இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். (அல் தபரி சரித்திரம் - The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)
October 30, 2010
முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்."அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்
October 28, 2010
கிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்
1. பீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்2. பீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி3. பீஜே அவர்களின் புதிய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்4. எழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா?5. முடிவுரை
சோதனை ஓட்டம் ஆரம்பம்• இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும், கிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும் இணைய தளம் சோதனை ஓட்டம் ஆரம்பம். jesusinvites.com. விரைவில் முழுமையான ஒளிபரப்பு செயல்படும் இன்ஷா அல்லாஹ். உங்களின் ஆலோசனைகள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. kaliltntj@gmail.com மற்றும் admin.jesusinvites@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பி உதவுங்கள். . . .Source: www.onlinepj.com
1) இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும்2) கிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும்
பீஜே அவர்கள் எழுதியதுஇந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால் எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
பீஜே அவர்கள் எழுதியவை:இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்Sources:
உமர் எழுதியது:2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது.….தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவிட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது. …ஈஸா குர்ஆன்
இப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று.எங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது....கேளுங்கள் பீஜே அவர்களே...
கேள்விகளை கேளுங்கள்...எதை வேண்டுமானாலும் கேளுங்கள்...ஆனால், ஜாக்கிரதை.......
நீங்கள் பின்பற்றுவது குர்ஆனை... முஹம்மதுவை... அவர் நடந்துக்கொண்ட விதத்தை...
என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.முடிவுரை:ஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா... காலம் தான் பதில் சொல்லும்... இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது... இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்...நான் அடிக்கடி எழுதுவதுண்டு "இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்... இஸ்லாமை விளக்க விடுங்கள்... அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்".
1) எங்களுக்கு பதில் தரும் போது, எங்கள் வரிகளை பதிக்கும் போது, எங்கள் கட்டுரையின் தொடுப்பு என்ன என்று குறிப்பிட்டு பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.2) அவருடைய புதிய தளத்தில் படிக்கப்போகும் வாசகர்கள் வெறும் இஸ்லாமியர்களாக மட்டும் இருக்கமாட்டாரக்ள், அவர்கள் அனைத்து தர மக்கள் இருப்பார்கள். எனவே, அவர் சொல்வது உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க, எங்கள் வரிகளை/கட்டுரைகளை மேற்கோள் காட்டி பதில் சொன்னால், நியாயமானதாக இருக்கும்.3) இஸ்லாமியர்கள் நேர்மையாக நடந்துக்கொள்கிறார்கள் என்று மேடையில் சொல்வது மட்டுமல்ல, அதனை செயலில் காட்ட முஹம்மதுவை பின்பற்றுபவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.4) பீஜே அவர்களின் கட்டுரையை அவரது தளத்தில் படிக்கும் கிறிஸ்தவர்கள் அதற்கான பதிலை நாங்கள் கொடுத்து இருந்தால், அதனை (அ) அதன் தொடுப்பை அவர்கள் தளத்தில் பின்னூட்டமிட அனுமதி அளிப்பார் என்று நம்புகிறேன், ஏன்னெறால், அப்போது தான் அவரது தளத்தில் படிக்கும் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு வாதங்களையும் படித்து சரி பார்க்கமுடியும்.5) தங்கள் தளத்தில் படிக்கவரும் வாசகர்களை ஏமாற்றாமல் இருக்கவேண்டுமானால், நாங்கள் கொடுத்த பதிலின் தொடுப்பையும் கொடுக்கவேண்டும்.6) உங்கள் தொடுப்பை நாங்கள் கொடுக்கமாட்டோம், நாங்கள் உங்கள் வரிகளை பதித்து எங்கள் பதிலை மட்டும் தருவோம் என்று இதர கோழையான இஸ்லாமிய தளங்கள் சொல்வது போல, பீஜே அவர்களும் சொல்வாரானால்... அவருக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இல்லை... அல்லது உண்மைக்கு முன்னால் இஸ்லாம் தோற்றுவிடும் என்று பயப்படுகிறார் என்று அர்த்தம். ஒரு தளத்தின் தரம், அந்த தளம் முன்வைக்கும் ஆதாரங்கள் மீது சார்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.7) உங்கள் புதிய தளம் பற்றி நான் ஏன் கிறிஸ்தவர்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் என்றால், எனக்கு கிறிஸ்தவம் மீது நம்பிக்கை உண்டு, பைபிள் பற்றி நம்பிக்கை உண்டு, ஆகையால், பயப்படாமல் என் கட்டுரைகளில் யாருக்கு பதில் தருகிறேன், அந்த தளத்தின் தொடுப்பு என்ன என்று எழுதுகிறேன். அதே போல, நீங்களும் செய்வீர்கள் என்று தமிழ் கிறிஸ்தவ உலகம் நம்புகிறது.8) இது எங்கள் எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான படித்த அறிவுள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் இது தான். இரு தரப்பினரின் வாதம் படித்த பிறகு உண்மை தெரியவரும். இதனை பீஜே மறுக்கமாட்டார் என்று நம்புகிறேன்.
October 26, 2010
பைபிள் மற்றும் குர்ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
பைபிள் மற்றும் குர்ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
ஆசிரியர்: லூக் பிளாண்ட்
பாவமன்னிப்பு குறித்து என்னுடைய இஸ்லாமிய நண்பர்களுடன் பல விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அது குர்ஆனிலும் பைபிளிலும் முற்றிலும் மாறுபட்ட விதமாகக் காணப்படுகிறது. இந்தக்கட்டுரையில் தேவனின் மன்னிப்பு குறித்தும் அவரது மகிமை குறித்தும் என்னுடைய சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நாம் ஒருவரை ஒருவர் இவ்விதம் நடத்தும் போது அது விபரீதமானது. ஆனால், இந்த அவமதிப்பின் அளவு நாம் யாரை அல்லது எதை அவமதிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நான் ஒரு படம் வரைய சிறிது நேரம் செலவழித்திருக்கும் போது, அதனை ஒரு பெயிண்டினால் அழித்து விடுவீர்களானால், அது எனது படம் வரையும் திறனுக்கு அவமரியாதை செய்ததாகும். ஆயினும் லோவெர் அருங்காட்சியத்தில் சென்று மோனாலிசாவின் அசல் ஓவியத்தின் மீது பெயிண்டினைத் தெளித்து நாசமாக்கினால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். எனவே, நம்மைப்போன்று அநித்தியமான படைப்புகளைப் போலன்றி, அளவற்ற நித்தியமான பரிபூரணப் படைப்பாளீயின் படைப்பினைக் கருத்தில் கொள்ளும்போது நாம் செய்யும் குற்றம் எத்துனை பெரியது! நாம் பாவம் செய்யும்போது, அளவில்லா முக்கியத்துவம் வாய்ந்த கடவுளை அவமதிக்கிறோம். எனவே இந்த அவமதிப்பும் அவமரியாதையும் அளவற்றது.
மேலும் இத்தகைய அவமதிப்பின் அளவு நாம் அவமதிக்கின்ற நபரைப் பொறுத்தது மட்டுமின்றி அவரோடு நமக்கு உள்ள உறவைப் பொறுத்தும் மாறுபடும். முற்றிலும் அறிமுகமற்ற ஒரு நபரை அவமதித்து துக்கப்படுத்துவது சிறிய அளவு பாதிப்பை உண்டாக்கும், ஆனால் நம்மோடு ஏற்கனவே நல்லுறவில் உள்ள ஒருவரை அவமதித்து துக்கப்படுத்துவது, அதிலும், அவர் நம் குடும்ப உறவினாராக இருக்கும் பட்சத்தில் இது பன்மடங்கு வெட்கத்திற்குரியது, பாதிப்பும் அதிகமாக இருக்கும். நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் நம் குடும்பத்தின் சார்பாகவே செய்ததாகக் கருதப்படும். அவர்கள் நம்மிடம் பொறுப்புணர்ச்சியையும் தரமான நடத்தையையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே நாம் இரு வழிகளில் நமது குடும்பத்தினை அவமதிப்புக்குள்ளாக்குகிறோம். முதலாவது நாம் முகத்திற்கு எதிரே அவர்களை தூஷிக்கிறோம், இரண்டாவது, அவர்கள் இல்லாதிருக்கும் போது கூட நமது குடும்ப நற்பெயரை களங்கத்திற்குள்ளாகுகிறோம்.
தேவனைப் பொறுத்தமட்டில், நாம் அவரது சாயலாகவே படைக்கப்பட்டிருக்கிறோம். அதாவது, நமக்கு அறிவுபூர்வமான ஒரு உருவம் உண்டு. இவ்வுலகத்தில் அவரது பிரதிநிதிகளாக, ராஜரீகமாக தேவனைப் போன்று செயல்படும்படி எதிர்பார்க்கப்படுகிறோம். (ஆதியாகமம்: 1:26-28). இந்த அர்த்தத்தில், உவமானமாக நாம் அவரின் பிள்ளைகள். (அப்:17:28). தேவன் நாம் அவரின் குடும்ப உறுப்பினருள் ஒருவராகச் செயல்பட விரும்புகிறார். ஏதேன் தோட்டத்தில் ஆதாமுடனும் ஏவாளுடனும் அவர் சஞ்சரித்ததாக நாம் வாசிக்கிறோம். (ஆதியாகமம்: 3:8). தேவனோடு ஒரு வியத்தகு உறவினை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மனிதர்களாய் நாம் படைக்கப்பட்டதில் நமக்கு எத்துணை அதிசயிக்கத்தக்க உயர்வு பாருங்கள்!
நாம் தேவனுக்குக் கீழ்படியாதபோது நாம் இரு வழிகளில் அவரைச் சிறுமைப்படுத்துகிறோம். முதலாவது அவரது கட்டளைகளை அலட்சியம் செய்து ஒரு தகப்பனாக நம்மீது அவர்பொழிந்த அன்பினைப் புறக்கணித்து ஆதாம் ஏவாளைப் போன்றே அவரது முகத்திற்கெதிரே அவரை அவமதிக்கிறோம். இதனால் ஏனைய உலகிற்கு "தேவனின் பிள்ளைகள் அவர் வெட்க்கப்படும் விதத்தில் நடந்தார்கள்" என்ற செய்தியை பிரகடணம் செய்கிறோம்.
தேவனுக்கு எதிரான நமது பாவங்கள் எவ்வாறு உள்ளன என்று காண்போமாகில், அது ஒரு இளவரசன் தன் தந்தையாகிய அரசனிடம் சென்று பலர் முன்னிலையில் நன்றிகெட்டவிதமாக வெறுப்புடன் அவர் முகத்தில் காறி உமிழ்வது போன்றே உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தேவன் என்ன செய்வார்? நாம் அவரை வெட்கப்படுத்தியதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பாரா? இல்லை, இந்த அவமரியாதை தண்டனைக்கு உரியது. இதற்குச் சரியான நடவடிக்கை ஒரு மிகப் பெரிய தண்டனை – நரகத்தின் நித்திய ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தலேயாகும்.
ஒருவர் முஹம்மதுவின் படத்தை அவர் அவமரியாதைப்படும்படி வரைந்தால் இஸ்லாமியர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த அவ மரியாதை குறித்து ஒன்றும் செய்யாமல் அவர்கள் சும்மா இருப்பார்களேயானால் அது சரிதான் என்ற தகவலை இந்த உலகிற்குத் தெரிவிப்பது போன்றாகிவிடும். இதன் பொருட்டே, இஸ்லாமியர்கள் முகமதுவிற்கு எதிரான எந்த அவமதிப்பையும் ஏதாவது செய்யாமல் விடுவதில்லை. அவரை அவமதிப்பிற்குள்ளாக்குவது விபரீத விளைவுகளுக்குள்ளாகும் எனக் காண்பிப்பதே இதன் நோக்கம்.
ஆனால் முஹம்மதுவை விடப் பன்மடங்கு உயர்ந்தவராகிய தேவனின் காரியம் என்ன? தேவன் அவரை அவமதித்தவர்களை ஒன்றுமே செய்யாமல் இந்த அவமரியாதையை மன்னித்து விடுவாரேயானால், அது அவர்கள் செய்தது சரிதான், அவர் குப்பையைப் போன்று ஒதுக்கத்தக்கவர்தான், அவரை யாரும் அவமதிக்கலாம், அவ்ர் ஒன்றும் முக்கியமானவரல்ல, என்ற அறிக்கையை உலகிற்குத் தெரிவிப்பது போலாகும். தேவன் எப்போதாவது இவ்விதம் சொல்வாரா?
மனிதர்கள் எவ்விதமான சந்தர்ப்பங்களில் தங்களுக்கு உண்டாகும் நிந்தைகளையும் அவமானங்களையும் ஒன்றும் செய்யாமல் சகித்துக்கொள்வார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியும்:
- ஒன்றும் செய்ய இயலாத நிலையில், அதாவது நாம் அதைச் சரி செய்யப் பெலனற்று இருக்கும்போது நாம் சும்மா இருக்க முற்படலாம். ஆனால், தேவனுக்கு அப்படிப்பட்ட நிலை ஒருபோதும் இல்லை, ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.
- அல்லது மற்றவர்களுக்கு நான் இதைவிடப் பெரிய கொடுமைகளைச் செய்திருக்கிறேன், எனவே பழிவாங்கும் உரிமை எனக்கு இல்லை என நான் உணரும் பட்சத்தில். மீண்டும், தேவனுக்கு இது பொருந்தாது, ஏனெனில் அவர் எப்பொழுதும் முற்றிலும் சரியானதையே செய்பவர்.
- அல்லது நான் சுயமரியாதையற்று இருந்தால் – அதாவது, ஏதொவொரு காரணத்திற்காக நான் எனது மனித மகிமையை இழந்துபோயிருந்தால், நான் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவேன். ஆனால் தேவனின் மகிமை இதனினும் பண்மடங்கு உயர்ந்தது, அவர் நிச்சயமாகவே ஒருபோதும் அதை இழந்து போவதில்லை!
- அல்லது ஏதோவொரு முக்கியமான காரணத்திற்காக எனது சுயமரியாதையைப் பணையம் வைத்தால் பரவாயில்லை என நான் கருதினால், நான் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவேன். ஆனால், மீண்டும், தேவன் எப்படி எண்ண வேண்டும் – அவரை விட அவருக்கு முக்கியமானது என்ன இருக்க முடியும்?
இல்லை, தேவன் அளவற்ற தன்மானம் மிக்கவர். ஒருவரும், தனக்கே உரித்தான தேவ மகிமையை எடுத்துக் கொள்ளவோ அவரை அவமதிக்கவோ விடாமல் பிடிவாதமாக இருப்பதில் எரிச்சலுள்ள தேவன் அவர். உபாகமம் 4:23-24 ல் அவர் இவ்வண்ணமாகச் சொல்கிறார்.
"நீங்களோ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்."
ஏசாயா 42:8 இதை இவ்வண்ணமாய்ச் சொல்கிறது:
"நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்."
தானே மகிமைக்கும் கனத்திற்கும் உரியவர் என்பதில் தேவன் உறுதியாகவே இருக்கிறார். இது சரி தான். ஏனெனில், மெய்யாகவே, மிகவும் முக்கியமான, மிகவும் விலைமதிப்பற்றவர் அவர். ஆகையால், தனக்கு கிடைக்கவேண்டிய மகிமையை அவரே நிலை நிறுத்திக்கொண்டால் தான் அவர் மன்னிப்பார். அதே நேரத்தில், அவருக்கு எதிராக செய்யப்பட்ட பாவம் என்பது எவ்வளவு கொடுமையானது, தண்டிக்கப்படவேண்டியது, என்பதை காட்டிய பிறகே அவர் மன்னிப்பார்.
இது சாத்தியமா? ஆம், பிதாவாகிய தேவனும் குமாரனாகிய தேவனும் ஆகிய இருவரும் இவ்வண்ணம் தான் செய்கிறார்கள் என பைபிள் போதிக்கிறது.
பழைய ஏற்பாடு முழுவதிலும், நமது பாவங்களினால் ஏற்பட்ட அவமரியாதையை நிவர்த்திக்க பலியிடுதலின் அவசியத்தை தேவன் காண்பிக்கிறார். ஆயினும், ஒரு மாட்டினுடைய அல்லது ஒரு ஆட்டினுடைய உயிர் தேவனுக்கு நம்மால் இழைக்கப்பட்ட அவமரியாதையை நோக்கும்போது ஒன்றுமில்லை. எனவே பிதாவாகிய தேவன், நமது பாவம் எத்துனை கொடியது என்பதினை மிகச் சரியான நேரத்தில் மிகவும் அதிசயிக்கத்தக்க விதமாக- தனது ஒரே பேரான குமாரனை பலியாக ஒப்புக்கொடுத்தலின் மூலம் விளங்கப்பண்ணினார். (யோவான் 3:16). இது அவரின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலுண்டான அளப்பதற்கரிய நிவாரண பலியாகும். (எபிரேயர் 9:11-14, 1 பேதுரு1: 18-19)
குமாரன் தேவனுக்குரிய மகிமையைச் செலுத்தும் பொருட்டு இதைச் செய்ய முன்வந்தார். முதலாவதாக, தேவ குமாரன் பிதாவின் அளவிட முடியாத மதிப்பினை வெளிப்படுத்தும் விதமாக பரத்தின் தெய்வீக மகிமையை விட்டுவிட்டு ஒரு சாதாரண மனிதனாக, ஒரு ஊழியக்காரனாக இறங்கி வந்தார். அவ்விதம் ஒரு ஊழியக்காரனாக வாழ்ந்தது மட்டுமின்றி ஒரு குற்றவாளியினைப் போன்று தேவ ஆக்கினையைச் சுமந்து கேவலமான முறையில் மரணத்தை எதிர்கொண்டார். (பிலிப்பியர் 2:5-8) இவை அனைத்தையும் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படிக்கு இயேசு ஏற்றுக்கொண்டார். (யோவான் 17:4)
இத்தகைய முறையில் தானே தேவன் பாவங்களை மன்னிக்கிறார்- நமக்கு உரித்தான அவமானங்களை இயேசு ஏற்றுக்கொண்டு அவருக்குரிய மகிமையை நமக்கு அளிக்கிறார். அதே நேரத்தில் தேவன் தமக்கு உரிய தமது மகிமையை விட்டுக்கொடுப்பதில்லை. பிதாவானவர் அளவற்ற இந்த பலியினால், தமக்கெதிரான பாவங்களும் அளவற்றவையே எனக் காண்பிக்கிறார். குமாரன் தமது அன்பினாலும் கீழ்படிதலினாலும் தம்மை நரகத்திற்கிணையான பாதையில் செல்ல ஒப்புக்கொடுத்ததினால் பிதாவின் உண்மையான மதிப்பினையும் நாம் எவ்விதம் அவரிடம் நடந்துகொள்ள வேண்டும் எனவும் காண்பிக்கிறார்.
குர்ஆன் காண்பிக்கும் கடவுள், இவ்விதம் செயல்படுவதில்லை. அவர் மன்னிக்கும்போது, நாம் அவர்மீது குவித்த அவமரியாதைகள் குறித்து அவர் ஒன்றுமே செய்வதில்லை. இறுதி நாளில், அவருக்கு நேரிட்ட அவமரியாதையைவிட, மனுஷர்களும் மனுஷிகளும் சொர்க்கத்தில் அனுபவிக்கும் உடல் சுகத்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, அவர்களுடைய குற்றங்களை அலட்சியம் செய்கிறார். ஒரு கிறிஸ்தவனுடைய பார்வையில், இவ்விதம் செயல்படுகின்ற ஒரு கடவுள், ஒரு மனிதனின் மனதில் உருவான கற்பனையாகவே காணப்படுகிறார். ஏனெனில், மனித மனங்கள் மட்டுமே கடவுளின் மரியாதையை விட, தான் மன்னிக்கப்பட்டு பரலோகம் செல்வதை அதிமுக்கியமானதாகக் கருதும். உண்மையில், நாம் கூட இவ்வண்ணமாகவே நினைக்கிறோம். ஆதாம் ஏவாள் தொடங்கி தேவனைக் கனப்படுத்துவதைவிட நமது ஆசைகளையே முன்னிலைப் படுத்துகிறோம். எனவே தான் மனிதர்கள் நமது மரியாதைக்குப் பாத்திரமான விதத்தில் உள்ள கடவுளைவிட, சுய மரியாதையற்ற கடவுளைக் கண்டுபிடிக்கவே விரும்புகிறார்கள் எனக் காண்கிறோம்.
ஆனால், பைபிள் காண்பிக்கும் தேவன், தனது மகிமையில் உறுதியுடன் நிலை நிற்கிறார். அவர் அவ்விதம்தான் செயல்படுவார். ஆயினும், அவர் நம் மீது கொண்ட எண்ணிமுடியாத மகத்தான தம் அன்பினால் தமது மகிமைக்குச் சிறிதளவும் பாதகம் ஏற்படாத வகையில் நம்மையும் மேன்மைப்படுத்துகிறார்.
கிறிஸ்தவர்கள் முழு மன்னிப்புப் பெற்றும்கூட மேற்கொண்டு தம் மனம் போனபடி வாழ முற்படாமல் இருப்பதற்கு சிலுவைதான் காரணம். தேவன் வழங்கும் பாவமன்னிப்பு ஆச்சரியமானது, நித்தியமானது. அதில் முழு சுதந்திரம் உண்டு. எனது அனைத்துப் பாவங்களும், நான் பின் நாட்களில் செய்யக்கூடிய பாவங்கள் உள்பட, எனக்கு மன்னிக்கப்பட்டன என்பதை நான் அறிவேன். ஆயினும், நான், " நல்லது, என் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன, இனி நான் என் மனம்போன போக்கில் வாழலாம்" என எண்ணிக்கொள்ள முடியாது. ஏனெனில், இயேசு, தேவனுக்கெதிரான பாவங்கள் அவரை அளவிடமுடியாத அவமானத்திற்குள்ளாக்குகின்றன என்பதினைத் தெளிவாகக் காட்ட, அளவிட முடியாத ஒரு விலைக் கிரையத்தைச் சிலுவையின் வழியாகச் செலுத்தியிருக்கிறார். நரகத்தின் நினைவை விட, இந்த உணர்வு தான், தேவனை நேசிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு, பாவத்திலிருந்து விலக அதிகமாக ஊக்குவிக்கும்.
(இந்த கட்டுரையை எழுத மிகவும் ஊக்கமளித்த ரோலண்ட் முல்லர் என்பவரின் "கனம் மற்றும் அவமானம்" என்ற புத்தகத்திற்காக அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.)
ஆங்கில மூலம்: Forgiveness and Honour in the Bible and the Qur'an
ஆசிரியர் லூக் பிளாண்ட் அவர்களின் இதர கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
October 22, 2010
குர்ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
குர்ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
Slave-girls as sexual property in the Quran
ஆசிரியர்: ஜேம்ஸ் எம். அர்லாண்ட்சன்
அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா?
மேற்கத்திய நாடுகளிலும் (இதர நாடுகளிலும்) இஸ்லாமுக்கு மதம் மாறும் அநேகர் பெண்களாயிருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்லாமுக்கு மாறினேன் என்று சொல்லும் ஒரு பெண்ணின் மின்னஞ்சல் எனக்கு வந்தது. இந்த மார்க்கத்தின் எல்லா விவரங்களையும் இந்தப் பெண்கள் அறிந்திருந்தால் இஸ்லாமுக்கு மாறுவார்களா? பெண்கள் இந்த ஆபத்தான முடிவை எடுப்பதற்கு முன் அறிவுடமையோடு சற்று நின்று இரண்டாம் முறை யோசிக்க வெண்டும். (ஆனால் இஸ்லாமை விட்டு மறுபடியும் திரும்பிச்செல்வது என்பது அநேக இஸ்லாமிய நாடுகளில் மரணத்தண்டனைக்கு உரியதாக உள்ளது)
வெறும் ஐந்து தூண்களோடு மட்டும் நின்றுவிடாமல், இஸ்லாம் இன்னும் அதிக ஆழமாக செல்கிறது. அதன் புனித வார்த்தைகளில் விரும்பத்தகாத அநேக உண்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. இந்த கட்டுரையின் நோக்கம் என்னவெனில் இப்படிப்பட்ட உண்மைகளில் இன்னும் ஒன்றை வெளிக் கொண்டுவந்து, அதன் மூலம் எல்லா நிகழ்வுகளையும் மக்கள் முழுமையாக அறிந்துக்கொள்ள வகை செய்வது மற்றும் இதன் மூலம ஒரு சரியான முடிவை இஸ்லாமியர்கள் எடுக்க உதவுவதாகும்.
இயேசு ஒரு சிறந்த வழியைக் காண்பித்து சென்று இருக்கும் போது, அதன் பிறகு அறுநூறு வருடங்களுக்குப் பின்பு, ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்ஆனில் இறக்கியிருப்பாரா?
அமைதி நேரங்களில் அடிமைப் பெண்களோடு செக்ஸ்:
Sex with slave-girls in times of peace:
கி.பி 622 ல் தன்னுடைய சொந்த நகரத்திலிருந்து மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரா அல்லது இடம் பெயர்நது செல்வதற்கு முன்பு, அவர் மக்காவில் இருக்கும் போது இந்த 23ம் சூரா (அதிகாரம்) வெளிப்படுத்தப்பட்டது. அவருடைய பணியின் ஆரம்பத்தில் ஒரு அளவிற்கு அவர் பாடுகளை அனுபவித்த போதும் அவர் யார் மீதும் போர் தொடுக்கவில்லை, எனவே இவை அமைதியின் வருடங்களாக இருக்கிறது. இந்த சூராவைப் பற்றிய சரித்திர பின்னணி மற்றும் விரிவுரையை அறிந்துக்கொள்ள, இந்த தொடுப்பை சொடுக்கவும்.
சூரா 23:5-6 ல் குர்ஆன் சொல்லுகிறது:
முஹம்மது ஜான் மொழியாக்கம்:
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லதுதங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
பீஜே மொழியாக்கம்:
தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக்கொள்வார்கள், அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்
Maududi Translation:
5 [Most certainly true believers] . . . guard their private parts scrupulously, 6 except with regard to their wives and those who are legally in their possession, for in that case they shall not be blameworthy. (Sayyid Abul A'La Maududi, The Meaning of the Quran, vol. 3, p. 237)
இங்கே முக்கியமான வார்த்தைகள் "தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (those who are legally in their possession)" என்பதாகும். மௌதுதி (Maududi: மரணம் - 1979) என்பவர் மிகவும் மதிக்கப்பட்ட குர்ஆன் விரிவுரையாளர், அவர் இவ்வார்த்தைகளுக்கு பொருள் கூறுகிறார், அதாவது "அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது நியாயமானது" என்று விளக்கிக் கூறுகிறார்.
மௌதுதி (Maududi) எழுதுகிறார்:
இரண்டு விதமான பெண்களிடமிருந்து தங்கள் இரகசிய உறுப்புகளை மறைத்து கொள்ள வேண்டியதில்லை:
அ) மனைவிகள்
ஆ) ஒருவனுடைய நியாயமான பங்கிலிருக்கும் பெண்கள், எ.கா அடிமைப் பெண்கள்.
ஆக, இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். திருமணம் தான் நிபந்தனை என்று இருந்திருந்தால் அடிமைப் பெண்களும் மனைவிகளில் ஒருவராக ஏற்கப்பட்டிருப்பார்கள், அவர்களை தனியே பிரித்துக் கூற வேண்டியிருக்காது.
Two categories of women have been excluded from the general command of guarding the private parts: (a) wives, (b) women who are legally in one's possession, i.e. slave-girls. Thus the verse clearly lays down the law that one is allowed to have sexual relation with one's slave-girl as with one's wife, the basis being possession and not marriage. If marriage had been the condition, the slave-girl also would have been included among the wives, and there was no need to mention them separately. (Ibid. p. 241, note 7)
அடிமை முறையை மட்டுமல்ல, ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதையும் முஹம்மதுவே ஆதரிக்கிறார் என்பதை மௌதுதி (Maududi) கண்டுக்கொள்ளாமல் விடுவது அல்லது விமர்சிக்க மறுப்பதுதான் இந்தப் பிரிவின் முக்கியமான குறிப்பு ஆகும். இஸ்லாமை அதிகமாக பாதிக்காத வண்ணம் எப்படி மௌதுதியும் மற்ற உண்மையான இஸ்லாமியர்களும் தங்கள் நபியைப் பற்றி விமர்சிக்க முடியும்? ஆனால், முஸ்லீம்கள் மனுக்குல நன்மையை கருத்தில் கொண்டு தெளிவாக சிந்தித்தால், கண்டிப்பாக விமர்சிப்பார்கள்.
சூரா 70:29-30ம் வசனங்களும் மக்காவில் வெளிப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட சூரா 23:5-6 ஐப் போலவே குறிப்பிடுவதை கவனிக்கலாம். ஆண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளை எல்லாரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் மனைவிகளிடம் மற்றும் அடிமைப் பெண்களிடமல்ல. இதன் பொருள் என்னவென்றால் - இந்த இரண்டு 'வகை" (மௌதுதியின் வார்த்தைகள்)ப் பெண்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதாகும்.
இந்த வசனங்களை பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வாசிக்க விரும்பும் வாசகர்கள் இந்த இணைதளத்திற்கு செல்லவும். இந்த மற்றொரு இணைய தளத்தில் மூன்று ஆங்கில மொழியாக்கங்கள் இருக்கிறது.
போர்க் காலத்தில் அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது:
Sex with slave-girls in times of war:
இப்போது முஹம்மது மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதினாவிற்கு சென்றுவிட்டார். நம்முடைய அடுத்து குர்ஆன் வசனம் காணப்படும் சூரா 4 வெளிப்படுவதற்குள் அவர் நிறைய போர்களையும் தாக்குதலையும் நடத்திமுடித்திருந்தார். உதாரணமாக, கி.பி 624 ல் பத்ருப் போரில் அவர் மக்காவினர்களோடு சண்டையிட்டார் மீண்டும் கி.பி 625 ல் மக்காவினர்களோடு உஹுத் போரில் சண்டையிட்டிருந்தார். மேலும் அவர் கி.பி 624 ல் யூத குலமான குவாய்னுக்காவையும் கி.பி 625 ல் நதீர் என்ற இனத்தையும் நாட்டை விட்டு அகற்றியிருந்தார். ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்ளும் இந்தக் கொள்கையை அவர் மதினாவிற்கு எடுத்துச் சென்றார். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். இந்த சூராவைப் பற்றிய சரித்திர பின்னணி மற்றும் விரிவுரையை அறிந்துக்கொள்ள, இந்த தொடுப்பை சொடுக்கவும்.
சூரா 4:24 ல் குர்ஆன் சொல்லுகிறது:
முஹம்மது ஜான் மொழியாக்கம்
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.…
பீஜே மொழியாக்கம்:
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர்... (மற்றும் சூரா 4:3 and 33:50யும் பார்க்கவும்)
Maududi Translation:
And forbidden to you are wedded wives of other people except those who have fallen in your hands (as prisoners of war) . . . (Maududi, vol. 1, p. 319). (See also Suras 4:3 and 33:50)
போரில் பிடிப்பட்ட பெண்கள், திருமணமாவர்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி, தங்கள் ஆண் எஜமானர்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். அதாவது, அந்த எஜமான்கள் தங்கள் அடிமைப்பெண்களிடம் (சொத்துக்கள் - இஸ்லாமின் படி அடிமைப்பெண்கள் எஜமான்களின் உடமைகள்) உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.
மௌதுதி இந்த வசனத்திற்கான தன்னுடைய விளக்கத்தில் முஸ்லீம் புனித விரர்கள் போரில் தாங்கள் பிடித்த பெண் கைதிகளை அவர்களுடைய கணவர்கள் உயிரோடிருந்தாலும் திருமணம் செய்வது நியாயமானது என்று கூறுகிறார். ஆனால் கணவன்மார்களையும் மனைவிகளோடு சேர்த்து சிறைப்பிடித்திருந்தால் என்ன நடக்கும்? மௌதுதி ஒரு சட்டக் கருத்தை (School of Law) சுட்டிக் காட்டுகிறார், இச்சட்டத்தின்படி முஸ்லீம்கள் அவர்களைத் திருமணம் செய்யக் கூடாது, ஆனால் வேறு இரண்டு சட்டக் கருத்துகளோ, சிறைபிடிக்கப்பட்ட கணவன் மனைவிக்கு இடையில் திருமண உறவு முறிக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றன. (குறிப்பு 44)
ஆனால் இந்தக் கொடுமையைப் பற்றிய விவாதம் ஏன் எழும்புகிறது? நீதியை புரிந்து கொள்பவர்களுக்கு பதில் தெளிவாக இருக்கிறது. போரில் பிடிக்கப்பட்ட திருமணமான பெண் கைதிகளுக்கும் அவர்களை பிடித்த ஆண் சிறையாளர்களுக்கும் இடையில் எந்த செக்ஸ் உறவும் இருக்க கூடாது. உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது.
இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, ஆனால் அல்லாஹ் அதில் விருப்பமற்றவாராக இருக்கிறார் - இப்படித்தான் குர்ஆன் சொல்லுகிறது.
குர்ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் நினைவுபடுத்துவதாக இருக்கிறது.
ஹதீஸ்கள் என்பது குர்ஆனுக்கு வெளியே முஹம்மதுவின் வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளைப் பற்றி விளக்குவதாகும். மிகவும் நம்பிக்கைக்குரிய தொகுப்பாளர் மற்றும் பதிப்பாளர் புகாரி என்பவராவார் (மரணம் 870) .
முஸ்லீம் ஜிஹாதிகள் தாங்கள் சிறைப்பிடித்த பெண்கள் திருமணம் ஆனவர்களாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறது. பின்வரும் பத்தியில் குமுஸ்(Kumus) என்பது கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு.
முஹம்மதுவின் சொந்தக்காரரும் மருமகனுமான அலி ஒரு ஒய்யாரக் குளியல் ஒன்றை சற்றே முடித்தார். ஏன்?
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350
புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்….
அடைப்பு குறிக்குள் [ ] உள்ளதை நாம் எழுதினோம்.
The Prophet sent Ali to Khalid to bring the Khumus (of the booty) and . . . Ali had taken a bath (after a sexual act with a slave-girl from the Khumus).
அலியின் இந்த செயலுக்காக அவரை வெறுத்த ஒரு மனிதனுக்கு முஹம்மதுவின் பதில் என்ன?
அவர்கள் நான் கோபமடைந்து, காலிதிடம், 'இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.
இவ்வாறு கொள்ளையின் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அடிமைப் பெண்கள் உடலுறவு சொத்துக்களாக நடத்தப்படலாம் என்று முஹம்மது நம்பினார். அலி ஒரு முஸ்லீம் ஹீரோ. அவர் முஹம்மதுவின் முதல் மனைவி கதீஜாவிற்கு பிறந்த முஹம்மதுவின் மகள் பாத்திமாவின் கணவர். எனவே உலகத்திற்கே முன்மாதிரியான நபி தன்னுடைய மருமகன் ஒரு அடிமைப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதை எதற்காக கண்டிப்பார்? ஏனெனில் அடிமைப் பெண்கள் எல்லாம் ஒரு அருமையான செக்ஸ் விளையாட்டு தானே. அப்படித்தான் குர்ஆன் சொல்லுகிறது.
மேலும் புனித ஜிஹாதிகள் தாங்கள் பிடிக்கும் பெண் அடிமைகளிடம் விந்து சேர்வதை (coitus interruptus) தடுக்கமாட்டார்கள். ஒருவர் எதிர்பார்க்கும் காரணத்திற்காக அல்ல மாறாக எளிய நீதிக்காக.
இராணுவ முகாம்களில் இருக்கையில், மனைவிகளை விட்டுப் பிரிந்திருக்கையில், முஸ்லீம் ஜிகாதிகள் "அரபு கைதிகளிலிருந்த பெண்களை விரும்பினோம் விரதத்துவம் எங்களுக்கு கடினமாக இருந்தது நாங்கள் விந்து வெளியேற்றம் செய்ய விரும்பினோம்" என்று கூறினார்கள். அவர்கள் இதைப் பற்றி புனித நபியிடத்தில் கேட்டார்கள், அவர் இங்கு என்ன சொல்லவில்லை என்று கவனிப்பது மிக முக்கியமானதாகும்.
அவர் அவர்களை ஹராம் என்று கூறி எந்த விதமான செக்ஸ் செயலும் தவறு என்று தடைசெய்யவோ கடிந்துகொள்ளவோ இல்லை. மாறாக அவர் விதியைப் பற்றிய தன்னுடைய ஆழ்ந்த இறையியலில் மூழ்கிப்போனவராக:
பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2542
இப்னு முஹைரீஸ்(ரஹ்) அறிவித்தார்.
.... அதற்கு, 'நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமைநாள் வரை தவறேது மில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்" என்று பதிலளித்தார்கள்.
It is better for you not to do so [practice coitus interruptus]. There is no person that is destined to exist, but will come to existence, till the Day of Resurrection. (Bukhari; for parallel hadiths go hereand here)
இந்த பதிலிலிருந்து கிடைக்கும் விவரங்கள் என்னவென்றால், இதை விசாரிக்கும் முஸ்லீம்கள் விந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும் பதிலாக செக்ஸ் உடைமைகளாக இருக்கும் பெண்களிடம் எப்படியாவது நடந்துக்கொள்ளலாம், இது தான் முஹம்மதுவின் பதில். யார் பிறக்க வேண்டும் என்பதை விதி நிர்ணயிக்கும். மிகவும் நெறிகெட்ட இந்த செயலை தடுக்க வேண்டிய நேரத்தில் முஹம்மது இதை தடுக்கவில்லை.
எந்த இராணுவத்திலும் சில சிப்பாய்களிடம் இருக்கும் ஒரு தவறான காரியம், பெண்களை கற்பழிப்பதாகும். எல்லா இராணுவத்திலும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகள்(கிரிமினல்கள்) உள்ளனர். ஆனால், இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை தங்கள் புனித புத்தகத்திலும் வசனமாக இறக்கிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.
இஸ்லாம் கற்பழிப்பதை நியாயப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறது.
குர்ஆன் இந்த பாலியல் குற்றத்தை தெளிவான முறையில் : எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளக் கூடாது என்றுச் சொல்லி, நீக்காமலிருப்பது வருத்தத்திற்குரியது.
முடிவுரை:
உள்நாட்டு கலவரத்திற்கு முன் அமெரிக்க எஜமான்கள் தங்கள் அடிமைகளோடு பாலியல் குற்றங்கள் புரிந்ததார்களே (Civil War -1861-1865), அப்படியிருக்க இஸ்லாமைக் குற்றப்படுத்த இந்த கிறிஸ்தவர்களும், அமெரிக்கர்களும் யார் என்று கேட்கின்றனர் (உண்மையில் கிறிஸ்தவர்களும், அமெரிக்கர்களும் ஒருவரல்ல).
பதில்: அந்த இரண்டு சந்தர்ப்பங்களும் வெவ்வேறானவை. முதலாவது அமெரிக்காவை தனக்கு புனித வெளிப்பாடு கிடைத்தது என்று சொல்லி முஹம்மது உருவாக்கிய இஸ்லாமிய சமுதாயத்தோடு ஒப்பிடுவது தவறாகும். அதைவிடச் சிறந்தது, ஒரு மார்கத்தை தோற்றுவித்த ஒருவரோடு (இயேசுவோடு) மற்றொரு மார்க்கத்தை உருவாக்கியவரை (முஹம்மதுவோடு) ஒப்பிடுவது சரியானதாகும்.
இரண்டாவதாக புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு இடத்திலும் தேவன் ஆண்களுக்கு (கிறிஸ்தவனுக்கோ, அல்லது தனி மனிதனுக்கோ) - அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதியளிக்கவில்லை. இது இயேசுவின் ஊழியத்தின் நோக்கத்தையும், இயேசுவை பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலாக புரிந்து கொண்ட புதிய ஏற்பாட்டு ஆக்கியோன்களின் எழுத்துக்களையும் மீறுவதாக இருக்கும். ஒருவேளை அமெரிக்கர்கள் தவறுதலாக இந்தக் குற்றத்தை செய்திருப்பார்கள் என்றால் அவர்கள் தேவனுடைய சட்டத்தை பின்பற்றாதவர்களாவார்கள். ஆனால் குர்ஆன் இந்தக் காரியத்தை நியாயப்படுத்தி சட்டமாக்கியுள்ளது. இந்த புத்தகம் காபிரியேல் மூலமாக முஹம்மதுவிற்கு அல்லாஹ்விடத்திலிருந்து இறக்கிவைக்கப்பட்ட புனித புத்தகமாகவும் கூறப்படுகிறது. நன்றாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் ஒரு கொடிய நிர்ப்பந்தமான நிலையிலிருக்கும் (அடிமைகளாக இருக்கும்) பெண்களோடு செக்ஸ் வைப்பது தவறு என்று காண்பான்.
இஸ்லாமுக்கு இருக்கும் இந்த முக்கியமான பிரச்சனை, அமெரிக்க வரலாற்றைக் கேள்வி கேட்பதைவிட பெரிதானதாகும்.
பின்வரும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு பதிலளிக்கப்பட வேண்டும்:
இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆனும், நல்ல நபி என்று கருதும் முஹம்மதுவும், இஸ்லாமும் மனித சமுதாயத்தை ஒரு புதிய நூற்றாண்டிற்குள் சரியான முறையில் நடத்திச் சென்று வழி காட்ட முடியுமா?
இஸ்லாமுக்கு வெளியே இருந்து இந்த இஸ்லாமிய சட்டங்களை தகுந்த சான்றுகளோடு ஆராய்ந்து பார்க்கும் நமக்கு, "வாழ்நாளெல்லாம் இஸ்லாமுக்கே பக்தியாக இருக்கவேண்டும்" என்ற கோட்பாடுகளினால் குருடர்களாக்கப்படாத நமக்கு, இந்த வலிமையான கேள்விக்கு பதில் தெளிவாக உள்ளது. அதாவது, இந்த புதிய நூற்றாண்டில் கண்டிப்பாக இஸ்லாமிய சட்டங்கள் மனித இனத்தை வழிநடத்துவதற்கு தகுதியுடையவைகள் அல்ல என்பதாகும்.
எனவே தெளிவாக சிந்திக்கும் எல்லா முஸ்லீம்களும் மார்க்கதின் மூலம் அடக்குபவர்களை தூக்கியெறிந்து விட்டு முதலாம் உலகப்போருக்கு பின் துருக்கியில் ஏற்பட்டது போல ஒரு சுய புரட்சியை உண்டாக்க வேண்டும். ஒருவேளை ஈரானிலே இது நடக்கலாம், ஈராக் தங்கள் ஷரியா சட்டத்தை நீக்கிவிட்டு மக்களாட்சிக்கு நேராக தங்கள் அடியை எடுத்து வைக்கலாம். அவர்கள் இந்த குர்ஆனையும் முஹம்மதுவின் முன் உதாரணங்களையும் விட்டு வெளியேற வேண்டும்.
இப்படிப்பட்ட புரட்சி ஏற்படும் வரைக்கும், மார்க்கத் தலைவர்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ள பல வசனங்களை துறக்கும் வரையிலும், இந்த சமயத்திற்கு வெளியே இருக்கும் நாம் முஹம்மதுவின் மார்க்கத்தை அவநம்பிக்கை கொள்ள அனுமதிக்கப்படுகிறோம்.
இந்த மார்க்கத்திற்கு மாற நினைக்கும் பெண்கள் கொஞ்சம் நின்று ஒன்றுக்கு இரண்டு தடவை நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
துணைச் சேர்க்கைகள்:
1. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES
இந்த கட்டுரையானது யுத்தத்தில் பிடிக்கப்படும் பெண்களோடு செக்ஸ் வைப்பது பற்றிய குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்களை குறிப்பிடுகிறது. மேலும் நவீன இஸ்லாமிய அறிஞர்கள் இந்த தலைப்புகளில் கூறுவதைப் பற்றியும் ஆராய்கிறது. இவர்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கிறார்கள். இக்கட்டுரையின் கடைசியில் ஒரு பிறசேர்க்கையில் பழைய ஏற்பாடும் கூட இச்செயலுக்கு ஆதரவளித்திருக்கிறது என்ற ஒரு இஸ்லாமியரின் கேள்விக்கு இதன் ஆசிரியர் பதிலளிக்கிறார்.
2. Women in Islam - part 3
இந்த அடுத்த கட்டுரை, இஸ்லாமிய ஆண்களுக்கு அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ள இஸ்லாம் அனுமதி அளிக்கிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்கிறது (சில பத்திகளைத் தாண்டி படிக்கவும்). இரண்டு பழைய ஏற்பாட்டு நிபுனர்கள், பழைய ஏற்பாட்டில் யுத்தத்திற்கு பிறகு திருமணம் எப்படி செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்களைப் பற்றியும் இந்த கட்டுரை குறிப்பிடுகிறது.
3. Adultery: Do it! Do it! Do it!
இந்த கட்டுரை, முஹம்மது தன் இராணுவ வீரர்களை உற்சாகமூட்டி போரில் பிடிபட்ட பெண்களோடு "செய்யுங்கள் - DO IT" என்றுச் சொன்ன விவரம் பற்றி ஆய்வு செய்கிறது.
4. இஸ்லாமும் விபச்சாரமும் முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
முஹம்மதுவிற்கு விசேஷித்த விதமாக கொடுக்கப்பட்ட சிறப்பு திருமண சலுகைகள் பற்றிய ஒரு சிறிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.
5. Slaves of Muhammad - Prophet of Freedom and Equality!
முஹம்மதுவிற்கு இருந்த சொந்த அடிமைகளைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரை விவரிக்கிறது.
6. The Place of Women in Pure Islam
இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன என்பதைப் பற்றி அனேக குர்ஆன் வசனங்கள் மற்றும் அனேக ஹதீஸ்களைக் கொண்டு இக்கட்டுரை விவரிக்கிறது. இந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை படித்த பிறகு ஒருவர் என்ன முடிவிற்கு வருவார் என்று கேட்டால் "இஸ்லாம் பெண்களை கவுரப்படுத்தவில்லை" என்ற முடிவிற்கு வருவார்.
7. SLAVERY IN ISLAM
பொதுவாக அடிமைத்தனம் பற்றிய விவரங்களோடு, அடிமை வியாபாரத்தை இஸ்லாமியர்கள் எப்படி செய்தார்கள் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இதே நிலை தற்காலத்திலும் எப்படி இஸ்லாமிய நாடுகள் பின்பற்றப்படுகிறது என்பதையும் விளக்குகிறது.
8. Christianity, Islam and Slavery
இந்த சிறிய கட்டுரை, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் அடிமைத் தனம் பற்றியுள்ள வேறுபாடுகளை விளக்குகிறது.
9. Chapter 5: Slavery in Islam
இஸ்லாமில் அடிமைத் தனம் பற்றிய ஒரு சுருக்கமான கட்டுரை.
10. Women in Christianity and Islam
இந்த பக்கத்தில் "இஸ்லாமில் மற்றும் கிறிஸ்தவத்தில் பெண்கள்" என்ற தலைப்பில் அனேக கட்டுரைகளின் தொடுப்புக்கள் உள்ளன.
11. Index - Slavery
இந்த பக்கத்தில், இஸ்லாமில் அடிமைத் தனம் பற்றிய வசனங்கள், பின் இணைப்புக்கள் அடங்கிய தொடுப்புக்கள், கட்டுரைகள் உள்ளன.
Copyright by James Malcolm Arlandson.
ஆங்கில மூலம்: Slave-girls as sexual property in the Quran
ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்.
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
October 21, 2010
சிர்பில் சாட்சி
சிர்பில் சாட்சி
என்னுடைய பாட்டி, புராதன நம்பிக்கையை உடைய கிறிஸ்தவராய் இருந்தார். அநேக ஆண்டுகளுக்கு முன் அவர் துருக்கி நாட்டிற்கு வந்தப் போது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவராய் மாறி, இஸ்தான்புல் பட்டணத்தில் இருக்கும் ஒரு சிறிய புரட்டஸ்டண்டு சபைக்கு செல்ல ஆரம்பித்தார். நான் வாலிப வயதை அடையும் வரை என்னுடைய தாயார் விசுவாசியாக இருந்ததில்லை. என்னுடைய தந்தை துருக்கியின் பல்கேரியை சேர்ந்த ஒரு துருக்கி இஸ்லாமியர்.
அநேக ஆண்டுகளாய் வேதாகமத்தைப் பற்றி எனக்கு தெரியாதிருந்தது. ஆனால் அவ்வப்போது என்னுடைய பாட்டியோடுகூட இணைந்து நானும் ஆலயத்திற்கு செல்வேன், அப்போது நான் இவைகளை புரிந்துக் கொள்ளவில்லை. எங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை எப்போதுமே எனது தந்தை பரிகாசம் செய்துக்கொண்டிருந்ததால், இந்த விசுவாசத்தை நான் அவ்வளவு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதவில்லை. எனக்கு 17 வயதாகும் போது நான் மனரீதியான பிரச்சனைகளினாலே மிகவும் பாதிக்கப்பட்டேன். என்னுடைய குடும்பத்தார் என்னை அநேக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். ஆனாலும், என்னுடைய பிரச்சனைகளுக்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த பிரச்சனையின் மூலமாக தேவன் என் மனதோடு இடைப்பட ஆரம்பித்தார்.
ஒருநாள் நான் நம்பிக்கையற்றவளாய் என் வீட்டிலே உட்கார்ந்திருந்தேன். அப்போது, என்னுடைய சபையை சேர்ந்த சில பெண்கள் என்னை சந்திக்கும்படியாக வந்திருந்தனர். அவர்கள் இயேசுவைக் குறித்து பேச ஆரம்பித்தனர். நான் இயேசுவைப் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும், இந்த முறை என்னுடைய இருதயத்தின் ஆழத்திலே எதையோ உணர்ந்தவளாக காணப்பட்டேன்.
இயேசுவை எனது ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளுவதிலே தடுமாற்றமாக இருந்தது. ஏனெனில் என்னுடைய வாழ்வை முற்றிலுமாக இன்னொருவர் கையிலே கொடுக்க பயமாக இருந்தது. அவர் என்னை என் இஷ்டப்பிரகாரம் வாழ விடமாட்டார் என்று கருதினேன். நான் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும், சுதந்திரமான வாழ்க்கையை நடத்துவதில் பிரியப்படுவேன் (சுயமாக வாழ நினைப்பேன்).
"நான் ஒருபோதும் விட்டுதர மாட்டேன், எனக்கு தெரியாத ஒருவராலே நான் வழி நடத்த பட மாட்டேன்? என்று அன்றைய தினம் முதல் என்னுடைய மனதிலே போராட்டம் நடந்துக்கொண்டே இருந்தது. நம்முடைய இரட்சகருக்கு விரோதமாக இவைகளை முணுமுணுத்தேன். ஆனால், ஒருநாள் அவருக்கு விரோதமாய் செயலாற்றிக்கொண்டிருந்த என்னுடைய முழு பெலத்தையும் இழந்தவளாய் "ஆம், நீரே என் ஆண்டவர், என்னுடைய வாழ்வை உமக்கு ஒப்புவிக்கிறேன்" என்று மிகுந்த சத்தத்தோடே கெஞ்சி, கதறினேன்.
இது ஒரு அற்புதமே. அந்நாள் முதற்கொண்டு என்னுடைய மனரீதியான பிரச்சனைகள் வழுவிழக்க ஆரம்பித்தன. அதன் பின்னர், என்னுடைய குடும்பத்தாருக்கும், தாய்க்கும், என்னுடைய சொந்தக்காரர்களுக்கும் இயேசுவைக் குறித்து சொல்ல ஆரம்பித்தேன், எனக்கு பிறகு அவர்களும் விசுவாசிகளாய் மாறினர். தேவனுடைய கரம் என் குடும்பத்தின் மேல் இருப்பதை தெரிந்துக்கொண்டேன். இதன் மத்தியிலும், ஒருசில பிரச்சனைகள் இருக்கதான் செய்தது. எங்களுக்கு நடந்த காரியங்கள் எனது தகப்பனாருக்கு பிடிக்கவில்லை. எங்கள் விசுவாசத்தை யாரிடமும் பகிரக் கூடாது என்ற தடையை விதித்து, எங்களை நெருக்க (ஒடுக்க) தொடங்கினார். சில காலம் என்னுடைய அண்டை வீட்டாருக்கும், சில நண்பர்களுக்கும் நாங்கள் கிறிஸ்தவர்களாக மாறினது தெரியாதிருப்பது, எங்களுடைய ஆவிக்குறிய வாழ்க்கைக்கு அவ்வளவு பிரயோஜனமானதாக காணப்படவில்லை. அவ்வளவு சுலபமாக சபைக்கு போகமுடியாது. அதனால், கிறிஸ்தவ கணவருக்காக நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். என்னுடைய தாய்க்கும், உறவினருக்கும் என்னுடைய ஜெபத்தின் மீது நம்பிக்கை இல்லாதிருந்தது.
என்னுடைய வாழ்க்கையிலே என் கணவரை சந்தித்தது எனக்கு இரண்டாம் பெரிய அற்புதமாக காணப்பட்டது. அவர் துருக்கியை சேர்ந்த இஸ்லாமிய பின்னனியை சேர்ந்தவராகவும், துருக்கியிலுள்ள ஒரு புராடஸ்டண்டு சபையின் போதகராகவும் இருந்தார். கர்த்தர் எங்களுடைய திருமணத்தின் மூலம் அநேக மாற்றங்களை எனது குடும்பத்தில் கொண்டு வந்தார். இதில் மிகவும் முக்கியமான நிகழ்வு என்னவென்றால் என்னுடைய தகப்பனார் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக ஆலயத்திற்கு வந்துக்கொண்டு இருக்கிறார். நான் மாறிவிட்டேன் என்று அவர் சொல்லாவிட்டாலும், ஆராதனையில் அவர் காட்டும் அக்கறையையின் மூலம், தேவன் அவர் இருதயத்தை எப்படியாக மாற்றிவிட்டார் என்பதை காண முடியும்.
சிர்பில் சாட்சி
ஆங்கில மூலம்: Sirpil's Story
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
October 1, 2010
ஆயிஷாவின் சாட்சி
நான் ஒரு இஸ்லாமியராய், இஸ்லாமிய நாட்டிலே வளர்க்கப்பட்டதால் என்னுடைய மதம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என்னுடைய இளநிலை படிப்பை முடித்த பிறகு, மேற் கொண்டு பல்கலைகழகத்தில் படிக்க அமெரிக்கா வந்தேன். முதல் வருட மாணவர்கள், முதல் வருடத்தோடு தொடர்புடைய ஒரேவிதமான பாடத்திட்டங்களை தெரிந்துக்கொண்டனர். என்னுடன் பயிலும் அமெரிக்க மாணவர் ஒருவரோடு நட்புறவு கொண்டேன். நாங்கள் நலமான நண்பர்களாய் இருந்தோம். செமஸ்டரின் தொடக்கத்தில் வந்த என்னுடைய பிறந்த நாள் வருவதை கண்டுபிடித்த என் நண்பர், எனக்கு ஒரு சின்ன புதிய ஏற்பாட்டு வேதாகமத்தை பரிசாக கொடுத்தார். முதலில் சிறிது தயங்கினேன்/பின்வாங்கினேன், ஒரு வாரமாக அந்த புத்தகத்தை நான் தொடவில்லை. அந்த புத்தகத்தை தொட பயமாக இருந்தது. ஆனாலும் நான் ஒரு அசைக்ககூடாத முஸ்லிமாக இருந்ததால், இந்த புத்தகத்தை படிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
மாற்கு எழுதின சுவிசேஷம் சின்ன புத்தமாக இருப்பதால் அதை படிக்குமாறு என்னுடைய நண்பர் சிபாரிசு செய்தார். அதனால் மாற்கு சுவிசேஷத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து படிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் வாழ்வைப்பற்றினதான அநேக காரியங்கள் என்னை ஒரு கணம் யோசிக்க வைத்தாலும், இயேசு கிறிஸ்து பேசின இந்த வார்த்தை எனக்கு மிகவும் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்துயது:
மத்தேயு 23: 25-26
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு".
இதேவிதமான சிந்தனையில் என் பெற்றோரால் நான் வளர்க்கப்பட்டது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உள்ளலவில் பெருமையுள்ளவர்களாயும், சுய நலமுள்ளவர்களாயும் வாழ்ந்துக்கொண்டு, வெளிப்புறமாக நல்லவர்கள் போல நடிக்கும் மாய்மாலகாரர்களை எனது பெற்றோர் வெறுத்தனர். உண்மையான இஸ்லாம் என்பது, உள்ளத்தில் இருக்கவேண்டியதே தவிர வெளிப்புறமான சமயம் சார்ந்த சடங்குகள் அல்ல என்பதை எனது பெற்றோர் கற்றுத் தந்தனர். இயேசு கிறிஸ்துவும் என்னுடைய பெற்றோர் கூறிய அதே கருத்துக்களை கூறியிருப்பதால், என் வாழ்க்கையின் மீது அவருக்கு அதிகாரம் / அக்கரை இருப்பதையும், அவர் கூறியது உண்மை என்பதையும் அடையாளங்கண்டு கொண்டேன். ஒரு மாதத்திற்கு பிறகு இயேசுகிறிஸ்துவால் உண்டாகும் இரட்சிப்பிற்காக விண்ணப்பம் பண்ணினேன்.
நான் கிறிஸ்தவளாக மாறிவிட்டேன் என்பதை எனது குடும்பத்தினரிடம் சொன்னப்போது என்மீது கடும்கோபம் கொண்டனர். என்னுடைய புதிய நம்பிக்கையில் அவர்களின் சந்தோஷமின்மையை பார்த்தபோது, அவை என்னால் சகித்துக்கொள்ள முடியாத மிகப்பெரிய வேதனையாய் இருந்தது. என்னுடைய குடும்பத்தினருடன் நல்ல உறவு எனக்கு இருந்தது, முக்கியமாக என்னுடைய அம்மாவை நான் மிகவும் நேசித்தேன். அநேக நாட்கள் என் அம்மாவின் உறவை புதுபித்துக்கொள்ள(மறுபடியும் பெற) இந்த கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிடலாமா என்று கூட தோன்றியது. ஆனால், இயேசுவைக் குறித்ததான எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. வேதத்தின் மூலம் இயேசுவை பற்றிய உண்மையை நான் அறிந்துக்கொண்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும்.
ஆயிஷா.
ஆங்கில மூலம்: Aishah's Story
இவர்கள் ஏன் கிறிஸ்தவர்களானார்கள்