அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 5, 2012

எண்ணாகமம் 23:19 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?

எண்ணாகமம் 23:19 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்

சாம் ஷமான்

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்று எண்ணி இஸ்லாமியர்கள் முன்வைக்கும் அனேக வாதங்களில் ஒரு சில வாதங்களுக்கு இந்த ஆய்வில் பதில்களைக் காண்போம்.

இஸ்லாமியர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் நாம் ஒரு கோர்வையாக பதில்களைக் காண்போம், மற்றும் வேத வசனங்களை ஆதாரமாகக் கொண்டு, வசனங்களை விவரித்து பதில்களைத் தருவோம், இதன் மூலமாக கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை புரிந்துக்கொள்ளாமல், தவறாக வேத வசனங்களுக்கு இஸ்லாமியர்கள் பொருள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கேள்விகள் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வசனத்தைச் சுற்றியுள்ள இதர வசன ஆதாரங்களின் அடிப்படையிலும், பின்னணியின் அடிப்படையிலும் நாம் வாசித்து ஆய்வு செய்வோமானால், இஸ்லாமியர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சுலபமாக கிடைத்துவிடும். இந்த தொடர் பதில்களை படிக்கும் வாசகர்கள் இதனை புரிந்துக்கொள்ளலாம்.

இஸ்லாமியர்களின் முதல் குற்றச்சாட்டையும் அதற்கான பதிலையும் இந்த தொடுப்பில் படிக்கவும்.

இப்போது இரண்டாவது குற்றச்சாட்டிற்கு பதிலை காண்போம்.

குற்றச்சாட்டு 2:

எண்ணாகமம் 23:19 இவ்விதமாக கூறுகிறது: "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல ;..."

ஆனால், இயேசு மனிதனாகவும், மனுஷ புத்திரனாகவும் இருந்தார். (பார்க்க மத்தேயு 16:13)

இஸ்லாமிய குற்றச்சாட்டிற்கு பதில்:

இந்த வசனம், இறைவன் மனித வடிவில் வரமுடியாது என்று கூறவில்லையே, அதற்கு பதிலாக, "இறைவன் மனிதனைப் போல இல்லை" என்றுச் சொல்கிறது, அதாவது தேவன் மனிதனைப் போல குணம் படைத்தவர் அல்ல என்றுச் சொல்கிறது.

தேவன் மனித சுபாவம் உடையவர் அல்ல, மனிதன் அடிக்கடி மாறுகிறான், பொய் சொல்கிறான், இன்னும் அனேக தவறுகளைச் செய்கிறான், இப்படிப்பட்டவராக தேவன் இல்லை என்பதை அவ்வசனம் சொல்கிறது. இந்த விளக்கம் சரியானது தான் என்பதைக் காட்ட, நாம் அதே பழைய ஏற்பாட்டில் உள்ள இதர வசனங்களை பார்க்கவேண்டும், அதாவது தேவன் தம்மை மனிதனாக வெளிப்படுத்த முடியும் என்பதை காணலாம். மட்டுமல்ல, தீர்க்கதரிசனங்களும் தேவன் மனிதனாக வந்தார் என்பதைக் காட்டுகிறது. உதாரணத்திற்கு, கீழ்கண்ட வேத பகுதியை காணவும்:

பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து: ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். . . . ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள். அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். . . . அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார். பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், . . . பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். . . .கர்த்தர் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு போய்விட்டார் ; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான். (ஆதியாகமம் 18:1-5, 8-10a, 13-17, 20-26, 33)

யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் . (ஆதியாகமம் 32:24-30)

ஆபிரகாம் மற்றும் யாக்கோபு இவ்விருவரும் தேவனை மனித வடிவில் கண்டார்கள்.

மற்றும், இந்த வசனத்தை கவனிக்கவும்:

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் . (ஏசாயா 9:6)

For to us a child is born, to us a son is given, and the government will be on his shoulders. And he will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace (Isaiah 9:6)

உண்மையில், "கர்த்தர் யுத்தத்தில் வல்லவர்" என்றும் அழைக்கப்பட்டார்.

கர்த்தரே யுத்தத்தில் வல்லவர் ; கர்த்தர் என்பது அவருடைய நாமம். (யாத்திராகமம் 15:3)

கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார். (ஏசாயா 42:13)

"The LORD is a man of war : the LORD is his name." Exodus 15:3 KJV

"The LORD shall go forth as a mighty man , he shall stir up jealousy like a man of war: he shall cry, yea, roar; he shall prevail against his enemies." Isaiah 42:13 KJV

ஆகையால், எண்ணாகமம் 23:19ம் வசனத்தை ஆதாரமாக காட்டி, தேவன் மனித வடிவில் வரமுடியாது என்று கூறுவது தவறான ஒன்றாகும். அந்த வசனம் "தேவனுடைய இயற்கை குணம் மனிதன் குணம் போன்றது அல்ல" என்பதை உறுதிப்படுத்துகிறதே தவிர, வேறு வகையில் அல்ல. மேலும், இந்த வசனம், தேவன் மனிதனாக அல்லது மனித வடியில் வரமுடியாது என்று கூறவில்லை.

ஆங்கில மூலம்: : Christian Answers to Muslim Charges

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.

Source: http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/charges/numbers2319.html


http://isakoran.blogspot.com/2012/02/2319.html

0 comments: