அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 7, 2010

கிறிஸ்தவராக மாறியிருக்கும் இலங்கைச் சிறுமிக்கு வழக்கில் வெற்றி!

SELECTED


 

 இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து மாறி கிறிஸ்தவராக வாழ்ந்து வரும் இலங்கைச் சிறுமி


 ரிப்கா பாரியை பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாது என்று அமெரிக்க நாட்டு சிறுவர் நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

  

  

கிறிஸ்தவ மார்க்கத்துக்கு மாறி இருக்கின்றமையால் பெற்றோரால் கொல்லப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளார் அமெரிக்காவில் வாழும் இலங்கையரான ரிப்காபரி .கிறிஸ்தவராக கடந்த வருடம் மாறிய பின் பெற்றோரிடம் இருந்து பிரிந்து சென்று கிறிஸ்தவ பாதிரிமாருடன் வாழ்ந்து வருகின்றார்.

 

 

  

 இவர் ஒரு புற்று நோயாளி. ஆனால் கிறிஸ்தவ வழிபாடு நோயைக் குணப்படுத்து விடும் என்று பரிபூரணமாக நம்புகின்றார். இதனால் நோய்க்கு எந்தவொரு சிகிச்சையுமே எடுப்பதில்லை. இவருக்கு அடுத்த வாரம்தான் 18 வயது ஆகின்றது. இந்நிலையில் இன்னமும் 18 வயது பூர்த்தியாகாத மகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பெற்றோர் அமெரிக்காவின் சிறுவர் நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

 

 

 ரிப்காக்கு புற்றுநோய்ச் சிகிச்சையை கட்டாயம் வழங்க வேண்டி இருக்கின்றமையால் பெற்றோரிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் என்று அந்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

 இச்சிகிச்சையை எடுக்காவிட்டால் மகளின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பெற்றோருடன் சென்றால் பெற்றோரால் கொல்லப்பட்டு விடுவார் என்றும் கிறிஸ்தவ மதம் மீதான நம்பிக்கை நோயைக் குணப்படுத்தி விடும் என்றும் ரிப்கா நீதிமன்றுக்கு எழுத்துமூலம் விளக்கம் கொடுத்துள்ளார். 18 வயதாகி விட்டால் ரிப்கா சுயமாக முடிவுகளை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில் சிறுமியின் நலன் கருதி அவரை பெற்றோருடன் சேர்த்து விட முடியாது என்றும், இலங்கைக்கு நாடு கடத்த முடியாது என்றும் நீதிபதி அறிவித்துள்ளார். இத்தீர்ப்பின் மூலம் அமெரிக்காவில் பிரஜாவுரிமை பெறும் வாய்ப்பு இச்சிறுமிக்கு 18 வயதை அடைந்த பின் உண்டு என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

 

http://thamilislam.blogspot.com/2010/08/blog-post_3766.html

0 comments: