ஹிஷாமின் சாட்சி
இப்போது நான் அல்-மஸீஹாவை முழுமையாக நம்பும் விசுவாசி
என் பெயர் ஹிஷாம். நான் மலாய் இனத்தைச் சேர்ந்தவன். 1990ம் ஆண்டு தொடக்கத்தில் தொழிலில் இணைந்த போது தான் முதன் முதலாக கிறிஸ்தவர்களைப் பற்றி அறிய ஆரம்பித்தேன். என்னுடைய ஒரு கிறிஸ்தவ நண்பர், கடும் நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயாருக்காக ஜெபித்ததைப் பற்றி சாட்சி சொன்னார். அந்த மன்றாட்டத்தின் பிறகு அவரின் தாயார் தேறி ஆரோக்கியம் பெற்றார் என்பதைக் கூறினார்.
அவரிடமிருந்து தான் நான் முதன் முதலில் இன்ஜிலை (நற்செய்தியை) பார்த்தேன். அந்த இன்ஜிலில் 'அல்லாஹ்' என்ற சொல் இருப்பதைக் கண்டு எனது முஸ்லிம் நண்பர்களிடம் அதைப் பற்றி விசாரித்தேன். கிறிஸ்தவ புனித நூலில் அல்லாஹ் என்ற சொல் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். ஆனால், அந்த அல்லாஹ் யார் என்று கூறவில்லை என்றும் கூறினர். இது தான் கிறிஸ்தவ போதனை என்றால், அதிலிருந்து விலகியிருப்பதே சிறந்தது என்று என் உள்ளத்தில் அன்று கூறிக்கொண்டேன்.
எனக்கு ஒரு "ரோமன் காதோலிக்க" நண்பர் இருந்தார். அவர் கழிவறைக்குச் செல்லும் போது கூட தன் வேதாகமத்தை கொண்டுச் சொன்றார். இந்த நபர் தன் பரிசுத்த வேத புத்தகத்தை அவரே மதிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த நபரின் செயல்களைக் கண்டு, இஸ்லாமில் அல்-குர்ஆனுக்கு அதிக மதிப்பு இருப்பதை உணர்ந்தேன்.
அதன் பிறகு நான் இஸ்லாத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஆனால், என்னில் பல கேள்விகள் எழுந்தன: இஸ்லாமிய நம்பிக்கையின் படி, இறை வசனங்கள் அனைத்தும் பரிசுத்தமானவை ஆகும். ஏனென்னெறால், அவை சொர்க்கத்தில் இருந்து இறக்கப்பட்டவை. சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டவை பரிசுத்தமானவைகளாக இருக்கவேண்டும். இது தான் இஸ்லாமிய நம்பிக்கை என்றால், ஈஸா மஸீஹா (இயேசுக் கிறிஸ்து) கூட பரிசுத்தமானவர் தான். ஹனாஸ் ஹதீஸ் பின் மாலிக் பக்கம் 72ன் (Hadis Anas bin Malik page 72) படி "இயேசு மெய்யாகவே, தேவ ஆவியும் அவரின் வாக்கும் ஆவார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.
எனவே, "ஈஸா மஸீஹா தான் பரிசுத்த ஆன்மாவா?" என்று வியக்க ஆரம்பித்தேன். ஒருமுறை முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்விடம் இப்படியாக கேட்டார்கள்: "ஓ இறைவா, உண்மையில் பரிசுத்த ஆன்மா (ஆவியானவர்) என்பவர் யார்?" இக்கேள்விக்கு இறைவன் பதில் அளித்தார்: "ஓ முஹம்மதே, உனக்கு பரிசுத்த ஆன்மா பற்றி குறைவான அறிவு கொடுக்கப்பட்டுள்ளது, பரிசுத்த ஆன்மா பற்றிய விவரங்கள் எனக்குச் சம்மந்தப்பட்டது".
ஆக, இந்த வசனத்தின்படி முஹம்மதுவிற்கு பரிசுத்த ஆவி பற்றி அதிகமாகத் தெரியாது. ஆனால், கிறிஸ்தவத்தில் பரிசுத்த ஆவி பற்றி பல உண்மைகள் காணப்படுகின்றன.
அன்று முதல் நான் தசாவூஃப் (Tasawuf) பற்றி அதிகமாக கற்க ஆரம்பித்தேன். உண்மையைத் தேடுவதற்கு நான் இதைச் செய்தேன். அல்லாஹ்வோடு நான் நெருங்க நினைத்தேன். அதே வேளையில் கிறிஸ்தவ போதனைகளைக் விமர்சித்து வந்தேன்.
ஆனால், ஒரு நாள் என் வீட்டின் சுவரில் தொங்கியிருந்த இஸ்லாமிய வாசகங்களைப் பார்க்கும் போது என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. இவை யாவும் அர்த்தம் உள்ளவையா? கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசங்கள் என்ன? என சிந்திக்க ஆரம்பித்தேன். அன்று இரவு நான் உறங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் என் கரத்தையும் நெஞ்சையும் தொடுவது போல் இருந்தது. என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டவனாய் என்னை சுதாரித்துக் கொள்ள முற்பட்டேன். ஆனால் நான் மேலும் அழுத்தப்பட்டேன். பிறகு விழித்துக் கொண்ட நான், இது என்ன? என்று கேட்டு, மீண்டும் என் உறக்கத்தைத் தொடர்ந்தேன். ஆனால், அவர் மீண்டும் வந்தார். இந்த முறை நான் அவரது வெள்ளை உடைகளைக் கண்டேன், ஆனால், அவரது முகத்தை என்னால் காணமுடியவில்லை.
மறுநாள் நான் ஒரு உஸ்தாதை (இஸ்லாமிய மத போதகர்) பார்த்து, வெண்ணங்கி தரித்த ஒருவர் வந்து என் கரத்தைப் பிடித்தார் என்று சொன்னேன். அவர் ஈஸா அல்-மஸீஹா என்றுச் சொன்னார். சாத்தான் இடையூறு தந்துள்ளதாகக் கூறிய அவர், எனக்கு மறுபடியும் தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக, "ஜின்னை" துரத்த அவர் ஜெபித்தார். பிறகு நான் வீட்டுக்குத் திரும்பினேன்.
அன்று, இரவு தொழுகைக்குப் பிறகு, ஒரு குரல் எனக்குக் கேட்டது: "நான் தான் ஈஸா அல்-மஸீஹ் (இயேசு கிறிஸ்து)". அதன் பிறகு நான் விரிக்கப்பட்ட அந்தப் பாயிலேயே உறங்கி விட்டேன். பிறகு யாரோ என் தூக்கத்தைக் களைத்து விடுவது போல் இருந்ததால், என் அறைக்குள் ஓடி, உறக்கம் வரும் வரை அல்-குர்ஆன் வாசித்தேன். அவ்விரவில் அவர் மீண்டும் தோன்றி எனது கரத்தைப் பிடித்தார். அவருடைய அங்கியில் இருந்து இரத்தம் கசிந்துக் கொண்டு இருப்பதை காண முடிந்தது. அவருடைய நெஞ்சில் ஏன் இரத்தம் கசிகிறது என்று நான் கேட்டவேளையில் எனது நெஞ்சிலும் சூடேரத் தொடங்கியது. அப்போது ஒரு ரோஜாவின் மனம் போல் ஒரு வாசனையை உணர்ந்தேன். பிறகு நான் விழித்துக கொண்டேன்.
மூன்றாவது நாள் இரவில் அவர் என் முன்னாள் தோன்றி, "உன்னுடைய பிரச்சனைக்கு நானே தீர்வு" என்றார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு தேவாலயத்தைத் தொடர்பு கொண்டு, என்னுடைய அனுபவத்தைக் வினவினேன். அவர்கள் இந்த அனுபவம் உனக்கு பிசாசின் மூலமாகவோ அல்லது இறைவனிடமிருந்தோ வந்திருக்கக் கூடும் என்று கூறினர். இன்னொரு தேவாலயத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட போது, அவர்கள் என்னை ஞானஸ்நானம் பெறச் சொன்னார்கள். பிறகு, வேறு ஒரு தேவாலயத்துடன் தொடர்பு கொண்டபோது, அவர்கள் என்னை ஒரு வாரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இறுதியில் ஒரு சபை போதகர் என்னை வந்து சந்தித்தார். அவரோடு சேர்ந்து ஜெபிக்கும் போது, தேவனால் தொடப்படுவது போல் உணர்ந்தேன். நான் ஈஸா அல் மஸீஹாவின் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்தேன், அவரே அல்லாஹ்வின் ஆன்மாவாகவும் வார்த்தையாகவும் இருக்கிறார் என்று குர்ஆன் சூரா அல்-அன்பியா வசனம் 91 கூறுகிறது:
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (21:91)
மேலும் அல்-இம்ரான் 45ம் வசனம் கூறுகிறது:
மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;. (3:45)
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஜெபிக்கும் ஒவ்வொரு முறையும், ரோஜா மலரின் மணத்தை முகர்வேன். இது வரை என்னுடைய பல பிரச்சனைகளை அவர் தீர்த்து வைத்துள்ளார். நான் அவரின் வல்லமையைக் கண்டேன். அவரை பின் தொடர நான் முடிவு எடுத்த பிறகு, என் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. முன்பு முன் கோபியாக இருந்த நான் இப்போது சாந்தமுடையவனானேன். முன்பு புகைப்பிடித்தலை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு இருந்த நான் அதிலிருந்து விடுபட்டேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசம் இரட்சிப்புக்கு உத்திரவாதம் வழங்கியது. அஜ்-ஜுக்ருப் 61வது வசனத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது, இவ்வசனம் கூறுகிறது:
"hazaa syiraa-tol mustaqiim" இதன் பொருள் "என்னையே பின்பற்றுங்கள்; இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி) (43:61) என்பதாகும். அந்த நேர் வழியை நீர் கண்டு கொண்டீர்களா?
இந்த ஹிஷாமின் சாட்சி சிறப்பாக அமைந்துள்ளது. ஏன் திடீரென்று அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது? அவரது சாட்சியிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால், "அவர் இறைவனை நெறுங்க வேண்டும் என்று விரும்பினார்" என்பதாகும். உபாகமம் 4.29ல் தேவன் கூறுகிறார்: "உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்".
ஈஸா அல் மஸீஹா அல்லது இயேசு கிறிஸ்து ஹிஷாமின் முன் தோன்றி, அவரின் வாஞ்சையைப் பூர்த்தி செய்தார். யார் இந்த இயேசு கிறிஸ்து? ஹிஷாமின் தேவைகளையும் அவரது தீவிர கேள்விகளுக்கு பதிலைக் கொடுத்த இந்த இயேசுக் கிறிஸ்து யார்?
அல்-குர்ஆன் அந்நிசா அதிகாரம் 171ம் வசனம், ஈஸா அல்-மஸீஹாவை "கலிமதுல்லா" அல்லது "தேவனின் வார்த்தை" என்றுக் கூறுகிறது. இது தான் அவரின் அடிப்படை தன்மையாகும். தேவனையும் அவரது தன்மைகளையும் பிரிக்கமுடியாது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், தேவனின் வார்த்தையே தேவனாக உள்ளார். இதன் படி பார்த்தால், ஈஸா அல்மஸீஹா தேவனாக உள்ளார், ஏனென்றால், அவரே தேவனுடைய வார்த்தையாக உள்ளார். அவர் தேவனை விட்டு பிரியமுடியாது. மேலும், அல்-குர்ஆன் "ஈஸா மறுபடியும் வருவார்" என கூறுகிறது. சஹீஹ் முஸ்லீம் ஹதீஸின் படி இறைத்தூதர் கூறினாராம்:
"Wallahi! Layanzilan nabnu Maryam Hakaman a'dila" இதன் பொருள்
"நிச்சயமாக மரியமின் குமாரன் நியாயந்தீர்க்க வருவார்"
("By the Lord! For sure there will return (come back) Jesus, Son of Mary to be the righteous Judge (of mankind)")
("By the Lord! For sure there will return (come back) Jesus, Son of Mary to be the righteous Judge (of mankind)")
கடைசி காலத்தில் ஏன் மரியாளின் மகன் இயேசு நியாந்ததீர்க்க வரவேண்டும்? முஹம்மதுவே ஏன் வரக்கூடாது? இந்தக் கடைசி காலம் இயேசுவின் காலமல்லாமல் முஹம்மதுவின் பற்றாளர் ஆதிக்கம் செலுத்தும் காலமல்லவா? சர்வ உலகத்தையும் நியாயந்தீர்க்க பாத்திரராய் இருக்கும் பொருட்டு அவருக்கு அதிகாரம் எங்கிருந்து கிடைத்தது? மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இல்லாத அதிகாரம் இயேசு கிறிஸ்துவுக்கு மட்டும் எப்படி கிடைத்தது? தேவன் மட்டுமே உலகை நியாயந்தீர்க்க முடியும். இப்படிச் சிந்தித்துப் பார்த்தால், இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துவது திண்ணம்.
உங்களுக்கும் இறைவனிடத்தில் நெறுங்குவதற்கு வாஞ்சையாக இருக்கலாம். இன்றே அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், அவர் உங்களின் வாஞ்சயை நிறைவேற்றுவார். அவரண்டை அணுகி வந்து அவருக்குக் கீழ்ப்படிந்து, உபதேசங்களை ஏற்றுக் கொள்ளும்போது, அவர் உங்கள் வாஞ்சையைப் பூர்த்தி செய்வதாக வாக்களித்துள்ளார். இப்போதே அவரிடம் வாருங்கள்.
0 comments:
Post a Comment