அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 1, 2011

முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

"லைலா மஜுனு" என்ற காதல் கதையை நம்மில் அனேகர் கேள்விபட்டு இருப்போம். ஆனால், "லைலா முஹம்மது" என்ற கதையை கேள்வி பட்டு இருப்போமா?

இஸ்லாமிய சரித்திர அறிஞர் அல் தபரி " The History of Al-Tabari: The Last Years of the Prophet " என்ற முஹம்மதுவின் சரித்திரத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.

முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள். அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார். இந்தப் பெண் மறுபடியும் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள். இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால் முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்", இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள். இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார்.

... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept." She went back to her people and said that the Messenger of God had married her. They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him." She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request].

(The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours) Source

முஹம்மதுவின் ஒவ்வொரு செயலும், சொல்லும் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த "ஒரு நல்ல மாதிரியான வாழ்க்கை" என்று இஸ்லாமியர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால், இஸ்லாமியர்களின் சரித்திர ஆசிரியர் பதித்த விவரங்கள் இதற்கு எதிர்மாறான விவரத்தை தருகிறது.

இதர மார்க்க மக்கள் முக்கியமாக, கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு நபி என்று நம்பவேண்டும், அவர் வாழ்ந்தது போல வாழவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இவர்கள் சொல்கின்றபடி, முஹம்மது நமது வழிகாட்டியாக இருக்க தகுதியானவரா? என்று சோதிப்பது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும்.

முஹம்மதுவின் கால மக்கள் அவரை ஒரு "பெண் பித்துபிடித்தவர்" என்று கூறும் அளவிற்கு வாழ்ந்த ஒரு நபரை எப்படி மக்கள் வழிகாட்டியாக கருதமுடியும்?

மேற்கண்ட நிகழ்ச்சியை படித்த பிறகு மக்களுக்கு எழும் கேள்விகளை இப்போது காண்போம். இதற்கு இஸ்லாமியர்கள் பதில் அளிப்பார்களா?

முஹம்மது பெண் பித்து பிடித்தவரா? (அ) பெண்ணாசை உள்ளவரா?

இந்த நிகழ்ச்சி உண்மை என்று நாம் கருதினால்...?

இப்போது நாம் மேற்கண்ட இஸ்லாமிய சரித்திர விவரம் உண்மை என்று கருதி நமது கேள்விகளை முன்வைப்போம்.

1) உலக மகா மேன்மையுள்ள ஒரு நபி (இஸ்லாமியர்களின் கருத்துப்படி) தெருவில் நடந்துச் சென்றுக் கொண்டு இருக்கும் போது, ஒரு பெண், முஹம்மதுவின் பின்னால் தட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கும் போது, உலக வழிகாட்டியாக கருதப்படும் ஒரு நப‌ர் உடனே, உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று சொல்லமுடியுமா?

2) நன்மை செய்ய சிந்திக்கத் தேவையில்லை, அவகாசம் கேட்கத் தேவையில்லை, ஆனால், ஒரு பெண் திடீரென்று வந்து திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று நடுத்தெருவில் கெட்கும் போது, முன்பின் யோசிக்காமல், தனக்கு இருக்கும் மனைவிகளிடம் ஒப்புதல் கேட்காமல், அவர்களைக் குறித்து சிந்திக்காமல் முஹம்மது "ஆம், உன்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம்" என்று கூறுவது "ஒரு நபிக்கு பொருத்தமானதாக" தெரிகின்றதா?

3) திருமணம் என்பது மிகவும் புனிதமானது என்றும், ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து இறைவன் "திருமண உறவை" அவர்கள் இருவரின் இடையில் உண்டாக்கி வைத்தார் என்று இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட திருமண‌த்தை நடுத்தெருவில் முடிவு செய்கிறார் முஹம்மது, இவரை எப்படி ஒரு நபி (தீர்க்கதரிசி) என்று மக்கள் நம்புவது?

4) இந்த விவரத்தை அப்பெண் தன் ஜனத்தாரிடம் குடும்ப நபர்களிடம் சொல்ல, அவர்கள் "முஹம்மது ஒரு பெண் பித்துபிடித்தவர்" என்று கூறி திருமணத்தை முறித்துவிடு என்று கூறுகிறார்கள்.

5) ஒரு வழிகாட்டி, ஆன்மீக தலைவர், உலக மகா பரிசுத்தர் என்று இஸ்லாமியர்களால் போற்றப்படும் முஹம்மது, தன் ஊர் மக்களிடம் "பெண் பித்துபிடித்தவர், பெண்ணாசை உள்ளவர்" என்ற சாட்சியை பெறுகிறார். இப்படிப்பட்டவரை கிறிஸ்தவர்களோ, இதர மார்க்க மக்களோ தங்களுக்கு வழிகாட்டியாக இவரை கருதமுடியுமா?

இந்த நிகழ்ச்சி ஒரு இட்டுக்கட்டியது/பொய்யானது என்று கருதினால்...

இஸ்லாமியர்களுக்கு என்று தனித்தன்மை உண்டு. ஒரு அறிஞர் அவர் இஸ்லாமியரோ அல்லது இஸ்லாமியரல்லாதவரோ யாராக இருந்தாலும் சரி, "முஹம்மது பற்றி உயர்வாக அவர் கூறினால்", அது பொய்யாக இருந்தாலும் சரி, அதனை அங்கீகரிப்பார்கள். ஆனால், அதே நபர் "முஹம்மது பற்றிய இருண்ட நிகழ்ச்சிகளை கூறினால்", இவர் இஸ்லாமுக்கு எதிரி, முஹம்மது மீது இட்டுக்கட்டுகிறார் (பொய் சொல்கிறார்) என்று அடித்துக் கூறுவார்கள்.

மேற்கண்ட சரித்திர ஆசிரியர் அல் தபரி ஒரு கிறிஸ்தவரோ, இந்துவோ அல்லது இஸ்லாமுக்கு எதிரியோ அல்ல, இவர் ஒரு பக்தியுள்ள இஸ்லாமியர். இவர் இஸ்லாமிய ஆட்சி கொடிகட்டி பறக்கும் போது வாழ்ந்தவர், இஸ்லாமியர்களால் மதிக்கப்படுபவர். இவரைப் பற்றி அறிய, இவரது குர்‍ஆன் விரிவுரை பற்றியும் அறிய இந்த (http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Jarir_al-Tabari, http://www.muslimheritage.com/topics/default.cfm?ArticleID=649 ) தொடுப்புக்களை சொடுக்கிப் பார்க்கவும். இவரது குர்‍ஆன் தப்ஸீரிலிருந்து (விரிவுரையிலிருந்து) பாகவி (Baghawi), சுய்யுதி (Suyuti) மற்றும் இபின் கதீர் (Ibn Kathir) போன்றவர்கள் தங்கள் விவரங்களை அதிகமாக சேகரித்துள்ளார்கள்.

இஸ்லாமியர்களுக்கு அல்தபரி சொன்ன 99 விவரங்கள் வேண்டும், ஆனால், அதே அல்தபரி சொன்ன 1 விவரம் தேவையில்லை.

இப்போது இஸ்லாமியர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லப்போகும் விவரங்களையும் அதற்கான விளக்கங்களையும் இப்போது காண்போம்.

1) இந்த நிகழ்ச்சி பற்றி இஸ்லாமியர்கள் கூறும் பதில்: "முஹம்மது ஒரு பெண் பித்துபிடித்தவர் (உமனைஜர்)" என்று சொன்னவர்கள் முஹம்மதுவின் எதிரிகளாவார்கள், அவர்கள் சொல்வதை எப்படி நாம் ஏற்கமுடியும்?

ஆனால், இவர்கள் எதிரிகள் என்று அல் தபரியின் விவரங்களிலிருந்து நமக்கு தெரிவதில்லை. இவர்கள் முஹம்மதுவின் எதிரியாக இருந்திருந்தால், முஹம்மது அவர்களின் கதையை எப்போதே முடித்து இருந்திருப்பார்.

2) உண்மையாகவே, முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவராக இருந்திருந்தால், அப்பெண் மறுபடியும் மறுத்தபோது அதனை அங்கீகரித்து இருந்திருக்கமாட்டாரே, ஆனால் முஹம்மது உடனே அதனை அங்கீகரித்தார் அல்லவா எனவே, அவர் ஒரு பெண் பித்து பிடித்தவர் அல்ல என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.

ஒரு மனிதன் தனக்கு அனேக மனைவிகள் இருக்கும்போது, தெருவில் சென்றுக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்வேன் என்றுச் சொன்னால், "பெண் பித்து இல்லாதவர்" என்ன பதில் கூறுவார்?

உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் ஊரில் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் மற்றும் எல்லாராலும் மதிக்கப்படும் ஒரு பெரிய மனிதர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று மனைவிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். முஹம்மதுவிற்கு ஏற்பட்ட நிகழ்ச்சி உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே "ஆமாம்" என்று தலை ஆட்டுவீர்களா?

சரி, ஒரு கணக்கு போடுவோம். ஒரு ஆணை எப்போது பெண் பித்துபிடித்தவர் (பெண்ணாசை உள்ளவர்) என்று நாம் கூறுவோம்.

கேள்வி 1: ஒரு ஆண், தன் வாழ்நாள் எல்லாம் ஒரே மனைவியுடன் வாழ்க்கை நடத்தி, வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமலும், இதர பெண்களுடன் கள்ளத் தெடர்பு வைத்துக்கொள்ளாமலும் இருந்தால், இந்த ஆணை நாம் "பெண்ணாசை உள்ளவர்" என்று சொல்வோமா?

பதில் 1: சொல்லமாட்டோம், இவ‌ர் பெண்ணாசை உள்ளவர் அல்ல‌.
(1:1 = பெண்ணாசை உள்ளவர் அல்ல‌)

கேள்வி 2: ஒரு ஆண், இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்டு இருந்தால், இப்படிப்பட்டவனை "பெண்ணாசை" பிடித்தவன் என்று சொல்வோமா? (அவன் வாழும் நாட்டில் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்வது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே நாம் கருதுவோம்)

பதில் 2: ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன் என்றுச் சொல்லலாம்.
(1:2 = ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன்)

கேள்வி 3: ஒரு ஆண், நான்கு மனைவிகளை திருமணம் செய்துள்ளான், இவனை பெண்ணாசை உள்ளவன் என்று கூறலாமா?

பதில் 3: கண்டிப்பாக கூறலாம், பெண் பித்து இல்லாமலா நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொண்டான்.
(1:4 = நிச்சயமாக பெண்ணாசை உள்ளவன்)

கேள்வி 4: ஒரு ஆண், நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு, இன்னும் அனேக அடிமைப் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல், அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டும் இருக்கும் நபரை, பெண் பித்துபிடித்தவர் என்று கூறலாமா?

பதில் 4: இந்த கேள்வியையே கேட்கக்கூடாது. அதாவது, நாலு மனைவி மற்றும் அனேக கள்ளத்தொடர்புகள் அதாவது திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளுதல். இவன் பெண்ணாசை பிடித்தவனே.

(1: 4, a, b, c, p, q, r, x, y, z etc.. = இவன் பெண்ணாசை பிடித்தவனே, ஒரு சதவிகிதமும் சந்தேகமில்லை)

கேள்வி 5: ஒரு ஆண், 12 மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டான். இன்னும் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறான். மற்றும் திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்கிறான் . மற்றும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாகரத்து, திருமணம் என்று மாறி மாறி செய்தால், இவரை நாம் என்னவென்று அழைக்கலாம்.

பதில்: இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.

ஒர் ஊர் மக்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக, ஒரு ஆன்மீகத் தலைவர் "அனேக மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டும், விவாகரத்து புரிந்துக்கொண்டும் இருந்தால், அவரை "பெண் பித்துபிடித்தவர்" என்று கூறமாட்டார்களா?

இதைத் தான் அந்த லைலாவின் குடும்பத்தார்களும் ஜனங்களும் கூறினார்கள். அவர்கள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

( 1:1 = பெண்ணாசை உள்ளவர் அல்ல‌)

(1:2 = ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன்)

(1:4 = நிச்சயமாக பெண்ணாசை உள்ளவன்)

(1: 4, a, b, c, p, q, r, x, y, z, etc.. = இவன் பெண்ணாசை பிடித்தவனே, ஒரு சதவிகிதமும் சந்தேகமில்லை)

( 1: 12, 13, 14, 15,………… = ?)

தெருவில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியில் ஒரு இறை நோக்கம் இருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், இந்த தெருவில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் என்ன இறைநோக்கத்தை காணப்போகிறார்கள்?

இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் 12/13 திருமணங்கள் தவிர, இத‌ர பெண்களையும் முஹம்மது திருமணம் செய்ய விரும்பினார், சில பெண்கள் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டனர்.

முஹம்மதுவின் இப்படிப்பட்ட கேள்விக்குரிய நடத்தைகள் பற்றிய இஸ்லாமிய விவரங்களை கீழ்கண்ட கட்டுரையில் படிக்கவும்:

1) அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html

2) முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post.html

3) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html

4) இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html

5) அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html

எதிரிகளாக இருந்தாலும், தன் மீது பொய்களை கூறாதபடிக்கு முஹம்மது வாழ்ந்து இருந்திருக்கவேண்டும், ஆனால், இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள ஹதீஸ்களின், சரித்திரங்களின் படி பார்த்தாலே போதும், அன்று அம்மக்கள் சொன்னது பொய் அல்ல உண்மை என்பது விளங்கும்.

இங்கு ஒரு கேள்வியை கேட்கவேண்டும், அதாவது லைலா தன் மக்களிடம் சென்று, விவரத்தை சொன்னதும், முஹம்மது ஒரு "பெண்ணாசை பிடித்தவர்" என்று அம்மக்கள் சொன்னார்கள். இவர்கள் சொன்னதை அப்பெண் உடனே எப்படி நம்பிவிடுவாள்? இதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறீர்கள் என்று அப்பெண் கேட்டு இருந்திருப்பாள் அல்லவா? தெருவில் ஒரு நபர் சென்றுக்கொண்டு இருக்கும் பொது, தைரியமாகச் சென்று பேசிய அதுவும் திருமணம் பற்றி பேசும் அளவிற்கு தைரியமுள்ள பெண், எப்படி அம்மக்கள் சொல்லும் பொய்யை (இஸ்லாமியர்களின் படி பொய்யை) எப்படி நம்புவாள்?

ஆனால், தபரியின் சரித்திர விவரத்தின்படி, அப்பெண் தன் மக்கள் சொன்னதை நம்பியிருக்கிறாள், அதாவது, அவர்கள் இப்பெண்ணிடம் "முஹம்மதுவிற்கு இருக்கும் மனைவிகளின் எண்ணிக்கையை கூறியிருப்பார்கள்", உடனே அவள் நம்பியிருப்பாள். ஆக, அம்மக்கள் சொன்னது உண்மையே... அப்படி இல்லையென்றுச் சொல்வீர்களானால், நாம் மேலே கண்ட அந்த கணக்கின் படி ஐந்தாவது கேள்வியின் பதில் என்ன என்று எங்களுக்குச் சொல்லுங்கள்.

(ஒரு கேள்வி: நான்கு மனைவிகளை உடைய ஒரு ஆணின் முதல் மனைவியிடம் சென்று, உங்கள் கணவருக்கு பெண்ணாசை உண்டா இல்லையா? என்று கேட்டுப்பாருங்கள், மற்றும் நீங்கள் சொல்லும் விவரம் இரகசியமாக இருக்கும் என்று சொல்லிப்பாருங்கள், அந்த முதல் மனைவி என்ன சொல்லுவாள்? என் கணவருக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது என்று சொல்வாளோ? நிச்சயமாக சொல்லமாட்டாள், அவள் அனுபவிக்கும் வேதனையை அப்படியே கொட்டிவிடுவாள், பெண்களின் இதய வேதனை பலதார ஆண்களுக்கு புரியுமோ?)

இஸ்லாமியர்கள் "எங்கள் நபி ஒரு பரிசுத்தர்" என்று சொன்னவுடன், ஏன் எப்படி என்று கேள்வி கேட்காமல் நம்பிவிட்டு, தங்கள் மார்க்கத்தை விட்டு, உடனே இஸ்லாமை ஏற்க இங்கு யாரும் அறிவீளியாக இல்லை. எனவே, எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கவேண்டும்.

அல் தபரி சொன்னது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், இஸ்லாமியர்களுக்குத் தான் பிரச்சனை. அல் தபரி சொன்னது பொய் என்று இஸ்லாமியர்கள் கூறும் பொய்யை நாம் நம்பினாலும், முஹம்மதுவின் திருமண வாழ்க்கையின் தரத்தையும், திருமணம் எண்ணிக்கையையும் நாம் காணும் போது, லைலாவின் மக்கள் சொன்னது உண்மை என்பது விளங்கும்.
 

 

0 comments: