அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 21, 2009

இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு

 
திமிட்ரியஸ் & ஷாம் ஷமான்
 
 

இறைவனின் பரிசுத்த வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் "மற்றவர்களின் மனைவிகள் மீது விருப்பம் கொள்வதை" கண்டிக்கிறது.

 
 
பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (யாத்திராகமம் 20:17)
 
 
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (உபாகமம் 5:21) 
 
 
இன்னும் மற்றவனின் மனைவி மீது மோகம் கொள்வபவன் "விபச்சாரம்" என்ற பாவத்தை செய்பவனாக கருதப்படுவான் என்று பைபிள் சொல்கிறது.
 
 
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28) 
 
 
முஹம்மதுவிற்கு மட்டும் தனிப்பட்ட சலுகைகளை அல்லாஹ் கொடுத்துள்ளார், இது வேறு யாருக்கும் தரப்படவில்லை என்று குர்ஆன் சொல்கிறது.
 
 
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். (குர்ஆன் 33:50) 
 
 
இன்னும், ஜையத் தன் மனைவியை விவாகரத்து செய்த பின்னர், அல்லாஹ் அந்தப் பெண்ணை முஹம்மதுவிற்கு திருமணம் செய்வித்ததாக குர்ஆன் கூறுகிறது.
 
 
 
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (குர்ஆன் 33:37-38) 
 
 
இஸ்லாமிய ஆதார நூல்களின் படி, இந்த ஜையத் என்பவர் "ஜையத் இபின் ஹரிதா" என்பவராவார். இவர் முஹம்மதுவின் முதல் மனைவியாகிய கதிஜாவின் முன்னால் அடிமையாவார். பிறகு இவரை தன் வளர்ப்பு மகனாக முஹம்மது தத்து எடுத்துக்கொண்டார். இஸ்லாமிய நூல்களில் சொல்லியிருக்கிற படி, ஒரு முறை முஹம்மது ஜையத்தை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்ற போது, ஜையத்தின் மனைவியாகிய ஜையத் பி. ஜேஷ் என்பவரை திரையில்லாமல் காண்டுவிட்டார் மற்றும் அவரின் அழகில் மயங்கிவிட்டார். முஹம்மது தன் அழகை புகழ்வதை ஜைனப் கேள்விப்பட்டார் அதனை தன் கணவருக்கும் தெரிவித்தார். இந்த செயல் ஜையத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது, இதனால், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார், இதன் மூலம் முஹம்மவது தன் மனைவியை திருமணம் செய்யமுடியும் என்று கருதினார். இந்த தலைப்பு பற்றிய விவரங்களை படிக்க இந்த கட்டுரையை சொடுக்கவும்.

 


 
 
சிறந்த இஸ்லாமிய விரிவுரையாளர்களில் ஒருவராக கருதப்படும், "அல் குர்துபி (al-Qurtubi)" என்பவர், முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுத்த "சலுகைகளை" பட்டியலிடுகிறார். இஸ்லாமிய விரிவுரையாளர் அல் குர்துபி அவர்கள் சூரா 33:50க்கு கொடுத்த விரிவுரையை கீழே காணலாம். (எழுத்துக்களில் தடிமனம் (bold), மற்றும் அடிக்கோடு (underline) நம்முடையது)

 
 
…அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை)…
 
 
 
இறைத்தூதருக்கு அல்லாஹ் அனுமதித்த 16 சலுகைகள் அல்லது தனிப்பட்ட கட்டளைகள் கீழ் கண்ட விதமாக உள்ளது.
 
 
 
 
1) போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் நேர்மையாக இருத்தல்

 
 
2) போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கின் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

 
 
3) அல் விசல் - Al Wisal (திமிட்ரியஸ்: இது நோம்பை அல்லது உணவு உண்ணாமல் இருப்பதைக் குறிக்கும்)

 
 
4) நான்கு மனைவிகளை விட அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்

 
 
5) தன்னை முஹம்மதுவிற்கு அற்பணித்தேன் என்று வாய்வழியாக அறிக்கை செய்தபெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுதல், அவளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் ("Yas-tan-kih").

 
 
6) ஒரு பெண்ணின் பாதுகாப்பாளரின் அனுமதியின்றி, அவரது முன்னிலையில் அல்லாமலும் அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள நபிக்கு அனுமதியுண்டு ("Yas-tan-kih")

 
 
7) மஹர் கொடுக்காமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை ("Yas-tan-kih").

 
 
8) மார்க்க சுத்திகரிப்பு நாட்களிலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, உடலுறவில் ஈடுபட அனுமதியுண்டு.

 
 
9) தான் செய்த சத்தியத்தை முறித்துக்கொண்டு தன் மனைவிகளை மறுபடியும் சேர்த்துக்கொள்ள அனுமதியுண்டு.

 
 
10) முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக,அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யவேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், "இதைத் தான் இரண்டு பரிசுத்த மசூதிகளின் தாசரும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்".

 
 
11) இறைத்தூதர் போரில் பிடிப்பட்டிருந்த ஷபியாவை விடுதலையாக்கினார், இந்த விடுதலையானது, ஷபியாவின் மஹராக கருதினார்.

 
 
12) மார்க்க சுத்திகரிப்பு இல்லாமல் மக்காவில் நுழைய அனுமதியுண்டு.

 
 
13) மக்காவிலும் போர் புரிய அனுமதியுண்டு.

 
 
14) அவரின் சொத்துக்களை யாரும் சுவிகாரம் பெறமுடியாது. அதாவது ஒரு மனிதன் வியாதியின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, அவரது அனைத்து சொத்துக்களும் எடுத்துக்கொள்ளப்படும், அவருக்கு மூன்றில் ஒரு பாகம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைத்தூதருக்கு இப்படியில்லாமல், அவரின் சொத்துக்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்படாமல் அவருடையதாகவே இருக்கும். இதனை நாம் "சொத்துக்களை பிரித்துக்கொடுக்கும் வசனங்களிலும், சூரத் மரியம் அத்தியாயத்திலும் காணலாம்.

 
 
15) முஹம்மதுவின் மரணத்தின் பிறகும் அவரது திருமண பந்தங்கள் இரத்து செய்யப்படாது.

 
 
16) ஒரு பெண்ணை முஹம்மது விவாகரத்து செய்தால், அப்பெண் அதன் பிறகு வேறு எந்த நபரையும் திருமணம் (நிக்காஹ்) செய்துக்கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கவேண்டும்.
 
 
 
"Yas-tan-kih" என்ற வார்த்தை "Yan'kah" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது பல உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, "Ajab" என்ற வார்த்தையை "Ista-jab" என்றும் அழைப்பது போல, இவ்வார்த்தையை "Nakaha" மற்றும் "Istan-kaha" என்றும் கூறலாம். "என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா?" அல்லது "என்னோடு உடலுறவு கொள்கிறாயா?" என்று பொருள்படும்படி கூற‌ "Istan-kaha" என்ற‌ வார்த்தையை பயன்படுத்த‌ அனுமதியுண்டு. (ஆதாரம்).

 
அரபி மூலம்:
 
 
 
وَأَمَّا مَا أُحِلَّ لَهُ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَجُمْلَته سِتَّة عَشَرَ : الْأَوَّل : صَفِيّ الْمَغْنَم . الثَّانِي : الِاسْتِبْدَاد بِخُمُسِ الْخُمُس أَوْ الْخُمُس . الثَّالِث : الْوِصَال . الرَّابِع : الزِّيَادَة عَلَى أَرْبَع نِسْوَة . الْخَامِس : النِّكَاح بِلَفْظِ الْهِبَة . السَّادِس : النِّكَاح بِغَيْرِ وَلِيّ . السَّابِع : النِّكَاح بِغَيْرِ صَدَاق . الثَّامِن : نِكَاحه فِي حَالَة الْإِحْرَام . التَّاسِع : سُقُوط الْقَسْم بَيْن الْأَزْوَاج عَنْهُ , وَسَيَأْتِي . الْعَاشِر : إِذَا وَقَعَ بَصَره عَلَى اِمْرَأَة وَجَبَ عَلَى زَوْجهَا طَلَاقهَا , وَحَلَّ لَهُ نِكَاحهَا . قَالَ اِبْن الْعَرَبِيّ : هَكَذَا قَالَ إِمَام الْحَرَمَيْنِ , وَقَدْ مَضَى مَا لِلْعُلَمَاءِ فِي قِصَّة زَيْد مِنْ هَذَا الْمَعْنَى . الْحَادِيَ عَشَرَ : أَنَّهُ أَعْتَقَ صَفِيَّة وَجَعَلَ عِتْقهَا صَدَاقهَا . الثَّانِي عَشَرَ : دُخُول مَكَّة بِغَيْرِ إِحْرَام , وَفِي حَقّنَا فِيهِ اِخْتِلَاف . الثَّالِث عَشَر : الْقِتَال بِمَكَّة . الرَّابِع عَشَر : أَنَّهُ لَا يُورَث . وَإِنَّمَا ذُكِرَ هَذَا فِي قِسْم التَّحْلِيل لِأَنَّ الرَّجُل إِذَا قَارَبَ الْمَوْت بِالْمَرَضِ زَالَ عَنْهُ أَكْثَرُ مِلْكه , وَلَمْ يَبْقَ لَهُ إِلَّا الثُّلُث خَالِصًا , وَبَقِيَ مِلْك رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَا تَقَرَّرَ بَيَانه فِي آيَة الْمَوَارِيث , وَسُورَة " مَرْيَم " بَيَانه أَيْضًا . الْخَامِسَة عَشَر : بَقَاء زَوْجِيَّته مِنْ بَعْد الْمَوْت . السَّادِس عَشَر : إِذَا طَلَّقَ اِمْرَأَة تَبْقَى حُرْمَته عَلَيْهَا فَلَا تُنْكَح .

" أَنْ يَسْتَنْكِحهَا " أَيْ يَنْكِحهَا , يُقَال : نَكَحَ وَاسْتَنْكَحَ , مِثْل عَجِبَ وَاسْتَعْجَبَ , وَعَجِلَ وَاسْتَعْجَلَ . وَيَجُوز أَنْ يَرِد الِاسْتِنْكَاح بِمَعْنَى طَلَب النِّكَاح , أَوْ طَلَب الْوَطْء .
 
 
முடிவுரை
 
 
முஹம்மதுவிற்கு அல்லாஹ் அனேக சலுகைகளைக் கொடுத்தார், இவைகளில் சில சலுகைகள் அல்லாஹ்வின் கட்டளைகளை முறித்தும் விடுகின்றன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், நான்கிற்கும் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளும் சலுகையைச் சொல்லலாம். மேலே நாம் கண்ட சலுகைகளில் மிகவும் தர்மசங்கடமான சலுகை என்னவென்றால், முஹம்மது ஒரு பெண்ணை விரும்பினார் மற்றும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறார் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யச் சொல்லும் சலுகையாகும். இந்த விளக்கம் தவறானது, இது அல் குர்துபி அவர்களின் தவறான விரிவுரை/விளக்கமாகும் என்றும், அல்லாஹ் முஹம்மதுவிற்கு ஜைனப்பை திருமணம் செய்து ஜையத்தை விவாகரத்து செய்தவிதம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமியர்கள் வாதம் புரியமுடியாது. ஏனென்றால், இஸ்லாமியபாரம்பரிய நூல்கள் மேலதிக விவரங்களை நமக்குத் தருகின்றன, அதாவது, ஜைனப்பை முதலில் முஹம்மது ஆசைப்பட்டார் இதனால் ஜையத் விவாகரத்து செய்ய நேரிட்டது என்று தெளிவாக பாரம்பரியங்கள் விளக்குகின்றன.

 
 
இதுமட்டுமல்ல, இன்னும் விஷயம் மோசமாக மாறுகிறது, அதாவது சில குறிப்பிட்ட இடங்களில் குர்ஆன் விபச்சாரம் செய்யமும் அனுமதி அளிக்கிறது.
 
 
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (குர்ஆன் 4:24) 
 
 
இந்த வசனம் முஹம்மதுவிற்கும், மற்றும் எல்லா முஸ்லீம்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பதினால், முஹம்மதுவும், இதர இஸ்லாமியர்களும் தங்களுக்கு போரில் கிடைத்த அல்லது தங்களிடம் அடிமைகளாக இருக்கும் திருமணமான இதரபெண்களோடு விபச்சாரம் செய்ய (உடலுறவு) கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

 
 
இதில் இன்னும் வேதனையான, சகிக்கமுடியாத விஷயம் என்னவென்றால், இன்றுவரை இந்த கட்டளை இரத்து செய்யப்படவில்லை, அதாவது தற்காலத்திலும் போரில் பிடிபட்ட அல்லது அடிமைகளாக இருக்கும் திருமணமான பெண்களை கற்பழிக்க முஸ்லீம்களுக்கு அனுமதியுண்டு. இந்த தலைப்பு பற்றிய விவரங்கள் அறிய இக்கட்டுரையை படிக்கவும்.

 
 
ஆக, இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ் தன் இறைத்தூதர் தன் அயலானின் மனைவி மீது ஆசைக் கொள்ள அனுமதித்துள்ளார் இதனால் அவர் தன் உள்ளத்தில் விபச்சாரம் செய்துள்ளார்.(உண்மையில் இந்த பெண் முஹம்மதுவின் வளர்ப்பு மகனின் மனைவியாவாள்). இதுமட்டுமல்லாமல், அல்லாஹ் முஹம்மதுவோடு கூட, இதர இஸ்லாமியர்களும் (இன்றைய இஸ்லாமியர்களும்) தங்களுக்கு போரில் கிடைக்கும் திருமணமான பெண்களோடு அல்லது அடிமைப்பெண்களோடு விபச்சாரம் செய்ய அனுமதி கொடுத்துள்ளார். உண்மையான இறைவேதமாம் பைபிளின் வெளிச்சத்தில் இதை கண்டால், அல்லாஹ் என்பவர் ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவன் இல்லை என்றும், முஹம்மது என்பவர் ஒரு "உண்மையான இறைத்தூதர் (தீர்க்கதரிசி) இல்லை" என்றும் நாம் முடிவு எடுக்க தள்ளப்படுகிறோம்.
 
 

இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள், விவாதங்களை இங்கு படிக்கவும்:
 
 
 
 
 
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

 
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
 

4 comments:

sulthan said...

arumaiana karpanai kathaihalai pathivil solvatharku ungalaipol oruvan kidaiyathu, vellai aadai uduthikondu thuravivaram valhirom endru solli ethanai ethanaio kanniasthirihalin kannithanmaiai sooraiadum umathu koottatharai muthalil thiruthungal pin engalidam varungal quranai eduthu vaithu athil enna sollapattullathu endru ungal kanmunne kaatuhirom ulagam muluthum ulla kanniasthirihalidam avarhalin manathai thottu solla sollungal avarhal kannithanmaiodu ullarhala? endru yaan neengale pathil sollungal avarhalin kannithanmaiai yaar sooraiadiathu? ungal fathiriayare thavira vearu aanmahan yarumillai? ungal matham ungaluku engal matham engaluku nearadiaya unmaihalai uraiya ennudan vivatham panna thayara? nnengal pathil thandhal enathu muhavari tharuhiren engal kaihalil quran mattume undu

Busy said...

Dear Brother,

Tht website u mention is not by a Muslim, Thts a fake Islamic website, U dnt know abt Islam & Mohammed, & u dnt Know abt Isa (Jesus)

First Read & Understand the Quran, Dnt tell Some Incident frm Quran, U know abt Hadeeth

Hadeeth is a Definition of Quran, Tht Hadeeth also tell by friends, Relatives of Probhet Be Well Known People / Trust full people only take dnt take fake hadeeth also

Like u people creake Fake Islamic Quran, Website Etc.,..........

But u will know on Judgemend day

Umar said...

சகோதரர் சுல்தான் அவர்களுக்கு,





கற்பனைக் கதைகளைச் சொல்வதற்கு நாங்கள் ஒன்றும் முஹம்மது இல்லை சகோதரரே.



குர்-ஆன் சொல்வதையும், ஹதீஸ்கள் சொல்வதையும், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதையும் மேற்க்கோள் காட்டுகிறோம், அதனை கற்பனைக் கதைகள் என்றுச் சொல்கிறீரகள். அப்படியானால், குர்-ஆனும், ஹதீஸ்களும் தானே கற்பனைக் கதைகளாகும்,அதில் உள்ளதைத் தானே நாங்கள் சொல்கிறோம்.




இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரம்


1. முஹம்மதுவிற்கு மட்டும் தனிப்பட்ட சலுகைகள்


2. முக்கியமாக திருமண விவகாரங்களில். முஹம்மதுவிற்கு அளவில்லாத சலுகைகள்.


3. இஸ்லாமியர்கள் விபச்சாரம் செய்ய குர்-ஆன் கொடுக்கும் அனுமதி (அடிமைப்பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவுக் கொள்வது)




இந்த கேள்விகளை எழுப்பினால், அதை விட்டு, கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளுக்கு கற்பு உண்டா? என்று கேட்பதும், அவர்களின் கற்பை சூரையாடுவது பாதிரிமார்கள் தானே என்றுச் சொல்வதும் எப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக இருக்கும்?



ஒரு சில பாதிரிமார்கள் முஹம்மதுவைப்போல செயல்பட்டு விடுகிறார்கள், முஹம்மது பெண்களின் கற்போடு விளையாடியது போல ஒரு சிலர் செய்கிறார்கள், இப்படிப்பட்டவர்களுக்கு, சட்டம் சரியான தண்டனை தரவேண்டும், சட்டம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், முஹம்மதுவிற்கு யார் தண்டனைத் தருவது, அவரது வழியில் நடக்கும் முஸ்லீம்களுக்கு யார் தண்டனைத் தருவது?


Umar

Anonymous said...

மிகவும் சரியாக சொன்னீர்கள் அண்ணா. கேட்கப்பட்டப் பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், பதிவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளை சம்பந்தப்படுத்துகிறார்கள். வேறு ஏதுவும் சொல்ல தேவையில்லை அரபி தேசத்திலிருந்து வரும் ஆண்களையும் பெண்களையும் கேட்டுப் பார்த்தால் நிலவரம் தெளிவாக புரியும் பாதிரியார்களையும் கன்னியாஸ்திரிகளையும் விட அங்குள்ள தகப்பனின் இளம் மனைவியை மகனே.... சீ.. சொல்லுவதற்கே வாய் கூசுகிறது. அது மட்டும் இங்கிருந்து வேலைக்கு செல்லும் பெண்களை தகப்பனும் மகனும்.... இதற்கு மேல் வேண்டாம்

அன்புடன்
கிறிஸ்தவன்