அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 27, 2013

திருடர்களின் கைகள் பற்றி இஸ்லாமும் கிறிஸ்தவமும் (The Hands of Thieves)


திருடர்களின் கைகள் பற்றி இஸ்லாமும் கிறிஸ்தவமும்  (The Hands of Thieves)

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்

நான் எவ்வளவு அதிகமாக இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் அறிந்துக்கொள்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இவ்விரு மார்க்கங்களின் இடையே இருக்கும் வித்தியாசங்களை கண்டு ஆச்சரியப்படுகிறேன். சில வித்தியாசங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது, சில வித்தியாசங்கள் நம் கண்களை  திறக்கின்றனவாக  உள்ளது. மேலும் சில வித்தியாசங்களை சிறிது ஆய்வு செய்வதின் மூலமே கண்டுபிடித்துவிடலாம்.   தற்போதைய கட்டுரை, இந்த மூன்றாம் வகையில் சார்ந்ததாக உள்ளது.

ஷரியா சட்டம் என்பது இஸ்லாமினால் உருவாக்கப்பட்ட சட்டமாகும்.  இந்த ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டாலும்இஸ்லாமியர்களின் படி, ஷரியா என்பது அல்லாஹ்வின் சட்டமாகும். அதாவது அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட மனிதர்களால் மாற்றக்கூடாத சட்டமாகும்.  சௌதி அரேபியாவின் ரியாத் பட்டணத்தில் ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் ஷரியா சட்டமும், இஸ்தான்புல் பட்டணத்தில் வேறு ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் ஷரியா சட்டமும் சிறிது வேறுபட்டு இருக்கும். ஷரியா சட்டத்தை முழுவதுமாக அறிந்து க்கொள்ள நமக்கு அதிக நேரம் தேவைப்படும்.  ஷரியாவின் அடிப்படையாக, குர்-ஆனில் சில சட்டங்களைக் காணலாம். அதாவது ஒரு நல்ல சமுதாயம்  எப்படி இருக்கவேண்டும் என்றுச் சொல்லி, குர்-ஆன் சில கட்டளைகளை/சட்டங்களை கொடுத்துள்ளது.  இந்த சட்டங்களின் ஒரு விஷயத்தைப் பற்றி நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

திருடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும்? என்று குர்-ஆன் 5:38ல் விளக்கப்பட்டுள்ளது:

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான் (குர்-ஆன் 5:38).

இந்த தண்டனையை தவிர்ப்பதற்கான அனேக காரணங்கள் ஹதீஸ்களில் கொடுக்கப்பட்டுள்ளது.  உதாரணத்திற்குதிருடுபவன் புத்திசுயாதீனமில்லாதவனாக இருந்தால், அல்லது திருடப்பட்ட பொருள் ஒரு குறிப்பிட்ட விலைக்கு குறைவானதாக இருந்தால், கைகளை வெட்டாமல் குறைந்த தண்டனை கொடுக்கப்படும். அனேக இஸ்லாமிய அறிஞர்கள் தங்களின் நேரத்தை செலவழித்து, "கைகளை வெட்டும் தண்டனை என்பது நியாயமானது தான்" என்றுச் சொல்லி, அதனை நியாயப்படுத்த அனேக விளக்கங்களை தருகின்றனர். மேலும், மேலே சொல்லப்பட்டது போல, சில விதிவிலக்குகளைச் சொல்லி, இந்த தண்டனையை நியாயப்படுத்துகின்றனர்.  மேலும் இந்த தண்டனையினால் உண்டாகும் விளைவைவிட (கைகள் வெட்டப்பட்டவன் படும் அல்லல்கள்), இந்த தண்டனையினால் சட்ட ஒழுங்கு சீர்படும் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். இந்த சட்டத்தின் பின்னணி எதுவாக இருந்தாலும்எப்படிப்பட்ட விதிவிலக்குகளை கொடுத்தாலும், தெரிந்து செய்யும் திருட்டுக்கு, குர்-ஆன் கைகளை வெட்டுதலை தண்டனையாக கொடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. 

குர்-ஆன் வசனத்தை மட்டும் தனியாக எடுத்து விளக்காமல்அதற்கு சான்றாக மேலதிக விளக்கத்தையும் நான் தரவிரும்புகிறேன். இந்த வசனம் பற்றி முஹம்மது கூறிய ஒரு ஹதீஸை (விளக்கத்தை) இப்போது காண்போம்.  குர்-ஆன் விரிவுரையாளராகிய இப்னு கதீர் என்பவரின் விளக்கத்தின் படி, இந்த தண்டனையைக் குறித்து முஹம்மது தாமே கீழ்கண்டவாறு கூறியதாக காண்கிறோம்.

"By Him in Whose Hand is my soul! If Fatimah the daughter of Muhammad stole, I will have her hand cut off." [i]

"என் உயிர் எவன் வசம் உள்ளதோ, அவன் மீது ஆணையாக, முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா திருடினாலும், அவளது கைகளை நான் வெட்டச் செய்வேன்" [1].

இதுவரை கண்ட விவரங்களை பார்த்தபிறகு, அனேக இஸ்லாமியர்கள்  "இந்த தண்டனை என்பது நியாயமானது தான்" என்று வாதிக்க முற்படுவார்கள், ஒரு நல்ல சமுதாயத்திற்கு இப்படிப்பட்ட கட்டளைகள் தேவை என்றுச் சொல்வார்கள்.  ஒரு பேச்சுக்காக நாம் இஸ்லாமியர்கள் கூறுவதை சரியானது என்றே வைத்துக்கொள்வோம். சமுதாயத்திற்கு இந்த கட்டளை நல்லதைச் செய்கிறது என்றே வைத்துக்கொண்டு மேலும் சில விவரங்களை இப்போது காண்போம்.  இந்த திருட்டு பற்றி பைபிள் என்ன கூறுகிறது? குர்-ஆன் கூறும் தண்டனையையும், பைபிள் சொல்லும் விவரத்தையும் ஒப்பிடும் போது, பைபிளின் தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை அறியமுடியும்இவைகளை சுருக்கமாக காண்போமா?

புதிய ஏற்பாட்டின் எபேசியருக்கு எழுதின கடிதத்தில், 4:28ம் வசனம் திருடர்கள் என்னசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடுகிறது?

திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். (எபேசியர் 4:28)

He who steals must steal no longer; but rather he must labor, performing with his own hands what is good, so that he will have something to share with one who has need.

முதலாவதாக, திருடுகிறவர்கள்  திருடுவதை நிறுத்தவேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.  மேலும் திருடுகிறவன் தன் இரண்டு கைகளாலும் (கவனிக்க பன்மை) உழைத்து மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.  எந்த திருடன் தன் இரண்டு கைகளை பயன்படுத்தி திருடினானோ, மற்றவர்களின் பொருட்களை அபகரித்தானோ, அதே கைகளை பயன்படுத்தி அவன் இப்போது கடினமாக உழைக்கவேண்டும். அவன் பணத்தை சம்பாதிக்கவேண்டும், அந்த சம்பாதித்த பணத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவவேண்டும்.  திருட்டுத் தனத்திற்கு தண்டனை கொடுக்கும் சமுதாயத்தில் இரண்டு வகையான விஷயங்கள் தண்டனையாக கொடுக்கப்படும், முதலாவது அவன் திருடிய பொருட்களை திருப்பித் தரவேண்டும், இன்னும் அதிகமாக செலுத்தவேண்டும், மேலும் அவனுக்கு தண்டனையாக சில நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் சிறையில் போடவேண்டும்.  அவன் செய்த குற்றத்திற்கு ஏற்றது போல, இந்த தண்டனைகள் மாற்றமடையும்.  கடைசியாக, அவன் பணத்தை செலுத்திய பின்பு, சிறைத்தண்டனையை அனுபவித்த பின்பு, அவன் சமுதாயத்திற்கு பாரமாக இருக்காதபடி, அவன் விடுதலையாக வேண்டும். எந்த கைகளால் அவன் திருடினானோ, பாவம் செய்தானோ அந்த கைகளால் அவன் உழைத்து வாழவேண்டும்சமுதாயத்திற்கு அவன் பாரமாக இருக்கக்கூடாது.  ஒரு வேளை திருட்டுத்தனத்திற்கு அவன் கைகளை சட்டம் வெட்டிவிட்டால்அவன் வாழ்நாள் முழுவதும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கு பாரமானவனாக மாறிவிடுகின்றான்.  இந்த துள்ளியமான விஷயத்தில் பைபிளின் தேவன் எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை கவனியுங்கள். மனிதர்கள் பற்றி தேவன் எப்படிப்பட்ட செயல்திட்டத்தை வைத்துள்ளார் என்பதை கவனியுங்கள்.

தேவனின் பொதுவான திட்டமென்னவென்றால், "இருதயத்தின் படி பாவிகளாகிய நாம்" அனைவரும் அவரது இராஜ்ஜியத்திற்காக உழைக்கவேண்டும், நல்ல காரியங்களைச் செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இது அவருடைய சிறப்பான திட்டமாகும். நாம் கடந்த காலத்தில் செய்த பாவமானது (உதாரணத்திற்கு திருடுவது), எதிர்காலத்தில் தேவன் மீது நாம் அன்புகூர்ந்து, நாம் தேவனுக்காக செய்யக்கூடிய நற்காரியங்கள் செய்ய தடுக்குமானால், எந்த ஒரு மனிதனும் இறைவனுக்கு உபயோகமுள்ள மனிதனாக மாறமுடியாது. எல்லாருக்கும் மிகவும் கடுமையான தண்டனைகளை கொடுத்துவிட்டால், இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தேவனுடைய இராஜ்ஜிய வேலையை நற்காரியங்களை எதிர்காலத்தில் செய்யமுடியாமல் போகும். 

ஆனால், தேவனுக்கு நாம் நன்றிச் சொல்லவேண்டும். எந்த நாவுகள் அவரைப் பற்றி தூஷணமாக பேசியதோ, அதே நாவுகள் அவரை புகழ்வதை நாம் அடிக்கடி காணமுடியும். எந்த உள்ளங்களின் எண்ணங்கள் தீயவைகளாக இருந்ததோஅந்த உள்ளங்கள் மனந்திரும்பி, அவரது இராஜ்ஜியத்திற்காக உழைக்க ஆரம்பித்துள்ளது.  தீமை செய்ய ஓடிய கால்கள், இப்போது இதர மக்களுக்கு நன்மைகளை செய்ய ஓடுகின்றன, உழைக்கின்றன.  இதே போலகடந்த காலத்தில் திருட்டுத் தனத்தில் ஈடுபட்ட கைகளை வெட்டிவிட்டு, அவன் மூலமாக எதிர்காலத்தில் எந்த ஒரு நல்ல செயல்களையும் செய்யவிடாமல் இருக்க தேவன் விரும்பவில்லை.  அதற்கு பதிலாக, ஒரு காலத்தில் திருடினாலும், அந்த தீய செயலை விட்டுவிட்டு, தங்கள் கரங்களால் உழைத்து மற்றவர்களுக்கு உபயோகமானவர்களாக மக்கள் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

பாவம் செய்த கடந்த கால கைகள், எதிர்காலத்தில் இதர மக்களுக்கு உதவும் படி உழைக்கும் கைகளாக மாறவேண்டும் என்று கிறிஸ்தவம் எதிர்ப்பார்க்கிறது. ஆனால், இஸ்லாமோஅந்த கைகளை வெட்டச் சொல்கிறது. இது 100 சதவிகிதம் கிறிஸ்தவத்திற்கு எதிராக உள்ளது.  நீங்களே சிந்தித்துப் பாருங்கள், எது சரியானது? கைகளை வெட்டிவிட்டு, அந்த நபர் சமுதாயத்திற்கு பாரமாக வாழ்நாள் முழுவதும் இருப்பதா? அல்லது திருந்திவிட்டு, அதே கைகளால் சமுதாயத்திற்கு உதவுவதா? பைபிளின் தேவனா அல்லது  குர்-ஆனின் அல்லாஹ்வா?

திருடர்களின் கைகள் பற்றி இந்த தெய்வங்கள் கொண்டு இருக்கும் எண்ணங்களே, இவர்கள் உண்மையான தெய்வங்களா இல்லையா என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

பின் குறிப்புகள்

[i] http://www.quran4u.com/Tafsir%20Ibn%20Kathir/PDF/005%20Mai'dah.pdf

ஆங்கில மூலம்: The Hands of Thieves


Tamil Source: http://isakoran.blogspot.in/2013/04/hands-of-thieves.html

April 23, 2013

அஸ்ஸலாம் அலைகும் – கிருபைக்கு முன்பு சமாதானம் சாத்தியமா?


அஸ்ஸலாம் அலைகும் – கிருபைக்கு முன்பு சமாதானம் சாத்தியமா?

(Salaam Alaikum)

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்

நீங்கள் மசூதிக்கு சென்று இருந்தாலோ அல்லது முஸ்லிம் நண்பர்களோடு ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தாலோ, உங்கள் காதுகளில் "அஸ்ஸலாம் அலைகும்" என்ற வார்த்தைகள் அவ்வப்போது கேட்கும். முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பொதுவாக "அஸ்ஸலாம் அலைகும்" என்று ஒருவரை ஒருவர் வாழ்த்துவார்கள். அரபி மொழி வாழ்த்துதலாகிய இதன் அர்த்தம் "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்பதாகும். ஒருவர் இப்படி வாழ்த்தும் போது, இதற்கு மறுமொழியாக "வா அலைகும் அஸ்ஸலாம் (உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்)" என்று கூறுவார்கள். ஒருவரை பார்க்கும் போது கூறப்படும் இந்த வாழ்த்துதலை நாம் சிந்தித்தால், கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் இடையே இருக்கும் ஒரு ஆன்மீக எதிர்மறையை காணலாம். ஒருவர் மீது சாந்தியை கூறும் வாழ்த்துதல்களை நாம் மேலோட்டமாக கவனித்தால், கிறிஸ்தவமும், இஸ்லாமும் ஒன்று போலவே காணப்படும், ஆனால், ஆழமாக ஆய்வு செய்தால், என்னென்ன விஷயங்கள் வெளியே வரும்? அவைகளை இப்போது காண்போம்.

ஒருவர் கூர்ந்து கவனித்தால், இயேசு சமாதானத்தை கொண்டுவந்தார் (யோவான் 16:33) என்பதை கண்டுபிடிக்கலாம். எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் பற்றி பவுல் கூறுகிறார் (பிலிப்பியர் 4:7). மேலும் "சலாம்" என்ற மூல அரபி வார்த்தையிலிருந்து "இஸ்லாம்" என்ற வார்த்தை வந்தது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். இஸ்லாம் என்றால் "சமர்ப்பித்தல்" என்று அர்த்தம் இருந்தாலும், மூல வார்த்தையானது "சமாதானம்" என்று இருப்பதினால், "இஸ்லாம்" என்றால் "சமாதானம்" என்றும் கூட நாம் அர்த்தம் கொள்ளலாம் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். நாம் இப்படி கூறும்போது, உடனே சிலர் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா?" என்ற தலைப்பு பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், இந்த தளத்தின் ஆசிரியர் அப்படிப்பட்ட உரையாடல் பக்கம் செல்ல விரும்புவதில்லை. இக்கட்டுரையின் தலைப்பிற்கு வெளியே செல்லாமல் ஆய்வு செய்தால், இன்னும் அதிகமான சத்தியங்கள் வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது நாம் இருவரும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நிற்கிறோம், அதாவது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். மேலும், இயேசு கூட இஸ்லாமிய முறையிலான வாழ்த்துதலை கூறினார் (யோவான் 20:21), எனவே இயேசு கூட ஒரு முஸ்லிம் தான் என்றுச் சொல்லி முஸ்லிம்கள் உடனே பதில் சொல்வார்கள்[1].

இந்த குழப்பத்தை தீர்க்க நாம் "பைபிளில் எப்படி வாழ்த்துதல்கள் கூறப்பட்டது" என்பதைப் பற்றி ஆழமாக சிந்திப்போம். அப்போஸ்தலர் பவுல் அனேக கடிதங்களை எழுதியுள்ளார், இந்த கடிதங்களில் அனேக முறை வாழ்த்துதல்கள் கூறப்பட்டு இருக்கும். இதைப் பற்றி அறிய, 1 கொரிந்தியர் 1:3, ரோமர் 1:7 அல்லது கலாத்தியர் 1:3ம் வசனங்களை கவனிக்கலாம். இவைகளில் எந்த வகையான ஒரு வாழ்த்துதல் பாணி பின்பற்றப்பட்டுள்ளது? அல்லது அப்போஸ்தலர் பேதுரு எப்படி வாழ்த்துதல்களை கூறுகிறார் என்பதை 1 பேதுரு 1:2 அல்லது 2 பேதுரு 1:2ம் வசனங்களை கவனிக்கலாம். மேலும் அப்போஸ்தலர் யோவான் எப்படி வாழ்த்துதல்கள் கூறுகிறார் என்பதை 1 யோவான் 3 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 1:4ம் வசனங்களில் நாம் காணலாம். பைபிளில் மொத்தம் 17முறை வாழ்த்துதல்கள் கூறும் போது "கிருபையும் சமாதானமும்" என்று கூட்டாக சொல்லப்பட்டுள்ளது. இந்த 17 முறையையும் நாம் கவனித்தால், முதலாவது "கிருபையும்" அதற்கு அடுத்ததாக "சமாதானமும்" வருவதை நாம் காணமுடியும். அதாவது சமாதானத்திற்கு முன்பு கிருபை தவறாமல் வருகிறது. ஒரு இடத்திலும் முதலாவது "சமாதானம்" வந்து அதன் பிறகு "கிருபை" வரவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது, அதாவது கிருபைக்கு முன்பாக சமாதானம் வர வாய்ப்பு இருக்கின்றதா? பிலிப்பியருக்கு எழுதின கடிதத்தில் சமாதானம் பற்றி சொல்லப்படுகின்றது. அதாவது எல்லா புத்திக்கும் மேலான சமாதானம் எப்படி வருகிறது? நாம் சந்தோஷமாக இருந்து, ஜெபத்திலும், வேண்டுதலிலும், கர்த்தருக்கு நன்றி சொல்வதிலும் தரிந்து இருந்தால், இப்படிப்பட்ட சமாதானம் வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் ஏன் இதனை செய்கிறோம் என்று கேள்வி கேட்டால், கர்த்தர் தம்முடைய கிருபையினாலே நம்மை தம்மிடம் அழைத்துள்ளார் என்பதை முதலாவது நாம் கவனிக்கவேண்டும். யோவான் 16:33ம் வசனத்தில் இயேசு கூறிய சமாதானத்தின் பின்னணி இதுவாகும். அதாவது, இயேசு நமக்கு சமாதானம் கொடுத்துள்ளார், ஏனென்றால், அவர் உலகத்தை ஜெயித்துள்ளார், மேலும் தம் சீடர்களுக்கு "தாம் யார்" என்பதை வெளிப்படுத்தியுள்ளார், இதனால் தான் தனக்கு சமாதானத்தை கொடுக்கும் உரிமை உண்டு என்பதை விளக்குகிறார். தம்மை நம்பும் விசுவாசிகளுக்கு கிருபையை கொடுக்கும் படியாக, அவரே மூலகாரணமாக இருக்கும்படியாக பிதாவினிடத்தில் சென்றுள்ளார். இதன் பிறகு அவர் சமாதானத்தை விசுவாசிகளுக்கு கொடுக்கிறார்.

ஆக, இப்போது அதே கேள்வி மறுபடியும் கேட்கப்படுகின்றது, அதாவது கிருபை இல்லாமல் சமாதானம் உண்டாக முடியுமா? இயேசுக் கிறிஸ்து மூலமாக தேவன் கொடுத்த ஒப்புறவாகுதலை மனிதன் ஏற்றுக்கொள்ளாதவரை அவனுக்கும் தேவனுக்கும் இடையே "சமாதானம்" இருக்க சாத்தியம் இல்லை. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நிலவும் "இந்த சமாதானம்" என்பது மனிதனுடைய செயல்களினால் உண்டாவதில்லை, அது கிருபையினால் உண்டாகிறது (எபேசியர் 2:8-9). தேவனோடுள்ள நம்முடைய உறவுமுறையும், சமாதானமும் தேவனுடைய கிருபையின் மூலமாகவே வருகிறது. மனிதர்களுக்கு இடையே, குழுக்களுக்கு இடையே அல்லது நாடுகளுக்கு இடையே நாம் தற்காலிகமாக சமாதானத்தை உண்டக்க முடியும். ஆனால், உலக சரித்திரத்தை நாம் பார்க்கும் போது, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் நிரந்தரமாக சமாதானமாக இருந்ததில்லை. இதுமட்டுமல்ல, நம்முடைய தனிப்பட்ட அனுபவத்திலும் நாம் காணும் வண்ணமாக, நம் குடும்ப நபர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எப்போதும் சமாதானமாக இருப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. எல்லாரோடும் சமாதானமாக இருப்பது என்பது ஒரு தொடர் போராட்டமாக இருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக சமாதானமாக இருக்க வேண்டுமென்றால், சில நேரங்களில் நமக்கு எதிராக தீமை செய்தவர்களை நாம் கிருபையோடு மன்னிக்க தயாராக இருக்கவேண்டும். இந்த இடத்திலும் சமாதானம் என்பது நமக்கு தீமை செய்தவர்களுக்கு சாதகமாக நாம் கிருபையை பொழிவதினால் மட்டுமே உண்டாகிறது என்பதை காணலாம்.

இயேசு ஒரு இஸ்லாமிய முறைப்படி வாழ்த்துதல்கள் கூறினார் என்றுச் சொல்லும் இஸ்லாமிய வாதங்களுக்கு பதில் என்ன? இப்படிப்பட்ட வாழ்த்துதல்களை இயேசு கூறியதாக நாம் நான்கு முறை பைபிளில் காணலாம்: அவையாவன - லூக்கா 24:36, யோவான் 20:19, யோவான் 20:21 மற்றும் யோவான் 20:26ம் வசனங்கள் ஆகும். இந்த அனைத்து வசனங்களில் காணப்படும் பொதுவான விவரம் என்ன? இவ்வசனங்களில் காணப்படும் பொதுவான விஷயம் என்னவென்றால், இந்த வாழ்த்துதல்கள் அனைத்தும், இயேசு உயிரோடு எழுத்த பிறகு கொடுத்த வாழ்த்துதல்கள் ஆகும். இந்த வாழ்த்துதல்களை இயேசு எப்போது கொடுத்தார் என்று கேட்டால், அவர் முதலாவது சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்து, பிதாவினிடத்தில் சென்று, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே முறிந்த போய் இருந்த உறவுமுறையை சீர்படுத்திவிட்டு, அதன் பிறகு தான் "சமாதானம்" என்று வாழ்த்துதல்களை கூறுகிறார். "உங்களுக்கு சமாதானம்" என்ற இயேசுவின் வாழ்த்துதல்கள், இயேசு தம்முடைய ஊழியத்தை முடித்த பிறகு கூறுகிறார், அதாவது அவரது ஊழியத்தின் மூலமாக நாம் தேவனுடைய கிருபையை முழுவதுமாக பெற்ற பிறகு இயேசு "உங்களுக்கு சமாதானம்" என்று கூறுகிறார். மறுபடியும் இங்கும் நாம் அதே பாணியை பார்க்கிறோம், அதாவது கிருபையை தொடர்ந்து தான் சமாதானம் வருகிறது.

இந்த சிறிய உதாரணத்திலும் கூட, இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நம்மால் மறுபடியும் காணமுடியும். சமாதானத்தை இஸ்லாம் முதலாவது இடத்தில் வைக்கிறது, அந்த சமாதானத்தை கிருபை இல்லாமல் அடைய இஸ்லாம் முயற்சிக்கிறது. ஆனால், கிறிஸ்தவத்தில் நாம் காணும் போது, சமாதானம் என்பது கிருபைக்கு பின்பே எப்போதும் வருகிறது, கிருபைக்கு முன்பு வருவதில்லை.

கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படியாக வாழ்த்துதல்கள் கூறலாம், அதாவது "உனக்கு கிருபை உண்டாகட்டும் – Grace be unto You" என்று நாம் கூறினால் பொருத்தமாக இருக்கும். இந்த சமயத்தில், அரபி பேசும் இஸ்லாமியர்களிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்வி என்னவென்றால், "உங்களுக்கு கிருபை உண்டாகட்டும்" என்ற வார்த்தைகளுக்கு நிகராக அரபியில் எப்படி கூறலாம்? ஒருவேளை இதை நாம் கூறும் போது, அதற்கு மறுமொழியாக அடுத்தவர் எப்படி பதில் சொல்லவேண்டும்? அரபி தெரிந்தவர்கள் இந்த இரண்டு வாக்கியங்களை அரபியில் சொல்ல எங்களுக்கு உதவலாமே?

[1] my.opera.com/islamicworld/blog/

ஆங்கில மூலம்: Salaam Alaikum

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
 
 

Tamil Source : http://isakoran.blogspot.in/2013/04/blog-post_4222.html

இறைவனின் சாயலில் உருவாக்கப்பட்டவனின் உருவத்தை குலைப்பது சரியோ?


இறைவனின் சாயலில் உருவாக்கப்பட்டவனின் உருவத்தை குலைப்பது சரியோ?

(Created in the Image of God)

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்

சில நேரங்களில் இந்த தளத்தில் பதிக்கப்படும் கட்டுரைகள் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மார்க்கங்களில் காணப்படும் இறையியல் வித்தியாசத்தை ஒப்பிட்டு எழுதப்படுகின்றன. அவைகள் அவ்வப்போது மிகவும் வேடிக்கையாகவும் அமைந்துவிடுகின்றன. சில வித்தியாசங்களை நாம் நேரடியாக புரிந்துக்கொள்ளலாம். இந்த வித்தியாசங்கள் உரையாடுவதற்கு மிகவும் உபயோகமானவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு வித்தியாசங்களில் ஒன்று "மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டு இருக்கின்றான்" என்பது பற்றியதாகும்.

ஆதியாகம்ம் 1:26ல், "மனிதனை இறைவன் தம் சாயலின் படி படைத்தார்" என்று இறைவன் கூறுகிறார். கிறிஸ்தவ அறிஞர்கள் மத்தியிலே, "இறைவனின் சாயலில்" என்றால் என்ன அர்த்தம்? என்று மிகப்பெரிய விவாதம் நடந்துக்கொண்டு இருக்கிறது. ஒன்று மட்டும் தெளிவாக நமக்குத் தெரியும், அது என்னவென்றால், மனிதர்களாகிய நாம் "ஆவியாக" இருக்கின்ற இறைவனோடு நம்மை நேரடியாக எப்போதும் ஒப்பிடமுடியாது என்பதாகும் (யோவான் 4:24). ஆனால், இறைவன் நம்மை வேறு ஒரு வகையில் படைத்தார், அந்த வகை மிகவும் சிறப்பானது, அது என்னவென்றால், "அவரைப் போல (அ) அவரது சாயலில் நம்மை படைத்தார்" என்பதாகும் (சங்கிதம் 8:5; 139:14).

இப்போது சில கேள்விகள் நமக்கு எழுகின்றது: நாம் எந்த வகையில் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டு இருக்கிறோம்? இந்த விஷயத்திற்கும் இஸ்லாமுடைய அல்லாஹ்விற்கும் என்ன சம்மந்தம் உள்ளது? என்பதாகும். முதலாவதாக நாம் நித்திய காலம் வாழுபவர்களாக படைக்கப்பட்டு இருக்கிறோம் (eternal beings) என்பதை நாம் அறியவேண்டும். நாம் நித்திய காலம் வாழுபவர்கள் என்பதால், நமக்கு ஆரம்பமில்லை என்று அர்த்தம் செய்துக் கொள்ளக்கூடாது. நமக்கு முடிவு தான் இல்லையே தவிர, நமக்கு ஆரம்பம் உள்ளது (நாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளோம்). ஒன்று, நாம் இறைவனோடு சொர்க்கத்தில் நித்திய நித்தியமாக வாழ்வோம், அல்லது இறைவன் இல்லாமல் நரகத்தில் நித்திய காலமாக இருப்போம். இந்த இரண்டு இடங்களில் ஏதோ ஒரு இடத்தை நம்மில் ஒவ்வொருவரும் தெரிவு செய்யவேண்டும். இது கூட நாம் இறைவனைப் போல இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுகின்றது. அதாவது நம்மில் ஒவ்வொருவருக்கும் "சுயமாக தெரிவு செய்யும் அறிவு (Free Will) " உள்ளது. நாம் சில நேரங்களில் வேண்டுமென்றே சில முடிவுகளை எடுக்கிறோம், அது நம்மைச் சுற்றியுள்ள உலகை பாதிக்கின்றது. வேறு வகையில் கூறவேண்டுமென்றால், நாம் இறைவனைப் போல இருக்கிறோம், அதாவது நமக்கும் மூன்று வகையான நிலைகள் உள்ளன. அதாவது நமக்கு ஆவீ, ஆத்துமா, சரீரம் என்று மூன்று நிலைகள் நமக்குள் உண்டு (1 தெச 5:23). நான் சொல்லும் இந்த உவமை திரித்துவத்திற்கு விளக்கமல்ல. ஆனால், எனக்குள் இருக்கும் இந்த மூன்றும் செயல்படும் விதம் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது, என்னால் அதனை புரிந்துக்கொள்ளவே முடிவதில்லை.

பைபிள் முழுவதும் நாம் படித்துப் பார்த்தால், தேவன் தான் படைத்த மனித இனம் பற்றி அதிகமாக அக்கரை கொள்கிறார், அவர்களை காக்கிறார், அவர்கள் பட்சத்தில் பொறுமையோடு இருக்கிறார் என்பதை அறிய முடியும் (சங்கீதம் 8:4, 2 பேதுரு 3:9). இதுமட்டுமல்ல, அவரை நாம் புறக்கணிப்பதற்கு கூட நமக்கு "சுயமாக முடிவு எடுக்கும் அறிவை" கொடுத்து இருக்கிறார். அதாவது தேவன் மீது நாம் நம்பிக்கை வைக்காமல் இருப்பதற்கும், நமக்கு சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை கொடுத்துள்ளார். இதைப் பற்றி சிந்தித்தால், இது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்று பார்த்தால், அவர் இலவசமாக கொடுக்கும் நித்திய ஜீவனையும், நாம் நம்முடைய சுய முடிவு மூலமாக புறக்கணிக்கவும், நம்முடைய சுதந்திரத்தை நாம் பயன்படுத்தவும் அவர் உரிமையை கொடுத்துள்ளார். ஆனால், அவரை நாம் புறக்கணித்தால், நித்திய காலமாக நாம் அவரைப் பிரிந்து இருக்கவேண்டிய நிலை வரும்.

இதுவரை நாம் பைபிளின் தேவன் எப்படி மனிதர்களை பார்க்கிறார் என்பதை கவனித்தோம். இப்போது அல்லாஹ் எப்படி மனிதவர்க்கத்தை பார்க்கிறார்? என்பதை கவனிப்போம். மேலோட்டமாக பார்த்தால், இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒரே மாதிரியாகத் தான் கூறுகின்றன, அதாவது ஆதாமை இறைவன் தன் சாயலின் படியே படைத்தார் [1] என்பதாகும். ஆனால், மிகவும் ஆழமாக நாம் ஆய்வு செய்தால், அல்லாஹ் எப்படி தன் படைப்பாகிய மனிதர்களிடம் செயல்பட்டார் என்பதை கவனிக்கலாம். நேரம் காலம் குறிப்பிடப்படாத, பெயர் குறிப்பிடாத ஊரில் வசித்த அவநம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை நாம் குர்-ஆனில் வாசிக்கலாம்.

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம். (குர்-ஆன் 2:65 – முஹம்மது ஜான் தமிழாக்கம்)

மற்றும்

"அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (குர்-ஆன் 5:60 முஹம்மது ஜான் தமிழாக்கம்)

குர்-ஆன் விரிவுரையாளர்கள் கொடுத்த விளக்கங்கள் (தஃப்ஸீர் [2]) இந்த வசனங்கள் பற்றி கூறும் போது, இந்த வசனங்களில் சொல்லப்பட்ட சாபங்கள் ஏதோ ஒரு உவமையாக கூறப்பட்டதல்ல, உண்மையாகவே அந்த மக்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாறினார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாமிய விரிவுரையாளர் "மௌலான முஃப்டி முஹம்மத் ஹாஃபி" தம்முடைய தஃப்ஸீர் "மாஅரிஃபுல் குர்-ஆன்" என்ற விரிவுரையின் பின் குறிப்பில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"எழுத்தின் படி அல்லாமல், வேறு வகையாக (உவமேயமாக) பொருள் கொள்ளுதல் என்பது சமீபகாலத்து இஸ்லாமியர்களின் கைவேலையாகும்"

சில இஸ்லாமியர்கள் "இந்த வசனங்கள் சொல்வது நேரடி பொருளில் அர்த்தம் செய்யக்கூடாது" என்று கூறுகிறார்கள், அவர்கள் பற்றி இவர் சொல்லும் போது:

"இப்படியாக கூறுவது என்பது பரிசுத்த குர்-ஆன் நேரடியாக மற்றும் வெளிப்படையாக கூறும் வசனத்தை புறக்கணிப்பது ஆகும், இதனை எந்த ஒரு முஸ்லிமும் செய்யமாட்டார்"[3].

இஸ்லாமின் படி, அல்லாஹ் தாம் படைத்த மனித வர்க்கத்தை தாமே அழிவிற்கு உள்ளாக்கினார். இப்படிப்பட்ட காரியத்தை யெகோவா தேவன் செய்யமாட்டார். நாம் தேவனை புறக்கணிக்க அவரே நமக்கு உரிமை கொடுத்துள்ளார், இது உண்மை தான். இப்படிப்பட்ட உரிமையை தேவன் நமக்கு ஏன் கொடுத்தார்? என்று பார்த்தால், மனித வர்க்கத்துக்கு சுயமாக முடிவு எடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்து, அவர் நம்மை கனப்படுத்தியுள்ளார். இஸ்லாமில், நரகத்திற்குச் சென்று தண்டனை அனுபவிப்பதற்கு முன்பு, அல்லாஹ் சிலரை குரங்குகளாக, பன்றிகளாக மாற்றி தண்டனை கொடுத்துள்ளார். நாம் அவரை மறுக்கும் போது வேதனை அடையும் இறைவன், நம்மை மிருகங்களாக மாற்றுவானா? மேலும் நாம் மரிப்பதற்கு முன்பாக அவரை மறுபடியும் அங்கீகரிக்கலாம் அல்லவா? இதனை சிந்திக்காமல் நமக்கு இருக்கும் சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை பறிப்பது எப்படி சரியானதாக இருக்கும்? ஆனால், நான் நம்பியிருக்கும் தேவன் இப்படிப்பட்டவன் அல்ல.

நான் அறிந்துள்ள என் இறைவன், என்னுடைய நன்மைக்காகவே தண்டிப்பார் (எபிரேயர் 12:10, 1 கொரிந்தியர் 11:32). நாம் பாவம் செய்வதினால் நமக்கு அதிக தீமை உண்டாகிறது என்பது உண்மையாகும். பாவம் செய்து தீய காரியங்களை நம் மீது நாமே கொண்டுவந்துவிடுகிறோம் (1 இராஜாக்கள் 8:32). இந்த காரியங்களும் நமக்கு இருக்கும் சுயமான முடிவு எடுக்கும் உரிமை மீதே ஆதாரப்பட்டுள்ளது. நம்முடைய சொந்த தீய முடிவுகள், நம்முடைய அழிவிற்கே காரணமாக இருக்கிறது. நாம் இப்படி நடந்துக்கொண்டாலும், தேவன் நம்மை சபிப்பதில்லை. அவர் தம்முடைய சாயலில் படைத்த படைப்பாகிய மனிதர்களை மிருகங்களாக மாற்றி தன் சாயலுக்கு தானே அவமானத்தை கொண்டு வருவதில்லை. ஆனால், இவை அனைத்தையும் அல்லாஹ் செய்கிறார்.

பைபிளின் யெகோவா தேவனுக்கும், குர்-ஆனின் அல்லாஹ்விற்கும் உள்ள வித்தியாசங்களில் இதுவும் ஒன்றாகும்.

பின் குறிப்புக்கள்:

[1] Sahih Bukhari, Volume 8, Book 74, Number 246. www.sahih-bukhari.com/Pages/Bukhari_8_74.php

[2] Ibn Kathir, downloaded from www.quran4u.com/Tafsir%20Ibn%20Kathir/PDF/002%20Baqarah%20I.pdf, p 199-200.

[3] islamkashmir.org/radiant-reality/2007/01/lesson-quran

ஆங்கில மூலம்: Created in the Image of God

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
 
 

Tamil Source : http://isakoran.blogspot.in/2013/04/blog-post_5391.html

April 22, 2013

முஹம்மதுவும் தோராவும்


முஹம்மதுவும் தோராவும்

சுனான் அபூ தாவுத் புத்தகம் 38 (கிதாப் அல் ஹுதுத், நிர்ணயிக்கப்பட்ட தண்டனைகள்), எண் 4434 (ஆங்கில எண்):

இப்னு உமர் அறிவித்ததாவது:

ஒரு குறிப்பிட்ட யூத குழுவினர் வந்து அல்லாஹ்வின் தூதரை (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) "குஃப்" என்ற இட்த்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இறைத்தூதரும் அவர்களின் இடத்திற்கு (பள்ளிக்கு) சென்றார்.

அவர்கள் இறைத்தூதரிடம் "அபூல் காசிம் அவர்களே, எங்களைச் சார்ந்த ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு விபச்சாரம் செய்துவிட்டான், எனவே, அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டுமோ அதனை கொடுங்கள் என்று கேட்டார்கள். இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) உட்காருவதற்கு ஒரு மென்மையான மெத்தையை அவர்கள் போட்டு இருந்தார்கள், அதன் மீது இறைத்தூதர் உட்கார்ந்தார்கள், மேலும் "தோராவை கொண்டு வாருங்கள்" என்று இறைத்தூதர் கூறினார்கள். அவரிடம் தோரா கொண்டு வரப்பட்ட்து. அப்போது அவர் அந்த மெத்தையிலிருந்து எழுந்தார், மேலும் அந்த மெத்தையின் மீது தோராவை வைத்து, "நான் உன் (தோரா) மீது நம்பிக்கை கொள்கிறேன் மேலும் உன்னை அனுப்பியவர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன்" என்று கூறினார் (I believed in thee and in Him Who revealed thee).

அதன் பிறகு இறைத்தூதர் அவர்கள், உங்களில் படித்த ஒரு நபரை அழைத்து வாருங்கள் என்று கூறினார். ஒரு படித்த வாலிபர் கொண்டு வரப்பட்டார்.

நஃபியின் மாலிக் என்பவர் அறிவித்த கல்லெரிதல் தண்டனை போன்றதோரு விவரங்களே இந்த அறிவிப்பாளரும் இந்த ஹதீஸோடு அறிவித்தார்.

இந்த ஹதீஸின் படி, முஹம்மதுவின் காலத்தில் தோரா மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருந்தது என்று தெரியவில்லையா?

இந்த ஹதீஸின் படி நாம் கீழ்கண்ட விவரங்களை அறிந்துக்கொள்கிறோம்:

1. முஹம்மது வாழ்ந்த காலத்தில், அதிகார பூர்வமான தோரா பரவலாக பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கின்றது. அன்று முஹம்மது அவர்களின் இருந்த பிரதியானது தங்களிடம் இருந்த பிரதிக்கு வேறுபடுகிறது என்றுச் சொல்லி யூதர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையைச் சொன்னால், இந்த தோரா பிரதியானது யூதர்களின் பிரதியாகவே இருந்திருக்கவேண்டும், ஏனென்றால், முஹம்மதுவோ அல்லது அவரது அரபி சகாக்களோ தோராவை படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். இந்த தோரா தான் இறைவனின் பிழையற்ற வார்த்தை. அல்லாஹ்வின் பிழையற்ற வார்த்தைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை (பார்க்க குர்-ஆன் 10:94).

2. தன்னிடம் கேள்வி கேட்ட போது முஹம்மது பரிசுத்த வேதத்தை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார், இது இக்கால இஸ்லாமியர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் தான் உட்கார்ந்து இருந்த மெத்தையிலிருந்து எழுந்து, அந்த மெத்தையின் மிது தோராவை வைத்தார் என்பதை இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயமாக இருக்கிறது. முஹம்மது செய்தது போலத் தான் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும், அல்லாஹ்வின் முந்தைய வேதங்களை கனப்படுத்தவேண்டும்.

3) உங்கள் இறைத்தூதர் முஹம்மது இவ்விதமாக கூறினார்: "நான் உன் (தோரா) மீது நம்பிக்கை கொள்கிறேன் மேலும் உன்னை அனுப்பியவர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன்" (I believed in thee and in Him Who revealed thee) .

இந்த வார்த்தைகள் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வார்த்தைகளாக உள்ளது. அதாவது நாம் அனைவரும் பைபிளை விசுவாசிக்கவேண்டும். முஹம்மதுவின் உதாரணத்தை பின்பற்றவேண்டும் என்று நம்புகிற முஸ்லிம்கள் இப்படியே செய்யவேண்டும். இப்போது என்னிடம் "ஆனால், தீமோத்தேயு அவர்களே, இன்று நம்மிடம் அதிகார பூர்வமான தோரா இல்லையே" என்று அறியாமையில் என்னிடம் கேள்விகளை கேட்கவேண்டாம். ஏனென்றால், உங்கள் இறைத்தூதர் முஹம்மதுவிற்குக் தெரிந்ததை விட உங்களுக்கு அதிகமாக தெரியுமா? பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு வம்சமாக பாதுகாக்கப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன் கையில் கிடைத்த பரிசுத்த இறை வார்த்தைகள் பற்றி உயர்வாக பேசி உங்கள் முஹம்மது அவர்களே அவைகளை கனப்படுத்தியுள்ளார். அப்படி இருக்கும் போது, அவரை விட சிறந்தவர்களாக நீங்கள் உங்களை கருதுகிறீர்களோ? மேலும் தற்போது நம்மிடமுள்ள பிரதிகள், முஹம்மதுவின் காலத்தில் இருந்த பிரதிகளோடு ஒத்திருப்பதை நாம் அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலமாக அறிந்துக்கொள்ளலாம்.

முந்தைய வேதங்கள் பற்றி குர்-ஆன் கூறும் சாட்சியங்களை, வசனங்களை இந்த பக்கத்தில் காணலாம்: WHAT THE QUR'AN SAYS ABOUT THE BIBLE

ஆங்கில மூலம்: Muhammad and the Torah

பைபிள் பற்றிய இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
 
 

Tamil Source : http://isakoran.blogspot.in/2013/04/blog-post_6.html

பரிசுத்த பைபிள் தன்னை பரிசுத்த பைபிள் என்று அழைத்துக் கொள்கின்றதா?

Does the Holy Bible Call Itself the Holy Bible?

சாம் ஷமான்

குர்-ஆன் என்ற வார்த்தை தங்கள் பரிசுத்த வேதத்திற்கு பெயராக அனேக இடங்களில் குர்-ஆனில் காணப்படுகிறது, ஆனால், இதே போல "பைபிள்" என்ற வார்த்தை, பைபிளுக்கு பெயராக பைபிளில் எங்கும் காணப்படுவதில்லை என்று முஸ்லிம்கள் வாதம் புரிகின்றனர். யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் வேதஎழுத்துக்களை குறிக்க "பைபிள்" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, எனவே, பைபிளில் ஒருவன் தேடினால், அதில் இந்த வார்த்தையை அவனால் காணவே முடியாது என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். இது மாத்திரமல்ல, தங்கள் வேத எழுத்துக்களை குறிக்கும் போது தாங்களே அதற்கு "பரிசுத்த" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும் முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மேற்கண்ட இஸ்லாமியர்களின் வாதங்களில் அனேக பிரச்சனைகள் அவர்களுக்கு எதிராகவே உள்ளது. முதலாவதாக, "பைபிள்" என்ற வார்த்தை பரிசுத்த பைபிளிலிருந்தே வந்துள்ளது என்பதாகும். இந்த வார்த்தை லத்தின் மொழியின் "பிப்ளியா" என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். மேலும் இந்த இலத்தின் வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகும். கிரேக்க மொழியில் "பிப்ளியன்" என்பது ஒருமையாகும், "பிப்ளியா" என்பது பன்மையாகும். இலத்தின் மொழியில் "பிப்ளியா" என்பது பெண் பால் ஒருமையாகும்.

பைபிள் தொகுப்பை "ஒரு புத்தகம் (அ) பைபிள்" என்று அழைத்தார்கள். ஏனென்றால், பைபிளில் 66 தனித்தனி புத்தகங்கள் உள்ளன, ஆனால் ஆசிரியர் ஒருவரே, அவரே பரிசுத்த ஆவியாகிய ஆண்டவர் ஆவார்.

இப்போது இதைப் பற்றிய சில மேற்கொள்களை காண்போம், அதன் பிறகு பைபிளிலிருந்தே மேற்கோள்களை காண்போம்:

"The word 'Bible' COMES FROM THE GREEK BIBLOS or bublos, the inner bark enclosing the pitch of the papyrus plant from which paper (papyrus) was made in ancient times. The diminutive plural biblia (books) WAS VIEWED AS A SINGULAR IN LATIN, AND FROM THIS CAME THE MODERN ENGLISH WORD…" (Encyclopedia Americana, Year 2000 Edition, Volume 3, p. 648; bold and capital emphasis ours)

மேலும்:

"The term 'Bible' is derived, through the Latin Biblia (originally a neuter plural, but treated since the early Middle Ages AS A FEMININE SINGULAR), from the Greek ta Biblia, literally "the books," with the word hiera (sacred) expressed or understood. The singular of this Greek word, Biblion (a diminutive in form, but with the diminutive force lost), occurs in Lk 4.17, in reference to the "SCROLL" of Isaiah from which Jesus read in the synagogue at Nazareth. The earlier form he BiBlos (the book, i.e. the Bible), which occurs in 2 Mc 8.23, as does its plural hai BiBloi, in the Septuagint of Dn 9.2, comes from an original form, he BiBlos, designating Egyptian papyrus, first known to the Greeks as writing material imported from the Phoenician city of BYBLOS. Synonymous terms for the sacred book(s) are hai graphai (the writings, the Scriptures) and he graphe (the writing, Scripture, the Bible as a whole), which are used in Mt 21.42; 22:29; 26:54; etc. and Acts 8.32; Rom 4.3; 9.17; etc., respectively.

"The use of the singular number in these terms to designate the many writings that constitute the Bible comes FROM THE REGARDING OF THE COLLECTION AS A SINGLE UNIT, despite its many authors, HAS GOD AS ITS CHIEF AUTHOR…" (New Catholic Encyclopedia, Second Edition, Volume 2, p. 354; bold and capital emphasis ours)

இரண்டாவதாக, ஏற்கனவே குறிப்பிட்டது போல "பிப்ளோஸ், பிப்ளியன் மற்றும் பிப்ளியா" என்ற வார்த்தைகள் அனைத்தும் பரிசுத்த எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை இப்போது காண்போம்:

அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம்(biblion) அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை (to biblion) விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் (to biblion) சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. (லூக்கா 4:17-20)

இந்தப் புஸ்தகத்தில் (en to biblio touto) எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். (யோவான் 20:30)

சங்கீத புஸ்தகத்திலே (biblo): அவனுடைய வாசஸ்தலம் . . . என்றும் எழுதியிருக்கிறது. (அப்போஸ்தலர் நடபடிகள் 1:20)

. . . ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில்(en biblo ton propheton) எழுதியிருக்கிறதே. (அப்போஸ்தலர் நடபடிகள் 7:43)

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில்(en to biblio tou nomou) எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. (கலாத்தியர் 3:10)

துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும் (kai ta biblia), விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. (2 தீமோத்தேயு 4:12)

கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில்(graphon eis biblion) எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. (வெளிப்படுத்தின விசேஷம் 1: 10-11)

இந்தப் புஸ்தகத்திலுள்ள (tes propheteias tou bibliou) தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில்(en tou biblio) எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின்(tou bibliou tes propheteias) வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில்(en to biblio touto) எழுதப்பட்டவைகளிலிருந்தும் , அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். (வெளிப்படுத்தின விசேஷம் 22: 18-19)

மூன்றாவதாக, பைபிள் தன்னை "பரிசுத்தம்" என்று அழைக்கிறது:

இயேசுகிறிஸ்துவைக் குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், (ரோமர் 1:4)

கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். (2 தீமோத்தேயு 3:14)

இதுமாத்திரமல்ல, "புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள்" என்ற வார்த்தைகளும், பரிசுத்த பைபிளிலிருந்தே வந்தது. உதாரணத்திற்கு, "ஏற்பாடு – Testament" என்ற வார்த்தை, கிரேக்க மொழியின் diatheke என்ற வார்த்தையிலிருந்து வந்த இலத்தின் வார்த்தையாகும். இதே வார்த்தை தான் செப்டாஜிண்ட் மொழியாக்கத்தின் போது, ஏற்பாடு (brit) என்ற எபிரேய வார்த்தையை மொழியாக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.

கர்த்தர் ஒரு புதிய உடன்படிக்கையை (ஏற்பாட்டை) செய்தார் என்று வேதம் சொல்கிறது. அதன் நிறைவேறுதலாகத் தான் "புதிய ஏற்பாடு பரிசுத்த எழுத்துக்கள்" இருக்கின்றன.

இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்திஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுககும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. (எபிரேயர் 8:6-13)

ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை. எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: தேவன் உங்களுக்குக், கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளிள்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். (எபிரேயர் 9:15-21)

போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். (லூக்கா 22:20)

பவுல் அவர்கள் பழைய ஏற்பாட்டின் எபிரேய வேத எழுத்துக்களை கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறார், முக்கியமாக கற்களில் எழுதப்பட்டு இருந்த 10 கட்டளைகளை குறிப்பிடுகிறார்:

எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். (2 கொரிந்தியர் 3:7-16)

ஆக, பைபிள் தன்னை பரிசுத்த பைபிள் என்று மட்டும் சொல்லவில்லை, இன்னும் ஒரு படி மேலே சென்று பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்றும் பரிசுத்த எழுத்துக்களை பிரிக்கிறது காட்டுகிறது என்பதைம் இதன் மூலம அறியலாம்.

ஆங்கில மூலம்: Does the Holy Bible Call Itself the Holy Bible?

சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

பைபிள் பற்றிய இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
 
 

Tamil source : http://isakoran.blogspot.in/2013/04/blog-post.html

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் – பாகம் 6 : ஹலோ பாஸ்டர், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யப்போகிறேன்!

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் – பாகம் 6 : 

ஹலோ பாஸ்டர், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யப்போகிறேன்!

  [கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் பாகம் 1, பாகம் 2, பாகம் 3,  பாகம் 4 மற்றும்  பாகம் 5 ஐ படிக்க சொடுக்கவும்.]

[இந்த கட்டுரையை நான் முழுவதுமாக முடிக்கவில்லை, இதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. வாசகர்கள் இந்த உரையாடலை தங்கள் பாணியில் தொடரும் படி கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையை முழுவதுமாக படித்து, கடைசியில் துண்டிக்கப்பட்ட உரையாடலை நீங்கள் தொடர்ச்சியாக எழுதி (இரண்டு பக்கம் மட்டுமே) எனக்கு அனுப்பினால், அவைகளை சரி பார்த்து என் தளத்தில் பதிப்பேன்]

முன்னுரை: உமருடைய நண்பர் பாஸ்டர் ஆபிரகாம், இன்று உமரை தொலைப் பேசியில் அழைத்தார். தன் சபையில் உள்ள ஒரு விசுவாசி (பெயர் ஜோசப்) ஒரு முஸ்லிம் பெண்ணை காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் கேள்விபட்டதாக அறிவித்தார். அந்த விசுவாசியோடு பேசவேண்டும், இன்று மாலை 6 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பேசுவதாக அவர் தெரிவித்தார். உமரும், பாஸ்டர் ஆபிரகாம் அவர்களும், ஜோசப் (விசுவாசி) மூவரும் சந்திக்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மேற்கொண்டு படித்து தெரிந்துக்கொள்வோம்.

ஜோசப்: பாஸ்டர் நாம் யாருக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்? ஏன் என்னை இங்கு வரச்சொன்னீர்கள்?

பாஸ்டர் ஆபிரகாம்:  கொஞ்ச நேரம் பொறுத்திரு, நான் சொல்கிறேன். ஒரு நண்பருக்காக நான் காத்துக்கொண்டு இருக்கிறேன், அவர் வந்ததும் நான் விஷயத்துக்கு நேரடியாக வந்துவிடுகிறேன்.

ஜோசப்: ஓகே.

[சிறிது நேரத்திற்குள் உமர் வருகிறார், உரையாடல் தொடர்கிறது]

பாஸ்டர் ஆபிரகாம்:  வாங்க உமர், உங்களுக்காகத் தான் காத்துக்கொண்டு இருக்கிறோம்.

உமர்: ரொம்ப நேரம் காத்திருக்க வெச்சிட்டேனோ?

பாஸ்டர் ஆபிரகாம்:  இல்லையில்லை. இப்போது தான் நாங்களும் வந்தோம்.

தம்பி ஜோசப் அவர் தான் "சகோதரர் உமர்", என் நண்பர்.

ஜோசப்: ஓ.. உமரா? இது முஸ்லிம் பேராக இருக்கிறதே! நல்லதாப் போச்சு.

[ஜோசப் உடைய கண்களில் ஒரு வகையான ஒளி வந்து சென்றது]

பாஸ்டர் ஆபிரகாம்:  ஏன் அவ்வளவு ஆச்சரியப்படுகிறாய்?

ஜோசப்: ஒன்றுமில்லை, சும்மா தான். எனக்கு முஸ்லிம்கள் என்றால் ஒரு வகையான பிரியம். எனக்கு சில முஸ்லிம் நண்பர்கள்  இருக்கிறார்கள்.

[பாஸ்டர் மனதுக்குள் நினைக்கிறார் முஸ்லிம்கள் என்றால் ஏன் உனக்கு பிரியம் இருக்காது? கண்டிப்பாக இருக்கும். முஸ்லிம் பொண்ணை காதலித்தாய் அல்லவா, முஸ்லிம்கள் என்றால் பிரியம் இருக்கத்தான் செய்யும்]

பாஸ்டர் ஆபிரகாம்:  நீ வேலை விஷயமாக வெளியூருக்கு போனபோது, நம் சபையில் இஸ்லாம் பற்றிய கூட்டத்தில் இவர் பேசினார்.

ஜோசப்: ஓ அப்படியா! நான் அந்த கூட்டத்தில்  கலந்துக்கொள்ள முடியாமல் போனது, நேற்று தான் நான் ஊருக்கு வந்தேன்.

பாஸ்டர் ஆபிரகாம்:  சரி, நான் விஷயத்துக்கு வருகிறேன். உங்கள் இருவரையும் நான் அழைத்த நோக்கம் இது தான். தம்பி ஜோசப்பும் மற்றும் அவரது குடும்பமும் எங்கள் சபைக்கு பல ஆண்டுகளாக வருகிறார்கள். ஜோசப்புடைய அப்பா நம் சபையின் மூப்பராக இருக்கிறார். நான் இவர்களை அதிகமாக  நேசிக்கிறேன். தம்பி ஜோசப் ஒரு சாஃப்ட்வேர் கம்பனியில் வேலை செய்கிறார், மேலும் இப்போது அவரது பெற்றோர்கள் இவருக்காக பெண் பார்க்கும் படி என்னிடம் சொல்லியுள்ளார்கள், நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

ஜோசப்: பாஸ்டர், நீங்க இதைச் சொல்லவா என்னை இங்கு அழைத்தீங்க?

பாஸ்டர் ஆபிரகாம்: இருப்பா! நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. ஒரு முக்கியமான விஷயம் என் காதுக்கு எட்டியது, அதை ஊர்ஜீதம் படித்திக்கொள்ளவும், சில நல்ல விஷயங்களை தம்பியோடு பகிர்ந்துக்கொள்ளவும் நான் இந்த சிறிய சந்திப்புக்கு உங்கள் இருவரையும் அழைத்தேன்.

தம்பி நான் இப்படி கேட்கிறேன் என்றுச் சொல்லி, என் மீது கோபம் கொள்ளவேண்டாம். உன்னை அதிகமாக நான் நேசிக்கிறேன் என்பதால் சொல்கிறேன். மேலும் என் நண்பர் உமர் மூன்றாம் நபர் அல்ல. அவரை வைத்துக்கொண்டு இப்படி நான் கேட்கிறேன் என்றுச் சொல்லி நீ வருத்தப்படவேண்டாம்.

ஜோசப்: பாஸ்டர், நான் கோபித்துக் கொள்ளமாட்டேன், நீங்க என் ஆவிக்குரிய தகப்பன், எனவே எதை வேண்டுமானாலும் கேளுங்க.

பாஸ்டர் ஆபிரகாம்: தம்பி எனக்கு ஒரு செய்தி காதுக்கு எட்டியது, அதாவது நீ ஒரு முஸ்லிம் பெண்ணை காதலிப்பதாகவும், நீங்கள் இருவரும் சேர்ந்து குடும்பத்துக்கு தெரியாமல், ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா? கூச்சப்படவேண்டாம் தம்பி, தைரியமாகப் பேசு.

[ஜோசப் உடைய கண்களில் ஆச்சரியத்தோடு கூடிய குழப்பம் தெரிகின்றது, இதுவரை முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி குறைந்துப் போனது]

ஜோசப்: பாஸ்டர், என் கம்பனியில் வேலை செய்யும், மும்தாஜ் என்ற முஸ்லிம் பெண்ணை  நான் கடந்த இரண்டு வருஷமாக உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அவளும் என்னை நேசிக்கிறாள்.

உமர்: உங்க குடும்பத்துக்கோ, அந்த பெண்ணின் குடும்பத்துக்கோ உங்கள் காதல் பற்றி தெரியுமா?

ஜோசப்: தெரியாது. நானும் சொல்லவில்லை. அவளும் சொல்லவில்லை. அவங்க வீட்டிலே சொன்னா, அவளின் இரு அண்ணன்கள், அவளை அடித்துவிடுவார்கள், அதன் பிறகு வேலைக்கு அனுப்பமாட்டார்கள் என்பதால் சொல்லவில்லை. அவங்க அப்பா, நம்ம ஊரிலே இஸ்லாமிய சமுதாயம் மத்தியிலே பெரிய ஆளு.

பாஸ்டர் ஆபிரகாம்: நீ அவளுடைய பணம் செல்வாக்கு போன்றவற்றை பார்த்து காதலிச்சியா?

ஜோசப்: அப்படியெல்லாம் இல்லை பாஸ்டர். நானும் கைநிறைய சம்பாதிக்கிறேன், பிடிப்பு எல்லாம் போக கைக்கு மாசத்துக்கு 40 ஆயிரம் வருகிறது. எனக்கும் சொந்த வீடு எல்லாம் இருக்கு, நான் ஏன் பணத்துக்கு ஆசைப்பட போகிறேன். அவங்க குடும்பம் ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு ஒரு பைசா செலவில்லாமல் நான் திருமணம் செய்துக்கொள்வேன்.

உமர்: பாரு தம்பி. ஒரு கிறிஸ்தவன் இன்னொரு விசுவாசியான பெண்ணை கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, இப்படி அவிசுவாசியை  திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது.

ஜோசப்: பிரதர், நீங்க சொல்வது உண்மை  தான். ஆனால், காதல் என்பது மதம், ஜாதி பார்த்து வருவதில்லையே! எனக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சுப்போச்சு, மேலும் இந்த காலத்திலே அடக்கம் ஒடுக்கமாக இருக்கும் பெண்ணை பார்ப்பது கடினம். ஒன்னு சொல்கிறேன், நாங்கள் இருவரும் இதுவரை ஊருக்கு வெளியே எங்கேயும் சுற்றியது இல்லை, சினிமா, பீச்சு என்று எங்கும் போனதில்லை.  

உமர்: நீ சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் தம்பி, ஒரு ஆண் பெண் திருமணத்திற்கு பின்பு, உடலால் இணைவதற்கு முன்பு அவர்களின் உள்ளங்களில் உள்ள விசுவாசத்தில் அவர்கள் இணைய வேண்டும். கணவனும் மனைவியும் இயேசுவை நம்புகிறவர்களாக இருத்தல் மிகவும் முக்கியமானது. ஆனால், உன் விஷயத்தில், ஒரு அவிசுவாசியை நீ திருமணம் செய்வது ஒரு விசுவாசிக்கு தகாது.

ஜோசப்: நான் திருமணம் செய்துக்கொண்ட பிறகு அவளை விசுவாசத்திற்குள் கொண்டுவந்து விடுவேன்.

பாஸ்டர் ஆபிரகாம்: தம்பி ஜோசப், இப்போது என் கேள்விக்கு பதில் சொல். ஒரு  கிறிஸ்தவன் மற்றவர்களை துக்கப்படுத்தலாமா? மனம் புண்படும் படி நடந்துக்கொள்ளலாமா?

ஜோசப்: இல்லை, துக்கப்படுத்தும்  படி நடந்துக்கொள்ளக்கூடாது.

பாஸ்டர் ஆபிரகாம்: அப்படியானால், நீ ஏன் மற்றவர்கள் துக்கப்படும் படி நடந்துக் கொள்ளப் பார்க்கிறாய்?

ஜோசப்: நானா? அப்படி ஒன்றும் நான் செய்யவில்லையே!

பாஸ்டர் ஆபிரகாம்: அந்த பெண்ணின் குடும்பத்துக்கு தெரியாமல்,  உன் குடும்பத்துக்கு தெரியாமல், திருமணம் செய்ய முயற்சிப்பது, பெற்றோர்களின் மனதை துக்கப்படுத்தாதா?

ஜோசப்: என்னை என்ன செய்யச் சொல்றீங்க? அவங்க வீட்டிலே ஒத்துக்க மாட்டாங்க, என் வீட்டிலேயும் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. எனக்கு வேறு வழியில்லையே.

பாஸ்டர் ஆபிரகாம்: நீ அவளின் பெற்றோர்களுக்கு எதிராக செய்வது பாவமாகும். இந்த செயலினால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைப்படும்.

ஜோசப்: நான் அவளை இராணி மாதிரி பார்த்துக்கொள்வேன், கைநிறைய சம்பாதிக்கிறேன், அவளை நல்லபடியாக காலம் முழுவதும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன்.

பாஸ்டர் ஆபிரகாம்: நான் இப்படி கேட்கிறேன் என்றுச் சொல்லி, நீ என்னை தப்பா நினைக்காதே! இப்போது நீ நல்லபடியாக அவளை காப்பாற்றுவாயா நல்ல கணவனாக இருப்பாயா என்பது கேள்வியில்லை. அவர்களின் அனுமதி  இல்லாமல் அவர்கள் வீட்டுப்பெண்ணை திருமணம் செய்வது தவறு.

உனக்கு ஒரு தங்கை இருந்து, அவளை ஒரு முஸ்லிம் காதலித்து, நான் அவளை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்ற நினைப்பில், உங்களுக்கு தெரியாமல், அவளை அழைத்துக்கொண்டு போய் ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கொண்டால் நீ சும்மா இருப்பாயா? இது சரியான செயலாகுமா? சொல்?

ஜோசப்: அது எப்படி சரியாகும். பெற்றோர்களுக்குச் சொல்லாமல் ஓடிப்பொய் கல்யாணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல.

பாஸ்டர் ஆபிரகாம்: இதைத் தான் நீயும் செய்யப்போகிறாய்! இது எப்படி சரியானதாக இருக்கும்? உனக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயமா? பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வது தப்பு.

ஜோசப்: நாங்கள் பெற்றோர்களுக்குச் சொல்லத் தயார் ஆனால், அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லையானால்?

பாஸ்டர் ஆபிரகாம்: அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பதால் நீ அவர்களின் பெண்ணை, அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வது சரியானது அல்ல. முதலாவது அவர்களுக்குச் சொல்லவேண்டும், உன் வீட்டிலும் பெற்றோர்களுக்குச் சொல்லவேண்டும். அதன் பிறகு தான் மற்ற காரியங்கள் அனைத்தும். நீ ஒரு நல்ல விசுவாசியாக இருந்தால், நான் சொல்வதைச் செய்! நான் உனக்கு நல்லதையே செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தால், உடனே அந்த பெண்ணுக்கு போன்செய்து, நாளைக்கு நாம் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்யப்போவதில்லை. முதலாவது உன் பெற்றோருக்கும், என் பெற்றோருக்கும் சொல்லி, அவர்களின் ஒப்புதலின்  படியே திருமணம் செய்வோம் என்று சொல். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று நாம் முடிவு எடுப்போம்.

[ஜோசப் ஒன்றும் பேசாமல், அப்படியே தலை குணிந்துவிட்டான், கண்களிலிருந்து கண்ணீர் ஒவ்வொரு சொட்டாக தரையில் விழுகிறது. எல்லாரும் அமைதியாக சில நிமிடங்கள் அப்படியே இருந்துவிட்டார்கள், பாஸ்டர் மறுபடியும் பேசுகிறார்....]

பாஸ்டர் ஆபிரகாம்: தம்பி, நீ கவலைப்படாதே, நான் எப்படியாவது உன் பெற்றோர்களிடம் முதலாவது பேசுகிறேன். அவர்களை ஒப்புவிக்க முயற்சி எடுக்கிறேன். அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோர்களை நாம் சந்தித்து பேசுவோம். நீ நம்பிக்கை வை, தைரியத்தை விடாதே. ஆனால் ஒன்று, நாளைக்கு செய்யவிருக்கும் திருட்டுக் கல்யாணம் மட்டும் வேண்டாம்.

[ஜோசப் ஒன்றும்  பேசவில்லை, சில அடி தூரம் நிதானமாக நடந்துச் செல்கிறான், அதன் பிறகு தன் மொபைல் போனை எடுத்து, ஒரு நண்பரை டயல் செய்கிறான். அந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பெண் பேச ஆரம்பிக்கிறாள். ஒரு புறம் கண்களில் கண்ணீர் வடிந்துக்கொண்டு இருக்கிறது, இன்னொரு புறம், "தவறு செய்யக்கூடாது" என்ற நல்ல நோக்கம் அவன் நெஞ்சை பிளந்துக்கொண்டு இருக்கிறது, அவன் பேச ஆரம்பிக்கிறான். ஐந்து நிமிடம் பேசினான், தொடர்ந்து தன் கண்களிலிருந்து கண்ணீர் கன்னங்கள் வழியாக தரையில் மழைத்துளிபோல விழுந்துக்கொண்டே இருந்தது. அவள் அந்தப் பக்கத்திலிருந்து அழுதாள், இவன் இப்பக்கத்திலிருந்து அழுதான், கடைசியாக இருவரும் சம்மதித்தனர். மொபைலை ஆஃப் செய்தவண்ணமாக, பாஸ்டரை நோக்கி நடந்தான்.]

ஜோசப்: [மெல்லிய குரலில்] பாஸ்டர், நீங்க சொன்னது போலவே, நான் சொல்லிவிட்டேன், மும்தாஜும் ஒப்புக்கொண்டாள். நாளைக்கு நாங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் செய்யப்போவதில்லை.

தன் பெற்றோர்களுக்கும், குடும்பத்துக்கும்  தெரியாமல் திருமணம் செய்வது எவ்வளவு துக்கத்தை அவளுக்கு உண்டாக்கியிருக்கிறது என்பதை இப்போது நான் அறிந்துக் கொண்டேன். எனக்காகவே அவள் இந்த திருமணத்துக்கு ஒப்புக்கொண்டு இருக்கிறாள். இப்போது நான் இந்த புதிய முடிவை சொன்னதும், கொஞ்சம் துக்கப்பட்டாள் ஆனால், நம்பிக்கையோடு எனக்காக காத்திருப்பேன் என்றுச் சொன்னாள்.

பாஸ்டர் ஆபிரகாம்: நல்ல காரியம் செய்தாய். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

ஜோசப்: அடுத்து என்ன? எப்போது நீங்க பேசுவீங்க?

உமர்: ஒரு நல்ல பாஸ்டர் மற்றும் நல்ல விசுவாசி இருவரையும் கண்ட திருப்தியில் நான் இருக்கிறேன். தம்பி நீ நல்ல விஷயத்தை செய்து இருக்கிறாய். உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது.

பாஸ்டர் இப்போது உங்களுக்கு சில கேள்விகள்.

பாஸ்டர் ஆபிரகாம்: என்ன கேள்விகள்?

உமர்: தம்பி ஜோசப்புடைய பெற்றோர்கள் பற்றி கூறுங்களேன்.  அவர்களின் படிப்பு, குணம் போன்றவைகள் பற்றி சொல்லுங்களேன்.

பாஸ்டர் ஆபிரகாம்: எனக்கு புரிகின்றது. ஜோசப்புடைய பெற்றோர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா? என்பது தானே உங்கள் சந்தேகம். அந்த விஷயத்தை என்னிடம் விட்டுவிடுங்க. அவங்க படித்தவர்கள் தான், நல்ல நிலையில் இருக்கிறார்கள், நிச்சயமாக ஜோசப்பின் நிலையை புரிந்துக்கொள்வார்கள். அவர்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவர்களிடம் பேசி, இதற்கு சம்மதிக்க வைப்பது என் வேலை.

[ஜோசப் பாஸ்டரை கூர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றான், அவனது உள்ளம் மௌனமாக அவருக்கு நன்றியை சொல்லியது]

உமர்: அப்படியானால், ஒரு பிரச்சனை தீர்ந்தது. இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை இப்போது இருக்கிறது.

பாஸ்டர் ஆபிரகாம்: எனக்கு புரியுது, அந்த பெண்ணின் பெற்றோர்களை சம்மதிக்க வைக்கவேண்டும், அது தானே இரண்டாவது பிரச்சனை?

உமர்: இல்லை, அது அல்ல,  அப்பெண்ணின் பெற்றோர்களையும் நாம் முயற்சி செய்து சம்மதிக்க வைத்துவிடலாம்.

ஜோசப்:  அவர்கள் சம்மதித்து விட்டால்,  அதன் பிறகு பிரச்சனை இருக்காதே.

உமர்: ஜோசப், அவர்கள் குடும்பம் பற்றி கொஞ்சம் சொல்லேன். அதாவது அவர்கள் மத காரியங்களில் எப்படி, மேலோட்டமாக இருப்பவர்களா? அல்லது தீவிரமாக முக்கியத்துவம் கொடுப்பவர்களா?

ஜோசப்: ஓ.. அதுவா. அவர்கள் அதிக பக்தியுள்ளவர்கள். அவர்கள் வீட்டில் எல்லாரும் தினமும் ஐந்து வேளை தொழுவார்கள். அவர்கள் மக்காவிற்கும் புனித யாத்திரை சென்று வந்துள்ளார்கள் என்று மும்தாஜ் என்னிடம் சொன்னதுண்டு.  நம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கியமான இஸ்லாமிய குழுவில், அவளின் அண்ணன்கள் இருவரும் நல்ல பதிவிகளில் இருக்கிறார்கள். அடிக்கடி இஸ்லாமிய நிகழ்ச்சியில்  பேசுவார்கள். அவர்களின் குடும்பம் ஒரு நல்ல பக்தியுள்ள குடும்பம்.

உமர்: ஓ.. அது தான் பிரச்சனை. அவர்கள் பக்தியுள்ள குடும்பமாக இருப்பது தான் மிகப்பெரிய பிரச்சனை.

ஜோசப்: அவர்கள் பக்தியுள்ளவர்கள், எனவே கொஞ்சம் அமைதியாகவே நடந்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

உமர்: தம்பி ஜோசப், அவர்கள் அமைதியாக இருந்தாலும், இஸ்லாம் அவர்களை சும்மா விடாது.

ஜோசப்: அது எப்படி?

உமர்: ஒரு முஸ்லிம் ஆண், ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்துக்கொண்டால், அதனை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள், இஸ்லாம் இதனை ஏற்றுக்கொள்ளும். ஏனென்றால், அந்தப் பெண் தன்  கண்வன் குடும்பத்தில் (முஸ்லிம் குடும்பத்தில்) ஒரு அங்கமாக மாறிவிடுவாள். அவளை ஒரு முஸ்லிம் பெண்ணாக மாற்றுவது மிகவும் சுலபம்.

ஆனால், ஒரு முஸ்லிம் பெண், ஒரு கிறிஸ்தவனை திருமணம் செய்துக்கொண்டால், அவள் தன் கணவன் வீட்டில் (கிறிஸ்தவ வீட்டில்) வாழ்வாள். இப்போது அவள் தன் கணவனின் மார்க்கத்தை பின்பற்றக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதினால், இஸ்லாம் இதனை ஏற்றுக்கொள்ளாது.

ஜோசப்: இது அநியாயமாக இருக்கிறதே! அவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

உமர்: ஆம், தம்பி, இந்த பிரச்சனை இருப்பதினால், அவர்கள் உனக்கு பெண் தருவது கொஞ்சம் கடினமே!

ஜோசப்: நான் ஒன்று செய்கிறேன். அவள் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு முஸ்லிமாகவே என் வீட்டில் இருக்கட்டுமே! அவள் தினமும் ஐந்து வேளை தொழட்டும், குர்-ஆன் படிக்கட்டும், மத விஷயத்தில் நான் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கமாட்டேன். என் தெய்வத்தை நான் தொழுகிறேன், அவள் தன் தெய்வத்தை தொழட்டும்.

உமர்: நீ சொல்வதை அவர்கள் நம்பமாட்டார்கள்.

ஜோசப்: ஏன் நம்ப மாட்டார்கள்? நான் தான் உறுதியாக எல்லாருக்கும் முன்பாக சொல்லி, அதன்படியே  வாழுவேனே!

உமர்: அப்படியா! ஒருவேளை உன் மனைவி சில ஆண்டுகளுக்கு பின்பு, நான் என் கணவனின் இறைவனையே வணங்குவேன் என்றுச் சொல்லி, ஒரு கிறிஸ்தவ பெண்ணாக மாறிவிட்டால், அப்போது நீ என்ன சொல்வாய்? இப்படி நடக்க வாய்ப்பு இருக்கின்றது அல்லவா?

ஜோசப்: ஆம், இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது, பழம் நழுவி பாலில் விழுந்தது என்ற  மகிழ்ச்சியில் அதனை நான் அங்கீகரிப்பேன்.

உமர்: இதைத் தான் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாது.

இஸ்லாமின்  படி, ஒரு முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிம் அல்லாத மனிதனோடு திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது, அல்லது வாழக்கூடாது.

ஜோசப்: ஒருவேளை ஒரு இஸ்லாமிய தம்பதிகளில், கணவன் என்பவன் இஸ்லாமை விட்டு கிறிஸ்தவனாக மாறிவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்யவேண்டும்?

உமர்: இப்படிப்பட்ட நிலையில், அவன் வாழுவது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், அவன் மறுபடியும் முஸ்லிமாக மாற வாய்ப்பு அளிக்கப்படும். அவன் முஸ்லிமாக மாற மறுத்தால், அவனுக்கும் அவன் மனைவிக்கும் விவாகரத்தை இஸ்லாமிய அரசாங்கமே கொடுத்து, அவர்கள் இருவரை பிரித்துவிடும், பிள்ளைகள் தாயிடம் மட்டுமே இருக்கவேண்டும். மேலும் இஸ்லாமை விட்டு வெளியேறியதால் அந்த மனிதனுக்கு மரண தண்டனை தரப்படும்.

ஜோசப்: ஒருவேளை அவனது முஸ்லிம் மனைவி அரசாங்கத்திடம்,  அவர் கிறிஸ்தவராகவே இருக்கட்டும், நாங்கள் அவரை விட்டு பிரியமாட்டோம் என்றுச் சொன்னால்?

உமர்: இஸ்லாமிய அரசாங்கம் இதனை அங்கீகரித்துக்கொள்ளாது. அந்த பெண் விரும்புவதை அரசாங்கம் செய்யாது. இஸ்லாமிய சட்டம் சொல்வதைத் தான் செய்யும். 

இதுமட்டுமல்ல, இந்துக்களாக இருக்கும் ஒரு தம்பதியரில், மனைவி முஸ்லிமாக மாறிவிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம், இப்போதும், இஸ்லாமிய சட்டம் அந்த கணவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும், அதாவது நீ இஸ்லாமுக்கு மாறிவிடு,  இல்லையென்றால், உன் மனைவி உன்னை விவாகரத்து செய்யவேண்டி வரும். ஒரு முஸ்லிம் பெண், ஒரு இந்துவோடு வாழக்கூடாது.

ஜோசப்: ரொம்ப கொடுமையாக இருக்கே! ஏன் இப்படிப்பட்ட சட்டம் இஸ்லாமில் உள்ளது.

உமர்: உதாரணத்திற்கு, உனக்கும் மும்தாஜுக்கும் திருமணம் ஆகி, உங்களுக்கு பிள்ளைகள் பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

ஜோசம்: என்ன பாஸ்டர், பிரதர் "உதாரணத்திற்கு", "வைத்துக்கொள்வோம்" என்று என் திருமணம் பற்றிச் சொல்கிறார். கண்டிப்பாக நடக்கும் என்றுச் சொல்லுங்க பிரதர்.

உமர்: சரி சரி, உனக்கும், மும்தாஜுக்கும் திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்தால், அவர்களை நீ எப்படி வளர்ப்பாய்? என்ன பெயர் வைப்பாய்? இஸ்லாமிய பெயர் வைப்பாயா? கிறிஸ்தவ பெயர் வைப்பாயா?

ஜோசப்: நான் கிறிஸ்தவ பெயர் தான் வைப்பேன், அவர்களை கிறிஸ்தவர்களாகவே வளர்ப்பேன்.

உமர்: இப்படி நடக்கக்கூடாது என்பதால் தான், இஸ்லாம் எப்பொதும், முஸ்லிமாக மாறிவிடு என்று கணவனுக்கு கட்டளையிடுகிறது.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், ஒரு முஸ்லிம் பெண் கிறிஸ்தவனை திருமணம் செய்யக்கூடாது, அவனை முதலாவது முஸ்லிமாக மாற்றவேண்டும், பிறகு தான் அவனோடு திருமணம் நடக்கும்.

ஜோசப்: அப்படியானால் என் கதை என்ன?

உமர்: உன் காதலியின் பெற்றோர்களிடம் உன் பெற்றோர்கள் மற்றும் இதர பெரியர்கள் சென்று பெண் கேட்டு, எப்படியாவது அவர்களை சம்மதிக்க வைத்துவிடலாம். ஆனால், அவர்கள் பெண் கொடுக்க அங்கீகரித்துவிட்டு, அவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்வி எதுவாக இருக்குமென்றால் "உங்கள் பையனை முதலாவது முஸ்லிமாக மாற்றிவிடுவோம்,  அதன் பிறகு தான் திருமணம்" என்றுச் சொல்வார்கள். இதற்கு உன் பதிலென்ன?

ஜோசப்: இவ்வளவு தானா, நான் முஸ்லிமாக மாறிவிட்டேன் என்று சொல்லிவிட்டு, திருமணம் செய்துக்கொண்டு, சில மாதங்கள் கழித்து கிறிஸ்தவனாக வாழ்ந்துவிட்டால் போதும். ரொம்ப சுலபம். யார் பார்க்கப் போகிறார்கள்?

பாஸ்டர் ஆபிரகாம்: அப்படியானால், நீ பொய் சொல்லப்போகிறாயா? ஏமாற்றப்போகிறாயா? இது கூடாது.

உமர்: பொய் சொல்லி திருமணம் செய்வது முதலாவது தவறு. இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. ஒரு முஸ்லிமாக மாறிவிடுவேன் என்று நீ சுலபமாக சொல்லிவிட்டாய். ஆனால், முஸ்லிமாக மாறுவதற்குக் முதலாவது உனக்கு அவர்கள் இந்த வயதில் விருத்தசேதனம் (சுன்னத்து) செய்வார்கள்.

ஜோசப்: அய்யய்யோ! விருத்தசேதனமா? அதுவும் இந்த வயதிலா?

உமர்: ஆம், இது மாத்திரமல்ல. நீ சில நாட்களுக்கு பிறகு இஸ்லாமை விட்டு வெளியேறினால், உனக்கு மரண தண்டனையை இஸ்லாமிய அரசாங்கம் கொடுக்கும்.

ஜோசப்: இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லையே, அவர்கள் எப்படி தண்டனையை கொடுப்பார்கள்?

உமர்: உண்மை தான் இந்தியா இஸ்லாமிய நாடு இல்லை, ஆனால், இங்கு இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே! இஸ்லாமியர்களில் சிலர் தீவிரவாத கும்பளோடு சேர்ந்து இருப்பார்கள், அவர்கள் எப்போதெல்லாம் இஸ்லாம் அவமானப்படுத்தப்படுகின்றது என்று கருதுவார்களோ, அப்போதெல்லாம், தங்கள் கையில் சட்டத்தை எடுத்துக்கொண்டு, வன்முறையில் இறங்குவார்கள்.

ஜோசப்: இதில் என்ன அவமானம் இருக்கின்றது?

உமர்: நீ இஸ்லாமியன் என்று சொன்ன பிறகு, அதை விட்டு வெளியேறினால், அது இஸ்லாமுக்கு இழுக்கு இல்லையா (இஸ்லாமின்படி)?

ஜோசப்: இஸ்லாமைப் பற்றி எனக்கு அக்கரையில்லை. நான் திருமணத்திற்காக மதம் மாற தயாராக இல்லை. எனக்கு நான் விரும்பிய வாழ்க்கைத் தான் வேண்டும், அதுவும் நான் விரும்பும் பெண்ணோடு என் வாழ்க்கை அமையவேண்டும். பாஸ்டர், இதற்கு வழி என்ன? உங்கள் பேச்சைக் கேட்டு, நான் மும்தாஜுக்கு போன் செய்து சொல்லிவிட்டேன்.  என்னால் அவள் இல்லாமல் வாழமுடியாது!

பாஸ்டர் ஆபிரகாம்: எனக்கு குழப்பமாக இருக்கிறது. நம்ம ஊரில் முஸ்லிம்கள் பாதிக்கு மேல் இருக்கிறார்கள். மேலும் பொய் சொல்லி அவர்களை ஏமாற்றுவது நமக்கு தகாது, நாம் அதனை செய்யக்கூடாது. நீ மும்தாஜை மறந்து. . . .

ஜோசப்: நீ மும்தாஜை மறந்துவிடு என்று சொல்லாதீர்கள், அது முடியாத காரியம்.  அதே நேரத்தில், நம் இரு குடும்பங்களுக்கும் தெரியாமல் நாங்கள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ளமாட்டோம், நான் யாருடைய மனதையும் புண்படுத்தவிரும்பவில்லை.  ஆனால், நான் காதலித்த பெண்ணோடு  வாழனும் இது தான் என் விருப்பம்.

[ஜோசப்பின் முகம் வாடிவிட்டது, அவனுடைய நம்பிக்கை  உடைந்துவிட்டது, சோக முகத்தோடு பாஸ்டரின் கண்களை அனேக கேள்விகளோடு அவன் பார்த்துக்கொண்டு இருக்கின்றான்]

பாஸ்டர்: !?!

உமர்: !?!

[அருமை வாசகர்களே, ஜோசப்பிற்கு ஒரு நல்ல அறிவுரையை கொடுத்து, இந்த உரையாடலை உங்களால் தொடரமுடியுமா?....   ஜோசப் தன் நிலையை சொல்லிவிட்டான். அவன் நேர்மையானவன் அவனுக்காக நாம் ஏதாவது செய்யமுடியுமா?. . . .

இது ஒரு சினிமாவாக இருந்திருந்தால், ஒரு செண்டிமென்ட் சீனை உள்ளே நுழைத்து, இரண்டு குடும்பங்களும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது போல படத்தை எடுத்து "வணக்கம்" என்ற வார்த்தையை கொட்டை எழுத்தில் காட்டி, எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். ஆனால், இது நிஜவாழ்க்கையாயிற்றே!  பிரச்சனையே அந்த "வணக்கம்" என்ற வார்த்தைக்கு பின் தான் ஆரம்பிக்கும்.

வாசகர்கள் இந்த உரையாடலை சுமூகமாக முடித்து, இரண்டு பக்கத்தில் வரும் படி எழுதி எனக்கு அனுப்பினால், அதனை சரி பார்த்து, நான் என் தளத்தில் பதிப்பேன். ]


Tamil source  http://isakoran.blogspot.in/2013/04/6.html