அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 15, 2013

இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்


இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்

இயேசுவின் ஊழியம் இஸ்ரவேலருக்கு மட்டுமே, கிறிஸ்தவர்கள் நினைப்பது போல அது எல்லா மனிதர்களுக்குமானது அல்ல என்று சில இஸ்லாமியர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தின் அடிப்படையில், முஹம்மது மட்டுமே எல்லா காலத்திற்கும், அனைத்து மக்களுக்குமான உலகளாவிய நபியாக வந்தார் என்று முஸ்லிம்கள் கூறுவதில், அவர்கள் கிறிஸ்தவர்களை முஹம்மதுவைப் பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதரவாக, இந்த இஸ்லாமியர்கள் பின்வரும் புதிய ஏற்பாட்டு வசனங்களை உடனே எடுத்துக் காட்டுகின்றனர்:

இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். மத்தேயு 10:5-6

அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். மத்தேயு 15:24

ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என்பவர்களின் வம்சத்தில் இயேசு பிறந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்வது முக்கியமானது ஆகும். அனேக நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக அவர் இருந்தார். தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிதல் மற்றும் ஒப்புக் கொடுத்தலின் நிமித்தம் ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தமானது இரண்டு தன்மைகளை உடையதாக இருந்தது. முதலாவதாக, ஆபிரகாமின் சந்ததியான ஈசாக்கு, யாக்கோபு மற்றும் இஸ்ரவேலின் பிள்ளைகளை (சந்ததியினர்) ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். இரண்டாவதாக, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு எனும் அந்த வம்சத்தில் அனைத்து தேசத்தாருக்கும், அதாவது அனைத்து மக்களுக்குமான ஆசீர்வாதத்தை எழுப்புவேன் என்று வாக்களித்தார். (பார்க்க: அப்போஸ்தலர் 3:25-26 மற்றும் கலாத்தியர் 3:8,14).

ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தத்தில், இஸ்ரவேலரின் சந்ததியினரும், புறஜாதியாரும் (இஸ்ரவேலர் அல்லாதோர்) ஆகிய இருவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். இது அனேக நூற்றாண்டுகளுக்குப் பின்பு இயேசு பிறந்தபோது உறுதிப் படுத்தப்பட்டது. குழந்தை இயேசுவை அர்ப்பணிப்பதற்காக ஆலயத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கே ஜெபித்துக் கொண்டிருந்த பக்தியுள்ள வயது சென்ற ஒரு மனிதர் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு அங்கு வந்தார். அவர் தன் கைகளில் அந்தக் குழந்தையை ஏந்தி பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் ஜெபத்தில் சொன்னார்:

(1)புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், (2)உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். லூக்கா 2:30-32

மேற்கண்ட வேதபகுதியில் இருந்து, இயேசுவின் ஊழியமும் இரண்டு தன்மையுடையது என்பதை நாம் அறிகிறோம். முதலாவது, அவர் இஸ்ரவலரிடத்தில் பிறந்தபடியால், இஸ்ரவேலரிடம் தன்னையும் தேவனையும் வெளிப்படுத்துவது அவருடைய முதல் ஊழியமாக இருந்தது. அவர்கள் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்- ஆபிரகாம், ஈசாக்கும் மற்றும் யாக்கோபின் சந்ததியினர். குர்-ஆனும் இந்த வித்தியாசத்திற்கு சாட்சி பகருகிறது:

வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக! மறு உலகை நினைப்பதற்காக அவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம். ஸூரத்துல் ஸாத் (38):45-46

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! ஸூரத்துல் அல்-பகரா (2):47

மிகவும் வருந்தத்தக்கதாக, இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர் தேவனைப் பற்றிய காரியங்களில் கடினப்பட்டவர்களாகவும் வேறுபட்டவர்களுமாக மாறியிருந்தனர். இதன் விளைவாக, நீண்ட காலமாக இஸ்ரவேலர்கள் எதிர்பார்த்திருந்த ஆசீர்வதிக்கப்பட்டவரும், தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக தேவனால் அபிசேகிக்கப்பட்டவருமான மேசியா, நானே என்று இஸ்ரவேலரிடம் உறுதிப்படுத்தும் படியாக, இயேசு அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் அவர்கள் மத்தியில் தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்வது அவசியமானதாக இருந்தது. இந்தக் காரணத்தினால் தான் அவருடைய தனிப்பட்ட ஊழிய காலத்தில், இயேசு தம் சீடர்களை இஸ்ரவேலரிடத்திற்கு மட்டுமே போகும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் முதலாவது செய்தியைக் கேட்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் தேவ ஆசீர்வாதத்தைப் பற்றிய வாக்குத்தத்த உடன்படிக்கையின் மக்களாக இருந்த படியினால், இது அவர்களின் பாக்கியமாக இருந்தது. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, அவருடைய சீடர்களில் ஒருவர் இஸ்ரவேலரிடம் பின்வருமாறு பேசினார்:

நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். அப்போஸ்தலர் 3:25-26

இயேசுவின் ஊழியத்தின் இரண்டாவது பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்வது மிக முக்கியமானது ஆகும். இந்த ஊழியமானது எல்லா மனிதரின் பாவங்களுக்கான பரிகார பலியாக அவர் தம் ஜீவனைக் கொடுப்பதாக இருந்தது. (1 தீமோத்தேயு 2:4-6). இது எல்லா தேசத்தவருக்குமான ஆசீர்வாதமாக இருந்தது. இயேசு சிலுவையில் பாடுபட்டு சிந்திய இரத்தத்தினாலே எல்லா மனிதரின் பாவங்களுக்கான தண்டனையைச் செலுத்தித் தீர்த்தார் என்ற நற்செய்தியே அந்த ஆசீர்வாதம் ஆகும். இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொள்கிற எவருகுக்கும் தேவனுடன் நித்தியமான வாழ்வு உறுதியாக உண்டு எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து (அல்-மஸீஹ்) பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. லூக்கா 24:46-47

மேசியாவாகிய இயேசுவில் இந்த இரட்சிப்பு அனைவருக்கும், யூதருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது என்பதை வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இயேசு பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தம் சீடர்களை இஸ்ரவேலரிடம் மட்டுமே போகும்படி சொன்னார் என்பதை நினைவில் கொள்க. ஆனால் அவருடைய ஊழியத்தின் இரண்டாவது பகுதியை செய்து முடித்த பின் (ஒப்புரவாக்குதலின் தியாக சிலுவை மரணத்திற்குப் பின்), அப்பொழுது அவர் சீடர்களிடத்தில் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்:

நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ….. மத்தேயு.28:19

இந்த வார்த்தைகளை இயேசு அறிவித்தபோது, அவர்தாமே தம் உலகலாவிய தன்மையை உறுதிப்படுத்தினார்:

நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12

மீண்டுமாக இயேசு தன்னை அனைத்து மக்களுக்குமான இரக்கத்தில் சிறப்பான ஆசீர்வாதம் அல்லது வெளிப்பாடு என குறிப்பிடுகிறார். குர்-ஆனும் இதேபோல இயேசுவின் உலகளாவிய ஊழியத்தைப் பற்றிக் கூறுகிறது. அல்லாஹ் கூறுவதாக பின்வருமாறு வருகிறது:

'அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும் (ஆயத்-அல் லின்னாசி), நம் அருளாகவும் ஆக்குவோம்.... ஸூரத்துல் மர்யம் (19):21

கவனியுங்கள், "இஸ்ரவேலருக்கு மட்டுமேயான அடையாளம்" என்று சில இஸ்லாமியர்கள் நம்புவது போல இங்கு இல்லை. உண்மையில் அரபியில் இந்த வார்த்தை "அனைத்து மக்களுக்குமான அடையாளம்" என்று வருகிறது.

ஆங்கில மூலம்: The Claim that Jesus was a Prophet Only to Israel

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
 
 

Tamil Source : http://isakoran.blogspot.in/2013/02/blog-post.html

February 1, 2013

ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்


ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்

தங்கள் நபியான முஹம்மது அவர்கள் வந்த நோக்கம் யூத மற்றும் கிறிஸ்தவர்களின் கறைபடுத்தப்பட்ட, காலாவதியான மத அமைப்புக்குப் பதிலாக புதிய சட்ட திட்டங்களோடு கூடிய ஒரு புதிய மதத்தை நிறுவுவதே என சில இஸ்லாமியர்களால் கூறப்பட்டது. இந்தக் காரணத்தினால், அனேக முஸ்லிம்கள் கிறிஸ்தவத்தைப் பற்றிய செய்திக்கு எவ்வித கவனமும் செலுத்தத் தேவையில்லை என்று நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்தவ மதமானது புதிய மற்றும் சிறந்த மதத்தினால் மேற்கொள்ளப்பட்டுவிட்டது, இஸ்லாம் என்ற மதம் கிறிஸ்துவுக்குப் பின் 600 வருடங்கள் கழித்து முஹம்மதுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிந்தனை இஸ்லாமியர்கள் அனேகருக்குள் பரவியிருந்தாலும், அது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆனின் போதனைக்கு எதிரானதாக இருக்கிறது.

குர்-ஆனின் படி, முஹம்மது அவர்கள் வந்த நோக்கம் முற்றிலும் ஒரு புதிய மதத்தை நிறுவுவது அல்ல, மாறாக ஆபிரகாமின் மதத்தில் தொடர்ந்து நிலைநிற்பது ஆகும்.

'(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!' என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. ஸூரத்துல் அந்நஹ்ல் (16):123.

எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை' என்று கூறுவீராக! ஸுரத்துல் அல் அன்ஆம் (6):161.

''அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை'' என்று கூறுவீராக! ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):95.

'யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்' என்று கூறுகின்றனர். 'அவ்வாறல்ல! உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்று வோம்). அவர் இணை கற்பித்தவராக இருந்ததில்லை' எனக் கூறுவீராக! ஸுரத்துல் அல் பகரா (2):135.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க் கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். ஸூரத்துல் அன்னிஸா (4):125

மேற்சொன்னவைகளைத் தவிர, குர்-ஆனும் கூட முகம்மது அவர்கள் புதிதாக எதையும் போதிக்க வரவில்லை எனச் சொல்கிறது. உண்மையைச் சொல்வதானால், ஏற்கனவே அருளப்பட்ட வெளிப்பாடுகளை உறுதிப்படுத்தும் படிக்கே அவருக்கு வெளிப்பாடு அருளப்பட்டது என குர்-ஆன் நமக்குச் சொல்கிறது. முன்னமே அருளப்பட்டதை திருத்தவோ, மாற்றவோ, அதில் சேர்க்கவோ அல்லது அதை செல்லாதது என அறிவிக்கவோ அவருக்கு வெளிப்பாடு கொடுக்கப்படாமல், அவைகளை உறுதிப்படுத்தவே அவருக்கு வெளிப்பாடு கொடுக்கப்பட்டது.

இதற்கு முன் மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் இருக் கிறது. இது அநீதி இழைத்தோரை எச்சரிப்ப தற்காகவும், நன்மை செய்வோருக்கு நற் செய்தி கூறுவதற்காகவும் அரபு மொழியில் அமைந்த வேதமாகும். (முன் சென்ற வேதங்களை இது) உண்மைப்படுத்துகிறது. ஸுரத்துல் அல் அஹ்காஃப் (46):12

(முஹம்மதே!) உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.உமது இறைவன் மன்னிப்புடையவன்; துன்புறுத்தும் வேதனையுடையவன். ஸூரத்துல் ஃபுஸ்ஸிலத் (41):43.

நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், 'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!' என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான். (ஸூரத்துல் அஷ்ஷூரா (42):13.

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை' எனக் கூறுவீராக! ஸுரத்துல் அல் அஹ்காஃப் (46):9

நம்பிக்கை கொண்டவர்களின் சமுதாயத்திற்கு தீர்க்கதரிசி மோசே மூலமாக தேவனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுக்க மற்றும் சமூகச் சட்டங்களின் அடிப்படையில் ஆபிரகாமின் மார்க்கம் விரிவுபடுத்தப்பட்டது என்பதைக் கவனிப்பது முக்கியமானது ஆகும். அதன் விளைவாக, இஸ்லாம் பொதுவில் காணப்பட்ட பல பழக்க வழக்கங்களை அதிலும் குறிப்பாக முஹம்மதுவின் வருகைக்கு முன் பல நூறாண்டுகளாக யூதர்கள் மத்தியில் இருந்த பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டது. வேதாகமத்தில் காணப்படுவதற்கொத்த இஸ்லாமிய பழக்கவழக்கங்களில் சில கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும் என்று சில முஸ்லீம்கள் நினைப்பதற்கு மாறாக, இவை ஒரு புதிய மதத்திற்கான புதிய சட்டதிட்டங்கள் அல்ல, அவை முன்னமே இருந்தவையாகும்.

  1. சமாதான வாழ்த்துதல் கூறுதல் (லூக்கா 10:5)
  2. தொழுகைக்கு முன்பு கைகளையும் கால்களையும் கழுவுதல் (யாத்திராகமம் 40:31-32)
  3. தேவ சமூகத்தில் காலணிகளைக் கழற்றுதல் (யாத்திராகமம் 3:5)
  4. ஜெபம் பண்ணுகையில் முழங்கால்படியிடுதல் (சங்கீதம் 95:6)
  5. விலங்கு பலியிடுதல் (பஸ்கா) (உபாகமம் 16:1-6)
  6. எருசலேமிற்கு புனிதப் பயணம் செல்லுதல் (அப்போஸ்தலர் 8:26-28)
  7. பெண்கள் தொழுகையில் தங்கள் தலைக்கு முக்காடிட்டு மறைத்துக் கொள்ளுதல் (1 கொரிந்தியர் 11:5-6)
  8. விருத்தசேதனம் (லூக்கா 2:21)
  9. முதற்பேறான பிள்ளைக்காக பலி செலுத்துதல் (லூக்கா 2:24)
  10. நீண்ட உபவாசம் (யாத்திராகமம் 34:28, 1 இராஜாக்கள் 19:8, மத்தேயு. 4:2)
  11. பெண்கள் அமைதலுடனும் அடக்கத்துடனும் இருத்தல் (1கொரிந்தியர் 14:34)
  12. பன்றி இறைச்சி புசிக்காமல் இருத்தல் (லேவியராகமம் 11:7)

ஆங்கில மூலம்: The Claim that Muhammad Came to Establish a New Religion


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.



இது அற்புதமா? (It’s a Miracle)

இது அற்புதமா? (It's a Miracle)

Author : Robert Sievers

Translation by: Tamil Christians.
இஸ்லாமுக்கும் மற்றும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசங்களை அறிந்துக்கொள்ள "இம்மார்க்கங்களில் உள்ள அற்புதங்கள்" கூட நமக்கு ஒரு வகையில் உதவி செய்கின்றன. இந்த மார்க்கங்கள் "அற்புதங்களை" எப்படி காண்கின்றன, முக்கியமாக அற்புதங்களின் முக்கிய நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன? போன்றவைகளை இப்போது ஆராய்வோம்.

பைபிளில் சொல்லப்பட்டது போல மேலும் கிறிஸ்தவர்கள் கருதுவது போல, இஸ்லாமில் அற்புதங்கள் கருதப்படுவதில்லை. இஸ்லாமில் "குர்-ஆன்" கூட ஒரு அற்புதம் தான். உண்மையில், மக்கள் முஹம்மதுவிடம் அற்புதங்களை செய்து காட்டுங்கள் என்று கேட்டபோது அவர் "அவர்களை குர்-ஆனை படிக்கச் சொன்னார்" (குர்-ஆன் 29:50-51, 17:88-94).  இதனை தெளிவாக்க, இன்னொரு முறை சொல்ல விரும்புவது என்னவென்றால், முஸ்லிம்களின் படி "குர்-ஆன்" ஒரு அற்புதமாகும். மேலும், "அடையாளம்/அற்புதம்" என்ற வார்த்தையின் அரபி வார்த்தை "ஆயத்" என்று உள்ளது.  இதே வார்த்தை தான் குர்-ஆனின் வசனங்களை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, குர்-ஆனின் ஒவ்வொரு வசனமும் ஒரு அற்புதமாகும் (ஆயத் ஆகும்). இதனை சமீப காலம் வரை வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத்  கீழ்கண்ட வாறு கூறுகிறார்:

"Again and again when miracles are demanded from the prophet of God by the cynical and frivolous few, he is made to point to the qur`an – message from high – as 'the miracle.' The miracle of miracles! And men of wisdom, people with literary and spiritual insight, who were honest enough to themselves, recognised and accepted al-qur`an as a genuine miracle." [i]

"நம் இறைத்தூதரிடம் அடிக்கடி அற்புதங்கள் பற்றி கேள்வி எழுப்பிய வஞ்சக கூட்டங்களுக்கு, அவர் குர்-ஆனை பதிலாக காட்டினார். இறைவனிடமிருந்து வந்த செய்தி தான் "அற்புதமாகும்". குர்-ஆன் தான் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஞானமுள்ள அறிஞர்கள் மற்றும் நீதி நேர்மையோடு நடந்துக்கொள்ளும் அறிஞர்கள் "குர்-ஆன்" ஒரு உண்மையான அற்புதம் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்."[i]

அற்புதம் பற்றி முஸ்லிம்களின் மனதில் உள்ளதை புரிந்துக்கொள்ள, ஒரு உதாரணத்தை கூறுகிறேன். அதாவது பைபிளில் உள்ள வசனங்களை நாம் "அற்புதங்கள்" என்று கூறுவோமானால் எப்படி இருக்கும்? அதாவது ஒரு பிரசங்கியார், பிரசங்க பிடத்தில் நின்றுக்கொண்டு பைபிளின் ஒரு புத்தகத்தை மற்றும் அதிகாரத்தை குறிப்பிட்டு, அந்த அதிகாரத்தில் வரும் "முதலாவது அற்புதத்தை படிக்கவும்" என்று கூறினால் எப்படி இருக்கும்? அதாவது முதலாவது வசனத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, முதலாவது அற்புதத்தை படியுங்கள் என்று அவர் சொல்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், முஸ்லிமுக்கு ஒவ்வொரு வசனமும் ஒரு "அற்புதமாகும்". ஆக, முஹம்மது அற்புதங்கள் செய்தார் என்பதை நாம் எப்படி சொல்லமுடியும்? அவர் கொண்டு வந்த குர்-ஆன் தான் அற்புதம். எனவே இஸ்லாமின் அற்புதமாகிய குர்-ஆனை நாம் அற்புதங்களுக்காக அடிப்படையாக கருதலாம்.
 
குர்-ஆன் தனக்குத் தானே அற்புதமாக இருப்பதினால் (இஸ்லாமியர்கள் இப்படி நம்புவதினால்) நாம் குர்-ஆனின் வசனங்களை முஹம்மதுவின் அற்புதமாக கருத நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். முஹம்மதுவின் அற்புதங்களை நாம் கிறிஸ்துவின் அற்புதங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். நாம் பொதுவாக செய்து வருகின்ற பிரகாரமாக, இப்படி ஒப்பிடும் போது, இவ்விரண்டு மார்க்கங்களின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ள வித்தியாசங்களை காணலாம்.

இப்போது நாம் கிறிஸ்து செய்த அற்புதங்களின் பக்கம் நம் கவனைத்தை திருப்புவோம். இயேசுக் கிறிஸ்து 

  • ஒரு குருடனுக்கு பார்வையை கொடுத்தார் (யோவான் 9), 
  • மரித்த ஒருவரை உயிரோடு எழுப்பினார் (யோவான் 11), 
  • திமிர்வாதக்காரனை சுகப்படுத்தினார் (மாற்கு 2), மேலும் 
  • ஒரு சில ரொட்டிகள் மற்றும் மீன்களைக் கொண்டு சில ஆயிர மக்களின் பசியை தீர்த்தார் (மத்தேயு 14)

இப்போது முஹம்மதுவின் அற்புதமாகிய குர்-ஆனை அலசுவோம். குர்-ஆனின் பக்கங்களை நாம் திருப்பி பார்க்கும் போது, வேறு வகையான அற்புதத்தை அதில் காணமுடியும். முஹம்மதுவின் அற்புதம் இவ்விதமாகச் சொல்கிறது அதாவது, 

  • ஒரு முக்கியமான விஷயத்திற்காக பேசிக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிம்கள் அந்த இடத்தை விட்டு செல்லவேண்டுமென்றால் அவர்கள் முஹம்மதுவிடம் அனுமதி பெறவேண்டும் (குர்-ஆன் 24:62)
  • முஹம்மதுவின் மனைவிகள் தவறு செய்தால், அவர்களுக்கு இரண்டு மடங்கு தண்டனை கிடைக்கும் (குர்-ஆன் 33:30)
  • முஹம்மது மற்ற முஸ்லிம்களைக் காட்டிலும், அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்ள அவருக்கு உரிமை உண்டு (குர்-ஆன் 33:50)
  •  முஹம்மது தனது வளர்ப்பு மகனின் மனைவியை (மருமகளை) திருமணம் செய்துகொள்ள அவருக்கு அனுமதி உண்டு (33:37)
  • முஹம்மதுவின் வீட்டிற்கு அவரை காண வருபவர்கள், உணவு அருந்தியவுடன் அவர்கள் முஹம்மதுவை மேலும் தொந்தரவு செய்யாமல் உடனே சென்றுவிடவேண்டும் (குர்-ஆன் 33:53).
  • முஹம்மதுவைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் அனுமதிக்கப்படாது (குர்-ஆன் 58:9)
  • கடைசியாக, முஹம்மதுவிடம் பேசும் மக்கள், தங்கள் சத்தத்தை குறைத்து அமைதியான முறையில் பேசவேண்டும் (குர்-ஆன் 49:2)

மேற்கண்ட இரண்டு பேருடைய அற்புதங்களில் உள்ள வித்தியாசமான பாணியை நீங்கள் இப்போது காணமுடியும். இயேசுவின் அனைத்து அற்புதங்களும் மற்ற மக்களுக்கு உதவி செய்வதாகவே இருந்தது. இயேசு ஒரு முறை கூட தன்னுடைய உலக வாழ்விற்கு உதவியாக இருக்கும் படியாக ஒரு போதும் ஒரு அற்புதம் கூட செய்துக்கொள்ளவில்லை. இயேசு எந்த ஒரு சமயத்திலும் தனக்கு பசி எடுக்கின்றது என்பதற்காக "அற்புதம் மூலமாக உணவை கொண்டு வரவில்லை", தனக்கு மகிழ்ச்சி உண்டாகும் படி சொந்த தேவைக்காக அற்புதம் செய்துக்கொள்ளவில்லை.  மேலும் சில காரியங்கள் செய்ய தனக்குதனிப்பட்ட அதிகாரம் உண்டென்றுச் சொல்லி,  சுயத்திற்காக அற்புதங்கள் செய்துக்கொள்ளவில்லை. உண்மையில், இயேசு இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்து தன் சொந்த தேவைகளை வசதிகளை செய்துக்கொள்ள வேண்டும் என்று சாத்தான் அந்த வனாந்திரத்தில் இயேசுவை சோதித்துப் பார்த்தான். (மத்தேயு 4:1-11).  அவ்வளவு ஏன், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேதுருவிடம் ஒரு மீனை பிடித்து, அதில் காணப்படும் இரண்டு நாணயத்தைக் கொண்டு வரிப்பணம் கட்டு என்று சொன்ன போது கூட, அந்த அற்புதம் தன்னுடைய நன்மைக்காக அல்லாமல், மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் இந்த அற்புதம் செய்ததாக கூறுகிறார் (மத்தேயு 17:27).

ஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் பக்கம் நாம் கவனைத்தை திருப்பினால், குர்-ஆனில் அவர் கொண்டு வந்த வெளிப்பாட்டு அற்புதங்களில் அனேக அற்புதங்கள் தன்னுடைய உலக வாழ்க்கையில் தனக்கு நன்மை உண்டாகவேண்டும் என்பதற்காகவே இருந்தது. மேலும், முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவர், கீழ்கண்டவாறு  கூறுகிறார்:

புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5113

உர்வா வின் ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன் வந்த பெண்களில் கவ்லா பின்த் ஹகீம்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: 

ஒரு பெண் தம்மைத் தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா? பின்னர் '(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கி வைக்கலாம்'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனம் அருளப்பட்டதுபோது 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் விருப்பத்தைத் தங்களின் இறைவன் விரைவாக பூர்த்தி செய்வதையே காண்கிறேன்'' என்று (நபியவர்களிடம்) கூறினேன். [ii]


மேற்கண்ட ஹதீஸை எவ்வளவு கேலியாக முஹம்மதுவின் மனைவி கூறியிருப்பார்கள் என்பதை இன்று அதாவது 1400 ஆண்டுகளுக்கு  பின்பு நம்மால் சரியாக யூகிக்க முடியாது. முஹம்மதுவின் வாழ்க்கையில் வசதிகள் அல்லது அவருடைய மகிழ்ச்சிக்கு துணையாக இந்த குர்-ஆன் வசனம் எவ்வளவு சீக்கிரமாக இறக்கப்பட்டது என்பதை அவரது மனைவியாகிய ஆயிஷா கவனித்துள்ளார். இதனை இன்று நாம் அறிந்துக்கொள்வது கடினமான விஷயமன்று. குர்-ஆனின் அற்புதம் முஹம்மதுவிற்கு இந்த உலக வாழ்க்கையில் வசதிகளை செய்துக்கொடுத்து அவருக்கு உதவியாக இருந்தது. ஆனால், இயேசு செய்த அற்புதங்களோ, மற்ற மக்களுக்கு வசதிகளை செய்துக் கொடுத்து அவர்களுக்கு உதவியாக இருந்தது. சரித்திரத்தில் காணும் இவ்விரண்டு நபர்கள் நேர் எதிர் துருவங்களாக இருப்பதை நாம் காணலாம்.

இயேசு மற்ற மக்களின் நன்மைக்காக அற்புதங்களைச் செய்தார், தன்னுடைய நன்மைக்காக செய்யவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், சில நேரங்களில் இயேசு மற்றவர்களின் நன்மைக்காக செய்த அற்புதங்கள் தனக்கு ஆபத்து உண்டாக்கும்படியாக இருந்தது. கடைசியாக, இயேசுவின் உயிர்த்தெழுந்த அற்புதமானது, மிகவும் கொடுமையான மரணத்தை ஏற்றுக்கொண்டு செய்யப்பட்ட அற்புதமாக உள்ளது. ஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் தன்னுடைய வாழ்க்கையை இலகுவாக்க அல்லது அவரது ஆசைகளை தீர்த்துக்கொள்ள உதவி செய்வதாக அமைந்துள்ளது.

இந்த இரண்டு நபர்களின் அற்புதங்களில் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம்? இந்த அற்புதங்கள் இவ்விருவர் பற்றி எவைகளை நமக்கு போதிக்கின்றன? ஒருவர் செய்த அற்புதம் நம்முடைய மரியாதையை பெறுவதாக உள்ளது, ஆனால், இன்னொருவரின் அற்புதம் அப்படி மரியாதைக்குரியதாக இல்லை. முஹம்மதுவின் அற்புதங்களைக் காட்டிலும் இயேசுவின் அற்புதங்கள் நன்மதிப்பை பெறுவதாக உள்ளது.

பின் குறிப்புக்கள்:
[i] Quote from Achmed Deedat, reprinted onhttp://www.jannah.org/articles/qurdeed.html, Accessed April 26, 2009
[ii] Sahih Bukhari: Volume 7, Book 62, Number 48

ஆங்கில மூலம்: It's a Miracle 

Thanks to "http://www.unravelingislam.com" site for granting permission to translate and publish its articles in Tamil language.


ஹிஜ்ரியும் சிலுவையும் (The Hijra and the Cross)

ஹிஜ்ரியும் சிலுவையும் (The Hijra and the Cross)

Author : Robert Sievers

Translation by: Tamil Christians.

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒரே இறைவனை வணங்குகிறார்கள் என்று அனேகர் சொல்ல  அனேக முறை நான் கேட்டு இருக்கிறேன். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஜெபிக்கிறார்கள், இருவரும் உபவாசம் இருக்கிறார்கள், இவ்விருவருக்கும் பரிசுத்த வேதங்கள் உள்ளது,  இவ்விரு குழுவினரும் தங்கள் வேதங்களில் சொல்லப்பட்ட கட்டளைகளுக்கு கீழ்படியவேண்டும், இப்படி அனேக ஒற்றுமைகள் கூறப்படுகின்றது. நான் எவ்வளவு அதிகமாக இஸ்லாமை அறிந்துக்கொள்கின்றேனோ, அவ்வளவு பெரிய அடிப்படை வித்தியாசங்கள் இவ்விரு மார்க்கங்களுக்கு இடையே இருப்பதை என்னால் காணமுடிகின்றது. இந்த வித்தியாசங்கள் ஏதோ முக்கியமில்லாத சாதாரண விஷயங்களாக அல்லாமல், மிகவும் ஆழமான வித்தியாசங்களாக காணப்படுகின்றன. அவைகளை வெளியே கொண்டு வர சிறிது ஆய்வும் தேவைப்படுகின்றது.  இந்த வித்தியாசங்களை மிகவும் கூர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்துவிடும், அது என்னவென்றால், இஸ்லாமில் கணப்படும்  ஒரு தொடர்ச்சியான தீய காரியங்கள் அல்லது கோட்பாடுகள் ஆகும்.  சரி, என்னுடைய இந்த சிறிய கட்டுரையின் முக்கிய கருத்துக்கு வருகிறேன். ரவி ஜகரியா என்ற கிறிஸ்தவ ஊழியர் ஒரு முறை இவ்விதமாக கூறினார்:

"I often hear the question posed wrongly, 'Aren't all religions fundamentally the same and superficially different?' No. They are fundamentally different and at best they are superficially similar."

"என்னிடம் தவறாக கேட்கப்படுகின்ற கேள்வி ஒன்று உண்டு, அதாவது "அடிப்படையில் எல்லா மதமும் ஒன்று தானே, பார்க்கின்ற பார்வையில் அவைகள் வித்தியாசமாக காணப்படுகின்றன அல்லவா?"   என்று கேள்வி கேட்கப்படுகின்றது. ஆனால், இதற்கு பதில் என்னவென்றால், "இல்லை, அவைகள் அடிப்படை கோட்பாட்டில் வித்தியாசமானவைகள், பார்க்கின்ற பார்வையில் அவைகள் ஒன்று போலவே காணப்படுகின்றன".

அடிப்படை கோட்பாடுகளில் வித்தியாசமானவைகள் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.  இந்த அடிப்படை வித்தியாசங்கள் குறித்த அம்சங்கள் பற்றி இப்போது நாம் காண்போம். இந்த மதங்களில் முக்கியமான நிகழ்வு என்ன? மற்றும் இந்த நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் சத்தியங்கள் என்ன? இந்த இரண்டு மதங்களை ஆய்வு செய்து, கோர்வையாக அலசுவோம், அவைகள் எதிர்மறையாக இருக்கின்றனவா அல்லது ஒன்றோரு ஒன்று ஒன்றிப்போகின்றனவா என்பதை காண்போம்.

கிறிஸ்தவத்தின் அடிப்படை நிகழ்வு:

கிறிஸ்தவத்தின் அடிப்படை நிகழ்வு இயேசு சிலுவையில் அறையப்படுவதாகும் (மேலும் அடுத்த நிகழ்வாகிய உயிர்த்தெழுதலாகும்). சுவிசேஷ நூல்கள் அனைத்தும் நம்மை கடைசியாக சிலுவையில் கொண்டுவந்து சேர்க்கும். ஒவ்வொரு சுவிசேஷ நூலும், இயேசுவின் சிலுவை அறைதலுக்கு முன்பு இருக்கும் கடைசி நாட்கள் பற்றி அதிக விவரங்களை கொண்டுள்ளது. இயேசு சிலுவையில் அறையப்படுதல் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும், ஏனென்றால், இந்த தியாக பலியினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் அதற்கு அடுத்தபடியாக நடைப்பெற்ற இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்வானது, இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிருபிக்கிறது, அவர் யாராக இருக்கிறார் என்பதையும், பாவங்களை மன்னிக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்பதையும் அது தெளிவாக விளக்குகிறது. இயேசுவின் ஊழியங்களில் சிகரமாக இருப்பது சிலுவையாகும், அதன் பிறகு அவரால் "எல்லாம் முடிந்தது" என்று சொல்லமுடிந்தது (1 கொரி 15:3-4). உண்மையில் கூறவேண்டுமென்றால், எல்லாவற்றைக் காட்டிலும் சிலுவை தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை சின்னமாக உள்ளது. இயேசு உயிரோடு இருந்த போது சாதித்த அனைத்து காரியங்களை விட அவர் சிலுவையில் செய்த காரியமே பிரதான மற்றும் முக்கியமான அம்சமாக உள்ளது.

இஸ்லாமுடைய மிகவும் முக்கியமான நிகழ்வு:

இஸ்லாமுடைய மிகவும் முக்கியமான நிகழ்வு என்ன? ஒருவேளை அது முஹம்மதுவின் பிறப்பாக இருக்குமோ? அல்லது மரணமாக இருக்குமோ?  ஒருவேளை தன்னை காபிரியேல் என்று சொல்லிக்கொண்ட ஒரு தூதன் முஹம்மதுவிற்கு முன்பாக தோன்றி அவருக்கு முதலாவது வெளிப்பாட்டை கொடுத்த அந்த முதல் நாள் தான் இஸ்லாமின் முக்கியமான நிகழ்ச்சியா? இவைகள் எல்லாம் இஸ்லாமின் முக்கியமான நிகழ்ச்சி அல்ல, அதற்கு பதிலாக, ஹிஜ்ரி என்றுச் சொல்லக்கூடிய மதினாவிற்கு தப்பித்துச் சென்ற நாள் தான் இஸ்லாமின் முக்கியமான நிகழ்ச்சியாகும். ஆரம்பத்தில் முஹம்மது மக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருந்தார், ஆனால் அனேக துன்புறுத்தல்கள் மற்றும் கஷ்டங்களை அனுபவித்தார். தம்மை கொல்வதற்கு மக்கா மக்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிந்துக்கொண்டார். அந்த இரவு முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு தம்மை பின்பற்றும் ஒரு சிறு கூட்டத்துடன் தப்பித்துச் சென்றுவிட்டார். மதினாவிற்கு வந்த பிறகு இஸ்லாம் பெறுக ஆரம்பித்தது. முஹம்மது தம்மை பின்பற்றும் அனேக மக்களை அங்கு சம்பாதித்துக்கொண்டார். பல ஆண்டுகள் கழித்து, மக்காவை ஒரு பெரிய இராணுவத்துடன் சென்று வெற்றிகரமாக கைப்பற்றினார்.

ஹிஜ்ரா இஸ்லாமிற்கு ஒரு திருப்புமுனையாகும், இதனை எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் ஏகோபித்து ஒப்புக்கொள்கின்றனர்.  உதாரணத்திற்கு, இப்ராஹிம் பி. ஸையத், (Ph.D) இவ்விதமாக கூறுகிறார்: 

"இறைத்தூதர் முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மதினாவிற்கு ஹிஜ்ரா சென்றது மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும், இதில் சந்தேகமில்லை, இந்த நிகழ்ச்சி தான் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தது"[i].  

ஷமீம் ஏ சித்திகி ஹிஜ்ரா பற்றி "அல்லாஹ்வின் தீன் ஸ்தாபிப்பதற்கு ஹிஜ்ரா என்பது இஸ்லாமிய இயக்கத்திற்கு மூலைக்கல்லாகவும், திருப்புமுனையாகவும் உள்ளது" என்கிறார். 

மேலும் இவர் முஹம்மது ஹுஸ்ஸைன் ஹைகல் என்பவரின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார் "இஸ்லாமிய சரித்திரத்தில் ஹிஜ்ரா என்ற நிகழ்ச்சி அதாவது இறைத்தூதர் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்ற நிகழ்ச்சி மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக கலிபா உமர் அவர்கள் கருதினார்கள்" [ii]. 

இந்த ஹிஜ்ர எவ்வளவு முக்கியமானது என்றால், இந்த ஆண்டிலிருந்து தான் இஸ்லாமிய (நாட்காட்டி) நாட்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.இஸ்லாமிய நாட்காட்டியின் படி, இந்த கட்டுரை ஹிஜ்ரி 1433 அன்று எழுதப்படுகின்றது. இந்த ஹிஜ்ரா நிகழ்வை ஒரு இஸ்லாமிய நாட்காட்டியாக கருதப்படுவதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

இப்போது, சிலுவை மற்றும் ஹிஜ்ரா இவை இரண்டையும் ஒன்றோரு ஒன்று ஒப்பிட்டால் என்ன நடக்கும்? சிலுவை என்பது இயேசு தனக்கு செய்யப்பட்ட கொடுமைகளை கட்டியணைக்கும் நிகழ்ச்சியாகும். ஆனால், ஹிஜ்ரி என்பதில் முஹம்மதுவோ தனக்கு செய்யப்பட இருக்கும் கொடுமையிலிருந்து ஓடி ஒலிந்துக்கொண்ட நிகழ்ச்சியாகும். இயேசுவின் மரணம் பற்றி அவரது சீடர்களுக்கு தெரிவிக்கப்பட்டது (மத்தேயு 16:21), அவர்களோ, அந்த மரணத்திலிருந்து (சிலுவையிலிருந்து) அவர் தப்பித்துக்கொண்டு மகிமை அடைய வேண்டும் என்று விரும்பினார்கள் (மத்தேயு 16:22). ஆனால், இயேசுவோ கொடுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை (மத்தேயு 16:23). இயேசு பிதாவின் திட்டத்தை நிறைவேற்ற எவ்வளவு பெரிய பாடுகள் வந்தாலும் அவைகளை ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருந்தார்(லூக்கா 22:42). ஆனால், முஹம்மதுவை எடுத்துக்கொண்டால், தன்னுடைய ஊழியத்திற்காக ஒரு மிகப்பெரிய விலையை செலுத்தவேண்டிய நேரம் வந்தபோது, தான் சந்திக்கவேண்டிய அந்த கொடுமையை, தன்னுடைய தோழர் ஒருவருக்கு ஒப்புவித்து, அவரை ஆபத்துக்குள் தள்ளி, அவரை தன் வீட்டில் இருக்கச் செய்து, தான் தப்பித்துக் கொண்டார் [iii]. முஹம்மதுவின் செயல் இயேசுவின் செயலைப்போல இருக்கவில்லை.

இப்போது சில இஸ்லாமியர்கள் "இயேசு கூட மக்களால் பிடிக்கப்படக்கூடாது என்பதற்காக சில நேரங்களில் தப்பித்துச் சென்றுள்ளார் அல்லவா? (லூக்கா 4:29-30)" என்று கேள்வி எழுப்புவார்கள். மேலும் அதே முஸ்லிம்கள் "இயேசுவைப் போல முஹம்மது கூட தைரியமாக எதிர்களுக்கு பயப்படாமல் அவர்களை போரில் நேருக்கு நேர் சந்தித்தார் அல்லவா?" என்று கூறுவார்கள்.

ஓ அருமை இஸ்லாமியர்களே, நீங்கள் இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான விவரத்தை தவரவிடுகின்றீர்கள்.  இயேசு மற்று முஹம்மதுவின் வாழ்வில் நடந்த அனேக நிகழ்ச்சிகள் பற்றி நாம் இந்த கட்டுரையில் அலசவில்லை, அதற்கு பதிலாக, இவ்விரு மார்க்கங்களில் மிகவும் முக்கியமானதாக அதாவது மூலைக்கல்லாக, திருப்புமுனையாக கருதப்படும் நிகழ்ச்சி(சிலுவை மற்றும் ஹிஜ்ரா) பற்றி நாம் அலசிக்கொண்டு இருக்கிறோம், இது தான் இக்கட்டுரையின் நோக்கம். கிறிஸ்தவத்தில் தனக்காக காத்துக்கொண்டு இருந்த பாடுகளை இயேசு அப்படியே ஏற்றுக்கொண்டார், இது முக்கியமான நிகழ்ச்சி. ஆனால், இஸ்லாமிலே முஹம்மது கொடுமைகளிலிருந்து தன் உயிர் காத்துக்கொள்ள தப்பிஓடினார்.  இவைகளினால் நாம் அறிவது என்னவென்றால் இவ்விரு மார்க்கங்களும் வித்தியாசமானவைகள் அல்ல, இவைகள் ஒன்றுக்கு ஒன்று முழுவதுமாக நேர் எதிரானவைகள். இந்த மார்க்கங்களின் மூல நிகழ்ச்சியானது நேர் எதிரானது. இஸ்லாமிலே ஒரு முக்கியமான நேரத்தில் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டாரோ, அதற்கு நேர் எதிராக இயேசுக் கிறிஸ்து பூமியில் வாழும் போது செய்தார். முஹம்மது தப்பித்து ஓடினார், இயேசுக் கிறிஸ்து ஒடி அதை அனைத்துக்கொண்டார்.

பின் குறிப்புக்கள்

ஆங்கில மூலம்: The Hijra and the Cross 


Thanks to "http://www.unravelingislam.com" site for granting permission to translate and publish its articles in Tamil language.



இஸ்லாம் கிறிஸ்தவத்திற்கு முந்தியதா?


இஸ்லாம் கிறிஸ்தவத்திற்கு முந்தியதா?

முன்னுரை:

ஒரு சகோதரர், ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரையை படித்து, கீழ்கண்ட கேள்வியை அனுப்பியிருந்தார்.

//NAME:  Ramkumar

MESSAGE:
நபிகள் வாழ்ந்த  காலம் கி.பி  570ம்  ஆண்டு  என கூறியுள்ளிர்கள். ஆனால்  இஸ்லாம்  கிறிஸ்த்துவ  மதத்திற்கு முன் தோன்றியது  என்கிறார்களேஅவர் வாழ்ந்தகாலம்  சரியானதா?//

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய சில அடிப்படை வருடங்கள் பற்றி நாம் தெரிந்துக்கொண்டால், இஸ்லாமியர்கள் சொல்வதை சரியாக புரிந்துக்கொள்ளமுடியும். உண்மையில் இஸ்லாமியர்கள் சொல்வது தவறானதாகும். ஆனால், "இஸ்லாமியர்களின் நம்பிக்கை" என்ன என்பதை கருத்தில் கொண்டு பார்த்தோமானால், அவர்கள் சொல்வது உண்மை போல தெரியும். என்ன குழப்பமாக இருக்கின்றதா? கீழ்கண்ட விவரங்களை படியுங்கள்.

இந்த கட்டுரையில் சொல்லப்படும் விவரங்கள் பெரும்பான்மையாக எல்லாருக்கும் தெரிந்து இருந்தாலும், புதிதாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றி தெரிந்துக்கொள்பவர்களுக்கு வரும் சில கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் அளிப்பதாக அமையும்.

இஸ்லாமின் கால அட்டவணை முக்கியமான நிகழ்வுகள் மட்டும். (மூலம்: http://en.wikipedia.org/wiki/Timeline_of_Muslim_history):

·                    கி.பி. 545: அப்துல்லாஹ் அவர்களின் பிறப்பு (முஹம்மதுவின் தந்தை)

·                    கி.பி. 570: முஹம்மதுவின் பிறப்பு மற்றும் அப்துல்லாஹ் அவர்களின் மரணம்

·                    கி.பி. 576: அமினா அவர்களின் மரணம் (முஹம்மதுவின் தாய்)

·                    கி.பி. 578: அப்துல் முத்தலிப்  அவர்களின் மரணம் (முஹம்மதுவின் தாத்த)

·                    கி.பி. 583: முஹம்மதுவின் பெரியப்பா அபூ தாலிப் அவர்களுடன் முஹம்மது சிரியாவிற்கு பயணம் செய்கிறார்.

·                    கி.பி. 594: முஹம்மது கதிஜா என்ற பெண்மணிக்காக வியாபார விஷயமாக முஹம்மது சிரியா சென்று வருகிறார்.

·                    கி.பி. 595: முஹம்மது கதிஜா அவர்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்.

·                    கி.பி. 610: ஹிரா என்ற குகையில் முதன் முதலாக தனக்கு குர்-ஆன் வசனங்கள் இறக்கப்பட்டது என்று அறிவித்தல். முஹம்மது ஒரு நபியாக கருதப்பட்ட ஆண்டு.

·                    கி.பி. 619: முஹம்மதுவின் பெரியப்பா அபூ தாலிப் மற்றும் கதிஜா மரணித்தல்.

·                    கி.பி. 622: ஹிஜ்ரா – மதினாவிற்கு முஹம்மது தப்பி ஓடிய ஆண்டு – இஸ்லாமிய நாட்காட்டி ஆரம்பம்,

·                    கி.பி. 624: பத்ரூ யுத்தம், "Bani Qainuqaஎன்ற யுத இனத்தை மதினாவிலிருந்து துரத்துதல்.

·                    கி.பி. 625: உஹுத் யுத்தம், "Banu Nadirஎன்ற யூத இனத்தை மதினாவிலிருந்து துரத்துதல்.

·                    கி.பி. 627: கந்தக் யுத்தம் (Battle of the Trench). "Banu Quraizaயூத இனத்தை கொன்று அனேகரை அடிமைகளாக எடுத்துக்கொள்ளுதல்.

·                    கி.பி. 628: ஹுதைபியா மற்றும் கய்பர் யுத்தம்அனேக அரசர்களுக்கு முஹம்மது கடிதம் எழுதினார்.

·                    கி.பி. 629: மக்காவிற்கு ஹஜ்ஜுக்காக முஹம்மது செல்லுதல், முடா யுத்தம்.

·                    கி.பி. 630: மக்காவை பிடித்தல், ஹனுயன் மற்றும் ஔதஸ் யுத்தம். 

·                    கி.பி. 632: முஹம்மதுவின் மரணம்

கி.பி. 570ல் முஹம்மது பிறக்கிறார், கி.பி. 610ல் தான் ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்கிறார். கி.பி. 632ல் மரணித்து விடுகிறார்.

இஸ்லாம் என்ற மார்க்கம் கால அட்டவணையின் படி, 610ல் முதன் முதலாக முஹம்மதுவால் முன்மொழியப்பட்டது. ஆக, கிறிஸ்தவம் வந்து 600 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் வந்தது. இயேசுவின் நேரடி சீடர்களின் மரணத்திற்கு பிறகு இஸ்லாம் என்பதை கண்டக்கிடால் (கி.பி. 100க்குள் அனைத்து நேரடி சீடர்களும் மரணித்துவிடுகின்றார்கள்),  சீடர்களுக்கு பிறகு 500 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் வந்தது.

இது முதலாவது பதில், இது தான் சரியான பதிலும் கூட.

இப்போது, "முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி" இஸ்லாம் எப்போது தோன்றியது என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதை கவனிப்போம்.

இஸ்லாமின் நம்பிக்கையின் படி இஸ்லாமின் ஆரம்பம்:

முஹம்மது தனது புதிய மார்க்கத்தை "யூதர்களோடு, கிறிஸ்தவர்களோடு" ஒட்ட வைத்துவிட்டார். இதன் அர்த்தம் என்ன?

பைபிளின் தேவன் தான் தன்னை அனுப்பினார் என்று முஹம்மது கூறினார். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அனைவரின் வரிசையில் கடைசியாக தாம் வந்ததாக சுயபிரகடனம் செய்துக்கொண்டார்.

மேலும் ஆதாம் ஒரு முஸ்லிம் என்றும், ஆபிரகாம் ஒரு முஸ்லிம் என்றும் கூறி இஸ்லாமின் நாட்காட்டியை பழைய ஏற்பாட்டோடு ஒட்டவைத்துவிட்டார். இயேசு கூட தமக்கு முன்பாக வந்த தீர்க்கதரிசி என்று கூறிவிட்டார். மேலும் யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவின் தாயாரைப் பற்றியும் சில வசனங்களை குர்-ஆனில் சேர்த்துவிட்டார். கடைசியாக இயேசுவின் சீடர்களையும் விட்டுவைக்காமல் அவர்களையும் முஸ்லிமாக்கிவிட்டார். பைபிளின் முதல் ஐந்து ஆகமங்கள், சங்கீதம், நற்செய்தி நூல்கள் இவை அனைத்தையும் கொடுத்தவர் அல்லாஹ் என்று கூறிவிட்டார்.

மேற்சொன்னவைகள் தான் "தீர்க்கதரிசிகள் வேதங்கள்" பற்றிய இஸ்லாமிய நம்பிக்கையாகும். இப்போது நாம் வருடங்களை கணக்கில் கொள்ளாமல் மேற்கண்ட இஸ்லாமிய நம்பிக்கையை மட்டும் கருத்தில் கொண்டால்,

  • அல்லாஹ் தான் யெகோவா தேவன்
  • நம் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளை அனுப்பியவர் 'அல்லாஹ்' ஆவார்.
  • கடைசியாக, தேவன் (அதாவது அல்லாஹ்) இயேசுவிற்கு பின்பு முஹம்மதுவை அனுப்பினார்.

ஆக, இஸ்லாமியர்களின் லாஜிக்கின்படி, ஆதாம் ஒரு முஸ்லிம் என்றுச் சொன்னால், இஸ்லாம் எப்போது தோன்றியதாக நாம் கருதவேண்டும்? கிறிஸ்தவத்திற்கு முன்பு தோன்றியதாக கருத வேண்டும். இதைத் தான் முஸ்லிம்கள் "கிறிஸ்தவத்திற்கு முன்பு இஸ்லாம் தோன்றியது" என்று லாஜிக்காக சொல்கிறார்கள்.

ஆனால், உண்மையில், முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல, பைபிளின் படி அவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி. அவரை பைபிளின் யெகோவா தேவன் அனுப்பவில்லை. அல்லாஹ்வும் யெகோவா தேவனும் ஒருவரல்ல. அல்லாஹ் என்பவர் ஒரு அந்நிய கடவுள், அதாவது பழைய ஏற்பாட்டின் படி, அவரது பெயரைக் கூட நாம் நம் வாயால் சொல்லக்கூடாது.  கிறிஸ்தவத்திற்கு பிறகு இன்னொரு புதிய மார்க்கம் வரவேண்டிய அவசியமில்லை.

யூத மற்றும் கிறிஸ்தவ அஸ்திபாரத்தின் மீது இஸ்லாம் என்ற மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த அஸ்திபாரத்தை நீக்கிவிட்டால், இஸ்லாம் என்ற ஒன்று இருக்கிறதா என்பதே பதில் இல்லாத கேள்வியாக நின்றுவிடும்.

முடிவுரையாக, கிறிஸ்தவத்திற்கு 600 ஆண்டுகளுக்கு பின்பு இஸ்லாம் தோன்றியது. அதை தோற்றுவித்தவர் முஹம்மது என்ற அரபியராவார். அவர் தன் மார்க்கத்தை யூத கிறிஸ்தவ வேதங்களோடு ஒட்டவைத்துவிட்டார், ஆகையால் இஸ்லாம் யூத கிறிஸ்தவ மார்க்கத்திற்கு முந்தியது என்று இஸ்லாமியர்கள் தவறாக எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.



Source : http://isakoran.blogspot.in/2012/12/blog-post_24.html