பீஜே அவர்களுக்கு பதில் - 2:
இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை
நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1
முன்னுரை: பீஜே அவர்களின் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற கட்டுரைக்கு ஈஸா குர்ஆன் அளித்த முதல் பதிலை இங்கு படிக்கலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மேலதிக விவரங்களோடு இந்த இரண்டாம் பாகம் வெளியிடப்படுகிறது.
பீஜே அவர்கள் எழுதியவைகள்
இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை
கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.
அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.
மாறாக ஒரே கடவுளைத் தான் வணங்க வேண்டும் என்றே அவர் போதித்தார்.
மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/
பீஜே அவர்களின் கூற்றுப்படி, இயேசு தன் இறைத் தன்மையை வெளிக்கட்டவில்லை, அல்லது இஸ்லாமியர்கள் நம்புகின்ற படி அவர் தன்னை ஒரு தீர்க்கதரியாக மட்டுமே வெளிக்காட்டினார் என்பதாகும். இதனை பீஜே அவர்கள் குர்ஆனை மட்டுமே படித்து சொல்லியிருந்தால் விட்டுவிடலாம், ஆனால், பைபிளை தங்களுக்கு புரியும் மொழியில் படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, தனக்கு பைபிள் பற்றி எல்லாம் தெரியும் என்பது போல காட்டிக்கொண்டு அவர் அறிவுரை கூறியிருப்பதால், உண்மையாகவே இயேசு பைபிளில் என்ன கூறியுள்ளார் என்பதை விளக்கவேண்டும். அப்போது தான், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் கருத்தைத் திணிக்க எந்த அளவிற்கு விளக்கங்கள் கொடுக்கிறார்கள் என்பது மக்களுக்கு விளங்கும்.
நான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஒரு விவரத்தை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன், அது என்னவென்றால், "நீங்கள் இயேசுவைப் பற்றி ஏதாவது உங்கள் சொந்த இஸ்லாமிய கருத்துக்களைச் சொல்லும் போது, அதற்கு ஆதாரமாக குர்ஆனை மேற்க்கொள் காட்டினால், ஓரளவிற்கு தப்பித்துக் கொள்ள முடியும், ஆனால், பைபிளின் படி இயேசுவின் தன்மை இது தான் என்றுச் சொல்லி உங்கள் இஸ்லாமிய கோட்பாட்டை திணிக்க முற்படுவீர்களானால், நிச்சயமாக தோற்றுப்போவீர்கள்".
இயேசு தன் இறைத் தன்மையைக் குறித்து சொல்லிய ஒரு சில வசனங்களை மேற்க்கோள் காட்டி, பீஜே அவர்கள் கொடுத்த விளக்கம் அல்லது செய்தி தவறானது என்பதை விளக்குகிறேன், தேவைப்பட்டால் பீஜே அவர்கள் இந்த கட்டுரைக்கு பதில் அளிப்பாரானால் இன்னும் அதிக விவரங்களோடு பதில் தர முயற்சி எடுக்கப்படும்.
1) உலகம் உண்டாவதற்கு முன்பாக இயேசு:
உலகம் உண்டாவதற்கு முன்பாக தான் இருந்ததாகவும், தனக்கு மகிமை உண்டாகி இருந்ததாகவும் இயேசு இவ்வசனங்களில் கூறுகிறார். பீஜே அவர்களே, இயேசு தனக்கு இறைத்தன்மை இல்லை என்றுச் சொன்னதாக கூறுகிறீர்களே, இந்த வசனங்களுக்கு என்ன பொருளைத் தர விரும்புகிறீர்கள்?
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். (யோவான் 17:5)
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். (யோவான் 17:24)
And now, Father, glorify me in your presence with the glory I had with you before the world began. (John 17:5)
"Father, I want those you have given me to be with me where I am, and to see my glory, the glory you have given me because you loved me before the creation of the world. (John 17:24)
2) பிதாவை போல, இயேசுவும் உயிர்ப்பிக்கிறார்:
பிதா எப்படி மனிதர்களை உயிர்ப்பிக்கிறாரோ அதே போல தானும் தமக்கு சித்தமானவர்களை உயிரோடு எழுப்புவேன் என்று இயேசு சொல்கிறார். இறைவன் செய்யும் செயலை ஒருவர் குறிப்பிட்டு, "அதே போல" நானும் செய்வேன் என்றுச் சொல்லமுடியுமா? அப்படி ஒருவர் சொல்வாரானால், அவர் நிச்சயமாக இறைவனாகத் தான் இருக்கமுடியும்.
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். (யோவான் 5:21)
For just as the Father raises the dead and gives them life, even so the Son gives life to whom he is pleased to give it. (John 5:21)
3) பிதாவை கணம் பண்ணுவது போல, இயேசுவையும் கணம் பண்ணவேண்டும்:
பிதாவிற்கு எப்படி கனத்தை மனிதர்கள் தருகிறார்களோ, அதே போல, குமாரனுக்கும் தரவேண்டுமாம். இறைவனுக்கு சமமாக இல்லாதவர் எப்படி இதனைச் சொல்லமுடியும்?
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5:22)
Moreover, the Father judges no one, but has entrusted all judgment to the Son, that all may honor the Son just as they honor the Father. He who does not honor the Son does not honor the Father, who sent him. (John 5:22-23)
4) இறைவனைத் தவிர யார் மனிதர்களின் பாவங்களை மன்னிக்கமுடியும்?
உலகத்தில் மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று இயேசு கூறுகிறார். இதனால், யூதர்கள் கோபம் கொண்டனர், இவர் தேவ தூஷணம் சொல்கிறாரே, இறைவன் அல்லவா பாவங்களை மன்னிக்கமுடியும் என்று கூறினர்
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (மாற்கு 2:5-11)
When Jesus saw their faith, he said to the paralytic, "Son, your sins are forgiven." Now some teachers of the law were sitting there, thinking to themselves, "Why does this fellow talk like that? He's blaspheming! Who can forgive sins but God alone?". Immediately Jesus knew in his spirit that this was what they were thinking in their hearts, and he said to them, "Why are you thinking these things? Which is easier: to say to the paralytic, 'Your sins are forgiven,' or to say, 'Get up, take your mat and walk'? But that you may know that the Son of Man has authority on earth to forgive sins . . . ." He said to the paralytic, "I tell you, get up, take your mat and go home." (Mark 2:5-11)
5) ஏன் யூதர்கள் கல்லெறிய முற்பட்டார்கள், இயேசு தன்னை நபி என்றுச் சொன்னதாலா?
கீழே தரப்பட்ட வசனங்களில் இயேசு தன் ஆடுகளுக்கு "நித்திய ஜீவனை" "அழிவில்லாத வாழ்வை" தருவதாக வாக்கு செய்கிறார். மனிதனுக்கு நித்திய வாழ்வை யார் தரமுடியும், இறைவன் தான் தரமுடியும், அதனை இயேசு கொடுக்கிறேன், என்றுச் சொன்னதால், யூதர்கள் கல்லெறிய முற்பட்டார்கள். பிதாவும் தானும் ஒன்றாக இருக்கிறோம் என்றுச் சொன்ன வார்த்தைகளின் பொருள் யூதர்களுக்கு புரிந்ததினாலே, "நீ தேவதூஷணம் சொன்னாய், உன்னை இறைவனுக்கு சமமாக எண்ணுகின்றாய்" என்று கல்லெறிய வந்தார்கள்.
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:27-33)
My sheep listen to my voice; I know them, and they follow me. I give them eternal life, and they shall never perish; no one can snatch them out of my hand. My Father, who has given them to me, is greater than all; no one can snatch them out of my Father's hand. I and the Father are one." Again the Jews picked up stones to stone him, but Jesus said to them, "I have shown you many great miracles from the Father. For which of these do you stone me?" "We are not stoning you for any of these," replied the Jews, "but for blasphemy, because you, a mere man, claim to be God.". (John 10:27-33)
நான் இறைவனின் தீர்க்கதரிசி மட்டும் தான் என்றுச் சொல்லியிருந்தால், யூதர்கள் அவரை கொல்ல முயற்சி எடுத்து இருக்கமாட்டார்கள். யூதர்களுக்கு புரிந்த விஷயம் பீஜே அவர்களுக்கு புரியவில்லை.
6) தன்னை தொழுதுக் கொள்பவர்களை இயேசு தடை செய்யவில்லை: இயேசு தன்னை தொழுதுக்கொண்டவர்களைப் பார்த்து அப்படிச்செய்யாதீர்கள், நான் வெறும் மனிதன் தான், அல்லது தீர்க்கதரிசி மட்டும் தான், இதனால், என்னை தொழுதுக்கொள்ளவேண்டாம் என்றுச் சொல்லவில்லை.
அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 14:33)
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 28:9)
உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். (யோவான் 9:38)
Then those who were in the boat worshiped him, saying, "Truly you are the Son of God." (Matthew 14:33)
Suddenly Jesus met them. "Greetings," he said. They came to him, clasped his feet and worshiped him (Matthew 28:9)
Then the man said, "Lord, I believe," and he worshiped him (John 9:38)
மேலே கண்ட சில வசனங்களிலிருந்து நாம் அறிவது:
1) உலகம் உண்டாவதற்கு முன்பாக தனக்கு மகிமை இருந்தது என்று இயேசு கூறினார்.
2) உலகம் உண்டாவதற்கு முன்பாக தேவன் அவர் மீது அன்பாக இருந்ததாக கூறினார்.
3) பிதாவைப் போல தானும் மனிதர்களை உயிரோடு எழுப்புகிறேன் என்று கூறினார்.
4) பிதாவை கனம் பண்ணுவது போல, தன்னையும் கனம் செய்யவேண்டும் என்பதற்காக, மனிதர்களை அவரே நியாயந்தீர்க்கப்போவதாக கூறினார்.
5) மனிதர்களின் பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் உண்டென்றுச் சொன்னார்.
6) தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு அழிவில்லாத வாழ்வைத் தருவதாக இயேசு கூறினார்.
7) தன்னை தொழுதுக்கொள்கிறவர்களை அவர் தடைச் செய்யவில்லை.
முடிவுரை:
பீஜே அவர்களே, நீங்கள் சொன்னது போல, தனக்கு தெய்வீகத் தன்மை இல்லை என்று இயேசு சொன்னதாக இவ்வசனங்கள் சொல்லவில்லையே! அப்படியானால்,
"நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்"
என்று நீங்கள் சொன்ன வார்த்தைகளை எந்த புத்தகத்தை படித்து கிறிஸ்தவர்களுக்கு அறிவுரையாக கொடுத்தீரகள்?
இந்த கட்டுரையில் வெறும் ஒரு சில வசனங்களை மட்டுமே நான் மேற்க்கோள் காட்டினேன், அதிகமாக விளக்கமும் தரவில்லை, உங்களுடையை "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு நான் பதில் கட்டுரைகள் எழுதும் போது இன்னும் விவரமாக எழுத கர்த்தருக்கு சித்தமானால் முயற்சி எடுப்பேன்.
என்னவோ, கிறிஸ்தவர்கள் தங்களுக்கு புரியாத அரபி மொழியில் பைபிளை படிக்கின்ற மாதிரியும், நீங்கள் தான் பைபிளை அரபியில் படித்து, கரைத்துக்குடித்து முழுவதுமாக புரிந்துக்கொண்டதாக காட்டிக்கொண்டு, "இயேசு உலகில் இருக்கும் போது எதைச் சொன்னாரோ, அதனை கிறிஸ்தவர்களே நீங்கள் பின்பற்றவேண்டும்" என்று அறிவுரைச் சொல்கின்றீர்கள்.
அப்போஸ்தலர் பவுல் பற்றி நீங்கள் எழுதிய அடுத்த விமர்சனத்திற்கு பதிலைத் தரவேண்டும் என்பதற்காக, இந்த சிறிய கட்டுரையை இதோடு முடித்துக்கொள்கிறேன்.
ஈஸா குர்ஆன் உமர்
1 comments:
"Father, I want those you have given me to be with me where I am, and to see my glory, the glory you have given me because you loved me before the creation of the world. (John 17:24)
பிதா எப்படி மனிதர்களை உயிர்ப்பிக்கிறாரோ அதே போல தானும் தமக்கு சித்தமானவர்களை உயிரோடு எழுப்புவேன் என்று இயேசு சொல்கிறார். இறைவன் செய்யும் செயலை ஒருவர் குறிப்பிட்டு, "அதே போல" நானும் செய்வேன் என்றுச் சொல்லமுடியுமா? அப்படி ஒருவர் சொல்வாரானால், அவர் நிச்சயமாக இறைவனாகத் தான் இருக்கமுடியும்.
did he say father or god? he said father if my father can do it so i can do it to... :)
Post a Comment