அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 9, 2008

ஒகேனக்கல் திட்டம் கைவிடப்படவில்லை

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கைவிடப்படுவதாக தாம் எப்போதும் கூறவில்லை என்று முதலமைச்சர் மு கருணாநிதி இன்று உறுதியுடன் தெரிவித்தார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக மற்றும் தமிழக மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதாலும், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், வன்முறைக்கு பலியாகிவிடக்கூடாது என்பதாலுமே, ஒரு தமிழன் என்ற உணர்வுடனும், ஒரு இந்தியன் என்ற பரந்த நோக்கத்துடனுமே தற்காலிக அமைதி என்கிற இந்த முடிவை அறிவித்ததாக கூறினார்.


கடந்த ஐந்தாம் தேதிமுதல் மூன்று நாட்கள் பேரவை விடுமுறையில் இருந்ததால்தான் தாம் எடுத்த முடிவை அவையில் அறிவிக்க இயலவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர், தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் தாம் துரோகம் செய்யவில்லை என்று கூறினார்.


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒகேனக்கல் திட்டத்தை கைவிடவில்லை என்று இப்போதும் தாம் குறிப்பிடுவதாக தெரிவித்த முதலமைச்சர், தமிழகத்திற்கு ஒட்டுமொத்த பயனளிக்கக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை அஇஅதிமுக தொடர்ந்து ஆதரித்து வந்த நிலையில், தற்போது கைவிட்டிருப்பதாக கூறினார்.


ஒகேனக்கல் திட்ட விஷயத்தில் எப்போது மவுனம் கலைப்பது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும் என்றும் முதலமைச்சர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் நிர்பந்தம் காரணமாக தாம் இந்த முடிவை எடுக்கவில்லை என்று விளக்கம் அளித்த முதலமைச்சர், இது தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா, உச்சநீதிமன்றம் செல்வதாக வெளிவந்த செய்தி தவறானது என்று அவரே தம்மிடம் தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் முதலமைச்சர் மு கருணாநிதி கூறினார்.


முன்னதாக இன்று ஜெயலலிதா பேரவையில் கேள்வி நேரத்தின்போது பிரச்சினையை எழுப்பியது அவையின் மரபுக்கும் விதிகளுக்கும் முரணானது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7B6FA8B721-CF6F-49CA-AF60-10299116F996%7D&CATEGORYNAME=CHN

0 comments: