அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 15, 2012

சேனல் 4 வெளியிட்டுள்ள இலங்கை போர்குற்ற விடியோ

கிளே கிளிக் செய்து உள்ளே சென்று பாருங்கள் இலங்கை இராணுவத்தினர் செய்த கொடுமைகளை
 

March 13, 2012

பிரபாகரனுடன் பாலச்சந்திரன் (படங்கள்)



பிரபாகரன் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட ஆதாரத்தை வெளியிடுகிறது சேனல் 4!








































'தண்டிக்கப்படாத போர்க்குற்றம்' எனும் ஆவணப்படத்தை தயாரித்துள்ள சேனல் 4, வருகிற 14ஆம் தேதி இரவு அதனை வெளியிடுகிறது. ஈழத்தில் நடந்துள்ள போர்க்குற்றங்களின் உண்மையான ஆதாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நோக்கத்தில் இந்த ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் திரையிடப்படுகிறது. இந்த ஆவணப்படம் பல அதிர்வலைகளை தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது.




இந்த ஆவணப்படத்தில், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் (வயது 12) ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் காட்சி வருகிறது. பாலச்சந்திரனும் அவருடன் இருந்த மெய்க்காப்பாளர்களும் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான முழு ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றிருப்பதாக கூறுகிறது சேனல் 4 நிர்வாகம்!





""பாலச்சந்திரன் நெஞ்சில் 5 தடவைகள் சுட்டிருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார் சேனல் 4க்கு கிடைத்த ஆதாரங்களை ஆராயந்து ஆய்வு அறிக்கை சமர்பித்துள்ள பேராசிரியர் டெரிக் பவுண்டர்!


March 10, 2012

TNTJ-வருவோம் ஆனா...

SAN அனுப்பின மின்னஞ்சலின் தமிழாக்கம்

மாம்சத்தில் வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று அறியப்பட்டவரும் உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவரும் உண்மையான ஒரே இறைவனுமாகிய யொகோவாவின் நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக. ஆமென்.

அன்புள்ள TNTJ நண்பர்களுக்கு,
மார்ச் 8, 2012 அன்று நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றோம்.
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய எங்கள் தலைப்பிலே உங்களோடு விவாதித்தோம், அதன் வீடியோ பதிவுகளை எல்லோரும் பார்க்கும் விதத்தில் பதிவேற்றம் செய்தும் இருக்கின்றோம். குர்-ஆன் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் உண்மையிலேயே விசுவாசிப்பீர்களானால், முஸ்லீம்களாக, ஒரு பெரிய ஜமாஅத்தாக இருக்கும் நீங்கள், இந்த விவாதத்திலிருந்து தப்பிக்க, இந்த விவாதம் இரத்து செய்யப்படுவதற்கு எதாகிலும் வழிவாசல்கள் மற்றும் காரணங்கள் கிடைக்காதா என்று தேடிக்கொண்டே, விவாதம் செய்ய விருப்பம் உடையவர்களாக பாசாங்கு செய்து கொண்டு இருப்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

காவல் துறை தடை உத்தரவுக்குப் பின்பு, காவல் துறையினரின் ஆணைக்கு இணக்கமான விதத்தில், உங்களுடைய அலுவலகத்தில் வந்து ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட ஒரு விவாதத்தை செய்ய நாங்கள் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டோம். ஆனால் நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம் என்பதை முழுவதுமாக அறிந்த நீங்கள் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்று வேண்டுமென்றே தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தீர்கள். குர்-ஆன் இறைவனுடைய வார்த்தை என்று உண்மையிலே நீங்கள் நம்புகிறவர்களாக இருந்தால், அதை நிரூபிக்கத் திறமையுடையவர்களாயிருந்தால், ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட விவாதத்திற்கு நீங்கள் சொன்னபடி வந்து விவாதித்து, பிறகு விருப்பமுடையவர்களுக்கு அந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கலாம். அதே வாய்ப்பை ஜனவரி 28ம் தேதி நீங்கள் நடத்திய நாடகத்திற்கு பிறகும் நாங்கள் கொடுத்தோம் ஆனால் இன்னமும் நீங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்ல. நீங்கள் குர்-ஆனை இறைவனுடைய வேதம் என்று உண்மையிலே நம்புபவர்களாக இருந்திருந்தால், எங்களிடம் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த நீங்கள்தான் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை எங்களுக்குத் தந்திருக்க வேண்டும். உண்மையிலேயே குர்-ஆன் மீதான விவாதம் நடைபெறவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால், சென்னை காவல் துறையினரிடம் சென்று ரத்து செய்த ஆர்டரை நீக்க வேண்டும் என்று கோருவதற்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் முயற்சி எடுக்க ஆரம்பித்த பிறகும் கூட எங்களுடன் வருவதற்கு நீங்கள் மறுக்கிறீர்கள்.

நீங்கள் குர்-ஆனை இறைவனுடைய வேதம் என்று உண்மையிலே நம்புபவர்களாக இருந்திருந்தால், எங்களிடம் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த நீங்கள்தான் விவாதம் நடப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்ற போதிலும், எங்களுடைய செலவிலே விவாதத்தை வேறொரு இடத்தில் நடத்துவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று சலுகை அளித்தால், குறைந்த பட்சம் அதற்காவது ஒத்துழைப்பு தருவீர்கள் என்று நாங்கள் நினைத்தோம். நீங்கள் விவாதம் செய்வதற்கு விருப்பமுள்ளவர்களாக இருக்கிறிர்கள் என்று மக்களை நம்பவைத்து முட்டாளாக்கி, அதே வேளையில் இந்த விவாதம் ரத்து செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறவர்களாக எங்களுக்குத் தோன்றுகிறது. சட்டப்பூர்வமான நடைமுறைக்குந்த மூன்று விருப்ப தெரிவுகள் அனைத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கும் போது, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதற்கு நீங்கள் மறுக்கும் நிலையிலும் ஏற்கனவே குறிப்பிட்டது போல செலவுகளை நாங்களே ஏற்றுக் கொண்டு விவாதத்தை நடத்த நாங்கள் தாயராக இருக்கும் போது, உங்களால் செய்யக் கூடிய சிறிய ஒரு காரியம் என்பது இந்த விவாதம் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது தான். ஏதாவது நொண்டிச் சாக்குகளையும் தப்பிக் கொள்ள வழிவாசல்களைத் தேடுவதின் மூலம் நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்களை அல்ல.

நீங்கள் முன்வைத்தை விசயங்களைப் பற்றி முதலில் பேசுவோம்:
(அ) இந்த விவாதமானது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ போதனைகளை மிகவும் சிறப்பாகப் புரிந்து கற்றுக் கொள்ள உதவக் கூடியதாக இருக்க முடியாது என்று நீங்கள் நினைப்பதால், காவல் துறை ஆய்வாளருக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தின் வரைவு மாதிரி மாற்றப் படவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். முந்தின விவாதத்தில் நீங்கள் தகுந்த ஆதாரங்களோடு, சரியான வாதங்களை முன் வைப்பதை விட, நீங்கள் ஏன் அதிகம் இழிவான வார்த்தைகளையே பயன்படுத்தினீர்கள் என்பதை விளக்குவதாக் இருக்கின்றது. விவாதமானது மார்க்கங்களைப் பற்றிய சிறந்த புரிந்துகொள்ளுதலில் உதவுக்கூடிய அறிவுசார்ந்த ஒன்றாக இருக்கும் அதே வேளையில், பொய்யானவற்றையும் அம்பலப்படுத்திக் காட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்த இடத்திலும் காவல் துறை அனுமதிக்கு சமர்ப்பிப்பதற்கு தேவையான பொருத்தமான எல்லாக் குறிப்புகளோடும் நாங்கள் அந்த வரைவு மாதிரியை எழுதினோம். இருப்பினும், எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற சாக்கு போக்கில் சென்னையில் நடந்த விவாதம் பற்றியும் அந்த விவாதத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதையும் நீங்கள் குறிப்பிட விரும்புகிறீர்கள். உங்களுடைய வாதத்தின் படியே நாம் செய்வோமானாலும், தடையைக் குறித்தும் நாம் குறிப்பிட வேண்டும், ஒரு வேளை ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அதிலிருந்து எல்லாக் காரியங்களும் குறிப்பிடப்பட வேண்டும். உங்களுடைய வாதத்தை நாம் நடைமுறைப் படுத்துவோம் எனில், குழுவின் சில நபர்களுக்கு அவர்களுடைய சொந்த மார்க்கத்தினரிடமிருந்தே அபயாம் ஏற்படும் சூழல் இருக்கிறது என்பதை கேரளா காவல் துறையினர் அறிந்து கொண்டு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்துவிடாதவாறு, குழுவின் சில முக்கியமான நபர்களைப் பற்றியும் அவர்களுடைய பாதுகாப்பிற்கு இருக்கும் அபாயமான சூழலையும் நாம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். உங்களுடைய உள்நோக்கத்தை நாங்கள் அறிந்தவர்களாக இருப்பினும், எங்களால் முடிந்த அளவிற்கு உங்களுடைய யோசனைகளோடு இணங்கி செயல்பட்டு காவல் துறை அனுமதிக்காக கொச்சியில் சமர்ப்பிப்போம், உங்களுடைய ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.
(ஆ) கொச்சி காவல் துறையிடம் நீங்கள் எங்களோடு வரமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நீங்கள் வரவேண்டியவர்களாக இருந்தாலும், நாங்கள் தனியே போக முடியும் என்பதை கூறியிருக்கிறோம். நாங்கள் தனியே போவோம். இருப்பினும், உங்கள் பிரதிநிதிகளை பார்க்க வேண்டும் என்று காவல் துறையினர் வலியுறுத்துவார்கள் எனில், நீங்கள் எங்களோடு வர வேண்டும். அதைத் தான் நாங்கள் முந்திய மின்னஞ்சலிலும் எழுதினோம் அதைத் தான் இப்போதும் எழுதுகிறோம்.
(இ) எப்படியாவது இந்த விவாதம் நடந்தே தீர வேண்டும் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். நீங்கள் உண்மையிலேயே எதிர்பார்ப்பது அதைத்தானா? அப்படியென்றால், இரு தரப்பினரும் சோந்து காவல் துறையை அணுக வேண்டும் என்று கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகின்ற நிலையிலும், எங்களோடு சேர்ந்து சென்னை காவல் துறையினரிடம் தடையுத்தரவை நீக்கும்படி கேட்பதற்கு நீங்கள் ஏன் வர மறுக்கிறீர்கள்? ஒளிப்பதிவுடன் கூடிய ஒரு தனிப்பட்ட விவாதத்திற்கு ஏன் நீங்கள் ஆயத்தமாக இல்லை? கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தில் இல்லாதிருக்கும் நிலையில் நேரடி ஒளிபரப்பு செய்தே ஆகவேண்டும் என்று ஏன் வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எந்த நிலையிலும் குர்-ஆன் விவாதத்திலிருந்து ஓடி ஒளியும் உங்கள் உண்மையான நிறத்தை ஜனங்கள் பார்த்து விடுவார்கள் என்று நீங்கள் பயப்படுவதால் ஒப்பந்தத்தில் இருக்கின்ற இந்தக் காரியங்களைப் பற்றி நாங்கள் குறிப்பிட வேண்டாமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் பரிசுத்த வேதாகமத்தின் தலைப்பில் விவாதித்து எங்களுடைய நிலையை நிரூபித்து விட்டு, உங்களுடைய ஆழமற்ற வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்து அவற்றை அம்பலப்படுத்தியிருக்கிறோம். குர்-ஆனைப் பற்றி எங்களிடத்தில் ஒருபோதும் உங்களால் விவாதம் செய்து உங்கள் கருத்தை நிரூபிக்க முடியாது. இது தான் உண்மை. (சுவரொட்டிகள் காரியத்தில் செய்தது போல, பிறகு ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட விவாதத்திற்கு நீங்கள் செய்தது போல) நீங்கள் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறுவீர்கள், தப்புவதற்கு ஏதாவது வழிவாசல்களைத் தேடுவீர்கள், விவாதம் ரத்து செய்யப்படக் கூடிய வித்தில் ஏதாவது நிபந்தனைகளை உருவாக்குவீர்கள்.

(ஈ) ஒரு வேளை கொச்சியில் விவாதம் நடத்துவதற்கு கேரள காவல்துறையினர் அனுமதி தர மறுத்தாலும் கூட மற்ற இரண்டு விருப்பத் தெரிவுகள் திறந்தே இருக்கின்றன. (1) காவல் துறையை சேர்ந்து அணுகி தடையுத்தரவை ரத்து செய்யப்பட்டு வாங்கி சென்னையிலேயே விவாதத்தை நடத்துவது. (2) ஒளிப்பதிவுடன் தனிப்பட்ட ஒரு விவாதத்தை நடத்துவது. இந்த இரண்டு விருப்பத் தெரிவுகளும் திறந்து இருக்க வேண்டாம் என்று நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். காவல் துறையினர் அனுமதி மறுக்கவைப்பது அல்லது கடைசி நேரத்தில் அதை ரத்து செய்யவைப்பதற்கு இப்போது நீங்கள் திரை மறைவில் இருந்து விளையாடுவீர்கள். மேலும் நீங்கள் சாக்ஷியை அதற்கு முழுக் காரணம் என்று காட்டி விட்டு அதைச் சாக்காக வைத்து தப்பித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். குர்-ஆன் விவாதத்திலிருந்து எந்த விதத்திலிருந்தாவது தப்பித்து கொள்வதற்கு நீங்கள் வெட்கமில்லாமல் முயன்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் மறுபடியும் சொல்லுகிறோம். உண்மையிலே குர்-ஆன் தான் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் கருதுவீர்களானால், இப்படிப்பட்ட அற்பமான தந்திரங்களையெல்லாம் நிறுத்திவிட்டு எப்படியாகிலும் இந்த விவாதத்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்பதை உங்கள் செயல்களினால் காண்பியுங்கள். ஒரு புறம் எந்த நிலையிலும் விவாதம் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்று வாதிட்டுக் கொண்டு மற்றொரு புறம் நீங்கள் செய்ய வேண்டி மிக எளிமையான காரியத்தை கூட செய்யாமலிருக்க உங்களால் கூடாது. கொச்சி காவல் துறை அனுமதி மறுத்தாலும் கூட மற்ற இரண்டு விருப்ப தெரிவுகள் திறந்தே இருக்கின்றன. உங்களுக்கு சட்டப்பூர்வமான நடைமுறைக்குகந்த வேறு ஏதாவது விருப்பத் தெரிவுகள் இருக்குமென்றால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த விவாதத்தை எந்த நிலைiயிலும் நடத்துவதற்கு உங்களிடமிருந்து உருப்படியான எந்த யோசனையும் வரவில்லை இருப்பினும் இந்த வெற்று வாதத்தையே நீங்கள் இப்போதும் முன்பும் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். எப்படியாகிலும் இந்த விவாதத்தை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது தான் உண்மையாகும். அதற்கான ஒரே வழி நீங்கள் தப்பி ஓட வேண்டும் அல்லாவிட்டால் உங்கள் குர்-ஆனை தற்காத்து விவாதிக்க உங்களுக்கு திறமை இல்லையென்றும் நீங்கள் நாடகம் நடிப்பதற்கு தான் தகுந்தவர்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

(உ) குர்-ஆனைப் பற்றிய விவாதம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என்று நீங்கள் மீண்டும் நகைக்கூடிய ஒரு கூற்றை கூறியிருக்கின்றீர்கள். நாங்கள் இல்லாத இடத்தில் தான் உங்களால் குர்-ஆனைப் பற்றி "விவாதிக்க" முடியும் என்பதையும் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். உங்களால் ஒரு போதும் எங்களோடு விவாதிக்க முடியாது அது உங்களுடைய வாதங்களை தவிடுபொடியாக்கும்.

(ஊ) ஆமாம், உண்மையான இறைவனைப் பின்பற்றுகிறோம் என்று பொய்யாக வாதிடுகின்ற உங்களை போன்ற மற்றொரு குழுவிடமோ அல்லது யெகோவா சாட்சிக்காரரிடமோ நீங்கள் விவாதம் செய்து கொண்டிருப்பீர்கள். உண்மையான இறைவனை பின்பற்றுகிறவர்களாகிய எங்களிடம் நீங்களோ அல்லது யெகோவா சாட்சிக்காரர்களோ விவாதம் செய்தால், மக்கள் அதன் முடிவை பார்க்க முடியும். அது தான் ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் வெளிக்காட்டப்பட்டது. அநேகமாக, எதர்காலத்தில் இப்படிப்பட்ட முடிவுகளை தவிர்ப்பதற்காக நீங்கள் யொகோவா சாட்சிக்காரர்களைப் போன்ற பொய்யான குழுவினரையே சந்தித்தாக வேண்டும்.
இவைகளைக் கூறும் அதே வேளையில், (காவல் துறை அனுமதி மறுக்கப்படுவதற்கு அதிமான சாத்தியக் கூறுகள் இருக்கின்ற) உங்கள் யோசனைகளை நாங்கள் சேர்த்துக் கொண்டு எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து காவல் துறை அனுமதிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம். உங்கள் யோசனைகளை சேர்த்துக் கொண்டு பின்வரும் கடிதத்தை நாங்கள் காவல் துறைக்கு முன்மொழிவோம். உங்களிடமிருந்து கடிதத்ததை நாங்கள் எந்த நாளுக்குள் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதை தெரியப்படுத்தவும்.

March 5, 2012

எண்ணாகமம் 23:19 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?

எண்ணாகமம் 23:19 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்

சாம் ஷமான்

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்று எண்ணி இஸ்லாமியர்கள் முன்வைக்கும் அனேக வாதங்களில் ஒரு சில வாதங்களுக்கு இந்த ஆய்வில் பதில்களைக் காண்போம்.

இஸ்லாமியர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் நாம் ஒரு கோர்வையாக பதில்களைக் காண்போம், மற்றும் வேத வசனங்களை ஆதாரமாகக் கொண்டு, வசனங்களை விவரித்து பதில்களைத் தருவோம், இதன் மூலமாக கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை புரிந்துக்கொள்ளாமல், தவறாக வேத வசனங்களுக்கு இஸ்லாமியர்கள் பொருள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கேள்விகள் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வசனத்தைச் சுற்றியுள்ள இதர வசன ஆதாரங்களின் அடிப்படையிலும், பின்னணியின் அடிப்படையிலும் நாம் வாசித்து ஆய்வு செய்வோமானால், இஸ்லாமியர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சுலபமாக கிடைத்துவிடும். இந்த தொடர் பதில்களை படிக்கும் வாசகர்கள் இதனை புரிந்துக்கொள்ளலாம்.

இஸ்லாமியர்களின் முதல் குற்றச்சாட்டையும் அதற்கான பதிலையும் இந்த தொடுப்பில் படிக்கவும்.

இப்போது இரண்டாவது குற்றச்சாட்டிற்கு பதிலை காண்போம்.

குற்றச்சாட்டு 2:

எண்ணாகமம் 23:19 இவ்விதமாக கூறுகிறது: "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல ;..."

ஆனால், இயேசு மனிதனாகவும், மனுஷ புத்திரனாகவும் இருந்தார். (பார்க்க மத்தேயு 16:13)

இஸ்லாமிய குற்றச்சாட்டிற்கு பதில்:

இந்த வசனம், இறைவன் மனித வடிவில் வரமுடியாது என்று கூறவில்லையே, அதற்கு பதிலாக, "இறைவன் மனிதனைப் போல இல்லை" என்றுச் சொல்கிறது, அதாவது தேவன் மனிதனைப் போல குணம் படைத்தவர் அல்ல என்றுச் சொல்கிறது.

தேவன் மனித சுபாவம் உடையவர் அல்ல, மனிதன் அடிக்கடி மாறுகிறான், பொய் சொல்கிறான், இன்னும் அனேக தவறுகளைச் செய்கிறான், இப்படிப்பட்டவராக தேவன் இல்லை என்பதை அவ்வசனம் சொல்கிறது. இந்த விளக்கம் சரியானது தான் என்பதைக் காட்ட, நாம் அதே பழைய ஏற்பாட்டில் உள்ள இதர வசனங்களை பார்க்கவேண்டும், அதாவது தேவன் தம்மை மனிதனாக வெளிப்படுத்த முடியும் என்பதை காணலாம். மட்டுமல்ல, தீர்க்கதரிசனங்களும் தேவன் மனிதனாக வந்தார் என்பதைக் காட்டுகிறது. உதாரணத்திற்கு, கீழ்கண்ட வேத பகுதியை காணவும்:

பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து: ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். . . . ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள். அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். . . . அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார். பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், . . . பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். . . .கர்த்தர் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு போய்விட்டார் ; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான். (ஆதியாகமம் 18:1-5, 8-10a, 13-17, 20-26, 33)

யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் . (ஆதியாகமம் 32:24-30)

ஆபிரகாம் மற்றும் யாக்கோபு இவ்விருவரும் தேவனை மனித வடிவில் கண்டார்கள்.

மற்றும், இந்த வசனத்தை கவனிக்கவும்:

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் . (ஏசாயா 9:6)

For to us a child is born, to us a son is given, and the government will be on his shoulders. And he will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace (Isaiah 9:6)

உண்மையில், "கர்த்தர் யுத்தத்தில் வல்லவர்" என்றும் அழைக்கப்பட்டார்.

கர்த்தரே யுத்தத்தில் வல்லவர் ; கர்த்தர் என்பது அவருடைய நாமம். (யாத்திராகமம் 15:3)

கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார். (ஏசாயா 42:13)

"The LORD is a man of war : the LORD is his name." Exodus 15:3 KJV

"The LORD shall go forth as a mighty man , he shall stir up jealousy like a man of war: he shall cry, yea, roar; he shall prevail against his enemies." Isaiah 42:13 KJV

ஆகையால், எண்ணாகமம் 23:19ம் வசனத்தை ஆதாரமாக காட்டி, தேவன் மனித வடிவில் வரமுடியாது என்று கூறுவது தவறான ஒன்றாகும். அந்த வசனம் "தேவனுடைய இயற்கை குணம் மனிதன் குணம் போன்றது அல்ல" என்பதை உறுதிப்படுத்துகிறதே தவிர, வேறு வகையில் அல்ல. மேலும், இந்த வசனம், தேவன் மனிதனாக அல்லது மனித வடியில் வரமுடியாது என்று கூறவில்லை.

ஆங்கில மூலம்: : Christian Answers to Muslim Charges

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.

Source: http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/charges/numbers2319.html


http://isakoran.blogspot.com/2012/02/2319.html

March 1, 2012

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில் :யோவான் 8:40

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்

சாம் ஷமான்

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்று எண்ணி இஸ்லாமியர்கள் முன்வைக்கும் அனேக வாதங்களில் ஒரு சில வாதங்களுக்கு இந்த ஆய்வில் பதில்களைக் காண்போம்.

இஸ்லாமியர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் நாம் ஒரு கோர்வையாக பதில்களைக் காண்போம், மற்றும் வேத வசனங்களை ஆதாரமாகக் கொண்டு, வசனங்களை விவரித்து பதில்களைத் தருவோம், இதன் மூலமாக கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை புரிந்துக்கொள்ளாமல், தவறாக வேத வசனங்களுக்கு இஸ்லாமியர்கள் பொருள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கேள்விகள் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வசனத்தைச் சுற்றியுள்ள இதர வசன ஆதாரங்களின் அடிப்படையிலும், பின்னணியின் அடிப்படையிலும் நாம் வாசித்து ஆய்வு செய்வோமானால், இஸ்லாமியர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சுலபமாக கிடைத்துவிடும். இந்த தொடர் பதில்களை படிக்கும் வாசகர்கள் இதனை புரிந்துக்கொள்ளலாம். இயேசுவின் தெய்வீகத்தன்மையைக் குறித்து இஸ்லாமியர்கள் முன்வைக்கும் முதல் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1

யோவான் 8:40ம் வசனத்தில், யூதர்களிடம் இயேசு இவ்விதமாக கூறுகிறார்: " தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.".

மனுஷன் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் "ஆந்திரபோஸ் (anthropos) " என்பதாகும், இதன் பொருள் மனிதன் என்பதாகும், இந்த வார்த்தை இறைவன் மற்றும் மிருகங்களுக்கு பயன்படுத்தும் வார்த்தையல்ல. இதன் முடிவு என்னவென்றால், இயேசுவின் தெய்வீகத்தன்மையை இந்த வசனம் நீக்கிவிடுகிறது, அவர் வெறும் சாதாரண மனிதன் என்பதை இது காட்டுகிறது.

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு பதில்:

ஆந்திரபோஸ் என்ற வார்த்தை இயேசுவின் தெய்வீகத்தன்மையை நீக்கவில்லை, ஏனென்றால், அதே யோவான் மிகவும் தெளிவாக "இயேசுக் கிறிஸ்து என்பவர் தேவனின் வார்த்தையாக இருக்கிறார், அவர் மனிதனாக வந்தார் " என்று ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறார், அதனை இப்போது படிப்போம்:

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் ; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:1-4, 14)

1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. 2 He was with God in the beginning. 3 Through him all things were made; without him nothing was made that has been made. 4 In him was life, and that life was the light of all mankind. 5 The light shines in the darkness, and the darkness has not overcome it. 14 The Word became flesh and made his dwelling among us . We have seen his glory, the glory of the one and only Son, who came from the Father, full of grace and truth. (NIV) (John 1:1-4, 14)

இந்த கேள்வியைக் கேட்ட இஸ்லாமியர், அதே யோவான் நற்செய்தி நூலை இன்னும் தொடர்ந்து படித்து இருந்திருப்பாரானால், அப்போது இயேசு தாம் ஆதிமுதலாய், நித்திய நித்தியமாக இருக்கிறார் என்று சொன்ன வசனத்தை கண்டுபிடித்து இருந்திருக்கலாம். அவ்வசனங்களை இப்போது நாம் பார்ப்போம்:

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். (யோவான் 8:23-24)

ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும் , நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். (யோவான் 8:28)

இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன் ; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8:42)

உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் . அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார். (யோவான் 8:56-59)

மேலே கண்ட வசனங்கள் அனைத்தும் கிறிஸ்து ஆபிரகாமுக்கு முன்பாகவே இருந்தார் என்பதையும், அவர் பிதாவின் பிரசன்னத்திலிருந்து பரலோகத்திலிருந்து இறங்கிவந்தார் என்பதையும் காட்டுகிறது. மட்டுமல்ல, நித்திய தேவனாகிய யெகோவாவிற்கு இருக்கிற "நான் இருக்கிறேன்" (I AM) என்ற பெயர் தனக்கு இருப்பதாக இயேசு கூறுகிறார். (பார்க்க உபாகமம் 32:39, ஏசாயா 43:10-11; 44:6, 48:12)

ஆக, யோவான் கூறும் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை, ஆந்திரபோஸ் என்ற வார்த்தை நீக்கிவிடவில்லை, அதற்கு பதிலாக, இயேசுக் கிறிஸ்து முழு தேவனாகவும், முழு மனிதனாகவும் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அதாவது, இயேசுவிற்குள் இந்த இரண்டு நிலையும் இருந்தது. இயேசு இறைவனாக இருந்தார், அதே போல, இறைவன் விரும்பும் மனிதன் எப்படி வாழ்வானோ அப்படி மனிதனாக வாழ்ந்தும் சென்றார்.

ஆங்கில மூலம்: Christian Answers to Muslim Charges

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.

Source: http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/charges/john840.html