[2015ம் ஆண்டு ரமளான் மாதத்தின் முந்தைய 14 கடிதங்களை படிக்க இங்குசொடுக்கவும். ரமளான் மாதத்தின் கடைசி கடிதம் இது தான். இந்த (புனிதமான) ரமளான் மாதத்தில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட புனிதமான செயல்களை தம் தம்பிக்கு உமர் தொகுத்து எழுதுகிறார். இதைத் தொடர்ந்து, நேர்வழி நின்ற கலிஃபாக்களின் ஆய்வுக் கடிதங்கள் அடுத்த மாதத்திலும் தொடரும்.]
அன்பான தம்பிக்கு,
உமர் வாழ்த்துதல் சொல்லி எழுதும் கடிதம். கடந்த ஒரு மாதமாக நாம் பல விஷயங்களை விவாதித்தோம். இவ்வாண்டின் ரமளான் இன்றோடு முடிவுக்கு வருகிறது. உனக்கு இன்று சௌதி அரேபியாவில் ரமளான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்று நினைக்கிறேன். ஆனால், இந்தியாவில் நாளைக்கு கொண்டாடுவார்கள்.
என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், ஒவ்வொரு நொடியும் வானத்தில் நடக்கும் நிகழ்வுகளை துள்ளியமாக கணிக்கும் கருவிகள், ஞானம் மனிதனுக்கு கிடைத்திருந்தாலும், அடுத்த 100 ஆண்டுகள் நிலவு எந்த சுற்றுப்பாதையில் எப்படி சுற்றும் என்று மனிதனால் கணிக்கமுடியும் என்றாலும், இன்றும் வானத்தின் பக்கம் தங்கள் வெறும் கண்களை திருப்பிக்கொண்டு, நிலவு தெரிகின்றதா? என்று பார்த்து பண்டிகை கொண்டாடும் வரட்டு தைரியமும், அறியாமையும், முஸ்லிம்களை விட்டு இன்னும் அகலவில்லை என்பதை அறியும் போது என் மனம் காயமடைகிறது. இப்படிப்பட்ட குழுவில் என் தம்பியும் குழுமியிருக்கிறான் என்று நினைக்கும் போது, அந்த காயத்தில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது தம்பி. ஹும்…. என்னால் என்ன செய்யமுடியும்? காலம் இதற்கு பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.
ரமளான் என்றால் உபவாசம் என்ற பொய்யான போர்வையில், அனேக நடுத்தர முஸ்லிம் குடும்பங்களின் பணப்பை காலியானது தான் மிச்சம். ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக அல்லாஹ்வை நெருங்கி வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுகின்றது, ஆனால், அவர்கள் அதிகமாக உணவு பக்கம் தான் திரும்புகிறார்கள் என்பது தான் உண்மை, இதற்கு கிடைக்கும் கூட்டு வட்டி, அனேகரின் உடல் பருமனானது தான் மிச்சம். இதர மாதங்களை விட பல மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் இம்மாதத்தில் தான் விற்பனையாகிறது என்பதை யார் கவனத்தில் கொள்கிறார்? ஆ…. என்னே ஒரு மார்க்க மோசடி! தாங்கள் மோசம் போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதையும் அறியாமல் மக்கள் வாழ்கிறார்கள்.
பிரச்சனை எங்குள்ளது? முஸ்லிம்களின் மூளையிலா? இஸ்லாமின் மூலத்திலா?
சரி தம்பி, ரமளான் மாதத்தின் கடைசி கடிதத்தில், உனக்கு ஒரு முக்கியமன விஷயத்தை எழுதிவிடுகிறேன். நேற்று நீ எனக்கு போன் செய்த போது, இந்த ரமளான் மாதத்திலும் அனேக தீவிரவாத செயல்கள் நடந்துள்ளது என்று நான் சொன்னேன். உடனே அதற்கு நீ இஸ்லாமிய ஆன்மீகத்துக்கும், அரசியலுக்க்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை மக்கள் சரியான புரிந்துக்கொள்ளாமல் இருப்பதினால் தான் இப்படி தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று விளக்கம் கொடுத்தாய்.
தம்பி, எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை,
- முஸ்லிம்கள் கிறிஸ்தவத்தை சரியாக புரிந்துக்கொள்கிறார்கள்
- முஸ்லிம்கள் இதர மதங்களை வேதங்களை சரியாக புரிந்துக்கொள்கிறார்கள்
- முஸ்லிம்கள் விஞ்ஞானத்தை சரியாக புரிந்துக் கொள்கிறார்கள்
- ஆனால் முஸ்லிம்கள் ஏன் இஸ்லாமை மட்டும் தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்?
- இஸ்லாமைத் தவிர மீதமுள்ள அனைத்தையும் முஸ்லிம்கள் ஏன் சரியாக புரிந்துக் கொள்ளுகிறார்கள்?
- முஸ்லிம்களின் புரிந்துக் கொள்ளுதலில் தான் தவறு என்றால், அவர்கள் மற்றவற்றையும் தவறாக புரிந்துக் கொள்ளவேண்டுமல்லவா?
- மற்றவர்களின் வேதங்களை மேலோட்டமாக படித்து சரியாக புரிந்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு ஞானம் முஸ்லிம்களுக்கு இருந்தால், எப்போது பார்த்தாலும், குர்-ஆனிலேயே ஊறிக்கொண்டு இருப்பவர்கள், ஹதீஸ்களை கறைத்துக்குடிப்பவர்கள், இஸ்லாமின் மூல மொழி அரபியிலேயே எல்லாவற்றையும் படிக்கும் இவர்கள் ஏன் தவறாக இஸ்லாமை புரிந்துக் கொள்கிறார்கள்?
- தம்பி, உனக்கு பிரச்சனை எங்கே என்று தெரிகின்றதா? முஸ்லிம்களின் மூளையில் பிரச்சனையில்லை, இஸ்லாமின் மூலத்தில் பிரச்சனை உள்ளது.
இனி என்னிடம், முஸ்லிம்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுச் சொல்ல தைரியம் கொள்ளாதே!
2015ம் ஆண்டு ரமளானில் நிகழ்த்தப்பட்ட அமைதி மார்க்க செயல்கள்:
இவ்வாண்டு ரமளான் 29வது நாள் வரை, முஸ்லிம்கள் உலக அளவில் நடத்திய அமைதி மார்க்க செயல்களை கவனி. இஸ்லாமிய மத செயல்களோடு இதர மார்க்க செயல்களையும் ஒப்பிட்டுப் பார். யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை பார்.
2015 ரமளான் வன்முறை செயல்களின் பட்டியல்
ரமளான் நாள் 29 | அமைதி மார்க்கம் இஸ்லாமின் பெயரால் | இதர மார்க்கங்களின் பெயரால் | இஸ்லாமை எதிர்ப்பவர்களின் பெயரால் |
---|---|---|---|
தீவிரவாத தாக்குதல்கள் | 291 | 0 | 0 |
தற்கொலை தாக்குதல்கள் | 56 | 0 | 0 |
மரித்தவர்கள் | 2765 | 0 | 0 |
காயமுற்றவர்கள் | 3271 | 0 | 0 |
முஸ்லிம்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள், எனவே
- ரமளானின் மட்டும் 2765 மனிதர்களை கொன்று குவித்துள்ளார்கள்!
- ரமளானின் மட்டும் 3271 மனிதர்களை காயப்படுத்தியுள்ளார்கள்!
- 56 தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்
- 291 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்
ஏன் தம்பி, இப்படி முஸ்லிம்கள் மட்டும் செய்கிறார்கள்?
ஒரு ஹிந்து இத்தனை! செயல்களில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால், அவன் தன் வேதத்தை சரியாக புரிந்துக் கொண்டுள்ளான் என்பதாலா?
ஒரு கிறிஸ்தவன் இத்தனை! செயல்களில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால், அவன் தன் வேதத்தை சரியாக புரிந்துக் கொண்டுள்ளான் என்பதாலா?
ஒரு நாத்தீகன் இத்தனை! செயல்களில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால், அவன் தன் வேதமில்லாததை சரியாக புரிந்துக் கொண்டுள்ளான் என்பதாலா?
எங்கே தவறு இருக்கிறது? மனிதனிலா அல்லது அவன் படிக்கும் வேதத்திலா?
இஸ்லாமை, எல்லா நாடுகளிலுமா தவறாக புரிந்துக் கொள்வார்கள்?
இவ்வாண்டு ரமளான் மாதத்தில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களை அறிய இந்த தொடுப்பை சொடுக்கிப் பார்: http://www.thereligionofpeace.com/index.html
இன்னும் ஒரு கேள்வி என்னை துளைத்துக் கொண்டே இருக்கிறது. உன் கூற்றுப்படி, இஸ்லாமை இமாம்கள், அறிஞர்கள் தவறாக புரிந்துக் கொண்டு, முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் என்பது உண்மையானால், அதனை ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள் என்று சொல்லலாம். உதாரணத்திற்கு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் தான் இப்படி புரிந்துக் கொள்ளப்படுகின்றது என்று கருதினால், இதில் நியாயம் இருக்கிறது. ஆனால், சொல்லிவைத்தாற் போல, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளில் வாழும் இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்களும் ஒரே மாதிரியாக தவறை எப்படி புரிந்துக் கொள்ளமுடியும்?
இந்த கீழ்கண்ட நாடுகளில் மற்றும் பகுதிகளில் உள்ள இமாம்கள், ஒரே மாதிரியாக இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள் என்று சொல்லமுடியுமா?
இந்தியா, சூடான், அல்ஜீரியா, நியூ யார்க் (அமெரிக்கா), பாகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்ஷியா, செசன்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, நைஜீரியா, இங்கிலாந்து, தாய்லாந்து, ஸ்பெயின், எகிப்து, பாங்களாதேஷ், சௌதி அரேப்பியா, துருக்கி, மொராக்கோ, யெமன், பிரான்ஸ், உஜ்பெகிஸ்தான், துனிஷியா, கொசோவோ, போஸ்னியா, கென்யா, சிரியா, சொமாலியா, குவைத், எத்தியோப்பியா, ஜோர்டான், யுனைடட் அரப் எமிரேட்ஸ், டான்ஜானியா, பெல்ஜியம், டென்மார்க், கத்தர், தஜிகிஸ்தான், நெதர்லாண்டு, ஆப்கானிஸ்தான், மாலி, அங்கோலா, உக்ரைன், உகாண்டா, ஜெர்மனி, லெபனேன், ஈரான், ஸ்வீடன், ஈராக், ஸ்காட்லாண்ட், ஆஸ்திரேலியா….இன்னும் இருக்கிறது….
மேற்கண்ட நாடுகளில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஏன் ஒரே மாதிரியாக இஸ்லாமை தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள்?
தம்பி, உனக்கு புரிகின்றதா? உன் வாதத்தில் உள்ள குறைபாட்டை உன்னால் பார்க்கமுடிகின்றதா? ஒருவர் தவறாக புரிந்துக் கொள்ளமுடியும், இரண்டு பேர் தவறாக புரிந்துக் கொள்ளமுடியும், ஆனால், எல்லோருமா இஸ்லாமை தவறாக கொள்வார்கள்? தவறு எங்கே நடந்துள்ளது என்பதை உன்னால் உணரமுடிகின்றதா தம்பி?
இப்படி ஒரு பன்சு டையலாக்கை, நாம் அடிக்கடி சொல்லுவோம்.
சிலரை எல்லா நேரங்களிலும் ஏமாற்றமுடியும், எல்லோரையும் சில நேரங்களில் ஏமாற்றமுடியும், ஆனால், எல்லோரையும், எல்லா நேரங்களிலும் ஏமாற்றமுடியாது.
ஆனால், இஸ்லாமை பொறுத்தமட்டில் மேற்கண்ட கூற்று தவறாகும். எல்லோரும், எல்லா நேரங்களிலும், எல்லா நாடுகளிலும், இஸ்லாமை இப்படித்தான் புரிந்துக் கொள்கிறார்கள். இதிலிருந்து புரிவது என்ன? அவர்கள் புரிந்துக் கொண்டது தான், உண்மையான இஸ்லாம் என்பதாகும். இதனை மறுப்பவர்கள், அடுத்த வாரத்திற்குள் எத்தனை தீவிரவாத செயல்கள் அல்லாஹ்வின் பெயரால் நடக்கிறது என்பதை செய்தித்தாள்களில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். தெரிந்துக்கொண்ட பிறகு, "அவர்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டார்கள்" என்ற வசனத்தை திரும்ப திரும்ப இஸ்லாமியரல்லாதவர்களின் காதுகளில் ஊதிக்கொண்டே இருங்கள். ஒரு நாள் வரும் அன்று, உங்கள் வீட்டு வாசற்படியில், ஒரு முஸ்லிமின் வெடிகுண்டு வெடித்து, உங்கள் அன்பான பிள்ளைகளின் பிணங்கள், இரத்த வெள்ளத்தில் மிதக்கும் போது, அன்று சரியாக உங்களுக்கு இஸ்லாம் புரிய ஆரம்பிக்கும், ஆனால் அதற்குள் உங்கள் கதை முடிந்துவிடும், குடும்பமில்லாமல், நீங்கள் நேசிப்பவர்கள் இல்லாமல், இனி எத்தனை ஆண்டுகள் "இஸ்லாமை சரியான புரிந்துக் கொள்ளுதலுடன்" வாழ்தாலும் என்ன பயன்?
குர்-ஆன் 9:5. எனவே, சங்கைக்குரிய மாதங்கள் கழிந்துவிட்டால், இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்! மேலும், அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்! மேலும், எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் கண்காணியுங்கள். பிறகு, அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் பெரிதும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
குர்-ஆன் 9:29. வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை 'தடுக்கப்பட்டவை' என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்; அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகி (தமது) கையால் ஜிஸ்யா வரியைச் செலுத்தும் வரை!
குர்-ஆன் 9:123. இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறை மறுப்பாளர்களில் யார் உங்களை அடுத்திருக்கிறார்களோ அவர்களுடன் போர் புரியுங்கள்! அவர்கள் உங்களிடம் கடினமான போக்கைக் காணவேண்டும். மேலும், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் வெளியீடு)
தம்பி, என் உள்ளம் மிகுந்த பாரத்தால் நிரம்பியுள்ளது. உனக்கு ரமளான் நல்வாழ்த்துக்கள் சொல்லவும் என்னால் முடியவில்லை. விரல்கள் மேற்கொண்டு டைப் செய்ய மறுக்கின்றன. என்னை மன்னித்துவிடு, இந்த கடிதத்தை இதோடு முடிக்கிறேன்.
சத்தியத்தை அறிந்துக் கொள், அது உன்னை விடுதலையாக்கும்.
இப்படிக்கு,
துக்கத்துடன் உன் அண்ணன்
உமர்.
தேதி: 17 ஜூலை 2015
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day15.html
--
0 comments:
Post a Comment