அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 25, 2016

பாகம் 3 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

பாகம் 3 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும்
அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

(முஸ்லிமல்லாதவர்களை சாலையின் நெருக்கடியான பாதையில் போக முஸ்லிம்கள்
கட்டாயப்படுத்தவேண்டும்)


முன்னுரை:

இந்த தலைப்பின் முந்தைய இரண்டு கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.

பாகம் 1 - தாடி, மீசை, வேட்டி, செருப்பு விஷயங்களில் மாறு செய்தல்

பாகம் 2 - முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலாவது ஸலாம் சொல்லக்கூடாது

இவைகளின் தொடர்ச்சியாக, இந்த மூன்றாவது பாகத்தில், முஸ்லிமல்லாதவர்களை
முஸ்லிம்கள் சாலையில் எப்படி நடத்தவேண்டும்? என்ற கேள்விக்கு இஸ்லாம்
என்ன பதில் சொல்கிறது என்பதை ஆய்வு செய்வோம்.

இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்கள் இஸ்லாமிய
நூல்களிலிருந்தும், இஸ்லாமிய விரிவுரைகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன
என்பதை வாசகர்கள் கவனிக்கவும்.

பாகம் 3

முஸ்லிமல்லாதவர்களை சாலையின் நெருக்கடியான பாதையில் போக முஸ்லிம்கள்
கட்டாயப்படுத்தவேண்டும்

சென்னை மக்களுக்கு உதவிகள் தேவைப்பட்டபோது, முஸ்லிம்கள் உற்சாகமாய்
உதவிகளைச் செய்தனர். இதன் பின்னணியை முழுவதுமாக அறிய மேலே கொடுக்கப்பட்ட
முதலாவது பாகத்தை படிக்கவும். முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் அன்பாக
நடந்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளுங்கள் என்று இஸ்லாம்
வெளிப்படையாக சொல்லியிருக்கும் போது, முஸ்லிம்கள் அதனை
புறக்கணித்துவிட்டு, முஸ்லிமல்லாதவர்களுக்கு தங்கள் உயிரைக் கொடுத்து
உதவிகள் செய்துள்ளனர். இதனை முஸ்லிமல்லாதவர்கள் எப்படி புரிந்துக்
கொள்வது? இஸ்லாம் சொல்வது சரியா? அல்லது முஸ்லிம்கள் செய்தது சரியா?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை காண்பது தான் இக்கட்டுரைகளின் முக்கிய
நோக்கம்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலாவது வாழ்த்துதல்/ஸலாம் சொல்லாதீர்கள் என்று
முஹம்மது கற்றுக்கொடுத்த விவரத்தை இரண்டாம் பாகத்தில் ஆய்வு செய்தோம்.
இப்போது அதே இஸ்லாமிய ஆதாரத்தின் அடுத்த பாகத்தை ஆய்வு செய்வோம்.

முஹம்மது கீழ்கண்டவாறு கட்டளையிட்டுள்ளார் (ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண் 4376):

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன்
கூறாதீர்கள்.அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின்
நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள். - இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண் 4376

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாலையின் நெருக்கடியான பாதையில் செல்லும்
படி கட்டாயப்படுத்துங்கள்:

மேலே நாம் பார்த்த ஹதீஸ், ஆதாரபூர்வமான முஸ்லிம் தொகுப்பிலிருந்து
எடுக்கப்பட்டதாகும். ஒரு சாலையில் யூதர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ
சென்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே சாலையில்
முஸ்லிம்களும் சென்றுக்கொண்டு இருந்தால், அந்த நேரத்தில் முஸ்லிம்கள்
சாலையில் விசாலமான பாதையில் செல்லவேண்டுமாம், அதாவது
முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களுக்கு வழியை விட்டுவிட்டு, அவர்கள்
நெருக்கடியான பாதையில் செல்லவேண்டுமாம். இதில் கவனிக்கவேண்டிய விஷயம்
என்னவென்றால், முஸ்லிமல்லாதவர்கள் நெருக்கடியான பாதையில் போகும் படி
"முஸ்லிம்கள்" அவர்களை கட்டாயப்படுத்தவேண்டுமாம். உலக மக்களுக்கு
ஒளியாக வந்தவர் முஹம்மது என்று முஸ்லிம்கள் பெருமையாகச்
சொல்லிக்கொள்வார்கள், இப்படிப்பட்டவர் தம்முடைய மக்களுக்கு "இதர
மக்களிடம்" இப்படி கீழ்தரமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று
கட்டளையிட்டுள்ளார்.

மேற்கண்ட ஹதீஸையும், அதன் தாக்கத்தையும் அறியாத முஸ்லிம்களில் சிலர்,
கீழ்கண்ட விதமாக ஆட்சேபனை செய்யலாம். அவர்களுக்கு இந்த ஹதீஸின் பாதிப்பு
என்னவென்பது சரியாக புரியவேண்டுமென்பதற்காக சில உதாரணங்களை இந்திய
பின்னணியிலிருந்து எடுத்துக் காட்டுகிறேன்.

முஸ்லிம்களின் ஆட்சேபனை - 1

இந்த ஹதீஸ் பொய்யாக இருக்கலாம், ஏனென்றால் எங்கள் இறைத்தூதர்
இப்படியெல்லாம் சொல்லியிருக்கமாட்டார்.

சுன்னி பிரிவைச் சார்ந்த முஸ்லிம்கள் குர்-ஆனுக்கு அடுத்தபடியாக ஹதீஸ்களை
நம்புகிறார்கள். புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்கள்
முஸ்லிம்களுக்கு அதி முக்கியமான இறைநூல்களாகும். இவ்விரண்டு
தொகுப்புக்களுக்கு பிறகு தான் இதர ஹதீஸ்களின் நம்பகத்தன்மை
தரம்பிரிக்கப்படுகிறது. நாம் மேலே படித்த ஹதீஸ் "முஸ்லிம்"
நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும். உங்களுக்கு இந்த ஹதீஸ் தொகுப்பின் மீது
சந்தேகம் இருந்தால், உங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடமும் கேட்டுப் பாருங்கள்,
இஸ்லாமிய தளங்களிலும் சென்று படித்துப் பாருங்கள். முஸ்லிம்களாகிய
நீங்கள் இவ்விதமான ஹதீஸ்களை புறக்கணிக்கும் அடுத்த நிமிடமே காஃபிராகி
(இஸ்லாமை விட்டு வெளியேறியவராகி) விடுவீர்கள். எனவே, முஸ்லிம்களே! உங்கள்
ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முயலாதீர்கள். தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத்
என்ற முஸ்லிம் குழுவினர், இப்படிப்பட்ட ஆதாரபூர்வமான ஆனால், அதே
நேரத்தில் தர்மசங்கடமான ஹதீஸ்களை மறுத்துக்கொண்டு வந்துக் கொண்டு
இருக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஒருவேளை அவர்களது தற்போதைய பட்டியலில்
இல்லாமல் இருந்தால், வருங்காலங்களில் இந்த முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ஐயும்
அவர்கள் தங்கள் மறுக்கப்படும் ஹதீஸ் பட்டியலில் சேர்த்துக்கொள்வார்கள்
என்பதில் ஆச்சரியமில்லை. காத்திருப்போம், காலம் பதில் சொல்லும்.

ஷியா பிரிவினர்: இஸ்லாமின் இன்னொரு பிரிவினர் ஷியா பிரிவினராவார்கள்.
இவர்கள் இந்த முஸ்லிம், புகாரி ஹதீஸ் தொகுப்புக்களை முழுவதுமாக
நம்புவதில்லை, ஷியா பிரிவினருக்கு தனியாக ஹதீஸ் தொகுப்புக்கள் உள்ளன.
இவர்களின் ஹதீஸ்களை ஆய்வு செய்தால், மேற்கண்ட ஹதீஸ் போன்ற தர்மசங்கடமான
விவரங்கள் இன்னும் அதிகமாக வெளிப்படும். ஷியா பிரிவினர் இஸ்லாமில்
சிறும்பான்மையினராக இருக்கிறார்கள். என்னுடைய மறுப்புக்கள் மற்றும்
கேள்விகள் அனைத்தும் பெரும்பான்மையினராகிய சுன்னி முஸ்லிம்களுக்குத்
தான்.

எனவே, புகாரி, முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களில் உள்ள விவரங்களை
முஸ்லிம்கள் புறக்கணிக்கக்கூடாது. எனக்கு தெரிந்தவரை, இந்த முஸ்லிம்
ஹதீஸை (எண் 4376ஐ) யாரும் இதுவரை மறுக்கவில்லை.

முஸ்லிம்களின் ஆட்சேபனை - 2

முஹம்மது கட்டளையிட்டதில் என்ன தவறு இருக்கிறது? பெரும்பான்மையினர் ஆட்சி
செய்யும் நாட்டில் சிறும்பான்மையினர் சிறிது அடங்கிச் செல்வதில் என்ன
தவறு இருக்கிறது?

முஸ்லிம்களே! உங்களின் இந்த கருத்து தவறானது. இதே நிலையில் நீங்கள்
இருந்தால், அதனை ஏற்றுக்கொள்வீர்களா? உதாரணத்திற்கு, இந்தியாவில்
இந்துக்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது, அவர்கள் பெரும்பான்மையினராக
இருக்கிறார்கள். ஒரு இந்து சாது அல்லது சாமியார், உங்கள் முஹம்மது
சொன்னதுபோலவே இந்துக்களுக்கு கட்டளையிட்டால், அது சரியானது என்று
நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இதே போல, மேற்கத்திய நாடுகளில்
பெரும்பான்மையாக இருப்பவர்கள் முஸ்லிம்களை நடத்தினால், அதனை
ஏற்றுக்கொள்வீர்களா?

நம் இந்தியாவிலும், சுதந்திரத்திற்கு முன்பாக, இந்துக்கள் இடையேயும்
மேல் ஜாதிமக்கள், கீழ் ஜாதி மக்கள் என்று பாகுபாடு இருந்தது. இந்துக்
கோயில்களில் சில பிரிவினர் வரக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது.
சாலையில் செல்லும் போது மேல் ஜாதி மக்களுக்கு மதிப்பு கொடுக்கும் படி
கீழ்ஜாதி மக்கள் விலகிச் செல்லவேண்டிய நிலை இருந்தது. இப்படிப்பட்டவைகள்
தவறானவை என்றும், இஸ்லாம் இப்படிப்பட்ட பாகுபாடு காட்டுவதில்லை என்றும்
மேடை போட்டு பேசும் முஸ்லிம்களே! உங்கள் முஹம்மது சொன்னதும் இதைத் தானே!
முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் "முஸ்லிம்கள்" என்பவர்கள் மேல் ஜாதி மக்கள்,
இதர மார்க்கத்தார்கள் "கீழ் ஜாதி" மக்களாவார்களா? ஜாதிப்பிரிவினை
பிரச்சனைகள், இந்து தர்மத்தில் இருந்தால் அது பாவம், இஸ்லாமில் இருந்தால்
அது புண்ணியமா? அவர்களுக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா?

நாம் வாழும் இக்காலத்திலும் சில கிராமங்களில் இப்படிப்பட்ட ஜாதிவெறி
செயல்கள் வெளிப்படும் போது, கொதித்து எழும் முஸ்லிம்கள், ஏன் உங்கள்
முஹம்மது சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்கிறீர்கள்? இஸ்லாம் என்று வந்தால்
மட்டும், உங்கள் கோபமும், எழுச்சியும் ஏன் அப்படியே அமைதியாக
இருந்துவிடுகிறது?

நீங்கள் ஏற்றாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி முஹம்மது சொன்னது
ஜாதிவெறிச்செயலாகும். ஒரு சமுதாயத்தில் சகோதரர்களாக வாழும் மக்களுக்கு
இடையில் விரிசலையும், ஏற்றத்தாழ்வுகளையும் உண்டாக்கும் படி முஹம்மது
போதனை செய்துள்ளார்.

முஸ்லிம்களின் ஆட்சேபனை - 3

இந்த ஹதீஸில், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வழியை விடாதீர்கள்
என்றுச் சொல்லப்பட்டதே தவிர, இந்துக்களுக்கு இல்லையே! ஏன் மேற்கண்ட ஹதீஸை
இந்துக்களோடு சம்மந்தப்படுத்தி, இஸ்லாமை கேவலப்படுத்துகிறீர்கள்?

யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் இப்படி கீழ்தரமாக முஸ்லிம்கள் நடந்துக்
கொள்வது இஸ்லாமுக்கு கேவலமில்லையா? இந்துக்களிடம் நடந்துக் கொண்டால் தான்
இஸ்லாமுக்கு கேவலமா?

இங்கு குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.
அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் குர்-ஆனின் படி "வேதம்
அருளப்பட்டவர்கள்" ஆவார்கள். வேதம் அருளப்பட்டவர்களிடமே இஸ்லாம் இப்படி
கீழ்தரமாக நடந்துக் கொள்ளுமானால், மற்றவர்களின் நிலை இதை விட அதிக
கேடுள்ளதாக இருக்குமல்லவா?

எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை இதர
குடிமக்களைப்போல சரி சமமாக நடத்தவேண்டும், அப்படி நடத்தாத இஸ்லாமிய
அரசைப் பார்த்து எல்லோடும் சிரிப்பார்கள்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய நாட்டில் ஏன் சாலைகளில் ஓரமாக
நடந்துச் செல்லவேண்டும்? முஸ்லிம்கள் என்ன வானத்திலிருந்து
இறங்கிவந்தவர்களா? ஒரு மனிதனை மனிதனாக மதிக்காமல், அவன் நம்பிக்கையை
காரணம் காட்டி, அவனது மனதை புண்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

நாம் மேலே கண்ட ஹதீஸில், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வழி
விடாதீர்கள் என்று முஹம்மது சொன்னதாக காண்கிறோம். ஆனால், தற்கால இஸ்லாமிய
அறிஞர்களின் விரிவுரைகளின் படி, முஸ்லிமல்லாத அனைவருக்கும் முஸ்லிம்கள்
விசாலமான வழியை விடக்கூடாதாம். இதனை அடுத்த பாகத்தில் விவரமாக காணலாம்.

இஸ்லாமிய விரிவுரையாளர்கள், இந்த ஹதீஸ் பற்றி என்ன சொல்கிறார்கள்?

நாம் மேலே பார்த்த முஸ்லிம் ஹதீஸின் விளக்கவுரையை பாருங்கள்.

Chapter 138

Greeting the non-Muslims and Prohibition of taking an Initiative

866. Abu Hurairah (May Allah be pleased with him) reported: The
Messenger of Allah (PBUH) said, "Do not greet the Jews and the
Christians before they greet you; and when you meet any one of them on
the road, force him to go to the narrowest part of it.'' [Muslim].

Commentary: This Hadith prohibits Muslims from greeting non-Muslims
first. It also tells us that when the road is crowded, we should use
the middle of the road and let the non-Muslims use its sides. This
Hadith shows the dignity of Muslims and the disgrace and humiliation
of the non-Muslims. (Riyad-us-Saliheen, compiled by Al-Imam Abu
Zakariya Yahya bin Sharaf An-Nawawi Ad-Dimashqi, commentary by Hafiz
Salahuddin Yusuf, revised by M.R. Murad [Darussalam Publishers &
Distributors, Riyadh, Houston, New York, Lahore, First Edition: June
1999], Five. The Book of Greetings, Chapter 138: Greeting the
non-Muslims and Prohibition of taking an Initiative, Volume 2, p.
711). மூலம்: http://abdurrahman.org/2014/09/04/riyad-us-saliheen-imaam-nawawi-chapter-138/
and http://islamicstudies.info/hadith/riyad-us-saliheen/riyad.php?hadith=866&to=868

ரியாத் அஸ் ஸாலிஹீன் - விளக்கவுரை: இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள்
முதலாவது ஸலாம் சொல்லக்கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. மேலும்,
சாலையில் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தால், முஸ்லிம்களாகிய நாம்
சாலையில் மத்தியில் செல்லவேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் சாலையில்
ஓரங்களில் செல்லவேண்டும். இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் மேன்மையை எடுத்துக்
காட்டுகிறது. அதேபோல, முஸ்லிமல்லாதவர்கள் எவ்விதமாக அவமானம்
அடையவேண்டும், மேலும் முஸ்லிம்களுக்கு முன்பாக எப்படி தாழ்தப்பட்டு
போகவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

முஸ்லிமல்லாதவர்களுக்கு வழியை விடாதே:

"இஸ்லாம் கேள்வி பதில்கள்" (islamqa) என்ற தளத்தில் இதைப் பற்றி ஒரு
முஸ்லிம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும்
போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு வழியை விடாமல், அவர்கள் சுவரின் ஓரமாகச்
செல்ல கட்டாயப்படுத்துங்கள் என்றுச் சொல்வது, முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம்
பற்றி தவறாக நினைக்க தூண்டுமல்லவா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு
இஸ்லாமிய அறிஞர்கள் கீழ்கண்ட பதிலைச் சொல்லியுள்ளார்கள்.

What it means is that just as you do not initiate the greeting of
salaam, you should not make room for them. If they meet a group of
you, do not split up to let them pass, rather continue on your way and
leave them the narrow space if there is a narrow part of the road.
This hadeeth is not meant to put people off Islam, rather it is a
manifestation of the Muslim's pride and a sign that he does not
humiliate himself for anyone except his Lord.

இதன் பொருள் என்னவென்றால், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முதலாவது
ஸலாம் சொல்லாதீர்கள், மேலும் அவர்களை சாலையில் சந்தித்தால், அவர்களுக்கு
வழியை விடாதீர்கள் என்பதாகும். அவர்கள் உங்களை சாலையில் சந்திக்கும்
போது, அவர்களுக்கு வழி கிடைக்கவேண்டும் என்பதற்காக, நீங்கள்
(முஸ்லிம்கள்) தனியாக ஒதுங்கிக்கொண்டு அவர்களுக்கு வழியை விடாதீர்கள்.
அதற்கு பதிலாக, உங்கள் வழியிலே நீங்கள் தொடர்ந்து சென்றுக்கொண்டே
இருங்கள், அக்கம் பக்கத்தில் இடமிருந்தால், அவர்கள் அந்த நெருக்கமான
வழியில் செல்லட்டும். இந்த ஹதீஸ் இஸ்லாம் பற்றி மக்கள் தவறாக
நினைக்கவேண்டும் என்று சொல்வதாக இல்லை, அதற்கு பதிலாக, இது முஸ்லிம்களின்
மேன்மையையும் கண்ணியத்தையும் வெளிக்காட்டக்கூடியதாக இருக்கிறது. அதாவது
ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்கு தவிர வேறு நபர்களுக்கு முன்பாக தாழ்ந்து
போகக்கூடாது என்பதைக் காட்டுகிறது.

மூலம்: https://islamqa.info/en/26785

ஒரு கேவலமான விஷயத்தை எவ்வளவு நாசுக்காக சொல்லியுள்ளார் என்பதை
கவனியுங்கள். ஒரு முஸ்லிமின் கண்ணியம், அவன் சாலையில் செல்லும் போது இதர
மார்க்க மக்களுக்கு வழியை விடாமல் இருந்தால் கிடைத்துவிடுமாம். அதே
நேரத்தில், முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவு அதிகமாக இப்படிப்பட்ட அவமானங்களை
சந்திக்கவேண்டி வரும் என்பதை பாருங்கள். மேற்கண்ட விதமாக இஸ்லாமிய
அறிஞர்கள் சொல்வது வெறும் பேச்சுக்காக அல்ல, உண்மையாகவே இதனை இஸ்லாமிய
நாடுகளில் வாழும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அனுதினமும்
அனுபவிக்கிறார்கள்.

சுருக்கமும் முடிவுரையும்:

தமிழ் முஸ்லிம்கள் மனிதாபமானத்தோடு சென்னையில் உதவி செய்தார்கள். ஆனால்,
முஸ்லிமல்லாதவர்களிடம் மனிதாபமானத்தோடு நடந்துக் கொள்ளக்கூடாது என்று
இஸ்லாம் கூறுகிறது.

அ) இஸ்லாமிய நூல் "முஸ்லிம் ஹதீஸின்" படி, முஸ்லிம்கள் சாலையில்
சென்றுக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு வழியை
விடக்கூடாது.

ஆ) முஹம்மதுவின் கட்டளையின் படி, முஸ்லிமல்லாதவர்கள் நெருக்கமான வழியில்
செல்லும் படி முஸ்லிம்கள் அவர்களை கட்டாயப்படுத்தவேண்டும்.

இ) இஸ்லாமிய விரிவுரையாளர்களின் படி – இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் மேன்மையை
வெளிப்படுத்துகிறது. அதாவது, மற்ற மார்க்க மக்களைவிட முஸ்லிம்கள்
உயர்ந்தவர்கள் என்பதை இது காட்டுகிறது.

ஈ) இஸ்லாமிய விரிவுரையாளர்களின் படி - சாலையில் முஸ்லிம்கள்
மற்றவர்களுக்கு வழியை விட்டால், அது அவர்கள் தாழ்ச்சி அடைந்துவிட்டதாக
கருதப்படும். எனவே, முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு சாலையில் வழியை
விடக்கூடாது.

உ) ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு காட்டவேண்டிய குறைந்த பட்ச உதவியை கூட
செய்யக்கூடாது என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.

இஸ்லாம் மேற்கண்ட விதமாக முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டு இருக்கும்போது,
நம் தமிழ் முஸ்லிம்கள் எப்படி இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்
உதவிகள் செய்தனர்? முஸ்லிமல்லாதவர்களுக்கு சாலையில் வழியை விடக்கூடாது
என்று முஹம்மது சொல்லியிருக்கும் போது, தமிழ் முஸ்லிம்கள் எப்படி
இந்துக்களின் தெருக்களில் சாக்கடையில் நடந்துச் சென்று, பொருட்களை
சுமந்துச் சென்று உதவி செய்தனர்? கிறிஸ்தவர்களுக்கு முதலாவது ஸலாம்
சொல்லக்கூடாது என்றும், அவர்களுக்கு வழியை விட்டு முஸ்லிம்கள்
தாழ்ந்துவிடக்கூடாது என்றும் இஸ்லாம் கட்டளையிட்டு இருக்கும் போது, தமிழ்
முஸ்லிம்கள் எப்படி கிறிஸ்தவர்களின் வீடு தேடிச் சென்று, உணவுகள்,
மருந்து பொருட்கள் மற்றும் இதர உதவிகள் செய்தனர்?

லாஜிக் எங்கேயோ இடிக்கிறதே! தமிழ் முஸ்லிம்கள், இஸ்லாம் சொல்வதை
நம்புவதில்லையா? அல்லது இஸ்லாமின் போதனை நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றுச்
சொல்லி இஸ்லாமை புறக்கணித்துவிட்டார்களா? இஸ்லாம் சொல்வதைப்போல தமிழ்
முஸ்லிம்கள் நடந்துக் கொண்டு இருந்திருந்தால், சென்னையில் இதர
முஸ்லிம்களுக்கு மட்டுமே உதவி செய்திருக்கவேண்டும், இந்துக்களுக்கும்,
கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்திருக்கக்கூடாது. ஆனால், தமிழ்
முஸ்லிம்கள், தங்கள் உயிரை துச்சமாக நினைத்து அல்லவா அனைவருக்கும்
உதவினார்கள்!

இக்கேள்விகளுக்கு நம் தமிழ் முஸ்லிம்கள் பதில் சொல்வார்கள் என்று நான்
நம்புகிறேன். இஸ்லாம் சொல்வதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், முஹம்மது
சொன்னதை புறக்கணித்துவிட்டு, சென்னையில் உதவி புரிந்த ஒவ்வொரு
முஸ்லிமுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்,
இந்த முஸ்லிம்களை முஹம்மதுவும், அல்லாஹ்வும் மன்னிப்பார்களா? இதற்கு
முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

அடுத்த கட்டுரை. . .

அடுத்த கட்டுரையில் பீஜே அவர்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வதைப்
பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதையும், நாம் மேலே பார்த்த முஸ்லிம் ஹதீஸ்
பற்றி அவர் என்ன விளக்கம் கொடுத்துள்ளார் என்பதைப் பற்றியும் சுருக்கமாக
காண்போம்.

________________________________

சென்னையில் முஸ்லிம்களின் பேருதவி தொடர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/chennai_muslims/chennai_muslims_part3.html



http://www.isakoran.blogspot.in/2016/02/3.html

0 comments: