அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

June 29, 2013

ஷாஜஹானுக்கு கல்லறையை கட்டிய மும்தாஜ் - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 7

ஷாஜஹானுக்கு கல்லறையை கட்டிய மும்தாஜ் - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 7 

[கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்  பாகம் 1, பாகம் 2, பாகம் 3,  பாகம் 4 பாகம் 5  மற்றும் பாகம் 6 ஐ படிக்க சொடுக்கவும்.]

மும்தாஜுக்காக ஷாஜஹான் ஒரு கல்லறையை கட்டினார், அதனை காதலர்கள் சின்னமாக அனேகர் கருதுகின்றனர். தாஜ்மஹாலின் வெளிப்புற அழகும், அதைக் கட்டி தன் காதலை வெளிப்படுத்திய ஷாஜஹானின் உள்ளான காதலும் பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.  

மும்தாஜ் தன் காதலன் ஷாஜஹானுக்காக கல்லறையை கட்டிய கதையை கேட்டு இருக்கிறீர்களா? இது ஒரு விசித்திரமான கதை, ஏனென்றால், ஷாஜஹான் உயிரோடு இருக்கும் போதே, இந்த மும்தாஜ் அவனுக்காக கல்லறையை கட்டிவிட்டாள். மும்தாஜ் ஏன் கல்லறையை கட்டினாள்? மேலும் படியுங்கள்.

இஸ்லாமிய ஷாஜஹான்களை காதலிக்கும், கிறிஸ்தவ மும்தாஜ்களுக்கு இந்த மும்தாஜ் ஒரு எச்சரிப்பு மணியாக இருக்கட்டும்.  முன்கதை சுருக்கம் இங்கு விளக்கத் தேவையில்லை, நேரடியாக விஷயத்திற்குள் நுழைவோம், கதையின் பின்னணியை நீங்கள் தொடர்ந்து படிக்கும் போது அறிந்துக்கொள்வீர்கள். 

ஷாஜஹானுக்கு கல்லறையை கட்டிய மும்தாஜ்

எஸ்தர்: டாடி, நீங்க சொன்னது போலவே, நான் "அம்மான்"ஐ இன்று மாலை நம் வீட்டிற்கு அழைத்துள்ளேன்.

[இந்த கதையில் வரும் ஷாஜஹானின் பெயர் "அம்மான்"]

மொர்தெகாய்: சரிம்மா. நானும் சரியா ஐந்து மணிக்கு இன்று வீட்டிற்கு வந்துவிடுகிறேன்.

எஸ்தர்: நான் வெளியே தைரியமாக இருக்கிறபடி காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு வகையான பயம் இருக்கு டாடி.

மொர்தெகாய்: நீ கவலை படாதேம்மா, எல்லாம் நல்லபடியாக முடியும்.

எஸ்தர்: அவர் வந்தவுடன், நீங்க தான் முதல்லே பேச்சை ஆரம்பிக்கனும்.

மொர்தெகாய்: சரிம்மா.

[மாலை ஐந்து மணி, எஸ்தர் வீட்டு வாசலில் நின்றபடி காத்துக்கொண்டு இருக்கிறாள். அவளின் தந்தையின் பெயர் "மொர்தெகாய்" ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டு, அம்மானுக்காக  காத்துக்கொண்டு இருக்கிறார். சில நொடிளிலேயே அம்மான் தன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். எஸ்தர் அவரை தன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு வருகிறார், இனி தொடரும் உரையாடலை படியுங்கள்]

எஸ்தர்: டாடி, இவர் தான் அம்மான். என் நண்பர். ரொம்ப நல்லவர்.

அம்மான்: குட் ஈவனிங் அங்கிள்.  
மொர்தெகாய்: குட் ஈவனிங் அம்மான். எப்படி இருக்கீங்க?

அம்மான்: நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

மொர்தெகாய்: நானும் நல்லா இருக்கேன் தம்பி.

எஸ்தர்: உங்க இரண்டு பேருக்கும் காபி கொண்டுவரேன். 
டாடி, நீங்க பேசிக்கிட்டு இருங்க.

மொர்தெகாய்: தம்பி, வீட்டில் எல்லாரும் சவுக்கியமாக இருக்காங்களா? உங்க வீட்டிலே எத்தனை பேர் இருக்காங்க?

அம்மான்: அங்கிள் எங்க வீட்டிலே நாங்க ஆறு பேர் இருக்கோம். அப்பா துணிகடை வியாபாரியாக இருக்காரு. அம்மா ஹவுஸ் வைஃப். எனக்கு ஒரு அண்ணனும், இரண்டு அக்காக்களும் இருக்காங்க. எல்லாருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. நான் தான் வீட்டிலே கடைசி.

மொர்தெகாய்: ஓ அப்படியா! நீங்க தான் வீட்டிலே செல்லப்பிள்ளை என்றுச் சொல்லுங்க.

அம்மான்: ஆமாம், நான் தான் வீட்டிலேயே செல்லப்பிள்ளை.

எஸ்தர்: காபி ரெடி, அம்மான் எடுத்துக்குங்க.  அப்பா நீங்களும் எடுத்துக்குங்க. 

அம்மான்: தாங்க்ஸ் எஸ்தர்

[அம்மான் காபி எடுத்துக்கொண்டார், எல்லாரும் காபி குடிக்கிறார்கள்.]

அம்மான்: அங்கிள், ஏதோ எங்கிட்டே பேசனும் என்று நீங்க விரும்புவதா எஸ்தர் சொன்னாங்க.

மொர்தெகாய்: ஆமாம் தம்பி, நாங்க ரெண்டு பேரும் உங்ககிட்ட கொஞ்சம் மனம் திறந்து பேசனும் என்று விரும்புகிறோம்.

அம்மான்: சொல்லுங்க அங்கிள், எதையும் மறைக்காமல் கேளுங்க.
மொர்தெகாய்: தம்பி, நாங்க இப்படி பேசுவோம் என்று மனதில் ஒன்றும் வைத்துக்கொள்ள வேண்டாம். எனக்கு கொஞ்சம் மன வருத்தம் தான், இருந்தாலும், பேசித் தான் ஆகனும். 

கடந்த ஆறு மாதங்களாக, எஸ்தரும் நீங்களும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக எஸ்தர் சொன்னாள். அதைக் கேட்டதும் எனக்கு மனதுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆனாலும், நீங்க ரொம்ப நல்லவர் என்று எஸ்தர் சொன்னாள், எனக்கு மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எனக்கு போன மாதம் தான் உங்களைப் பற்றிச் சொன்னாள். தாய் இல்லாத பொண்ணு கொஞ்சம் செல்லமாக வளர்த்துவிட்டேன். இவளுக்கு கொஞ்சம் பக்தி அதிகம். வாரம் தவறாம என்னோடு சர்சுக்கு வருவாள். நீங்களும் அதிக பக்தியுள்ளவர்கள் என்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் நீங்கள் தொழுகைக்கு போவீங்க என்றும் சொன்னாள்.

அம்மான்:  ஆமாம், அங்கிள். நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். நான் என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன், நல்ல சமயமாக பார்த்து இந்த மாதத்துக்குள் என் அப்பாவிடமும் சொல்லிவிடலாம் என்று விரும்புகிறேன். அவர் நிச்சயமாக எஸ்தரை தன் மருமகளாக ஏற்றுக்கொள்வார். இன்னும் நான்கு மாதத்துக்குள் நான் சௌதி அரேபியாவிற்கு வேலைக்குப் போகிறேன். அதற்குள் அப்பாவிடம் சொல்லி, எஸ்தரை திருமணம் செய்துக்கொண்டு, அவளையும் சௌதி அரேபியாவிற்கு அழைத்துக்கொண்டு போகலாம் என்று விரும்புகிறேன்.  உங்களிடம் கூட சொல்லச் சொல்லி, நம் திருமணத்திற்கு அனுமதி வாங்கு என்று நான் எஸ்தருக்கு சொல்லியிருந்தேன்.

மொர்தெகாய்: ரொம்ப சந்தோஷம் தம்பி. 

அம்மான்: அங்கிள், நேரடியாக நான் கேட்கிறேன், உங்களுடைய மகளை எனக்கு கொடுக்க உங்களுக்கு விருப்பம் தானே!  நாங்க இருவரும் மற்றவங்க போல அங்கும் இங்கும் ஊர் சுத்தவில்லை, சினிமா பீச்சு என்று எங்கும் சுத்தவில்லை. கம்பனியில் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம், ஒருவரை ஒருவர் அதிகமாக விரும்புகிறோம்.

மொர்தெகாய்: உங்களுக்கு என் மகளை கொடுக்க எனக்கு பரிபூரண சம்மதம். ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பு, எங்க சர்சு பாஸ்டருக்கு தெரிந்த இன்னொரு பாஸ்டருடைய சபையில் 'சில இஸ்லாமிய வகுப்புக்கள், கேள்வி பதில் நிகழ்ச்சிகள்' நடந்தது. நானும் அந்த வகுப்புகளில் பங்கு பெற்றேன். மேலும், அந்த பாஸ்டருடைய மகள் எஸ்தருக்கு தோழியாவாள். அவளிடம் எஸ்தர் "ஒரு கிறிஸ்தவ பெண், ஒரு முஸ்லிமை திருமணம் செய்வது பற்றிய" விவரங்களை சேகரித்து இருக்கிறாள். (படிக்க பாகம் 5  - http://isakoran.blogspot.in/2013/03/5.html)

மேலும், கடந்த ஒரு மாதமாக, நானும் எஸ்தரும் இஸ்லாம் பற்றிய அனேக புத்தகங்கள் வாங்கி படித்துள்ளோம், அனேகரை சந்தித்து, சில முக்கியமான விஷயங்களை அறிந்துக்கொண்டுள்ளோம். இதன் அடிப்படையில் எஸ்தருக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அவைகளை எனக்கு முன்பாக உங்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று எஸ்தர் விரும்புகிறாள்.

அம்மான்: ஓ.. இது தானா விஷயம். அப்பாவும் பொண்ணும் சேர்ந்து இஸ்லாம் பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்து இருக்கீங்களே!?! 

மொர்தெகாய்:  தம்பி, இப்படி கேட்கிறோம் என்று மனசுலே எதையும் வெச்சிக்காதிங்க.

அம்மான்: அங்கிள், அப்படியெல்லாம் எனக்கு உங்கள் மீது கோபமில்லை. எனக்கும் சகோதரிகள் இருக்காங்க. அவங்களுக்கு கல்யாணம் செய்தபோது, நாங்களும் ரொம்ப பயந்தோம். மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று தான் எல்லா அப்பாமார்களும் விரும்புவாங்க. 

நீங்க கேளுங்க… கேள்விகளை நீங்க கேட்கிறீங்களா அல்லது எஸ்தர் கேட்பாங்களா?
 
மொர்தெகாய்: தம்பி, நீங்க ரொம்ப பக்குவமா பேசுறீங்க. 

அம்மான்: என்ன எஸ்தர், ரொம்ப ஆராய்ச்சியெல்லாம் செய்து இருக்கீங்க போலிருக்கு. எனக்கு சொல்லவே இல்லே. நான் சௌதி அரேபியாவிற்கு போவது பற்றி உனக்கு சொன்ன பிறகு உன்னிடத்தில் பேசும் போது கொஞ்சம் மாற்றம் காணப்பட்டது. ஆனால், நீ இஸ்லாம் பற்றி இப்படியெல்லாம் படித்து, விவரங்கள் சேகரித்து இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை.

எஸ்தர்: சாரி அம்மான். நான் என்ன செய்வது? நான் கேள்விப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் என்னை சிந்திக்கச் செய்தது.  நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உனக்கே தெரியும்.

அம்மான்: சரி, விஷயத்துக்கு வருவோம். சொல்லு உனக்கு என்ன சந்தேகம்?

எஸ்தர்: நான் கேட்பது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாக தெரியும், இருந்தாலும் வேறு வழியில்லை. வாழ்க்கை என்பது வெறும் காதல் மட்டுமல்ல, அதையும் தாண்டி, திருமணம், குடும்பம், பிள்ளைகள், உறவுகள் என்று தொடர்ச்சியாக மரணம் வரை தொடருவது தான் வாழ்க்கை. 

எனவே, சில முக்கியமான விஷயங்களை திருமணத்திற்கு முன்பே பேசி தீர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்பதினால், இந்த சந்திப்பை வைக்கும்படி நான் டாடியிடம் கட்டாயப்படுத்தி சொன்னேன்.

அம்மான்: [சிரித்துக்கொண்டே] ம்ம்ம்… பெரிய பெரிய விஷயங்களை பக்குவமாய் பேசுகிறாய். சரி உன் கேள்விகளை கேட்கலாம்.

[மொர்தெகாய் மனதுக்குள் 'இரண்டு பேரும் முத்திப்போன கத்திரிக்காய்கள் தான்' என்று சொல்லிக்கொள்கிறார்.]

எஸ்தர்: அம்மான், என்னுடைய முதலாவது கேள்வி என்னவென்றால், நாம் திருமணம் செய்துக்கொண்ட பிறகு, கட்டாயமாக சௌதி அரேபியாவிற்கு போய்த் தான் ஆகவேண்டுமா? அப்படி போனாலும், எத்தனை ஆண்டுகள் அங்கே இருக்கப்போகிறோம்?

அம்மான்: எஸ்தர், இது தான் உன் சந்தேகமா? 
தற்போது செய்கின்ற வேலையை விட பல மடங்கு அதிக சம்பளம் எனக்கு சௌதியில் கிடைக்கிறது. எனவே, நான் அங்கு சென்று வேலை செய்வது தானே புத்திசாலித்தனம், நீயே சொல்லு?

மேலும், எத்தனை ஆண்டுகள் அங்கு நாம் இருப்போம் என்று என்னால் இப்போது சொல்லமுடியாது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாம் இந்தியாவிற்கு வந்து, நம் பெற்றோர்களைப் பார்த்துச் செல்லலாம்.

மொர்தெகாய்: எஸ்தர், நீ என்னைப் பற்றி கவலைப்படவேண்டாம். நான் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து உன்னை சௌதியில் பார்த்துவிட்டுச் செல்வேன்.

எஸ்தர்: ஓகே டாடி. இது பிரச்சனை இல்லை.
அம்மான், சௌதிக்கு சென்றுவிட்ட பிறகு நான் வேலைக்குச் செல்லலாம் இல்லையா? அதாவது சௌதி அரேபியாவில் நானும் வேலைக்கு போவேன்.

அம்மான்: ம்ம்ம்… நான் என்ன நினைக்கிறேன் என்றுச் சொன்னால், நீ சௌதியில் வேலைக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது. எஸ்தர், கல்யாணத்திற்கு பிறகு நீ வேலைக்குப் போவது எனக்கு பிடிக்காது. 

எஸ்தர்: என்ன அம்மான், தலையிலெ குண்டு துக்கிப்போடுறே? நானும் வேலைக்குப்போனால் தானே இன்னும் கொஞ்சம் பணம் சேரும். நம்முடைய பொருளாதார நிலை கூட உயரும்?

அம்மான்: என் ஒருவனுடைய சம்பளத்தை வைத்தே நாம் நல்ல வாழ்க்கை வாழலாம் எஸ்தர், புரிஞ்சுக்கோ.

எஸ்தர்: திருமணத்திற்கு பிறகு நான் வேலைக்குப் போகலாம், எந்த பிரச்சனையும் இல்லை என்று நீயே ஒருமுறை சொல்லியிருக்கிறாய்! இப்போது ஏன் மாற்றிச் சொல்கிறாய்.

அம்மான்: அப்போது எனக்கு சௌதி அரேபியாவிற்கு செல்லும் பிளான் இல்லாமல் இருந்தது. இந்தியாவில் நாம் இருந்தால், இப்போதும் சொல்கிறேன், நீ வேலைக்குப் போகலாம். ஆனால், நாம் சௌதிக்கு சென்றுவிட்டால், சௌதியில் பெண்கள் வேலைக்குச் செல்வது சரியல்ல. என் அப்பா அம்மாவும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சௌதியில் பெண்களுக்கு பாதுகாப்பு அவ்வளவு இல்லை.  உனக்கு எந்த செலவாக இருந்தாலும் சரி, அதனை நான் செலவு செய்வேன், நீ எதற்கும் பயப்படாதே!

மொர்தெகாய்: என்னம்மா எஸ்தர், நீ வேலைக்கு போகாமல், வீட்டிலேயே இராணி மாதிரி சந்தோஷமாக வாழு, சரியா? அம்மான் உன்னை நல்லபடியாக பார்த்துக்கொள்வார்.

எஸ்தர்: ம்ம்ம்ம்… சரி, உன் விருப்பம் அம்மான். அப்படியே ஆகட்டும். 

அம்மான்: அடுத்தது என்ன? உன் சந்தேகங்கள் தீர்ந்ததா?

எஸ்தர்: இல்லை அம்மான், என் கேள்விகள் முடியவில்லை, இன்னும் இருக்கு. 
இப்போது நான் கேட்பது மிகவும் முக்கியமான கேள்வி. 

அம்மான், ஒரு முஸ்லிம் நான்கு திருமணங்களை செய்துக்கொள்ளலாம் என்று இஸ்லாம் சொல்கிறது என்று நான் கேள்விபட்டுள்ளேன், இது உண்மையா?

அம்மான்: ஆம், இது உண்மை தான். இஸ்லாமில் ஒரு முஸ்லிம் நான்கு திருமணங்களை செய்துக்கொள்ளலாம்.

எஸ்தர்: அப்படியானால், ஒரு முஸ்லிம் இரண்டாம், மூன்றாம் திருமணம் செய்யும் போது, அவன் முதல் மனைவியின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லையா?

அம்மான்:  இல்லை, அனுமதிபெறத் தேவையில்லை.  
எஸ்தர்,  உனக்கு ஏன் இதைப்பற்றியெல்லாம் கேள்வி எழுகிறது? இதற்கும் நமக்கும் என்ன சம்மந்தம் சொல்லு?

எஸ்தர்: சம்மந்தம் இருக்கு அம்மான். நான் இப்படி கேட்கிறேன் என்று கோபம் கொள்ளவேண்டாம். இஸ்லாம் அனுமதி அளிப்பது போல, நீ எதிர் காலத்தில் இரண்டாவது, மூன்றாவது நான்காவது திருமணம் செய்துக்கொள்வாயா?

மொர்தெகாய்: என்னம்மா! இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாய்? நீ வேறு எதையோ கேட்பதாக நான் நினைத்தேனே!

எஸ்தர்: டாடி, இது என் வாழ்க்கை. காதலுக்கு கண்ணில்லை என்றுச் சொல்வார்கள். ஆனால், என்னைக் கேட்டால், காதலுக்கு பார்க்கின்ற கண்கள், கேட்கின்ற காது, சிந்திக்கின்ற அறிவு இருக்கவேண்டும். 

அம்மான்: பாரு எஸ்தர், நீ தான் என் மனைவி, நான் உன்னையே உயிரினும் மேலாக நேசிக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே. உன்னைத் தவிர வேறு யாரையும் நான் விரும்பமாட்டேன் சரியா? இப்போது சந்தோஷமா?

எஸ்தர்: ரொம்ப சந்தோஷம் அம்மான். ஆனால், என் கேள்விக்கு  முழுமையான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதே கேள்வி மறுபடியும் வருகிறது. நாம் சௌதியில் வாழப்போவதினால், ஒருவேளை நீ இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு, திடீரென்று ஒரு பெண்ணை கொண்டு வந்து என் முன் நிறுத்தினால், நான் அந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும்?

உன்னுடைய இந்த இரண்டாவது திருமணம் செல்லாது என்றுச் சொல்லி, உன் மீது வழக்கு தொடர எனக்கு அனுமதி உண்டா? அல்லது உன்னை விட்டு விட்டு, என் பெற்றோர்களிடம் வந்துவிடவேண்டுமா? அல்லது ஒரு முஸ்லிமுக்கு வாழ்கை பட்டதினால், இது தான் என் தலைவிதி என்றுச் சொல்லி என்னை நானே நொந்துகொண்டு ஒரு நடைப்பிணம் போல வாழ வேண்டுமா?

அம்மான்: ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாய், என் மனது வேதனை அடைகிறது.

எஸ்தர்: அம்மான். நான் என்ன செய்யட்டும்? எனக்குச் சொல்லு?

அம்மான்: உன்னை சரியாக யாரோ குழப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எஸ்தர்: அம்மான், இது குழப்பமல்ல, இது நிஜம். அனேகரின் வாழ்க்கையில் நடக்கும் நிஜம். எனக்கு உன் பதிலைச் சொல்லு?

அம்மான்: என் மீது வழக்கு தொடர உனக்கு இஸ்லாமிய சட்டத்தில் அனுமதி இல்லை. மேலும் சௌதியில் நாம் வாழும் போது, என் அனுமதி இன்றி நீ வெளியே செல்லமுடியாது, உன் பெற்றோர்களை பார்க்க இந்தியா வரமுடியாது. எல்லாவற்றுக்கும் என் அனுமதி வேண்டும். 

நீ நினைக்கிற மாதிரி நடக்காது, என்னை நம்பு எஸ்தர், நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்.

எஸ்தர்:  உன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு அம்மான், நீ இப்படியெல்லாம் செய்யமாட்டாய். ஆனால், காலம் இப்படியே இருக்கப்போவதில்லை. சௌதியில் மற்றவர்களின் செய்கைகளைக் கண்டு ஒருவேளை நீ மாறிவிட்டால் எப்போது என் நிலை என்ன?

[அம்மானின் முகநாடி சிறிது மாறியது, கோபமாக அவர் பேச ஆரம்பிக்கிறார்]

அம்மான்: சரி எஸ்தர் இதற்கு பதில் சொல்லு, ஒரு வேளை நீ ஒரு கிறிஸ்தவனையே திருமணம் செய்துக்கொண்டாலும், அவன் இரண்டாவது மனைவியை அல்லது வைப்பாட்டியை வைத்துக்கொள்ளமாட்டன் என்று என்ன நிச்சயம்? அப்போது நீ என்ன செய்வாய்?

எஸ்தர்: நல்ல கேள்வி கேட்டாய் அம்மான். ஒரு கிறிஸ்தவனையோ, இந்துவையோ ஒரு பெண் திருமணம் செய்துக்கொண்டால், அவன் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளும் போது, அல்லது வைப்பாட்டியை வைத்துக்கொள்ளும் போது, சட்டப்படி அவன் மீது வழக்கு தொடர ஒரு பெண்ணுக்கு அதாவது முதல் மனைவிக்கு இந்தியாவில் உரிமை உண்டு? ஆனால், இதே உரிமையை இஸ்லாம் பறித்துக்கொண்டு, எங்களை நடு ரோட்டில் அநாதையாக விட்டுவிடுகிறதே! இதற்கு என்ன பதில்?

கிறிஸ்தவ சமுதாயத்தில், இந்து சமுதாயத்தில் ஒருவன் பகிரங்கமாக இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டால், அவனை சட்டம் தண்டிக்கும், சமுதாயம் அவனை கேவலமாக பார்க்கும். ஆனால், இஸ்லாமிய சட்டமே ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள்வரை அனுமதி அளிக்கும் போது, அந்த முதல் மனைவியின் நிலை எப்படி இருக்கும்? அவள் மனது என்ன பாடு படும்? 

என் மனைவி எனக்கு மட்டுமே மனைவியாக இருக்கவேண்டும் என்று ஒரு ஆண் விரும்புவது நியாயம் என்றுச் சொன்னால், என் புருஷன் எனக்கு மட்டுமே புருஷனாக இருக்கவேண்டும் என்று ஏன் பெண்கள் கருதுவது குற்றமாக இஸ்லாமுக்கு தெரிகின்றது?

அம்மான்: நீ வரம்பு மீறி பேசுகிறாய்.

எஸ்தர்: மன்னிக்கனும் அம்மான், என் வாழ்க்கையின் வரம்பு எதுவென்று நான் தெரிந்துக்கொள்ளவேண்டாமா?

நான் இரண்டாவது திருமணத்தைச் செய்யமாட்டேன் என்று எனக்கு உறுதி மொழி கொடு! 

அம்மான்: எஸ்தர் உனக்கு உலக அறிவு குறைவு, நீ பேசுகிறது என்னவென்று உனக்கே தெரியவில்லை.

எஸ்தர்: எனக்கு உலக அறிவு குறைவாக இருக்கலாம், ஆனால், இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு உள்ளது. எனக்கே புருஷனாக இருக்க உங்களால் வாக்கு கொடுக்கமுடியுமா? கிறிஸ்தவத்திலே திருமணம் நடக்கும் போது, "நான் உனக்கே கணவனாக கடைசிவரை வாழுவேன்" என்று ஆண் வாக்கு கொடுக்கிறான். எதிர் காலத்தில் அவன் அப்படி செய்வானோ இல்லையோ, அது வேறு விஷயம். ஆனால், திருமண நாள் அன்று தன் மனைவியிடம் இப்படி கணவன் சொல்வது, அந்த பெண்ணுக்கு எவ்வளவு நிம்மதியாக  இருக்கும் தெரியுமா?  அந்த நிம்மதி, இஸ்லாமிலே எங்கே? தன் கணவன் விரும்பினால், இன்னும் மூன்று பேரை கல்யாணம் செய்துக்கொள்ளலாம் என்ற பயம் வாழ்நாளெல்லாம் அந்த பெண்ணை வாட்டிக்கொண்டேஇருக்குமே!

அம்மான்: சரி, உன் வழிக்கே வருகிறேன். ஒரு பேச்சுக்காக இன்று பொய்யாக உன்னிடம் வாக்கு கொடுத்துவிட்டு, எதிர் காலத்தில் உண்மையாகவே இரண்டாவது திருமணம் செய்தால் உன்னால் என்ன செய்யமுடியும் சொல்லு"?  

எஸ்தர்: ஓஹோ.. இப்படி கூட ஆண்களாகிய நீங்கள் செய்வீர்களோ!  அப்படியானால், வெறும் வாய் வழியாக வரும் வாக்கு எனக்குத் தேவையில்லை. எழுத்து மூலமாக எழுதி கொடுங்கள், "எஸ்தரின் கணவனாக இருக்கின்ற அம்மான் என்கின்ற நான், இரண்டாவது திருமணமே செய்துக்கொள்ளமாட்டேன், அப்படி செய்துக்கொண்டால், என் மீது வழக்கு தொடர எஸ்தருக்கு உரிமை உள்ளது" என்று எழுதிக்கொடுங்கள்.

அம்மான்: என்ன நீ? இப்படியெல்லாம் பேசுகிறாய். இது கொஞ்சமும் நல்லா இல்லை.

எஸ்தர்: அம்மான், நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழுவது கடினம். இந்த அக்கரையினால் தான் நான் இப்படி கேட்கிறேன். நீ எனக்கு முழுவதுமாக வாழ்வின் துணையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புவது தவறா?

மொர்தெகாய்: என்னம்மா எஸ்தர் இப்படியெல்லாம் கேட்கிறாய்?

எஸ்தர்: டாடி, இது மிகவும் முக்கிமான விஷயம். ஒரு ஆண் தன் முதல் மனைவிக்கு சொந்தமான அன்பை இன்னொருத்தியிடம் பகிர்ந்துக் கொள்வது அநியாயம். அதுவும் இஸ்லாமில் இன்னொருத்தி இல்லை, இன்னும் மூன்று பேர்கள் வர வாய்ப்பு இருக்கிறது. 

தன் கணவன் இன்னொருத்தியை திருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று வாழ்நாளெல்லாம் எண்ணி எண்ணி ஒரு பெண்ணால் வாழமுடியாது. 

டாடி, அம்மான் என்ன சொன்னார் என்பதை  பாருங்கள், வாக்கு கொடுத்தாலும், அதை நிறைவேற்றுவார் என்பதில் என்ன நிச்சயம் என்று கேட்கிறார். அதனால் தான் எழுதிக்கொடுங்கள் என்று கேட்கிறேன்.

அம்மான்: எஸ்தர், நீ சொன்னது போல, எழுதி கொடுக்கமுடியாது. கணவன் மனைவிக்கு இடையில் இப்படிப்பட்ட ஒப்பந்தம் போடுவது என்பது சரியாக தோன்றுகிறதா? 

எஸ்தர்: உண்மை தான், கணவன் மனைவி இடையில் இருக்கவேண்டியது அன்பு தானே தவிர ஒப்பந்தம் அல்ல. 

அம்மான்: எனக்கு நம் திருமண வாழ்க்கைப் பற்றி அக்கரையில்லையா? உன்னை அநாதையாக விட்டுவிடுவேனா? 

எஸ்தர்: அம்மான், உன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. நீ ஒரு ஆண், திருமணத்திற்கு பிறகு உன்னை விட, நான் தான் அதிகம் பாதிக்கப்படுவேன். 

அம்மான்: எஸ்தர், இப்படியெல்லாம் நடக்காது? நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்.

எஸ்தர்: சரி, நான் நம்புகிறேன். ஒரு ஆணுக்கு இஸ்லாம் நான்கு மனைவிகளை அனுமதிக்கிறதே, இதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

அம்மான்: எஸ்தர், நீ தனிப்பட்ட வாழ்க்கைக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுகிறாய்? உன்னை நான் சந்தோஷமாக பார்த்துக்கொள்வேன்.

எஸ்தர்: இஸ்லாமிலே, தனிப்பட்ட சுய வாழ்க்கை என்று ஒன்று உண்டா அம்மான்? பெண்களாகிய எங்களை வேலைக்கும் அனுப்பாமல், எங்களுடைய  ஒவ்வொரு தேவைக்கும் வீட்டில் சம்பாதிக்கும் ஆணின் முகத்தையே நாங்கள் பார்த்து இருக்கவேண்டும். மேலும், ஆண்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கவோ, நீதி கேட்கவோ எங்களுக்கு இஸ்லாமிலே உரிமை இல்லாத போது, எப்படி எங்களால் சந்தோஷமாக வாழமுடியும். 

அம்மான், ஒரு உண்மையான முஸ்லிமுக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று உண்டா? அவனது எல்லா நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது இஸ்லாமில்லையா? 

சரி, விஷயத்துக்கு வருகிறேன். ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொள்வது நியாயமா? அநியாயமா?

அம்மான்: பாரு எஸ்தார், என்னால் இதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. நான் இஸ்லாமை விமர்சிக்கமாட்டேன். அல்லாஹ்வின் கட்டளைகளில் பிழை இருக்காது. 

எஸ்தர்: அப்படியானால், ஒரு இஸ்லாமிய ஆண், தன் முதல் மனைவியின் அனுமதியின்றி, மேலும் மூன்று பெண்களை திருமணம் செய்துக்கொள்வது நியாயம் தான் என்றுச் சொல்கிறீர்கள்? அப்படித் தானே?

அம்மான்: ஆம், அப்படித்தான். ஆனால், நான் உனக்கு வாக்கு கொடுக்கிறேன், உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன். 

எஸ்தர்: உங்களுடைய சகோதரியின் கணவர், இன்னும் மூன்று பெண்களை திருமணம் செய்துக்கொண்டால், நீங்கள் வேதனை அடையாமல் இருப்பீர்களா?

அம்மான்: என் சகோதரியின் கணவர் அப்படி செய்யமாட்டார், எனக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது. இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதால் எல்லா முஸ்லிம்களும் அப்படி செய்வதில்லை. 

போதும் எஸ்தர் போதும்.  இஸ்லாம் பற்றிய விஷயத்தில் நீ இனி தலையிடாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.  உன்னுடைய கேள்விகள் மூலமாக நீ என்னை உயிரோடு கல்லறையில் வைக்கிறாய்! நான் அதிகமாக வேதனை அடைந்துள்ளேன்.

எஸ்தர்: அம்மான், கோபம் கொள்ளாதே, இப்படியெல்லாம் கேட்கிறேன் என்றுச் சொல்லி என்னை தப்பாக நினைத்துக்கொள்ளாதே. நான் என்ன செய்வேன் சொல்லு? நீ சௌதியில் நாம் செட்டில் ஆகிவிடலாம் என்றுச் சொல்கிறாய். இஸ்லாமிய நாடுகள் பற்றி நான் ஓரளவிற்கு அறிந்துள்ளேன். இஸ்லாமிய நாடுகளில், முஸ்லிம் குடும்பங்களில் பெண்களின் நிலை பரிதாபமானதே. 

நான் உன்னை உயிரோடு கல்லறையில் வைக்கவில்லை, என்னுடைய கல்லறையை நானே மரணத்திற்கு முன்பாக கட்டிக்கொள்கிறேனோ என்ற பயத்தினால் தான் நான் இப்படி கேள்விகளை கேட்கிறேன்.

மொர்தெகாய்: அம்மா எஸ்தர், அவர் தான் உனக்கு வாக்கு கொடுத்தார் அல்லவா? இனி என்ன கவலை உனக்கு.

அம்மான்: அங்கிள், நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டது போல, எஸ்தர் புரிஞ்சுக்கவில்லை. 

எஸ்தர்: அப்படியெல்லாம் சொல்லாதே அம்மான். நான் உன் மேலே அதிகமாக அன்பு வெச்சிருக்கிறேன். 

அம்மான்: சரி போகட்டும், உன் சந்தேகங்கள் தீர்ந்ததா அல்லது இன்னும் இருக்கா?

எஸ்தர்: இன்னும் இருக்கு அம்மான். நீ இன்னும் என் கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே. ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொள்வது சரி என்றுச் சொல்கிறாய். நாளைக்கு அந்த சரியான வேலையை நீ செய்யமாட்டாய் என்று என்ன நிச்சயம்? என் மதம் அனுமதிக்குது, நான் செய்கிறேன் என்று நீ சொன்னால் நான் என்ன செய்வேன்?

அம்மான்: !?! ம்ம்ம். . .  எஸ்தர், என் மதம் எனக்கு முக்கியம். அதை மற்றவர்கள் விமர்சிப்பதை என்னால் அனுமதிக்கமுடியாது. 

எஸ்தர்: மதம் எதைச் சொன்னாலும் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்வாயா?

அம்மான்: ஆம் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். இனி எந்த கேள்வியையும் என்னிடம் கேட்கவேண்டாம்.

[இந்த பதிலினால் எஸ்தர் நொந்துப்போய் விட்டாள், விரக்தியாக...மௌனமாக இருந்துவிட்டாள்]

அம்மான்:  சரி நாளைக்கு வருகிறேன். மீதமுள்ளதை அப்போது பேசிக்கொள்வோம். 

நான் வீட்டுக்கு கிளம்புறேன். குட் நைட் அங்கிள், நாளைக்கு பார்க்கலாம்.

[அம்மான் எழுந்துச் செல்கிறார்… அவர் பின்னாலேயே எஸ்தர் மௌனமாக  செல்கிறார். எஸ்தர் தன்னை சுதாரித்துக்கொள்கிறாள்.]

எஸ்தர்: அம்மான், என் மிது கோபம் இல்லையே!

அம்மான்: அதெல்லாம் ஒன்னுமில்லை. மனசை குழப்பிக்கொள்ளாமே, நிம்மதியா தூங்கு. நாளைக்கு பார்ப்போம். 

[அம்மானை வாசல்வரை வந்து வழி அனுப்பிவிட்டு, எஸ்தர் உள்ளே வருகிறாள்]

மொர்தெகாய்: என்னம்மா நீ, இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாய்? அவருக்கு கோபம் வந்து சென்றுவிட்டால் என்ன செய்வே சொல்லு?

எஸ்தர்: எந்த சந்தேகத்தையும், கல்யாணத்துக்கு முன்பு தீர்த்துக்கொள்வது தான் சரியானது. கல்யாணம் ஆகிவிட்டால், அதன் பிறகு எதனையும் நாம் திரும்பிப் பெறமுடியாது. இன்னும் எனக்கு அனேக கேள்விகள் இருக்கு. நாளைக்கு கேட்பேன், நான் சும்மா விடமாட்டேன். எனக்கு 100 சதவிகிதம் நம்பிக்கை வரும்வரை என் கேள்விகள் தொடரும் டாடி. 

மொர்தெகாய்: ஒருவேளை உன்னுடைய கேள்விகள் அவரை துக்கப்படுத்தி, நான் உன்னை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்று அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வாய்?

எஸ்தர்: உண்மையாக நீங்க சொன்னது போல நடந்தாலும் ரொம்ப நல்லது, ஏனென்றால், நான் அவரை காதலிக்கிறேன் என்பதால், முட்டாள் தனமான முடிவுகளை நான் எடுக்கமாட்டேன். எங்கள் இருவரின் நட்பு இப்போது தான் ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளது, மேலும் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எல்லா சந்தேகங்களையும் நான் இப்போது கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை அவரது நிலையில் எனக்கு திருப்தி இல்லை என்று நான் கண்டுபிடித்தால், நானே அவரது காதலை முறித்துவிடுவேன்.  

டாடி, நான் முட்டாள் இல்லை. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை மட்டும் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று நாம் பைபிளில் படிக்கிறோம். அதை செயல்முறைப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பு இது. 

பார்க்கலாம் டாடி, என் வாழ்க்கையில் நான் செய்த ஒரு சிறிய தவறு, ஒரு  முஸ்லிமை காதலித்தது. அந்த சிறிய தவறு பெரிய தவறாக மாறாமல் இருக்கத்தான் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. எது எப்படியோ, கர்த்தரின் கிருபையால் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு சென்றுவிட்டால் நல்லது. 
-----------------------------------------------

இதோடு "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்  - பாகம் 7"  முடிவு பெறுகிறது. அடுத்த பாகத்தில் எஸ்தர் கேட்கும் இதர கேள்விகளுக்கு எப்படி "அம்மான்" பதில்களைச் சொல்கிறார் என்பதை பார்ப்போம்.  

எஸ்தரும் அம்மானும் திருமணம் செய்துக் கொள்வார்களா? 
அம்மான் கோபம் கொண்டு, தன் காதலை முறித்துக்கொள்வாரா? 
அல்லது எஸ்தர் அம்மானை திருமணம் செய்துக்கொள்ள மறுத்துவிடுவார்களா?

இவைகளை அறிந்துக்கொள்ள அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.

குறிப்பு: இந்த நிகழ்ச்சியில் வரும் நபர்களின் பெயர்கள் ஏன் மொர்தெகாய், எஸ்தர், அம்மான் என்று வைத்துள்ளேன்? சிந்தித்துப் பாருங்கள். 



Source : http://isakoran.blogspot.in/2013/06/7.html

June 24, 2013

பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்கள் அல்லவா? இப்படியிருக்க ஏன் இஸ்லாமை நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?


பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்கள் அல்லவா? இப்படியிருக்க ஏன் இஸ்லாமை நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?


(இஸ்லாம் விமர்சனத்திற்கு  அப்பாற்பட்டதா?)

  • இஸ்லாமை ஏன் எல்லாரும் விமர்சிக்கிறார்கள்?
  • எங்கு தாக்குதல் நடந்தாலும், சிந்திக்காமல் உடனே விரல்கள் முஸ்லிம்களுக்கு நேராக நீட்டப்படுகின்றது?
  • காவல்துறை ஆய்வு செய்து "தீவிரவாதிகள் இவர்கள் தான்" என்று அடையாளம் காட்டப்படுவதற்கு முன்பாக, இஸ்லாமியர்கள் தான் குற்றவாளிகள் என்று சொல்லப்படுகின்றது?
  • உலகில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாகவும், மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும் வாழுகிறார்கள் அல்லவா? இப்படி இருக்கும் போது ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறீர்கள்?

இஸ்லாமியர்கள் மனவேதனை அடைந்து மேற்கண்ட விதமாக கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. ஏதோ ஒரு சில முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள், இதர வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக இஸ்லாமை விமர்சிப்பது சரியா? 

இதே போல, இதர மார்க்கத்தை எடுத்துக்கொண்டாலும், பெரும்பான்மையான மக்கள் நல்லவர்களாக வாழுகிறார்கள், சமுதாயத்திற்கு தீமை விளைவிக்காமல் வாழுகிறார்கள். சில சதவிகித மக்கள் மட்டுமே சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கிறார்கள்.

ஆனால், உலகம் இதர மார்க்கத்தை அதிகமாக விமர்சிப்பதில்லை, இஸ்லாமை மட்டும் அதிகமாக விமர்சிக்கிறது? இது ஏன்? 

இந்த கேள்விகளுக்கு நாம் பதிலை கீழ்கண்ட  தலைப்புக்களில் காணலாம்:

1) இதர  மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதமா (மார்க்கமா)?

2) இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறது.

3) பெரும்பான்மை ஆதரிக்கிறது என்பதால், விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?

4) முதலாவது, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க முஸ்லிம்களுக்கே அதிக உரிமை உள்ளது

5) இரண்டாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்)அடுத்தபடியாக உரிமை உள்ளது

6) மூன்றாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க மற்றவர்களுக்கு (முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு)  அடுத்தபடியாக உரிமை உள்ளது

முடிவுரை
--------------------------------------


1) இதர  மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதமா (மார்க்கமா)?

இதில் என்ன சந்தேகம்? இஸ்லாம் கூட மற்ற மதங்களைப் போலவே ஒரு மதம் தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், பிரச்சனை இங்கே தான் இருக்கிறது.

இஸ்லாம் என்பது கிறிஸ்தவத்தைப் போல, இந்து மதம் போல ஒரு மதம் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு அரசியல் கட்சியாகும். இஸ்லாமுடைய முக்கிய நோக்கம், உலக மக்களுக்கு இஸ்லாம் பற்றி போதனை செய்து, எல்லோரையும்  இஸ்லாமியர்களாக மாற்றுவது மட்டுமல்ல, அதே நேரத்தில், உலகத்தை ஒரு அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதாகும். அதாவது அலேக்சாண்டர் ஆசைப்பட்டது போல, உலகம் அனைத்தையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவது தான் இஸ்லாமின் முக்கிய நோக்கம். 

இஸ்லாமில் மத சடங்குகள், வணக்க வழிபாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், அதையும் தாண்டி, உலகம் அனைத்திலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு கொண்டுவருவது தான் முஸ்லிம்களின் பிரதானமான நோக்கம்.

இதனை அறிய, நீங்கள் உலக செய்திகளை பார்க்கவேண்டும். முஸ்லிம்கள் ஒன்று திரண்டி கோஷமிட்டால் என்ன சொல்வார்கள் என்று கவனித்துப்பாருங்கள். முக்கியமாக ஐரோப்பாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் கோஷங்கள் போட்டுக்கொண்டு, செல்லும் முஸ்லிம்களின் கைகளில் இருக்கும் பெயர் பலகைகளை பார்த்தால்:

"இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆட்சி செய்யும்"
"அமெரிக்காவிற்கு மரணம்"
"முஸ்லிம்கள் உலகை ஒரு நாள் ஆளுவார்கள்"
"எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, வெறும் இஸ்லாம் தான் வேண்டும்."
"இஸ்லாமை கேவலப்படுத்தியவனைக் கொல்லுங்கள்" 

போன்றவைகளை நாம் காணமுடியும். இஸ்லாமியர்களின் மேற்கண்ட விதமான செய்திகள் அடங்கிய படங்களை காண இந்த கூகுள் தொடுப்பை சொடுக்குங்கள்: - http://www.google.co.in/search?q=islamic+violence+banners&bav=on.2,or.r_qf.&biw=1366&bih=667&um=1&ie=UTF-8&hl=en&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=S5-8UcTRNIHtrAftm4G4CQ

ஒரு மதத்தை பின் பற்றுபவனுக்கு, அதாவது முஸ்லிமுக்கு, தன் மார்க்கத்தை விமர்சிப்பவனை கொல்லவேண்டும் என்ற வெறி எங்கேயிருந்து வருகிறது?  இஸ்லாமை விமர்சிப்பவன் கொல்லப்படவேண்டும் என்று அவன் துடிக்கிறான்? இஸ்லாம் ஒரு மதமாக மட்டும் இருக்குமானால், இப்படியெல்லாம் அவன் சிந்திப்பானா?  

இதர மார்க்கங்களின் மக்களுக்கு இப்படியெல்லாம் வெறி பிடிப்பதில்லையே அது ஏன்?  கிறிஸ்தவத்தை விமர்சித்தால், இயேசுவை விமர்சித்தால், அப்படி விமர்சிப்பவன், கேவலமாக பேசுபவன் கொல்லவேண்டும் என்ற உணர்வு அல்லது எண்ணம் ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு வருவதில்லை?

இப்படி நடந்துக்கொள்ளும் படி ஒரு முஸ்லிமை தூண்டுவது எது? 

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு மதம் பிடித்த அரசியல் யானை? தனக்கு முன்பு எது வந்தாலும், அந்த யானை மிதித்துப்போட்டு, நாசமாக்கிவிடும். அந்த மதம் பிடித்த யானையின் குட்டிகள் தான் "உலகை ஒரு நாள் இஸ்லாம் ஆளும்" என்றுச் சொல்லி கோஷமிடும் அந்த சில முஸ்லிம்கள். 

ஆக, இஸ்லாம் ஒரு மதம் மட்டும் தான் என்று எண்ணுவது தவறு.

2) இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறது.

நாம் உலக மதங்களின் சரித்திரத்தை கவனித்தால், ஏதோ ஒரு கால கட்டத்தில் அவைகளின் பெயரை வைத்துக்கொண்டு சில சமூக சீர்கேடுகள் அல்லது வன்முறைகள் நடந்து இருப்பதை காணமுடியும். 

உதாரணத்திற்கு, கிறிஸ்தவத்தை எடுத்துக்கொள்வோம், ஒரு கால கட்டத்தில், கத்தோலிக்க போப்புக்கள் அனேக தீய செயல்களுக்கு காரணமாக இருந்தார்கள், தங்கள் சபை சொல்வதற்கு எதிராக விமர்சிப்பவர்களை இரக்கமின்றி தண்டித்தார்கள், மேலும் சிலுவைப்போர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அதே கத்தோலிக்க சபையில் இருந்த பாஸ்டர்கள், சீர்திருத்தம் தேவை என்பதை உணர்ந்தார்கள், பைபிளுக்கு எதிராக சில தீய மனிதர்கள் செய்த கொடுமைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள். இது பைபிளுக்கு எதிரான போதனை என்பதை உலகம் அறியும் படி செய்தார்கள். சீர்திருத்தம் வந்தது, மக்கள் மறுபடியும் பைபிளுக்கு நேராக திரும்பினார்கள்.

இன்னொரு உதாரணம், நம் இந்தியாவில் நடந்த மத சம்மந்தமான சமூக கேடுகளைச் சொல்லலாம். அதாவது சிறுவயதில் திருமணம் செய்தல், கணவன் மரித்துவிட்டால், அவனோடு கூட அவன் மனைவியையும் சேர்த்து எரித்துவிடுதல் போன்ற தீய செயல்கள் ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால், அனேகரின் முயற்சியால், இந்த தீய பழக்கம் இப்போது விடப்பட்டுள்ளது, ஒருவகையாக எல்லா இந்துக்களும் அந்த தீய செயல்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து மத மறுமலர்ச்சியை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால், இஸ்லாம் இப்படி சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இஸ்லாமில் உள்ள தீய காரியங்களை வெளியே சொல்லும் போது, இவர்கள் அதனை எதிர்க்கிறார்கள், உண்மை சொல்பவர்களை தாக்குகிறார்கள். இவர்களுக்கு துணையாக குர்-ஆன் உள்ளது. மூல நூல்கள் சரியாக இருந்து, அதனை பின்பற்றுபவர்கள் தவறாக நடந்துக்கொள்ளும் போது சீர்திருத்தம் சாத்தியமாகும். ஒரு கால கட்டத்தில், அந்த மூல நூல்களை மக்கள் படித்து, உண்மையை அறிந்துக்கொள்ளும் போது, அந்த மார்க்கம் சீர்திருத்தம் அடைந்துவிடும். சிலுவைப்போர்கள், இதர சமூக கேடுகள் அனைத்தும், பைபிளை மக்கள் கைகளிலிருந்து மறைத்த போது காணப்பட்டன. ஆனால், மக்கள் பைபிளை படித்து உண்மை எது என்று அறிந்துக்கொண்டபோது, மதத்தின் பெயரால் செய்யப்பட்ட தீய செயல்கள் மறைந்துவிட்டன. 

இஸ்லாமை பொறுத்தமட்டில், சமூக தீய செயல்களுக்கு காரணம் முஸ்லிம்கள் குர்-ஆனை தவறாக புரிந்துக்கொண்டதால் உண்டாகவில்லை. குர்-ஆனே அவைகளை செய்யச் சொல்வதினாலும், முஹம்மதுவின் வாழ்க்கையிலிருந்த சில விஷயங்களை முஸ்லிம்கள் பின்பற்றுவதினாலுமே இந்த சீர் கேடுகள் நடக்கிறது. எனவே, மக்கள் தங்கள் மதத்தை தவறாக புரிந்துக்கொண்டு இருந்தால், அவர்களின் மதத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவரலாம், ஆனால், இஸ்லாமின் மூல நூலே சமூகத்திற்கு கேடு விளைக்கிறது என்பதினால், இஸ்லாமை சரி செய்ய அல்லது அதில் சீர்த்திருத்தத்தை கொண்டு வரமுடியாது. 

இதனை புரிந்துக்கொண்ட உலகம், இஸ்லாமை விமர்சிப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இஸ்லாம் இல்லை, இதற்காகவே அது அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. இஸ்லாமில் சீர்திருத்தம் கொண்டுவர முயற்சித்த இஸ்லாமியர்கள் கொடுமையாக நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். இனி இஸ்லாமுக்குள் சீர்திருத்தம் கொண்டுவரமுடியாது என்பதை உலகம் அறிந்துக்கொண்டு விமர்சிக்கிறது.

3) பெரும்பான்மை ஆதரிக்கிறது என்பதால், விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?

பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் எந்த ஒரு தீய செயல்களில் வன்முறைகளில் ஈடுபடாமல் அமைதியான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும் தீவிரவாத செயல்களில், வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். உண்மை இப்படி இருக்க  ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறீர்கள்? அதனை பின்பற்றுபவர்களில் 99% (+) சதவிகித மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லவா? இப்படி இருக்க ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறார்கள்?  என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள். 

மேலோட்டமாக பார்த்தால், இவர்களின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும். ஆனால், இந்த வாதம் சரியானதா என்பதை நாம் பரிசோதிக்கவேண்டும், இதனை அறிந்துக்கொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள்.

அனேக ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களில்  பெரும்பான்மையானவர்களுக்கு புற்று நோய் வருவதில்லை. சிலருக்கு மட்டுமே புகைபிடிப்பதினால் புற்று நோய் வருகிறது. உண்மை இப்படி இருக்க, 

மக்கள் புகை பிடிக்கக்கூடாது என்றுச் சொல்லி. சிகரெட் பெட்டிகளில் ஏன் புற்று நோய் பற்றிய எச்சரிக்கை செய்தியை அரசாங்கம் வெளியிடுகிறது?
ஆங்காங்கே புகை பிடிப்பதினால் உண்டாகும் ஆபத்தை ஏன் அரசாங்கம் விளம்பரப்படுத்துகிறது?
புகைபிடிப்பதற்கு எதிராக ஏன் அனேக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது?
புகைபிடிப்பது ஏன் விமர்சிக்கப்படுகிறது?

இப்படி புகைபிடிப்பவர்கள் கேள்வி கேட்டால், இவர்களை நாம் என்னவென்றுச் சொல்வோம்?

இதைப்போலத் தான் இஸ்லாமியர்களின் லாஜிக்கும் இருக்கிறது.  புகை பிடிப்பதினால் பெரும்பான்மையானவர்களுக்கு புற்றுநோய் வருவதில்லை என்பதற்காக, நாம் புகை பிடிப்பதை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?  புகை பிடிப்பதினால் வரும் ஆபத்துக்களை அலசி ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை கொடுக்காமல் இருக்கமுடியுமா?  இதைப்போலவே, அனேகர் அமைதியாக இருக்கிறார்கள் என்பதால், இஸ்லாமை விமர்சிக்காமல் கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது. உலகம் அல்லல்படுவது அந்த ஒரு சிலர் முலமாகத் தான். அந்த ஒரு சிலரை உருவாக்குவது யார்? அவர்களை உற்சாகப்படுத்துவது எது? அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட  அவர்களுக்கு ஆசை காட்டுவது யார்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் "இஸ்லாமும், குர்-ஆனும், அல்லாஹ்வும், அவனது இறைத்தூதரும் தான்". எனவே, இஸ்லாமை படித்து கேள்வி கேட்பது சரியானதே.
4) முதலாவது, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க முஸ்லிம்களுக்கே அதிக உரிமை உள்ளது

அருமையான இஸ்லாமியர்களே,  இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த உங்களுக்கே இஸ்லாமை கேள்விகேட்கவும், அதனை விமர்சிக்கவும் உரிமை உள்ளது.  ஏனென்றால், அது உங்கள் மார்க்கம், அதனை முழுவதுமாக அறிந்துக்கொள்வது உங்கள் உரிமை, இதனை யாரும் தடுக்க முடியாது.  குர்-ஆனை அரபியில் ஓதுங்கள் என்று சொல்லும் உங்கள் அறிஞர்களுக்கு, நீங்கள் குர்-ஆனை தமிழில் படிப்பதை தடை செய்யமுடியாது.  உங்கள் மூல நூல்களை நீங்கள் படிக்க முன்வரும் போது, அவைகளை படிக்கவேண்டாம், நாங்கள் சுருக்கமாக உங்களுக்கு அறிவிக்கிறோம், நாங்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே படியுங்கள் என்றுச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை.
நீங்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கும் போது, அதிகமாக கேள்விகளை கேட்கவேண்டாம் என்றுச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை.   முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை அனேக மூல நூல்களில் நீங்கள் படிக்க முன்வரவேண்டும்.  உங்களை விட உங்கள் முஹம்மதுவின் நடத்தைகள் மேன்மையுள்ளதாக இருக்கின்றனவா என்று நீங்கள் ஆய்வு செய்து பார்க்கவேண்டும். 

நீங்கள் உங்கள் இஸ்லாமை கேள்வி கேட்க மறுத்தால், இஸ்லாமியரல்லாதவர்கள் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள்.  முதலாவது  இஸ்லாமை முழுவதுமாக அறியும் உரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறக்கவேண்டாம். 

5) இரண்டாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்)அடுத்தபடியாக உரிமை உள்ளது

அது எப்படி? கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்) இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க அடுத்தபடியான உரிமை உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.  இதற்கு பதில் மிகவும் சுலபமானது, அதாவது கிறிஸ்தவ யூத மார்க்க வேத நூல்களில் உள்ள விவரங்களை குர்-ஆன் எடுத்துக்கொண்டு, அவைகளை மாற்றி எழுதியுள்ளது. மேலும் முஹம்மது தன்னை பைபிளின் வழியாக வந்த தீர்க்கதரிசி என்றும், பைபிளின் தேவன் தான் அல்லாஹ் என்றும் இஸ்லாம் கூறுவதினால், கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் இஸ்லாமை ஆய்வு செய்ய, விமர்சிக்க கேள்வி கேட்க அதிக உரிமை பெறுகிறார்கள். 

மேலும், அனேக பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை குர்-ஆன் மறுப்பதினால், பைபிளை அது எதிர்ப்பதினால், குர்-ஆனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி குறுக்குவிசாரனை செய்ய கிறிஸ்தவர்களுக்கு அதிக உரிமை உள்ளது, இதனை யாரும் கிறிஸ்தவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளமுடியாது. 

கிறிஸ்தவர்களே, நம்முடைய பைபிளை விமர்சிக்கும் குர்-ஆனின் உண்மை நிலையை பரிசோதிக்க நமக்கு அதிக உரிமை உள்ளது என்பதை மறக்கவேண்டாம்.  நீங்கள் கண்டுபிடித்த இஸ்லாம் பற்றிய உண்மைகளை இதர மக்களுக்கு அறிவிப்பது உங்கள் மேல் விழுந்த கடமையாகும்.  அநீதியைப் பார்த்து "நீ அநீதியாக செயல்படுகிறாய்" என்றுச் சொல்ல நாம் தயங்கக்கூடாது.  "பொய்யைப் பார்த்து நீ பொய்" என்றுச் சொல்ல நமக்கு  உரிமை உள்ளது.  கிறிஸ்தவர்களே, இஸ்லாம் பற்றி விழிப்புணர்வு அடையுங்கள், மற்றவர்களுக்கும் விழிப்புணர்ச்சியை உண்டாக்குங்கள். 

6) மூன்றாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க மற்றவர்களுக்கு (முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு)  அடுத்தபடியாக உரிமை உள்ளது

முஸ்லிம்களுக்கு முதலாவது உரிமை உண்டு என்று சொன்னீர்கள், சரி, இதனை ஏற்றுக்கொள்ளலாம், அடுத்தபடியாக கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு என்றுச் சொன்னீர்கள், அதனையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இங்கு இந்துக்கள் எங்கே வந்தார்கள்? அவர்களுக்கு எங்கேயிருந்து உரிமை வந்தது? என்று சிலர் சந்தேகத்தோடு கேள்வி கேட்கலாம்.  இதற்கும் பதில் மிகவும் சுலமபமானது.  அதாவது, உங்கள் வீட்டில் ஒரு நாள் திருடன் வந்து திருடும் போது  அவனை தடுக்கும் உரிமை  உங்களுக்கு உண்டா இல்லையா? நீங்கள் சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, ஒரு திருடன் வந்து உங்கள் பணப்பையை திருடிவிட்டு ஓடினால், அவனை துரத்திக்கொண்டுச் சென்று அவனை பிடித்து உதைத்து, உங்கள் பணத்தை திரும்ப பெரும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா?  உங்கள் பதில் "ஆம், எனக்கு உரிமை உண்டு" என்றுச் சொல்வீர்கள்.

இதே போலத்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் நம்மீது வெடிகுண்டு வீசுகிறார்கள்.  வெடிகுண்டுகளை தங்கள் உடல்களில் கட்டிக்கொண்டு, பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும், வெடிக்கச்செய்து நம் குடும்பங்களை அழிக்கிறார்கள். ஓட்டல்களை பிடித்து, மக்களைத் தாக்கி குண்டு மழை பொழிந்து நாட்டில் இரத்த வெள்ளம் ஓடச்செய்கிறார்கள். இப்படி செய்பவர்கள், ஒரு சிலராக இருந்தாலும்,  அந்த ஒரு சிலர் பின்பற்றும் மதத்தை அறிந்துக்கொள்ள நமக்கு உரிமை உண்டு, கேள்வி கேட்க உரிமை உண்டு.   இந்துக்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு.   தீவிரவாதிகளின் செயல்களால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே எல்லாருக்கும் இஸ்லாமை கேள்வி கேட்க உரிமை உண்டு.

முடிவுரை:
பெரும்பான்மையான முஸ்லிம்கள் நல்லவர்களாக இருப்பதினால், இஸ்லாமை விமர்சிக்காமல் இருக்கமுடியாது? அந்த இஸ்லாமை தீவிரமாக பின்பற்றுவதினால் தான் அந்த சிலர் தீவிரவாதிகளாக இருப்பதினால், இஸ்லாம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படவேண்டும்.  குர்-ஆன் படிக்கப்படவேண்டும், ஹதீஸ்கள் மக்களுக்கு சென்றடையவேண்டும், மக்களுக்கு வரும் உண்மையான கேள்விகளுக்கு பதில்கள் சொல்லப்படவேண்டும்.  முஹம்மதுவின் உண்மையான வாழ்க்கை சரிதை முழுவதுமாக மக்களை சென்றடையவேண்டும். மக்களுக்கு வரும் சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும். விமர்சிப்பவர்கள் தாக்கப்படக்கூடாது.  மதங்கள் விமர்சிக்கப்படவில்லையென்றால், அவைகளால் சமுதாயத்திற்கு ஆபத்து வரும்.  

எல்லா மதங்களும், மனித கோட்பாடுகளும் ஆராயப்படவேண்டும், விமர்சிக்கப்படவேண்டும். அவைகளினால் சமுதாயத்திற்கு கேடு விளயுமானால், அதைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களுக்குத் தரவேண்டும். இதைத் தான் இஸ்லாமைப் பற்றி உலகம் செய்துக்கொண்டு இருக்கிறது.  ஏன் இஸ்லாம் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது என்று வேதனை அடையும் ஒவ்வொரு முஸ்லிமும் குர்-ஆனை படிக்கவேண்டும், ஹதீஸ்களையும் அறியவேண்டும், முஹம்மதுவின் வாழ்க்கையை படித்து வரும் சந்தேகங்களுக்கு பதிலைக் காண முயலவேண்டும். 

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதை பிடித்துக்கொள்ளவேண்டும், தீயதை விட்டுவிடவேண்டும், மற்றவர்களும் அவைகளை விட்டுவிட நம்மால்  முடிந்ததை செய்யவேண்டும். 

தமிழ் படிக்கத் தெரிந்த முஸ்லிமே, இந்த சிறிய கட்டுரையை படித்த பிறகும், உன் வீட்டில் ஒரு தமிழ் குர்-ஆன் வரவில்லையானால், நீ குர்-ஆனை தமிழில் படிக்க ஆரம்பிக்கவில்லையானால்   உன் இஸ்லாமை, மற்றவர்கள் கேள்வி கேட்பதை உன்னால் தடை செய்யமுடியாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள். நீ முதலாவது இஸ்லாமை அறிந்துக்கொள், கேள்விகளை கேட்டு தெளிவு பெற்றுவிடு, அப்போது தான் உன்னால் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில்களை தரமுடியும். 


Source : http://isakoran.blogspot.in/2013/06/blog-post_17.html

June 15, 2013

[ஈஸா குர்-ஆன் - Isa Koran] போப் பிரான்ஸிஸ் “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்று அறிவிக்கவேண்டுமாம்


போப் பிரான்ஸிஸ் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கவேண்டுமாம்

முன்னுரை:
அல்-அஜர் பல்கலைக்கழகத்தின் (எகிப்து) பிரதிநிதி, போப் பிரான்ஸிஸ் அவர்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இந்த வேண்டுகோள் ஒரு வேடிக்கையான ஒன்றாகும். 

இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று போப் அறிவிக்கவேண்டும்:
அல்-அஜர் பல்கலைக்கழக பிரதிநிதி(முஹம்மத் அப்துல் கவப்), தற்போதைய போப் பற்றி கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

வாடிகனோடு நல்லுறவை வைத்துக்கொள்ள மற்றும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். தற்போது போப்பாக இருக்கும் பிரான்ஸிஸ் அவர்கள், இதற்காக முயற்சி எடுக்கவேண்டும், இதற்கு அடையாளமாக அவர் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்று தன் சொற்பொழிவுகளில் அறிவிக்கவேண்டும்.

வாடிகனோடு எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, இதற்கு முன்பாக போப்பாக இருந்தவரோடு தான் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. அல் அஜர் பல்கலைக் கழகத்தின் கதவுகள் இப்போது திறக்கப்பட்டு இருக்கின்றது. 

பிரான்ஸிஸ் அவர்கள் தற்போது புதிய போப்பாக இருக்கிறார். எங்களோடு நல்லுறவிற்காக அவர் முன்னுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கிறோம். அதாவது அவர் ஏதாவது ஒரு சொற்பொழிவில், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றும்,  இஸ்லாமியர்கள் போர் புரியவும், வன்முறைகளில் ஈடுபடவும் விரும்புகிறவர்கள் அல்ல" என்றும் அவர் அறிவிக்கவேண்டும். இப்படி அவர் கூறிவிட்டால், அவர் எங்களோடு நல்லுறவு வைத்துக்கொள்ள முன்வருகிறார் என்று நாங்கள் கருதமுடியும்.

"An envoy from Al-Azhar in Cairo, raised the prospect of restoring ties with the Vatican yesterday but called on Pope Francis to take "a step forward" by declaring that Islam is a peaceful religion.
"The problems that we had were not with the Vatican but with the former pope. Now the doors of Al-Azhar are open," Mahmoud Abdel Gawad, diplomatic envoy to the grand imam of Al-Azhar, Ahmed Al-Tayyeb, told Italian daily Il Messaggero in Cairo.

"Francis is a new pope. We are expecting a step forward from him. If in one of his addresses he were to declare that Islam is a peaceful religion, that Muslims are not looking for war or violence, that would be progress in itself," he said."



இது அறியாமையா? அல்லது வஞ்சகமா?

மேற்கண்ட அறிவிப்பை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்திருக்கும்.  இது முஸ்லிம்களின் அறியாமையா அல்லது வஞ்சகமா?  இதைப் பற்றி சிறிது அலசுவோம். 

1. இஸ்லாமும் முன்னாள் போப்பின் அறிக்கையும்
முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள்  கீழ்கண்டவாறு ஒரு சொற்பொழிவில் கூறினார்:

Show me just what Muhammad brought that was new and there you will find things only evil and inhuman, such as his command to spread by the sword the faith he preached.[118]

புதிதாக முஹம்மது என்ன கொண்டு வந்தார்? என்று எனக்கு காண்பியுங்கள்.  அவர் கொண்டு வந்தவைகளில் தீய செயல்களும் மனிதாபமற்ற செயல்களும் தான் காணப்படும், அதாவது முஹம்மது நம்பிக்கையை வாளின் முனையில் பரப்புவதற்கு கட்டளை கொடுத்து போதனை செய்துள்ளார்.

 
போப்பின் இந்த அறிவிப்பிற்கு பிறகு அனேக வன்முறைகள் இஸ்லாமியர்களால் ஆங்காங்கே அரங்கேற்றப்பட்டது, திருச்சபைகள் தாக்கப்பட்டன, சொமாலியாவில் ஒரு பெண் துறவி கொல்லப்பட்டார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் இவரை கண்ட இடத்தில் கொல்லுங்கள், தாக்குங்கள் என்று அறிக்கைகள் வெளியிட்டார்கள். (மூலம்:

போப் எதை அறிக்கை செய்தாரோ, அதை இஸ்லாமியர்கள் செய்து காட்டி அவரது கூற்றை உண்மையாக்கினார்கள். இப்படியெல்லாம் நடந்துக்கொண்டுவிட்டு, ஒன்றுமே தெரியாதவர்கள் போல, போப்பின் கூற்றினால் நாங்கள் மனவேதனை அடைகிறோம் என்று கூறுகிறார்கள். 

இதை நாம் என்னவென்று அழைக்கமுடியும்? அறியாமையா? அல்லது வஞ்சகமா?

2. இஸ்லாமும் தற்போதய போப்பிடம் வைத்த வேண்டுகோளும்: 

முன்னாள் போப் இஸ்லாமை விமர்சித்தார்.  அவரது விமர்சனத்தில் உண்மையில்லை என்று வார்த்தைகளால் சொல்லும் இஸ்லாமியர்கள்,  தங்கள் செயல்களால், அவர் சொன்னது உண்மைத் தான் என்பதை நிருபித்தார்கள்.  இப்போது போப்பாக இருப்பவர், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கவேண்டுமாம். அப்போது தான் வாடிகனோடு இவர்களது உறவு மேம்படுமாம்.   இஸ்லாமியர்களின் இந்த வேண்டுகோளை நாம் சிறிது ஆழமாக கவனித்தால், கீழ்கண்ட  கேள்விகள் நமக்கு எழும்:

அ) வாடிகனோடு எங்களுக்கு பிரச்சனை இல்லை, முன்னாள் போப்போடு தான் எங்களுக்கு பிரச்சனை உள்ளது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அதாவது உலகில் யார் யாரெல்லாம் இஸ்லாமை உண்மையாக விமர்சிக்கிறார்களோ, அவர்களோடு முஸ்லிம்களுக்கு பிரச்சனை உண்டு.  அவர்களை கொலை செய்யவும், கொலை மிரட்டல்கள் விடவும், விமர்சனங்களை அடிப்படையாக வைத்துகொண்டு வன்முறைகளில் ஈடுபடவும் இவர்கள் ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி செய்யும் இவர்களுக்கு புதிய போப்பிடம் வேண்டுகோள் வைக்க என்ன தகுதியிருக்கிறது?

ஆ) மாற்று மத தலைவர்களிடம் சென்று "எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று அறிவிப்பு செய்யுங்கள்" என்று கேட்க இவர்களுக்கு வெட்கமாக தோன்றவில்லையா?

இ) ஒரு வேளை வேண்டுகோள் வைத்தாலும், அதனை எப்படி வைக்கவேண்டும்? அதாவது புதிய போப் அவர்களே, எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம், இதனை சரியாக புரிந்துக்கொள்ளாமல் உங்கள் முன்னாள் போப் விமர்சித்துவிட்டார், எனவே, நீங்கள் இஸ்லாமை படித்து தெரிந்துக்கொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டு இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, "எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று அறிவிப்பு செய்யுங்கள்" என்றுச் சொன்னால், எப்படி ஒருவர் இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ளாமல் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கமுடியும்?  இஸ்லாமிய அறிஞர்கள்  சொல்லும் அனைத்திற்கும் சிந்திக்காமல் தலையாட்டும் பொம்மைகளாக கிறிஸ்தவர்கள் எப்போது மாறினார்கள்?

ஈ) குர்-ஆனை படியுங்கள், ஹதீஸ்களை படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படியுங்கள், இஸ்லாமிய ஆரம்பகால நடவடிக்கைகளை படியுங்கள், அதன் பிறகு நீங்கள் இஸ்லாமைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லலாம் என்று சொல்வதை விட்டுவிட்டு, நேரடியாக "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்றுச் சொல்லவேண்டுமாம்.  உலக அரசியல் தலைவர்களைப்போலவும், ஒன்றுமறியாத பாமர  முஸ்லிம்களைப்போலவும், கிறிஸ்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்று இவர்கள் நினைத்துவிட்டார்களா? 

உ) உங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று மற்றவர்கள் ஏன் சொல்லவேண்டும்? அதுவும் நீங்கள் சொல்லிக் கொடுத்தது போல ஏன் சொல்லவேண்டும்? உலக மக்களுக்கு சுயமாக படித்து தெரிந்துக்கொண்டு பேசத் தெரியாதா?

ஊ) உண்மையாகவே,  உங்கள் மார்க்கம் அமைதி மார்க்கமாக இருந்திருந்தால் மற்றவர்களின் கால்களில் விழுந்து, "எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்றுச் சொல்லுங்கள்" என்று கெஞ்ச வேண்டியதில்லை?

எ) இஸ்லாமியர்களால் முடிந்தால்,  அனேக குர்-ஆன் பிரதிகளை போப்பிற்கு அனுப்பிவையுங்கள், ஹதீஸ் (புகாரி, முஸ்லிம் போன்ற) தொகுப்புக்களையும், குர்-ஆன் விரிவுரைகளையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும், இஸ்லாமிய ஆரம்பகால சரித்திரத்தையும் அனுப்பிவையுங்கள் (நீங்கள் எழுதுகின்ற புத்தகங்களை அனுப்பவேண்டாம், அவைகளால் ஒரு நன்மையும் இல்லை). அவைகளை படித்து, இஸ்லாம் அமைதி மார்க்கம் தான் என்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள் என்று சவால் விடுங்கள். அதே நேரத்தில் எந்த விமர்சனம் வந்தாலும் அதனை வன்முறையில்லாமல் சந்திக்க தயார் என்று சவால் விடுங்கள். இப்படி செய்தால், ஓரளவிற்கு உங்கள் மார்க்கம் பற்றி போப்பிற்கு நல்ல அபிப்பிராயம் வரும்.   இப்படி செய்வதை விட்டுவிட்டு, "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று சொல்லச்சொன்னால், என்ன அர்த்தம்? கிறிஸ்தவர்களின் காதில் பூ வைக்க ஏன் முயற்சி செய்கிறீர்கள்?

ஏ) ஒரு வேளை இந்த போப் கூட இஸ்லாமை அறிந்துக்கொண்டு, விமர்சித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இவருக்கும் கொலை மிரட்டல் விடுவீர்கள் அல்லவா? வன்முறையில் இறங்குவீர்கள் அல்லவா?  முதலாவது இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை "முஸ்லிம்களே" நீங்கள் உங்கள் செயல்களால் நிருபியுங்கள், அதன் பிறகு மற்றவர்கள் இஸ்லாம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்போம்.
 
இஸ்லாமுக்கு மாற மறுத்து, இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட 800 இத்தாலிய கிறிஸ்தவர்களை கவுரவித்த தற்போதய போப்:

தற்போதை போப், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கவேண்டும் என்று  முஸ்லிம்கள் கேட்கிறார்கள், ஆனால், தற்போதைய போப் பிரான்ஸிஸ் அவர்களோ,  இஸ்லாமுக்கு சரியான பதிலடியை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அதாவது கடந்த மே மாதம்12ம் தேதி, போப் அவர்கள்,  15ம் நூற்றாண்டில், இஸ்லாமுக்கு மாற மறுத்ததால்,  இஸ்லாமியர்களால் கொடுமையாக கொல்லப்பட்ட 800 கிறிஸ்தவர்களை கவுரவித்தார்.  தான் பதவிக்கு வந்த பிறகு அவர் செய்த இந்த செயல்,  இஸ்லாம் பற்றி அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டார்.  

பதினாறாம் போப் பெனடிக்ட்,  வார்த்தைகளால் இஸ்லாமை விமர்சித்தார், தற்போதைய போப் பிரான்ஸிஸ் அவர்களோ, செயல்களால் இஸ்லாமை முழுவதுமாக விமர்சித்துவிட்டார்.

மூலம்:  



முஸ்லிம்களே, உங்கள் வார்த்தைகளால் மட்டும் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்றுச் சொல்லிக்கொள்வதை நிறுத்துங்கள். முதலாவது, உங்கள் செயல்களால் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிருபித்துக் காட்டுங்கள், அப்போது உலகம் தானாக உண்மையை சொல்ல ஆரம்பிக்கும். 

போப் அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லிவிட்டால் !?!

ஒரு வேளை உங்கள் வார்த்தைகளின் படியே, போப் அவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" அறிவித்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். 

இந்த அறிக்கையைக்கு பிறகு முஸ்லிம்கள் தங்கள்  வன்முறையை கைவிடுவார்களா? 
இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு எதிராக நடத்தபப்டும் வன்முறை செயல்கள் நிறுத்தப்படுமா? 
இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லும் செயல்களுக்கு ஒரு முடிவு கட்டப்படுமா? 
எதிர்காலத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை தாக்கும் செயல்கள் நிறுத்தப்படுமா?

இப்படியெல்லாம் செய்வோம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் உறுதி அளித்தால், நாங்கள் போப்பிடம் சென்று, நீங்கள் முஸ்லிம்கள் சொல்வது போலவே சொல்லுங்கள் என்று அவரை வேண்டிக்கொள்ளத் தயார்.  

ஒரு முஸ்லிம் பெண்ணின் கால்களை கழுவிய போப்:

போப் பிரான்ஸிஸ் அவர்கள், இயேசு காட்டிச் சென்ற வழியில் சென்று, அனேகரின் கால்களை கழுவினார். ஒரு முஸ்லிம் பெண்ணின் கால்களையும் கழுவினார். இது அவரது தாழ்மையையும், இயேசுவின் வழியையும் காட்டுகிறது. இப்படி இவர் செய்தார் என்றுச் சொல்லி, "ஆஹா. முஸ்லிம்களின் கால்களை போப் கழுவும் அளவிற்கு தாழ்ந்துவிட்டார்" என்று நினைக்கவேண்டாம். ஒருவேளை நீங்கள் இப்படி எண்ணம் கொண்டு இருந்தால், அதனை மாற்றிக்கொள்ளுங்கள். உலகை ஜெபிப்பவர்கள் எப்போதும் உலகத்தில் சாந்தி சமாதானத்தை நிலை நாட்டுபவர்களே தவிர, கைகளில் வாளை ஏந்தியவர்கள் அல்ல. உங்களுக்கு நேரமிருந்தால், உலக தலைவர்களின் சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள், உங்கள் முஹம்மதுவையும் சேர்த்து.

முடிவுரை:
இஸ்லாமிய ஆரம்ப கால முதல் இன்று வரை மற்றவர்களை கட்டாயப்படுத்தியே வாழ்ந்துவருகிறீர்கள், இனியாவது சிறிது மாறுங்களேன். 

1) உலக அளவில் கிறிஸ்தவ சபைகளையும், இதர மார்க்க வணக்க ஸ்தலங்களையும், மக்களையும் தாக்குவதை நிறுத்துங்கள்.
2) இஸ்லாமை விட்டு வெளியேறி நாத்தீகர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, இந்துக்களாகவோ மாறுபவர்களை கொல்வதை, தாக்குவதை நிறுத்துங்கள்.
3) உலக அளவில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள்.
4) உங்களைப் போலவே, மற்ற மக்களையும் நேசியுங்கள்.
5) இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று நீங்கள் நம்பினால், அதனை மற்றவர்களுக்கு எப்படி காட்டப்போகிறீர்கள், நிருபிக்கப்போகிறீர்கள்? அமைதியாகவா அல்லது அராஜகத்தாலா? சிந்தியுங்கள்.


Source : http://isakoran.blogspot.in/2013/06/blog-post.html