அகவையுடைய ஓய்வுபெற்ற சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளரான இவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியின் செயலர் மு.க.ஸ்ராலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவப்பிரகாசம் தீக்குளிப்பதற்கு முன்பு தனது கைப்பைக்குள் எழுதி வைத்திருந்த கடிதத்தை மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ராலினிடம் கொடுத்துள்ளனர்.அக்கடிதத்தில், ‘தமிழக முதலவர் அவர்களே இலங்கையில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். அங்கே கொல்லப்படும் நம் குலத்தை காப்பாற்றுங்கள்’ என்று சிவப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.tamilmann.com/2009/02/21/௧௧0௩
http://www.pathivu.com/news/443/54//d,view.aspx