உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே "2015ம் ஆண்டு ரமளான் மாதத்தில்"
கடித உரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அவைகளை படிக்க
இங்குசொடுக்கவும்.
இதுவரை ஏழு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த எட்டாவது கடிதத்தில் உமரின்
தம்பி முன்வைத்த வாதம் "முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனதால் தான்
இந்த குழப்பங்கள் எல்லாம் வந்தன" என்பதாகும். உண்மையாகவே இது மட்டும்
தான் காரணமா? அல்லது அல்லாஹ் இதற்கு காரணமா? இக்கேள்விகளுக்கு இக்கடிதம்
பதில் அளிக்கும்.
________________________________
முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்
அன்புள்ள தம்பிக்கு,
உன் அண்ணன் உனக்கு இயேசுவின் பெயரில் சமாதானம் கூறி எழுதிக்கொள்வது.
உனக்காக நாங்கள் அனுதினமும் ஜெபிக்கிறோம். நீ மனம் திறந்து உன்
கேள்விகளை, சந்தேகங்களை எனக்கு எழுதுகின்றபடியால், நான் மகிழ்ச்சியாக
இருக்கிறேன். இது மட்டுமல்ல, என் மீது நீ வைக்கும் குற்றச்சாட்டுகளையும்
நான் ஒரு ஆரோக்கியமான உரையாடலின் ஒரு அங்கம் என்றே கருதுகிறேன்.
முஸ்லிமல்லாதவர்கள், இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது,
ஒவ்வொரு முஸ்லிமும் வெவ்வேறு வகையாக அதற்கு பதில்(அடி) கொடுக்கிறார்கள்:
• சில முஸ்லிம்கள், கண்டும் காணதவர் போல இருந்துவிடுவதுண்டு.
• சில முஸ்லிம்கள், கெட்ட வார்த்தைகளால் திட்டுவிட்டு, வேறு ஒன்றையும்
செய்ய திராணியில்லாதவர்களாக, திட்டியதே போதும், உள்ளத்திலிருந்த
பாரமெல்லாம் இறங்கிவிட்டது என்றுச் சொல்லி திருப்தியாக
இருந்துவிடுகிறார்கள்.
• சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் சாபத்தைக் கூறுகிறார்கள், கெட்ட
வார்த்தைகளை பயன்படுத்தாமல், நீ நாசமடைவாய், அல்லாஹ் உன்னை தண்டிப்பான்,
நீ நரகத்துக்குச் செல்வாய் என்றுச் சொல்லிவிட்டு, அமைதியாக ஜகா வாங்கிக்
கொண்டு சென்றுவிடுவார்கள்.
• சில முஸ்லிம்கள், ஒரு படி மேலே சென்று விமர்சனம் செய்தவனின் குடும்ப
நபர்களை முக்கியமாக பெண்களை படுப்பதற்கு அழைப்பார்கள். எதிரிகளாக
பாவிப்பவர்களின் குடும்ப பெண்களை படுப்பதற்கு அழைக்கும் ஆசையை இவர்கள்
உள்ளத்தில் போட்டவர்கள்/வளர்த்தவர்கள் யார் என்பதை எல்லாரும் ஆய்வு
செய்யவேண்டும்.
• கடைசியாக, சில முஸ்லிம்கள் இஸ்லாம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை
ஆய்வு செய்து, அனேக ஆதார நூல்களில் பதில்களைத் தேடிப்பார்த்து, உண்மை
எதுவென்று கண்டுபிடிப்பார்கள். மேலும், இஸ்லாமிய அறிஞர்களிடமும் இதர
மேதாவிகளிடமும் கேள்விகள் கேட்டு, தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு,
ஒரு ஆரோக்கியமான பதிலை தங்களால் முடிந்தவரை கொடுக்க முயற்சி
எடுப்பார்கள். ஒரு வேளை இவர்களின் ஆய்வின் முடிவு, இஸ்லாமுக்கு எதிராக
இருந்தால், தைரியமாக இஸ்லாமை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டார்கள்.
தம்பி, நீ கடைசியாக சொன்ன வகையைச் சார்ந்தவன் என்று நான் நம்புகிறேன்.
இப்போது உன் கடிதத்தில் நீ சுட்டிக்காட்டிய "முஹம்மதுவின் கடைசி ஆசை"
பற்றிய விவரத்தையும், ஹதீஸையும் காண்போம்.
முதலாவது நீ எழுதிய வரிகளை இங்கு பதிக்கிறேன்:
"முஹம்மது தாம் மரிப்பதற்கு முன்பாக ஒரு எழுதுகோலையும், எழுதுவதற்கு
பயன்படும் காகிதம் போன்ற ஒன்றையும் கேட்டார், அதில் அவர் சிலவற்றை
எழுதவேண்டும் என்றும் விரும்பினார். அவர் தன் கடைசி ஆசையை
எழுதியிருந்தால், இஸ்லாமிய சமுதாயம் குழப்பத்திற்குள்ளாக செல்லாது"
என்றும் கூறினார். ஆனால், பல தடைகளினால் அது முடியாமல் போனது. ஆகையால்
தான் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே சில சலசலப்புக்கள் காணப்பட்டது.
ஆனால், உமரண்ணா, நீங்கள் அனைத்திற்கும் இஸ்லாம் தான் காரணம் என்று
குற்றம் சாட்டுகிறீர்கள், இது சரியான விமர்சனம் அல்ல. ஆரம்ப கால
சஹாபாக்கள் எதை செய்தாலும், இஸ்லாமிய இறையியலை குற்றப்படுத்துவது
ஏற்றுக்கொள்ளப்படாது.
சஹாபாக்களைப் போலவே இயேசுவிற்கு பிறகு, அவரின் சீடர்கள் மத்தியிலேயேயும்
இப்படிப்பட்ட சலசலப்புக்களும், வாக்குவாதங்களும், பிரச்சனைகளும்
காணப்பட்டது என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டும்.
தம்பி, உன்னுடைய மேற்கண்ட வாதத்தில் நியாயம் இல்லை. இறைவன் செய்கின்ற
எதுவும் தவறிப்போகாது, அது முழுமையடையும். இதனை கீழ்கண்ட தலைப்புகளில்
உனக்கு விளக்குகிறேன். இந்த கடிதத்தில், சஹாபாக்களும், முஹம்மதுவின்
கடைசி ஆசையும் என்பதைப் பற்றிய விவரங்களை மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்
கொள்கிறேன்.
இயேசுவின் சீடர்கள் பற்றி நீ எழுதியவைகள் பற்றி தனி தலைப்பிலே உனக்கு
இன்னொரு கடிதத்தை நான் எழுதுவேன்.
1) முஹம்மதுவின் கடைசி ஆசை - புகாரி ஹதீஸ்
2) உமரின் கவனக்குறைவா? அல்லது உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது உள்ளதா?
3) முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிய அல்லாஹ்
4) முடிவுரை
________________________________
முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்
1) முஹம்மதுவின் கடைசி ஆசை - புகாரி ஹதீஸ்
தம்பி, உன் கடிதத்தில் "முஹம்மதுவின் கடைசி ஆசை பல தடைகளினால்
நிறைவேறாமல் போனது" என்று சொல்லியுள்ளாய். ஆனால், உண்மையாக அன்று என்ன
நடந்தது என்று ஆதாரத்தோடு சொல்லவில்லை. உனக்காக, இந்த விஷயத்தைப் பற்றி
வரும் புகாரி ஹதீஸை இங்கு பதிக்கிறேன்.
புகாரி 7366. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களின் இல்லத்தில்
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது
நபி(ஸல்) அவர்கள் 'வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித்
தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்'
என்றார்கள்.உமர்(ரலி) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித்
தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன்
இருக்கிறதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்' என்றார்கள்.
வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள்.
அவர்களில் சிலர், '(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்)
கொடுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித்
தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்'
என்றார்கள். வேறு சிலர் உமர்(ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும்
மிகுந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்'
என்றார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), 'மக்கள்
கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதால் இறைத்தூதர்(ஸல்)
அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு
ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்' என்று கூறுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நடந்தவற்றை சுருக்கமாக நான் உனக்கு தருகிறேன்.
அ) முஹம்மது மரண படுக்கையில் இருக்கிறார்
ஆ) உமர் உட்பட சிலர் அங்கு இருக்கிறார்கள்.
இ) இந்த கூட்டத்தைக் கண்டு, "ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன், இதன்
மூலமாக நீங்கள் வழிதவறிப் போகமாட்டீர்கள் என்று" முஹம்மது சொல்கிறார்.
ஈ) எங்களுக்கு குர்-ஆனே போதும், இப்போது எதுவும் எழுதத்தேவையில்லை என்று
உமர் மறுக்கிறார்.
உ) ஒரு சிலர் முஹம்மது கேட்டதை கொடுப்போம், அவர் முக்கியமான ஒன்றை
எழுதித்தருவதாகச் சொல்கிறார் எனவே தடை செய்யவேண்டாமென்றுச்
சொல்கிறார்கள்.
ஊ) வேறு சிலர், உமரின் வார்த்தைகளுக்கு இணங்க, கொடுக்க மறுக்கிறார்கள்.
எ) கூச்சல் அதிகமாவதைக் கண்ட முஹம்மது அனைவரையும் வெளியே போகும் படி
கட்டளையிடுகிறார்.
ஏ) உமர் எண்ணியதுபோலவே நடந்தது.
2) உமரின் கவனக்குறைவா? அல்லது உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது உள்ளதா?
என் அருமை தம்பி, புகாரி ஹதீஸை படித்தாயா?
23 ஆண்டு ஊழியம், ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான குர்-ஆன் வசனங்கள்(6236),
பல வழிப்பறி கொள்ளைகள், பல போர்கள், பல கொலைகள், பல பெண்களின் கற்பு
பாலைவன சூட்டில் சூரையாடப்பட்டது அதாவது, போரில் பிடிபட்ட பெண்கள்
கற்பழிக்கப்பட்டார்கள், அடிமைகளாக விற்கப்பட்டார்கள். எத்தனை முறை
ஜிப்ராயீல் தூதன் இறங்கி வந்து வசனத்தை இறக்கினானோ, எண்ணிக்கை
முஹம்மதுவிற்குத் தான் தெரியும். மேற்கண்ட அனைத்து காரியங்களுக்கும்
வெளிப்பாடுகளைப் பெற்ற முஹம்மது இன்று மரணப் படுக்கையில் கிடக்கிறார்.
இவர் கேட்டுக்கொண்டதெல்லாம் ஒரு பேனாவையும், ஒரு பேப்பரையும் தான்.
அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. நான் உங்களுக்கு பயன்படும் ஒன்றை
எழுதித் தருகிறேன் என்றார். நீங்கள் எழுதுவது எங்களுக்கு தேவையில்ல
என்று மறுத்துவிட்டார். கூச்சலும் குழப்பமும் தொடங்கிவிட்டது.
(முஹம்மதுவிற்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது என்று தானே முஸ்லிம்கள்
இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இங்கு எப்படி இவர் பேனாவையும்,
பேப்பரையும் கேட்கிறார்…? இதைப் பற்றி மற்றொரு நேரத்தில் சிந்திப்போம்).
உமர் ஏன் தடை செய்யவேண்டும்? உமர் அறியாமையில் இதனைச் செய்தாரா? அல்லது
இதற்கு உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது இருக்கின்றதா?
சஹாபாக்களின் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளை தீர்த்துவைத்த முஹம்மதுவின்
கடைசி (பென்) ஆசை அலட்சியம் செய்யப்பட்டுவிட்டது. பாவம் முஹம்மது, ஒரு
கைதிக்கு கூட உன் கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்ற முயற்சி
எடுப்பார்கள், ஆனால் இவருக்கு வந்த நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது.
உங்கள் மூலமாக கொடுக்கப்பட்ட குர்-ஆன் எங்களுக்கு உண்டு, அதுவே போதும்
என்று உமர் கூறினார். குர்-ஆன் போதுமென்று முஹம்மதுவிற்குத் தெரியாதா?
உமர் முஹம்மதுவிற்கு புதிதாக ஏதாவது கற்றுக்கொடுக்க முடியுமா என்ன?
ஒரு வேளை, முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, யார் தலைவராக வரவேண்டும் என்று
முஹம்மது எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டால், என்ன செய்வது?
மதினாவின் முஸ்லிம்களாகிய அன்சாரிகளுக்கு அந்த நாற்காலி சென்றுவிட்டால்
என்ன செய்யமுடியும்? முஹம்மது ஒரு முறை எழுதிவிட்டால், அதனை யாரும்
மாற்றமுடியாது அல்லவா? இந்த சூழல் வருவதற்கான வாய்ப்பை ஏன் ஏற்படுத்திக்
கொடுக்கவேண்டும்? தானாக வாய்ப்பு வந்தாலும் அதனை எப்படியாவது
கெடுத்துவிடலாம் என்ற எண்ணம் உமரின் உள்ளத்தில் தோன்றியதோ?
அண்ணே! ஆட்சியை பிடிக்கவேண்டுமென்கிற இப்படிப்பட்ட கீழ்தரமான கேடுகெட்ட
எண்ணங்கள் சஹாபாக்களுக்கு வராது என்றுச் சொல்லத்தோன்றுகிறதா தம்பி?
நீ கட்டாயம் இந்த ஹதீஸை படித்தே ஆகவேண்டும்.
புகாரி 4447. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்
அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை)
கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக)
பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு
அறிவித்தார்கள்:
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது
அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம்
விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்)
விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்"
என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி)
அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக!
நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப்
பணிந்தவராக ஆம்விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம்
இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன்.
மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக்
களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்)
அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த
பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான்
இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும்
என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி
என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்" என்று
கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால்
அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்
கேட்கமாட்டேன்" என்று பதிலளித்தார்கள். Book :64
இறைத்தூதரிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்டுவிடுவோம் என்று சிலர்
சொல்லும் போது, அலி அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவருக்கு அடுத்தபடியாக
யார் நாற்காலியை பிடிப்பது என்பதைப் பற்றி கேட்பது இந்த சூழலில் மிகவும்
முக்கியமான விஷயமாக உள்ளது. எனவே கேட்போம் என்றுச் சொன்னபோது, இதனை அலி
மறுத்துவிட்டார். முஹம்மது மீது அலி அவர்களுக்கு நம்பிக்கையில்லை,
ஒருவேளை ஆட்சி அதிகாரம் அன்சாரிகளுக்கு (மதினா முஸ்லிம்களுக்கு) என்று
முஹம்மது சொல்லிவிட்டால், அதன் பிறகு தனக்கு அதிகாரம் வராது என்பதால்,
அலி மறுத்துவிட்டார்.
முஹம்மது சொன்னது கூட வஹி தான் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டும்,
நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். அப்படிப்பட்ட வஹி மூலமாக
வரும் செய்தி எங்களுக்கு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டார், ஒரு சஹாபா
அலி, இவர் முஹம்மதுவின் அன்பான மகளின் கணவராவார். அல்லாஹ் எடுக்கும்
முடிவு, தங்களுக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? எனவே,
வாய்ப்பையை உருவாக்கக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்வையே
ஜெயித்துவிட்டார் அலி.
அலி அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் செல்லக்கூடாது என்று ஆயிஷா அவர்கள்
விரும்பியதாக, இன்னொரு ஹதீஸும் சொல்கிறது. முஹம்மது தனக்கு அடுத்து
ஆட்சியை நடத்த அலியை தெரிவு செய்தாராமே என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம்
ஒன்றும் நடக்கவில்லை என்று ஆயிஷா அவர்கள் மறுத்தார்கள். இதனையும் நாம்
புகாரி ஹதீஸில் காண்லாம்.
புகாரி 4459. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்
"நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக
இருக்கும்படி) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே" என்று
ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், 'இதைச் சொன்னவர் யார்?'
என்ற கேட்டுவிட்டு, '(நபி(ஸல்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை
என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில்
துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு
பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்ததைக் கூட) நான்
உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை)
எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்?' என்று கேட்டார்கள். Book :64
சஹாபாக்கள் - பொறுக்கி எடுத்த இஸ்லாமிய முத்துக்கள்:
அ) அலி அவர்கள் நல்ல வாய்ப்பை உருவாக்க மறுத்துவிட்டார்.
ஆ) உமர் அவர்கள், முஹம்மதுவினால் உண்டான வாய்ப்பையே தட்டிக் கழித்துவிட்டார்.
வாழ்க இஸ்லாம், வாழ்க இஸ்லாமிய ஆரம்ப கால முஸ்லிம்கள். பாவம் முஹம்மது,
அல்லாஹ்வே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் போது, இவரால் என்ன
செய்யமுடியும்? அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் வல்லவராமே!
"அல்லாஹ்வா! சூழ்ச்சி செய்தான்! இல்லை இல்லை, சஹா பாக்கள் செய்த
குழப்பத்தினாலும், ஆட்சி அதிகாரத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த
அசையினாலும் இப்படி எங்கள் இறைத்தூதருடைய கடைசி ஆசை நிறைவேறவில்லை" என்று
தம்பி நீ சொல்லுவாய். ஆனால், இது தவறு, உனக்கு இஸ்லாம் தெரியாது,
குர்-ஆன் தெரியாது, அல்லாஹ்வைத் தெரியாது. இவைகள் எல்லாம், அல்லாஹ்வின்
அனுமதிக்கு உட்பட்டுத் தான் நடந்தது. புரியவில்லையா! அடுத்த தலைப்பில்
தரப்படும் குர்-ஆன் வசனங்களைப் பார். உண்மை புரியும்.
3) முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிய அல்லாஹ்
மேலோட்டமாக, மேற்கண்ட ஹதீஸ்களை பார்த்தால், உமரின் செயலினால் தான்
முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று சொல்லத்தோன்றும்.
ஆனால் உண்மையில், அல்லாஹ் நாடவில்லை, அதனால், முஹம்மதுவின் ஆசை
நிறைவேறவில்லை என்பதை உணர்ந்துக் கொள்ளலாம்.
அ) உச்சு சப்பு இல்லாத அற்பமான விஷயங்களுக்கு அல்லாஹ் வசனங்களை இறக்குவார்.
ஆ) முஹம்மதுவின் ஆசைகளை பூர்த்திசெய்ய அல்லாஹ்விடமிருந்து ஈமெயில்
சீக்கிரமாக வரும்.
இ) வளர்ப்பு மகனின் மனைவியை எடுத்து முஹம்மதுவிற்கு கொடுப்பதற்கு
அல்லாஹ்வின் வஹி இறங்கிவரும்.
ஆனால், 23 ஆண்டுகள் உழைத்த உழைப்பின் கனி கனிந்துவரும் நேரத்தில்,
சஹாபாக்கள் செய்யப்போக்கும் கூச்சல் குழப்பம், அதிகார துர்பியரோகம்,
கொலைகள், அவமானங்கள் போன்றவைகள் நடக்கப்போகின்ற நேரத்தில் "அந்த
சமுதாயத்துக்கு தேவையான வஹி அல்லாஹ்விடமிருந்து வராது". ஒரு வேளை
வந்திருந்தாலும், அதனை உமர் போன்ற ஒரு மனிதரால் தடை செய்யமுடியும்
என்றுச் சொல்லத்தோன்றுகிறது.
அடுத்த தலைவர் யார் வரவேண்டும் என்ற ஒரு தெளிவான வசனம் குர்-ஆனில் இல்லை,
ஹதீஸில் இல்லை, சாவதற்கு முன்பாக யாரோ ஒருவரை விரல் நீட்டி
காட்டிவிட்டுச் செல்லலாம் என்று விரும்பினாலும், அல்லாஹ் நாடவில்லை.
குறைந்தபட்சம் ஒரு காகிதத்தில் எழுதி கொடுக்கலாம் என்று விரும்பினாலும்,
இஸ்லாமிய உம்மா மக்கள் சும்மாவே சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.
ஒலி வடியில் தான் எங்கள் குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றுச்
சொல்கின்ற முஸ்லிம்கள், ஏன் முஹம்மது ஒலிவடியில் தன் கடைசி ஆசையை
சொல்லிவிட்டுச் சென்று இருக்கக்கூடாது என்று சிந்திக்கவேண்டும். கடைசி
ஆசையைச் சொல்ல ஏன் கடைசி வரைக்கும் முஹம்மது காத்திருக்கும் படி அல்லாஹ்
செய்தார்? ஒரு வாரம் அல்லது மாதத்துக்கு முன்பாகவே சொல்லிவிட்டுச் சென்று
இருக்கலாம் அல்லவா? தம்பி, நீ இவைகளை ஆராய்ந்துப் பார்.
ஒட்டு மொத்த குற்றமும் அல்லாஹ்வுடையது தம்பி. உமரும் அலியும், ஆயிஷாவும்
இதர சஹாபாக்களும் வெறும் நடிகர்கள் தான், அவர்களை நடிக்க வைப்பவன் யார் -
அல்லாஹ் தான்.
தம்பி, இதுவரை முன்வைத்த விவரங்களுக்கு ஆமீன் என்றுச் சொல்லும் குர்-ஆன் வசனங்கள்:
அல்லாஹ்வின் சித்தமில்லாமல், எதுவும் உலகில் சிந்தாது:
குர்-ஆன் 9:51. "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்)
எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர்
கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
முஹம்மதுவின் கடைசி ஆசை, ஆசையாகவே நின்றுவிடும் என்று அல்லாஹ்வின்
ஏட்டில் அல்லாஹ்வே முன்குறித்துள்ளான்:
குர்-ஆன் 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும்
- அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில்
இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
குர்-ஆன் 57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள்
துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள்
(அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்);
கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
நன்றும் தீதும் பிறர் தரவாரா! – அல்லாஹ்வே கொடுப்பார் (தன் நபி விஷயத்திலும்):
குர்-ஆன் 6:17. "(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை
ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது.
இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க
முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக
இருக்கின்றான்.
குர்-ஆன் 6:18. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண
ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
குர்-ஆன் 76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்;
நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
4) முடிவுரை
எனக்கன்பான தம்பியே, உனக்காக எவ்வளவு நேரத்தை ஒதுக்கி எழுதுகிறேன் என்று
பார்த்தாயா? என் எழுத்துக்களால், ஒரே ஒரு ஆத்துமா பரலோகம் சென்றால்,
தூதர்கள் முன்பு மிகுந்த சந்தோஷம் அதனால் உண்டானால்,அதுவே எனக்கு போதும்.
அந்த ஆத்துமா என் தம்பியாக ஏன் இருக்கக்கூடாது?
முஹம்மதுவிற்கு அடுத்து, சஹாபாக்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டார்கள். வஹி
இல்லா அனாதைகள், வழி தெரியாமல் தவிக்கும் பிள்ளைகள். ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வழியில் சென்றார்கள். இவர்களை வழிநடத்த ஜிப்ராயீல் வரவில்லை, வஹி
வரவில்லை, இவர்களை சரியான வழியில் நடத்த குர்-ஆனில் தெளிவான வசனங்கள்
இல்லை, அவ்வளவு ஏன், இவர்கள் மத்தியிலே ஒரு சகோதர அன்பு இல்லை.
குர்-ஆனின் இறையியல், இவர்களை மாற்றவில்லை, இவர்களை மற்ற போதுமானதாகவும்
இல்லை. குர்-ஆன் வசனங்களுக்கு இவர்களை மாற்ற சக்தி இல்லை. தம்பி, இந்த
வரிகளை நான் எழுதிக்கொண்டு இருக்கும் போதே, தாக்குதல்கள் தொடர்ந்து
நடந்துக்கொண்டே இருக்கின்றன.
• குவைத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.
• துனிசியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். (மூலம்)
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு
உன் அண்ணன்
உமர்
தேதி: 27 ஜூன் 2015
________________________________
உமரின் ரமளான் கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day8.html
--
Source : http://isakoran.blogspot.in/
அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
June 27, 2015
2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?
உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே "2015ம் ஆண்டின் ரமளான் மாதத்தில்"
கடித உரையாடல்கள் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. அவைகளை படிக்க
இங்குசொடுக்கவும்.
இந்த கடிதத்தில், முதலாவது உமரின் தம்பி கடிதம் எழுதுகிறார், அதன்
பின்பாக உமர் அவருக்கு பதிலைத் தருகிறார்.
________________________________
அன்புள்ள அண்ணாவிற்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கடிதங்களை படிக்கும் போது, எனக்கு இரத்தம் கொதிக்கிறது. இஸ்லாமை
பற்றி நீங்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் ஆரோக்கியமானவைகளாக இல்லை.
உங்கள் முந்தைய கடிதத்தை படித்தேன், அதில் அலி அவர்கள் பற்றி நீங்கள்
தரக்குறைவாக எழுதியுள்ளீர்கள்.
1) அவருக்கு பண ஆசை அதிகம் என்று எழுதியுள்ளீர்கள். மனைவிக்கு அறிவுரை
கூறாதவர் என்று குறைகூறியுள்ளீர்கள்.
2) அலி தன் தவறை உணர்ந்து, அபூ பக்கரிடம் ஒப்புறவான விஷயத்தை மட்டும்
நீங்கள் மறைத்துவிட்டீர்கள். அவரது பிழைகளை எடுத்துக் காட்டிவிட்டு,
அவர் மறுபடியும் ஒப்புறவான விஷயத்தை வேண்டுமென்றே மறைத்துவிட்டீர்கள்.
இதனை நீங்கள் மேற்கோள் காட்டிய புகாரி ஹதீஸிலிருந்து அறிந்துக்
கொள்ளலாம். ஆனால், அந்த ஹதீஸீன் கடைசி பகுதியை நீங்கள் வேண்டுமென்றே
மேற்கோள் காட்டாமலேயே விட்டுவிட்டீர்கள். இதிலிருந்து உங்கள் உள்நோக்கம்
தெரிகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
3) மனிதன் என்பவன் தவறு செய்பவன் தான், அவன் திருந்திவிட்டால், அவனின்
முந்தையை தவறுகள் சுட்டிக்காட்டப்படக்கூடாது. இந்த அடிப்படை விஷயம் கூட
உங்களுக்குத் தெரியவில்லையா?
ஏன் நீங்கள் புகாரி ஹதீஸ் 4240 & 4241ஐ முழுவதுமாக பதிக்கவில்லை என்பதை
எனக்கு சொல்லுங்கள்? நீங்கள் மறைத்த ஹதீஸை நான் உங்களுக்காக பதிக்கிறேன்,
படித்துப் பாருங்கள். இதற்கு நீங்கள் கட்டாயம் பதில் சொல்லியே
ஆகவேண்டும். உங்களிடன் கடிதத்திற்காக நான் காத்திருப்பேன்.
புகாரி 4240. & 4241. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
. . . . . . . . . ஃபாத்திமா(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) வாழ்ந்த
வரையில் அலீ(ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம்
இருந்து வந்தது. ஃபாத்திமா(ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில்
(மரியாதையில்) மாற்றத்தை அலீ(ரலி) கண்டார்கள். எனவே, (ஆட்சித் தலைவர்)
அபூ பக்ரிடம் சமரசம் பேசவும் பைஅத் - விசுவாசப் பிரமாணம் செய்து
கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூ பக்ர்(ரலி)
அவர்களுக்கு அலீ(ரலி) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை.
எனவே, 'தாங்கள் (மட்டும்) எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும்
வரவேண்டாம்" என்று கூறி அலீ(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு
ஆளனுப்பினார்கள். (அபூ பக்ர்-ரலி - அவர்களுடன்) உமர்(ரலி) வருவதை
அலீ(ரலி) விரும்பாததே (அலீ-ரலி அவர்கள் இவ்வாறு கூறக்) காரணமாகும.
அப்போது உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள்
(உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்)" என்று
கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), என் விஷயத்தில் அவர்கள் அப்படி
நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத்தான் செய்வேன்" என்று
கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ(ரலி), ஏகத்துவ
உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு, (அபூ பக்ர் - ரலி-
அவர்களை நோக்கி) 'தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கம்
(ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ்
உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக்
குறித்து நாங்கள் பொறமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு)
விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு
விட்டீர்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எங்களுக்குள் உறவு
முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கம் விஷயத்தில்)
எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்" என்று கூறினார்கள்.
(இது கேட்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூ
பக்ர்(ரலி) பேசத் துவங்கியபோது, 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன்
மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட,
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள்.
இச்செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து
வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது
விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான்
செய்யாமல்விட்டு விடவுமில்லை" என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி)
அவர்களிடம் அலீ(ரலி), 'தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து
கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும" என்று கூறினார்கள். பிறகு அபூ
பக்ர்(ரலி) லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ
உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ(ரலி) குறித்தும், அவர்கள்
தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும்,
அதற்கு அலீ(ரலி) தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
பிறகு அலீ(ரலி) (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ
உறுதிமொழி கூறிய பின் அபூ பக்ர்(ரலி) அவர்களின் தகுதியைக்
கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த
இக்காரியத்திற்குக் காரணம், அபூ பக்ர்(ரலி) மீது கொண்ட பொறாமையோ அல்லது
அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்தோ அல்ல் மாறாக, (ஆட்சித்
தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு
என (நபி - ஸல் - அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும்.
ஆனால், அபூ பக்ர்(ரலி) (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச்
செயல்பட்டுவிட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது" என்று
கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப்
பார்த்து) 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்" என்று கூறினர். தம் போக்கை
அலீ(ரலி) திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டபோது
முஸ்லிம்கள் அலீ(ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக
ஆகிவிட்டனர். Book :64
இப்படிக்கு,
உங்கள் தம்பி
சௌதி அரேபியா.
தேதி: 24 ஜூன் 2015
________________________________
2015 ரமளான் கடிதம் 7
அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?
அன்பான தம்பிக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உன் கடிதத்தை படித்து மகிழ்ந்தேன். உன் ஆர்வத்தையும் ஆய்வையும் கண்டேன்.
நீ கேட்ட கேள்விகளுக்கு நான் கட்டாயம் பதில் சொல்வேன்.
உன் முதல் கேள்வி: அலி அவர்கள் "பண ஆசை" உள்ளவர் என்று நான் எழுதியது
பற்றியதாகும். மேலும் பண விஷயத்தில், பெரியவர்களுக்கு தர வேண்டிய மதிப்பு
மரியாதை விஷயத்தில் மனைவிக்கு அறிவுரைச் சொல்லாதவர் என்றும் நான்
எழுதியிருந்தேன்.
தம்பி, என் விமர்சனத்திற்கு ஆதாரமாக நான் ஆதாரங்களை காட்டி எழுதினேன்.
இப்போது அதனை மறுக்கும் நிலையில் நீ இருந்தால், அதற்கான ஆதாரங்களைத்
தருவது உன் கடமையாகும். அதற்கும் என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? நான்
மேற்கோள் காட்டிய ஹதீஸிலிருந்து, அலியும், ஃபாத்திமாவும் பண ஆசையே
இல்லாதவர்கள் என்று உன்னால் நிருபிக்கமுடியுமா? முயற்சி எடுத்துப்பார்.
இரண்டாவது விமர்சனம்: நான் ஏன் புகாரி ஹதீஸ்கள் 4240 & 4241 எண்களில்
வரும் கடைசி பகுதியை முந்தைய கடிதத்தில் பதிக்கவில்லை என்று கேட்டு
இருந்தாய்.
என்னிடம் கேள்வி கேட்டுவிட்டு, நீயே பதிலை சொல்லிவிட்டால் எப்படி சொல்?
ஏன் பாதி ஹதீஸை பதித்தீர்கள்? என்று என்னிடம் கேள்வி கேட்டாய், ஆனால்,
நீயே அதற்கு பதிலையும் சொல்லிவிட்டாய். அதாவது நீயும் இந்த கடிதத்தில்
பாதி ஹதீஸையே பதித்தாய் ஏன்?
கடிதத்திற்கு தேவையான பகுதியை மட்டுமே பதித்தேன், தேவை இல்லாததை ஏன்
பதிக்கவேண்டும் என்று எனக்கு நீ பதில் சொல்லக்கூடும். அதே பதில் தான்
நானும் கூறுவேன். ஒரு தலைப்பு பற்றி நாம் பேசும் போது, அந்த விஷயத்தைப்
பற்றிய பகுதியை மட்டுமே மேற்கோள் காட்டுவோம். தேவையில்லாத ஊர்
கதையெல்லாம் அந்த தலைப்பில் விவாதிக்கமாட்டோம். அதனால், தான் ஃபாத்திமா
மற்றும் அலி அவர்களின் பண ஆசை வெளிப்படும் "ஹதீஸ் பகுதியை நான் மேற்கோள்
காட்டினேன்". இது தான் நான் ஹதிஸின் முதல் பகுதியை பதித்ததற்கான
முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம் என்னவென்றால், ஒரு கடிதத்தில் ஒரு தலைப்பு பற்றியே
நான் எழுதவேண்டும் என்று விரும்பினேன். ஒவ்வொரு கடிதத்திற்கும் தனித்தனி
தலைப்புகள் வைப்பதினால், அதைப் பற்றிய விவரங்களை மட்டுமே பதித்தேன்.
ஃபாத்திமா அவர்கள் மரித்த பிறகு, அலி அபூ பக்கரிடம் வந்து நடித்த
நடிப்பை ஒரு புதிய கடிதமாக எழுத நான் எண்ணியிருந்தேன். ஆகையால், அதனை
நான் முந்தைய கடிதங்களில் பதிக்கவில்லை. இப்போது அதற்கான சமயம்
வந்தபடியால், இந்த கடிதத்தில் அதைப் பற்றி எழுதுகிறேன்.
புகாரி 4240/4241ம் ஹதீஸ்களின் பிற்பகுதிக்கு, நான் வைத்த பெயர் என்ன
தெரியுமா? "அலி ஒரு சந்தர்ப்பவாதி" என்பதாகும்.
உபதலைப்புக்கள்:
1) ஃபாத்திமாவின் மரணமும், அலியின் மரியாதைக் குறைவும்.
2) ஆறு மாத கசப்பும், திடீர் மனந்திரும்புதலும்.
3) முடிவுரை: வாய்ப்புக்கள் கதவை தட்டாவிட்டாலும், தானாக திறக்கும் கதவுகள்.
------------------------

தம்பி நீ பதித்த ஹதீஸை மறுபடியும் நன்றாக படித்துப் பார். அதில்
முக்கியமான வரியை உனக்காக இங்கு பதிக்கிறேன்.
. . . . "ஃபாத்திமா(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) வாழ்ந்த வரையில்
அலீ(ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்து
வந்தது. ஃபாத்திமா(ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில்
(மரியாதையில்) மாற்றத்தை அலீ(ரலி) கண்டார்கள்." . . .
ஃபாத்திமா அவர்கள் உயிரோடு இருக்கும் வரையிலும், அலி அவர்களுக்கு மக்கள்
மரியாதை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஃபாத்திமா மரித்தவுடன்,
மக்களின் முகங்களில் மாற்றம் வந்தது, மரியாதை குறைந்தது, தனிக்கவனம்
குறைந்தது. இதனைக் ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது.
நாம் சென்றுக்கொண்டு இருக்கும் வழி சரியானது தான் என்ற நம்பிக்கை
இருந்தால், அதே வழியில் தொடர்ந்து சென்றுக்கொண்டே இருக்கவேண்டும். அது
தான் நேர்மையானவர்களுக்கும், சத்தியத்தை பின் பற்றுபவர்களுக்கும் அழகு.
யார் மரியாதை கொடுததால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? என்னை அபூ பக்கர்
ஏமாற்றிவிட்டார், இவரால் என் பதவியும் போச்சு, பணமும் போச்சு
இருந்தாலும், ஆறு மாதங்களாக எடுத்த தீர்மானத்தை மாற்றாமல் இருக்கிறேன்
என்றுச் சொன்ன அலி அவர்கள், ஃபாத்திமா மரித்த பிறகு ஏன் தன் நிறத்தை
மாற்றிக்கொள்ளவேண்டும்? மக்கள் செல்வாக்கு இதனை செய்ய அவரை
கட்டாயப்படுத்தியுள்ளது.
2) ஆறு மாத கசப்பும், திடீர் மனந்திரும்புதலும்
தம்பி, இஸ்லாமிலே நான் அனேக ஆச்சரியங்களைக் கண்டு இருக்கிறேன்.
முஹம்மதுவிற்கு பரம எதிரியாக இருந்தவர், முஹம்மது ஒரு பொய்யான
தீர்க்கதரிசி என்றுச் சொன்னவர், முஹம்மதுவோடு போர் செய்து, அவரை
கொல்லவேண்டும் என்று விரும்பியவர் ஒருவர் இருக்கிறார். இவருக்கு
திடீரென்று ஞானம் பிறக்கிறது – எப்போது? முஹம்மதுவின் கத்தி, அவரின்
கழுத்து பக்கத்தில் வரும்போது, திடீரென்று இந்த நபருக்கு "முஹம்மது
நபியாக தென்படுகிறார், அவர் கொண்டு வந்த மார்க்கம் உண்மை மார்க்கம்" என்ற
ஞானம் வந்துவிடுகிறது. முஹம்மதுவிற்கு முன்பு வந்து, நான் கலிமா சொல்லி
முஸ்லிமாகிறேன் என்றுச் சொல்வார், இதனை முஹம்மதுவும் ஏற்றுக்கொள்வார்.
அந்த பரம எதிரிக்கு நல்ல பதவிகளையும் முஹம்மது தருகிறார். நான் யாரைப்
பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று உனக்கு தெரிகின்றதா தம்பி?
சிறிது ஆய்வு செய்துப்பார், இந்த பரம எதிரி யார்? அவர் செய்த செயல்கள்
என்னென்ன? இந்த பரம எதிரியினால், இஸ்லாம் சுவைத்த கனிகள் என்ன? என்பதை
நேரம் வாய்க்கும்போது உனக்கு எழுதுவேன்.
இப்போது அலியின் கதைக்கு வருவோம்.
ஆறு மாத கசப்பு, கலிஃபாவும் வேண்டாம், அவரது ஆட்சியும் வேண்டாம், அவரோடு
விசுவாச பிரமாணமும் வேண்டாம். நான் உட்கார வேண்டிய இடத்தில், அவர்
உட்கார்ந்து இருக்கிறார். என் மனைவி கரேக்ட், நானும் கரேக்ட். இது தான்
அலியின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் அலி ஆறுமாதங்கள் இருந்தார்.
இன்னும் இருந்திருப்பார், ஆனால், ஃபாத்திமா மரித்துவிடுகிறார்கள்.
மனைவி மரித்தவுடன், மக்களிடத்தில் தன் செல்வாக்கு குறைந்தவுடன்,
திடீரென்று போதிமரத்தின் ஞானம் இவருக்கு பிறக்கிறது. நான் தவறு
செய்துவிட்டேனா? முதலில் பதவி போச்சு, அடுத்தபடியாக பணமும் போச்சு,
இப்போது மனைவியும் போயாச்சு, போதாகுறைக்கு, இருந்த கொஞ்ச நஞ்ச
மரியாதையும் போய்விடும் போலிருக்கே! என்ன செய்வது என்று சிந்தித்தார்
அலி.
முஹம்மதுவிற்கு அடிக்கடி வந்து வெளிப்பாடுகளை கொடுத்த ஜிப்ராயீல் தூதன்,
மருமகனுக்கு வெளிப்பாடுகளை தர வரவில்லை. கனவிலே மாமனார் வந்து அபூ
பக்கரிடம் ஒப்புறவாகிவிடு என்றுச் சொல்லவில்லை. தெருவிலே மக்கள் காட்டிய
மரியாதை (த்குறைவு) தான் அலியை மாற்றியுள்ளது.
நான் சென்று அபூ பக்கரிடம் சமரசம் செய்துக்கொள்ளட்டுமா?
அபூ பக்கர் நமக்கு செய்த துரோகத்தை மறந்துவிட்டு, ஏன் இப்படி அவரோடு
சேர்ந்துவிட்டீர்கள் என்று ஃபாத்திமா கேட்டால் என்ன செய்வது?
ஓ.. ஃபாத்திமா தான் மரித்துவிட்டார்களே! யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்.
இத்தனை நாட்கள் இந்த ஐடியா வராமல் இருந்ததற்கு பாத்திமா தான் காரணமோ? ஒரு
ஐடியா வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது (An idea can change your
life).
காரணம் எதுவாக இருந்தாலும், இந்த நல்ல சந்தர்ப்பத்தை மட்டும் நழுவ
விடக்கூடாது. விட்ட கதையை தொடரவேண்டியது தான். முந்தைய வசனங்களை இரத்து
செய்துவிட்டு, புதிய வசனத்தை நமக்கு நாமே இறக்கிக்கொள்வோம். நல்ல
விஷயங்களை பெறுவதற்கு, முந்தையை விஷயங்களை மறப்பதில் அல்லது மறைப்பதில்
தவறில்லை. அல்லாஹ்வே தன் முந்தைய வசனங்களை இரத்து செய்கிறானே, நான்
செய்தால் என்ன?
இப்படிப்பட்ட எண்ணங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க, ஒரு இடத்தில்
அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அலி.
தம்பி, உன் ஹதீஸின் படி, அவர் அபூ பக்கரை வரச்சொல்கிறார் (பொதுவாக இவர்
தானே அபூ பக்கரிடம் செல்லவேண்டும்? ஒரு கலிஃபாவை வரச்சொல்வதா! நான் யார்
இறைத்தூதரின் மருமகனாக்கும்!).
தன் தவறுகளை அறிக்கையிட்டார், நல்ல பிள்ளை என்று பெயரை வாங்கினார்.
திடீர் திருப்பங்கள் இஸ்லாமுக்கு புதிதல்லவே! அபூ பக்கர் கண்ணீர்
மல்கினார். மக்களின் முன்பாக விசுவாச பிரமாணம் செய்யப்படுகின்றது. அலி
எதிர்ப்பார்த்தபடியே மக்கள் அவரை அன்புடன் ஏற்றுக்கொண்டனர்.
மனந்திரும்புகின்ற ஒரு பாவியினிமித்தம், பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம்
உண்டாயிருக்கும் என்ற பைபிளின் வசனத்திற்கு ஏற்ப, அபூ பக்கரின் தோளோடு
தோள் சேர்க்க, அலி எடுத்த இந்த முடிவு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது
ஒரு சிலரைத் தவிர. இந்த மனந்திரும்பிய நிகழ்ச்சியினால்
துக்கப்பட்டவர்கள் யாராவது இருந்திருப்பார்களா? ஆம், இருந்திருக்கலாம்,
அதுவும் அபூ பக்கரின் வீட்டில் பிறந்தவர்களுக்கே இது ஒரு துக்ககரமான
செய்தியாக இருந்திருக்கலாம்.
3) முடிவுரை:
வாய்ப்புக்கள் கதவை தட்டாவிட்டாலும், தானாக திறக்கும் கதவுகள்.
தம்பி, நீ மேற்கோள் காட்டிய பகுதிலிருந்து தான் நான் இதுவரை உனக்கு
விளக்கினேன். அலியின் செயல் ஒரு சந்தர்ப்பவாத செயலாகும். செய்த தவறை
ஒப்புக்கொள்வதை நான் குறை கூறவில்லை, அதனை எப்போதும் நான்
மெச்சிக்கொள்வேன். ஆனால், அலி ஏன் இப்படி தன் இதய கதவை திறந்தார்? என்று
சிந்திக்கும் போது, பணமும், பதவியும், மக்களின் செல்வாக்கும் தான் அலியை
நடத்தியுள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.
அ) ஃபாத்திமா உயிரோடு இருக்கும் போது வராத இந்த நல்ல எண்ணம் ஏன் மரித்த
பிறகு வந்தது?
ஆ) ஆறு மாதகாலமாக மனைவி சொல்லே மந்திரம் என்பதுபோல மனைவியின் சொற்படி
நடந்துக்கொண்டார்கள். மனைவி மரித்தவுடன், மந்திரம் மாந்திரீகம்
ஆகிவிட்டதா?
இ) ஃபாத்திமா மரித்தபிறகு மக்களின் செல்வாக்கு குறைந்த போது, மனைவியின்
தீர்மானங்களை மனைவியோடு கூட சேர்த்து மண்ணிலே புதைத்துவிட்டு, புத்துயிர்
பெற்றுவிட்டார் அலி. அலிக்கு, பழயவைகள் ஒழிந்துப்போயின, எல்லாம்
புதிதாயின.
ஈ) ஒரு வேளை, அல்லாஹ்வின் அரசாட்சியில், முதன் முதலில் அலி ஃபாத்திமாவை
எப்படி சந்திப்பார்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரோடு பேசுவார்?
உ) அலி செய்தது சரியான காரியமானால், அதனை ஃபாத்திமாவிற்கும் சொல்லி
இருவராக அபூ பக்கரோடு ஒப்புறவாகியிருந்தால், இன்னும் மகிழ்ச்சி
அதிகமாகியிருக்குமே!
எ) மனைவி மரித்தபிறகு இப்படி ஒப்புறவாகுதல் என்பது, மனைவிக்குச் செய்யும்
துரோகமில்லையா? தனக்கு நல்லபெயர் வேண்டும், தன் மனைவிக்கு மட்டும்
தேவையில்லையா?
தம்பி, நாம் பச்சோந்தி என்றுச் சொல்லுவோம் தெரியுமா? சூழ்நிலைக்கு ஏற்ப
தன்னை மாற்றிக்கொள்வது என்பது இது தானோ!
அலியின் இந்த ஒப்புறவாகுதலை நான் குற்றம் கண்டுபிடிக்கவில்லை, ஆனால்,
இந்த ஒப்புறவாகுதல் எதன் காரணமாக இவருக்குள் உண்டானது என்பது தான்
ஜீரணித்துக் கொள்ளமுடியாது (எனக்கு இல்லை தம்பி, உனக்குத் தான் ஜீரணமாவது
கடினம்). முதலாவது செல்வத்துக்காக வாக்குவாதம் செய்துக்கொண்டாலும், அதனை
வெளியே காட்டிக்கொள்ளாமல், வாரிசு என்பதாலும், என்னை கேட்காமல், தலைவரை
தெரிவு செய்ததாலும் தான் நான் கோபம் கொண்டேன் என்று பல்டி அடித்தார் அலி.
நீ உண்மை இஸ்லாமை அறியாமல், அதில் காலை வைத்துவிட்டாய், இப்போது
அதிலிருந்து வெளிவருவது சிறிது கடினம் தான் உனக்கு, ஆனால், முடியாது
என்று சொல்லமாட்டேன். முயற்சி திருவினையாக்கும் தம்பி.
சிந்தித்துப்பார்.
தம்பி, இன்னும் அலி அவர்கள் பற்றி அறியவேண்டியவைகள், நிறைய உள்ளன.
ஒவ்வொன்றாக நான் உனக்கு எழுதுவேன். இஸ்லாம் ஃபாத்திமாவை மாற்றவில்லை,
அலியையும் மாற்றவில்லை, பண ஆசையும், பதவி ஆசையும் இவர்களை
ஆட்டிபடைத்தது.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன், அதுவரை உன் மனக்கண்களால் இஸ்லாமை
ஆய்வு செய்துப்பார்.
இப்படிக்கு
உன் அண்ணன்
உமர்
தேதி: 25 ஜூன் 2015
________________________________
உமரின் ரமளான் கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day7.html

2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்
அன்புள்ள தம்பிக்கு,
உன் மீது தேவனின் கிருபையும் சாந்தியும் உண்டாவதாக.
என் முந்தைய கடிதத்தில், நீ கேட்ட முதல் கேள்விக்கு பதில் அளித்தேன்.
இந்த கடிதத்தில், உன்னுடைய இரண்டாவது கேள்விக்கு என் பதிலைத் தருகிறேன்.
நீ கேட்ட முதல் கேள்வி & அதற்கான பதில் (தொடுப்பு): ஃபாத்திமா தனக்கு
வரவேண்டிய சொத்துக்களை அபூ பக்கரிடம் கேட்டதில் எந்த ஒரு தவறும் இல்லை.
நீ கேட்ட இரண்டாவது கேள்வி: ஃபாத்திமாவிற்கு வரவேண்டிய சொத்துக்களை அலி
அவர்கள் குர்-ஆனிலிருந்து உதாரணங்களை மேற்கோள் காட்டி கேட்டாலும், அபூ
பக்கர் அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், அலி அவர்கள் கோபம்
கொண்டதில் நியாயம் இருக்கிறதல்லவா?
தம்பி, உன் இரண்டாவது கேள்வியில் அனேக பிரச்சனைகள் உள்ளன. நீ இரண்டு
வரிகளில் சுலபமாக கேள்விய கேட்டுவிட்டாய், இதனால் முஸ்லிம்களுக்கு
ஏற்படும் தர்மசங்கடத்தை நீ கணக்கு போடவில்லை. அலியின் தவறான செயலை
நியாயப்படுத்துவதற்கு நீ முயற்சி எடுத்தாய், ஆனால், அது எப்படி உன்
இறைத்தூதர் முஹம்மதுவையும் தாக்கும் என்பதை இந்த கடிதத்தில் அறிந்துக்
கொள்வாய்.
இஸ்லாம் பற்றி எவ்வளவுக்கு அதிகமாக ஒருவன் அறிந்துக் கொள்கிறேனோ,
அவ்வளவுக்கு அதிகமாக இஸ்லாம் சிக்கலானது என்றும், பல தர்மசங்கடமான
கேள்விகளுக்கு இஸ்லாம் பதில் அளிப்பதில்லை என்பதையும் அறிந்துக்
கொள்வான். இங்கு முஸ்லிம்கள் மனப்பாடம் செய்யும் ஸூராக்களைப் பற்றியோ,
இதர மத சடங்காச்சாரங்களையோ நான் சொல்லவில்லை, இஸ்லாமிய மூல
நூல்களிலிருந்து இஸ்லாமை அறிய அறிய முஸ்லிம்களுக்கு பிரச்சனைத் தான்.
அந்த நிலையில் இப்போது நீ இருக்கிறாய். இஸ்லாம் தன் ஆரம்பகால
சீடர்களையும் நல்லவர்களாக மற்றவில்லை என்பதை அறியும் போது, உனக்கே
ஆச்சரியமாக இருக்கும்.
தம்பி, என் முந்தைய கடிதங்களில், புகாரி மற்றும் முஸ்லிம்
ஹதீஸ்களிலிருந்து அதிகமாக மேற்கோள் காட்டினேன், இப்போது உனக்கு "கிதாப்
அல்தபாகத் அல்கதீர்" என்ற புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை காட்டி
தொடருகிறேன்.
முஹம்மது மரித்த அடுத்த நாள், மகளும் மருமகன் அலியும் அபூ பக்கரிடம்
பேசுகிறார்கள். அலி அவர்கள் பேசுவதை சரியாக கவனித்துப் பார் தம்பி.
கிதாப் அல் தபாகத் அல் கதீர் – பக்கம் 393 ("Kitab al-Tabaqat al-Kabir,
(Book of the Major Classes), Volume 2, by Ibn Sa'd, pages 393)
பாத்திமா அபூ பக்கர் அவர்களிடம் வந்து தன் தந்தை விட்டுச் சென்ற சொத்தில்
தனக்கு இருக்கும் பங்கை கொடுக்குமாறு கோரினார்கள். அல்- அப்பாஸ் கூடஅபூ
பக்கர் அவர்களிடம் வந்து சொத்தில் தனக்கிருக்கும் பங்கை கொடுத்து விடும்
படி கோரினார். அலியும் அவர்களோடு வந்திருந்தார். அப்பொழுது அபூ பக்கர்:
"நாம் பரம்பரை சொத்துக்களை விட்டுச் செல்வதில்லை, நாம் சதகாஹ் என்றுச்
சொல்லக்கூடிய தானதர்மத்தை மட்டுமே விட்டுச்செல்கிறோம்" என்று அல்லாஹ்வின்
தூதர் சொன்னார். யாருக்கு நபியவர்கள் பராமரிப்பு செலவுகளைச்
செய்யச்சொன்னார்களோ, அவர்களுக்குதான் நான் பராமரிப்புகளை ஏற்படுத்துவேன்"
என்று பதில் அளித்தார். இதற்கு அலி கூறினார், "சுலைமான் (சாலமோன்)
தாவூத்தின் சொத்துக்களை பெற்றுக்கொண்டார், மேலும் சகரியா கூறினார், அவன்
என்னுடை வாரிசாகவும், யாக்கோபுடைய பிள்ளைகளின் வாரிசாகவும் (சகரியாவும்
யோவான் ஸ்நானனும்) இருப்பார்" என கூறினார். இதற்கு அபூ பக்கர் அவர்கள்,
"அல்லாஹ்வினால், இது இருப்பதைப் போன்றே இருக்கிறது, நான்
அறிந்திருக்கிறது போலவே நீயும் அறிந்திருக்கிறாய்" என்று அலி அவர்களிடம்
கூறினார். அப்போது அலி அவர்கள், "அல்லாஹ்வின் புத்தகமாகிய இது தான்
பேசுகின்றது" என கூறினார். பிறகு அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் மற்றும்
கலைந்து சென்றுவிட்டார்கள். (பக்கம் 393)
Fatimah came to Abu Bakr and demanded her share in the inheritance.
Al-Abbas came to him and demanded his share in the inheritance. Ali
came with them. Thereupon Abu Bakr said, "The Apostle of Allah said,
"We leave no inheritance, what we leave behind us is sadaqah." I
shall make provisions for those for whom the Prophet had made." On
this Ali said, "Sulayman (Solomon) inherited Dawud (David), and
Zakariya said, 'He may be my heir and the heir of the children of
Yaqab (Zachariah and John the Baptist)'". Abu Bakr said, "This is as
this is. By Allah! You know it as I know." Thereupon Ali said,
"This is the Book of Allah that speaks." Then they became quiet and
retired. (page 393).
இந்த விவரங்கள் நமக்கு மூன்று முக்கியமான விஷயங்களைச் சொல்கிறது.
முதலாவதாக, ஃபாத்திமாவும், அலியும் தங்களுக்கு வரவேண்டிய சொத்துக்களை
கேட்கும் போது, முஹம்மது "தன் சொத்துக்கள், தன் குடும்பத்துக்குச்
சேரக்கூடாது" என்று சொன்னார் என்று அபூ பக்கர் கூறுகின்றார். இதனை
இன்றுள்ள முஸ்லிம்கள் "ஹதீஸ்" என்றுச் சொல்வார்கள். இதுவும்
அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு வகையான வஹீ தான் என்று முஸ்லிம்கள்
நம்புகிறார்கள். தம்பி, நன்றாக கவனி, இது ஒரு ஹதீஸ்.
இரண்டாவதாக, அலி குர்-ஆனிலிருந்து சில நபிகளின் வாழ்க்கை
வரலாறுகளிலிருந்து இரண்டு உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார். அதாவது
தாவூத் என்ற அரசருக்கு அடுத்த வாரிசாக, அவரின் மகன் சுலைமான் வந்தார்.
தன் தந்தையின் சொத்துக்களையும், பதவியையும் சுலைமான் பெற்றார். அதே போல,
ஜகரியா என்ற நபியின் வாரிசாக யஹ்யா தொடர்ந்தார். தம்பி, நம் கிறிஸ்தவ
முறைப்படிச் சொல்லவேண்டுமென்றால், பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு
உதாரணத்தையும், புதிய ஏற்பாட்டிலிருந்து ஒரு உதாரணத்தையும் அலி அபூ
பக்கரிடம் கூறினார்.
இந்த நபிகள் பற்றி குர்-ஆனிலும், முஹம்மது மூலமாகவும் அதிகமாக அலி கேட்டு
இருக்கிறார், இதனை அபூ பக்கரும் அறிவார்.
இதில் ஒரு தர்ம சங்கடம் என்னவென்றால், "அலியின் வார்த்தைகளின் படி,
குர்-ஆனில் இப்படி சொல்லியிருக்கிறது, ஆனால், முஹம்மது வேறு மாதிரியாக
குர்-ஆனுக்கு எதிராகச் சொல்லியுள்ளார். "நபிகளின் சொத்துக்களை தங்கள்
வாரிசுகள் பெற்றுக்கொள்ளக்கூடாது" என்று முஹம்மது சொன்னது தவறானது,
அதாவது முஹம்மதுவின் ஹதீஸ் அல்லாஹ்வின் குர்-ஆனோடு மோதுகின்றது. அலியாகிய
நான் குர்-ஆனிலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றேன், அபூ
பக்கராகிய நீங்களோ ஹதீஸைச் சொல்கிறீர்கள். எதற்கு முன்னுரைமைத்
தரவேண்டும்? குர்-ஆனுக்கா அல்லது ஹதீஸுக்கா?
இதன் சுருக்கம் என்னவென்றால், குர்-ஆன் பற்றிய அறிவு முஹம்மதுவிற்கு
குறைவு, குர்-ஆனில் சொல்லப்பட்டதை அறிந்துக்கொள்ளாமல், நடந்துவிட்ட இதர
நபிமார்களின் சரித்திரத்தை அறிந்துக் கொள்ளாமல், என் மாமனார் முஹம்மது
சொன்னது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எனவே, எங்கள் சொத்தை திருப்பித்
தாருங்கள் என்று அலி கேட்கிறார்.
அலி கடைசியாகச் சொன்ன வாசகத்தை, தம்பி இன்னொரு முறை படி, நான் சொல்வது
படித்தான் "குர்-ஆன்" சொல்கிறது என்று அடித்துச் சொல்கிறார் அலி. அலி
குர்-ஆன் பற்றி சொன்னவுடன், மேற்கொண்டு அபூ பக்கர் ஒன்றுமே பேசவில்லை.
அப்போது அலி அவர்கள், "அல்லாஹ்வின் புத்தகமாகிய இது தான் பேசுகின்றது" என
கூறினார். பிறகு அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் மற்றும் கலைந்து
சென்றுவிட்டார்கள். (பக்கம் 393)
Thereupon Ali said, "This is the Book of Allah that speaks." Then
they became quiet and retired. (page 393).
மூன்றாவதாக, இஸ்லாமிய கோட்பாடுகள் மக்களை இறைவனுக்கு ஏற்ற மக்களாக
மாற்றியிருந்திருந்தால், அலியும் ஃபாத்திமாவும் ஆறு மாதங்கள் கசப்பை
தங்கள் உள்ளத்தில் வைத்திருக்கமாட்டார்கள்.
தம்பி, மேற்கண்ட இஸ்லாமிய விவரங்களை பார்க்கும்போது, அனேக கேள்விகளை
உன்னிடம் கேட்கத்தோன்றுகிறது.
1) அலிக்கு பதவி ஆசை இதயத்தில் ஆழமாக பதிந்து இருந்திருக்கின்றது.
2) முஹம்மதுவிற்கு அடுத்து கலிஃபா பதவி தனக்கு கிடைக்கவேண்டும் என்று
விரும்பியிருக்கிறார்.
3) பதவி தான் கிடைக்கவில்லை, சொத்துக்களாவது கிடைக்கும் என்று
விரும்பினார், ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.
4) ஒரு ஆன்மீகத் தலைவரின் மருமகன், சொர்க்கத்திற்கு கட்டாயமாகச்
செல்பவர்கள் 10 பேர் என்று முஹம்மது சொன்னதாக சொல்லப்படுகின்றது, அதில்
அலியும் ஒரு நபர்.
5) இப்படி தனக்கு அல்லாஹ் சொர்க்கம் கொடுப்பதை முஹம்மது மூலமாக ஊர்ஜிதம்
செய்யப்பட்டு இருக்கும் போது, உலக செல்வத்துக்காக, முஹம்மதுவின்
ஸ்தானத்தில் இருக்கும் அபூ பக்கரிடம் கோபம் கொண்டு இருப்பது, அவருக்குதன்
ஆதரவை தராமல் ஆறு மாதங்கள் கடத்துவது என்பது அலி போன்ற நிலையில்
இருக்கும் நபருக்கு தகாது.
6) பணமா குணமா என்று கேட்டால், பணம் தான் என்று அலி முடிவெடுத்தார்.
முஹம்மதுவின் மகளும் தன் கணவரின் வழியிலேயேச் சென்றார்கள்.
7) இஸ்லாம் சந்தித்த இன்னொரு தோல்வி, அலி மூலமாக வந்தது என்று நான் கூறுவேன்.
8) ஃபாத்திமா தவறு செய்யும் போது, அவர்களுக்கு அறிவுரைச் சொல்லி, "நாம்
கலிஃபா அபூ பக்கரிடம் இப்படி நடந்துக்கொள்ளக்கூடாது, அவருக்கு உதவி
செய்யவேண்டும், அவரோடு நட்புறவோடு இருக்கவேண்டும், இறைத்தூதர் நமக்கு
எப்படியோ, அப்படியே இவரும் இருக்கிறார்" என்றுச் சொல்லி, ஃபாத்திமாவை
சமாதானப்படுத்தியிருக்கவேண்டும். உன் அப்பா சம்பாதித்த பணம் நமக்கு
முக்கியமல்ல, அவர் மூலமாக வந்த இஸ்லாம் தான் முக்கியம் என்றுச்
சொல்லியிருக்கவேண்டும்.
9) அல்லது அலியை ஃபாத்திமா சமாதானப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால்,
இவ்விருவரையும் சரியான வழிக்கு கொண்டுவர இஸ்லாம் தவறிவிட்டது. 23
ஆண்டுகள் முஹம்மது என்னத்தைக் கற்றுக்கொடுத்தார் இவர்களுக்கு? தன் சொந்த
மகள் இப்படி அபூ பக்கரிடம் நடந்துக் கொண்டதை முஹம்மது அறிந்திருந்தால்,
என்ன நடந்திருக்கும்?
10) கபட்டுத் தனமாக வாழ்வதை இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. மாய்மாலமான
வாழ்க்கையை வாழ இஸ்லாம் இவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. முழூ
இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் அன்பு கூறவேண்டும் என்ற
கோட்பாடுகள் இவர்களுக்கு அந்நிய கிரகத்தின் கோட்பாடுகளாக தென்பட்டுள்ளது.
தம்பி, அலியிடமோ, அல்லது ஃபாத்திமா அவர்களிடமோ, இறைவன் எதிர்ப்பர்க்கும்
100% நேர்மை, பரிசுத்தம் போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை. குறைந்த
பட்சம் நல்ல குணத்தைத் தான் மக்கள் எதிர்ப்பார்ப்பார்கள்,
ஏனென்றால்,அவர்கள் ஆரம்பகால முஸ்லிம்கள், முஹம்மதுவின் குடும்பத்தார்.
அப்பா செத்த மறுநாளே மகள் சொத்துக்களுக்காக சண்டைபோடுவார்கள் என்றால்,
அவர்களின் குணம் எப்படிப்பட்டது என்றும், எதன் மீது அவர்களின் மனம்
இத்தனை ஆண்டுகள் இருந்தது என்று புரிகின்றதல்லவா?
தம்பி, உனக்கு புரியும் மொழியில் சொல்லவேண்டுமென்றால், காஃபிர்களிலும்
இப்படிப்பட்ட செயல்களைக் காணமுடியாது, ஒரு வேளை சிலரிடம் கண்டாலும்,
இஸ்லாமிய இறைத்தூதரின் மகள் மற்றும் மருமகனின் வாழ்க்கையில்
காணப்படக்கூடாது. அந்தோ பரிதாபம்! இஸ்லாம் அடுத்தடுத்த தோல்வியை
சந்தித்துக்கொண்டே இருக்கிறது "மனிதர்களின் மனங்களில்".
தம்பி இன்னும் அலி பற்றிய இதர விவரங்களை அடுத்தடுத்த கடிதங்களில் உனக்கு
எழுதி அனுப்புகிறேன்.
இஸ்லாம் தன் ஆரம்ப கால முக்கியமான நபர்களையும் திருத்த திராணியில்லாமல்
இருந்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
இதுவரை, ஃபாத்திமா, அலியை பற்றி சுருக்கமாக பார்த்துள்ளோம், இன்னும்
ஆயிஷா, அபூ பக்கர், உமர் மற்றும் உஸ்மான் பற்றியும், நாம் அலசுவோம்.
தம்பி, உன் கேள்விகளை கேள், திருப்தியாக கேள். நீயும் இஸ்லாமிய ஆரம்பகால
நிகழ்ச்சிகளை நன்றாக ஆய்வு செய். உன்னிடம் நேர்மையிருந்தால்,
கிறிஸ்தவத்தின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளை இஸ்லாமிய ஆரம்ப கால
நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டுப்பார்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு,
உன் அண்ணன்
உமர்
தேதி: 23 ஜூன் 2015.
________________________________
உமரின் ரமளான் கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day6.html

2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?
(2015 ரமளான் கடிதம் 4ஐ படிக்க இங்கு சொடுக்கவும்)
அன்புள்ள தம்பிக்கு,
உன் மீது தேவனின் கிருபையும் சாந்தியும் உண்டாவதாக.
என் கடிதங்களை நீ தொடர்ந்து படித்துக்கொண்டும், எனக்கு பதில்
எழுதிக்கொண்டும் இருக்கிறதை கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நேற்று என் கடிதத்தை படித்தவுடன், என்னை தொலைபேசியில் அழைத்து, சில
விவரங்களைச் சொன்னாய். அவைகளுக்கான பதிலை எழுதி அனுப்புங்கள் என்று
கேட்டுக்கொண்டாய். எனவே, நீ சொன்ன விவரங்களில் இருந்த ஒரு விஷயத்தைப்
பற்றி இந்த கடிதத்தில் எழுதுகிறேன். அடுத்த கடித்தத்தில் இரண்டாவது
விஷயத்தைப் பற்றி எழுதி அனுப்புவேன்.
நீ கேட்ட முதல் கேள்வி:
1) ஃபாத்திமா தனக்கு வரவேண்டிய சொத்துக்களை அபூ பக்கரிடம் கேட்டதில் எந்த
ஒரு தவறும் இல்லை. தந்தையின் ஆஸ்தியில் மகளுக்கு பங்கு உண்டு, இதனை
குர்-ஆனும் அனுமதிக்கிறது. அபூ பக்கர் ஆஸ்தியை பங்கிட்டு கொடுக்க
மறுத்தது சரியானது அல்ல. குர்-ஆன் அனுமதிப்பதை அபூ பக்கர் அவர்கள்
மறுப்பது இஸ்லாமின் படி சரியானதாக இல்லையே.
தம்பி, இப்போது உன் கேள்விக்கு பதிலைத் தருகிறேன்.
இஸ்லாமிய நாடுகளில் தவறுதலாகவும் தவறு செய்துவிடாதே!
தம்பி, நீ என்னிடம் கேட்ட மேற்கண்ட கேள்வியை, முஸ்லிம்களிடம்
கேட்டுவிடாதே. ஏனென்றால், "அபூ பக்கர் ஆஸ்தியை பங்கிட்டு கொடுக்க
மறுத்தது சரியானது அல்ல" என்ற வாக்கியத்தை நீ இதர முஸ்லிம்களிடம்
சொல்லிவிடாதே. ஏனென்றால், சுன்னி முஸ்லிம்கள் அபூ பக்கர் செய்தது
சரியானது என்று நம்புகிறார்கள். ஷியா முஸ்லிம்கள் அபூ பக்கர் செய்தது
தவறானது, ஏனென்றால், ஃபாத்திமாவை அவர் புன்படுத்திவிட்டார், இது அநியாயம்
என்று சொல்கிறார்கள்.
நான் அறியாமையில் தானே கேட்டேன், என் கருத்தைத் தானே சொன்னேன் என்று நீ
சொன்னாலும் முஸ்லிம்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். முஹம்மது பற்றியும்,
குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் தோழர்கள் பற்றியும் அறியாமையிலும் சில
விஷயங்களைச் சொல்லக்கூடாது. முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் நீ
வார்த்தைகளை சிந்தித்து பேசவேண்டும். அறியாமையில் சிறிய தவறு செய்தாலும்,
செய்தவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி அவருக்கு தண்டனை உண்டு. எனவே, நீ
எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். உன் கேள்விக்கு
கீழ்கண்ட தலைப்புகளில் பதில் தருகிறேன்.
1) முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு மட்டுமே அபூ பக்கர் கீழ்படிந்தார்
2) அபூ பக்கர் ஃபாத்திமாவை ஏமாற்றவில்லை
3) அபூ பக்கரையும், முஹம்மதுவையும் அவமதித்த ஃபாத்திமா
________________________________
அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

தம்பி, நான் என்னுடைய கடிதங்களில் வெறும் சுன்னி முஸ்லிம்களின் ஸஹீஹ்
ஹதீஸ்களையும், இதர நூல்களின் ஆதாரங்களையும் தருகிறேன். ஷியா
முஸ்லிம்களின் ஆதாரங்களை நான் சேர்க்கவில்லை. அனேக விஷயங்களில்
ஷியாக்களின் ஆதாரங்களும், சுன்னி முஸ்லிம்களின் ஆதாரங்களும் நேர் எதிராக
இருக்கும். பெரும்பான்மையாக இருப்பவர்கள் சுன்னி முஸ்லிம்கள் என்பதால்,
அவர்களின் நூல்களாகிய புகாரி, முஸ்லிம் மற்றும் இதர நூல்களிலிருந்து
ஆதரங்களை மட்டுமே தருகிறேன். ஷியாக்களின் ஆதாரங்களை எடுத்து நாம் ஆய்வு
செய்தால், நாம் தலைப்பை விட்டு வெளியே செல்லவேண்டி வரும், இதனை இஸ்லாமிய
அறிஞர்கள் செய்துக்கொள்ளட்டும்.
தம்பி, நான் முந்தைய கடிதத்தில் மேற்கோள் காட்டிய புகாரி ஹதீஸை நீ
முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிகின்றது. ஒரு முக்கியமான விஷயத்தை நீ
கவனிக்கவில்லை.
அபூ பக்கர், ஃபாத்திமாவிற்கு முஹம்மதுவின் சொத்துக்களை பகிர்ந்து
கொடுக்காமல் இருந்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அந்த ஹதீஸை
மறுபடியும் ஒரு முறை படித்துப்பார். முஹம்மது தம்முடைய சொத்துக்களை
எப்படி பயன்படுத்தவேண்டும் என்று சொல்லியுள்ளார், அந்த பகுதியை கவனி.
புகாரி ஹதீஸ் எணள் 4240. & 4241.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) (நபியவர்களின் மறைவுக்குப்
பிறகு, கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, இறைத்தூதர்(ஸல்)
அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக்
சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில்
மீதியிருந்ததிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள்.
அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ('நபிமார்களான) எங்கள்
சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச்
செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இச்செல்வத்திலிருந்தே
முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்' என்று
சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு
மாற்றத்தையும் செய்ய மாட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் எந்த
நிலையில் அச்சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும்.
அதில் (அச்சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி(ஸல்) அவர்கள்
செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்" என்று (ஃபாத்திமா அவர்களுக்கு)
பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும்
ஒப்படைக்க அபூ பக்ர்(ரலி) மறுத்துவிட்டார்கள். இதனால் அபூ பக்ர்(ரலி)
மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா(ரலி)
பேசவில்லை. நபி(ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாதகாலம் ஃபாத்திமா(ரலி)
உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா(ரலி) இறந்தபோது, அவர்களின் கணவர்
அலீ(ரலி), (இறப்படைவதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக்
கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது
அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை.
அலீ(ரலி) அவர்களே ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுகை
நடத்தினார்கள். . . . . . .
புகாரி ஹதீஸ் மட்டுமல்ல, "கிதாப் அல்-தபாகத் அல்-கதீர்" என்ற
புத்தகத்திலும் இந்த விவரம் உள்ளது, அதனையும் மேலதிக விவரங்களுக்காக
உனக்கு தருகிறேன். ("Kitab al-Tabaqat al-Kabir, (Book of the Major
Classes), Volume 2, by Ibn Sa'd, pages 391 – 392).
அல்லாஹ்வின் தூதருடைய சொத்தின் கணக்கும், அவர் வைத்துவிட்டுப் போன ஆஸ்தியும்.
அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்: "தினார்கள் மற்றும் திர்ஹாம்ஸ்கள் (பணம்)
என்னுடைய வாரிசுகளுக்கிடையில் பங்கிடப்படக் கூடாது, நான் எதை
வைத்துவிட்டுப் போகிறேனோ அது என் மனைவிமார்கள் மற்றும் வேலைக்காரர்களுடைய
பராமரிப்புக்கு செலவிடப்பட்ட பிறகு தானதர்ம செயல்களுக்கு போகவேண்டும்.
(பக்கம் 391,392)
ACCOUNT OF THE LEGACY (INHERITANCE) OF THE APOSTLE OF ALLAH, AND WHAT
PROPERTY HE LEFT BEHIND
The apostle of Allah said, "The dinars and dirhams (money) should not
be distributed among my heirs, what I leave should go into charity
after the maintenance expenses of my wives and the provisions of my
servant. (pages 391, 392).
அபூ பக்கர் முஹம்மதுவின் நெருங்கிய தோழர் ஆவார் மற்றும் அவர்
முஹம்மதுவிற்கு தம் மகளை (ஆயிஷாவை) மனைவியாக கொடுத்துள்ளார். மேற்கண்ட
ஹதீஸிலும், கிதாப் அல்தபாகத் அல்கதீர் புத்தகத்தின் மேற்கோளிலும், நாம்
காண்பது என்னவென்றால், "முஹம்மது தம்முடைய சொத்துக்களை எப்படி செலவு
செய்யவேண்டும் என்றுச் சொல்லியுள்ளார்". அதனை மேற்கோள் காட்டி தான் அபூ
பக்கர் ஃபாத்திமாவிற்கும், அலிக்கும், அப்பாஸ் அவர்களுக்கும்
முஹம்மதுவின் சொத்துக்களை பிரித்துதர மறுத்துவிட்டார்.
2) அபூ பக்கர் ஃபாத்திமாவை ஏமாற்றவில்லை
முஹம்மதுவின் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு கட்டளைக்கும் தவறாமல்
கீழ்படிந்த ஃபாத்திமாவும், அலியும், அப்பாஸும், ஏன் இந்த கட்டளைக்கு
மட்டும் கீழ்படியவில்லை? அபூ பக்கர் தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துச்
சொல்லிவிட்ட பிறகும், ஏன் அவரை தொடர்ந்து ஃபாத்திமா கேட்டுக்கொண்டே
இருந்தார்கள்?
இன்னொரு விவரத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன், ஷியாக்களின்
கருத்துப்படி, ஃபாத்திமா கேட்ட அந்த ஆஸ்தியை, முஹம்மது தாம் மரிப்பதற்கு
முன்பாகவே ஃபாத்திமாவிற்கு பரிசாக கொடுத்துவிட்டாராம் (வாக்கு
கொடுத்துவிட்டாராம்). அந்த ஆஸ்தியைத் தான் இப்போது ஃபாத்திமா கேட்டார்கள்
என்று ஷியாக்கள் சொல்லுவார்கள். ஷியாக்கள் சொல்லும் இந்த ஒரு விஷயத்தை
நாம் கருத்தில் எடுத்துக்கொண்டால், அவர்கள் சொல்லும் அனைத்து
விவரங்களையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே, வெறும் சுன்னி
முஸ்லிம்களின் ஆதாரங்களை மட்டுமே நான் இந்த கடிதத்தில் எழுதுகிறேன்.

ஒரு பேச்சுக்காக ஒருவேளை ஷியாக்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், ஃபாத்திமா
செய்தது சரியானது அல்ல. தனக்கு சொத்து கிடைக்கவில்லை என்பதற்காக
கலிஃபாவிடம் பேசாமல் இருப்பது சரியான செயலாகுமா? தன் மரித்த சடலத்தையும்
அபூ பக்கர் (மற்றும் உமர்) பார்க்கக்கூடாது என்றுச் சொல்வது ஒரு ஆன்மீக
வாதிக்கு அதாவது ஒரு இஸ்லாமிய பக்தியுள்ள பெண்ணுக்கு உகந்த செயலாகாது.
இதுமட்டுமல்ல, மகளுக்கு பரிசாக முஹம்மது அந்த ஆஸ்தியை கொடுத்து
இருந்திருந்தால், அதனை ஏன் தன் மரணத்துக்கு முன்பாகவே முழுவதுமாக
ஃபாத்திமாவிற்கு முஹம்மது கொடுக்கவில்லை? என்ற கேள்வி எழுகின்றது.
மேலும், மகளிடம் ஒரு வகையாகவும், அபூ பக்கரிடம் வேறு விதமாகவும் முஹம்மது
சொல்லியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் நாம் முஹம்மது மீது
வந்துவிடுகின்றது.ஃபாத்திமாவின் செயல் முஹம்மதுவை அவமதிப்பதாக உள்ளது.
கலிஃபாவிற்கு கீழ்படியாதவர், அவருடைய குருவாகிய முஹம்மதுவிற்கு
கீழ்படியாதவராவார்.
எனவே, அபூ பக்கர் அவர்கள் ஃபாத்திமாவை ஏமாற்றவில்லை, அவர் முஹம்மதுவின்
வார்த்தைகளுக்கு கீழ்படிந்தார் அவ்வளவு தான்.
முடிவுரை:
இஸ்லாம் மனிதர்களின் பண ஆசையை கதர்த்துவிடுமானால், ஏன் ஃபாத்திமா இப்படி
நடந்துக்கொண்டார்? குர்-ஆனினாலும், அல்லாஹ்வினாலும் மற்றமுடியாத
குணமுடையவராக ஃபாத்திமா இருந்திருக்கிறார் என்று நினைக்கத்
தோன்றுகிறதல்லவா?
எனவே, இஸ்லாம் மக்களை வெளிப்புறமாக மதசடங்காச்சாரங்களை செய்ய ஏவுகின்றது.
இத்தனை முறை தொழவேண்டும், இப்படி தொழவேண்டும், இத்தனை முறை சில
ஸூராக்களை, சில துவாக்களை உச்சரிக்கவேண்டும். இப்படி செய்தால், அல்லாஹ்வை
திருப்தி படுத்திவிடலாம் என்று இஸ்லாமிய கோட்பாடுகள் சொல்வதினால்,
மக்களின் மனது மாற்றமடையால் அப்படியே இருந்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும்
போது, அதாவது அல்லாஹ்விடமிருந்து வார்த்தைகளை பெற்றுத் தருகின்ற முஹம்மது
மரித்துவிட்ட பிறகு, எல்லாரும் சுதந்திரமாக தங்கள் (தீய) குணத்தை காட்ட
ஆரம்பித்துவிட்டார்கள். முஹம்மது உயிரோடு இருந்திருந்தால், ஃபாத்திமா
இப்படி கேட்டு இருப்பார்களா?
தம்பி, உன் வார்த்தைகளைக் கேட்டால், நீ ஷியாக்களுக்கு சாதகமாக பேசுவதாக
தெரிகின்றது. நீ "இல்லை" என்று மறுத்தால், அதனை நீ அறியாமையில் கேட்டாய்
என்று நான் நம்புவேன், ஆனால், சுன்னி முஸ்லிம்கள் நம்பமாட்டார்கள்,
எச்சரிக்கையாக இரு என்று கேட்டுக்கொள்கிறேன்.
அலிகும், அபூ பக்கருக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி நீ கேட்ட
கேள்விக்கு அடுத்த கடிதத்தில் பதில் அளிக்கிறேன்.
இப்படிக்கு
உன் அண்ணன்
உமர்
தேதி: 21 ஜூன் 2015
________________________________
உமரின் ரமளான் கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day5.html

2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

(2015 ரமளான் கடிதம் 3ஐ படிக்க இங்கு சொடுக்கவும்)
அன்புள்ள தம்பிக்கு,
உன் அண்ணன் உமரின் வாழ்த்துதல்கள்.
உன் முந்தையை கடிதத்தில் ஒரு சவாலை என் முன் வைத்தாய். உண்மை இஸ்லாமை
காணவேண்டுமென்றால், தற்கால முஸ்லிம்களிடமல்ல, ஆரம்ப கால முஸ்லிம்களிடம்
தான் காணமுடியும் என்று சவால் விட்டாய். உன் சவாலுக்கு பதில் அளிக்கும்
படி, நான் இஸ்லாமின் மீது மூன்று விமர்சனங்களை முன் வைக்கிறேன்.
1. இன்று நாம் காண்கின்ற வன்முறைகளுக்கெல்லாம் காரணம் இஸ்லாமிய இறையியல்
கோட்பாடுகள் தான்.
2. இஸ்லாம் மக்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதில்லை..
3. இஸ்லாமின் ஆரம்பகால முஸ்லிம்களும் மனமாற்றமடையாமலேயே இருந்தனர்.
மேற்கண்ட தலைப்புகளுக்குள்ளேயே என்னுடைய அடுத்தடுத்த கடிதங்களும்
எழுதப்படும். உனக்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு ஆகும், அதாவது
இஸ்லாமின் மீதுள்ள குற்றச்சாட்டுகளை துடைத்தெரிய மேற்கண்ட தலைப்புக்களை
விமர்சித்து, நீ இஸ்லாமுக்கு ஆதரவாக எழுதலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நான் முஹம்மதுவைப் பற்றி அனேக விமர்சனங்களை
உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். இந்த ஆண்டு, நீ கேட்டுக்கொண்டதற்கு
இணங்க, அவருடைய தோழர்கள் மற்றும் குடும்ப நபர்கள் பற்றிய விவரங்களை
உனக்கு முன்பாக வைக்கப்போகிறேன். உண்மையாகவே, நாம் இஸ்லாமை அதன் நிஜ
வடியில் காணவேண்டுமென்றால் அதனை முஹம்மதுவின் வாழ்விலும், அடுத்தபடியாக
அவரது நெருங்கிய நண்பர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் வாழ்விலும்
காணலாம். எனவே, இந்த கடிதத்தை முஹம்மதுவின் அன்பான மகள் ஃபாத்திமாவை
எப்படி இஸ்லாம் மாற்றியிருந்தது என்பதைப் பற்றி பார்க்கப்போகிறோம்.
நாம் ஃபாத்திமாவைப் பற்றி பார்ப்பதற்கு முன்பாக, முஹம்மது சொன்ன ஒரு
முக்கியமான விஷயத்தைப் பற்றிய ஹதீஸை படிப்போமா! முஸ்லிம்கள் சஹீஹ் என்று
நம்புகின்ற புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து ஒரு ஹதீஸ்:
ஸஹி புகாரி ஹதீஸ் - பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1344
உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
. . . நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால்
நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை.
ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே
பயப்படுகிறேன்!" என்று கூறினார்கள்.
ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது
ஃபாத்திமா முஹம்மதுவிற்கு அன்பான மகள். உலகத்துக்கே வழிகாட்டியாக வந்த
முஹம்மதுவின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக பிறப்பது என்பது சும்மாவா?
இது மிகப்பெரிய பாக்கியமல்லவா? ஃபாத்திமாவின் மேன்மை கொஞ்சம் நஞ்சமல்ல.
முஸ்லிம்கள் ஃபாத்திமா அவர்களைப் பற்றி ஆஹா! ஓஹோ! என்று பேசுவார்கள்.
அவர்களின் குணநலன்கள் பற்றி பெருமையாக பேசிக்கொள்வார்கள். நாம் இந்த
கடிதத்தில், முஹம்மது மரித்த பிறகு, ஃபாத்திமா எப்படி நடந்துக்கொண்டார்
என்பதை புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்தும், இதர இஸ்லாமிய ஆரம்ப
கால சரித்திர நூல்களிலிருந்தும் காண்போம். இஸ்லாம் ஃபாத்திமாவை
எப்படிப்பட்ட நபராக மாற்றியிருந்தது என்பதை பார்க்க தம்பி, உன்னை
அன்புடன் அழைக்கிறேன். இதனை கீழ்கண்ட தலைப்புகளில் காண்போம்.
1) முஹம்மதுவின் மரணம் மற்றும் அபூ பக்கரின் தலைமைத்துவம்
2) தந்தை மரித்த அடுத்த நாள் – அபூபக்கரிடம் ஃபாத்திமா வைத்த வேண்டுகோள்
3) சாகும் வரை உன்னோடு பேசமாட்டேன், நான் செத்தாலும் என் சடலத்தைக் காண
வரக்கூடாது. இஸ்லாம் சந்தித்த முதல் தோல்வி – ஃபாத்திமா
4) ஃபாத்திமாவின் நற்பண்புகள் எங்கே போனது?
5) இஸ்லாம் மனிதர்களை மனதளவில் மாற்றுகிறதா?
6) ஃபாத்திமாவும் இயேசுவின் போதனைகளும்
7) முடிவுரை
________________________________
1) முஹம்மதுவின் மரணம் மற்றும் அபூ பக்கரின் தலைமைத்துவம்
முஹம்மது திடீரென்று மரித்துவிடுகின்றார். தனக்கு பிறகு இஸ்லாமிய அரசை
தலைமையேற்று நடத்துபவர் யார் என்று அவர் சொல்லாமலேயே மரித்துவிட்டார்.
அவருக்கு தோழர்கள் அனேகர் இருந்தனர், அவர்களில் யாரை கலிஃபாவாக
(தலைவராக) நியமிப்பது? முஹம்மதுவின் தோழர்களுக்கிடையே அனேக
வாக்குவாதங்கள் நடந்தன. உமர் தைரியம் கொண்டு, தன்னுடைய ஆதரவு அபூ
பக்கருக்கு என்றுச் சொல்லி, அபூ பக்கர் தான் அடுத்த தலைவர் என்று
பிரகடனம் செய்தார். இதனை சிலர் விரும்பவில்லை, இருந்த போதிலும், கடைசியாக
எல்லாரும் ஒப்புக்கொண்டனர். சிலர் விரும்பி ஆதரவு அளித்தனர், விரும்பாமல்
சிலர் ஆதரவு அளித்தனர். இந்த நிகழ்ச்சி பற்றிய ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய
ஆதாரங்களை தேவைப்படும் போது தருகிறேன். இக்கட்டுரைக்கு இதுவே போதும்.

முஹம்மது மரித்தார், அவரை அடக்கம் செய்தார்கள், அடுத்த தலைவராக அபூ
பக்கரையும் நியமித்துவிட்டார்கள். முஹம்மதுவின் மரணத்திற்கு அடுத்த நாள்
முஹம்மதுவின் மகள் பாத்திமாவும், அவரது கணவர் அலியும் மற்றும் இப்னு
அப்பாஸ் ஆகியோர் மூன்று பேரும் அபூ பக்கரை சந்தித்து, முஹம்மதுவுடைய
ஆஸ்தியிலிருந்து தங்களுக்கு வர வேண்டிய பங்குகளை கொடுத்து விடுமாறு
கோரினர்.
இந்த கடிதத்தில் ஃபாத்திமா பற்றிய விவரங்களை மட்டுமே நாம் காண்போம்.
புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து ஆதாரங்கள்:
4035. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஃபாத்திமா(ரலி) அவர்களும், அப்பாஸ்(ரலி) அவர்களும் 'ஃபதக்' கிலிருந்த
நபி(ஸல்) அவர்களின் நிலத்தையும் கைபரிலிருந்த நபி(ஸல்) அவர்களின்
(குமுஸ்) பங்கையும்தங்களின் வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூ
பக்ர்(ரலி) அவர்களிடம் சென்றனர். Volume :4 Book :64
4240. & 4241. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சி பற்றி ஸஹீஹ் முஸ்லிமிலும், கிதாப் அல் தபாகத் அல் கதீர்
நூலிலும் இதர ஹதீஸ் தொகுப்புகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகளை
அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: இஸ்லாமின் அரச குடும்பம் – முஹம்மதுவின்
ஆஸ்தி

மேலே கண்ட விவரங்களின் படி, ஃபாத்திமா அவர்கள் அபூ பக்கரிடம் தனக்கு
வரவேண்டிய ஆஸ்தியை தரும் படி கேட்டார்கள், முஹம்மதுவின் விருப்பத்தின்
படி, அபூ பக்கர் மறுத்துவிட்டார். இதனால், ஃபாத்திமா அபூ பக்கர் மீது
கோபம் கொண்டு தாம் மரிக்கும் வரையில் பேசவில்லை. தான் மரித்தால் கூட
இரகசியமாக அடக்கம் செய்யும் படி அலியிடம் கேட்டுக்கொண்டார். கணவரும் அபூ
பக்கருக்கு தெரிவிக்காமல், அடக்கமும் செய்துவிட்டார்.
உலக மகா தீர்த்தகரிசி முஹம்மதுவின் மகள் ஃபாத்திமாவின் செயலைக் கண்டாயா
தம்பி. உலக பொருட்களுக்காக ஃபாத்திமாவின் செயல் ஒரு முஸ்லிம்
செய்யக்கூடிய செயலா? ஃபாத்திமாவை நாம் ஒரு எடுத்துக்காட்டாக, நற்குண
ஸ்திரியாக கருதமுடியுமா? இஸ்லாமிய இறையியல் இவரை ஏன் மாற்றக்கூடாமல்
தோற்றுவிட்டது.
மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருத்தல் இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டதன்று.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல்
இருக்கக்கூடாது. இது இஸ்லாமில் அனுமதிக்கப்படாது. புகாரி மற்றும்
முஸ்லிம் ஹதீஸ்களில் இதைப் பற்றி முஹம்மது சொன்ன விவரங்களைக் காண்போம்.
அப்பாவின் வார்த்தைகளை தப்பாமல் தவறிவிட்ட மகள் ஃபாத்திமா ஆவார்கள்.
புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்து ஆதாரங்கள்:
புகாரி 6065. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக்
கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்)
சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று
நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. என அனஸ் இப்னு
மாலிக்(ரலி) அறிவித்தார். Volume :6 Book :78
புகாரி 6076. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்)
சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு)
மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. என
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். Volume :6 Book :78
புகாரி 6077. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல்
பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து
ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு
செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில்
சிறந்தவராவார். என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். Volume :6
Book :78
முஸ்லிம் 5001. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக்

மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான)
செயலன்று.இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் 5003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று
நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள்
இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும்
முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில்
சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ
அவர்தான்.
முஸ்லிம் 5004. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளர் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல்
இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். Book :45

ஃபாத்திமா அவர்கள் அனேக நற்பண்புகள் கொண்டு திகழ்ந்தார்கள் என்று நீ
என்னிடம் சொல்லக்கூடும். ஆம், அவருக்கு அனேக நற்பண்புகள் இருந்தன என்பது
உண்மை தான், ஆனால், எல்லா நற்பண்புகளுக்கும் சாவு மணி அடித்துள்ளது,
அவரிடம் வெளிப்பட்ட பண ஆசை என்ற அந்த ஒரே ஒரு தீய குணம்.
அ) இயேசுவின் தாய் மரியாளோடு ஒப்பிடப்பட்ட ஃபாத்திமா
இயேசுவின் தாய் மரியாள் அவர்கள் சொன்னதுபோலவே, ஃபாத்திமாவும் "அல்லாஹ்,
தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்"என்று கூறினார்களாம், மேலும்
தனக்கு பசியாக இருந்தாலும், கிடைத்த உணவை முஹம்மதுவிற்கு
கொடுத்தார்களாம். இந்த நற்குணத்தை முஹம்மது மெச்சிக்கொண்டார் என்று இந்த
தளங்களில் எழுதப்பட்டுள்ளது:
http://sahaabaakkal.blogspot.in/2011/10/blog-post_21.html
&http://mfathima.blogspot.in/2013_03_01_archive.html .
இந்த நற்குணத்தினால் என்ன பயனுண்டு? தன் தந்தை பசியாக இருந்ததால்,
ஃபாத்திமா தன் பசியையும், பார்க்காமல் கொடுத்தார்கள். இதில் என்ன
ஆச்சரியம் இருக்கிறது. மேலும், முஹம்மது ஒரு நபியாக இருக்கிறார் என்று
ஃபாத்திமா நம்பினதால், அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். இதனை ஒரு
நற்பன்பாக நாம் கருதினாலும், அதிக உலக பொருட்கள் தனக்குகிடைக்காமல் போனதே
என்ற கோபத்தால், கலிஃபாவை கனவீனப்படுத்தியது எந்த விதத்தில் நியாயம்?
ஆ) இஸ்லாமிய சமுதாய பெண்களுக்கு தலைவியாக திகழுவார், முஹம்மதுவிற்கு
பிறகு முதலாவது மரிப்பவர் என்று முன்னறிவிக்கப்பட்ட ஃபாத்திமா
ஸஹீஹ் முஸ்லிம் எண் 4844, மற்றும் 4845ன் படி, ஃபாத்திமா முஸ்லிம் சமுதாய
பெண்களுக்கு தலைவியாக திகழுவார், மற்றும் முஹம்மதுவிற்கு பிறகு முதலாவது
மரிப்பவர் ஃபாத்திமா ஆவார்.
ஆனால், என் அருமை தம்பியே, முஸ்லிம் சமுதாய தலைவியா இப்படி உலக
பொருட்களுக்காக கீழ்தரமாக நடந்துக்கொள்வார்? கலிஃபாவை புறக்கணிப்பார்,
அவரோடு பேசமாட்டார்? மூன்று நாட்கள் அல்ல, ஆறு மாதங்கள் கசப்பை மனதில்
வைத்திருந்து மரித்தார்.
இதிலிருந்து அறிவது என்னவென்றால், ஃபாத்திமா எதிர் காலத்தில் என்ன
செய்யப்போகிறார் என்று முஹம்மதுவிற்கு தெரியவில்லை (அல்லது
அல்லாஹ்விற்கும் தெரியவில்லை). தலைவியை மாற்ற இஸ்லாமினால் முடியவில்லையே,
தொண்டர்களை எப்படி இஸ்லாம் மாற்றப்போகிறது?
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முஹம்மதுவிற்கு பிறகு
தாம் மரிக்கப்போகிறோம் என்பதை அறிந்திருந்தும், உலக பொருட்கள் மீது
இவ்வளவு ஆசை கொண்டு ஒரு ஸ்திரி, அதுவும் ஆன்மீக ஸ்திரி செயல்படமுடியுமா?
சிந்திக்கவேண்டும்.
ஃபாத்திமா அவர்கள் மரிப்பதற்கு முன்னால், தம்முடைய அனைத்து
நற்செயல்களையும் அழித்துவிட்டார். ஃபாத்திமா அவர்கள் ஏழ்மையில்
இருந்தார்கள், இதனால் பொருட்களை அபூ பக்கரிடம் கேட்டார்கள் என்று
சொல்லமுடியாது. ஆரம்ப காலத்தில் எல்லாரும் ஏழ்மையில் இருந்தாலும்,
முஹம்மதுவின் கடைசி காலத்தில் (முக்கியமாக ஃபாத்திமா அவர்கள்) நல்ல செல்வ
செழிப்புடன் வாழ்ந்தார்கள். முஹம்மதுவோடு சேர்ந்து அலி பங்கு பெற்ற
ஒவ்வொரு போரின் முடிவிலும், போரில் பிடிபட்ட அடிமைகளில், செல்வங்களில்
அலிக்கும் பங்கு கிடைத்தது. எனவே, ஃபாத்திமா உணவிற்கு திண்டாடினார்கள்
என்று சொல்ல வாய்ப்பு இல்லை. அப்படி இருந்திருந்தால், அபூ பக்கர்
நிச்சயமாக அவர்களின் குடும்ப பராமரிப்பிற்கு செலவு செய்து
இருந்திருப்பார்கள்.
ஃபாத்திமாவிற்கு பண ஆசை விடவில்லை, இதன் காரணமாக, அபூ பக்கர் எதைச்
சொன்னாலும் அதனை ஏற்கவில்லை, அதாவது அபூ பக்கர் பொய் சொல்கிறார் என்று
எண்ணி, கோபம் கொண்டு வந்துவிட்டார், சில நாட்களில் அதே கோபத்தோடு
மரித்துவிட்டார். இன்று வரையும் ஃபாத்திமாவின் இந்த செயலை நியாயம்
கற்பித்துக்கொண்டு இருக்கிறார்கள் ஷியா பிரிவினர். ஃபாத்திமாவின் மனதை
துக்கப்படுத்திவிட்டார் அபூ பக்கர் என்று அவர் மீது வசை பாடிக்கொண்டு
இருக்கிறார்கள்.
தம்பி, ஒருவருக்கு அனேக நற்குணங்கள் இருக்கும், ஏழைகளுக்கு உணவளிப்பது,
பெற்றோர்களையும், பெரியவர்களையும் மதித்து நடந்துக்கொள்வது, பொய் பேசாமல்
இருப்பது, பண ஆசை இல்லாமல் இருப்பது என்பனவைகளைச் சொல்லலாம், இன்னும்
அனேக நற்குணங்கள் உள்ளன. ஆனால், ஃபாத்திமாவின் பண ஆசை சிறிய தவறல்ல.
இஸ்லாம் ஒரு பெண்ணையும் அதுவும் முஹம்மதுவின் மகளையும் திருத்தவில்லை
என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
ஃபாத்திமா இப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதற்காக அவர் மீது முழு
குற்றத்தைச் சுமத்தமுடியாது, முழு குற்றமும் இஸ்லாமுடையது தான்.
இஸ்லாமும், குர்-ஆனும், முஹம்மதுவும் ஏன் ஒரு பெண்ணை மாற்றமுடியவில்லை.
உங்கள் இறைத்தூதருக்கு அன்பாக இருந்த மகளின் நிலையே இப்படியென்றால், 1400
ஆண்டுகள் கழித்து இன்றுள்ள முஸ்லிம்களின் நிலை என்ன?
முஹம்மது ஃபாத்திமா பற்றி கூறும் போது, எனக்குள் ஒரு பகுதி தான்
ஃபாத்திமா என்றுச் சொல்லுவார். ஃபாத்திமாவை துக்கப்படுத்தினால், தன்னையே
துக்கப்படுத்தியதற்கு சமமாகுமாம். முஹம்மதுவை துக்கப்படுத்தினால்
அல்லாஹ்வையே துக்கப்படுத்துவதற்கு சமம் ஆகும். இப்படிப்பட்ட நபர் செய்த
காரியம் மன்னிக்கப்படாத ஒன்று. இவரைச் சொல்லி குற்றமல்ல, இஸ்லாம் இவரை
மாற்றவில்லை என்பது தான் உண்மை. முஹம்மதுவின் 23 ஆண்டுகள் இஸ்லாமை
போதித்தார், ஆனால், அவருடைய மகளால் கூட அதனை முழுவதுமாக
செயல்படுத்தமுடியவில்லை.

உன் இறைத்தூதரின் மகளையே குறைந்த பட்சம் இஸ்லாம் மாற்றவில்லை. அவரை பண
ஆசை பிடித்து ஆட்டிப்படைத்துள்ளது. கோபம் ஒரு நாள் அல்லது வாரம்
இருக்கும், அதிகபட்சம் ஒரு மாதமிருக்கும், ஆனால், பண ஆசையினால், ஆறு
மாதங்கள் கசப்பை மனதில் வைத்திருந்திருக்கிறார் ஃபாத்திமா.
ஒரு முஸ்லிம் அதிக பட்சம் 3 நாட்கள் இன்னொரு முஸ்லிமிடம் பேசாமல் இருக்கலாம்.
மேலே கண்ட ஹதீஸ்களின் படி:
அ) ஒரு ஹராமான காரியத்தை ஃபாத்திமா செய்துள்ளார்கள்
ஆ) முஹம்மது தடுத்த காரியத்தை செய்துள்ளார்கள்
இ) இஸ்லாமில் அனுமதிக்கப்படாததை ஃபாத்திமா செய்துள்ளார்கள்.
ஈ) ஃபாத்திமா முதல் கலிஃபாவின் வார்த்தைகளுக்கு கீழ்படியவில்லை, இதன்
அர்த்தம், அவர் இஸ்லாமுக்கு கீழ்படியவில்லை.
முஹம்மதுவினாலும், இஸ்லாமினாலும் இஸ்லாமின் முதல் சந்ததியாகிய
ஃபாத்திமாவை மாற்ற முடியவில்லை. அற்பமான உலக பொருட்களுக்காக இஸ்லாமை
ஃபாத்திமா புறக்கணித்துள்ளார்கள். இஸ்லாம் உண்மையாக மனிதர்களை
மாற்றுமானால், ஃபாத்திமாவை ஏன் அது மாற்றவில்லை. மனதிலே கசப்பையும்,
வெறுப்பையும் கோபத்தையும் கொண்டு இருந்தார்கள். மரணம் தன்னை சந்திக்கும்
வரை, அபூ பக்கரோடு ஃபாத்திமா பேசவில்லையென்று ஆதாரங்கள் சொல்கின்றன.
எவ்வளவு கீழ்தரமான செயல் பாரு தம்பி, அதுவும் செல்வத்துகாக இப்படி
நடந்துக்கொண்டார்கள்.
முஹம்மதுவை கனப்படுத்துவதுபோல, அவரது பதவியில் அமர்ந்திருந்த அபூ
பக்கரையும் ஃபாத்திமா கனப்படுத்தியிருக்கவேண்டும்.
• தன் தந்தையின் செயல்கள், சொற்கள் ஃபாத்திமாவை மாற்றவில்லை.
• இஸ்லாம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை நெறிமுறை ஃபாத்திமாவை மாற்றவில்லை.
• குர்-ஆனின் 6236 வசனங்களினால் ஃபாத்திமாவை மாற்றமுடியவில்லை.
• முஹம்மதுவின் 23 ஆண்டுகால இஸ்லாமிய ஊழியம் ஃபாத்திமாவை மாற்றவில்லை.
இஸ்லாமிய இறையியல், ஆரம்ப கால முஸ்லிம் சகோதரியை மாற்றவில்லை. இது
இஸ்லாமுக்கு கிடைத்த முதல் தோல்வியாகும். தம்பி, இது ஒரு ஆரம்பம் தான்,
இன்னும் அனேக விவரங்கள் வரவிருக்கின்றன.
முஹம்மது உயிரோடு இருக்கும் போது, அவருக்காக அனைவரும் நடித்தார்கள், அவர்
மரித்தவுடன், நடிப்பை விட்டுவிட்டு, தங்கள் உண்மையான வாழ்வை வாழ
ஆரம்பித்தார்கள்.
மனிதர்களை மனதளவில் நல்லவர்களாக மாற்றும் சக்தி இஸ்லாமுக்கு இல்லை என்பது
இதன் மூலம் விளங்குகிறதா தம்பி?
6) ஃபாத்திமாவும் இயேசுவின் போதனைகளும்
பணம் எல்லோருக்கும் தேவை, ஆனால், பணமே எல்லாம் என்று நினைத்து, இறைவனை
மறந்து வாழ்வதை இயேசு கண்டித்தார். முக்கியமாக, தன் சகோதரனுக்கு தன் மீது
குறை உண்டென்று அறிந்திருந்தும் இறைவனுக்கு காணிக்கை கொடுப்பது வீண்
என்று இயேசு கூறினார். சகோதர அன்பில்லாமல் ஒருவன் காணிக்கை செலுத்தினால்,
அந்த காணிக்கையானது இறைவனுக்கு வேண்டாத ஒன்று எனவே முதலாவது, சகோதரனுடன்
ஒப்புறவாகி, அதன் பிறகு காணிக்கை செலுத்து. அப்படி செய்யாமல்
இருப்பவனுடைய காணிக்கையும், தொழுகையும் இறைவனுக்கு தேவையில்லை என்று
கண்டித்தார்.
இதனை மத்தேயு சுவிசேஷத்தில் நாம் காணலாம்:
ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து,
உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,
அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு
உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச்
செலுத்து.(மத்தேயு 5:23-24)
மேற்கண்ட வசனத்தின் படி பார்த்தால், ஃபாத்திமாவின் தொழுகையும்,
காணிக்கைகளும், இதர தான தர்மங்களும், குர்-ஆனை வாசிப்பதும் வீணாகும். ஒரு
கலிஃபாவை குற்றப்படுத்தி, கீழ்படியாமல், ஆறு மாதங்கள் அவரோடு பேசாமல்
இருந்து, மரித்த பிறகும், அபூ பக்கர் வந்து பார்க்கக்கூடாது என்ற
எண்ணத்தோடு ஒருவர் மரிப்பாரானால், அவரை எந்த நிலையில் வைப்பது?
கிறிஸ்தவர்களில் ஒருவர் ஃபாத்திமாவைப்போல நடந்துக் கொண்டால், இயேசுவின்
போதனையின் படி, தேவன் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
மேலும் புதிய ஏற்பாட்டில், பண ஆசைப் பற்றி அனேக எச்சரிக்கைகள்
தரப்பட்டுள்ளது. ஒரு முறை இவைகளைப் படித்துப்பார், ஃபாத்திமா அவர்களின்
செயலை ஒப்பிட்டுப்பார்.
1 தீமோத்தேயு 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும்
கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும்
சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
1 தீமோத்தேயு 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர்
அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக்
குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
எபிரேயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு
இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை,
உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
லூக்கா 112:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து
எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி
இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
மத்தேயு 6:24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது;
ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப்
பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும்
ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
1 கொரிந்தியர் 6:10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும்,
உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
7) முடிவுரை
தம்பி, உன் விருப்பத்தின்படியே, நான் இஸ்லாமின் ஆரம்ப கால கனிகளில் ஒரு
கனியை உனக்கு சுவைக்க கொடுத்தேன். முஹம்மதுவின் அன்பான மகள்
ஃபாத்திமாவின் ஒரு செயலை நாம் இஸ்லாமிய நூல்களிலிருந்து மட்டுமே
பார்த்தோம். முஹம்மது உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, அவர் இல்லாத
போது கூட, நற்குணங்களோடு வாழ்வது தானே, முஹம்மதுவிற்கும் பெருமை, அவரை
அனுப்பிய அல்லாஹ்விற்கும் பெருமை!
ஆனால், இஸ்லாமும், அல்லாஹ்வின் வார்த்தையாகிய குர்-ஆனின் ஆயிரக்கணக்கான
வசனங்களும், முஹம்மதுவின் சுன்னாவும் (சொல்லும் செயலும்) ஃபாத்திமாவை
மனதளவில் மாற்றவில்லை. பண ஆசையை ஃபாத்திமாவின் வாழ்விலிருந்து நீக்க
இஸ்லாம் போதுமானதாக இல்லை.
ஒரு முஸ்லிம் வெளிப்படையாக நற்செயல்களைச் செய்வதற்கு இஸ்லாம்
ஊக்குவிக்கிறது. ஒரு இயந்திரத்தைப்போல ஐந்து வேளை சொல்லியதே சொல்லிச்
சொல்லி தொழுதுவிட்டால், கடமை தீர்ந்தது என்றும், புரியாமல் இருந்தாலும்
அரபியிலேயே தொழுதுக்கொள்ளவேண்டும் என்றும் இஸ்லாமிய கோட்பாடுகள்
சொல்வதினாலும், மக்களுக்கு வேலை சுலபமாகிவிடுகிறது. ஒரு துண்டை
விரித்தோமா 10 நிமிடங்கள் தொழுதோமா, கடமை முடிந்துவிட்டது, ஆனால், ஒரு
கிறிஸ்தவன், தேவனிடம் ஜெபிப்பதற்கு ஆரம்பித்தால், எவ்வளவு நேரம்
பிடிக்குமோ தெரியாது, 5 நிமிடங்கள் ஆகலாம், அல்லது 50 நிமிடங்களும்
ஆகலாம்.
அதே போல, குர்-ஆனை அரபியில் படிக்கிற ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மைகள் நம்
கணக்கில் சேர்க்கப்படுகின்றது. ஒரு இஸ்லாமியர் இப்படி கூறுகிறார்: தாய்
மொழியில் குர்-ஆனை படிப்பது நல்லது என்றாலும், அரபியில் படித்தால் தான்
அதிக நன்மைகள் கிடைக்கும். இரண்டுக்கும் நன்மைகள் உண்டு, ஆனால் தமிழில்
புரிந்துக்கொண்டு படிப்பதை விட, புரியாவிட்டாலும் அரபியில் படிப்பதற்கு
தான் அல்லாஹ் அதிக நன்மைகளைத் தருவானாம், தம்பி இது உனகு வேடிக்கையாக
தெரியவில்லை? அல்லாஹ் எப்படிப்பட்ட இறைவனாக இருக்கிறார் என்று பார்.
இயேசு சொன்னதுபோல, முழு இருதயத்தோடும், பலத்தோடும் இறைவனில் அன்பு
கூறவேண்டும், வெறுமனே கிளிப்பிள்ளை போல சொன்னதே சொல்லிக்கொண்டு
இருந்தால், அது உண்மையான மன மாற்றமாகாது. ஆக, உள்ளான மனமாற்றம் எதையும்
புரிந்து செய்தால் தான் கிட்டும், புரிந்து வேதங்களை படித்தால் தான்
கிட்டும், முழு இருதயத்தோடும், உணர்ந்து அன்பு கூறி செய்தால் தான்
கிட்டும், இஸ்லாமிய கோட்பாடுகள் சொல்வதுபோல செய்தால், இப்படி அனேக
ஆயிரமான ஃபாத்திமாக்கள் தான் இஸ்லாமில் மிஞ்சுவார்கள்.
தம்பி, அடுத்த கடிதத்தில் உனக்கு ஃபாத்திமாவின் கணவரும், நான்காவது
கலிஃபாவாக பதவி வகித்த அலி அவர்கள் பற்றி விவரிக்கிறேன். இஸ்லாமின்
ஆரம்பகால கனிகளில் இன்னொரு கனியை சுவைக்க தயாராகிவிடு.
இப்படிக்கு
உன் அண்ணன்
உமர்
தேதி: 20 ஜூன் 2015
________________________________
உமரின் ரமளான் கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day4.html

2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்! உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?
உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நடைப்பெற்ற முந்தைய கடிதபரிமாற்றத்தை
படிக்க இங்கு சொடுக்கவும்.
இந்த கடிதம் 3வது கடிதமாகும்.
அன்பான அண்ணன் உமர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கடிதம் கண்டேன், படித்தேன் என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்து
தூரமாக வீசிவிட்டேன். நான் சொல்வது உங்களுக்கு புரிகின்றதா? நீங்கள்
இப்போது சிந்தித்துக்கொண்டு இருப்பது சரி தான், எனக்கு ஐஎஸ் பற்றி முழு
விவரமும் தெரிந்துவிட்டது. நேற்றுவரை நான் ஐஎஸ் பற்றி அதிகமாக ஆய்வு
செய்யாமல் இருந்துவிட்டேன், உங்கள் கடிதத்தை படித்ததும், அவர்கள் பற்றிய
முழு விவரங்களையும் அறிந்துக் கொண்டேன்.
உங்களுக்கு ஒரு நற்செய்தி, நான் உண்மையாகவே சில வாரங்களுக்கு பிறகு,
சிரியாவிற்குச் செல்லலாம் என்று எண்ணியிருந்தேன், ஐஎஸ் குழுவுடன்
சேர்ந்து அல்லாஹ்விற்கு தொண்டு செய்யலாம் என்று விரும்பினேன், ஆனால்,
இப்போது உண்மையை நான் முழுவதுமாக அறிந்துக்கொண்டேன். அவர்கள் செய்வது
இஸ்லாமுக்கு எதிரானது என்பதை முழுவதுமாக அறிந்துக் கொண்டேன். அவர்கள்
இஸ்லாமின் எதிரிகள் ஆவார்கள், அவர்கள் இஸ்லாமுக்கு இழுக்கு என்பதை
அறிந்துக் கொண்டேன். இதர இஸ்லாமியர்களை பிடித்து, துன்புறுத்தி, பெண்களை
அடிமைப்படுத்துகிற இவர்கள் உண்மையாகவே முஸ்லிம்கள் இல்லை.
சும்மா சொல்லக்கூடாது, உங்கள் கடிதம் எனக்கு ஆரம்பத்தில் வேதனையை
கொடுத்தாலும், கோபத்தை கொண்டு வந்தாலும், ஐஎஸ் பற்றிய அறியாமையை அது
போக்கிவிட்டது. முதலாவதாக, உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்
கொள்கிறேன்.
ஆனால், அடுத்தது என்ன?
என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள், ஆனால், இன்னும் உங்கள்
கண்களில் உத்திரம் அல்லது பெரிய கட்டை உள்ளதே, அதை எப்போது
எடுத்துப்போடுவீர்கள்?
ஐஎஸ் பற்றி நீங்கள் சொன்னது உண்மையாக இருந்தது என்பதற்காக, எங்கள்
இறைத்தூதர் பற்றியும், இஸ்லாமின் கலிஃபாக்கள் பற்றியும் நீங்கள்
சொன்னவைகளை ஏற்றுக் கொள்ளமுடியாது.
நான் நேர்மையாக நடந்துக் கொண்டேன், அதே போல நீங்களும் நேர்மையாக நடந்துக்
கொள்ளுங்கள். இஸ்லாமை விமர்சிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு
செயல்படுதை நிறுத்திக்கொள்ளுங்கள். இஸ்லாமின் ஆரம்ப கால சரித்திரங்களை
படித்துப் பாருங்கள். தற்கால முஸ்லிம்களிடத்தில் நீங்கள் குறைகளை
கண்டுபிடிக்கலாம், ஆன்மீக குளறுபடிகளை பார்க்கலாம், ஆனால், இறைத்தூதரோடு
இருந்து அவரோடு வாழ்ந்த நபித்தோழர்கள், மற்றும் அவரைக் கண்டு,
அவரிடமிருந்து இஸ்லாமையும், இஸ்லாமிய ஆன்மீகத்தையும் கற்றவர்களிடத்தில்
நீங்கள் எந்த பிழைகளையும் காணமுடியாது. இதனை ஒரு சவாலாகவே நான்
உங்களுக்கு முன்பாக வைக்கிறேன்.
என்னை இஸ்லாமிய ஆரம்ப கால நூல்களை படிக்கச் சொல்வதை விட்டுவிட்டு,
முதலாவது நீங்கள் படித்துப் பாருங்கள்.
முக்கியமாக, இறைத்தூதரை கண்டவர்களாகிய அவரது தோழர்கள், குடும்ப நபர்கள்,
உறவினர்கள் போன்றவர்கள் பற்றிய ஒரு சிறிய ஆய்வையாவது நீங்கள்
செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நபித்தோழர்கள் ஒவ்வொருவரின்
நற்பண்புகள் பற்றிய விவரங்களை சேகரித்து, நான் உங்களுக்கு சுருக்கமாக
எழுதி அனுப்புகிறேன். அப்போது தான் உங்களுக்கு இஸ்லாமின் உண்மைநிலை
புரியும், தற்காலத்தில் வாழும் முஸ்லிம்களைக் கண்டு இஸ்லாமின் தரத்தை
நிர்ணயிப்பது சரியானது அல்ல.
தம்பி, கிறிஸ்தவர்களை பார்க்காதே, கிறிஸ்துவைப் பார், அவரது சீடர்களைப்
பார், ஆரம்ப கால ஆதித்திருச்சபையை பார் என்று நீங்கள் அடிக்கடி
சொல்லுவீர்கள் அல்லவா? அது போல, தற்கால இஸ்லாமியர்களைப் பார்க்காதீர்கள்,
ஆரம்ப கால இஸ்லாமியர்களைப் பாருங்கள் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் கடிதத்தில் நீங்கள் "இஸ்லாமிய இறையியல் தான் வன்முறைக்கு காரணம்"
என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். உங்களின் இந்த நிலைப்பாடு தவறானது
என்பதை நான் நிருபிக்கிறேன். இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம்
என்பதை உங்களுக்கு புரியும்படி, உங்களுக்கு நான் போதனைச் செய்வேன்,
காத்துக்கொண்டு இருங்கள்.
உங்களை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் தம்பி
சௌதி அரேபியா
தேதி: 18 ஜூன் 2015
________________________________
மேற்கண்ட கடிதத்திற்கு உமரின் சுருக்கமான பதில்.
எனதருமை தம்பிக்கு,
உன் அண்ணன் உமரின் வாழ்த்துதல்கள்.
உன் கடிதம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு முஸ்லிம்
வாயிலிருந்தும் ஒரு கிறிஸ்தவனுக்கு நற்செய்தி கிடைக்குமா? ஆம், எனக்கு
அந்த நற்செய்தி என் தம்பி மூலமாக கிடைத்தது, என் தம்பி, எந்த ஒரு
தீவிரவாத குழுவோடும் இனி இணையமாட்டான். இந்த விஷயம் எனக்கு நற்செய்தியாக
இருக்கிறது. நம் குடும்பமும் இதனை அறிந்தால், மிகவும்
சந்தோஷப்படுவார்கள்.
அடுத்தபடியாக, நீ முன் வைத்த சவாலை நான் மகிழ்ச்சியாக ஏற்கிறேன். ஆரம்ப
கால இஸ்லாமிய நடபடிகளை நாம் இரண்டு பேரும் இணைந்து படிப்போம், ஆய்வு
செய்வோம். உண்மையாகவே, நீ சொல்வது நிருபிக்கப்பட்டால், அதாவது ஆரம்ப கால
முஸ்லிம்கள் அன்புடனும், நட்புடனும், அமைதியாக வாழ்ந்திருந்தால், இஸ்லாம்
அமைதியை விரும்பும் மார்க்கம் என்று அவர்கள் நிருபித்திருந்தால், நான்
அதனை உலகிற்கு அறிவிக்க தயங்கமாட்டேன்.
அதற்கு முன்பாக, உன் ஆன்மீக தேடலின் பசியை சிறிது ஆற்றலாம் என்று எண்ணி
கீழ்கண்ட ஒரு தொடுப்பை தருகிறேன். ஒரு முறை படித்துப் பார்.
இயேசுவின் அரசும் முஹம்மதுவின் அரசும் (ISIS இஸ்லாம் அங்கீகரிக்கும்
ஒன்றா?) பாகம் - 1
இப்படிக்கு,
உன் அண்ணன்
உமர்.
தேதி: 18 ஜூன் 2015
________________________________
உமரின் ரமளான் கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day2/ramalan2015day3.html

2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
பின்னணி: உமரின் தம்பி சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறார். இவர் இஸ்லாமை
தழுவியுள்ளார். இவரது சமீபகால பேச்சுக்களில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான
ஐஎஸ்யை புகழ்ந்து பேசுவது தெரியவந்தவுடன், உமர் இவருக்கு ஒரு கடிதத்தை
எழுதினார். அதில் இந்த ஐஎஸ் என்பது ஒரு தீவிரவாத இயக்கம் ஆகும், அதில்
சேர்ந்து அனேகர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள், இதர மக்களை
கொல்கிறார்கள். எனவே இதை விட்டு தூரமாக இருக்கும்படி அறிவுரை கூறினார்
(இந்த முதலாவது கடிதத்தை படிக்க இங்கு சொடுக்கவும்). இந்த முதலாவது
கடிதத்தை படித்து உமரின் தம்பி எழுதிய பதிலையும், அதற்கு உமர் கொடுத்த
பதிலையும் இந்த இரண்டாவது பாகத்தில் பார்க்கலாம்.
2015 ரமளான் கடிதம் 2
இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
உமரின் தம்பி எழுதிய பதில் கடிதம்:
அன்புள்ள அண்ணாவுக்கு,
உங்கள் தம்பி எழுதிக் கொள்வது. உங்கள் கடிதத்தை படித்தேன். இஸ்லாம்
பற்றியும், ஐஎஸ் பற்றியும் உங்களுக்கு இருக்கும் அறியாமை உங்கள்
கடிதத்தில் தெளிவாக வெளிப்பட்டதை என்னால் கவனிக்காமல் இருக்கமுடியவில்லை.
உங்களுக்கு இஸ்லாமின் இரண்டு முக்கியமான அஸ்திபாரங்களை (கட்டளைகளை)
விவரிக்க விரும்புகிறேன்.
முதலாவது அஸ்திபாரம், இஸ்லாமின் ஆன்மீக கட்டளைகளாகும். அதாவது மனிதனை
திருத்தி, நல்வழிப்படுத்தி, இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படியச் செய்து,
சரியான முறையில் இறைவனை தொழுவதற்கு கற்றுக்கொடுத்து, கடைசியாக அவனை
சொர்க்கத்தில் சேர்ப்பது தான் இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரம்.
இரண்டாவது அஸ்திபாரம், இஸ்லாமின் அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளாகும்.
இஸ்லாமின் ஆன்மீக சட்டங்கள் தனி மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது போல,
இஸ்லாமிய அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகள் இஸ்லாமிய ஆட்சி தலைவருக்கு
கொடுக்கப்பட்டுள்ளது.
தனி மனிதனின் ஆன்மீக கட்டளைகளில் அன்பும் அமைதியும், ஒழுக்கமும்
காணப்படுவதுபோல, இஸ்லாமின் அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளில் தவறு
செய்பவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய தண்டனைகளையும், அநீதி
இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு தேவையான சட்டங்களையும், நாட்டை
ஆட்சி புரிவதற்கான சட்டங்களையும் இஸ்லாம் தருகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் "இஸ்லாமிய ஆன்மீகத்துக்கு"
முக்கியத்துவம் கொடுத்து தன் இறைத்தொண்டை நிறைவேற்றும் போது, ஒரு
இஸ்லாமிய தலைவனாக அதாவது கலிஃபாவாக ஒருவரை தெரிந்தெடுத்து, இஸ்லாமின்
அரசு சம்மந்தப்பட்ட இறைத்தொண்டை அவர் மூலமாக நிறைவேற்றுவது தான்
"இஸ்லாமிய அரசு" செய்ய வேண்டிய இறைத்தொண்டாகும். உலக மக்களுக்கு
இவ்விரண்டும் முக்கியமானவைகளாகும். உலக மக்கள் அமைதியாகவும்,
சமாதானத்துடனும் வாழவேண்டுமென்றால், இஸ்லாமிய ஆட்சி உலகின் அனைத்து
நாடுகளிலும் ஸ்தாபிக்கப்படவேண்டும். இந்த தரிசனத்தோடு தான் ஐஎஸ் போன்ற
இஸ்லாமிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த கடமையை
செய்துக்கொண்டு இருக்கின்றன. இதற்காகவே அனேகர் ஐஎஸ் போன்ற இயக்கங்களோடு
தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.
உங்களிடம் நான் கீழ்கண்ட கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
1) உலகம் சமாதானத்தோடு வாழவேண்டுமென்று விரும்புவது தவறா? அதற்காக போராடுவது தவறா?
2) ஒவ்வொரு மார்க்கத்துக்கும் ஒரு தலைவர் உலகளாவிய அளவில் இருக்கும்
போது, இஸ்லாமுக்கும் அதுபோல கலிஃபா என்ற தலைவர் இருந்தால் என்ன தவறு
இருக்கிறது? இஸ்லாமுக்கு உலகளாவிய தலைவர் இருக்கக்கூடாதா?
3) போப் என்ற பெயரில் ஒரு நபரை தங்கள் மார்க்க தலைவராக கத்தோலிக்க
கிறிஸ்தவர்கள் வைத்திருக்கிறார்கள் அல்லவா? அதுவும் தொடர்ச்சியாக பல
நூற்றாண்டுகளாக அந்த பதவியை தக்கவைத்துக் கொண்டு வருகிறார்கள் அல்லவா?
ஒட்டு மொத்த உலக கிறிஸ்தவத்துக்கு மட்டும் தலைவர் தேவை ஆனால், அதேபோல
இஸ்லாமுக்குத் தேவையில்லையா?
4) இஸ்லாமிய ஆரம்ப கால கலிஃபாக்களின் காலத்தை பொற்காலம் என்றுச்
சொல்லலாம். இந்த கலிஃபாக்களின் தொடர்ச்சி சிறிது சிறிதாக மறந்துவிட்டது.
ஜனநாயகம் என்றுச் சொல்லி, சமத்துவம் என்றுச் சொல்லி, பல நாடுகள் ஒன்றாக
சேர்ந்துக்கொண்டு, இஸ்லாமுக்கு உலகளாவிய தலைவர் இல்லாத மார்க்கமாக
ஆக்கிவிட்டார்கள். இனி இது செல்லுபடியாகாது, ஒரு புதிய கலிஃபா எங்களுக்கு
தோன்றிவிட்டார். கூடிய சீக்கிரம் அவரை உலகம் அடையளம் கண்டுக்கொள்ளும்.
அவரை அங்கீகரித்துக் கொள்ளும். அப்போது இஸ்லாம் உலக நாடுகளை ஆட்சி
புரியும். அல்லாஹ்வின் சட்டம் எல்லா பாராளுமன்றங்களிலும் எதிரொலிக்கும்.
எனவே, இஸ்லாமின் அடிப்படையை அறிந்துக் கொள்ளாமல், இப்படி அபாண்டமான
பழிகளை ஐஎஸ் மீது சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால், அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.
இப்படிக்கு
உங்கள் தம்பி
சௌதி அரேபியா
தேதி: 17, ஜூன் 2015
________________________________
மேற்கண்ட கடிதத்திற்கு உமர் அளித்த பதில்
இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?
அன்புள்ள தம்பிக்கு,
உன் கடிதத்தை படித்தேன். உன்னைப் போன்ற முஸ்லிம்கள் கூட தீவிரவாதிகளை
ஆதரித்து பேசுகிறார்கள் என்பதை அறியும் போது, மனதுக்கு வேதனையாக உள்ளது.
உன் கடிதத்தில் கீழ்கண்ட இரண்டு தவறுகளை நீ செய்துள்ளாய்:
1. இஸ்லாமிய கலீஃபா பதவி உலகத்தில் அமைதியை கொண்டுவர
உருவாக்கப்பட்டுள்ளது என்று நீ கருதியுள்ளாய், இது மிகப்பெரிய தவறாகும்.
முஹம்மதுவின் காலம் துவங்கி இந்த பதவியை வகித்தவர்கள் என்ன செய்தார்கள்
என்பதை சுருக்கமாக உனக்கு விவரிக்கிறேன். உனக்கு நேரமிருந்தால், நீயே
ஆய்வு செய்து எனக்கு தெரிவிக்கலாம்.
2. போப் என்பவர் ஒட்டு மொத்த உலக கிறிஸ்தவர்களின் தலைவர் என்று தவறாக
நினைத்துவிட்டாய். மேலும் இவர் அரசியல் தலைவர் போல நீ மேற்கோள்
காட்டிவிட்டாய்.
கலிஃபா என்பவர் உலக சமாதான புறாவா? அல்லது உலகத்துக்கு சமாதி கட்டும் புறாவா?
தம்பி, உன் கடிதத்தில் நீ குறிப்பிட்ட இரண்டு வகையான கட்டளைகளைப் பற்றி
எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இஸ்லாமில் ஆன்மீக சம்மந்தப்பட்ட
கட்டளைகளும் உள்ளன, அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன. ஆனால்,
இஸ்லாமுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதன் அரசியல் நிலைப்பாடு
தான், அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகள் தான்.
நீ குர்-ஆனை தமிழில் படிக்கவேண்டும் என்றும், அனேக குர்-ஆன் விரிவுரைகளை
படிக்கவேண்டும் என்றும் நான் அனேக முறை உனக்கு சொல்லியிருக்கிறேன்.
மேலும் ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் படிக்கச்
சொன்னேன். 40 ஹதீஸ்களின் தொகுப்பு, 500 ஹதீஸ்களின் தொகுப்பு என்ற
பெயர்களில் விற்கப்படும் ஹதீஸ் புத்தகங்களை நான் படிக்கச் சொல்லவில்லை,
மேலும் தற்கால முஸ்லிம்கள் எழுதும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை
படிக்கச் சொல்லவில்லை. புகாரி முஸ்லிம் போன்ற முழு ஹதீஸ்
தொகுப்புகளையும், இப்னு இஷாக், தபரி, இப்னு இஷாம் போன்ற ஆரம்ப கால
இஸ்லாமிய ஆசிரியர்கள் எழுதிய முஹம்மதுவின் சரித்திர நூல்களை படிக்கச்
சொன்னேன்.
மேற்கண்ட அனைத்தையும் படித்த ஒரு முஸ்லிம், நிச்சயமாக "இஸ்லாம் ஒரு அமைதி
மார்க்கம்" என்றுச் சொல்லமாட்டான். அப்படி அவன் சொல்வானேயானால், அவன்
தெரிந்தே பொய் சொல்கிறான் என்று அர்த்தமாகும்.
கலிஃபா பற்றி நாம் அறியவேண்டுமென்றால், முஹம்மதுவிலிருந்து
தொடங்கவேண்டும். முஹம்மது மக்காவில் பிரச்சாரம் செய்யும்போது, ஒரு
பூனையைப் போல பயந்து பிரச்சாரம் செய்தார், தன் உயிருக்கு ஆபத்து வரும்
போது, மதினாவிற்கு ஓடி ஒளிந்தார். குர்-ஆனின் மக்கா வசனங்களில்
மென்மையும், ஆன்மீகவும் வழிந்து ஓடியது.
ஆனால், அதே முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு தனக்கு ஆள்பலம் அதிகமான
போது, பூனையின் உருவம் புலியாக பரினாம வளர்ச்சி அடைந்தது. குர்-ஆனில்
வன்முறை வசனங்கள், சகிப்புத்தன்மையற்ற வசனங்கள், ஜிஹாத் வசனங்கள் அதிகமாக
இடம்பெற்றன. இதுமட்டுமல்ல, மக்காவின் காலத்தில் இறங்கிய மென்மையான
வசனங்கள் இரத்து செய்யப்பட்டன.
காலம் செல்லச் செல்ல, இஸ்லாமை ஏற்காதவர்கள் மீது போர் தொடுக்க முஹம்மது
ஆரம்பித்தார், தன்னை இறைத்தூதராகவும், இஸ்லாமை தங்கள் மதமாகவும் ஏற்காத
நாடுகள் மீது சண்டையிட முடிவு செய்தார், கடிதங்களை எழுதினார். கீழ்கண்ட
புகாரி ஹதீஸின் படி, இஸ்லாமை ஏற்றால் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்,
இல்லையானால், அவர்கள் உடைமைகள் என்னால் சூரையாடப்படும், உயிர்கள்
எடுக்கப்படும் என்று பகிரங்கமாக முஹம்மது அறிவித்தார். இதுவா இஸ்லாமிய
அரசு உலகத்துக்கு கொடுக்கும் அமைதி? இதுவா கலிஃபாக்களுக்கெல்லாம்
கலிஃபாவாக திகழ்ந்த உங்கள் முஹம்மது கொண்டு வந்த உலக சமாதானம்?
தம்பி, புகாரி ஹதீஸை இன்னொரு முறை படித்துப் பார்:
'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை;
முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி,
ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான்
கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம்
உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின்
வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின்
விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி எண் 25 Volume :1
Book :2
இஸ்லாமை ஏற்காதவர்கள் மீது போர் புரியும் படி அல்லாஹ்வே முஹம்மதுவிற்கு
கட்டளையிட்டுள்ளாராம்.
முஹம்ம்துவின் ஊழியத்தின் ஒட்டுமொத்த சுருக்கமாக மேற்கண்ட ஹதீஸ் உள்ளது,
அவரை அல்லாஹ் தெரிந்துக்கொண்ட முழு நோக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
இதற்கு சமமான பைபிள் வசனம் எது தெரியுமா? அதாவது இயேசு தம்முடைய
வருகையின் முழு நோக்கத்தை சொன்ன வசனம் மத்தேயு 20:28ல் உள்ளது.
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும்,
அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்
என்றார்(மத்தேயு 20:28).
முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு (கலிஃபாவாக) வந்தவர் அபூ பக்கர்
ஆவார். இவர் தம்முடைய ஆறு வயது மகளை, 50 வயதை தாண்டிய முஹம்மதுவிற்கு
மனைவியாக கொடுத்தார். இப்படி செய்ய இவருக்கு எப்படித் தான் மனது வந்ததோ
தெரியாது.
தம்பி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன். இவர் கலிஃபாவாக பதவி ஏற்று
எத்தனை வெள்ளைப் புறாக்களை வானத்தில் பறக்கவிட்டார்? என்று சொல்லமுடியுமா
உன்னால்?
இரத்தத்தை சிந்துவதில், கலிஃபாக்களுக்கு நிகர் கலிஃபாக்காளே.
முஹம்மது மரித்த செய்தி அறிந்த இதர முஸ்லிம் நாடுகள், தாங்கள்
முஸ்லிம்கள் இல்லை என்றும், இனி அபூபக்கருக்கு வரிகளை செலுத்துவதில்லை
என்றும் அறிவித்தார்கள், இஸ்லாமை புறக்கணித்தார்கள். முஹம்மது
மரித்தவுடன் இவர்களின் ஈமான் ஏன் அற்றுப்போனது? ஏனென்றால், கத்தியைக்
காட்டி இஸ்லாமுக்கு ஆட்களை சேர்த்தால், இது தான் கதி என்பதை அவர்கள்
நேரடியாக தெரிவித்தார்கள்.
"இஸ்லாம் எங்களுக்கு வேண்டாம்" என்று உதறித்தள்ளியவர்களை அபூ பக்கர் என்ன
செய்து இருக்கவேண்டும்?
• அமைதி இஸ்லாமை ஏனய்யா புறக்கணிக்கிறீர்கள்? என்றுச் சொல்லி, இஸ்லாமின்
அருமை பெருமைகளைச் சொல்லி அவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கவேண்டும்!
• உண்மையாகவே, முஹம்மதுவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த அபூ பக்கர்
அவர்கள் "முஹம்மதுவிடமிருந்து இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் தான் என்று
கற்று இருந்திருந்தால்", அமைதியான முறையில் "இஸ்லாமிய தாவா" செய்து
இருக்கவேண்டும்! ஆனால், அவர் என்ன செய்தார்?
• இஸ்லாமை மறுத்தவர்கள் மீது போர் தொடுத்தார், நன்றாக மென்று மண்ணில்
காரி துப்பிய வெற்றிலைப் பாக்கை எடுத்து மறுபடியும் அவர்களின் வாயிலேயே
வலுக்கட்டாயமாக போட்டார். இவருக்கு இஸ்லாமிய ஆன்மீக கட்டளைகள் கண்களுக்கு
தென்படவில்லை, இஸ்லாமிய அரசு கட்டளைகள் தான் தெரிந்தது.
தம்பி, அபூ பக்கர் என்ற கலிஃபாவின் நடபடிகளை ஒருமுறை படித்துபார்த்து,
இஸ்லாமை அமைதி மார்க்கமாக இவர் வெளிப்படுத்தினாரா இல்லையா? என்பதை நீ
முடிவு செய்.
இன்னும், உமர், உஸ்மான், அலி போன்ற கலிஃபாக்கள் பற்றியும், இதர இஸ்லாமிய
ஆட்சியாளர்கள் பற்றியும் அனேக விவரங்களைச் சொல்லலாம். உனக்கு
விருப்பமானால், அவைகளை அடுத்தடுத்த கடிதங்களில் எழுதுகிறேன்.
இரண்டாவதாக, நீ செய்த இன்னொரு தவறு, போப் என்பவர் உலக கிறிஸ்தவர்களின்
தலைவர் என்று நீ நினைத்துக் கொண்டாய்.
இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், நீ தெரிந்தே பொய் சொல்லியுள்ளாய் என்று
என்னால் உறுதியாக கூறமுடியும். அதாவது, நீ கிறிஸ்தவனாக இருந்த
காலகட்டத்தில், போப் என்பவர் கத்தோலிக்க பிரிவினரின் ஆன்மீக தலைவர்
என்றும், மற்ற கிறிஸ்தவ பிரிவினர்கள் இவரை தலைவராக அங்கீகரிக்கவில்லை
என்றும் நாம் அனேக முறை பேசிக்கொண்டோம். இதனை நீ மறக்க வாய்ப்பு இல்லை,
ஆனால், என்ன செய்ய! நீ இஸ்லாம் என்ற சாயத்தை பூசிக்கொண்டதால்,
இஸ்லாமுக்கு நன்மையுண்டாக பொய் சொல்லலாம் என்ற சித்தாந்தத்தை
நம்புகிறபடியால், என்னிடமே உன் கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டாய்! நான்
உன் அண்ணன் என்பதை நீ அடிக்கடி மறந்துவிடுகிறாய் என்று நினைக்கிறேன். நீ
திருடன் என்றால் நான் பாக்தாத் திருடன் என்பதை மறக்காதே! உன் யுக்திகளை
தெரிந்துக் கொள்ளக் கூடாதா நிலையில் நான் இல்லை.
மேலும், போப் என்பவர் ஒரு ஆன்மீக தலைவரே தவிர அவர் ஆட்சித் தலைவர் அல்ல.
இஸ்லாமிய கலிஃபாவைப்போல ஒரு இராணுவத்தை உருவாக்கி, அந்த இராணுவத்தை இதர
நாடுகள் மீது அனுப்பி, நாடுகளை பிடித்து, அந்த நாடுகளை கிறிஸ்தவ நாடுகளாக
மாற்றும் படி பைபிள் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனை போப்பும் செய்யவில்லை,
இனி செய்யப்போவதுமில்லை.
• தம்பி, கலிஃபாக்கள் செய்தது இறைத்தொண்டா?
• உன் நாட்டில் வந்து உன்னை அழிப்பேன் என்று முஹம்மது இதர நாடுகளுக்கு
செய்தி அனுப்பியது, இறைத்தொண்டா? அந்த செய்திகள் சமாதானப் புறாக்களாக
பறந்துச் செல்லவில்லை, சமாதிகள் கட்டும் கழுகுகளாக பறந்துச் சென்றன.
• இஸ்லாமை புறக்கணித்தவர்கள் மீது போர் தொடுத்த அபூ பக்கர் செய்தது இறைத்தொண்டா?
• ஐஎஸ் இப்போது செய்துக்கொண்டு இருப்பது கூட உனக்கு இறைத்தொண்டாக தெரிகின்றதா?
• பெண்களை கற்பழிப்பதும், சிறுமிகளையும், சிறுவர்களையும்
கடத்திக்கொண்டுச் செல்வதும் உனக்கு தொண்டாக தெரிகின்றதா?
• மனிதர்களை பிடித்து, உயிரோடு எரித்துக் கொள்வதும், கழுத்துக்களை
அறுப்பதும் உனக்கு இறைத்தொண்டாக தெரிகின்றதா?
• இதில் முஸ்லிம்களுக்கே கசப்பாக தெரியும் விஷயம் என்னவென்றால், இந்த
ஐஎஸ் என்ற தீவிரவாதிகள், சில இடங்களில் தங்கள் இதர இஸ்லாமிய பிரிவினரையே
தாக்குகிறார்கள், கொல்கிறார்கள். இதுவா இறைத்தொண்டு?
• காட்டில் வாழும் மிருகங்கள் கூட, தங்கள் இனத்தை கொன்று சாப்பிடாது,
ஆனால், "இஸ்லாமிய இறைத்தொண்டு செய்கிறார்கள்" என்று நீ சொல்கின்ற ஐஎஸ்
தங்கள் சொந்த சகோதரர்கள்/சகோதரிகளையே கொன்று அவர்கள் இரத்தத்தை
குடிக்கிறார்கள்.
தம்பி, போதும் போதும்!! நீ இஸ்லாமுக்கு மாறிய அன்றிலிருந்து உன்
வார்த்தைகளில் நேர்மையும், உண்மையும் சிறிது சிறிதாக மறைந்துக்கொண்டு
வருகிறது.
புத்தி சுயாதீனமுள்ள ஒரு சாதாரண பாமர மனிதனுக்கும் தெளிவாக புரிகின்ற
விஷயங்கள் கூட ஏன் உனக்கு புரிவதில்லை?
ஐஎஸ் செய்யும் அட்டூழியங்களை ஒரு முறை செய்தித்தாள்களில் படித்துப் பார்.
அவைகளை உன் இறைத்தூதர் செய்த காரியங்களோடும், இஸ்லாமிய கலிஃபாக்கள் செய்த
காரியங்களோடும் ஒப்பிட்டுப் பார். முஹம்மது செய்ததற்கும், ஐஎஸ்
செய்துக்கொண்டு இருக்கும் செயல்களுக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும்
உன்னால் காணமுடியாது. குர்-ஆனின் விளக்கவுரையாக "ஐஎஸ்"ன் செயல்கள்
காணப்படுகின்றன.
தம்பி, கடைசியாகச் சொல்கிறேன். இஸ்லாமை சரியாக புரிந்துக் கொள்ளக்கூடாத
நிலையில் உலக மக்கள் இல்லை. மக்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள்,
ஒப்பிடுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள்.
இஸ்லாமியர்களில் கூட அனேகர் இதனை புரிந்துக்கொண்டு மௌனமாக இஸ்லாமை விட்டு
வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள். தங்கள் முடிவை வெளியே சொன்னால்,
இஸ்லாமிய வன்முறைக்கு தாங்கள் பலியாகவேண்டி வரும் என்பதால், அனேகர்
அமைதியாக இருந்துவிடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் உன் தோளோடு தோள்
சேர்த்து தொழுதுக் கொள்ளும் இன்னொரு முஸ்லிம் உண்மையாக முஸ்லிமாக
இருக்கிறானா? என்பதை நீ எப்படி அறிவாய்? அவனை இஸ்லாம் பயமுறுத்தியல்லவா
வைத்துள்ளது.
தம்பி, சிந்தித்துப் பார், மக்களின் இரத்தத்தை சிந்துபவர்களை, உன்
சிந்தனையில் ஒரு நொடி கூட வைக்காதே!
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன், அதுவரை ஐஎஸ் பற்றிய செய்திகளை
தொகுத்துவைத்துக் கொள். ஐஎஸ் புரிந்த "இறைத்தொண்டு" பற்றி செய்திகளில்
படிக்கும் விவரங்களை எனக்காக சேகரித்து வைத்துக்கொள். அவைகளை எனக்கு
அனுப்பு, குறைந்த பட்சம் 10 தொடுப்புக்களையாவது அனுப்பு.
• அவர்கள் புரியும் சேவை என்ன?
• எத்தனை நாடுகளுக்கு அவர்கள் இஸ்லாமை பரப்ப மிஷனரிகளை அனுப்பியுள்ளார்கள்?
• அவர்கள் எத்தனை பள்ளிக்கூடங்களை கட்டியுள்ளார்கள்?
• எத்தனை மருத்துவ மனைகளை கட்டியுள்ளார்கள்? எத்தனை நாடுகளுக்கு
ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளை செய்துள்ளார்கள்?
• எத்தனை பெண் பிள்ளைகளின் படிப்பிற்காக எவ்வளவு செலவு செய்துள்ளார்கள்?
• பெண்களின் மேன்மைக்காக அவர்கள் புரிந்த சாதனைகள் என்னென்ன?
• இஸ்லாமியரல்லாத மக்களுக்காக என்ன தொண்டை செய்துள்ளார்கள்?
போன்ற விவரங்களை சேகரித்து எனக்கு அனுப்பு.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கும் வரைக்கும், இஸ்லாமிய வன்முறைப்
பற்றி சிறிது சிந்தித்துக்கொண்டிரு.
இப்படிக்கு,
உன் அண்ணன்
உமர்
தேதி: 17 ஜூன் 2015
________________________________
உமரின் ரமளான் கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day2.html

Subscribe to:
Posts (Atom)