அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 21, 2010

சிர்பில் சாட்சி



சிர்பில் சாட்சி 

 என்னுடைய பாட்டி, புராதன நம்பிக்கையை உடைய கிறிஸ்தவராய் இருந்தார். அநேக ஆண்டுகளுக்கு முன் அவர் துருக்கி நாட்டிற்கு வந்தப் போது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவராய் மாறி, இஸ்தான்புல் பட்டணத்தில் இருக்கும் ஒரு சிறிய‌ புரட்டஸ்டண்டு சபைக்கு செல்ல ஆரம்பித்தார். நான் வாலிப வயதை அடையும் வரை என்னுடைய தாயார் விசுவாசியாக இருந்ததில்லை. என்னுடைய தந்தை துருக்கியின் பல்கேரியை சேர்ந்த ஒரு துருக்கி இஸ்லாமியர்.

 அநேக ஆண்டுகளாய் வேதாகமத்தைப் பற்றி எனக்கு தெரியாதிருந்தது. ஆனால் அவ்வப்போது என்னுடைய பாட்டியோடுகூட இணைந்து நானும் ஆலயத்திற்கு செல்வேன், அப்போது நான் இவைகளை புரிந்துக் கொள்ளவில்லை. எங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை எப்போதுமே எனது தந்தை பரிகாசம் செய்துக்கொண்டிருந்ததால், இந்த விசுவாசத்தை நான் அவ்வளவு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதவில்லை. எனக்கு 17 வயதாகும் போது நான் மனரீதியான பிரச்சனைகளினாலே மிகவும் பாதிக்கப்பட்டேன். என்னுடைய குடும்பத்தார் என்னை அநேக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். ஆனாலும், என்னுடைய பிரச்சனைகளுக்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த பிரச்சனையின் மூலமாக தேவன் என் மனதோடு இடைப்பட ஆரம்பித்தார்.

 ஒருநாள் நான் நம்பிக்கையற்றவளாய் என் வீட்டிலே உட்கார்ந்திருந்தேன். அப்போது, என்னுடைய சபையை சேர்ந்த சில பெண்கள் என்னை சந்திக்கும்படியாக வந்திருந்தனர். அவர்கள் இயேசுவைக் குறித்து பேச ஆரம்பித்தனர். நான் இயேசுவைப் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும், இந்த முறை என்னுடைய இருதயத்தின் ஆழத்திலே எதையோ உணர்ந்தவளாக காணப்பட்டேன்.

 இயேசுவை எனது ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளுவதிலே தடுமாற்றமாக இருந்தது. ஏனெனில் என்னுடைய வாழ்வை முற்றிலுமாக இன்னொருவர் கையிலே கொடுக்க பயமாக இருந்தது. அவர் என்னை என் இஷ்டப்பிரகாரம் வாழ விடமாட்டார் என்று கருதினேன். நான் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும், சுதந்திரமான வாழ்க்கையை நடத்துவதில் பிரியப்படுவேன் (சுயமாக வாழ நினைப்பேன்).

"நான் ஒருபோதும் விட்டுதர மாட்டேன், எனக்கு தெரியாத ஒருவராலே நான் வழி நடத்த பட மாட்டேன்? என்று அன்றைய‌ தினம் முதல் என்னுடைய மனதிலே போராட்டம் நடந்துக்கொண்டே இருந்தது. நம்முடைய இரட்சகருக்கு விரோதமாக இவைகளை முணுமுணுத்தேன். ஆனால், ஒருநாள் அவருக்கு விரோதமாய் செயலாற்றிக்கொண்டிருந்த என்னுடைய முழு பெலத்தையும் இழந்தவளாய் "ஆம், நீரே என் ஆண்டவர், என்னுடைய வாழ்வை உமக்கு ஒப்புவிக்கிறேன்" என்று மிகுந்த சத்தத்தோடே கெஞ்சி, கதறினேன்.

இது ஒரு அற்புதமே. அந்நாள் முதற்கொண்டு என்னுடைய மனரீதியான பிரச்சனைகள் வழுவிழக்க ஆரம்பித்தன. அதன் பின்னர், என்னுடைய குடும்பத்தாருக்கும், தாய்க்கும், என்னுடைய சொந்தக்காரர்களுக்கும் இயேசுவைக் குறித்து சொல்ல ஆரம்பித்தேன், எனக்கு பிறகு அவர்களும் விசுவாசிகளாய் மாறினர். தேவனுடைய கரம் என் குடும்பத்தின் மேல் இருப்பதை தெரிந்துக்கொண்டேன். இதன் மத்தியிலும், ஒருசில பிரச்சனைகள் இருக்கதான் செய்தது. எங்களுக்கு நடந்த காரியங்கள் எனது தகப்பனாருக்கு பிடிக்கவில்லை. எங்கள் விசுவாசத்தை யாரிடமும் பகிரக் கூடாது என்ற தடையை விதித்து, எங்களை நெருக்க (ஒடுக்க) தொடங்கினார். சில காலம் என்னுடைய அண்டை வீட்டாருக்கும், சில நண்பர்களுக்கும் நாங்கள் கிறிஸ்தவர்களாக மாறினது தெரியாதிருப்பது, எங்களுடைய ஆவிக்குறிய வாழ்க்கைக்கு அவ்வளவு பிரயோஜனமானதாக காணப்படவில்லை. அவ்வளவு சுலபமாக சபைக்கு போகமுடியாது. அதனால், கிறிஸ்தவ கணவருக்காக நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். என்னுடைய தாய்க்கும், உறவினருக்கும் என்னுடைய ஜெபத்தின் மீது நம்பிக்கை இல்லாதிருந்தது.

என்னுடைய வாழ்க்கையிலே என் கணவரை சந்தித்தது எனக்கு இரண்டாம் பெரிய அற்புதமாக காணப்பட்டது. அவர் துருக்கியை சேர்ந்த இஸ்லாமிய பின்னனியை சேர்ந்தவராகவும், துருக்கியிலுள்ள ஒரு புராடஸ்டண்டு சபையின் போதகராகவும் இருந்தார். கர்த்தர் எங்களுடைய திருமணத்தின் மூலம் அநேக மாற்றங்களை எனது குடும்பத்தில் கொண்டு வந்தார். இதில் மிகவும் முக்கியமான நிகழ்வு என்னவென்றால் என்னுடைய தகப்பனார் கடந்த  ஒன்றறை ஆண்டுகளாக ஆலயத்திற்கு வந்துக்கொண்டு இருக்கிறார்.  நான் மாறிவிட்டேன் என்று அவர் சொல்லாவிட்டாலும், ஆராதனையில் அவர் காட்டும் அக்கறையையின் மூலம், தேவன் அவர் இருதயத்தை எப்படியாக மாற்றிவிட்டார் என்பதை காண முடியும்.

சிர்பில் சாட்சி 

ஆங்கில மூலம்:  Sirpil's Story

இவர்கள் ஏன் கிறிஸ்தவர்களானார்கள்


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.




0 comments: