----------------------------------------
என் சகோதரர்கள் என்னை பத்து முறை வயிற்றில் கத்தியால் குத்தினார்கள்
ஹலோ அலி,
என் கண்களை திறந்த உங்கள் தளத்திற்காகவும், நீங்கள் செய்துக்கொண்டு இருக்கும் இந்த வேலைக்காகவும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாம் ஒரு வீணான மதம் என்பதை அறியவும், அதிகமான தைரியம் எனக்கு வரவும் இரண்டு ஆண்டுகள் பிடித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் உங்கள் தளத்தை படிக்கிறேன், கிட்டத்தட்ட இதே நேரத்தில் நான் இஸ்லாமை விட்டு வெளியேறினேன். இருந்தபோதிலும், இப்போது தான் நான் உங்களுக்கு எழுதவேண்டும் என்று முடிவு எடுத்தேன், இப்போது ஒரு நண்பரிடம் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன், அவரும் இஸ்லாமை விட்டு வெளியேறியவர் தான்.
பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு இஸ்லாமிய சுன்னி பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் நான் பிறந்தேன். துரதிஷ்டவசமாக நான் "ஹகிமுல்லாஹ்" மற்றும் "பைதுல்லாஹ் மெஹ்ஸுத்" என்பவர்களின் வம்சத்தில் வந்தவள், இவர்களின் வம்சத்தில் பிறந்தேன் என்றுச் சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு பிரச்ச்னை ஆரம்பித்த்து, அதாவது ஒரு பெண் தன் தந்தைப் பற்றி தெரிந்துக்கொள்ளக் கூடாத ஒன்றை நான் தெரிந்துக்கொண்டேன். என் தந்தை மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மையான வருடங்களை கழித்தவராகிய இருந்தபோதிலும், என்னைப் பொருத்தவரையில் அவர் இந்த ஆண்டுகள் அனைத்தும் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் எனக்கு அவரை பற்றிய ஒரு உண்மை தெரியவந்தது. அதாவது அவருக்கு பாகிஸ்தானில் இன்னும் இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள் என்றும், மேலும் அவருக்கு பத்து பிள்ளைகள் இன்னும் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்றும் நான் அறிந்துக்கொண்டும்.
இதனை அறிந்த போது, என் வாழ்வு முழுவதும் என் கண்களுக்கு முன்பாக துக்குநூறாக உடைவதாக கண்டேன், என் வாழ்விற்கு பொருள் இல்லை என்பதாக எனக்கு காணப்பட்ட்து. அவரது இதர மனைவிகள் பிள்ளைகள் பற்றி நான் அவரிடமே விசாரித்தபோது, தன் தோல்களை துளிக்கிக்கொண்டு, "ஒரு முஸ்லிமாக இருக்கின்ற நான் உனக்கோ அல்லது வேறு எந்த ஒரு பெண்ணுக்கோ தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கணக்கு கொடுக்கவேண்டிய அவசியமில்லை" என்று சாதாரணமாக சொல்லிவிட்டுச் சென்றார். அவர் வேறு ஒரு பெண் என்றுச் சொன்னது, என் அம்மாவைத் தான்.
இந்த மனிதரைப் பற்றி காவல் துறையில் சொல்லலாம் என்று நான் விரும்பினேன், ஆனால், நான் அதிகமாக நேசிக்கும் என் அம்மா, அப்படியெல்லாம் செய்யாதே என்று என்னை தடுத்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படிக்க ஆரம்பித்தேன், அதாவது என் அப்பா என்னிடம் சொல்வது உண்மையா? என்பதை ஆராய ஆரம்பித்தேன். ஆனால், நான் எவ்வளவு விஷயங்களை தேடினேனோ அதைவிட அதிகமான விஷயங்களை நான் காணவேண்டியதாக இருந்தது. உண்மையாகவே நான் கண்டுக்கொண்ட விஷயங்கள் என்னை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
வாழ்வு, மரணம், குடும்பம் மற்றும் மதம் போன்றவைப் பற்றி நான் இதுவரை கற்றுக்கொண்டிருந்த அனைத்தும் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு நான் அனைத்து மதங்களையும் படித்தேன், அப்போது தான் எல்லா மதங்களும் பொய்யானவை என்பதை சிறிது சிறிதாக அறிந்துக்கொண்டேன். எனினும், என்னுடைய குற்றச்சாட்டு அனைத்தும் இஸ்லாம் பற்றியதாகும், இஸ்லாம் போதிக்கும் தீய விஷயங்கள் பற்றியதாகும்.
ஒரு பெண்ணாக மேலும் சம உரிமைகள் எல்லாருக்கும் தேவை என்ற நம்பிக்கையில் வாழுபவளாக, அநியாயத்திற்கு எதிராகவும், வன்முறை இஸ்லாமுக்கு எதிராகவும் என் போராட்டங்கள் தொடரும். அலி சீனா அவர்களே, உங்களோடு நான் சொல்ல விரும்புவது இது தான், "நீங்கள் தனி மனிதனாக இல்லை, தீய இஸ்லாமுக்கு எதிராகவும், ஏழாம் நூற்றாண்டின் பைத்தியத்திற்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடுவதில், நாம் அனைவரும் சேர்ந்தே இருக்கிறோம், நாம் தனி மனிதர்கள் அல்ல".
இந்த போரில் (ஆம், இது எனக்கு போர் தான்), இஸ்லாமை விட்டு வெளியேறிய உங்களோடு கூட, நாங்களும் இஸ்லாமை விட்டு வெளியேறி இருக்கிறோம். மனித இனத்தை இந்த தீய இஸ்லாமிய கோட்பாடுகளிலிருந்தும், உலகில் மனிதன் வாழ்வதற்கு பங்கம் விளைவித்து மிரட்டும் கோட்பாடுகளுக்கு எதிராக நாம் செய்யும் இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
உங்களுடைய பொன்னான நேரத்திற்காக நன்றி.வெற்றி நமக்கே
இப்படிக்கு,
ஹலோ அரியானா,
நான் தனியாக இல்லை என்பதை நான் அறிவேன். நாம் இப்போதைக்கே கோடிக்கணக்கில் இருக்கிறோம், இன்னும் பெருகிக்கொண்டே இருக்கிறோம். இஸ்லாம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இஸ்லாம் ஒரு பொய். வெளிச்சத்திற்கு முன்பாக எப்படி இருள் தானாக மறைந்துவிடுமோ, அதே போல, உண்மைக்கு முன்பாக பொய் மறைந்துவிடும்.
எனினும், ஒன்றை நீ மனதில் பதிய வைத்துக்கொள். அதாவது உன் தந்தையும், அவரது இதர மனைவிகளும், அவர்களுக்கு பிறந்த உன் சகோதரர்களும், சகோதரிகளும் சாதாரண மனிதர்கள் தான், அவர்கள் இஸ்லாம் என்ற தீய சக்தியின் கையில் அடிமைகளாக சிக்கியுள்ளார்கள். உன் தந்தை ஒரு தீய மனிதர் அல்ல, அவர் ஒரு முஸ்லிமாக இருக்கிறார் அவ்வளவே. தனக்கு எது சரி என்று அவர் நம்புகிறாரோ அதையே அவர் பின்பற்றுகிறார். இங்கு தான் பிரச்சனை உள்ளது. எப்போது ஒரு புத்தியுள்ள மனிதன் ஒரு புத்தியில்லாத மனிதனை பின்பற்றுவானோ, அவனும் புத்தியில்லாதவன் போலவே நடந்துக்கொள்வான். யார் தங்கள் உடல்களில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, அவைகளை வெடிக்கச் செய்து, மற்றவர்களை கொள்கிறார்களோ, அவர்கள் "தாங்கள் செய்வது தான் சரியானது" என்று நம்புவதினால் செய்கிறார்கள். இவர்களும் இஸ்லாமிய பொய்களுக்கு அடிமைகளாக மாறியவர்கள் தான்.
ஆம, நாம் நம் கரங்களை ஒன்று சேர்த்து, இந்த தீய இஸ்லாமை பூமியிலிருந்து முழுவதுமாக அழித்துவிடவேண்டும். வெற்றி நமக்குத் தான், ஏன் தெரியுமா? சத்தியம் நம் பக்கம் உள்ளது. உன்னுடைய இந்த கடிதத்தை,
நான் என் தளத்தில் நான் பதிக்கட்டுமா? உன் பெயரை மாற்றி பதிக்கட்டுமா?
இப்படிக்கு
ஹலோ அலி சீனா,
உங்களுடைய மெயிலுக்காக நன்றி.
என் கடிதத்தை நீங்கள் பதிக்கலாம்.
கடந்த கடிதத்தில் நான் சொல்ல மறந்துவிட்ட ஒரு விஷயத்தை இப்போது சொல்கிறேன். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் குடும்பத்து நபர்களிடம் "நான் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டேன்" என்று சொன்ன போது நடந்தது. நான் வீட்டை விட்டு வெளியேறி, இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடியிருந்தேன். சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு, ஒரு நண்பரை பார்க்க, நான் மலேசியாவிற்குச் செல்ல தயார்படுத்திக்கொண்டு இருந்தேன். அப்போது என் சகோதரர்கள் என்னை தாக்கினார்கள், கத்தியால் என் வயிற்றிலும் முதுகிலும் பத்து முறை குத்தினார்கள்.
என் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், ஏனென்றால், அவர்கள் என்னை மருத்துவ மனைக்கு கொண்டுச் சென்றார்கள். காயங்களுடன் இருந்த நான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். நான் முழுவதுமாக சுகமாக எனக்கு ஒரு வருடம் பிடித்தது. அப்போதிலிருந்து என் சகோதரர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டார்கள் மற்றும் அங்கேயே இப்போது தங்கியுள்ளார்கள். இந்த போராட்டத்தை நான் இன்னொரு நண்பரின் உதவியோடு செய்துக்கொண்டு இருக்கிறேன்.
நான் வாழும் வரை இந்த என் போராட்டம் ஓயாது. என்னுடைய பெயரை நீங்கள் உங்கள் தளத்தில் பதியுங்கள், ஆனால் என் கடைசி பெயரை பதிக்கவேண்டாம். என் அப்பா எனக்கும் என் அம்மாவிற்கும் செய்த தீமை பெரியதாக இருந்தாலும், நான் என் பெயரை முழுவதுமாக பதிப்பதினால், அவருக்கு அவமானம் வரக்கூடாது என்று விரும்புகிறேன்.
நல்ல போராட்டத்தை விட்டுவிடாமல் தொடர்ந்து போராடுங்கள்.இப்படிக்கு அரியானா
ஆங்கில மூலம்: My Brothers Stabbed Me Ten Times
Tamil Source : http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=38&topic=2613&Itemid=287
0 comments:
Post a Comment