அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 1, 2013

இஸ்லாம் கிறிஸ்தவத்திற்கு முந்தியதா?


இஸ்லாம் கிறிஸ்தவத்திற்கு முந்தியதா?

முன்னுரை:

ஒரு சகோதரர், ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரையை படித்து, கீழ்கண்ட கேள்வியை அனுப்பியிருந்தார்.

//NAME:  Ramkumar

MESSAGE:
நபிகள் வாழ்ந்த  காலம் கி.பி  570ம்  ஆண்டு  என கூறியுள்ளிர்கள். ஆனால்  இஸ்லாம்  கிறிஸ்த்துவ  மதத்திற்கு முன் தோன்றியது  என்கிறார்களேஅவர் வாழ்ந்தகாலம்  சரியானதா?//

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய சில அடிப்படை வருடங்கள் பற்றி நாம் தெரிந்துக்கொண்டால், இஸ்லாமியர்கள் சொல்வதை சரியாக புரிந்துக்கொள்ளமுடியும். உண்மையில் இஸ்லாமியர்கள் சொல்வது தவறானதாகும். ஆனால், "இஸ்லாமியர்களின் நம்பிக்கை" என்ன என்பதை கருத்தில் கொண்டு பார்த்தோமானால், அவர்கள் சொல்வது உண்மை போல தெரியும். என்ன குழப்பமாக இருக்கின்றதா? கீழ்கண்ட விவரங்களை படியுங்கள்.

இந்த கட்டுரையில் சொல்லப்படும் விவரங்கள் பெரும்பான்மையாக எல்லாருக்கும் தெரிந்து இருந்தாலும், புதிதாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றி தெரிந்துக்கொள்பவர்களுக்கு வரும் சில கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் அளிப்பதாக அமையும்.

இஸ்லாமின் கால அட்டவணை முக்கியமான நிகழ்வுகள் மட்டும். (மூலம்: http://en.wikipedia.org/wiki/Timeline_of_Muslim_history):

·                    கி.பி. 545: அப்துல்லாஹ் அவர்களின் பிறப்பு (முஹம்மதுவின் தந்தை)

·                    கி.பி. 570: முஹம்மதுவின் பிறப்பு மற்றும் அப்துல்லாஹ் அவர்களின் மரணம்

·                    கி.பி. 576: அமினா அவர்களின் மரணம் (முஹம்மதுவின் தாய்)

·                    கி.பி. 578: அப்துல் முத்தலிப்  அவர்களின் மரணம் (முஹம்மதுவின் தாத்த)

·                    கி.பி. 583: முஹம்மதுவின் பெரியப்பா அபூ தாலிப் அவர்களுடன் முஹம்மது சிரியாவிற்கு பயணம் செய்கிறார்.

·                    கி.பி. 594: முஹம்மது கதிஜா என்ற பெண்மணிக்காக வியாபார விஷயமாக முஹம்மது சிரியா சென்று வருகிறார்.

·                    கி.பி. 595: முஹம்மது கதிஜா அவர்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்.

·                    கி.பி. 610: ஹிரா என்ற குகையில் முதன் முதலாக தனக்கு குர்-ஆன் வசனங்கள் இறக்கப்பட்டது என்று அறிவித்தல். முஹம்மது ஒரு நபியாக கருதப்பட்ட ஆண்டு.

·                    கி.பி. 619: முஹம்மதுவின் பெரியப்பா அபூ தாலிப் மற்றும் கதிஜா மரணித்தல்.

·                    கி.பி. 622: ஹிஜ்ரா – மதினாவிற்கு முஹம்மது தப்பி ஓடிய ஆண்டு – இஸ்லாமிய நாட்காட்டி ஆரம்பம்,

·                    கி.பி. 624: பத்ரூ யுத்தம், "Bani Qainuqaஎன்ற யுத இனத்தை மதினாவிலிருந்து துரத்துதல்.

·                    கி.பி. 625: உஹுத் யுத்தம், "Banu Nadirஎன்ற யூத இனத்தை மதினாவிலிருந்து துரத்துதல்.

·                    கி.பி. 627: கந்தக் யுத்தம் (Battle of the Trench). "Banu Quraizaயூத இனத்தை கொன்று அனேகரை அடிமைகளாக எடுத்துக்கொள்ளுதல்.

·                    கி.பி. 628: ஹுதைபியா மற்றும் கய்பர் யுத்தம்அனேக அரசர்களுக்கு முஹம்மது கடிதம் எழுதினார்.

·                    கி.பி. 629: மக்காவிற்கு ஹஜ்ஜுக்காக முஹம்மது செல்லுதல், முடா யுத்தம்.

·                    கி.பி. 630: மக்காவை பிடித்தல், ஹனுயன் மற்றும் ஔதஸ் யுத்தம். 

·                    கி.பி. 632: முஹம்மதுவின் மரணம்

கி.பி. 570ல் முஹம்மது பிறக்கிறார், கி.பி. 610ல் தான் ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்கிறார். கி.பி. 632ல் மரணித்து விடுகிறார்.

இஸ்லாம் என்ற மார்க்கம் கால அட்டவணையின் படி, 610ல் முதன் முதலாக முஹம்மதுவால் முன்மொழியப்பட்டது. ஆக, கிறிஸ்தவம் வந்து 600 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் வந்தது. இயேசுவின் நேரடி சீடர்களின் மரணத்திற்கு பிறகு இஸ்லாம் என்பதை கண்டக்கிடால் (கி.பி. 100க்குள் அனைத்து நேரடி சீடர்களும் மரணித்துவிடுகின்றார்கள்),  சீடர்களுக்கு பிறகு 500 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் வந்தது.

இது முதலாவது பதில், இது தான் சரியான பதிலும் கூட.

இப்போது, "முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி" இஸ்லாம் எப்போது தோன்றியது என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதை கவனிப்போம்.

இஸ்லாமின் நம்பிக்கையின் படி இஸ்லாமின் ஆரம்பம்:

முஹம்மது தனது புதிய மார்க்கத்தை "யூதர்களோடு, கிறிஸ்தவர்களோடு" ஒட்ட வைத்துவிட்டார். இதன் அர்த்தம் என்ன?

பைபிளின் தேவன் தான் தன்னை அனுப்பினார் என்று முஹம்மது கூறினார். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அனைவரின் வரிசையில் கடைசியாக தாம் வந்ததாக சுயபிரகடனம் செய்துக்கொண்டார்.

மேலும் ஆதாம் ஒரு முஸ்லிம் என்றும், ஆபிரகாம் ஒரு முஸ்லிம் என்றும் கூறி இஸ்லாமின் நாட்காட்டியை பழைய ஏற்பாட்டோடு ஒட்டவைத்துவிட்டார். இயேசு கூட தமக்கு முன்பாக வந்த தீர்க்கதரிசி என்று கூறிவிட்டார். மேலும் யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவின் தாயாரைப் பற்றியும் சில வசனங்களை குர்-ஆனில் சேர்த்துவிட்டார். கடைசியாக இயேசுவின் சீடர்களையும் விட்டுவைக்காமல் அவர்களையும் முஸ்லிமாக்கிவிட்டார். பைபிளின் முதல் ஐந்து ஆகமங்கள், சங்கீதம், நற்செய்தி நூல்கள் இவை அனைத்தையும் கொடுத்தவர் அல்லாஹ் என்று கூறிவிட்டார்.

மேற்சொன்னவைகள் தான் "தீர்க்கதரிசிகள் வேதங்கள்" பற்றிய இஸ்லாமிய நம்பிக்கையாகும். இப்போது நாம் வருடங்களை கணக்கில் கொள்ளாமல் மேற்கண்ட இஸ்லாமிய நம்பிக்கையை மட்டும் கருத்தில் கொண்டால்,

  • அல்லாஹ் தான் யெகோவா தேவன்
  • நம் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளை அனுப்பியவர் 'அல்லாஹ்' ஆவார்.
  • கடைசியாக, தேவன் (அதாவது அல்லாஹ்) இயேசுவிற்கு பின்பு முஹம்மதுவை அனுப்பினார்.

ஆக, இஸ்லாமியர்களின் லாஜிக்கின்படி, ஆதாம் ஒரு முஸ்லிம் என்றுச் சொன்னால், இஸ்லாம் எப்போது தோன்றியதாக நாம் கருதவேண்டும்? கிறிஸ்தவத்திற்கு முன்பு தோன்றியதாக கருத வேண்டும். இதைத் தான் முஸ்லிம்கள் "கிறிஸ்தவத்திற்கு முன்பு இஸ்லாம் தோன்றியது" என்று லாஜிக்காக சொல்கிறார்கள்.

ஆனால், உண்மையில், முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல, பைபிளின் படி அவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி. அவரை பைபிளின் யெகோவா தேவன் அனுப்பவில்லை. அல்லாஹ்வும் யெகோவா தேவனும் ஒருவரல்ல. அல்லாஹ் என்பவர் ஒரு அந்நிய கடவுள், அதாவது பழைய ஏற்பாட்டின் படி, அவரது பெயரைக் கூட நாம் நம் வாயால் சொல்லக்கூடாது.  கிறிஸ்தவத்திற்கு பிறகு இன்னொரு புதிய மார்க்கம் வரவேண்டிய அவசியமில்லை.

யூத மற்றும் கிறிஸ்தவ அஸ்திபாரத்தின் மீது இஸ்லாம் என்ற மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த அஸ்திபாரத்தை நீக்கிவிட்டால், இஸ்லாம் என்ற ஒன்று இருக்கிறதா என்பதே பதில் இல்லாத கேள்வியாக நின்றுவிடும்.

முடிவுரையாக, கிறிஸ்தவத்திற்கு 600 ஆண்டுகளுக்கு பின்பு இஸ்லாம் தோன்றியது. அதை தோற்றுவித்தவர் முஹம்மது என்ற அரபியராவார். அவர் தன் மார்க்கத்தை யூத கிறிஸ்தவ வேதங்களோடு ஒட்டவைத்துவிட்டார், ஆகையால் இஸ்லாம் யூத கிறிஸ்தவ மார்க்கத்திற்கு முந்தியது என்று இஸ்லாமியர்கள் தவறாக எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.



Source : http://isakoran.blogspot.in/2012/12/blog-post_24.html

0 comments: